Saturday 28 July 2012

பயணிகளின் உயிரோடு விளையாடும் ஏர் இந்தியா...

   

நடுவானில் கடும் அதிர்வுக்குள்ளாகி சேதமடைந்த விமானத்தை தொடர்ந்து இயக்கி பயணிகளின் உயிரோடு விளையாடியுள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.


இந்த மாதம் 5ம் தேதி டெல்லியிலிருந்து ஷாங்காய் சென்ற ஏர்பஸ் ரகத்தைச் சேர்ந்த ஏர் இந்தியா விமானம் (AI 348 ) நடுவானில் பறந்தபோது கடும் அதிர்வுக்கு உள்ளாகியிருக்கிறது.இதில் விமானத்திற்கு சேதம் ஏற்பட்டதோடு பல பயணிகளும் காயமடைந்தனர்.ஆனால் இந்த சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன்புதான் வெளியே தெரிந்திருக்கிறது.
 
    விமானம் புறப்பட்டு சரியாக ஒன்றரைமணி நேரம் கழித்து அனைவரும் 'சீட் பெல்ட்' போடும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.அடுத்த பத்தாவது நிமிடத்தில் 'ஏர் பாக்கெட்' ஊடாக விமானம் பயணிக்க, கடுமையான அதிர்வுக்கு விமானம் உள்ளாகி குலுங்கி இருக்கிறது.நிறையப்பேர் முன்னால் உள்ள இருக்கையில் மோதியும்,சிலர் தரையிலும் விழுந்தும் காயப்பட்டிருக்கின்றனர். மேலேயுள்ள பேக்கேஜ் லாக்கர் தானவே திறந்து பெட்டிகள் எல்லாம் பயணிகள் மேலே விழுந்து,சில பொருட்கள் உள்ளேயே பறந்தது என்று அந்த விமானத்தில் பணியாற்றிய ஒரு சிப்பந்தி தெரிவித்ததை வைத்துப் பார்த்தால் விமானம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாயிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது.
 
        சரி இது எதனால் ஏற்படுகிறது?... ஏர்-பாக்கெட் என்பது என்ன..? டெக்னிகலா பார்த்தால் இதை டர்புலன்ஸ்(Turbulance)என்று தான் அழைக்க வேண்டும்.

     முக்கியமாக ஒருமுறையாவது விமானப்பயணம் மேற்கொண்டவர்களுக்கு இந்த அனுபவம் இருக்கும்.குண்டும் குழியுமாய் இருக்கும் நம்ம ஊர் சாலையில் டவுன் பஸ்ஸில் செல்லும் போது குலுக்கி எடுக்குமே அப்படி ஒரு குலுக்கல் முப்பதாயிரம் அடிக்கு மேல் பறக்கும் விமானத்தில் இருந்தால் எப்படியிருக்கும்? ஈரகுலையே நடுங்கி விடாதா?முதல்முறை செல்பவர்களுக்கு நிச்சயம் வயிற்றில் புளியை கரைக்கும்...

     விமானம் பறப்பதற்கு,அதன் இறக்கையின் மேல்புறம் குறைந்த காற்றழுத்த மண்டலமும் இறக்கையின் கீழ்புறம் அதிக காற்றழுத்த மண்டலமும் உருவாக்கப்படுகிறது,இதற்கு ஏற்றார் போல் அதன் இறக்கை வடிவமைக்கப்பட்டிருக்கும்.இந்த இரண்டும் சேர்ந்துதான் விமானத்தை தூக்குகிறது.சில நேரங்களில் ஆகாயத்தில் ஏற்படும் காற்றின் அடர்த்தி மாற்றங்களால் விமானத்தின் இறக்கையில் இருக்கும் காற்றழுத்தம் ஒரே சீராக இருக்காது.இந்த காற்றழுத்தம் மாறுபடும் போதுதான் விமானம் குலுங்குகிறது.

உதாரணத்திற்கு மேகத்தினுள் பயணிக்கும்போதெல்லாம் இந்த டர்புலன்ஸ் கண்டிப்பாக விமானத்தில் வருவதை உணரமுடியும்...

    மேகம் என்பது அதை சுற்றியிருக்கும் காற்றை விட அடர்த்தி குறைவாகவோ அதிகமாகவோ இருக்கும்.விமானத்தின் இறக்கை அதனுடன் உராயும்போது,திடீரென்று காற்றின் அடர்த்தி மாறுபடுவதால்,அதன் மேல் மற்றும் கீழுள்ள காற்றழுத்தமும் மாறுபடுகிறது.அதனால் விமானத்தின் மேல் நோக்கு விசை திடீரென்று மாறிமாறி கூடும் குறையும்.. இதனால்தான் விமானமே ஆடுகிறது.இதன் காரனியைத்தான் டர்புலன்ஸ் என்று சொல்கிறார்கள்.

   டர்புலன்ஸ் எப்படி இருக்கும்?உதாரணமா ஊதுபத்தி கொழுத்தும் போது அதன் முனையில் ஒரே சீராக வெளிவரும் புகை மேலே செல்லச் செல்ல சுழண்டு சுழண்டு செல்லுமே...அது போலத்தான் இருக்கும்.

கீழே உள்ள படம்..டர்புலன்ஸிலிருந்து  தப்பித்து வரும் விமானம்...


 இதனால் விமானவிபத்து ஏற்பட்டதாக செய்திகள் எதுவும் கிடையாது.ஆனால் பயணம் செய்பவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதுண்டு... சிலநேரங்களில் விமானங்களுக்கு சேதம் கூட ஏற்பட்டிருக்கிறது.இது போன்ற சூழ்நிலையில் விமானிகள் சமயோசிதமாக விமானத்தை உடனே கீழே இறக்கி அல்லது மேலே ஏற்றி இந்த தாக்குதலிலிருந்து தப்பிப்பார்கள்.

சரி...இது சாதாரணமாக நடப்பதுதானே.இதற்கு எதற்கு இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் என்று கேள்வி எழுகிறதா??? 

 முதலில்,இவ்வாறு கடுமையான தாக்குதலுக்கு உட்பட்ட விமானத்தை உடனே இயக்க மாட்டார்கள். விமானத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டிருக்கிறதா என்று சோதனை செய்து,எல்லாம் சரியான நிலையில் உள்ளதா என ஆராய்ந்த பின்னரே இயக்க அனுமதிப்பார்கள்.

 ஆனால்,இந்த விவகாரத்தை வெளியிலேயே சொல்லாமல் விமானிகள் மறைத்ததும் இல்லாமல்,அடுத்த 4 மணி நேரத்தில் அதே விமானத்தில் 250 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஷாங்காயிலிருந்து புறப்பட்டு டெல்லிக்கு வந்துள்ளது.டெல்லிக்கு வந்த பிறகே விமானத்தை சேவையிலிருந்து விலக்கியுள்ளனர். இதன்மூலம் 250 பயணிகளின் பாதுகாப்புடன் விளையாடியுள்ளது ஏர் இந்தியா.

 இந்த விஷயம் குறித்து சில விமான சிப்பந்திகள் மூலம் பத்திரிக்கைகளுக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, விவகாரம் வெளியில் வந்துள்ளது.

இதையடுத்து இந்தத் தகவலை பத்திரிக்கைகளுக்குச் சொன்னது யார் என்ற விசாரணையில் ஏர் இந்தியா இறங்கியுள்ளது. ஆனால்,நடுவானில் நடந்த சம்பவத்தை தங்களிடம் கூட தெரிவிக்காமல் மறைத்த விமானிகள் மீது ஏர் இந்தியா எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

ஏற்கனவே ஏர் இந்தியா பிளைட்டை நிறைய பேர் 'குப்பைலாரி' என்றுதான் அழைக்கிறார்கள்.விமானம் புறப்பட்டதிலிருந்து இறங்கும்வரை தடதட... வென்று லாரியில் செல்வது போன்ற உணர்வுதான் ஏற்படும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை பைலட் ஸ்ட்ரைக் வேறு.கடைசியில் கிங்பிஷர் நிலைமை இதற்கும் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...
************************************************************************************************************************************************
     ட்ச லட்சமாக கட்டணம் வசூலிக்கும் பணத்தில் ஓட்டையிருந்தால் பெற்றுக்கொள்வார்களா?சின்னசிறு பிஞ்சு உசுரோடு விளையாடியிருக்கிறார்கள் படுபாவிகள்...

எப்.சி. கொடுத்தவர் மீதுதான் குற்றம்... பேருத்தை ஓட்டிய ஓட்டுனர் மீதுதான் குற்றம்... சரியாக பராமரிக்காத உரிமையாளர் மீதுதான் குற்றம்... இப்படியொரு பேருந்தை அமர்த்திய பள்ளி நிர்வாகத்தின் மீதுதான் குற்றம்... இப்படி மக்களின் கோப அம்புகள் எல்லோர்மீதும் சரமாரியாகப் பாய்கிறது.இவர்கள் மீது வழக்கும் தொடரப்படலாம்..பஸ்ஸில் இருந்த ஓட்டையை விடவும் நமது சட்டத்தில் உள்ள LOOP HOLES அகலமானது.தந்திர நரிகளுக்கு தப்பவா தெரியாது?

மணல் கடத்தினான் என்று ஒரு அப்பாவியை சுட்டு வீழ்த்திய தமிழக போலிஸ் துப்பாக்கியின் ரவைகள்,கல்வியை காசாக்க நினைக்கும் இதுபோன்ற கயவர் கூட்டத்தை நோக்கி காரி உமிழாதா?


   இந்தப்பிரச்சனை கோர்ட்வரை வரை சென்று கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கும் வேளையில் நேற்று வேலூரில் இன்னொரு சம்பவமும் நடந்திருக்கிறது.பள்ளி வேன் ஓட்டுனரின் அஜாக்கிரதையால் மூன்று வயதே நிரம்பிய LKG படிக்கும் சுஜிதா என்ற மற்றொரு பிஞ்சு,வாகன சக்கரம் ஏறி அநியாயமாக இறந்திருக்கிறார்.மணல் லாரி ஓட்டிக்கொண்டிருந்தவரை ஓட்டுனராக பள்ளி நிர்வாகம் நியமித்ததாம்.பள்ளி நிர்வாகமும் அவர்கள் நியமித்திருக்கும் வாகனமும் கிட்டத்தட்ட எமனும் எருமையும் போலத்தான் காட்சியளிக்கிறது.
 
சுஜிதா 
************************************************************************************************************************************************
கொஞ்சம் ரிலாக்ஸ்...

என் நெஞ்சை பிளந்தால் ஜெயலலிதா இருப்பார்! - செங்கோட்டையன்

# #  அண்ணே கொஞ்சம் நிமிர்ந்து நில்லுங்கண்ணே..! இப்டி குனிஞ்சி நின்னா என்ன அர்த்தம்..!? நெஞ்சு தெரியாம எப்படி பொளக்குறதாம்...!?

************************************************************************************************************************************************
  
கடவுளை அடைய ஆசைகளை துறந்த ரமணரும்....
ஆசைகளை அடைய கடவுளை மறந்த போலி சாமியார்களும்....************************************************************************************************************************************************
ஒருவன் தற்கொலைக்கு முன்னே ஒரு குறிப்பு எழுதி வைத்தான்.

நான் ஒரு விதவையை திருமணம் செய்து கொண்டேன் வீட்டில் யாருக்கும் தெரியாமல்.... ஏற்கனவே அவளுக்கு திருமண வயதில் ஒரு பெண் இருந்தாள்.
அந்த பெண்ணை என் தகப்பனார் காதலித்து எனக்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.அதாவது என் தகப்பனார் எனக்கே மாப்பிள்ளை ஆனார்...!
என் தகப்பனாரை திருமணம் செய்து கொண்டதால் என் ஒன்று விட்ட மகள் எனக்கு சித்தி ஆனாள்...
காலம் ஓடியது...
என் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.அவன் என் தகப்பனாருக்கு மைய்த்துனன் ஆனான்.என் சித்தியின் சகோதரன் ஆதலால் என் மகன் எனக்கு மாமன் ஆனான்.
என் தகப்பனாரின் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.அவன் எனக்கு சகோதரன். அவனே எனக்கு பேரனும் ஆனான்... என் மகளின் மகன் அல்லவா?
அதே போல் என் மனைவி என் பாட்டியானாள்.என் சித்திக்கு தாய் அல்லவா? நான் என் மனைவிக்கு கணவனாகவும், பேரப்பிள்ளையாகவும் ஒரே சமயத்தில் இருக்க வேண்டியதாயிற்று... 
ஒருவனுடைய பாட்டிக்கு கணவனாக இருப்பவன் அவனுக்கு தாத்தா ஆகிறான் அல்லவா? அப்படி பார்த்தால் நான் எனக்கே தாத்தாவாகிறேன்...இக்குழப்பமே என் தற்கொலைக்கு காரணம்.

VAIRAM SIVAKASI
  
************************************************************************************************************************************************
தமிழுக்கு இந்தியாவில் கிடைக்காத அங்கீகாரம் உலக அளவில் கிடைத்திருக்கிறது.ஒலிம்பிக் போட்டிக்காக வெளியிடப்பட கானொளியில் முதலில் சொல்லப்படுவது 'வணக்கம்' என்ற தமிழ் சொல்..!!!! அடுத்தப்பதிவில் சந்திப்போம்...  ---------------------------------------------------------((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))------------------------------------

26 comments:

 1. அனைத்தும் அருமை...பொதுவாய் ஒரு தலைப்பு வைக்கலாமே...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி... நீங்க சொல்றது சரிதான்.இந்த பதிவு கூட சுலபமா எழுதலாம் போல.ஆனா தலைப்பு வைக்கிறதுதான் பெரும்பாடா இருக்கு.

   Delete
 2. ஏர் இந்தியா....இதே பொழப்பா போச்சி உசுரோட விளையாடுவதே வாடிக்கையாகி

  ReplyDelete
  Replies
  1. மரண பயத்தோடுதான் ஏற வேண்டிருக்கு...பாஸ்

   Delete
 3. //கல்வியை காசாக்க நினைக்கும் இதுபோன்ற கயவர் கூட்டத்தை நோக்கி காரி உமிழாதா?//

  காசு கொடுத்து சரிகட்டுவோம் பாஸ்

  ReplyDelete
 4. கண்டிப்பா தற்கொலை தான் - பின்ன இம்புட்டு கொளப்பதுடன் எவனலதான் வாழ முடியும்

  ReplyDelete
  Replies
  1. இது நான் ரசித்த ஸ்டேடஸ் பாஸ்...

   Delete
 5. //'வணக்கம்' என்ற தமிழ் சொல்//

  இந்தியாவில் வேண்டுமானால் தமிழன்/தமிழ் சொல் சபை ஏறாமல் இருக்கலாம் தினம் தினம் மீனவர்கள் சாகலாம் ஆனால் உலக அரங்கில் தமிழன்/தமிழ் மேலோங்கி இருக்கிறான்....அதுக்கு ஒரு உதாரணம்

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் பெருமைப்படக்கூடிய விசயம்தான்

   Delete
 6. நிச்சயமாக கடுமையான தண்டனை கொடுக்க பட வேண்டும் அந்த கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு!

  ReplyDelete
  Replies
  1. இதுபோல நிறைய கூட்டம் இருக்கு நண்பா.. பணம் மட்டுமே குறிக்கோளாக ...

   Delete
 7. ////தமிழுக்கு இந்தியாவில் கிடைக்காத அங்கீகாரம் உலக அளவில் கிடைத்திருக்கிறது.ஒலிம்பிக் போட்டிக்காக வெளியிடப்பட கானொளியில் முதலில் சொல்லப்படுவது 'வணக்கம்' என்ற தமிழ் சொல்..!!!! ////

  ஏற்கனவே அறிந்த செய்திதான் என்றாலும் தங்கள் தளத்தில் மீண்டும் படிப்பதில் மகிழ்ச்சி!

  ReplyDelete
  Replies
  1. நண்பருக்கு நன்றி...

   Delete
 8. டர்புலன்ஸ் - நல்ல விளக்கம்....

  சுஜிதா - வேதனை தரும் சம்பவம்....

  ரமணர் படம் - அருமை...

  ஒலிம்பிக் போட்டி கண்ணொளியில் 'வணக்கம்' - அனைவரும் பெருமைப்படும் தகவல்.

  நன்றி.....

  ReplyDelete
  Replies
  1. நண்பரின் பின்னூடத்திற்கு மிக்க நன்றி..

   Delete
 9. கடவுளை அடைய ஆசைகளை துறந்த ரமணரும்....
  ஆசைகளை அடைய கடவுளை மறந்த போலி சாமியார்களும்!நல்ல பதிவுவரிகள் வாழ்த்துக்கள்!


  உண்மைவிரும்பி.
  மும்பை

  ReplyDelete
  Replies
  1. நண்பரின் வருகைக்கும் பின்னூடத்திற்கும் நன்றி..

   Delete
 10. #
  மனதில் உறுதி வேண்டும் - பயணம் செய்ய !!!

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா.... நச்சுனு சொன்னீங்க...சகோ... அருமை.

   Delete
 11. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.
  http://drbjambulingam.blogspot.com/
  http://ponnibuddha.blogspot.com/

  ReplyDelete
 12. வணக்கம்

  இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது. வாழ்த்துக்கள்
  பார்வையிட முகவரி இதோ.
  http://blogintamil.blogspot.com/2015/01/2_21.html?showComment=1421802621436#c6674180774255170451
  என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்போடு
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்:
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete