Thursday, 9 August 2012

புதுவை பவர் ஸ்டாரும், ஈமு போட்ட கூமுட்டையும்.....



 புதுவையின்  பவர் ஸ்டார் 

  அறிவியலின் அபார வளர்ச்சி,நம் அண்டத்தை அழிவுப்பாதையை நோக்கி நகர்த்துகிறது என்பதற்கு உதாரணமாக ஒட்டுமொத்த உலகமும் ஒருசேர கைகாட்டும் அணுகுண்டுக்கு அடுத்த இடத்தில் தற்போது போட்டோஷாப்...!. புதுவை முதல்வரின் பிறந்தநாளுக்கு அடித்த பேனர் தான் இது.இதைப்பார்த்து எந்தனை பேர் நாண்டுகிட்டு செத்துப்போனாங்களோ...!?.சத்தமில்லாமல் ஒரு பவர்ஸ்டார் உருவாகுகிறார்...!!!

  புதுவை வீரன் எ(ரெ)ங்கசாமி...


************************************************************************************************************************************************

ஈமு போட்ட கூமுட்டை....

      நடுத்தர வர்க்கத்தினரின் பண நெருக்கடியை மையமாக வைத்து,அவர்களின் பணப்பேராசையை பகடைக்காயாக்கி,புற்றீசல் போல அவ்வப்போது கிளம்பும் நிதிநிறுவன சேமிப்புதிட்டம்,தீபாவளி.'.பண்ட், தங்கக்காசு திட்டம் போன்ற ஏமாற்று திட்டங்களின் வரிசையில் அடுத்ததாக இணைந்திருக்கிறது ஈமு கோழி வளர்ப்பு திட்டம்.
    ஆனால் தற்போது இவர்கள் கைவைத்திருப்பது ஏழை விவசாயிகளின் அடி மடியில்.அன்றாட உணவிற்கே அல்லோலப்படும் ஏழை மக்களிடம் ஆசையைக் காட்டி,இறுதியில் நற்றாற்றில் தவிக்கவிட்டுத் தலைமறைவாகி விட்டனர் இந்த நிறுவன ஊழியர்கள்.




    இதில் நாம் கவனிக்கவேண்டிய இன்னொரு விசயமும் இருக்கிறது.இது போன்ற பணம் திண்ணும் கழுகுகளின் பித்தலாட்டத் திட்டங்களை மக்கள் மன்றத்தில் பிரபலப்படுத்த இவர்கள் கையாளும் சூத்திரம் சுவாரஸ்யமானது. வெறுமனே ஊடகங்களில் விளம்பரப்படுத்தினால் மக்களிடம் சரியாக சென்றடையாது என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கும் இந்த முதலைகளுக்கு,சினிமா மோகம் என்ற பலவீனத்தை வைத்தே தமிழ் பாமர மக்களை நம்பவைத்து விடலாம் என்ற சூட்சமும் நன்றாவே தெரிந்திருக்கிறது.

      திரையில் உத்தமனாக நடித்து,தத்துவார்த்தமாக பேசி கைதட்டல் வாங்கும் பிரபல நடிகர்கள் விளம்பரம் செய்வது,கிட்டத்தட்ட சிபாரிசுக்கு சமமென்று நம்பும் பாமர மக்களும் இவர்களின் பசப்பு வார்தைகளை நம்பி முதலீடு செய்கிறார்கள்.அப்படியானால் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்த இந்த
த் திரை நட்சத்திரங்கள் தானே முதல் குற்றவாளிகள்.ஈமு கோழி போட்ட இந்த கூமுட்டைகளுக்கு என்ன தண்டனை? 

"கோழி வளர்த்தால் கோடீஸ்வரர் ஆகலாம்".. இது ஈமு கோழி நிறுவனங்கள் சொல்லும் தாரக மந்திரம். "மு‌ட்டை‌யி‌ல் இரு‌ந்து கோ‌ழி வ‌ந்‌திரு‌க்கலா‌ம் ஆனா‌ ஈமு கோ‌ழி‌யி‌ல் இரு‌ந்துதா‌ன் இலாப‌ம் வ‌ந்தது.." ''ஈமு கோழி இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்!, ஒருமுறை முதலீடு செய்தால் வாழ்நாள் முழுக்க வருமானம் பெறலாம்!'' '‌கோ‌ழினா ஈமு பே‌பினா இலாப‌ம்' இப்படியெல்லாம் வாய்கூசாமல் அள்ளிவிடுவது நம்ம திரை நட்சத்திரங்கள் தான்.இதில் நடிகர் சங்கத்தலைவரும் சமக அகில அண்டத்தலைவருமான சரத்குமார் அவர்களும் உள்ளடக்கம் என்பதுதான் மிகப்பெரிய வெட்கக்கேடு.

   கோல்ட் குவிஸ்ட் தங்கக்காசு திட்டத்தில் தமிழகத்தின் உயரிய கலைக்குடும்பத்திலிருந்து வந்த அந்த வாரிசு நடிகரை வைத்து தானே விளம்பரப்படுத்தப்பட்டது.மக்களின் அறியாமையை மூலதனமாக வைத்து துவங்கப்பட்ட அந்தத்திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கில் சுருட்டிய அந்த நிறுவனம் மீண்டும் தற்போது அதன் சேவையை துவக்கியிருப்பதாக சில மாதங்களுக்கு முன் செய்தி கூட வெளியாகியிருந்தது.அந்த நடிகரோ, அடுத்ததாக புரட்சி போராட்டத்தில் பங்கெடுத்த கையோடு,ஈமு திட்டத்திலும் தன் சேவையை செவ்வனே செய்திருக்கிறார்.
 
   மக்கள் போடும் பிச்சைக்காசில் சொகுசாக வாழும் திரை நட்ச்சத்திரங்கள்,வரம் கொடுத்தவர்களின் தலையிலே கை வைப்பதுபோல் அவர்களின் கழுத்தை நெரிக்க
த் துணைபோவது எப்படி நியாயமாகும்? இந்த விசயத்தில் தண்டிக்கப்படவேண்டிய முதல் குற்றவாளிகள் இவர்களல்லவா? 
************************************************************************************************************************************************
கொஞ்சம் ரிலாக்ஸ்...
       வழக்கமாக,கவுண்டர் எல்லா படங்களிலுமே செந்திலை ஐந்தறிவு மிருகங்களுடன் சம்மந்தப்படுத்தி கெட்ட கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்து நம்மை மகிழ்விப்பார்.ஆனால் சில நேரங்களில் கவுண்டருக்கே கவுண்டர் டயலாக் அடித்து அதை ஒட்டு மொத்தமாக காலி செய்து விடுவார் செந்தில். சமீபத்தில் ரசித்த அப்படியொரு காட்சி....
செந்தில்: ஏண்ணே...இந்த மெக்கானிக்கல் வேலை எப்படிண்ணே கத்துக்கிட்டீங்க...?
கவுண்டர்: ஹே...ஹே...ஹே... அடேய்... அதுக்கெல்லாம் மூளை வேணும்டா...
செந்தில்: அதான்...நீங்க எப்படி கத்துக்கிட்டீங்க...?
கவுண்டர்: !?!?!?!?...டேய்...என்னயென்ன சாதாரண ஆளுன்னு நெனைச்சியா... எனக்கு ஒடம்பு  பூரா மூளைடா..
செந்தில்:  ஒடம்பு  பூரா இருந்தா அதுக்கு பேரு மூளை இல்லண்ணே ..கொழுப்பு...
************************************************************************************************************************************************

  ஒருத்தன், 15 வது  மாடியில் இருக்கும் அவன் வீட்டு பால்கனியில் நின்னுகிட்டு வடை சாப்பிட்டு கிட்டு இருந்தான்.அப்போ கீழே வேகமா வந்த ஒருத்தன் "கைலாஷ்..உன் பொண்ணு பிரியா கார் ஓட்டிகிட்டு போகும்போது லாரி மோதி செத்து போயிடுச்சிடா.."என்று கத்தினான்.இதைக் கேள்விப்பட்டதும் கடும் அதிர்ச்சியாகி என்ன செய்றதுன்னு தெரியாம 15 வது மாடியிலிருந்து கீழே குதிச்சிட்டான்.

12வது மாடி வரும்போதுதான் அவனுக்கு யோசனை வந்திச்சி."ச்சே...நம்ம கிட்டதான் கார் எதுவும் கிடையாதே..."

10 வது மாடியை தாண்டும் போதுதான் அவனுக்கு தோணிச்சி.."ச்சே...நம்ம பொண்ணு பேரு பிரியா கிடையாதே..."

8  வது மாடியை நெருங்கும் போதுதான் அவனுக்கு ஞாபகம் வந்திச்சி.." அடடா..நமக்கு பொண்ணே கிடையாதே.."

6  வது மாடிகிட்ட வரும்போதுதான் அவனுக்கு கொஞ்சம் புரிந்தது "நமக்குதான் இன்னும் கல்யாணமே ஆகலியே.."

4  வது மாடிய நெருங்கும்போதுதான் தெளிவா புரிஞ்சது...."ஐய்யயோ...என் பேரு கைலாஷ் இல்லையே.."

விதி வலியது..!!! வடை போச்சே...!!!


  -------------------------------------------------------X----------------------------------------


வணக்கங்களுடன்....
மணிமாறன்.

************************************************************************************************************************************************