Saturday 20 July 2013

திடங்கொண்டு போராடு சீனுவுக்காக ஒரு காதல் கடிதம்..

       இந்த 'காதல்' என்கிற படுகுழியில் விழுந்த அனுபவம் எல்லாம் நமக்கு கிடையாதுங்க.. ஆனா காதலிச்சிருக்கேன். காதல் உணர்வு வராத உயிர் இந்த உலகத்தில் உண்டா என்ன..? அட்லீஸ்ட் ஒருதலைக் காதலாவது செய்திருப்பார்களே. 

அந்தந்த வயதில் ஏதோ ஒரு காரணத்தால்(பெரும்பாலும் அழகு) காதல் தூண்டப்படும்.அது இன்பா
ச்சுவேசன் என்றாலும் அந்த தருணத்தில மனசு கிடந்து படபடனு அடிச்சுக்கும் பாருங்க...அந்த உணர்வை எத்தனை வருஷம் கழிச்சி நெனச்சி பாத்தாலும் பரவசமா இருக்கத்தானே செய்யும்...

எந்த வயசில காதல் வரும்னு சொல்லவே முடியாதுங்க.. அதை காதல் என்பதைவிட ஒருவித ஈர்ப்புனு சொல்லலாம். காமம் என்கிற வரையறைக்குள் வராதவரை காதல் தவறில்லை.

ஒன்னாம் வகுப்பிலேயே காதல் வரலாம்... கிழிஞ்ச டவுசரும் அழுக்குச் சட்டையுமாய் பள்ளிக்கு செல்லும் போது கலர் கலரா கவுன் போட்டுக்கிட்டு வாய் நிறைய லிப்ஸ்டிக் நிரப்பிகிட்டு வரும் சக மாணவியைப் பாத்து வரலாம். வாத்தியார் பொண்ணு என்றால் பயம் கலந்த காதல் வரலாம். சுதந்திர தினத்திற்கும் ஆண்டு விழாவிற்கும் பாரத நாட்டியம் என்கிற பெயரில் உடற்பயிற்சி செய்யும் பெண்ணைப் பாத்தும் வரலாம். பாக்க மொக்கையாக இருந்தாலும் வகுப்பில் முதல் மாணவியாக வரும் பெண்ணின் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு வரலாம். வாத்தியார் எந்த பெண்ணையாவது புகழ்ந்து பேசிவிட்டால் அந்தப் பெண்ணின் மீது திடீர் ஈர்ப்பு வரலாம்.. ஏன்...டீச்சர் மீது கூட காதல் வரலாம்...இப்படி ஏதோ ஒரு விதத்தில் காதல் வயப்படாதவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் இதெல்லாம் அந்தந்த பருவத்தைக் கடக்கும்போது நம்மோடு பயணிக்க முடியாமல் மறைந்து விடுகிறது.

என் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் பாத்தாலும் காதலில் கசிந்துருகி நின்றதா ஞாபகமே இல்லை. அவ்வளவு நல்லவனா நீங்க-னு கேக்க தோணுமே..? அதுதான் இல்ல.உண்மைய சொல்லனும்னா எதுவும் செட்டாகல....

காலேஜ்ல படிக்கும்போது ஜூனியர் செட் பொண்ணு ஒன்னு நட்போட பழகினது. எங்க ஊர் பொண்ணுங்கிறதால பழைய கொஸ்டின் பேப்பர் தர்றது,புக்ஸ் தர்றதுனு உதவி செய்வேன்.அப்பப்போ லைப்ரரில சந்திப்போம். நல்லா தெளிவா புரிஞ்சுங்கனும்னு ஒரே பேப்பரை ரெண்டு மூணு தடவை எழுதறதால (அதத்தான் இந்த உலகம் அரியர்னு சொல்லுது) பல டிசைன்ல நம்மகிட்ட கொஸ்டின் பேப்பர் இருக்கும். இப்படி நட்பு போய்கிட்டு இருந்த சமயத்தில அந்த புள்ளைக்கு பொறந்த நாள் வந்தது. நான் சும்மா இருக்காம ஒரு வாழ்த்து மடல் வாங்கி அதோட ஹாஸ்டல் அட்ரசுக்கே அனுப்பிட்டேன். என்ன நினைச்சுதோ தெரியில...அடுத்த நாள் என்ன பாத்துச்சி. அவ்வளவுதான்..சைக்கிள எடுத்துட்டு சிட்டா பறந்து போயிடிச்சி. அடுத்தத் தடவை பாக்குறப்போ நட்புக்கும் காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை விக்கிரமன் படத்து டயலாக்கெல்லாம் சொல்லி விளக்கலாம்னு இருந்தேன். ஆனால் அதுக்குப் பிறகு அந்தப் புள்ளையே பாக்கவே இல்ல..        

இப்படி ஒரு ஃபிளாஷ்பேக்கை வச்சிக்கிட்டு என்னத்த காதல் கடிதம் எழுதறது
னு தெரியில. வீட்டுக்காரியை நினைச்சி ஏதாவது எழுதலாம்னா கொழம்பு கரண்டியும், தோசை பிரட்டியும் கண் முன்னால வந்து மூட் அவுட்டாக்குது. ஒருவேளை நானெல்லாம் காதலிச்சிருந்தேனா கண்டிப்பா ஊர்ல மாடு தான் மேய்ச்சிகிட்டு இருந்திருப்பேன்.ஏனா எத செஞ்சாலும் நிறைய ஈடுபாட்டோடத்தான் செய்வேன். 

சரி.. சீனுவுக்கு வாக்கு கொடுத்திட்டேன்..போட்டிக்கான கடைசி நாளும் வந்துட்டு. எதையாவது எழுதலாம்னு யோசிச்சேன்.காதல் திருமணம் செய்து பணத்தேவைக்காக வெளிநாட்டில் வாழும் கணவன், தாயகத்தில் இருக்கும் மனைவிக்கு திருமண நாளன்று கடிதம் எழுதினால் எப்படியிருக்கும் என்கிற கற்பனையில் வடித்து தான் இந்தக் கடிதம்.

 (எக்ஸ் கியுஸ் மீ..ஒன் மினிட். படிச்சி முடிச்சிட்டு காரித்துப்புறதா இருந்தா கொஞ்சம் தள்ளிப் போயி துப்புங்க.. அது உங்க மானிட்டர்.. அப்புறம் உங்க இஷ்டம்..)



பிரியமான பிரியதர்ஷினி....

இன்னைக்கு என்ன நாள் தெரியுமா.....? 

இப்படி கேட்டதுக்கு இந்நேரம் உன் கண்ணில் நீர் பூத்திருக்கும்.காலையிலிருந்து குறைந்தது அஞ்சு ஆறு கோயிலாவது ஏறி இறங்கியிருப்ப... ஐநூறு தடவையாவது என் பேரை உச்சரிச்சிருப்ப... நொடிக்கு நூறு தடவை என்னை நினைச்சிருப்ப... உன் நினைவே நான் தான்னு எனக்குத் தெரியாதாடா செல்லம் ...!

உன்னை முதன் முதலில் எப்போ பார்த்தேன்னு யோசிக்கிறேன்..

ரியா அஞ்சு வருசத்து முன்னால.... அப்போ உனக்கு காலேஜ் லீவு. எங்க வீட்டுக்கு பின்னால இருக்கிற உங்க சித்தி வீட்டுக்கு வந்திருந்த... ஒரு நாள் சாயங்காலம் அஞ்சு மணி வாக்கில், போன் டவர் கிடைக்கலனு எங்க வீட்டு  மொட்டை மாடிக்கு நான் வந்தப்போ, உங்க வீட்டு மொட்டை மாடில கையில ஏதோ புக்கை வச்சிக்கிட்டு தீவிரமா படிச்சிகிட்டு இருந்த.. அதுவும் முகத்தை அந்தப் பக்கமா திருப்பிகிட்டு...!

நான் சத்தம் போட்டு பேசினதில கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகியிருப்ப போல.கோபத்தில சட்டென திரும்பி பாத்துட்டு இறங்கி போயிட்ட. அப்பத்தான் உன் முகத்தை நான் முதன் முதலா பாத்தேன். என்னவோ தெரியில. எப்படினும் சொல்லத் தெரியில... ஆனா பாத்த உடனையே உன்னை புடிச்சிப் போச்சி...!

அதுக்கப்புறம் ஏதோ ஒன்னு  என் மனசுக்குல உருண்டுகிட்டே இருந்துச்சி. நைட் உறக்கமே வரல. நாம கல்யாணம் செஞ்சு குடும்பம் நடத்துற மாதிரி எல்லாம் கற்பனை ஓடிகிட்டே இருந்துச்சு. பிறகு எப்போ தூங்கினேன்னு தெரியில.. !

அடுத்த நாளிலிருந்து....

அஞ்சு நிமிசத்துக்கு ஒருக்கா மாடிக்கு வந்து பா
ர்ப்பேன்.. நீ இருக்க மாட்ட..  சாயங்காலம் வரை ஐம்பது  தடவை யாவது ஏறி இறங்கி இருப்பேன்.. ஆனா சூரியன் மறையுதோ இல்லையோ கரெக்டா தினமும் அஞ்சு மணிக்கு மொட்டைமாடி  நிலாவா நீ உதிப்ப...

திரும்பவும் போன் பேசுற மாதிரி உன்னை பார்ப்பேன்.. ஆனா ஒரு தடவை கூட என்னை பாக்க மாட்ட... இப்படியே அஞ்சு நாள் போச்சு.ஆனா நீ என்னை கண்டுக்கிற மாதிரி தெரியில..

எனக்கு வெறுத்துப் போச்சி... நான் முட்டாள் தனமா நடந்துகிறதா மனசு சொல்லிச்சி.. உன்கிட்ட பேச முயற்சிக்கலாம்னு கூட தோணிச்சி... ஒருவேளை நீ  சத்தம் போட்டு ஊரை கூட்டிட்டா அவமானமா போயிடுமோனு ஒரு பக்கம் பயம் வேற. கடைசில ஒரு முடிவுக்கு வந்தேன்.வேணாம். காதலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். இது வேணவே வேணாம்னு முடிவு செஞ்சிட்டேன்...

அடுத்த ரெண்டு நாள் மொட்டை மாடிக்கு போகவே இல்ல...ஆனா ஒருபக்கம் மனசு கிடந்து துடிக்கும். மறுபக்கம் அதுக்கு நாம சரிபட்டு வரமாட்டோம்னு மனசாட்சி தடுத்து நிறுத்தும்...

ஆனா முடியில.. ரெண்டு நாள் கூட முடியில.. கடைசியா இன்னிக்கு ஒரு தடவை பாத்துட்டு வந்திடலாம். அதுக்கு பிறகு மாடிப்பக்கம் தலைவச்சே படுக்கக் கூடாதுனு முடிவு பண்ணினேன். திரும்பவும் போனை எடுத்துட்டு ஒவ்வொரு படியா ஏறினேன். மனசு படக் படக்னு அடிச்சிகிட்டு.. ஒரு பத்து நிமிஷம் நின்னு பாப்போம்...திரும்பி பாக்கலனா அதுக்கப்புறம் காதல்ன்ற நினைப்பே மனசுக்குள்ள வரக்கூடாதுனு முடிவு பண்ணிட்டு ஒவ்வொரு படியா ஏறினேன்...


கடைசி படி வந்து விட்டது.. ஒரு வித படபடப்போடு மொட்டை மாடிக்குள் காலடி எடுத்து வச்சேன் ...

அங்கே.............


வச்ச கண் வாங்காம எங்க வீட்டு மாடியையே உத்துப் பாத்துகிட்டு இருந்த. என்னைப் பார்த்த அந்த நொடியில் உன் கண்களில் இருந்த தவிப்பு இருக்கே.. அப்பப்பா...! அந்தக் கண்களில் என்ன ஒரு காதல்..! என்னவொரு ஏக்கம்..! என்னவொரு தவிப்பு...! இருபதடி தூர இடைவெளியில் எந்தப் பெண்ணும் என்னை இந்தளவுக்கு உற்று நோக்கியதில்ல.. எனக்கு அப்படியே உடம்புக்குள்ள ஜிவ்வுன்னு ஏதோ ஒன்னு ஏறுற மாதிரி இருந்துச்சி.

உண்மையிலேயே அப்போது தான் வைரமுத்து சொன்ன  உருவமில்லா உருண்டையின் விளக்கம் புரிந்தது. அப்படியே என்னை யாரோ அந்தரத்தில தூக்கிட்டு போற மாதிரி இருந்தது.விரல்கள் நடுங்க ஆரம்பிச்சுட்டு...என் முகம் சிவந்து போவதை கண்ணாடி இல்லாமலே பார்த்தேன்.

ஒரே பார்வையில உன் காதலை சொல்லிவிட்டு போயிட்ட..! கண்ணின் கடைப்பார்வை எவ்வளவு வலிமையானது என்பதை பாரதிதாசன் சொன்னபோது நம்பவில்லை. அப்போதுதான் உணர்ந்தேன்.


விழுந்தேன்....  சொத்து சுகம், சாதி சனம் எதுவும் தேவையில்லை  நீதாண்டி என் வாழ்க்கைனு மொத்தமாக விழுந்தேன். ஆனா இந்த பாழாய்ப்போன சாதி நம்மை பிரிச்சி வைக்க என்னென்ன இடைஞ்சல் பண்ணினது உனக்கு தெரியாதா...?

அந்த நேரத்தில நீ மட்டும் என் மேல நம்பிக்கை வைக்காம சாதியும் சொந்தமும் தான் முக்கியம்னு என்னை விட்டு போயிருந்திருந்தா இந்நேரம் நான் உசுரோடவே இருந்திருக்க மாட்டேன். நம்மை பிரிக்க பாத்தவங்க முன்னால வாழ்ந்து காட்டணும்னு நீ சொன்ன பாரு... அப்பவே முடிவு பண்ணினேன். உன் கூட சேர்ந்து வாழ, சாகுற அளவுக்கு கூட ரிஸ்க் எடுக்கலாம்னு...

மத்தவங்க வாயடச்சிப் போற அளவுக்கு வாழ்ந்து காட்ட
ணுங்கிறதுக்குத்தான் இவ்வளவு தூரம் உன்னை பிரிஞ்சி வந்து இருக்கேன்... ஆனா உன் கூட இல்லாத ஒவ்வொரு கணமும் நரக வேதனையா இருக்கு.இன்னும் எத்தனை இரவுகள்...?  

தூக்கம் கலையும் ஒவ்வொரு அதிகாலையும் ஊரில் இருக்க மாட்டேனா என தோணுது.உன் மடிமேல தலை வைத்து  தூங்கணும் போல இருக்கு...மார்போட அணைச்சுகனும் போல இருக்கு...உன் நெத்தில முத்தமிடனும் போல ஆசையா இருக்கு. உன் பாதங்களை எடுத்து என் கன்னத்தில ஒத்திக்கணும் போல இருக்கு...

இந்த எழவெடுத்த காசு பணம் எதுக்கு. இப்பவே கிளம்பி வந்திடலாம்னு தோணும். ஆனா வாழ்ந்து காட்டனும்...  கவலைப் படாத. இன்னும் ஒரு வருஷம் பொறுத்திரு. வாழ்க்கை பூரா பிரியா
இருக்க  இன்னும் ஒரு வருஷம் பிரிஞ்சி இருப்போம்...

27 comments:

  1. ஜிவ்வுன்னு ஏறுற மாதிரி கற்பனை காதல் கடிதம்...! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார்...

      Delete
  2. ™+1√ காதல் என்பதால் இணைக்க மறந்து விட்டதா...? ஹிஹி... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. கடைசி நாள் என்பதால் அரக்க பறக்க எழுதினேன்.. திரும்ப படித்துப் பார்க்க கூட நேரமில்லை. அதனால் தமிழ்மணத்தில் இணைத்து அசிங்கப் படவேண்டாம் என விட்டுவிட்டேன்.. தமிழ்மணத்தில் இணைத்ததற்கு மிக்க நன்றி..

      இது போட்டிக்காக எழுதவில்லை. என் பெயரையும் சீனு குறிப்பிட்டதால்,ஒரு நன்றிக்காக எழுதப்பட்டது.

      Delete
  3. அழகான கடிதம்.... தலைப்பை பார்த்துட்டு எங்க நம்ம சீனுவுக்குத்தான் கடிதம் எழுதிட்டீங்களோன்னு, ஓடோடி வந்தேன்... நல்ல வேலை அவருக்கில்லை...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்...

      Delete
    2. ஹா..ஹா... ஓரளவு சரிதான்.. அவர் மீது கொண்ட அன்புக்காக எழுதப்பட்டது.

      Delete
  4. //நல்லா தெளிவா புரிஞ்சுங்கனும்னு ஒரே பேப்பரை ரெண்டு மூணு தடவை எழுதறதால (அதத்தான் இந்த உலகம் அரியர்னு சொல்லுது) பல டிசைன்ல நம்மகிட்ட கொஸ்டின் பேப்பர் இருக்கும்.// ஹா ஹா ...சூப்பர்


    //வீட்டுக்காரியை நினைச்சி ஏதாவது எழுதலாம்னா கொழம்பு கரண்டியும், தோசை பிரட்டியும் கண் முன்னால வந்து மூட் அவுட்டாக்குது.// அவுக படிப்பாங்களா ?


    //உண்மையிலேயே அப்போது தான் வைரமுத்து சொன்ன உருவமில்லா உருண்டையின் விளக்கம் புரிந்தது. // ரசித்தேன்

    நல்ல கடிதம் . வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies

    1. அட...நல்லாத்தான் ரசித்திருக்கீங்க...மிக்க நன்றி ரூபக் ராம் சார்...

      Delete
  5. கொஞ்சம் மடக்கி மடக்கி போட்டு வார்த்தைகளை சுருக்குனா கவிதா ச்சே கவிதையா வந்துர்க்குமே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி IlayaDhasan சார்

      Delete
  6. நல்ல ரசனையோட எழுதி இருக்கீங்க.
    //வாழ்க்கை பூரா பிரியாம இருக்க இன்னும் ஒரு வருஷம் பிரிஞ்சி இருப்போம//
    அழகா நிறைவுசெஞ்சிருக்கீங்க
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி T.N.MURALIDHARAN..சார்

      Delete
  7. அழகானதோர் காதல் கடிதம்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி Tamizhmuhil Prakasam..

      Delete
  8. நல்லதோர் காதல் கடிதம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  9. பிரிவின் வலி உணர முடிகிறது வரிகளில்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ..

      Delete
  10. "அருமை போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!!!"

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி Bala subramanian...

      Delete
  11. நான் மேல இருக்கிறது தான் கடிதம்னு நெனச்சேன் ,.,,, பொறவு தான் கீழ தனியா கடிதம் இருக்கு ... நல்லாருக்கு சார் ... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பீலிங், இதுவும் ஒரு தனி விதமான உணர்வு ...

    ReplyDelete
    Replies
    1. //நான் மேல இருக்கிறது தான் கடிதம்னு நெனச்சேன் ,.,,,//
      உம்ம நினைப்புல தீய வைக்க :-)

      Delete
  12. நான் கூட எங்கே எனக்குத் தான் கடிதம் எழுதி விடீர்களோ என்று நினைத்தேன்... சீக்கிரம் உங்கள் பிரியமான பிரியதர்சினியுடன் இணைந்து நல்லறம் நடத்த வாழ்த்துக்கள் சார்...

    ReplyDelete
  13. தூரத்திலிருந்து பிரியமாக தரிசனம் கொடுத்ததால் ப்ரியதர்ஷினியா பிரியதர்ஷினியா!

    ReplyDelete
  14. சீனு மாதிரிதான் நானும் நினைச்சேன்!
    மொட்டைமாடி காதல் கல்யாணம் வரை வந்திருக்கே. உங்கள் ப்ரியமான பிரியதர்ஷினியை ரொம்பநாள் பிரிஞ்சு இருக்காம சீக்கிரம் வந்து சேருங்கள்.ஒரு சிறுகதை படித்த திருப்தி.
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!


    @ஸ்ரீராம், காமென்ட் அருமை!

    ReplyDelete
  15. தூக்கம் கலையும் ஒவ்வொரு காலையும்.. simply beautiful.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete