அடுத்ததும் வில்லங்கமான மேட்டர்தான். கொஞ்சம் பழைய செய்தி. ஆனால் என் பதிவு சம்மந்தப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக்கில், நீக்கப்பட்ட அமைச்சர் ஒருவருடன் புன்னகை நடிகையைத் தொடர்புப் படுத்தி கிசோர் கேசாமி போட்ட ஒரு ஸ்டேடஸ் பெரும் சர்ச்சையானது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
கேப்டன் டிவியில் கிசோர் கேசாமியுடன் நடந்த நேர்காணலை சமீபத்தில்தான் பார்த்தேன்.
http://www.youtube.com/watch?v=jztqrHrf3jYhttp://www.youtube.com/watch?v=cPYM926Zt5o
அதில் அவரிடம் திரும்பத் திரும்பக் கேட்கப்பட்ட கேள்வி அந்த நடிகை சம்மந்தப்பட்டதுதான். உலகம் முழுவதும் அது ஒளிப்பரப்பாகும் என்று தெரிந்திருந்தும்,அதில் அவர் பதிலளித்த விதம் பாராட்டுக்குரியது. கடைசிவரை அது தவறான பதிவு என்றோ, சரியாக விசாரிக்காமல் போடப்பட்ட நிலைத்தகவல் என்றோ தெரிவிக்கவில்லை. மாறாக, அந்த நேரத்தில் திருச்சியில் இருந்ததாகவும்,அதை உறுதிப்படுத்திக்கொண்டுதான் அந்தத் தகவலைப் பதிந்தேன் எனவும் தெரிவித்தார். பிரசன்னா தரப்பு காவல்துறையில் புகார் அளிக்க செல்வதாக இருந்தது. இடையில் அன்பான நண்பர் ஒருவரின் பேச்சுவார்த்தையால் புகார் அளிக்கவில்லை. அதனால் என் பதிவையும் நீக்கிவிட்டேன் எனத் தெரிவித்திருந்தார். அது தொடர்பாக எனக்கெழுந்த சந்தேகம் இதுதான்..
புகார் ஏன் அளிக்கவில்லை என்று ஊடகவியலார்கள் அன்று பிரசன்னாவிடம் கேட்டபோது, அப்படி யாரும் தவறாக எழுதவில்லை.. நான் யாரிடமும் வாதிடவில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் கிசோர் அந்த ஸ்டேடசை பதிந்தபிறகு பலரும் அதை நக்கலடித்து எழுத, பிரசன்னா கமெண்ட் போட்ட பிறகுதான் அந்த விவாதம் வேறு திசை நோக்கி செல்ல ஆரம்பித்தது. அதில் நக்கலடித்தவர்கள் அனைவரின் இன்பாக்சுக்கு சென்று பிரசன்னா கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதை கிஷோர் தனது அடுத்த நிலைத்தகவலில், ஸ்டேடஸ் போட்ட என்னிடம் வாக்குவாதம் செய்யாமல் கமென்ட் போட்ட நண்பர்களின் இன்பாக்ஸில் சென்று மிரட்டுவது சரியல்ல எனத் தெரிவித்திருந்தார். பிரசன்னாவின் அந்த கமெண்டில் அவர் பெயரைச் சொடுக்கினால் அது அவரின் பேஸ்புக் பக்கத்திற்குத்தான் சென்றது. அதில், அவர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் 'கல்யாண சமையல் சாதம்' படம் பற்றிய அப்டேட்கள் நிறைய இருந்தது. அது அவரது பேஸ்புக் பக்கம்தான்.
ஆனால் அன்று பத்திரிக்கையாளர்கள் கேள்விகேட்டு குடைந்த போது பிரசன்னா கடைசியாக ஒரு போடுபோட்டார் பாருங்க... 'எனக்கு பேஸ்புக்ல அக்கவுண்டே கிடையாது'னு.. இதிலிருந்து என்ன தெரியுது. ..? உங்களுக்கு என்ன தெரியுதோ அதேத்தான் எனக்கும் தெரியுது. இதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். நாம வேற வேலையைப் பார்ப்போம்.
அடுத்து அகழ்வாராய்ச்சி(!) ஒன்றில் ஈடுபடலாம்னு இருக்கேன்..
‘இஞ்சி இடுப்பழகி... மஞ்சச் சிவப்பழகி...’ -தேவர்மகன் படத்தில் வரும் இந்தப்பாடலைக் கேட்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்தப்பாடலுக்கு மட்டும் இரண்டு தேசிய விருதுகள் அள்ளிக் கொடுத்தாங்க... இருக்கட்டும்.
அது என்ன ‘இஞ்சி இடுப்பழகி... மஞ்சச் சிவப்பழகி...? அதற்கான ஆராய்ச்சியிலத்தான் இறங்கப்போறோம். ஆமா இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்மந்தம்...?
பழைய பாடல்களுக்கும் புதிய பாடல்களுக்கும் விளக்கம் சொல்லியே கின்னஸ் ரெகார்டு வரை போன திண்டுக்கல் லியோனி ஒரு தடவை சொல்லக் கேட்டிருக்கிறேன். 'அது என்ன இஞ்சி இடுப்பழகி... இஞ்சி பாத்திங்கனா ஒன்னு ஆஸ்திரேலியா மேப் மாதிரி இருக்கும். ஒன்னு ஐரோப்பா மேப் மாதிரி இருக்கும். அதுமாதிரியா இடுப்பு இருக்கும்..? ரெண்டாவது வரி மஞ்சச் சிவப்பழகி போட்டாச்சி. மொத வரில இடுப்பப் பத்தி சொல்லணும். இடுப்புக்கு இ-ல ஆரம்பிக்கிற மாதிரி ஒன்ன போடனும். போட்டுவுடு ஒரு இஞ்சை-னு போட்டுடாங்க' அப்படினு சொல்வாரு.
ஆனால் அதற்கு வேறு ஒரு விளக்கம் பேஸ்புக்ல கவிஞர் மகுடேசுவரன் என்பவர் கொடுத்திருக்கார்...
இஞ்சுதல்’ என்று தொழிற்பெயர் உண்டாம். இஞ்சுதல் என்றால் ‘சுண்டுதல், இறுகுதல், வற்றுதல்’ என்று அர்த்தம். ‘சர்க்கரைப் பாகை நல்லா இஞ்சுற அளவுக்குக் காய்ச்சனும்’ என்று பேசக் கேட்டுள்ளோம். இஞ்சிய இடுப்புள்ள அழகிதான் இஞ்சி இடுப்பழகி. அடுத்தவரி மஞ்சச் சிவப்பழகி - மஞ்சள் எப்படிச் சிவப்பாகும் ? திரும்பவும் அதே தவறு. மஞ்சள் இல்லை, மஞ்சம். மஞ்சத்தில் நாணத்தால் சிவக்கும் அழகி !
அடேங்கப்பா... இதுக்கு இப்படியொரு விளக்கம் இருக்கிறதா..?
ஆனால் அந்தப் படத்தையும் பாடலையும் கவனித்தீர்கள் என்றால் இன்னொரு வினா எழுப்பத் தோன்றும். பாடலில் முதலில் பெண் குரல்தான் பாடும். " இஞ்சி இடுப்பழகா... மஞ்சச் சிவப்பழகா.." அப்படி என்றால் இது ஆணுக்கான வர்ணனை தானே.. ஆணின் இடுப்பை அப்படி வர்ணிக்கலாமா..? என்றால், இதற்கு பாடல் எழுதிய வாலியே விளக்கம் கொடுத்திருக்கிறார். 'இஞ்சி என்பதற்கு சுவர், மதில் என்ற அர்த்தமும் இருக்கிறது. சுவரைப் போன்ற திடமான இடுப்புடையவன் என்கிற பொருள்கொள்ள வேண்டும்' என சொல்லியிருக்கிறார்.
எனக்கிருக்கும் சந்தேகம் அந்த வரியை உண்மையிலேயே வாலிதான் எழுதியிருப்பாரா என்பதே.பொதுவாகவே இசைஞானி நாட்டுப்புற இசைப்பின்னணியில் பாடல் அமைக்கிறார் என்றால் வேறு பாடலாசிரியர் எழுதினாலும் ராஜாவின் பங்கும் அதில் இருக்கும். ஒரு சில நாட்டுப்புற வரிகளை அதில் கோர்த்து விடுவார். 'ஒத்த ரூவாயும் தாறேன்...' பாடலின் முதல் இரண்டு வரிகள் ஏற்கனவே எங்கள் கிராமப்புற பகுதியில் பாடப்பட்ட பாடல்தான்.
அதேப்போல் “இஞ்சி இடுப்பழகா, எலுமிச்சங்காய் மாரழகா, மஞ்சச் சிவப்பழகா, மறக்க மனம் கூடுதில்லை” என்ற இவ்வரிகள் நெல்லை ,மதுரைப் பகுதிகளில் பாடப்படும் நாட்டுபுறப் பாடல்களில் இடம்பெற்றதாக ஒரு தமிழர் நாட்டுப்பாடல் தொகுப்பில் கூறப்பட்டுள்ளது. அதைத்தான் இளையராஜா பயன்படுத்தியிருக்க வேண்டும்.
இது முதல் வரியிலேயே ரசிகனை கவர்ந்திழுக்க வேண்டும் என்று ராஜா போன்ற மேதைகள் கையாளும் யுத்தி.
அரசியல் கலாட்டூன்.. :-)
ahaa pathivu pala visayangala thangi vanthu irukku rasichen sir.
ReplyDeleteமிக்க நன்றி மகேஷ்
Deleteenakku raja rani pidichu irunthichu sir.
ReplyDeleteஉண்மை தான். படம் மொக்கை எல்லாம் கிடையாது மகேஷ்.. கடைசி பதினைந்து நிமிடங்களை கழித்துப் பார்த்தால் நல்ல என்டர்டைன்மெண்ட்... ஆனால் மௌனராகம் படத்தோட எல்லாம் ஒப்பீடு செய்யும் அளவுக்கு இல்லை என தோணுது.
Deleteவாவ்... செமையா எழுதியிருக்கீங்க... எல்லாமே நல்ல கன்டென்ட்...
ReplyDeleteமிக்க நன்றி தல...
Deleteகடைசி கேப்டன் படம் பினிஷிங் டச்.... சூப்பர்...
ReplyDeleteமிக்க நன்றி பிரகாஷ்
Delete// காட்சிப்படிமங்களில் படிந்திருக்கும் குறியீடுகளை தோண்டி எடுத்து தூசிதட்ட சிறந்த கலைப்படைப்போ அல்ல... // பார்ரா இலக்கியம் பொங்கி வழியுது ஹா ஹா ஹா
ReplyDelete//உங்கள் வசதிக்காக சிவப்பு மையால் ஹைலைட் பண்ணியிருக்கேன்.// ஹா ஹா ஹா
ஒரு புறாவுக்கு அக்கப்போறா என்ற பாணியில் இருக்கிறது இஞ்சி பற்றிய தவகல்கள்,
இஞ்சி பற்றிய பல தகவல்களை அறிந்து கொண்டோம், தகவலுக்கு நன்றி.. தொடர்ந்து எழுதவும் (ஹா ஹா ஹா எப்பாடி வந்த வேல முடிஞ்சது )
மிக்க நன்றி சீனு
Deleteராஜா ராணி விமர்சனத்தோடு, இடுப்பு அலசல்... சே... இஞ்சி அலசல் சூப்பர்...
ReplyDeleteகலாட்டூன் செம கலாட்டா...!
மிக்க நன்றி DD
Deleteஆனால் பாருங்க... சிலர் இதை மௌனராகம் படத்தோட லேட்டஸ்ட் வெர்சன் என சொல்றாங்க. அதைத்தான் தாங்க முடியல. அதே கதையமைப்பு,காட்சியமைப்பு இருந்தால் அதற்கு பெயர் ஈயடிச்சாம் காப்பி. அதை முதல்ல புரிஞ்சிக்கணும்.////
ReplyDeletenan partha vara palar raja rani mavna ragam oda opittu kaluvi uthey mudichittanga... ana nan tan nampala.. yar sonathum nampama irunthen.. maranthu pona visayathai ninga thonti eduthu elutiya piraku nethu youtube la nanum mavna ragam parthitalam enna than irukunu parthen sir.. rompa acharyama irunthichu 1987 la ippadi oru padamanu.. nalla irunthichu.. kuda oru kadhal kadhai serthu edutha latest version than raja rani...
raja rani pidichu irunthichuna oruthanukku.. avan mavna ragam parkkalinu artham.. avan mattum parthana avvalvutan enna pola nichayama marituvan..
ஹா.ஹா... என்னால மௌனராகம் பார்த்ததற்கு மிக்க நன்றி மகேஷ். மணிரத்னத்தை யார் இந்த பையன் என அப்போது எல்லோரையும் திரும்பியப் பார்க்கவைத்தப் படமாம். கணவன் மனைவிக்குள் இருக்கும் சிறு மெல்லிய உணர்வுகளை அற்புதமாக படம்பிடித்திருப்பார். எல்லாவற்றையும்விட ராகதேவனின் பின்னணி இசை பிரமாண்டம்.
ReplyDeleteஅந்த பெங்களூரு அம்மணி எதோ சீரியல்ல கூட நடிக்குறதா விளம்பரத்துல பார்த்தேன். நம்மாளுங்க கிட்ட இருக்குற ஒரே ப்ளஸ் பாய்ண்ட் மறப்போம்...., மன்னிப்போம்தான்.
ReplyDeleteஅதுதான் நம் வீக்னஸ் கூட .. மிக்க நன்றி மேடம் .
Deleteஅதுதான் நம் வீக்னஸ் கூட .. மிக்க நன்றி மேடம் .
Deleteசெம ரைட் அப் பாஸ். :):) படிக்க ரொம்ப சுவாரிசியம்மா இருக்கு. அடிக்கடி சும்மா அடிச்சி விடுங்க..
ReplyDeleteமிக்க நன்றி ராஜ் ...
Deleteபிண்ணியெடுக்கிற...பிரமாதம்....இப்படி சிரிச்சு ரொம்ப நாளாச்சு...நன்றி...
ReplyDeleteமிக்க நன்றி பாஸ்
Delete