Thursday 31 May 2012

கொந்தளித்த தமிழர்கள்...ஓட்டம்பிடித்த நடிகை...பேஸ்புக்-ல் சொதப்பியது எப்படி?.


 
 தன்யா பாலகிருஷ்ணா.... அந்தக்கால சரோஜாதேவி,சிவாஜிராவ் முதல் இந்தக்கால பிரபுதேவா,குத்து ரம்யா வரை வானளவு புகழும் பணமும் வாரி வழங்கி வாழவைத்த கோலிவுட்டில்,புதிதாக தடம் பதித்திருக்கும் இன்னொரு கன்னட சிட்டுக்குருவி.வந்தாரை வாழவைக்கும் சென்னையில் தங்கி,வாய்ப்பு தேடிக்கொண்டிக்கும் இந்த பெங்களூரு பெண் குட்டி,தன்னை வாழவைக்கும் தமிழனின் தன்மானத்தை உரசிப்பார்த்திருக்கிறார் .

  இவர் ...வசூலில் சரித்திர சோசாதனை  படைத்த ’ஏழாம் அறிவு’, ’காதலில் சொதப்புவது எப்படி’ போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்துவிட்டோம் என்ற மிதப்பில் பேஸ்புக்-ல் தமிழர்களையும், தமிழகத்தையும் குறிப்பாக சென்னைவாசிகளை தரக்குறைவாக எழுதி இருக்கிறார்.

சென்னை மக்களை "பிச்சைக்காரர்கள்" என்ற ரீதியில் அவரது கருத்து அமைந்திருந்தது.கர்நாடகாவிடம் காவிரி தண்ணீர்,மின்சாரம் தருமாறு தமிழகம் பிச்சை கேட்டது என விமர்சித்து பேஸ்புக்கில் எழுதியிருந்தார்.



தமிழ் சினிமாக்களில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கேட்டு முகாமிட்டிருந்த அவரது கருத்துக்களைப் படித்த தமிழகத்தைச் சேர்ந்த பலரும்,பேஸ்புக்கில் அந்த பேதைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.இவரது கருத்துகள் பேஸ்புக்கில் வேகமாக பரவ,இதை சற்றும் எதிர்பார்க்காத தன்யா,பயந்து போய், பேஸ்புக்கில் மன்னிப்பு கோரினார்.


இவரின் இந்த ஆணவப் பேச்சுக்கு தமிழ் திரையுலகம் கண்டனம் தெரிவித்து, இனிமேல் தமிழ் சினிமா படங்களில் அவருக்கு வாய்ப்பு அளிக்கக் கூடாது என முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.பெங்களூருவைச் சேர்ந்த சில தமிழ் அமைப்புகளும்,நடிகை தன்யா வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக கருத்து தெரிவித்துள்ளன.

இதனால் அதிர்ச்சியடைந்த தன்யா,பெங்களூருக்கு ஓடி விட்டார்.அதை மூடி மறைக்கவே,தமிழகத்துக்கு செல்ல மாட்டேன்,தமிழ்ப் படத்தில் நடிக்க மாட்டேன் என்று அறிக்கை வாசித்துள்ளார்.

தமிழகம் எந்த காலகட்டத்திலும் கர்நாடகாவிடம் மின்சாரம் கேட்டதில்லை. நெய்வேலியிலிருந்துதான் அவர்களுக்கு மின்சாரம் போகிறது என்று கூட அந்த பால்குடி மறவா குழந்தைக்கு தெரியவில்லையா?

காவிரிநீர் என்பது நமது உரிமை.அதில் நமக்குரிய பங்கைத்தான் கேட்கிறோமே தவிர,அவர்களிடம் பிச்சைக்கேட்கும் அளவிற்கு தமிழன் ஒரு போதும் தரம் தாழ்ந்து விடமாட்டான்.இது கூட தெரியாமல், 'காவிரி நீரை தமிழகம் பிச்சை கேட்கிறது' என்று அந்த நாடோடி கூறியிருப்பது அவரின் அறிவீனத்தின் மடத்தனமான வெளிப்பாடுதான்.

      நுனிநாக்கு ஆங்கிலமும்,கலாச்சாரமற்ற வாழ்க்கையும்,வெளுத்த தோலும் இருந்தால் எதை வேண்டுமானாலும் பேசிவிடலாமா? எப்படி வேண்டுமானாலும் எழுதிவிடலாமா? திரைத்துறை,இசைத்துறை உட்பட அனைத்திலும் அண்டை மாநிலத்தவரை மகுடத்தில் வைத்து அழகு பார்க்கும் நமக்கு,இவர்கள் கொடுக்கும் வெகுமானம் இதுதானா?


---------------------------------------------------------(((((((((((()))))))))))))))))))))))))------------------------------




9 comments:

  1. பாவம்யா... பிகருக்கு ஏன் இந்த அரசியல் பேச்சு...

    யாரையாவது கரக்ட் பண்ணி நடிக்கறத விட்டுப்புட்டு....???

    ReplyDelete
    Replies
    1. அதானே...சரிதான் பிரகாஷ்.

      Delete
    2. avala kondu poi nithyanantha sami kooda thunga sollunga

      Delete
  2. இதுவெல்லாம் பேசி நாம பதில் சொல்ல வேண்டிய நிலையை நினைத்தால் கஷ்டமா இருக்கு..பெரிய ஆளாக்கிடாதிங்க பாஸ்.விவரம் தெரியா பாப்பாவிடம் பேசி ஒன்றும் ஆகப்போகதில்லை.இனிமேலாவது தமிழன் விழித்து கொள்வானா?

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.நம்மைக் கேவலப்படுத்திய இந்த ஜிகிடியை இனி சென்னை பக்கமே அனுமதிக்கக்கூடாது,

      Delete
  3. தமிழர் தண்ணீருக்கு இவர்களிடம் பிச்சை கேட்கிறார்கள்.
    இவர் தமிழில் நடிக்க "எதைக்" கொடுத்தாரோ?
    அதுக்கு , பிச்சை மேல்.....

    ReplyDelete
    Replies
    1. இப்படியொரு பதிலை பேஸ்புக்கில் அந்த கில்மாவிற்கு சொல்லியிருந்தால் அன்றே சென்னையை விட்டு ஓடியிருக்கும்.வருகைக்கு நன்றி நண்பரே,,

      Delete
  4. "like this u begging - we giving"...
    Cant listen to worse english than this.. Ithellam karuthu solla vanthuduchu..

    ReplyDelete
  5. தமிழர்களின் தியாகமும் பெருமையும் தருதலைகளுக்கு புரிவதற்க்கு வாய்ப்பில்லை.இவளும் அந்த தருதலைகளில் ஒருவள்தானே.

    ReplyDelete