Tuesday 31 July 2012

நவீன சீதை நயன்தாரா-வின் ரகசிய டைரி குறிப்பு...


----------------------------------------------------------------------
 டயானா மரியம் குரியன்               
பெத்தவங்களா பார்த்து வச்ச பெயர்...
நயன்தாரா
மத்தவங்களும் பார்க்கட்டுமேன்னு வச்சிகிட்ட பெயர்...
வயது 
உடன் நடிக்கும் ஹீரோவைப் பொறுத்தது...

பிறந்த மாநிலம்

தமிழின் நம்பர் ஒன்  நடிகையாக,ஒரே தகுதியான கேரளா...
பொழுதுபோக்கு
கிடைத்த பாய்பிரண்டுடன் வெளிநாடு சுற்றுவது...

சைடு பொழுதுபோக்கு

அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுவது...
பெருமையாக நினைப்பது
(வந்த புதிதில்)
 டைரக்டர்களின் காலில் விழுவது... 
பெருமையாக நினைப்பது
( NO 1 ஆனபிறகு)

அதே டைரக்டர்களை தன் காலில் விழவைத்தது...
நிரந்தர தொழில்
திகட்ட திகட்ட 'திறமை' காட்டுவது...
உப தொழில்
விரட்டி விரட்டி தூண்டில் போடுவது...
பகுதிநேர தொழில்
சுயநலத்துக்காக அடுத்தவன் குடும்பத்தை கலைப்பது...
பலம்
கேரளத்து பெண்குட்டி..
அசுர பலம் வஞ்சனையில்லாமல் ஹீரோ இயக்குனர்களுடன் 'நட்பு' பாராட்டுவது..
பக்க பலம்
டோலிவுட்டும் மாலிவுட்டும்..
பலவீனம்

வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புவது...
அவசரப்பட்டது.... 
கையில் குத்திய பச்சையும்,நெற்றியில் வைத்த சிவப்பும்...
தெரியாமல்  செய்த தப்பு... பச்சப்புள்ள-னு  நெனைச்சு சிம்புகிட்ட வாயை(உதடு)க் கொடுத்தது...
தெரிந்தே செய்த  தப்பு.. 'படு வீக்னஸ்' ஆள் என்று தெரிந்தும் பிரபுதேவா-வை லவ்வியது...
ஹன்சிகா
சிவபூஜையில்  புகுந்த சிவப்பு கரடி..
திரிஷா
ரகசிய எதிரி..
சிம்பு வாழ்க்கையில் விளையாடிய 'தீராத விளையாட்டுப்பிள்ளை..'
பிரபுதேவா
கடைசிவரை நம்ப வைத்த நம்பிக்கை துரோகி..
ஆர்யா    
அடுத்த ரவுண்டு...
எரிச்சல்
பத்திரிகைகாரங்களை கண்டால் வருவது...
பயம்
மகளிர் அமைப்பினை நினைத்தால் வருவது...
கோபம்
ஆண்களைப் பார்த்தாலே தற்போது வருவது....
சாதனை
சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட்டது..
சமீபத்திய சாதனை  டர்டி பிக்சர்சில் நடிக்க இரண்டரை கோடி கேட்கும் அளவுக்கு வொர்த்..
நீண்டகால சாதனை
தமிழில் கோடியைத் தொட்ட முதல் நடிகை...
சமீபத்திய தத்துவம்
ஆண்கள் இல்லாமல் வாழமுடியாதா.?!
அடிக்கடி புலம்பும் பாடல்
உன்னை நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே-மச்சான் பொட்டை வச்சேன் மத்தியிலே....
 திரைக்குப் பின்னால்...
திரைக்கு முன்னால்..

Saturday 28 July 2012

பயணிகளின் உயிரோடு விளையாடும் ஏர் இந்தியா...

   

நடுவானில் கடும் அதிர்வுக்குள்ளாகி சேதமடைந்த விமானத்தை தொடர்ந்து இயக்கி பயணிகளின் உயிரோடு விளையாடியுள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.


இந்த மாதம் 5ம் தேதி டெல்லியிலிருந்து ஷாங்காய் சென்ற ஏர்பஸ் ரகத்தைச் சேர்ந்த ஏர் இந்தியா விமானம் (AI 348 ) நடுவானில் பறந்தபோது கடும் அதிர்வுக்கு உள்ளாகியிருக்கிறது.இதில் விமானத்திற்கு சேதம் ஏற்பட்டதோடு பல பயணிகளும் காயமடைந்தனர்.ஆனால் இந்த சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன்புதான் வெளியே தெரிந்திருக்கிறது.
 
    விமானம் புறப்பட்டு சரியாக ஒன்றரைமணி நேரம் கழித்து அனைவரும் 'சீட் பெல்ட்' போடும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.அடுத்த பத்தாவது நிமிடத்தில் 'ஏர் பாக்கெட்' ஊடாக விமானம் பயணிக்க, கடுமையான அதிர்வுக்கு விமானம் உள்ளாகி குலுங்கி இருக்கிறது.நிறையப்பேர் முன்னால் உள்ள இருக்கையில் மோதியும்,சிலர் தரையிலும் விழுந்தும் காயப்பட்டிருக்கின்றனர். மேலேயுள்ள பேக்கேஜ் லாக்கர் தானவே திறந்து பெட்டிகள் எல்லாம் பயணிகள் மேலே விழுந்து,சில பொருட்கள் உள்ளேயே பறந்தது என்று அந்த விமானத்தில் பணியாற்றிய ஒரு சிப்பந்தி தெரிவித்ததை வைத்துப் பார்த்தால் விமானம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாயிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது.
 
        சரி இது எதனால் ஏற்படுகிறது?... ஏர்-பாக்கெட் என்பது என்ன..? டெக்னிகலா பார்த்தால் இதை டர்புலன்ஸ்(Turbulance)என்று தான் அழைக்க வேண்டும்.

     முக்கியமாக ஒருமுறையாவது விமானப்பயணம் மேற்கொண்டவர்களுக்கு இந்த அனுபவம் இருக்கும்.குண்டும் குழியுமாய் இருக்கும் நம்ம ஊர் சாலையில் டவுன் பஸ்ஸில் செல்லும் போது குலுக்கி எடுக்குமே அப்படி ஒரு குலுக்கல் முப்பதாயிரம் அடிக்கு மேல் பறக்கும் விமானத்தில் இருந்தால் எப்படியிருக்கும்? ஈரகுலையே நடுங்கி விடாதா?முதல்முறை செல்பவர்களுக்கு நிச்சயம் வயிற்றில் புளியை கரைக்கும்...

     விமானம் பறப்பதற்கு,அதன் இறக்கையின் மேல்புறம் குறைந்த காற்றழுத்த மண்டலமும் இறக்கையின் கீழ்புறம் அதிக காற்றழுத்த மண்டலமும் உருவாக்கப்படுகிறது,இதற்கு ஏற்றார் போல் அதன் இறக்கை வடிவமைக்கப்பட்டிருக்கும்.இந்த இரண்டும் சேர்ந்துதான் விமானத்தை தூக்குகிறது.சில நேரங்களில் ஆகாயத்தில் ஏற்படும் காற்றின் அடர்த்தி மாற்றங்களால் விமானத்தின் இறக்கையில் இருக்கும் காற்றழுத்தம் ஒரே சீராக இருக்காது.இந்த காற்றழுத்தம் மாறுபடும் போதுதான் விமானம் குலுங்குகிறது.

உதாரணத்திற்கு மேகத்தினுள் பயணிக்கும்போதெல்லாம் இந்த டர்புலன்ஸ் கண்டிப்பாக விமானத்தில் வருவதை உணரமுடியும்...

    மேகம் என்பது அதை சுற்றியிருக்கும் காற்றை விட அடர்த்தி குறைவாகவோ அதிகமாகவோ இருக்கும்.விமானத்தின் இறக்கை அதனுடன் உராயும்போது,திடீரென்று காற்றின் அடர்த்தி மாறுபடுவதால்,அதன் மேல் மற்றும் கீழுள்ள காற்றழுத்தமும் மாறுபடுகிறது.அதனால் விமானத்தின் மேல் நோக்கு விசை திடீரென்று மாறிமாறி கூடும் குறையும்.. இதனால்தான் விமானமே ஆடுகிறது.இதன் காரனியைத்தான் டர்புலன்ஸ் என்று சொல்கிறார்கள்.

   டர்புலன்ஸ் எப்படி இருக்கும்?உதாரணமா ஊதுபத்தி கொழுத்தும் போது அதன் முனையில் ஒரே சீராக வெளிவரும் புகை மேலே செல்லச் செல்ல சுழண்டு சுழண்டு செல்லுமே...அது போலத்தான் இருக்கும்.

கீழே உள்ள படம்..டர்புலன்ஸிலிருந்து  தப்பித்து வரும் விமானம்...


 இதனால் விமானவிபத்து ஏற்பட்டதாக செய்திகள் எதுவும் கிடையாது.ஆனால் பயணம் செய்பவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதுண்டு... சிலநேரங்களில் விமானங்களுக்கு சேதம் கூட ஏற்பட்டிருக்கிறது.இது போன்ற சூழ்நிலையில் விமானிகள் சமயோசிதமாக விமானத்தை உடனே கீழே இறக்கி அல்லது மேலே ஏற்றி இந்த தாக்குதலிலிருந்து தப்பிப்பார்கள்.

சரி...இது சாதாரணமாக நடப்பதுதானே.இதற்கு எதற்கு இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் என்று கேள்வி எழுகிறதா??? 

 முதலில்,இவ்வாறு கடுமையான தாக்குதலுக்கு உட்பட்ட விமானத்தை உடனே இயக்க மாட்டார்கள். விமானத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டிருக்கிறதா என்று சோதனை செய்து,எல்லாம் சரியான நிலையில் உள்ளதா என ஆராய்ந்த பின்னரே இயக்க அனுமதிப்பார்கள்.

 ஆனால்,இந்த விவகாரத்தை வெளியிலேயே சொல்லாமல் விமானிகள் மறைத்ததும் இல்லாமல்,அடுத்த 4 மணி நேரத்தில் அதே விமானத்தில் 250 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஷாங்காயிலிருந்து புறப்பட்டு டெல்லிக்கு வந்துள்ளது.டெல்லிக்கு வந்த பிறகே விமானத்தை சேவையிலிருந்து விலக்கியுள்ளனர். இதன்மூலம் 250 பயணிகளின் பாதுகாப்புடன் விளையாடியுள்ளது ஏர் இந்தியா.

 இந்த விஷயம் குறித்து சில விமான சிப்பந்திகள் மூலம் பத்திரிக்கைகளுக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, விவகாரம் வெளியில் வந்துள்ளது.

இதையடுத்து இந்தத் தகவலை பத்திரிக்கைகளுக்குச் சொன்னது யார் என்ற விசாரணையில் ஏர் இந்தியா இறங்கியுள்ளது. ஆனால்,நடுவானில் நடந்த சம்பவத்தை தங்களிடம் கூட தெரிவிக்காமல் மறைத்த விமானிகள் மீது ஏர் இந்தியா எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

ஏற்கனவே ஏர் இந்தியா பிளைட்டை நிறைய பேர் 'குப்பைலாரி' என்றுதான் அழைக்கிறார்கள்.விமானம் புறப்பட்டதிலிருந்து இறங்கும்வரை தடதட... வென்று லாரியில் செல்வது போன்ற உணர்வுதான் ஏற்படும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை பைலட் ஸ்ட்ரைக் வேறு.கடைசியில் கிங்பிஷர் நிலைமை இதற்கும் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...
************************************************************************************************************************************************
     ட்ச லட்சமாக கட்டணம் வசூலிக்கும் பணத்தில் ஓட்டையிருந்தால் பெற்றுக்கொள்வார்களா?சின்னசிறு பிஞ்சு உசுரோடு விளையாடியிருக்கிறார்கள் படுபாவிகள்...

எப்.சி. கொடுத்தவர் மீதுதான் குற்றம்... பேருத்தை ஓட்டிய ஓட்டுனர் மீதுதான் குற்றம்... சரியாக பராமரிக்காத உரிமையாளர் மீதுதான் குற்றம்... இப்படியொரு பேருந்தை அமர்த்திய பள்ளி நிர்வாகத்தின் மீதுதான் குற்றம்... இப்படி மக்களின் கோப அம்புகள் எல்லோர்மீதும் சரமாரியாகப் பாய்கிறது.இவர்கள் மீது வழக்கும் தொடரப்படலாம்..பஸ்ஸில் இருந்த ஓட்டையை விடவும் நமது சட்டத்தில் உள்ள LOOP HOLES அகலமானது.தந்திர நரிகளுக்கு தப்பவா தெரியாது?

மணல் கடத்தினான் என்று ஒரு அப்பாவியை சுட்டு வீழ்த்திய தமிழக போலிஸ் துப்பாக்கியின் ரவைகள்,கல்வியை காசாக்க நினைக்கும் இதுபோன்ற கயவர் கூட்டத்தை நோக்கி காரி உமிழாதா?


   இந்தப்பிரச்சனை கோர்ட்வரை வரை சென்று கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கும் வேளையில் நேற்று வேலூரில் இன்னொரு சம்பவமும் நடந்திருக்கிறது.பள்ளி வேன் ஓட்டுனரின் அஜாக்கிரதையால் மூன்று வயதே நிரம்பிய LKG படிக்கும் சுஜிதா என்ற மற்றொரு பிஞ்சு,வாகன சக்கரம் ஏறி அநியாயமாக இறந்திருக்கிறார்.மணல் லாரி ஓட்டிக்கொண்டிருந்தவரை ஓட்டுனராக பள்ளி நிர்வாகம் நியமித்ததாம்.பள்ளி நிர்வாகமும் அவர்கள் நியமித்திருக்கும் வாகனமும் கிட்டத்தட்ட எமனும் எருமையும் போலத்தான் காட்சியளிக்கிறது.
 
சுஜிதா 
************************************************************************************************************************************************
கொஞ்சம் ரிலாக்ஸ்...

என் நெஞ்சை பிளந்தால் ஜெயலலிதா இருப்பார்! - செங்கோட்டையன்

# #  அண்ணே கொஞ்சம் நிமிர்ந்து நில்லுங்கண்ணே..! இப்டி குனிஞ்சி நின்னா என்ன அர்த்தம்..!? நெஞ்சு தெரியாம எப்படி பொளக்குறதாம்...!?

************************************************************************************************************************************************
  
கடவுளை அடைய ஆசைகளை துறந்த ரமணரும்....
ஆசைகளை அடைய கடவுளை மறந்த போலி சாமியார்களும்....************************************************************************************************************************************************
ஒருவன் தற்கொலைக்கு முன்னே ஒரு குறிப்பு எழுதி வைத்தான்.

நான் ஒரு விதவையை திருமணம் செய்து கொண்டேன் வீட்டில் யாருக்கும் தெரியாமல்.... ஏற்கனவே அவளுக்கு திருமண வயதில் ஒரு பெண் இருந்தாள்.
அந்த பெண்ணை என் தகப்பனார் காதலித்து எனக்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.அதாவது என் தகப்பனார் எனக்கே மாப்பிள்ளை ஆனார்...!
என் தகப்பனாரை திருமணம் செய்து கொண்டதால் என் ஒன்று விட்ட மகள் எனக்கு சித்தி ஆனாள்...
காலம் ஓடியது...
என் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.அவன் என் தகப்பனாருக்கு மைய்த்துனன் ஆனான்.என் சித்தியின் சகோதரன் ஆதலால் என் மகன் எனக்கு மாமன் ஆனான்.
என் தகப்பனாரின் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.அவன் எனக்கு சகோதரன். அவனே எனக்கு பேரனும் ஆனான்... என் மகளின் மகன் அல்லவா?
அதே போல் என் மனைவி என் பாட்டியானாள்.என் சித்திக்கு தாய் அல்லவா? நான் என் மனைவிக்கு கணவனாகவும், பேரப்பிள்ளையாகவும் ஒரே சமயத்தில் இருக்க வேண்டியதாயிற்று... 
ஒருவனுடைய பாட்டிக்கு கணவனாக இருப்பவன் அவனுக்கு தாத்தா ஆகிறான் அல்லவா? அப்படி பார்த்தால் நான் எனக்கே தாத்தாவாகிறேன்...இக்குழப்பமே என் தற்கொலைக்கு காரணம்.

VAIRAM SIVAKASI
  
************************************************************************************************************************************************
தமிழுக்கு இந்தியாவில் கிடைக்காத அங்கீகாரம் உலக அளவில் கிடைத்திருக்கிறது.ஒலிம்பிக் போட்டிக்காக வெளியிடப்பட கானொளியில் முதலில் சொல்லப்படுவது 'வணக்கம்' என்ற தமிழ் சொல்..!!!! அடுத்தப்பதிவில் சந்திப்போம்...  ---------------------------------------------------------((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))------------------------------------

Wednesday 25 July 2012

தமிழ்நாட்டின் முதல் கனவுக்கன்னி...(தமிழ்த் திரையில் சரித்திரம் படைத்தப் பெண்கள்)


         1940-50களில் தமிழ் திரையுலகின் 'ஸ்டார் மேக்கர்' என்று அழைக்கப்பட்டவர் டைரக்டர் கே.சுப்பிரமணியம்.தமிழ்நாட்டின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரும்,தன் இனியக் குரலால் வசியப்படுத்திய இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமியும் இவரின் மோதிரக்கையால் குட்டுப்பட்டுதான் தமிழ்த் திரையுலகில் காலடியெடுத்து வைத்து புகழ் பெற்றார்கள்.ஒருமுறை தான் அடுத்ததாக இயக்கப்போகும் படத்திற்கு ஒப்பந்தம் செய்வதற்காக பிரபல நடிகை எஸ்.பி.எல்.தனலட்சுமி வீட்டிற்கு தன் நண்பருடன் சென்றிருக்கிறார் டைரக்டர் கே.சுப்பிரமணியம்.அங்கு இவர்களுக்கு காபி,பலகாரத்தட்டுகளைக் குனிந்த தலை நிமிராமல் ஒரு பெண் வைத்துவிட்டுப் போனாள்.கொஞ்சம் கருத்த நிறம் ஆனால் வசீகரமான முகம். அந்த இடத்திலே இவரின் கேமரா கண்களால் அந்தப்பெண் களவாடப்பட்டாள். உடனே நண்பரிடம் "என் அடுத்தப் படத்திற்கு இந்தப் பணிப் பெண்ணைத்தான் ஹீரோயினாகப் போடப்போகிறேன்" என்று தீர்க்கமான முடிவுடன் கூறியிருக்கிறார்.

  மறுநாள் கிண்டி வேல் பிக்சர்ஸ் ஸ்டுடியோவில் அன்றைய புகழ் பெற்ற மேக்கப்மேன் ஹரிபாபாபுவுக்கு டெலிபோன் செய்தார். "ஒரு பெண்ணை அனுப்புகிறேன்.மேக்கப் போட்டு அனுப்புங்கள்" என்றார்.மேக்கப் போடுவதற்குத் தயாராகக் காத்திருந்த ஹரிபாபு,கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த பெண்ணைப் பார்த்து மிரண்டு போனார்."யாரம்மா நீ?" என்று விசாரித்தார்."என் பெயர் ராஜாயி.மேக்கப் டெஸ்டுக்காக டைரக்டர் சுப்பிரமணியம் சார் என்னை அனுப்பியிருக்கிறார்". அந்தப் பெண் கூறிய பதிலைக் கேட்டதும், ஹரிபாபுவுக்கு மயக்கமே வந்துவிட்டதாம். "சுப்பிரமணியத்துக்கு பைத்தியம் பிடிச்சுடுத்து " என்று கூறி, ஒப்பனை செய்ய மறுத்துவிட்டாராம்.பிறகு கடும் வற்புறுத்தலுக்குப்பின் அரைமனதுடன் அந்தப்பெண்ணுக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்துள்ளார்.பிறகு பல எதிர்ப்புகளுக்கிடையே அந்தப்பெண்ணை "கச்சதேவயானி" என்ற படத்தில் நடிக்க வைத்தார் சுப்பிரமணியம்.அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைய, ஒரே இரவில் புகழின் உச்சத்தை அடைந்திருக்கிறார் ராஜாயி.அந்த ராஜாயிதான் பெயர்மாற்றம் செய்யப்பட்டு அந்தக்கால இளைஞர்கள் பலரின் தூக்கத்தை
க் கெடுத்து கனவுலகில் மிதக்க வைத்த கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி.


   
    ராஜகுமாரி நடித்த கச்சதேவயானி படம் வெளியானபோது தமிழ் சினிமாவே அதிர்ந்து போனது என்று அந்தக்கால சினிமா விமர்சகர்கள் சொன்னதாக ஒரு குறிப்பு சொல்கிறது.எந்தவித முகபாவ உணச்சியின்றி வெறும் அள்ளிப்பூசிய நடையுடைய பாவனையோடு தோன்றிய அந்தக்கால நடிகைகளிடையே, குறுகுறுப்பும்,கவர்ச்சிப்பொலிவும்,வசீகரமான முகமும்,சுடர்விடும் நடிப்பும், மனத்தைக் கிறங்கடிக்கும் கொஞ்சும் குரலுடன் தோன்றிய ராஜகுமாரியைப் பார்த்து தமிழமே கிறங்கிக் கிடந்தது என்று அந்தக்கால சினிமாப் பற்றி,பல பல்லுப் போன பெருசுகள் ஜொள்ளுகிறார்கள்.

     தஞ்சையைச் சேர்ந்த கலைக்குடும்பம் ஒன்றில் 1922-ல் பிறந்தவர், டி.ஆர்.ராஜகுமாரி.தாயார் தஞ்சை குஜலாம்பாள் அன்று தஞ்சாவூரில் புகழ்பெற்ற இசை(சங்கீத)மேதை.பிறந்த சில நாட்களில் தகப்பனாரைப் பறிகொடுத்தவர். இவரின் சகோதரர் இயக்குனர் டி. ஆர். ராமண்ணா.இவரின் படிப்பு ஆறாவதுதான் என்றாலும் புத்தகங்கள் படிப்பதை பொழுதுப் போக்காகக் கொண்டிருந்தவர்.அந்தக்காலத்தில் புகழ் பெற்றிருந்த எஸ்.பி.எல்.தனலட்சுமி, ராஜகுமாரிக்கு சின்னம்மா.சின்னமாவின் முயற்சியால் சினிமாவுக்கு நடிக்க வந்தபோது அவருக்கு வயது 16.முதல் படம் குமாரகுலோத்துங்கன்.இவர் சிறு வேடங்களேற்று நடித்த முதல் மூன்று படங்களுமே படு தோல்வியடைய,தன் சின்னம்மா வீட்டோடு முடங்கிப்போனார்.அதன் பிறகே குருபார்வை கிடைத்திருக்கிறது.

    கச்சதேவயானிக்குப் பிறகு இவரின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான சதிசுகன்யா,மனோன்மணி,சிவகவி,குபேரகுசேலா,சாலிவாஹன், பிரபாவதி ஆகிய படங்கள் பெரும் வெற்றியடைய தமிழின் தவிர்க்க முடியாத நடிகையாக உருவாகியிருந்தார்.

    அடுத்ததாக இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் அப்போதைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதருடன் இணைத்து நடித்து 1944 தீபாவளியன்று வெளியாகி மூன்று தீபாவளி கண்ட ஹரிதாஸ்.இதில் தாஸி ரம்பாவாகத் தோன்றி நடித்திருப்பார். எம்.கே.தியாகராஜ பாகவதர் ஹரிதாஸ் வேடத்தில் இருந்து "மன்மத லீலையை வென்றார் உண்டோ?" என்று மாய்ந்து மருகிப் பாடியது தாஸி ரம்பாவாக நடித்த ராஜகுமாரியைப் பார்த்துதான். அடுத்து,வால்மீகி,விஸ்வாமித்ரா, பங்கஜவல்லி, விகடயோகி அவரின் நடிப்புக்கு மேலும் மகுடம் சூட்டியது.

   தமிழ்த் திரையுலகை தனது இனிய குரலாலும் வசீகரமான தோற்றத்தாலும் மயங்க வைத்துக் கொண்டிருந்த அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதருக்குச் சமமானவராக வந்தார் ராஜகுமாரி. அன்றைய முன்னணி நடிகர்களான பாகவதர்,பி.யு.சின்னப்பா,எம்.கே.ராதா, டி.ஆர்.மகாலிங்கம்,ரஞ்சன் ஆகியோருடன் தொடர்ந்து நடித்தார்.இந்தப் பிரபலங்களோடு நடித்தபோது  கிடைத்த புகழும் வரவேற்பும் அவர்களைவிட ராஜகுமாரிக்கு அதிகமாகவே கிடைத்தது.      டி.ஆர்.ராஜகுமாரியின் திரைவாழ்க்கையில் ஒரு மைல் கல் என்றால் அது சந்திரலேகா.தமிழ் திரையுலகில் 'செட்' அமைப்பதில் இது தான் முன்னோடி.இது அப்போதைய பிளாக் பஸ்டர் மூவி. இருபதாம் நூற்றாண்டின் தமிழ் சினிமாவில் சிறந்த பத்து படங்களை தேர்வு செய்தால் அதில் 'சந்திரலேகா'விற்கும் ஒரு இடம் உண்டு.இந்தப்படத்தில்,வில்லன் சசாங்கனாக நடித்த ரஞ்சன்,கதாநாயகி சந்திராவாக நடித்த ராஜகுமாரியை பலாத்காரம் செய்யத் தூக்கி அணைப்பார். மயக்கமுற்றவர் போல பாசாங்கு செய்து ராஜகுமாரி ரஞ்சன் மார்பு வழியே தரையில் சரிவார்.மீண்டும் தூக்குவார் ரஞ்சன்.மீண்டும் மார்புறச் சரிவார். மீண்டும்...மீண்டும்..... ரசிகர்கள் இந்த மயக்கக் காட்சியை காணவே தியேட்டரில் திரண்டதாக ஒரு பத்திரிக்கைக் குறிப்பு சொல்கிறது.


(அந்தக் கண்கொள்ளாக் காட்சியை கஷ்டப்பட்டு
த் தேடி இங்கே பகிர்ந்திருக்கிறேன் )...     எஸ்.எஸ்.வாசன் தயாரித்த இந்தப்படம்,இந்தியிலும் ரீமேக் செய்யப்பட, அங்கேயும் வெற்றிபெற்று ராஜகுமாரிக்கு அகில இந்தியப் புகழைத் தேடித்தந்தது.பிறகு இந்தப்படம் 'மிஸ் சந்திரா' என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டது.

     அதைத்தொடர்ந்து கிருஷ்ணபக்தி,பவளக்கொடி,விஜயகுமாரி,இதயகீதம், வனசுந்தரி, தங்கமலை ரகசியம் என்று அவரின் வெற்றிப்பயணம் தொடர்ந்தது..

  இவரின் திரை வாழ்க்கையில் மறக்கமுடியாத படங்களில் 1954-ல் வெளிவந்த மனோகராவும் ஓன்று.தன் பேனா முனையின் மூலம் தமிழ் சினிமாவின் வசன நடையையே மாற்றியமைத்த கலைஞரின் திரைக்கதை,வசனத்தில் உருவாகி வெள்ளிவிழா கண்ட இந்தப்படத்தில் வசந்தசேனை வேடத்தில் நடித்திருப்பார்..

  அடுத்து,ராஜகுமாரி எம்ஜியாருடன் சேர்ந்து நடித்த பணக்காரி(1953), குலேபகாவலி(1955), புதுமைப்பித்தன்(1957) அனைத்தும் வெற்றிப்படங்களே. சிவாஜியுடன் அன்பு படத்திலும்,தங்கப்பதுமையில் நடித்திருந்தார்.பிற்பாடு ஒருசில படங்களில் கௌரவ வேடத்திலும் நடித்தார்.

    இதற்கிடையில் ஆர்.ஆர்.பிக்சர்ஸ் என்ற பெயரில் சொந்தப்படங்களும் தயாரித்தார்.எம்ஜியார் நடித்த பெரிய இடத்துப்பெண்,பறக்கும் பாவை மற்றும் வாழப்பிறந்தவள் படங்கள் இவர் தயாரிப்பில் வெளிவந்ததுதான்.இம்மூன்று படத்தினையும் இயக்கியது அவரது சகோதரர் டி.ஆர்.ராமண்ணா.


  
    தனது நடிப்புப் பயணத்தை 1963-ல் நிறுத்திக்கொண்ட ராஜகுமாரி,செப்டம்பர் 1999 -ல் தன் மூச்சையும் முழுமையாக நிறுத்திக்கொண்டார்.

    தமிழ் நடிகைகளிலே சினிமா தொழில் நுட்பங்களையும்,நுணுக்கங்களையும் நன்றாகத் தெரிந்து வைத்திருந்த வெகு சிலரில் டி.ஆர்.ராஜகுமாரியும் ஒருவர். எந்தவித கேமரா கோணங்களில் தனது அழகும்,நடிப்பும் சிறப்பாக வெளிப்படும் என்பதில் அவர் மிகுந்த ஜாக்கிரதையோடு இருந்தார் என்று அவர் காலத்திய ஒளிப்பதிவாளர்களே சொல்லி வியப்பார்களாம். 

  தி.நகரில் சொந்தமாக 'ராஜகுமாரி' என்ற தியேட்டரைக் கட்டினார்.அந்தக் காலகட்டத்தில் நடிகை ஒருவர் சொந்த தியேட்டர் வைத்திருந்தது இவர் ஒருவராகத்தான் இருக்கும். 

 புகழின் உச்சியிலிருந்தபோது,பிரபல கிசுகிசு பத்திரிக்கையாளர் லக்ஷ்மிகாந்தன் கொலை செய்யப்பட்ட வழக்கில் எம்.கே.டி.யும்,கலைவானரும் சிறைத் தண்டனைப் பெற்றார்கள்.அந்தக் கொலைவழக்கில் ராஜகுமாரியின் பெயரும் கிசுகிசுக்கப்பட்டாலும் இவரின் பெயரோ,புகழோ சேதமடையவில்லை.

  டி.ஆர்.ராஜகுமாரி தனது வசீகரத்தாலும்,இனிய குரலாலும்,நடிப்புத்திறனாலும் தமிழ்நாட்டை கால் நூற்றாண்டு காலம் கிறங்கடித்தவர்.அவரது கவர்ச்சிகரமான பிம்பம் இன்றுகூட வியக்கப்படுகிற ஒன்றுதான். தமிழ் சினிமாவின் நட்ச்சத்திரமாய் ஒளிவீசத்தொடங்கி பிறகு இந்திய சினிமாவிலும் ஒப்பற்ற தாரகையாய்ச் சுடர் வீசிய முதல் நடிகை டி.ஆர்.ராஜகுமாரிதான். அதனால்தான் என்னவோ கனவுக்கன்னி என்ற பட்டம் முதல்முதலாக பத்திரிக்கைகளால் சூட்டப்பட்டது இவருக்குத்தான்.அந்த இமேஜ் குறையாமல் கடைசிவரை மணவாழ்வு காணாமல்,தாய்மை அடையாமல் வாழ்ந்து மறைந்து விட்டார் கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி
 
------------------------------------------------------(((((((())))))))))))))))))))))))))-----------------------

Monday 23 July 2012

ஜனாதிபதி தேர்தலில் செல்லாத ஓட்டுக்கள் போட்ட அதிமுக அப்ரசண்டிகள்...


இந்திய முதல் குடிமகன்..!!!
       உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் இந்தியாவின் 13 வது குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரு.பிரணாப் முகர்ஜிக்கு ஒரு சாதாரண இந்தியக் குடிமகன் என்ற வகையில் என் வாழ்த்துக்கள். ஏற்கனவே வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது உலக நாடுகளை சுற்றிய அனுபவம் இருப்பதால் திரும்பவும் 'டூர் பேக்கேஜ்' எதுவும் போடமாட்டார் என நம்புவோம்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வழி நடத்துபவராகவும் ஆலோசனை வழங்குபவராகவும் இருந்ததால்,நீட்டும் இடத்தில் கையெழுத்து போடும் ரப்பர் ஸ்டாம்பாக இருக்கமாட்டார் எனவும் நம்புவோம்.மூன்று அப்பாவி உயிர்களின்மீது கருணை கொள்வார் எனவும் நம்புவோம்.இனியாவது ஈழ விசயத்தில் தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு, அட்லீஸ்ட் ஆதரவாக ஒரு அறிக்கையாவது விடுவார் எனவும் நம்புவோம்..... நம்புவோம்..... 
  
************************************************************************************************************************************************

ஜனாதிபதி தேர்தலில் செல்லாத ஓட்டுக்கள் போட்ட அதிமுக அப்ரசண்டிகள்...


அட அப்ரசண்டிகளா ..உங்களுக்கெல்லாம் அம்மா என்ன ட்ரைனிங் கொடுத்தாங்கனே தெரியிலையே... நாட்டின் முதல் குடிமகனையே தேர்ந்தெடுக்கிற முக்கியமான தேர்தலில்,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு அப்ரசண்டிகள் செல்லாத ஓட்டுகளை போட்டிருக்கு.உங்களைச்சொல்லி குற்றமில்லை.உங்களை நம்பி ஓட்டு போட்டாங்களே...........

அந்த செல்லாத நான்கு ஓட்டும் அதிமுக அப்ரசண்டிகள்தான் என்பதற்கு என்ன ஆதாரம்னு கேட்கிறீங்களா...

இந்த தேர்தலில் தமிழகத்தில் பிரணாப் முகர்ஜிக்கு 45 வாக்குகளும் பி.ஏ.சங்மாவுக்கு 148 வாக்குகளும் கிடைத்திருக்கின்றன.அதாவது பிரணாப் முகர்ஜிக்கு கிடைத்த வாக்குகளின் மதிப்பு 7920தான். பி.ஏ.சங்மாவுக்கோ மொத்தம் 26,048 வாக்குகள் கிடைத்தன.அதேசமயம், தமிழ்நாட்டில் 4 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரணாப் முகர்ஜியை திமுக கூட்டணி ஆதரித்தது. அதேபோல் புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவை பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

DMK       -----  23
CPI(M)      ---  10
INC         ------- 5 
PMK         ------ 3 
PT             ------2 
MnMK       ----- 2 

TOTAL         -  45

இந்த  45 வாக்குகளும் அப்படியே பிரணாப் முகர்ஜிக்கு கிடைத்து விட்டன.

AIADMK    -- 151   (சித்தப்பு கட்சியும் சேர்த்து)
AIFB           --   1

 TOTAL       --152

ஆக.. இதிலிருந்துதான் அந்த நான்கு செல்லாத ஓட்டுக்கள் விழுந்திருக்கிறது. ஒரு கட்சிக்குள் எத்தனை சேடப்பட்டியார்கள்..!!! ஒருவேளை வாக்குச்சீட்டில் ரெட்டைஇலை சின்னம் இல்லாததால் குழம்பி போயிருப்பார்களோ.... எல்லாம் கொடநாட்டு கோமாதாவுக்கே வெளிச்சம்.!!!

************************************************************************************************************************************************
ஒரு காங்கிரஸ்காரன், இன்னொரு காங்கிரஸ்காரனுடன் பேசுவதில்லை. - முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி.

-முன்னூறு சதுர கிலோமீட்டருக்கு மூணு பேர் தான் இருக்கீங்க.ஒவ்வொரு தடவையும் பஸ் ஏறி அடுத்த ஊருக்கு போய் பேசணும்னா யாரால ஆகும்.

@ Vijaya Lakshmi 

************************************************************************************************************************************************

டெசோ மாநாடு வெறும் கண்துடைப்பு தான் : இளைஞர் காங்கிரஸ் யுவராஜ்

 # # உள்ளாட்சி தேர்தல்ல மக்கள் பூசுன கரி இன்னும் அப்படியே இருக்கு.மொதல்ல உன் மொகரையில இருக்கிற கரியை தொடப்பு....

************************************************************************************************************************************************

கட்சியிலும், ஆட்சியிலும் பெரிய பொறுப்பை ஏற்க தயார்: ராகுல்காந்தி அதிரடி அறிவிப்பு

 # # அய்யய்யோ.... கைப்புள்ள அரிவாளோட கெளம்பிட்டானே...இன்னிக்கு எத்தன தலை உருளப்போவுதே தெரியிலையே...

  
************************************************************************************************************************************************
குடியரசுத் தலைவர் தேர்தலில் தவறுதலாக சங்மாவுக்கு வாக்களித்தார் முலாயம்- செய்தி

 # # காங்கிரஸ்காரங்களை கடுப்பேத்த எப்படியெல்லாம் யோசிக்கிரங்கப்பா ....

************************************************************************************************************************************************

அமெரிக்காவில் மர்ம மனிதன் துப்பாக்கிச்சூடு; சினிமா பார்த்து கொண்டிருந்த 14 பேர் பலியாயினர்.

 # # அடுத்து தமிழ்நாட்டில் துப்பாக்கி ரிலீசாகும் போது எத்தன பலி விழுமோ?

************************************************************************************************************************************************

 செங்கோட்டையன் பதவி பறிப்பு - தோப்பு வெங்கடாசலம் புதிய அமைச்சர்

     # # பெயரில் 'செங்'(குத்து) இருப்பதால் என்னவோ குனிவதற்கு சிரமப்படுவதால்,தோப்பு(கரணம்) வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளதாக கோட்டையிலிருந்து கசிந்த ரகசிய தகவல்.************************************************************************************************************************************************

ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போட்டது ரொம்ப பெருமையா இருந்துச்சு - சரத்குமார்.

# # அதாவது சொம்பு தூக்ற தம்பிக்கு இப்படி ஒரு வாய்ப்பானு எல்லாருக்கும் உன் மேல பொறாம...அதனால நீ சொன்ன வாக்கியத்தை அப்படியே தஞ்சாவூர் கல்வெட்டுல வெட்டி வச்சுட்டு பக்கத்துலே நீ உக்காந்துக்க...உனக்கு பின்னால வர்ற சந்ததிகள் பாத்து படிச்சு தெளிவா நடந்துக்குவாங்க...

************************************************************************************************************************************************

இனி எவனுக்காவது கொடும்பாவி எரிக்கும் எண்ணம் வருமா?  சீரியசான விசயம்தான். ஆனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை...


************************************************************************************************************************************************

கொஞ்சம் கடி.... 

நடிகை : என் நாய்க்கு நன்றி விசுவாசம் ஜாஸ்தி.

நிருபர்: எப்படி சொல்றீங்க..?

நடிகை: என் பழைய கணவரை தேடிப்புடிச்சு கடிச்சி வச்சுட்டு வந்திருக்குன்னா பாருங்களேன்..
-------------------------------------------------X ----------------------------------------

டாக்டர்...போன வாரம் என் கணவரை நாய் கடிச்சதால அவருக்கு ஏதேனும் பாதிப்பு எற்பட்டிருக்குமொனு பயமா இருக்கு...

எத வச்சி அப்படி சொல்றீங்க?

இப்போல்லாம் பூரிக்கட்டையவிட கல்லை தூக்கினால்தான் ரொம்ப பயப்படுறார்..
-------------------------------------------------X ----------------------------------------

ஏன் சார் பையனைப் போட்டு  இந்த அடி அடிக்கிறீங்க..

பின்ன என்னங்க..முக்கியமான லெட்டரைக் குடுத்து தபால் பெட்டியில் போட்டுட்டு வாடான்னா பெட்டி பூட்டி இருக்குன்னு திரும்பி வந்துட்டான்.

-------------------------------------------------X ---------------------------------------

அப்பா :  ராஜா... உனக்கு தம்பி பாப்பா வேணுமா இல்ல,தங்கச்சி பாப்பா வேணுமா?

மகன் :  எதுவுமே வேணாம்னு சொன்னா மட்டும் நீங்க என்ன சும்மாவா இருக்கப்போறீங்க?


(இந்தக்காலத்து பசங்க எல்லாம் என்னா விவரம்?! )

************************************************************************************************************************************************

Thursday 19 July 2012

பேய் பிடித்த தினமலரும், பெருமையடைந்த உலகநாயகனும்...

    சில நாட்களுக்கு முன் தினமலர் ஆன்மீகப்பகுதியில் வந்த செய்தி இது. பத்திரிகைகள் மூலம் பகுத்தறிவுக் கொள்கையைப்பரப்பி அதன் மூலம் மூடநம்பிக்கைகளை முற்றிலுமாகத் துடைத்தொழிக்க பாடுபட்ட பெரியார்,அண்ணா உள்ளிட்ட சீர்திருத்தவாதிகள் பணியாற்றிய பத்திரிகைத்துறையில்,கரும்புள்ளியாக இருக்கும் நாற்றம்பிடித்த தினம...... இது. 
     
      அதுவும் பெண்களை மையப்படுத்தி இட்டுக்கட்டி சொல்லப்பட்டிருக்கும் இக்கட்டுக்கதையை வன்மையாகக் கண்டிக்கிறேன்...  (இப்படியே போனா.. ஒருநாள் உண்மையின் உரைகல்லை,கருங்கல்லை கொண்டு அடிக்கப்போறாங்க...)

 

************************************************************************************************************************************************
   பொதுவாகவே பத்மஸ்ரீ கமல்ஹாசன் ஹாலிவுட் படங்களை காப்பியடிக்கிறார் என்றவொரு குற்றச்சாட்டு இருப்பதுண்டு.ஆனால் அது எந்த அளவுக்கு உண்மையென்று ஹாலிவுட் படங்களை மட்டும் தலைமேல் தூக்கி வைத்து ஆடும் தலைகனம் பிடித்த 'அறிவுஜீவி' களுக்கே வெளிச்சம்.அவர்களின் மூக்கு மொன்னையாகும் அளவுக்கு பத்மஸ்ரீ கமலைப்பற்றி ஒரு செய்தி வந்திருக்கிறது.

     கமல் படத்தை தழுவி(காப்பியடித்து)தான் நான் படம் எடுத்தேன் என்று பிரபல ஆங்கில பட இயக்குனர் ஒருவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்" என்பதுதான் அந்த அதிரடி தலைகீழ் செய்தி.அந்த பிரபல ஆங்கில பட இயக்குனர் குவிண்டின் டொரான்டினோ. (Quentin Tarantino)
      
         அவர் தழுவிய கமலின் அந்த படம் - "ஆளவந்தான்". இதை வைத்து Quentin Tarantino எடுத்தது-கொலைவெறியுடன் ஓடிய "Kill Bill"படமேதான்."Kill Bill" படத்தில் வரும் அனிமேஷன் வன்முறை காட்சிகளை ஆளவந்தான் பார்த்து தான் படமெடுத்ததாக கூறி இருக்கிறார் Quentin Tarantino. 

     ஆனால் இதை ஏற்க பல 'ஜீனியஸ்' களின் மனம் மறுத்தாலும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் ஒன்றுதான்...உலக நாயகன் பத்மஸ்ரீ கமல்ஹாசனின் சாதனைகளுக்கு முன்னால் இது சர்வ சாதாரணம்...

************************************************************************************************************************************************
@ FACEBOOK...
  
என்னை ஒரு அமைச்சர் போல வைத்துள்ளார் அம்மா -.சரத்குமார்

:>>மணிக்கொருமுறை நீர் மங்குனி அமைச்சர் என நிரூபித்து வருகிறீர்

           -----------------------X-----------------------

பெரியார் பற்றி விமர்சனம் செய்ய ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள் - சீமான்

:>>பன்னி குட்டி எல்லாம் பன்ச் டயலாக் பேசுதடா..!

       ---------------------X---------------------

தமிழீழம் நிரந்தரத் தீர்வு அல்ல.. டெசோ மாநாட்டுக்கு ஆதரவு கிடையாது: ஞானதேசிகன்

:>>ஆமா பிறகு ... இட்லிக்கு தக்காளி சட்னிதான் தீர்வு ...

@ SURESH PERUMAL

************************************************************************************************************************************************

காமராஜர் வழியில் நடப்போம்- ஞானதேசிகன்

 # # காமராஜர் எந்த வழில போனார்னு கேட்டா நாலு பேரு எட்டு திசைய காட்டுவீங்க..உங்கள தெரியாதாண்ணே..
@ டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி

************************************************************************************************************************************************
    சினிமாவில் குத்தாட்டம் போட்ட நடிகையையும் குடும்ப குத்துவிளக்காக மாற்றக்கூடிய வல்லமை புகுந்த இடத்திற்கு உண்டு....இதுவும் வடநாட்டு மருமகள்தான்.கள்ளியவள் இடுப்பை கிள்ளியவன் எவன் என்ற கேள்வி வருமா...?!!

************************************************************************************************************************************************அது ஒன்னுமில்லீங்க....நம்ம பாரதிராசா,கடலோரக்கவிதைகள் பார்ட்-2 எடுக்கப்போறாரு.அதுக்கு ரேகா கேரக்டர்ல நடிக்கிறதுக்கு நல்ல ஹீரோயினா தேடிகிட்டு இருக்காருனு யாரோ நம்ம நித்தி காதுல போட்டுவுட்டுருக்காங்க. அதுக்குதான் பிராக்டிஸ் பண்ணிக்கிட்டு இருக்காரு...பெயரைக்கூட 'ரஞ்சிதநித்தியஸ்ரீ' னு மாத்திட்டாருங்க...('ர' ரொம்ப முக்கியம் அமைச்சரே...)  

************************************************************************************************************************************************

இனி  நம்ம ட்வீட்டு .... 

போலீஸ் துறையின் மரியாதை நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறது : பொன். ராதாகிருஷ்ணன்

# # மாப்ள..இவன்தான் எங்கேயோ செமத்தியா வாங்கிருக்கான்...இங்கவந்து வேற எவனோ வாங்கின மாதிரி அவுத்துவுடுறான் பாத்தியா.... 


                                             ---------------------X---------------------


தனி ஈழம் அமைய கலைஞருடன் சேர்ந்து போராட தயார்: தா.பாண்டியன்

# # என்ன லகுட பாண்டியாரே..! வண்டி இந்தப்பக்கம் திரும்புது...உங்களை ஓபிஎஸ்,சரத்குமார் எல்லாம் ஓவர்டேக் பண்ணிட்டாங்களா?

                                              ---------------------X---------------------

என்னை ஒரு அமைச்சர் போல வைத்துள்ளார் அம்மா -.சரத்குமார்

# # என்னடி அங்க சத்தம்........   நாட்டாமை தம்பி பசுபதியை யாரோ வச்சிருக்காங்களாம்...
                                                
                                             ---------------------X---------------------

என்னை ஒரு அமைச்சர் போல வைத்துள்ளார் அம்மா -.சரத்குமார்

 # # "என்னை ஒரு அடிமை போல வைத்துள்ளார் அம்மா.." இதைத்தான் அதிமுக ஸ்டைலில் விளித்திருக்கிறார் சித்தப்பு..

                                              ---------------------X---------------------

விஜயகாந்த்தை விட மாட்டேன், அவர் கட்சி ஜெயித்த தொகுதிக்கெல்லாம் போவேன்: சரத்குமார்


 # # பாஸ்...மொதல்ல நீங்க உங்க தொகுதிக்கு போங்க...ரெண்டு வருசத்துக்கு முன்னால வெள்ளையும் சொள்ளையுமா ஒருத்தர் கையேந்திகிட்டு வந்தவருதாங்க...அத்தோட காணாம போய்ட்டாருங்க. எப்படியாவது கண்டுபிடிச்சி கொடுங்கன்னு தொகுதி மக்களெல்லாம் போலிஸ் கிட்ட கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்களாம்...

                                          ---------------------X---------------------

பொதுவாக மதுரை ஆதீனங்கள் கோர்ட்டில் ஆஜராவது போன்ற மரபுகள் இல்லை - ஆதீனம்


 # # ஆமாங்க ..எதுக்கு வேஸ்டா கோர்ட்டு,கேசு,வாய்தா, ஜாமீன்ட்டு... அப்படியே பொடதில ரெண்டு தட்டு தட்டி ஜெயில்ல தள்ளுங்க...

                                            ---------------------X---------------------

படிப்பு வராததால் சினிமாவுக்கு வந்தேன்.  - சந்தானம்

 # # சினிமா பார்த்தே படிப்பு வராமல் போச்சு...-இளைய சமுதாயம்.

                                            ---------------------X---------------------

நமக்கு பதவி முக்கியமில்லை சேவையே முக்கியம் - சரத்குமார்.

 # # போயஸ்தோட்டத்தில புல்லு புடுங்கிறதுதானே சித்தப்பு....?

                                           ---------------------X---------------------

 'டைம்' பத்திரிக்கைக்குப் பதில் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழை கிழித்த தமிழக காங்கிரஸார்!

 # # அட அப்பரசண்டிகளா.. நீங்க எதுக்குமே சரிபட்டு வரமாட்டீங்களா... 

                                           --------------------X---------------------

சிபிஎஸ்சி பாடத்திட்டம் கொண்டு இன்டர்நேஷனல் பள்ளியை தொடங்க நான் திட்டமிட்டுள்ளேன் - சரத்குமார்

 # #  யாரும் தப்பான முடிவுக்கு வந்திடாதீங்க...  (C)சிந்தாமல் சிதறாமல் (B)போயஸ் தோட்டத்திற்கு (S)சொம்பு தூக்குவது (E)எப்படி? ..அதைதான் சுருக்கி CBSE பாடத்திட்டம்னு சொல்றாரு...************************************************************************************************************************************************