Thursday 9 August 2012

புதுவை பவர் ஸ்டாரும், ஈமு போட்ட கூமுட்டையும்..... புதுவையின்  பவர் ஸ்டார் 

  அறிவியலின் அபார வளர்ச்சி,நம் அண்டத்தை அழிவுப்பாதையை நோக்கி நகர்த்துகிறது என்பதற்கு உதாரணமாக ஒட்டுமொத்த உலகமும் ஒருசேர கைகாட்டும் அணுகுண்டுக்கு அடுத்த இடத்தில் தற்போது போட்டோஷாப்...!. புதுவை முதல்வரின் பிறந்தநாளுக்கு அடித்த பேனர் தான் இது.இதைப்பார்த்து எந்தனை பேர் நாண்டுகிட்டு செத்துப்போனாங்களோ...!?.சத்தமில்லாமல் ஒரு பவர்ஸ்டார் உருவாகுகிறார்...!!!

  புதுவை வீரன் எ(ரெ)ங்கசாமி...


************************************************************************************************************************************************

ஈமு போட்ட கூமுட்டை....

      நடுத்தர வர்க்கத்தினரின் பண நெருக்கடியை மையமாக வைத்து,அவர்களின் பணப்பேராசையை பகடைக்காயாக்கி,புற்றீசல் போல அவ்வப்போது கிளம்பும் நிதிநிறுவன சேமிப்புதிட்டம்,தீபாவளி.'.பண்ட், தங்கக்காசு திட்டம் போன்ற ஏமாற்று திட்டங்களின் வரிசையில் அடுத்ததாக இணைந்திருக்கிறது ஈமு கோழி வளர்ப்பு திட்டம்.
    ஆனால் தற்போது இவர்கள் கைவைத்திருப்பது ஏழை விவசாயிகளின் அடி மடியில்.அன்றாட உணவிற்கே அல்லோலப்படும் ஏழை மக்களிடம் ஆசையைக் காட்டி,இறுதியில் நற்றாற்றில் தவிக்கவிட்டுத் தலைமறைவாகி விட்டனர் இந்த நிறுவன ஊழியர்கள்.
    இதில் நாம் கவனிக்கவேண்டிய இன்னொரு விசயமும் இருக்கிறது.இது போன்ற பணம் திண்ணும் கழுகுகளின் பித்தலாட்டத் திட்டங்களை மக்கள் மன்றத்தில் பிரபலப்படுத்த இவர்கள் கையாளும் சூத்திரம் சுவாரஸ்யமானது. வெறுமனே ஊடகங்களில் விளம்பரப்படுத்தினால் மக்களிடம் சரியாக சென்றடையாது என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கும் இந்த முதலைகளுக்கு,சினிமா மோகம் என்ற பலவீனத்தை வைத்தே தமிழ் பாமர மக்களை நம்பவைத்து விடலாம் என்ற சூட்சமும் நன்றாவே தெரிந்திருக்கிறது.

      திரையில் உத்தமனாக நடித்து,தத்துவார்த்தமாக பேசி கைதட்டல் வாங்கும் பிரபல நடிகர்கள் விளம்பரம் செய்வது,கிட்டத்தட்ட சிபாரிசுக்கு சமமென்று நம்பும் பாமர மக்களும் இவர்களின் பசப்பு வார்தைகளை நம்பி முதலீடு செய்கிறார்கள்.அப்படியானால் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்த இந்த
த் திரை நட்சத்திரங்கள் தானே முதல் குற்றவாளிகள்.ஈமு கோழி போட்ட இந்த கூமுட்டைகளுக்கு என்ன தண்டனை? 

"கோழி வளர்த்தால் கோடீஸ்வரர் ஆகலாம்".. இது ஈமு கோழி நிறுவனங்கள் சொல்லும் தாரக மந்திரம். "மு‌ட்டை‌யி‌ல் இரு‌ந்து கோ‌ழி வ‌ந்‌திரு‌க்கலா‌ம் ஆனா‌ ஈமு கோ‌ழி‌யி‌ல் இரு‌ந்துதா‌ன் இலாப‌ம் வ‌ந்தது.." ''ஈமு கோழி இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்!, ஒருமுறை முதலீடு செய்தால் வாழ்நாள் முழுக்க வருமானம் பெறலாம்!'' '‌கோ‌ழினா ஈமு பே‌பினா இலாப‌ம்' இப்படியெல்லாம் வாய்கூசாமல் அள்ளிவிடுவது நம்ம திரை நட்சத்திரங்கள் தான்.இதில் நடிகர் சங்கத்தலைவரும் சமக அகில அண்டத்தலைவருமான சரத்குமார் அவர்களும் உள்ளடக்கம் என்பதுதான் மிகப்பெரிய வெட்கக்கேடு.

   கோல்ட் குவிஸ்ட் தங்கக்காசு திட்டத்தில் தமிழகத்தின் உயரிய கலைக்குடும்பத்திலிருந்து வந்த அந்த வாரிசு நடிகரை வைத்து தானே விளம்பரப்படுத்தப்பட்டது.மக்களின் அறியாமையை மூலதனமாக வைத்து துவங்கப்பட்ட அந்தத்திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கில் சுருட்டிய அந்த நிறுவனம் மீண்டும் தற்போது அதன் சேவையை துவக்கியிருப்பதாக சில மாதங்களுக்கு முன் செய்தி கூட வெளியாகியிருந்தது.அந்த நடிகரோ, அடுத்ததாக புரட்சி போராட்டத்தில் பங்கெடுத்த கையோடு,ஈமு திட்டத்திலும் தன் சேவையை செவ்வனே செய்திருக்கிறார்.
 
   மக்கள் போடும் பிச்சைக்காசில் சொகுசாக வாழும் திரை நட்ச்சத்திரங்கள்,வரம் கொடுத்தவர்களின் தலையிலே கை வைப்பதுபோல் அவர்களின் கழுத்தை நெரிக்க
த் துணைபோவது எப்படி நியாயமாகும்? இந்த விசயத்தில் தண்டிக்கப்படவேண்டிய முதல் குற்றவாளிகள் இவர்களல்லவா? 
************************************************************************************************************************************************
கொஞ்சம் ரிலாக்ஸ்...
       வழக்கமாக,கவுண்டர் எல்லா படங்களிலுமே செந்திலை ஐந்தறிவு மிருகங்களுடன் சம்மந்தப்படுத்தி கெட்ட கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்து நம்மை மகிழ்விப்பார்.ஆனால் சில நேரங்களில் கவுண்டருக்கே கவுண்டர் டயலாக் அடித்து அதை ஒட்டு மொத்தமாக காலி செய்து விடுவார் செந்தில். சமீபத்தில் ரசித்த அப்படியொரு காட்சி....
செந்தில்: ஏண்ணே...இந்த மெக்கானிக்கல் வேலை எப்படிண்ணே கத்துக்கிட்டீங்க...?
கவுண்டர்: ஹே...ஹே...ஹே... அடேய்... அதுக்கெல்லாம் மூளை வேணும்டா...
செந்தில்: அதான்...நீங்க எப்படி கத்துக்கிட்டீங்க...?
கவுண்டர்: !?!?!?!?...டேய்...என்னயென்ன சாதாரண ஆளுன்னு நெனைச்சியா... எனக்கு ஒடம்பு  பூரா மூளைடா..
செந்தில்:  ஒடம்பு  பூரா இருந்தா அதுக்கு பேரு மூளை இல்லண்ணே ..கொழுப்பு...
************************************************************************************************************************************************

  ஒருத்தன், 15 வது  மாடியில் இருக்கும் அவன் வீட்டு பால்கனியில் நின்னுகிட்டு வடை சாப்பிட்டு கிட்டு இருந்தான்.அப்போ கீழே வேகமா வந்த ஒருத்தன் "கைலாஷ்..உன் பொண்ணு பிரியா கார் ஓட்டிகிட்டு போகும்போது லாரி மோதி செத்து போயிடுச்சிடா.."என்று கத்தினான்.இதைக் கேள்விப்பட்டதும் கடும் அதிர்ச்சியாகி என்ன செய்றதுன்னு தெரியாம 15 வது மாடியிலிருந்து கீழே குதிச்சிட்டான்.

12வது மாடி வரும்போதுதான் அவனுக்கு யோசனை வந்திச்சி."ச்சே...நம்ம கிட்டதான் கார் எதுவும் கிடையாதே..."

10 வது மாடியை தாண்டும் போதுதான் அவனுக்கு தோணிச்சி.."ச்சே...நம்ம பொண்ணு பேரு பிரியா கிடையாதே..."

8  வது மாடியை நெருங்கும் போதுதான் அவனுக்கு ஞாபகம் வந்திச்சி.." அடடா..நமக்கு பொண்ணே கிடையாதே.."

6  வது மாடிகிட்ட வரும்போதுதான் அவனுக்கு கொஞ்சம் புரிந்தது "நமக்குதான் இன்னும் கல்யாணமே ஆகலியே.."

4  வது மாடிய நெருங்கும்போதுதான் தெளிவா புரிஞ்சது...."ஐய்யயோ...என் பேரு கைலாஷ் இல்லையே.."

விதி வலியது..!!! வடை போச்சே...!!!


  -------------------------------------------------------X----------------------------------------


வணக்கங்களுடன்....
மணிமாறன்.

************************************************************************************************************************************************

38 comments:

 1. எனக்கு நெருங்கின உறவினர் நிலைமையை நினைத்தால் தான் கஷ்டமாக இருக்கு...

  இந்த படத்தில் உள்ள + படத்தில் வராத கூமுட்டைகள் காசு கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் (சொல்ல விரும்பவில்லை) செய்வார்கள்...

  உண்மையான கூமுட்டைகள் மக்களின் அறியாமை...

  தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நண்பரின் கருத்துக்கு நன்றி..

   Delete
 2. ///புதுவையின் பவர் ஸ்டார் ///

  என்னய்யா இது பிக்காளித்தனமா இருக்கு! அடங்கமாட்டாங்க போலிருக்கே! :(

  ReplyDelete
  Replies
  1. அதுவும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு திங் பண்ணிருக்காங்க பாருங்க..எங்கேயோ போய்ட்டாங்க அல்லக்கைகள்...

   Delete
 3. ///ஈமு போட்ட கூமுட்டை....///

  ரெண்டு புகைப்படமும் நல்ல காமெடி சென்ஸ் :D

  விளம்பரங்களில் நடித்த நடிகர்களை பற்றிய உங்கள் ஆதங்கம் நியாயமானது! ஆனால் தவறுக்கு அவர்களை மட்டுமே குற்றம் சுமத்த முடியாது., புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. நண்பரின் கருத்துக்கு நன்றி...ஆனால் மக்கள் பணத்தில பொழப்ப ஓட்டுற நடிகர்கள் எப்படி அவுங்க வயித்தில அடிக்கிற இதுபோன்ற பிராடுக்கு துணை போறாங்கனு ஆதங்கத்தில்தான் அப்படி எழுதினேன்.சோப்பு ,பேஸ்ட் விளம்பரமெல்லாம் வெறும் அஞ்சு பத்து இழப்புதான்.ஆனால் இதில் சொத்து பணமெல்லாம் இழந்து நடு ரோட்டுக்கு வந்தவங்க நிறையப்பேர்.அவர்களுக்கு இழப்பீட்டுதொகையை இந்த நடிகர்கள் வாங்கித்தருவார்களா...? இந்த முறை நடிகர்களின் மீதும் வழக்கு பதிவு செய்திருப்பது நல்ல ஒரு தொடக்கமே...

   Delete
 4. ///விதி வலியது///

  ஹி ஹி ஹி! செம செம :D

  ReplyDelete
  Replies
  1. நண்பரின் வருகைக்கு நன்றி...நன்றி

   Delete
 5. மிக்க நன்றி தங்களின் கருத்துக்கு

  ReplyDelete
  Replies
  1. நண்பரின் வருகைக்கு நன்றி

   Delete
 6. சிந்திக்கத் தவறிய - தெரியாத மாக்கள் !

  ReplyDelete
 7. எங்க ஊர் பக்கமெல்லாம் ஈமு ,கீமு எல்லாம் சீண்ட ஆள் இல்லை எல்லாம் மேற்கு மண்டல ஆளுங்க தான் மாட்டிக்கிட்டாங்க, ஏன் எனில் நடத்தியதும் அந்த பக்கத்து ஆளுங்க என்பதால் இருக்கலாம்.

  ஆனால் புதுவையில் வாசன் ஐ கேர் அருகே ஒரு பெரிய ஈமு பிரியாணிக்கடை இருக்கு, இப்போ போய் பார்க்கணும் ,அடுத்த வாரம் போய் கடை இருக்கான்னு பார்த்திடுறேன்.

  அடுத்து கரடி வளர்ப்பு திட்டம்னு ஒன்று ஆரம்பிச்சாலும் ஆரம்பிப்பாங்க ,மக்களும் ஆசையோடு ஓடுவாங்க :-))

  ----------

  ஹி..ஹி ரெங்க சாமி போட்டோ எப்படி கிடிச்சது , நானும் மொபைலில் நான்கைந்து எடுத்து வந்திருக்கேன் , ஒரு பதிவு தேர்த்த.

  கடலூரில் இருந்து பாண்டி போகும் வழி எங்கும் தினற தினற பேனர் வச்சு கொடுமைப்பண்ணிட்டாங்க :-))

  ReplyDelete
  Replies
  1. // கரடி வளர்ப்பு திட்டம்னு ஒன்று ஆரம்பிச்சாலும் ஆரம்பிப்பாங்க..//

   அப்ப... நம்ம டி. ஆரை வச்சி விளம்பரப்படுத்தலாமா? :-)))))

   Delete
  2. ///அப்ப... நம்ம டி. ஆரை வச்சி விளம்பரப்படுத்தலாமா? :-)))))///

   நல்ல ஆள் புடிச்சிருக்கீங்கய்யா ஹி ஹி ஹி :-))

   Delete
  3. //நல்ல ஆள் புடிச்சிருக்கீங்கய்யா../

   :-)))))

   Delete
 8. மக்கள் தொலைக்காட்சியில் அதிகமா விளம்பரம் போல இல்லாம இதை போட்டுக்கிட்டே இருந்தாங்க, மேலும் கோக்கோ மரம் வலர்த்து கோடிஸ்வரன் ஆகவும் சொல்றாங்க அப்போ அதுவும் இது போல ஆகிடுமா?

  இனிமே டீ.வியில் எதுனா வளர்க்க சொன்னால் உஷாரா இருப்பது நல்லது.

  ReplyDelete
  Replies
  1. டிவி மட்டுமல்ல... இன்று ஈமு மோசடி என்று செய்தி வெளியிடும் செய்திதாள்கள் கூட நேற்று வரை அரை பக்க விளம்பரம் கொடுக்கத்தான் செய்தது. இது போன்ற கொடுமை நம்ம நாட்டில மட்டும்தான் நடக்கும் போல...நண்பரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

   Delete
 9. i have a plan:if u give me Rs 10000000 to day<u can collect Rs 100000 every month from the 1000th month? o.k?

  ReplyDelete
  Replies
  1. HA..HA...START THE MUSIC..:-)))) THANKS...

   Delete
 10. Replies
  1. நண்பரின் வருகைக்கு நன்றி

   Delete
 11. அடுத்து ரியல் எஸ்டேட் காரங்க தான்னு நினைக்கிறன். அவங்க விளம்பரம் தான் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. சென்னைக்கு மிக அருகில் 300 km துரத்தில்...
  வடை போச்சே அருமை... :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி..நண்பர்.ராஜ்.

   Delete
 12. good articles.... love tht joke...

  ReplyDelete
 13. Replies
  1. மிக்க நன்றி தங்களின் கருத்துக்கு

   Delete
 14. நாளைக்கு வாரேன்

  ReplyDelete
 15. //புதுவை வீரன் எ(ரெ)ங்கசாமி...//

  பாஸ் கெட்டப்பு எல்லாம் பரம்பரை கூத்தாடிக்கு கூட மேட்ச் ஆகாது

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா.. கரக்டா சொன்னீங்க பாஸ்..

   Delete
 16. //மக்கள் போடும் பிச்சைக்காசில் சொகுசாக வாழும் திரை நட்ச்சத்திரங்கள்//

  பாஸ்,தங்களின் பிளப்புக்காகா தமிழன் தலையில் நல்லாவே மிளகாய் அறைகிறார்கள்.....

  ReplyDelete
  Replies
  1. மொதல்ல இவங்கள புடிச்ச்க்ஹி உள்ளபோடனும் பாஸ்..சினிமாவில் சம்பாதிப்பது இல்லாமல் இப்படியும் கொள்ளையடிக்கிறாங்க...

   Delete
 17. //கொஞ்சம் ரிலாக்ஸ்...//

  கவுண்டர் செந்தில் ஜோடி அது ஒரு தனி ட்ராக்.


  நாலாவது மாடியில்.......கொய்யால அப்பவாது ஞாபகம் வந்துச்சே...(சேருவதுக்கு முன்னாலயாவது)

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

   Delete