சமூக வலைத்தளங்களில் ஒரு படத்தை மொக்கைனு ஈசியா சொல்லிடலாம் போல... நல்லாயிருக்குன்னு சொல்லிட்டா முதுகுல டின் கட்டிடுறாங்க...
ஏம்பா இணையத்தில விஜய் ரசிகர்கள் யாருமே இல்லையா..எல்லோரும் வெறும் விசிலடிச்சான் குஞ்சுகளா..? தலைவா படம் தமிழகத்தில் தடை செய்யப்பட சூழலில் முதலில் ரிலீஸ் ஆனது சிங்கப்பூரில்தான். முதல்நாள் முதல்காட்சி என்பதெல்லாம் வெட்டி ஆபீசர்ஸ் வேலை என நினைத்த எனக்கு, விபத்து போல அமைஞ்சது தலைவா படத்தின் முதல்நாள்.. ஸாரி முந்திய நாள் முதல் ஷோ.
ஆர்பாட்டம் ...ஆர்ப்பரிப்பு.. அதகளம்.. விசில் சத்தம்... எல்லாம் முதல் பதினைந்து நிமிடங்கள் தான். அப்புறம் எல்லோரும் ரிலாக்சா செல்போன்ல வீடியோகேம் விளையாட ஆரம்பிச்சிட்டாங்க. படம் பார்த்துவிட்டு வந்து முதல் ரிவியூவாக படம் ' மரண மொக்கை' என எழுதினேன். ஆவலுடன் எதிர்பார்த்த ஒரு படத்தை இப்படி எழுதியிருக்கேன்னு உலக அணில் ரசிகர்கள் யாருமே என் பிளாக்கில் வந்து பொங்கல் வைக்கவில்லை. மாறாக அப்படியா.. ஊத்திகிச்சா... ஓவர் பில்டப் கொடுக்கும்போதே தெரியும்.... அப்படி இப்படினு சிலர் சந்தோசமா பின்னூட்டம் போட்டாங்க ...
பிறகு 'ஆரம்பம்' இப்படித்தான் முந்திய நாள் இரவு பார்த்துவிட்டு 'தல தி மாஸ்'னு போட்டு,படம் ஆஹாஓஹோ அட்டகாசம்னு எழுதினேன். எல்லா பின்னூட்டங்களும் சாதகமாக வந்தது. மாறாக, ஒரு விஜய் ரசிகர் கூட எதிர் கமெண்ட் போடவில்லை. நிறைய பேர் படிக்கவில்லை என சொல்லமுடியாது. இரண்டும் பத்தாயிரத்துக்கும் அதிகமான ஹிட்டடித்த பதிவுகள்.
ஆனால் பாருங்க. ஜில்லா கண்டிப்பா ஹிட் ஆகிடும். எல்லோருக்கும் பிடிக்கும்னு எழுதினேன்.அவ்வளவுதான். காதுல ரத்தம் வர்ற அளவுக்கு அவ்வளவும் செம்மொழி கமெண்டுகள். எல்லாம் இப்ப ஸ்பாம்ல கிடக்கு. (வெயிட்..இதெல்லாம் ஒரு பொழைப்பானு கேட்க வாறீங்க ? வவ்வால் வேஷம் போட்டால் தலைகீழ தொங்கித்தானே ஆகணும் பாஸ்...)
சரி அதை விடுங்க.. இதிலிருந்து என்ன தெரியுது...? இணையம் முழுவதும், அதாவது படித்தவர்கள் மத்தியில் விஜயைவிட அஜித்துக்குத்தான் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. தவிரவும், ரசிகர் மன்றங்கள் கலைப்பு, பெயருக்கு முன் அடைமொழி மற்றும் பட்டங்கள் தவிர்ப்பு போன்றவைகள் மற்ற ரசிகர்கள் மத்தியில் அஜித் அவர்களுக்கு மிகுந்த செல்வாக்கை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
ஒரு காலத்தில் கமலின் தீவிர ரசிகனாக இருந்தபோது, ரஜினியை சுத்தமாக பிடிக்காது. அவர் படங்கள் எதுவும் தியேட்டரில் பார்க்க மாட்டேன். ரஜினி என்றாலே வெறுக்குமளவுக்கு ஒரு மைண்ட் செட் அப்போது இருந்தது. எப்போது அவர் தனக்கு அமைந்த அற்புதமான அரசியல் பிரவேச வாய்ப்பை தவிர்த்துவிட்டு ஒதுங்கிப் போனாரோ, அப்போது பிடித்துப் போனது சூப்பர் ஸ்டாரை.
அஜித்தும் அப்படித்தான். விஜயின் சக போட்டியாளராக இருந்த போதிலும் பெரும்பாலும் ரேசில் வெல்வது விஜய்யாக இருக்கும். ஆனால் செல்வாக்கும், ரசிக பட்டாளமும் அதிகரித்தது என்னவோ அஜித்துக்குத்தான். ஆளானப்பட்ட சூப்பர் ஸ்டாரே மேக்கப் இல்லாமல் ஒரே ஒரு படத்தில், அதுவும் கேரக்டர் ரோல் செய்துவிட்டுப் போக, அஜித் அவர்கள் இயல்பான கெட்டப்பில் நடித்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்தது உண்மையிலேயே ஆச்சர்யம்தான்.
முதலில் வீரம் படத்தின் விமர்சனம் :
இயல்பான அறிமுகம். பிறகுதான் ஆரம்பிக்கிறது அதகளம்.
" ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும் அதகளம் புரிந்திடும் வீரம்.. இவன் மதபுஜம் இரண்டும் மலையென எழுந்திட செருக்களம் சிதறிடும் வீரம்..." பின்னணியில் ஒலிக்க, அஜித் திரும்பினால் விசில், நடந்தால் விசில், பேசினால் விசில், அசைந்தாலே விசில்..! அரங்கமே அதிர்கிறது. ஒரே அடியில் ஐந்தாறு பேரை வீழ்த்துகிறார். தப்பித்தவறி வில்லன்களின் ஒரு அடி தல மேல பட்டாலும் தியேட்டரில் 'ஏய் ...' என சத்தம்.
ஜில்லாவில் இறுதிகாட்சியில் மோகன்லால் விஜயின் நெஞ்சில் செருப்புக்காலோடு மிதிப்பார். அவரது ரசிகர்களிடம் எவ்வித ரியாக்சனும் இல்லை. ஆனால் இங்கே பொங்கி எழுகிறார்கள். இப்படியொரு ரசிக பட்டாளம் கிடைக்க தல போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்..!
இயல்பான கதைதான். அடிதடி பிரதர்ஸ் ஐந்து பேர். அதில் தல தான் தலை. தன் தம்பிகளை பிரிந்துவிடக் கூடாது என்பதற்காக கல்யாணமே செய்து கொள்ளாமல்(தம்பிகளையும் செய்யவிடாமல்) பேச்சிலர் வாழ்க்கை வாழும் அஜித், தம்பிகளின் வற்புறுத்தலுக்காக கல்யாணம் செய்ய சம்மதிக்கிறார். யாரை திருமணம் செய்ய நினைக்கிறாரோ அப்பெண்ணுக்காக அடிதடியெல்லாம் விட்டுவிட்டு அரிவாளை கீழே போடும் அஜித், அதே பெண்ணின் குடும்பத்தைக் காப்பாற்ற மீண்டும் அரிவாளைத் தூக்குகிறார். இதுதான் கதை.
தமிழ், தெலுங்கு மார்கெட்டை டார்கெட் செய்து கதையை அமைத்திருக்கிறார் சிறுத்தை சிவா. அவர் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக வந்திருப்பதாக யூகிக்கிறேன்.ஒரு மாஸ் ஹீரோவுக்கு எப்படி காட்சிகளை வைக்க வேண்டும் என்பதில் மிகத்தெளிவாக இருக்கிறார் இயக்குனர் சிவா.. அஜித் கேரியரில் தீனா முக்கியமான படம். 'தல' பட்டமும் 'நடராஜா ' ஸ்டைலும் அதில்தான் அறிமுகமானது. அது போன்ற ஓர் முக்கியமான படம் வீரம்.
அண்ணன் - தம்பிகள் கதைகள் தமிழில் நிறைய வந்திருக்கிறது. எல்லாமே 'அண்ணன் சொன்னா சரியாத்தாங்க இருக்கும்' தலையாட்டிப் பொம்மைகள் டைப். இதிலும் தம்பிகளை விட்டுக்கொடுக்காத அண்ணன், அண்ணனுக்காக எதையும் செய்யும் தம்பிகள் என்ற அதே செண்டிமெண்ட் உப்புமா கிண்டினாலும், கிண்டியதையே திரும்பவும் கிண்டாமல் கலகல கிச்சடி செய்ய முயற்சித்திருப்பது பாராட்டப்படவேண்டிய விஷயம்.
நீண்ட இடைவெளிக்குப் பின் சந்தானம் தனக்கான களத்தில் இறங்கி அடித்திருக்கிறார். ஏற்கனவே வக்கீலாக சில படங்களில் நடித்திருந்தாலும் இந்தளவுக்கு காமெடியில் புகுந்து விளையாடியதில்லை. தல பிரதர்ஸ் உடன் முன்பாதி முழுவதும் அடிக்கும் லூட்டிகள் சரவெடிகள் என்றால் பிற்பாதியில் தம்பி ராமய்யா சேர்ந்துகொள்ள தௌசண்ட் வாலா பட்டாசாக வெடிக்கிறது.
படத்தில் அஜித்-க்கு அடுத்ததாக பாராட்டப்பட பட வேண்டியவர் ஸ்டன்ட் சில்வா. சண்டைக்காட்சிகளில் உண்மையிலேயே பொறி பறக்கிறது.
படத்தின் இன்னொரு பலம் பின்னணி இசை. ஆனால் பாடல்கள் ஏனோ மனதில் நிற்கவில்லை.குறிப்பாக தல டூயட் ஆடும்போது ஏதோ நெருடுகிறது.இவ்வளவு மண்வாசனையான படத்திற்கு எதற்கு ஃபாரின் லொகேசனில் பாடல்கள். படத்திலிருந்து தனித்து நிற்கின்றன அப்பாடல்கள்.
தம்பிகளாக வரும் நால்வரில் இருவர் மட்டுமே பரிச்சயமான முகம். இருந்தாலும் நால்வருமே பாசமுள்ள தம்பிகளாக மனதில் நிற்கிறார்கள். அதுல் குல்கர்னி அற்புதமான நடிகர். தமிழில் நடித்த முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கியவர். அவரை மூன்றாந்தர சவடால் விடும் வில்லனாகத்தான் தமிழ் சினிமா பயன்படுத்துகிறது.
ஒரு கட்டத்தில் அஜித்தின் உண்மை முகம் தெரியவர, அவரை வெளியேற்றி தமன்னாவை திருமணம் செய்து கொடுக்க மறுக்கிறார் நாசர் . இதுவரை சரி....
கிளைமாக்சில் அதுல் குல்கர்னியே நேரடியாக களத்தில் இறங்கி நாசர் குடும்பத்தை வேரோடு கருவறுக்க வரும்போது , "சோறு போட்டவ எல்லாம் அம்மா... சொல்லிக்கொடுத்தவன் எல்லாம் அப்பன்...இந்த குடும்பம் ரெண்டுமே பண்ணுனிச்சிடா " என பன்ச் அடித்துவிட்டு மொத்த கும்பலையும் ஒத்த ஆளா காலி பண்ணிட்டு தம்பிகளோட கிளம்பி போறாரு. இதுவும் சரி.....
கடைசில நாசர் கூப்பிட்டு , என் குடும்பத்துக்காக இவ்வளவு பண்ணியிருக்க..என் பொண்ணு உனக்குத்தான்னு சொல்றாரு. உடனே தல எதுவும் சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிறாரு.இந்த இடத்தில்தான் தலயோட வீரம் டொக்கு விழுந்திடிச்சி.
அந்த வீட்டில் தல-யை ஒருவாரம் தங்க வைத்ததே அவரின் கேரக்டரை தெரிந்து கொள்ளத்தான் என்பது முதல் அவமானம். 'என் பொண்ணை உனக்கு கல்யாணம் செய்து கொடுக்க முடியாது.இந்த வீட்டை விட்டு போய்டு' என தல-யை விரட்டினது இரண்டாவது அவமானம்.
இப்படி இருக்கிறப்போ கடைசியில என்ன சொல்லியிருக்கணும்..? " சோறு போட்டவ அம்மா... சொல்லிக் கொடுத்தவன் அப்பா... உங்க குடும்பம் என் குடும்பம் மாதிரி... உங்க குடும்பத்துக்கு ஒரு ஆபத்துனா நான் எப்படி பாத்துகிட்டு இருக்க முடியும்.. அதனாலதான் கத்தியை தூக்கினேனே தவிர, உங்க பொண்ணுக்காக இல்ல. உங்க பொங்கச்சோறும் வேணாம் புளியோதரையும் வேணாம்" னு வீரமா கிளம்பி போக வேண்டாமா.. உடனே நாசர் ஓடிவந்து ,' முள்ளை முள்ளால்தான் எடுக்கணும்.. இந்த அயோக்கியனை கொல்ல நீ கத்தியைத் தூக்கினது சரிதான்..என்னை மன்னிச்சிடுப்பா..என் பொண்ணை கட்டிக்கனு தலை கையைப் புடிச்சி கெஞ்ச வேண்டாமா...? என்ன டைரக்டர் சார்...?
அதே காட்சியில் ' சோறு போட்டவ அம்மா' னு சொல்லி தல ஒருத்தனை 'சதக்'... சொல்லிக்கொடுத்தவன் அப்பானு சொல்றதுக்குள்ள ரெண்டு பேரை 'சதக்..சதக்...' . முன்பு, அரிவாளை தூக்கியதால் பலியான தன் சொந்த மகனின் உடலை தன் வீட்டுக்கே அனுமதிக்காத அகிம்சைவாதியான நாசரும் அவர் குடும்பமும் அங்கே சதக் சதக் என குத்துப்பட்டு விழுபவனைப் பற்றி கொஞ்சம்கூட கவலைப் படாமல் தல யின் பன்ச் டயலாக்கில் உருகி நிற்கிறார்கள்.
இதுக்கு மேல தோண்டித்துருவி எழுதினா தல ரசிகர்கள் பொங்கல் அதுவுமா எனக்கு பொங்கல் வைத்து விடுவார்கள் என்பதால் இத்துடன் விமர்சனம் முடிகிறது.
சரி.. இரண்டு படங்களில் எது டாப்..?
ஜில்லா, வீரம் இரண்டு படங்களும் இன்னமும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் சாதனை படைத்து வருகிறது. அவரவர் ரசிகர்களின் பார்வையில் இரண்டு படங்களுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல.
ரசிகர்களை குஷிப்படுத்துவதே ஒரே குறிக்கோள் என்ற நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம். அதை தவறவிட வில்லை. பைட், சாங், காமெடி,செண்டிமெண்ட் எல்லாமும் சரி விகிதத்தில் கலந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இதுதானே விஜயின் சக்சல்ஃபுல் ஃபார்முலா... ஏதோ விஜய் தொடர்ந்து உலகத்தரத்தில் படம் நடித்து வருவது போலவும், ஜில்லா மட்டும் பக்கா மசாலா மொண்ணை படமாக அமைந்துவிட்டது போலவும் இணையத்தில் ஏன்தான் பலர் பொங்குகிறார்களோ தெரியவில்லை. நாங்க என்ன வச்சிகிட்டாங்ண்ணா வஞ்சனை பன்றோம். சட்டியில இருந்தாதாங்ண்ணா அகப்பையில வரும்..? ஏதோ இடையில துப்பாக்கி கொஞ்சம் நல்லா வந்திருச்சி... அதுக்காக எல்லா படமும் துப்பாக்கி போல எதிர்பார்க்க முடியுமா..?
இப்படித்தான் நாங்க தலைவானு ஒரு படம் நடிச்சோம். நாயகன், பாட்சா படத்திற்கே சாவால் விடுகிற ஆஸ்கார் அவார்டு நடிப்பு. தமிழில் எடுத்த ஒரே காரணத்திற்காக ஆஸ்கார் அவார்டு கொடுக்க மாட்டேன்டாங்க. ஆனா கடைசில என்னாச்சி ..? நாங்களே பணம் கொடுத்து படத்தை ஓட்ட வேண்டிய நிலைமை ஆயிடிச்சி. இப்ப சொல்லுங்கங்ண்ணா.. எங்களுக்கு இதைவிட்டா வேற எப்படி படம் எடுத்து பொழைப்பை ஓட்டுறது..?
அடுத்தது வீரம்....
தமிழ் சினிமாவில் ரஜினி பார்முலா என ஒன்னு இருக்கு. படம் நெடுக மென்மையான நகைச்சுவை. இடையில் கொஞ்சம் அடிதடி... கொஞ்சம் லவ்ஸ்... கொஞ்சம் செண்டிமெண்ட்... கொஞ்சம் பன்ச்... கொஞ்சம் அரசியல்... கொஞ்சம் சமகால பிரச்சனைகள்... etc .. இதை இம்மி பிசகாமல் சொல்லி அடித்திருக்கிறது தல யின் வீரம்.
கதையில் பெரிய புதுமை இல்லை என்றாலும் கிராமப் பின்னணியில் வெறும் வேட்டி சட்டையில் ஹீரோவைப் பார்ப்பது எவ்வளவு குளிர்ச்சியாக இருக்கிறது..!. தெலுங்கு வாடைதான். ஆனால் பஞ்சாயத்து, ஆலமரம், சொம்பு போன்ற தமிழ் சினிமாவின் கிராம தளவாடங்கள் எதுவும் இல்லாதது புதுமை.
அஜித்தும் அடக்கமாக பேசி நடித்திருப்பது மற்ற ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வசன உச்சரிப்பு ஷார்ப். "அத்திப்பட்டினு ஒரு ஊர்..." என தல கோர்ட்டில் இழுத்து டயலாக் பேசும்போது எவ்வளவு விகாரமா இருக்கும்.
வசூலைப் பொருத்தவரையில் முன்பின் இருக்கலாம். ஆனால் கதை, தரம், ரசனை, படைப்பு உட்பட அனைத்திலும் ஜில்லாவை ஓவர்டேக் செய்கிறது வீரம்.
சரி.. சரி.. தல தளபதி ரசிகக் குஞ்சுகள் அடிச்சிக்காதீங்க. ரெண்டு படமும் ஹிட் தான்.நீங்க இங்க அடிச்சிகிறீங்க. ஆனா தலயும் தளபதியும் நாங்க எல்லாம் ஒரே குடும்பம்தான்னு சொல்றாங்க..
எப்படி என்றால்...
ஜில்லாவில் மோகன்லாலின் பெயர் சிவன். விஜயின் பெயர் சக்தி.
வீரம் படத்தில் அஜித்தின் பெயர் விநாயகம். அவர் தம்பிகளின் பெயர் சண்முகம், முருகன், செந்தில், குமரன், மயில்வாகனன் (தம்பி மதிரி) .
இதிலிருந்து என்ன தெரியுது. நாங்க எல்லாம் ஒரே குடும்பம். எங்களுக்காக நீங்க ஏன் அடிச்சிக்கிறீங்க என சொல்லாமல் சொல்றாங்க... ( ஆனால் அம்மை அப்பனுக்கே டேக்கா கொடுத்துட்டு ஞானப்பழத்தை லவட்டிய விநாயகர் எவ்ளோப் பெரிய கில்லாடி என்பது உலகறிந்த விசயமாச்சே...)
அடடா...! எல்லாம் சொல்லி விட்டு முடிவில் சொன்ன (உங்களின்) திருவிளையாடல் சூப்பர்...
ReplyDeleteஹா..ஹா.. நன்றி DD
Deleteதல.... நீங்க எப்டி எழுதினாலும் குறிப்பிட்ட நபர்களை திருப்திப்படுத்த முடியாது...
ReplyDeleteநன்றி பிரகாஷ்.. என்ன செய்வது சினிமா மோகம்..!
DeleteSuper review sir
ReplyDeletethanks boss
Deleteஜில்லாவை விட வீரம் பெட்டர் தான்.
ReplyDeleteஉண்மைதான் தல
Delete//அவரை வெளியேற்றி தமன்னாவை திருமணம் செய்ய மறுக்கிறார் நாசர்//
ReplyDeleteகதையைவே மாத்திட்டீங்களே...'திருமணம் செய்து கொடுக்க..'.
ஹா.ஹா.. தல உங்ககிட்டேருந்து தப்பிக்க முடியுமா... மாத்தியாச்சு,.
Deleteசிலபேரு நடுநிலைமையை மெயின்டெய்ன் பண்றதா நினைச்சுக்கிட்டு, வீரமும் ஜில்லாவும் ஒரே தரம்னு சொல்றது தான் தமாசா இருக்கு.
ReplyDeleteஉண்மைதான் . தளபதியே தலையை பாராட்டியிருக்கிறாரே...
Deleteபொங்கல் நல் வாழ்த்துகள் மணிமாறன்
ReplyDeleteஇனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் சார்.. என் வலைப்பதிவுக்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி சார்
Deleteஇனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! ஒரே பதிவில் இரண்டு விமர்சனம்! பொங்கல் போனஸா? வாழ்த்துக்கள்!
ReplyDelete
Deleteநன்றி சுரேஷ்..இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteநன்றி..நன்றி..
Delete// இப்படியொரு ரசிக பட்டாளம் கிடைக்க தல போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்..!// ஹா ஹா ஹா கண்ணு வேர்க்குது
ReplyDelete//தும்பைப்பூ கலர் // உங்களுக்கான இலக்கிய நாற்காலி காத்துக்கொண்டுள்ளது டபால்ன்னு வந்து குந்திகோங்க :-)
//என்ன டைரக்டர் சார்...? //இலக்கிய நாற்காலி வேணாம் சார் அது ஓல்ட்.. இயக்குனர் நாற்காலி தான் நமக்கு சரிபட்டு வரும்
//வீரம் படத்தில் அஜித்தின் பெயர் விநாயகம். அவர் தம்பிகளின் பெயர் சண்முகம், முருகன், செந்தில், குமரன், மயில்வாகனன் (தம்பி மதிரி) .// எப்பாஆஆஆஆஆ
அலசல் செம சூப்பர் சார்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சார்
மிக்க நன்றி சீனு.. ஹா...ஹா... நமக்கு விமர்சனம் மட்டுமே செய்யத்தெரியும்.. பொங்கல் வாழ்த்துக்கள் சீனு
Delete//விஜயின் பெயர் சக்தி.
ReplyDeleteவீரம் படத்தில் அஜித்தின் பெயர் விநாயகம். //
அப்படியென்றால் அஜித் மட்டும் தான் ஆம்பிளைன்னு சொல்றீங்களா? (நாங்களும் கொளுத்திப்போடுவோம்ல!)
ஹா..ஹா.. தல இதை யோசிக்காம விட்டுட்டேனே..
Deleteவிமர்சனங்களுக்குப் பாராட்டுக்கள்...!
ReplyDeleteதித்திக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!
மிக்க நன்றி பொங்கல் வாழ்த்துக்கள்
Deleteஇரண்டு படங்களுமே மசாலா படங்கள் என்பதால் திருவிழா மூடில் பார்ப்பதற்கு ஏற்ற படங்கள்தான். மசாலா என்று சொல்லிவிட்டால் அதில் லாஜிக் பார்ப்பதில் அர்த்தமில்லையல்லவா? ஒரு மூன்று மணி நேரம் மூளையை கழற்றி வைத்துவிட்டு ஜாலியாக இருந்துவிட்டு வந்துவிட வேண்டும். அப்போதுதான் படம் பார்த்த மகிழ்ச்சி தங்கும் :) இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅதுவும் சரிதான் ..மிக்க நன்றி பொங்கல் வாழ்த்துக்கள்
Deleteஆஹா ஒற்றுமை வழியுறுத்தும் பேனர் பார்ப்பதற்கே மகிழ்ச்சியாய் உள்ளது சகோதரர்.
ReplyDeleteதங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
மிக்க நன்றி பொங்கல் வாழ்த்துக்கள்
DeleteKadasilaye thalaiyoda Kallai Varitiyaye ... Nee enna Vijay groupa , Padiva Mathhi Eluthu , ella vidu poyi seramatta..
ReplyDeleteஹா..ஹா... தல யின் பெருமையை உயர்வாத்தானே சொல்லியிருக்கேன் நாகா.. என்னதான் இருந்தாலும் தல போல வருமா... ( சும்மா சொல்லிவைப்போம்)
Delete. //Nee enna Vijay groupa // விஜய் குருப்பா... ஜில்லா நல்லாயிருக்குன்னு சொன்னதுக்கே டின் கட்டிடாங்க...
Deleteபொங்கல் நல் வாழ்த்துகள் சார்.
ReplyDeleteமிக்க நன்றி பொங்கல் வாழ்த்துக்கள்
Deleteநல்லா எழுதிருக்கீங்க நண்பரே
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி பொங்கல் வாழ்த்துக்கள்
Deleteவிமர்சனம் அருமை மணிமாறன்....ஆனால் ஜில்லாதான் காலை வாரி மதிலை ஜம்ப் பண்ண வச்சிருச்சு...!
ReplyDeleteமிக்க நன்றி... பின்னங்கால் பிடரியிலடிக்க தியேட்டரை விட்டு ஒடி வந்ததா கேள்விப்பட்டேன்..
Deleteஅன்பின் மணீ மாரன் - இரு பட விமர்சனங்களும் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteமிக்க நன்றி பொங்கல் வாழ்த்துக்கள்
Deleteவிமர்சனங்கள் அருமை
ReplyDeleteமிக்க நன்றி பொங்கல் வாழ்த்துக்கள்
Deleteநன்றி!நன்றி!!நன்றி!!!
ReplyDeleteவிரிவான அருமையான அழுத்தமான விமர்சனம்
ReplyDeleteஇரண்டையும் பார்த்துவிட வேண்டியதுதான்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
tha.ma 3
ReplyDeleteசோக்கா சொல்லிக்கீறபா...
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய தைத்திங்கள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்...!
இரு விமர்சனங்களும் அருமை. படங்களை இனிமேல் தான் பார்க்கணும்.
ReplyDeleteதங்களுக்கும் தங்களது குடும்பதாருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
நான் இந்த பொங்களிலிருந்து தான் தங்களை தொடர ஆரம்பித்துள்ளேன்.
Nice reviews. ..
ReplyDeleteHeartiest pongal wishes to you by 'thala' fans..
6 candles
ReplyDelete