Friday 2 August 2013

எழுச்சித் தலைவியிடம் சிக்கி கடைசியில் பிரபல காப்பி பேஸ்ட் பதிவரிடம் பல்பு (கவிதை) வாங்கிய சீனு..

நம்ம திடங்கொண்டு போராடு சீனு காதல் கடிதம் போட்டி வச்சாலும் வச்சார்.. நிறைய பேர் காதல் ரசம் சொட்ட சொட்ட கவிதையா எழுதி தள்ளிட்டாங்க.. இருந்தாலும் பாருங்க  நம்ம சீனு ஏனோ முழு திருப்தி ஆகல... இந்த தீபாவளி பொங்கலுக்கெல்லாம் சம்பந்தமே இல்லாத சினிமா நடிகைங்ககிட்ட போய் பொங்கல் கொண்டாடுன அனுபவத்தை சொல்லுங்கன்னு டிவிகாரங்க பேட்டி எடுத்து,டிஆர்பியை ஏத்துற மாதிரி நாமளும் ஏதாவது செய்யனும்னு என்கிட்டே வந்து கேட்டப்போ,முதலில் எனக்கு எதுவுமே தோனல.

அப்புறம்தான் எனக்கு எழுச்சித் தலைவி பேரவை ஞாபகம் வந்திச்சி. ஆனா எழுச்சித் தலைவி தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, தெலுங்குனு ரொம்ப பிசியா இருக்கிறதால....(சரி..சரி..இதுக்கெல்லாம் லாங்குவேஜ் முக்கியமானு கேக்க வர்றது புரியுது.ஆனாலும் பாருங்க தேசிய அளவில கட்சியின் வேர் அடிஆழம் வரையில பாயனும்னா இது போல சமூக சேவைகள் செய்துதானே ஆகணும்)

பல பிசியான ஷெட்யூல்களுக்கு மத்தியில நம்ம பேரவை வேண்டி விரும்பி கேட்டுகிட்டதால இளைஞர்களின் 'எழுச்சி'த்தலைவி,வருங்கால பாரதம், மானமிகு செல்வி பாபிலோனா அவர்களை சந்திக்க அனுமதி கிட்டியது. இனி சீனுவாச்சு...தலைவியாச்சு...
சீனு : வணக்கம் மேடம். (நேரடியாக விசயத்திற்கு வருகிறார்) காதல் கடிதங்கள் என்கிற தலைப்பில ஒரு போட்டி வச்சிருக்கோம். உங்களோட அனுபவங்களை என்கிட்டே பகிர்ந்துகிட்டீங்கனா உங்களையும் எங்க போட்டியில சேத்துப்போம்.

எழுச்சித் தலைவி: எக்ஸ்பீரியன்ஸ்தான ...? எனுக்கு நிறையா இருக்குது. இந்த காதல்ங்கிறது ரெண்டு பேரும் ஒன்னா கட்டிப்.....

சீனு : மேடம்..மேடம் ..நான் சொல்றது வேற...ஐ மீன் காதல்... அதாவது ஃபீலிங்ஸ்... 

எ.த:  ஓ அதுவா... (உதட்டை சுழிக்கிறார்) ஆ...ஆ.... ஏய்...ம்ம்..... . இந்த ஃபீலிங்ஸ்தான சீனு .?

சீனு : அந்த ஃபீலிங் இல்ல மேடம்..இது வேற.அப்படியே அடி வயித்திலேருந்து வரணும்..

எ.த:  புரிஞ்சி போச்சி.. ச்சீ... நாட்டி...

சீனு : மேடம் தப்பு  தப்பா புரிஞ்சிக்கக் கூடாது.. இந்த அன்பு, பாசம், நேசம்னு சொல்வாங்கல...அதே மாதிரிதான் காதல்...அதாவது லவ்...பியார்...

எ.த: சீனு என்னை  கன்பியூஸ் பண்ணாதிங்க ..  லவ்வுனா ஆம்பளையும் பொம்பளையும் பண்ணுவாங்களே அதான...?

சீனு :அதேதான். வெல்டன். (முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு)..இப்ப சொல்லுங்க...எங்க பாத்தீங்க அவர....? எப்படி உங்க காதல சொன்னீங்க....? அப்ப உங்களுக்கு எப்படி இருந்துச்சி..? 

எ.த: மொகத்த எல்லாம் யார் பாக்குறா சீனு.. இருட்டு அறை ..லைட்டா வெளிச்சம் இருக்கும். பேச வேற கூடாதாம். ஸ்டார்ட் கேமரா ஆக்சன்-னு சொன்னவுடனே ஆரம்பிக்கணும்...கட்-னு சொன்னவுடனே முடிக்கணும்..  

சீனு :  ஆ...ஆ...அய்யோ...அம்மா... (எங்கேயோ ரேடியாவில் 'தென்பாண்டி சீமையில..தேரோடும் வீதியில...' பாடல் ஒலிக்கிறது..)

எ.த: என்னாச்சி சீனு.. நீங்க ரொம்ப ஃபீலிங்கா ஆயிட்டா...?

சீனு : இல்ல உங்க கிட்ட கேட்டா விதவிதமா அனுபவங்கள் கிடைக்கும்னு அனுப்பிவிட்ட ஆள் மட்டும் இப்ப என் கையில கிடைச்சா....

ங்கிருந்து ஒரு வழியா தப்பித்து வெளியே வர எதிரே 'மிரட்சித் தலைவி' நமீதா வருகிறார். "ஏதாவது பாக்கக் கூடாதத பாத்தது மாதிரி மச்சான்ஸ் சீனு ரொம்ப பதட்டமா இருக்குது.." என நமீதா வினவ , எழுச்சித் தலைவி யிடம் சிக்கி சின்னாபின்னமான கதையை சொல்கிறார்.

நமீதா : காதல் அனுபவம் தானே.. கவலைப் படாத சீனு..நான் கவிதை சொல்லுது......

சீனு. : நீங்களா..சரி...சொல்லுது...சொல்லுது...

நமீதா :
கவிதை சொல்லுது நானு..
கேக்குது மச்சான்ஸ் சீனு..

நானு இஸ்கூல் படிக்குது..-அங்க 
பத்து மச்சான்ஸ் இருக்குது.

நாலு மச்சான்ஸ் என்ன பாக்குது -அதுல
மூணு மச்சான்ஸ் லெட்டர் கொடுக்குது.

ரெண்டு மச்சான்ஸ் காதல் சொல்லுது 
ஒரு மச்சான்ஸ் கடன் கேக்குது.

கடன் கேட்ட மச்சான  கல்லால் அடிக்குது..
காரு வச்சிருந்த மச்சான்ஸ லவ் பண்ணுது. 

ஊரு சுத்துது...
வாங்கி துண்ணுது...
என்ஜாய் பண்ணுது..
மச்சான்ஸ் பர்சு காலியாவுது.  

காரை விக்குது...
வீட்டை விக்குது...
தாடி வளக்குது-கடைசில
மச்சான்ஸ் பிச்சை எடுக்குது..

நானு ஆக்ட்டு குடுக்குது...
இப்போ ஆள தேடுது..

நானு சீனு பாக்குது..
சீனு என்னை பாக்குது...

சீனு. : ஐயோ....ஞான் ஓடிப்போவுது....

அங்கிருந்து தலைதெறிக்க ஓட, பின்னால் ஒரு அபலக் குரல் ... .திரும்பிப் பார்த்தால் பிரபல காப்பி பேஸ்ட் பதிவர். 

( தொடரும்....அடுத்தப் பதிவில்...)
 

24 comments:

  1. நமிதாவின் ஆட்டமும் சினுவின் ஒட்டமும் என்று தலைப்பு வைத்திருக்க வேண்டமா?

    நமிதாவின் கவிதை அருமை

    ReplyDelete
    Replies
    1. ஹையையோ நம்ம மதுர மச்சான்ஸ் எதோ ஜில்பான்ஸ் பண்ண போகுது டோய்

      Delete
    2. 'எழுச்சித் தலைவிடம் சிக்கி,மிரட்சித் தலைவியிடமிருந்து மீண்டு வந்த சீனு ' மொதல்ல இப்படித்தான் தலைப்பி வச்சேன்,

      Delete
  2. Rasithaen. Seenu face appadiyae manasil oduthu.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா சிக்கிடான் சீனு

      Delete
    2. //Seenu face appadiyae manasil oduthu. //



      ஹா..ஹா.. அடுத்து பிரபல காப்பி பேஸ்ட் பதிவரிடம் வேற பெட்டி எடுக்க போறாரு...என்ன ஆவப் போவுதோ...

      Delete
  3. நிஜமாலுமேவா? நம்பவே முடியல - ஜாலிக்கற்பனையோ மணிமாறன்.? கலக்குங்க.. நமீதா கவிதை.. ஹாஹாஹா

    ReplyDelete
    Replies
    1. ///நிஜமாலுமேவா? நம்பவே முடியல - ஜாலிக்கற்பனையோ மணிமாறன்.? //

      ஹா..ஹா.. பேரவையை பிரபலப் படுத்த இது போல சில்பான்சி வேலையெல்லாம் செய்யவேண்டிடிருக்கு.சகோ..

      Delete
  4. மச்சான் சாச்சுபுட்டியே மச்சான்....

    எழுச்சி தலைவியும் பீலிங்க்சும்... மிரட்சித் தலைவி கவிதையும் ஜூபரு... நல்லவளே எழுச்சி தலைவி பேசும் போதே தல தெறிக்க ஓடிட்டான் இல்லாட்டா மருவாத என்னவாகுறது...

    ReplyDelete
    Replies
    1. //நல்லவளே எழுச்சி தலைவி பேசும் போதே தல தெறிக்க ஓடிட்டான் இல்லாட்டா மருவாத என்னவாகுறது... //

      ஓடிட்டா விட்டுடுவோமா உங்களை... இதாவது பரவாயில்லை.அந்தா காப்பி பேஸ்ட் பதிவர் நிக்கிறாரு பாருங்க...மாட்டுனீங்க மச்சான்ஸ் சீனு.

      Delete
  5. தொடருமா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... ஏழேழு ஜென்மமும் பாபிலோனா ஆட்டமும் நமீதா பெல்லி டேன்சும் பார்த்து நாடி நரம்பு ரத்தம் சத பூரா லவ் ஊறிப் போன ஒருத்தரால மட்டும் தான் இப்படி எழுத முடியும் ... ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. // ஏழேழு ஜென்மமும் பாபிலோனா ஆட்டமும் நமீதா பெல்லி டேன்சும் பார்த்து நாடி நரம்பு ரத்தம் சத பூரா லவ் ஊறிப் போன ஒருத்தரால மட்டும் தான் இப்படி எழுத முடியும் ...//

      ஹா..ஹா.எழுச்சித் தலைவி பேரவை கொ ப .செ பதவியில் இருந்துட்டு இதுகூட எழுதலனா எப்படி..? அடுத்த அப்பாயின்மெண்ட் இருக்கு . வேண்டுவோர் எழுச்சித் தலைவி பேரவையை தொடர்பு கொள்ளவும்.

      Delete
  6. ஹா ஹா அடிச்சு தூள் கிளப்பிட்டிங்க மணி அண்ணா.. சூப்பர் சூப்பர்..

    என் மனசில இருந்த பாரத்தை எல்லாம் இறக்கிட்டிங்களே.. ஹா ஹா

    ஒட்டு மொத்த பதிவுலகும் சீனுவை குத்தகைக்கு எடுத்ததை நினைத்து சங்கம் பெருமை கொள்கிறது.. இது நிறுத்தப்படாமல் 1 - 10 -100 என வளர மலர் கொண்டு வாழ்த்துகிறேன்..

    மறுபடியும் கலக்கல் writting பாஸ்.. செம ப்ளோ..

    ReplyDelete
    Replies
    1. //என் மனசில இருந்த பாரத்தை எல்லாம் இறக்கிட்டிங்களே.. //

      ஆகா...கொலை வெறியோட இருந்திருக்கீங்க போல...

      Delete
    2. நன்றி ஹாரி..

      Delete
  7. ஹாஹா செம்ம காமெடி

    ReplyDelete
    Replies
    1. எப்படியோ சீனுவை வச்சி காமெடி பண்ணியாச்சி,...நன்றி சக்கர கட்டி

      Delete
  8. ஹா ஹா.... நமீதா பாடிய பாட்டு சூப்பரு....

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்கூல் பையன்

      Delete
  9. சீனுவ நெனச்சு நெனச்சு சிப்பு சிப்பா வருது...

    ReplyDelete
  10. சீனுவ நெனச்சு சிப்பு சிப்பா வருது....

    ReplyDelete
    Replies

    1. ஹா.ஹா.. சீனுவை சிரிப்பா சிரிக்க வைக்கணும் என்பதுதானே பதிவின் நோக்கமே..(அப்படின்னு ஹாரி சொன்னதால :-) )

      Delete
  11. Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்

      Delete