Thursday 19 July 2012

பேய் பிடித்த தினமலரும், பெருமையடைந்த உலகநாயகனும்...

    சில நாட்களுக்கு முன் தினமலர் ஆன்மீகப்பகுதியில் வந்த செய்தி இது. பத்திரிகைகள் மூலம் பகுத்தறிவுக் கொள்கையைப்பரப்பி அதன் மூலம் மூடநம்பிக்கைகளை முற்றிலுமாகத் துடைத்தொழிக்க பாடுபட்ட பெரியார்,அண்ணா உள்ளிட்ட சீர்திருத்தவாதிகள் பணியாற்றிய பத்திரிகைத்துறையில்,கரும்புள்ளியாக இருக்கும் நாற்றம்பிடித்த தினம...... இது. 
     
      அதுவும் பெண்களை மையப்படுத்தி இட்டுக்கட்டி சொல்லப்பட்டிருக்கும் இக்கட்டுக்கதையை வன்மையாகக் கண்டிக்கிறேன்...  (இப்படியே போனா.. ஒருநாள் உண்மையின் உரைகல்லை,கருங்கல்லை கொண்டு அடிக்கப்போறாங்க...)

 

************************************************************************************************************************************************
   பொதுவாகவே பத்மஸ்ரீ கமல்ஹாசன் ஹாலிவுட் படங்களை காப்பியடிக்கிறார் என்றவொரு குற்றச்சாட்டு இருப்பதுண்டு.ஆனால் அது எந்த அளவுக்கு உண்மையென்று ஹாலிவுட் படங்களை மட்டும் தலைமேல் தூக்கி வைத்து ஆடும் தலைகனம் பிடித்த 'அறிவுஜீவி' களுக்கே வெளிச்சம்.அவர்களின் மூக்கு மொன்னையாகும் அளவுக்கு பத்மஸ்ரீ கமலைப்பற்றி ஒரு செய்தி வந்திருக்கிறது.

     கமல் படத்தை தழுவி(காப்பியடித்து)தான் நான் படம் எடுத்தேன் என்று பிரபல ஆங்கில பட இயக்குனர் ஒருவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்" என்பதுதான் அந்த அதிரடி தலைகீழ் செய்தி.அந்த பிரபல ஆங்கில பட இயக்குனர் குவிண்டின் டொரான்டினோ. (Quentin Tarantino)
      
         அவர் தழுவிய கமலின் அந்த படம் - "ஆளவந்தான்". இதை வைத்து Quentin Tarantino எடுத்தது-கொலைவெறியுடன் ஓடிய "Kill Bill"படமேதான்."Kill Bill" படத்தில் வரும் அனிமேஷன் வன்முறை காட்சிகளை ஆளவந்தான் பார்த்து தான் படமெடுத்ததாக கூறி இருக்கிறார் Quentin Tarantino. 

     ஆனால் இதை ஏற்க பல 'ஜீனியஸ்' களின் மனம் மறுத்தாலும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் ஒன்றுதான்...உலக நாயகன் பத்மஸ்ரீ கமல்ஹாசனின் சாதனைகளுக்கு முன்னால் இது சர்வ சாதாரணம்...

************************************************************************************************************************************************
@ FACEBOOK...
  
என்னை ஒரு அமைச்சர் போல வைத்துள்ளார் அம்மா -.சரத்குமார்

:>>மணிக்கொருமுறை நீர் மங்குனி அமைச்சர் என நிரூபித்து வருகிறீர்

           -----------------------X-----------------------

பெரியார் பற்றி விமர்சனம் செய்ய ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள் - சீமான்

:>>பன்னி குட்டி எல்லாம் பன்ச் டயலாக் பேசுதடா..!

       ---------------------X---------------------

தமிழீழம் நிரந்தரத் தீர்வு அல்ல.. டெசோ மாநாட்டுக்கு ஆதரவு கிடையாது: ஞானதேசிகன்

:>>ஆமா பிறகு ... இட்லிக்கு தக்காளி சட்னிதான் தீர்வு ...

@ SURESH PERUMAL

************************************************************************************************************************************************

காமராஜர் வழியில் நடப்போம்- ஞானதேசிகன்

 # # காமராஜர் எந்த வழில போனார்னு கேட்டா நாலு பேரு எட்டு திசைய காட்டுவீங்க..உங்கள தெரியாதாண்ணே..
@ டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி

************************************************************************************************************************************************
    சினிமாவில் குத்தாட்டம் போட்ட நடிகையையும் குடும்ப குத்துவிளக்காக மாற்றக்கூடிய வல்லமை புகுந்த இடத்திற்கு உண்டு....இதுவும் வடநாட்டு மருமகள்தான்.கள்ளியவள் இடுப்பை கிள்ளியவன் எவன் என்ற கேள்வி வருமா...?!!

************************************************************************************************************************************************அது ஒன்னுமில்லீங்க....நம்ம பாரதிராசா,கடலோரக்கவிதைகள் பார்ட்-2 எடுக்கப்போறாரு.அதுக்கு ரேகா கேரக்டர்ல நடிக்கிறதுக்கு நல்ல ஹீரோயினா தேடிகிட்டு இருக்காருனு யாரோ நம்ம நித்தி காதுல போட்டுவுட்டுருக்காங்க. அதுக்குதான் பிராக்டிஸ் பண்ணிக்கிட்டு இருக்காரு...பெயரைக்கூட 'ரஞ்சிதநித்தியஸ்ரீ' னு மாத்திட்டாருங்க...('ர' ரொம்ப முக்கியம் அமைச்சரே...)  

************************************************************************************************************************************************

இனி  நம்ம ட்வீட்டு .... 

போலீஸ் துறையின் மரியாதை நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறது : பொன். ராதாகிருஷ்ணன்

# # மாப்ள..இவன்தான் எங்கேயோ செமத்தியா வாங்கிருக்கான்...இங்கவந்து வேற எவனோ வாங்கின மாதிரி அவுத்துவுடுறான் பாத்தியா.... 


                                             ---------------------X---------------------


தனி ஈழம் அமைய கலைஞருடன் சேர்ந்து போராட தயார்: தா.பாண்டியன்

# # என்ன லகுட பாண்டியாரே..! வண்டி இந்தப்பக்கம் திரும்புது...உங்களை ஓபிஎஸ்,சரத்குமார் எல்லாம் ஓவர்டேக் பண்ணிட்டாங்களா?

                                              ---------------------X---------------------

என்னை ஒரு அமைச்சர் போல வைத்துள்ளார் அம்மா -.சரத்குமார்

# # என்னடி அங்க சத்தம்........   நாட்டாமை தம்பி பசுபதியை யாரோ வச்சிருக்காங்களாம்...
                                                
                                             ---------------------X---------------------

என்னை ஒரு அமைச்சர் போல வைத்துள்ளார் அம்மா -.சரத்குமார்

 # # "என்னை ஒரு அடிமை போல வைத்துள்ளார் அம்மா.." இதைத்தான் அதிமுக ஸ்டைலில் விளித்திருக்கிறார் சித்தப்பு..

                                              ---------------------X---------------------

விஜயகாந்த்தை விட மாட்டேன், அவர் கட்சி ஜெயித்த தொகுதிக்கெல்லாம் போவேன்: சரத்குமார்


 # # பாஸ்...மொதல்ல நீங்க உங்க தொகுதிக்கு போங்க...ரெண்டு வருசத்துக்கு முன்னால வெள்ளையும் சொள்ளையுமா ஒருத்தர் கையேந்திகிட்டு வந்தவருதாங்க...அத்தோட காணாம போய்ட்டாருங்க. எப்படியாவது கண்டுபிடிச்சி கொடுங்கன்னு தொகுதி மக்களெல்லாம் போலிஸ் கிட்ட கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்களாம்...

                                          ---------------------X---------------------

பொதுவாக மதுரை ஆதீனங்கள் கோர்ட்டில் ஆஜராவது போன்ற மரபுகள் இல்லை - ஆதீனம்


 # # ஆமாங்க ..எதுக்கு வேஸ்டா கோர்ட்டு,கேசு,வாய்தா, ஜாமீன்ட்டு... அப்படியே பொடதில ரெண்டு தட்டு தட்டி ஜெயில்ல தள்ளுங்க...

                                            ---------------------X---------------------

படிப்பு வராததால் சினிமாவுக்கு வந்தேன்.  - சந்தானம்

 # # சினிமா பார்த்தே படிப்பு வராமல் போச்சு...-இளைய சமுதாயம்.

                                            ---------------------X---------------------

நமக்கு பதவி முக்கியமில்லை சேவையே முக்கியம் - சரத்குமார்.

 # # போயஸ்தோட்டத்தில புல்லு புடுங்கிறதுதானே சித்தப்பு....?

                                           ---------------------X---------------------

 'டைம்' பத்திரிக்கைக்குப் பதில் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழை கிழித்த தமிழக காங்கிரஸார்!

 # # அட அப்பரசண்டிகளா.. நீங்க எதுக்குமே சரிபட்டு வரமாட்டீங்களா... 

                                           --------------------X---------------------

சிபிஎஸ்சி பாடத்திட்டம் கொண்டு இன்டர்நேஷனல் பள்ளியை தொடங்க நான் திட்டமிட்டுள்ளேன் - சரத்குமார்

 # #  யாரும் தப்பான முடிவுக்கு வந்திடாதீங்க...  (C)சிந்தாமல் சிதறாமல் (B)போயஸ் தோட்டத்திற்கு (S)சொம்பு தூக்குவது (E)எப்படி? ..அதைதான் சுருக்கி CBSE பாடத்திட்டம்னு சொல்றாரு...************************************************************************************************************************************************
21 comments:

 1. உலக நாயகனே....உங்களுக்கு சல்யூட்...

  அனைத்தும் ரசித்து சிரிக்கும் படி இருந்தது நண்பா

  ReplyDelete
  Replies
  1. நண்பருக்கு நன்றி...

   Delete
 2. ட்வீட்டுகள் அனைத்தும் சிரிப்பை வரவழைத்தன நண்பா :)

  ReplyDelete
 3. பேய்க்கு யாரை பிடிக்கும்மோ இல்லையோ ஆனா அதுக்கு கண்டிப்பா தினமலரை நிருபர்களை பிடித்து இருப்பது நன்கு தெரிகிறது

  ReplyDelete
  Replies
  1. சத்தியமான உண்மை...நன்றி நண்பா...

   Delete
 4. நன்றாக இருக்கு....அனைத்தும்..

  ReplyDelete
 5. ஆங்கில பட இயக்குனர் குவிண்டின் டொரான்டினோ அவர்கள் இவ்வாறு சொன்னதே மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்...

  FACEBOOK... ட்வீட்டு..... - நல்ல நகைச்சுவை... ரசித்தேன்...

  பகிர்வுக்கு நன்றி...
  தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

  பாடல் வரிகள் ரசிக்க : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி பாஸ்

   Delete
 6. தி க காரர் இதைவிட எப்படி சீரப்பாக எழுத முடியம். நன்றி நண்பா

  ReplyDelete
 7. //தினமலர்//

  இவனுங்களுக்கு வேலையே இது தான் எப்பவும் பரபரப்பா இருக்கோணும் என்பதற்காக கண்ட கருமத்தை எழுதி காசு பாக்கிற...

  ReplyDelete
  Replies
  1. பேசமா அதோட பேரை தினக்கருமம்னு மாத்திக்கலாம்...

   Delete
 8. ஹா ஹா சந்தடி சாக்குல கிள்ளிடீங்களே....

  ReplyDelete
  Replies
  1. ஆனா இதுவரைக்கும் அந்த கள்ளியவளை கிள்ளியது யாரென்று தெரியவில்லை பாஸ்....

   Delete
 9. //நம்ம ட்வீட்டு//

  கிழிகிழின்னு....கொதறிட்டீங்க போங்க

  ReplyDelete
 10. கலக்குறீங்க எசமான்...ஒலக நாயகன்.?ஒரு அரை பக்கம் வம்பா போச்சே...

  ReplyDelete