Tuesday 25 September 2012

மன்மோகன் சிங்-ன் விபரீத ஆசையும்,அனுபவிக்கத் தெரியாத ஒபாமாவும்...

நட்புகளுக்கு வணக்கம்....

பெட்ரோல்,மண்ணெண்ணெய்,சமையல் கியாஸ் விலை உயர்வைக் கண்டித்து நடந்த போராட்டத்தில்தான் நம் பிரதமரை இவ்வாறு கேலியாக(!?) சித்தரித்துள்ளனர்.(ஆனால்... தை நாம் ஜாலியாகத்தான் எடுத்துக்கொள்ளனும்.இது மாதிரி ஏதாவது கிடைத்தால்தான் பதிவை தேத்த முடியுது..   :-))  )


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

து... நியூயார்க் Wall Street Landing Zone-ல் எடுக்கப்பட்டப்  படம்.அமெரிக்க அதிபர் ஒபாமா தனது பிரத்தியோக ஹெலிகாப்டர் Marine One-லிருந்து இறங்கி,கீழே நிறுத்தப்பட்டுள்ள ' Presidential limousines ' காருக்கு செல்லும் காட்சி.

ம்ஹும்...பார்ப்பதற்கு என்னதான் ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு செம ரிச்சாக இருந்தாலும் ஏதோ ஒன்னு குறைகிற மாதிரி தெரியுதே..!? 


கேனப்பசங்க....இவ்வளவு டெக்னிக்கலா திங்க் பண்ணத்தெரிஞ்சவங்களுக்கு நம்மை மாதிரி செண்டிமெண்டா பில்டப் கொடுக்கத் தெரியுதா பாருங்க ...!

வெள்ளையும் சொள்ளையுமா 32 அமைச்சர்களையும் வரிசையா  நிற்கவைத்து குனிந்து வணக்கம் சொல்லவேண்டாமா? கார் கிளம்பும்போது ஒரு கையால் சட்டைப்பையைப் பொத்திக்கொண்டு "வாழ்க..வாழ்க.."என கோஷம் போட்டுக்கொண்டே பின்னாலேயே அரை கிலோமீட்டருக்கு ஓடவேண்டாமா ..? அட்லீஸ்ட்... கார் டயரையே பொற்பாதங்களாக நினைத்து விழுந்து வழங்க வேண்டாமா....? இதுகூட இல்லைனா என்ன அதிபர்...என்ன கவர்மண்டு...என்ன பாலிடிக்ஸ்..ச்சே..அனுபவிக்கத் தெரியாத மனுசம்பா ஒபாமா...! 


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கொஞ்சம் ரிலாக்ஸ்....
 
"பக்கத்து வீட்டுக்காரன் சரியான கஞ்சப்பயல்... கரண்ட் பில் அதிகமாவுதுன்னு லைட்டை ஆ.'.ப் பண்ணிட்டு மெழுவர்த்தியை ஏத்தி வச்சு  சாப்ட்டுகிட்டு இருக்கான்..."

"அதுக்கு நீங்க ஏன் சார் கவலைப்படுறீங்க...?"

"ஹிஹி.. அவுங்க வீட்டு வெளிச்சத்தில்தான் இவ்வளவு  நாளா நான் சாப்
ட்டுகிட்டு இருந்தேன்..."
--------------------------------------------------X ---------------------------------------------
" என் சின்னவீட ' போடி பொறம்போக்கு 'ன்னு திட்டுனது நம்ம அமைச்சர் காதுல விழுந்துட்டுது..."

"அய்யய்யோ.. அதைக்கேட்டு கடுமையா திட்டியிருப்பாரே..."

"நாசமாப்போச்சு....இப்பவே  பட்டா போட்டுக்குடுன்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிட்டாரு...."

--------------------------------------------------X ---------------------------------------------

கணவன்: அடியேய்... இவன் தானாடி உன் கள்ளக் காதலன்...பார்த்தால் பிச்சைக்காரன் மாதிரி இருக்கான்.

மனைவி: தண்ணியப் போட்டுட்டு  கண்ணாடி முன்னாடி நின்னு உளராம போய் தூங்குங்க.

@FACEBOOK..

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ஒரு குட்டிக்கதை...


வா(ல்)ழ்க்கையில் எதிலுமே திருப்தி அடையாத ஒரு ஆடும்,மாடும் தனித்தனியாக இறைவனிடம்
சென்று முறையிட்டது.

"எனக்கு ஏன் இவ்வளவு குட்டையாக வாலைப் படைத்தாய்?.பார்ப்பதற்கே அசிங்கமாக இருக்கிறது.ஆனால் மாட்டிற்குப் பார்..எவ்வளவு அழகான நீண்ட வால்.அது சுழட்டி சுழட்டி அடிக்கும்போது எவ்வளவு அழகாக இருக்கிறது.அருவருப்பான இந்த குட்டையான வாலை எடுத்துக் கொண்டு மாட்டிற்கு உள்ளது போல் நீளமான வாலைக் கொடு." என இறைவனிடம் வேண்டியது ஆடு.

" இந்த நீளமான வாலை ஏன் எனக்கு படைத்தாய்.? பின்னால் அசிங்கமாக தொங்குகிறது.ஆட்டிற்குப் பார்...எவ்வளவு கச்சிதமா,சின்னதா அழகா இருக்கு.இந்த நெட்டை வாலை எடுத்துக்கொண்டு ஆட்டிற்கு உள்ளது போல் குட்டையாகக் கொடு.." என இறைவனிடம் மாடும் வேண்டியது.

இறைவன் கொடுத்த எந்த விளக்கத்தையும் ஆடும்,மாடும் ஏற்பதாக இல்லை.இரண்டும் விடாப்பிடியாக இருந்தது.இவைகளுக்கு பட்டால்தான் தெரியும் என நினைத்துக் கொண்டு அவைகளின் விருப்பப்படியே வாலை மாற்றியமைத்தார் இறைவன்.

தங்களின் விருப்பம் நிறைவேறியதையடுத்து  இரண்டும் சந்தோசத்தில் துள்ளிக்குதித்தன.

தனது நீண்ட வாலை சுழட்டி சுழட்டி விளையாடி மகிழ்ந்தது ஆடு.வழக்கம் போல திருட்டுத் தனமாக மேயும் தோட்டத்தில் புகுந்து அங்குள்ள செடிகளை தின்றது.எப்போதும் போல தோட்டக்காரன் துரத்த,தன் வழக்கமான தப்பிக்கும் பாணியை கையாண்டு வேலியின் இடுக்கு வழியாகத் தப்பிக்கப் பார்த்தது ஆடு.ஆனால் இந்தமுறை தோட்டக்காரன் கையில் அதன்  நீண்ட வால் வசமாக சிக்கியது.தரதரவென்று தரையில் இழுத்துக்கொண்டு போய் தனது பலநாள் வஞ்சத்தை மொத்தமாக வைத்து அடி பின்னி எடுத்துவிட்டான் அந்த தோட்டக்காரன்.  

தன் பின்னால் இருந்த பெரும் சுமை குறைந்த சந்தோசத்தில் மாடும் கர்வம் கொண்டது.தான் எப்போதும் உருண்டு புரளும் சேற்றில் குட்டிக்கரனமெல்லாம் அடித்து உருண்டு புரண்டது.ஆனால் இதன் விளைவை இரவில்தான் உணர்ந்தது.இரவில் இதை கொசுவும்,பூச்சியும் ரவுண்டு கட்டி கடிக்க,வழக்கம் போல் தனது வாலை சுழட்டி அடித்து விரட்ட முயற்சித்தது
மாடு.பாவம்...அந்த குட்டி வாலை வைத்துக் கொண்டு அதுவால் ஆட்ட மட்டும் தான் முடித்ததே தவிர,அடித்து விரட்ட முடியவில்லை.இரவெல்லாம் கடிபட்டு ரத்தம் சிந்தி கண்ணீர் வடித்தது மாடு.

அடுத்த நாள்.....அடிபட்ட ஆடும்,கடிபட்ட மாடும் இறைவனிடம் ஓடியது."எங்களை மன்னித்து விடு.தவறை உணர்ந்துகொண்டோம்.முன்பிருந்தது போலவே எங்கள் வாலை திருப்பிக்கொடுத்துவிடு " என கதறி அழுதது.

இறைவனும் அவற்றை மன்னித்து பழையபடியே வாலை திருப்பி அமைத்து விட்டார்...

இதன்மூலம் அறியவரும் நீதி...ஆண்டவன் எல்லோருக்கும் அளவோடுதான் படைத்திருக்கிறான்.அதை வைத்துக்கொண்டு சந்தோசப்படவேண்டுமே தவிர,அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைப் படக்கூடாது...

(பின் குறிப்பு...இந்தக்கதையின் நீதியை வேறு அர்த்தத்தில் பார்க்கக்கூடாது... அப்பறம் சாமி கண்ணை நோன்டிபுடும்.)
வணக்கங்களுடன்...
மணிமாறன்.
-------------------------------------------------------------((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))----------------------------------

Thursday 20 September 2012

பேஸ்புக்கின் துயர்துடைப்பு வெளக்குமாறு....


" பேஸ்புக் மூலமாக காதலித்து இளம்பெண்களிடம் மோசடி... " இது மாதிரியான சங்கதிகள்தான் செய்திகளாக நிறைய படித்திருக்கிறோம்.ஆனால் பேஸ்புக்கில் பரபரப்பாக இயங்கிகொண்டிருக்கும் பல பிரபலங்களுக்கும் ஒட்டு மொத்தமாக அல்வா கொடுத்திருக்கிறது ஒரு 'பழ வெளக்கமாறு'. நல்ல நட்புக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது.'முகநூல் நட்பது நட்பன்று'என நட்புக்கு இலக்கணம் எழுதியிருக்கு அந்த பழம்  . 

"எல்லோரையும் நம்பி ஏமாந்தது போதும்... இளைஞர்களே புறப்படுங்கள்..." இப்படித்தான் ஆரம்பித்தது அவர்களின் விளம்பரம்.சிவகாசி வெடிக்கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் பதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் அந்த 'சிவகாசி துயர்துடைப்பு குழு'.


பேஸ்புக் என்பது வெறும் வெட்டி அரட்டைக் கச்சேரிக்கான பொழுதுபோக்கு தளம்தான் என்பதையும் மீறி சமுதாயத்தொண்டு செய்யும் மையமாக மாற்றமுடியும் என்பதை  நிறுபித்தது இந்தக்குழு.ஆரம்பத்தில் இந்தக்குழுவை பாராட்டி தினமலர்,இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களில் வெளிவர,அதுவே இதற்கு மிகப்பெரிய அங்கீகாரமாக மாறிப்போனது.நான்கே நாட்களில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தங்களை இந்தக்குழுவில் இணைத்துக்கொண்டனர்.பேஸ்புக் பிரபலங்களால் விளம்பரப்படுத்தப்பட்டு நிதியும் திரட்டப்பட்டது.

இதற்கிடையே இந்தக்குழுவின் ஒருங்கிணைப்பாளரைப்பற்றி பணமோசடி விஷயம் ஓன்று வெளியே கசிந்தது.பேஸ்புக் மூலமாக நட்பான ஒரு பெண்ணிடம் மூன்று லட்சம் ரூபாய் அவசரக்கடனாகப் பெற்று,பிறகு திரும்பக் கொடுக்காமல் இழுத்தடிக்க,போலீசில் வரை சென்று இன்னும் அந்தப்பிரச்சனை முடிந்தபாடில்லை.ஆரம்பத்தில் அவரின் நண்பர்கள் யாரும் இதை நம்பவில்லை.ஏனென்றால் அந்தளவுக்கு அந்த பழமான 'அண்ணனின்' மீது இவர்களுக்கு அளவுகடந்த நம்பிக்கை..மரியாதை.!!..ஒருகட்டத்தில் அந்தப்பெண் சொல்வது உண்மையாக இருக்கலாமென்று சிலர் சொல்ல,அதற்குப் பிறகுதான் அந்த அண்ணனின் சுயரூபம் வெளியே தெரியவந்தது.தான் இந்தக் குழுவிலிருந்து விலகிக் கொள்வதாகவும்,பொறுப்பை ஏற்க வேறு யாராவது முன்வரவேண்டுமென்றும் ஒரு 'ஸிம்பதி ஸ்டேடஸ்' போட்டு எல்லோரையும் நம்பும்படிசெய்தார். "வீட்டைக்கூட்டும் வெளக்கமாறு சுத்தமாக இருக்கவேண்டும் என்று அவசியம் கிடையாது.." என்று பஞ்
ச் டயலாக் அடிக்க,அது இவர்மீது சந்தேகம் கொண்ட மற்ற நண்பர்களின் நெஞ்சை பஞ்சாக்கியது.

அதன் பிறகுதான் அண்ணனின் திருவிளையாடல் ஆரம்பமானது.பணம் அனுப்பியவர்களின் பட்டியலை தெரிவித்துவிட்டு,சேர்த்த பணத்தோடு நம்ம அண்ணன் எஸ்கேப்.பிறகுதான் அவரின் களவாணித்தனம் எல்லோருக்கும் தெரியவந்திருக்கிறது.சில வாரங்களுக்கு முன் மயிலாடுதுறையில் நடந்த ஒரு முகநூல் நண்பரின் திருமணத்திற்கு திரட்டப்பட்ட பணம் அண்ணனிடம்தான் இருந்திருக்கிறது.அதையும் ஆட்டையைப்போட்ட விஷயம் இப்போதுதான் தெரியவந்திருக்கிறது.பாவம் அந்த நண்பர்."அந்தமானைப் பாருங்கள் அழகு...." என டுயட் பாடவேண்டியவர், "அந்தமான் எங்கேயிருக்கு.."என புலம்பும்படி ஆகிவிட்டது.
 

தான் வேலைசெய்யும் 'ஷேர் டிரேடிங்' வியாபாரப் புத்தியை ஒரு நல்ல காரியத்திற்கு திரட்டப்பட்ட நிதியிலும் காண்பித்திருக்கிறார் அந்த 'பழஅண்ணன்'.

கடைசியாக,மற்ற நண்பர்கள் அவரை நேரில் பிடித்து ஒருவழியாக அவரிடமிருந்து பணத்தைப் பெற்று தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.பணத்தைப்பெற கடுமையான முயற்சி எடுத்து அதை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து குழுவின் பெயரைக் காப்பாற்றிய மற்ற நண்பர்களை பாராட்டியே ஆகவேண்டும்.

அவரின் பேஸ்புக் அக்கவுன்ட் பிளாக் செய்யப்பட்டுள்ளது.மீண்டும் வேறு ' பேக்ஐடி' யில் வரலாம்.உஷாராக இருங்கள் என அவரின் நண்பர்களே எச்சரிக்கை செய்யுமளவுக்கு நட்புக்கு மிகப்பெரிய துரோகம் செய்திருக்கிறது அந்த பழம்.
இப்படிக்கு....

பாதிக்கப்பட்ட நண்பரின் நண்பன்  

 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பவர்ஸ்டார் துயர் துடைப்பு குழு
 

ங்கள் செயற் சிங்கம்,தென்னாட்டு தங்கம்,சிந்தனை சிற்பி,சயனைடு குப்பி,சங்கீத பீப்பீ,கருப்பு கண்ணாடியுடன் பிறந்த கர்ணன்,தன்னிடம் இல்லையென்றாலும் மற்றவர்களிடம் ஆட்டையைப் போட்டாவது ஊருக்கெல்லாம் துயர் துடைத்த எட்டாவது வள்ளல்,தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் அண்ணன் பவர்ஸ்டார் அவர்களை சிறையிலடைத்து சீண்டிப்பார்க்கத் துடிக்கிறது ஒரு சில்லுண்டி கூட்டம்... 

சிங்கத்தை கூண்டிலடைத்தால் சிதைந்துவிடுமா அதன் வீரம்...! அதன் கரங்கள் கட்டப்பட்டால் குறைந்து விடுமா அதன் பாசம்...! ஒரு சிங்கத்தின் உள்ளே ஒளிந்திருக்கும் இன்னொரு சிங்கத்தை தட்டி எழுப்பினால் நீ ஆகிவிடுவாய் நாசம்..!!!

இப்படிக்கு..

அண்ணன் பவர்ஸ்டார் துயர் துடைப்பு குழு...    


(இனி  'கோல்ட் அக்யுஸ்ட்' நடத்தியோ,'பிளாக் கோப்ரா' வளர்த்தோ பணக்காரன் ஆகணும்கிற ஐடியாவை தூரத் தூக்கி போட்டுடனும்...  ஸ்ட்ரைட்டா  'துயர் துடைப்பு குழு'தான்..! இனி பூகம்பம்,புயல்,விபத்து எது நடந்தாலும் விடப்படாது.உடனே ஒரு 'துயர் துடைப்பு குழு' ஆரம்பிச்சி சீக்கிரம் செட்டில் ஆகிடனும்..!! )

பாஸ்...சிங்கப்பூர்ல ஒரு முருகன் கோயில் இருக்கு.அண்ணனுக்கு பிடித்த சனி விலகுறதுக்காக முருகனுக்கு அலகு குத்தி,காவடி எடுத்து தங்கவேல் சாத்துவதாக வேண்டியிருக்கேன்.உங்களால் முடிந்த உதவியை எங்கள் துயர் துடைப்பு குழுவுக்கு 'செக்'காகவோ, 'டிடி'எடுத்தோ அனுப்பவும்.வசதி குறைந்தவர்கள் ஒரு லட்சமோ,இரண்டு லட்சமோ அனுப்பினாலும் பரவாயில்லை.(பின் குறிப்பு: பத்து லட்சத்துக்கு மேல் அனுப்புவர்களுக்கு அண்ணன் நடித்த 'ஆனந்ததொல்லை' புத்தம்புது பிரின்ட் DVD இலவசமாக அனுப்பிவைக்கப்படும்.)
 
அனுப்பவேண்டிய முகவரி...
பவர் ஸ்டார் துயர் துடைப்பு குழு.
NO .6, பிரேமானந்தா தெரு.சிங்கப்பூர் குறுக்கு சந்து,
சிங்கப்பூர் மெயின் ரோடு.
சிங்கப்பூர்.
(பழைய பஸ்டாண்டு பின்புறம் )  ---------------------------------------------------------------------((((((((((((((((((()))))))))))))))))))))--------------------------------------

Monday 17 September 2012

தமிழ் சினிமாவின் 'முத்தச் சரித்திர நாயகன்'...


பொதுவாகவே தமிழ் சினிமாவில் முத்தக் காட்சி என்றதுமே ஒட்டு மொத்த குத்தகையும் ஏதோ திட்டம் போட்டு எடுத்ததுபோல் நம் கண் முன் தோன்றுவது பத்மஸ்ரீ கமல்ஹாசன் மட்டும்தான்.ஒருவேளை ஒவ்வொரு காட்சிக்கும் அவர் கொடுக்கும் அழுத்தம் முத்தத்திலும் இருப்பதால் என்னவோ..!

ஆனால்,நடிப்பின் ஒவ்வொரு அசைவிற்கும் தனி  இலக்கணம் வகுத்த ஒரு மாபெரும் கலைஞன், முத்தத்திற்கும் ஒரு தனி சரித்திரமே படைத்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா..?

உதட்டோடு உதடால் கவ்வி கொடுப்பது மட்டுமே முத்தம் என்று மேலைநாட்டு திரைப்படங்கள் நமக்கு கற்பித்ததாலையோ என்னவோ மற்ற ஸ்பரிச முத்தங்களை நாம் முத்தங்களாகவே கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை.

தமிழ் சினிமாவில் முத்தத்திற்கென்றே தனிவகை நடிப்பை அறிமுகப்படுத்தியவர் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள்.சத்தமில்லாமல் முத்தமிட்டு ஒரு முத்த சரித்திரத்தையே படைத்தவர்.காதல் காட்சிகளில் தன் உதட்டை தானே கடித்துக்கொண்டு காதலியின் இரு தோள்பட்டைகளையும் கைகளால் இறுக்கி மாவு பிசைவது எம்ஜியார் ஸ்டைல்.காதலியின் கன்னம்,உச்சந்தலை,கழுத்து,காது,கை, கால்,முதுகு உள்ளிட்ட உடலின் மற்ற பகுதிகளில் சத்தமில்லாமல் ஸ்பரிச முத்தங்களை பதிப்பது சிவாஜியின் ஸ்டைல்.அவரின் காதல் பாடல்களை கூர்ந்து ரசிக்கும் அவரது தீவிர ரசிகர்களுக்கு இது புரியும்.

சிவாஜியுடன் ஜோடிசேர்ந்த பானுமதி,பத்மினி,சாவித்திரி,சரோஜாதேவி, வாணிஸ்ரீ,ஸ்ரீப்ரியாவிலிருந்து அவரின் கடைசிகால ஜோடிகளான அம்பிகா,ராதா வரை அனைத்து நடிகைகளும் அவரின் ஸ்பரிச முத்தத்திலிருந்து தப்பவில்லை.


சிவாஜி நடித்த காதல்காவியமான 'வசந்த மாளிகை' படத்தில் 'மயக்கம் என்ன..'  என்ற பாடல் காட்சியின்போது நடிகை வாணிஸ்ரீ-யின்  கழுத்தில் அழுந்தப்பதிந்த அந்த 'முத்த போஸ்' 1970 -களில் மிகப் பரபரப்பாகப் பேசப்பட்டது.கன்னம்,உதடு மட்டுமல்ல கழுத்துகூட முத்தமிடுவதற்கு ஒரு 'கிக்'கான இடமென்று நடிகர் திலகத்தால் அன்று கண்டுபிடிக்கப்பட்டு(?!) தமிழர்களுக்கு உணர்த்தப்பட்டது.


திரையில் அவ்வப்போது அமையும் சந்தர்ப்பங்களை நழுவவிடாமல் கிடைத்த கேப்பில் கிடாவெட்டி முத்த நடிப்பில் புதிய பாணியை உருவாக்கிய நடிகர்திலகத்திற்கு ஒரு சவாலான போட்டியை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.ஒரு படப்பிடிப்புத் தளத்தில்,தயாரிப்பாளரும் நடிகருமான பாலாஜி,"படத்தில் நடிக்கும்போது சத்தமில்லாமல் முத்தமிட்டு அசத்துகிறாயே...நேரில் ஒரு நடிகைக்கு முத்தமிடு பார்க்கலாம்" என சவால் விட்டாராம்."சரி..அப்படிக் கொடுத்து விட்டால்...." என சிவாஜி கேட்டாராம். "ஆயிரம் ரூபாய் பந்தயம்.." என்றார் பாலாஜி.கரும்பு தின்னக் கூலியா என நினைத்துக்கொண்டு அப்போது அந்தப் படப்பிடிப்பிலிருந்த வாணிஸ்ரீயை அழைத்து,மெதுவாகப் பேச்சுக் கொடுத்து,'என்ன இது..உன் முகத்தில் ஏதோ இருக்கே..' என சொல்லிக்கொண்டே வாணிஸ்ரீ-க்கு முத்தம் கொடுத்துவிட்டார் நடிகர்திலகம்.

முத்தப் போட்டியில் ஜெயித்த சந்தோசத்தோடு ஆயிரம் ரூபாய் பரிசையும் தட்டிச்சென்றுவிட்டார்.(பாருங்க...எவ்வளவு சவாலான போட்டி...!?..நடிகர் திலகம் நடிகர் திலகம்தான்....!!! )

அதுசரி...எதிர்பாராத இந்த முத்தத்திற்கு வாணிஸ்ரீ-யின் ரியாக்சன் என்னவாக இருந்திருக்கும்?.... ஹி..ஹி...அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா....!

 
நம்ம சி.எம் தான்...

ஒரு கொசுறு தகவல்...

இந்திய சினிமாவில் முத்தக்காட்சி எந்தப்படத்தில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதைப்பற்றி தெளிவான தகவல் இல்லாவிட்டாலும்,1933 -லேயே 'கர்மா' படத்தில் 'லிப் டு லிப்' முத்தக் காட்சி வெளிவந்து சூட்டைக்கிளப்ப,பல பேருக்கு ஜன்னி,காய்ச்சல் வருமளவுக்கு சென்றுவிட்டதாம்.

 
(கர்மா படத்தில் ஹிமன்ராய்,தேவிகா ராணி...கண்டிப்பாக 18 +..)

-------------------------------------------------------(((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))-------------------------------------------


Saturday 15 September 2012

சரிந்து போன இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூண்..


  ஜூன் 4 -1994 ஆம் ஆண்டு.திருவாரூர் எத்திராஜ் திருமண மண்டபம்.எங்கள் இல்லத்திருமணவிழா.என் மூத்த சகோதரர் அவர்களின் திருமணவிழாவை தலைமையேற்று நடத்த வந்திருந்தார் அந்த எளிமையான மாமனிதர்.அது வரையில் அவரைப்பற்றியும் அவரின் அரசியல் பின்புலம் பற்றியும் அறிந்ததில்லை. ஏனென்றால் அவர் எம்.எல் ஏ.,எம்.பி.,அமைச்சர் என்ற எந்த சொகுசான பதவியிலும் இருந்ததில்லை.அதற்கு அவர் ஆசைப்பட்டதுமில்லை.

1942 ஆம் வருடம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதையடுத்து மகாத்மா காந்தி,ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் நாடு முழுவதும் கைது செய்யப்பட,இந்தியா முழுவதிலும் கிளர்ச்சியும் போராட்டங்களும் வெடித்தது.தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூரிலுள்ள அந்த பள்ளியிலும் முழக்கங்கள் எழுப்பி ஊர்வலமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதை முன்னின்று தலைமையேற்று நடத்தியதற்காக கோவிந்தராஜன் என்ற மாணவனை போலீஸ் கைது செய்தது.அப்போது அந்த மாணவனுக்கு வயது 12.அந்த சிறுவன்தான் பின்னாளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் 70 வருட வாழ்க்கையை அர்பணித்த மூத்த கம்யூனிஸ்ட் தோழரான ஏ.எம். கோபு.

திருவாரூர்,நாகை மாவட்டங்கள் உள்ளிட்ட அப்போதைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பகுதிகளில் பண்ணையார்களும்,நிலச்சுவான்தார்களும் கோலேச்சியிருந்த காலகட்டம்.பண்ணையடிமைமுறை வழக்கிலிருந்த நேரம்.அவர்களை எதிர்ப்பது என்பது மரணத்திற்கு மனு போட்டுவிட்டு செய்கின்ற வேலை.சில பகுதிகளில்  விவசாயப் பண்ணையார்களின் அடிமைகளாக இருக்கும்  தாழ்த்தப்பட்ட, ஏழை விவசாயிகளின் வீடுகளில் திருமணம் நடந்தால் மணமகளுக்கு முதல் இரவு பண்ணையாருடன்தான். 

ப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றுதிரட்டி போராடி தாழ்த்தப்பட்டவர்களின் அடிமைச்சங்கிலியை சுக்கு நூறாக உடைத்தெறிந்து அவர்கள் இன்று சுயமரியாதையோடு வாழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள்,அன்று உயிரை பணயம் வைத்து போராடிய  கம்யூனிஸ்டுகள்தான் என்பதை அந்தப்பகுதி மக்கள் நன்கு அறிவார்கள்.அதை முன்னின்று நடத்திய தலைவர்களில் தோழர் ஏ.எம்.கோபுவும் ஒருவர்.

பண்ணையாருக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள்,போராட்டங்கள்,ஒரு சில கொலைக்குற்றங்கள் என்று போலிஸ் கட்டம் கட்டி தேட ஆரம்பிக்க தலைமறைவு வாழ்க்கை நடத்தினார் தோழர் ஏ.எம்.கோபு. இந்நிலையில் போலீசாருக்கு துப்பு கிடைத்து,திருவாரூரில் ஒரு வீட்டுத் திண்ணையில் இரவில் படுத்திருந்த கோபுவை சுற்றி வளைத்து அந்த இடத்திலே 'என்கவுண்டர்' நடத்தியது போலீஸ்.கோபுவின் இறப்பை உடனடியாக அறிவிக்கக் கூடாது என்று காலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதுதான் அவர் உடலில் உயிர் இழையோடிக் கொண்டிருப்பது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து சிகிச்சை,கைது,வழக்கு,விசாரணை,சிறை.திருச்சி மத்திய சிறையிலும் சேலம் மத்திய சிறையிலும் 4 ஆண்டுகள்.சிறைத் தண்டனை முடிந்து 1954-ல் வெளியே வந்தபோது கோபுவின் வயது 24..!!!. அவரின் வலது கையில் பாய்ந்த துப்பாக்கி ரவைகள் இன்னமும் அகற்றப்படாமல்தான் இருக்கின்றன.

1968-ல் திருவாருக்கு அருகிலுள்ள கீழ வெண்மணியில் மேல்சாதி பண்ணையார்களால் சம்பள உயர்வு கேட்ட கூலித்தொழிலாளிகளின் குடும்பங்கள் உயிருடன் வைத்து எரித்து கொல்லப்பட்டபோது, கொளுத்தப் பட்டவர்களின் எண்ணிக்கை,43 அல்ல,44 என்பதை உறுதி செய்யக் காரணமாக இருந்தவர் கோபுதான்.கருகிப் போய்க் கிடந்த ஒரு பெண்,ஒரு சிறுவனையும் அணைத்துக் கொண்டு இறந்துபோயிருந்ததைப் பார்த்துச் சொன்னவர் இவர்தான்.

தனது இறுதி மூச்சுவரை ஒரு கண்ணியமிக்க தன்மானமுள்ள கம்யூனிஸ்டாகவே வாழ்ந்திருக்கிறார் தோழர் ஏ.எம்.கோபு அவர்கள்.

எந்த சொகுசான அரசியல் பதவியையும் விரும்பாதவர்.கடைசி காலம் வரை  ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத் தலைவராக இருந்து தொழிலாளர் வர்க்கத்துக்காக போராடியவர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினராகவும் இருந்தார்.அடக்குமுறைக்கு அஞ்சாமல் ஆளுங்கட்சியினருக்கு அடிவருடாமல் தன் கொள்கை சித்தாத்தங்களில் கொஞ்சம் கூட  அடி பிறழாமல் வாழ்ந்த பொதுவுடமைக் கட்சியின் ஒப்பற்ற தலைவர்களில் தோழர் ஏ.எம்.கோபுவும் ஒருவர்.


தற்போது அரசியல் கோமாளிகளின் கூடாரமாகவும்,ரவுடிகளின் சத்திரமாகவும் மாறிவிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தன்மானமிக்க ஆரம்பகால தூண்களில் ஒருவரான தோழர் ஏ.எம்.கோபுவின் மறைவு அந்தக்கட்சியின் தற்போதைய ஆளுங்கட்சி ஜால்ராக்களுக்கு பெரிய இழப்பு இல்லையென்றாலும்,அவரின் போராட்ட களமான தஞ்சை டெல்டா பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு ஒரு தாங்க முடியாத பேரிழப்பு..  துயரங்களுடன்....
மணிமாறன்.

-----------------------------------------------------------(((((((((((((((()))))))))))))))))))))---------------------------------------

Wednesday 12 September 2012

ஹைடெக் நரகம்..... ( சிறுகதை )


காலை 9.30 மணி.

வழக்கம் போலவே
கொஞ்சம் கொஞ்சமாக அந்த பள்ளி பரபரப்பாகிக்கொண்டிருந்தது.

பள்ளியைச் சுற்றி வானுயரக் கட்டிடங்களும் ஷாப்பிங் மால்களும் கம்பீரமாக காட்சியளித்தது.மெட்ரோ ரயில்களில் வழக்கமான காலைநேர பரபரப்பு.

புகை கக்கும் பெட்ரோலிய வாகனங்கள் பயன்பாட்டிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டு எலெக்ட்ரிக் பைக்,எலெக்ட்ரிக் கார்,எலெக்ட்ரிக் பஸ் என சப்தமில்லா வாகனங்களின் 'ஹார்ன்' சப்தம் காதைக்கிழித்தது.

சூரியன் தன் வருகையை உறுதிப்படுத்தி மூன்று மணி நேரத்திற்கு மேலாகியும் தெரு விளக்குகள்  சூரியனைவிட பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தது. தேனீர்கடை விளம்பரப்பலகைக் கூட வண்ண நியான் விளக்குகளால் ஜொலித்தது.

வீடுகளில் மட்டுமில்லாமல் ஹோட்டல்களில் கூட மின்சார அடுப்பில்தான் சமையல்.வீட்டிற்கு வரும் குடிதண்ணீர் குழாய்களில் குளிர் நீர்,வெந்நீர் என இ
டண்டாகப் பிரிக்கப்பட்டு 24 மணி நேர சேவை இருந்தது.ஏசி,லிப்ட், எஸ்கலேட்டர் பொருத்தப்படாத வீடுகளே அங்கில்லை.

புத்தகக்கடையின் வெளியே அன்றைய எலெக்ட்ரானிக் தினத்தந்தியில்,"வீடுகளைத் தொடர்ந்து அடுத்து ஹோட்டல்கள், தொழிற்சாலைகளுக்கும் இலவச மின்சாரம் வழக்குவதைப்பற்றி அமைச்சர்களுடன் முதல்வர் தீவிர ஆலோசனை" என்ற தலைப்பு செய்திகளுடன் தொங்கிக் கொண்டிருந்தது.

மாணவர்களும் ஆசிரியர்களும் இரண்டு/மூன்று/நான்கு சக்கர மின்சார வாகனங்களில் வரிசைகட்டி நின்றனர்.வாகனங்களில் இருந்தவாறே பள்ளியின் நுழைவாயிலில் உள்ள ஸ்கேனர் மெசினில் தங்கள் ஐடென்டிடி கார்டை தட்ட,தானியக்கி கதவு திறந்து ஒவ்வொருவரையும் உள்ளே செல்ல அனுமதித்தது.

இறைவணக்கம் முடிந்து மாணவ மாணவிகள் தத்தமது வகுப்புக்குச் செல்லத்தொடங்கினர்.பள்ளி தலைமையாசிரியர் மடிக்கணினியை எடுத்துக்கொண்டு பத்தாம் வகுப்பை நோக்கி நடந்தார்.

"இன்னும் இரண்டு மாதங்களில் உங்களுக்கு பொதுத்தேர்வு வருகிறது.மாற்றுச் சான்றிதழில் உங்களின் அங்க அடையாளங்களை குறிப்பிட வேண்டியிருக்கிறது.அதனால் வரிசையில் வந்து காண்பித்துவிட்டுச் செல்லவும்" தலைமை ஆசிரியரி
ன் கட்டளையைத்தொடர்ந்து அகர வரிசைப்படி ஒவ்வொருவராய் எழுந்து வந்தனர்.

"உன் பேரு என்னடா?.. "

"ச.அழகேசன் சார்..."

"உன்கிட்ட என்ன அடையாளம் இருக்கு?"

" இடது கையில மூணு விரல் ஒட்டியே இருக்கும் சார்..."

" ம்ம்ம்...அடுத்தது..."

" க.அன்புக்கரசன் சார்.... இடது பக்க காதுமடலே இல்லசார்..ஓட்டை மட்டும்தான் இருக்கு
ம்..."
 
" ப.புகழேந்தி சார்... வலது கால் கொஞ்சம் கட்டையா இருக்கும் சார்.."

" ச.தம்பித்துரை சார்...எனக்கு ஒரு பக்க இமையும் புருவமும் ஒட்டியே இருக்கும் சார்......பின்னாடி நிக்கிறவன் பேரு பாலமுருகன் சார்.அவனுக்கு பேச வராது சார்.. ஊமை.. "

"அதெல்லாம் எழுத முடியாது வேற ஏதாவது இருக்கா" கண்டிப்புடன் கேட்டார் தலைமையாசிரியர்.

" அவனுக்கு அடிக்கடி நெஞ்சுவலி வரும்னு அவுங்க அம்மா சொல்வாங்க சார் ..ம்ம்ம்ம்ம்ம்...சார்....அவனுக்கு இடது காலில எட்டு விரல் இருக்கும் சார்.."

"என் பெயர் விஜயலட்சுமி சார்...எனக்கு ராத்திரி ஆனா சரியா கண்ணு தெரியாது சார்."

"வேற ஏதாவது இருக்காமா?.." கொஞ்சம் பரிதாபத்துடன் கேட்டார்.

தன் பாவாடையை சிறிது தூக்கி," சார் இதை யானைக்கால்னு எங்கம்மா சொல்வாங்க சார்.."

எல்லோருடைய அடையாளங்களையும் குறித்துக்கொண்ட தலைமையாசிரியர்,தன் பார்வை -25 க்குமேல் போனதால் தயாரிக்கப்பட்ட அவரின் பிரத்தியோக மூக்குக் கண்ணாடியை கழட்டி மேசைமீது வைத்தார். அனைத்து தகவல்களையும் 'பிரின்ட்' எடுத்து அடியில் கையெழுத்திட்டு அதன் கீழே 12-03-2032 என தேதிக் குறிப்பிட்டார்.அதன் வலது புறத்தில் ரப்பர் ஸ்டாம்பிலுள்ள பள்ளியின் பெயரையும் பதிந்தார்.அதில் "அரசு உயர்நிலைப் பள்ளி.இடிந்தகரை " என்றிருந்தது. வணக்கங்களுடன் ..
மணிமாறன்.

-------------------------------------------------------------(((((((((((((((((())))))))))))))))))))))))))))----------------------------------

Tuesday 11 September 2012

ஜெயாவின் உலக மகா அந்தர் பல்டியும்...ஒரு சிங்கள கார்ட்டூன் பிளடியும்
  கொடைநாடு சுகவாசம் குலநாசம்!!!  என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார் நம் மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி.சென்னையில் முக்கிய அடையாளங்களில் ஒன்றான அண்ணா பவள விழா வளைவு இடிக்கப்படுவது பற்றி எதுவும் தெரியாதாம்.முதல்வர் இன்று வெளியிட்ட அறிக்கையில்தான் இப்படி திருவாய் மலர்ந்திருக்கிறார்.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் ஜெயாவின் சூட்சம அறிக்கையின் சாரம்சம் இதுதான்.

"ஆட்சி மாற்றத்திற்குப் பின்,முந்தைய அரசால் விட்டுச் செல்லப்பட்ட பணிகள் வழக்கமாக மேற்கொள்ளப்படுவது போல்,இந்த மேம்பாலப் பணியும் மேற்கொள்ளப்பட்டது.இந்த மேம்பாலப் பணி மற்றும் வளைவு அகற்றப்படுவது குறித்து என்னை யாரும் கலந்தாலோசிக்கவும் இல்லை. நான் அகற்ற உத்தரவிடவும் இல்லை.அரசின் அனைத்து முடிவுகளும்,முதல்வர் ஒப்புதல் பெற்று வெளியிடப்படுவ தில்லை என்பது ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரியாதா?.."

  மக்கள் விரும்புகிற திட்டமாக இருந்தபோதிலும் கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக  அவர் பெயர் நிலைக்கும்படி இருந்துவிடக்கூடாது என்ற குறுகிய நோக்கத்தில் கண்மூடித்தனமாக மூடுவிழா நடத்தி அகமகிழ்ந்த ஜெயா,முந்தைய அரசு விட்டுச்சென்ற பணிகளை நாங்கள் தொடர்கிறோம் என அறிக்கை வாசித்திருக்கிறார்.சமச்சீர் கல்விகூட முந்தைய ஆட்சியர் விட்டுச்சென்றது தான்.அதில் உங்கள் நிலைப்பாட்டைக் கண்டுதான் தமிழகமே கரிந்து கொட்டியதே!.தற்போது மேம்பால இடிப்பு சம்பவத்தில் உங்கள் ஆட்சிக்கு களங்கம் வந்துவிடுமோ என்றஞ்சிதானே தற்போது பழியை கருணாநிதி மேல் சுமத்துகிறீர்கள்...

     மேம்பாலப் பணி மற்றும் வளைவு அகற்றப்படுவது குறித்து முதல்வரை  யாரும் கலந்தாலோசிக்க வில்லையாம்.பின்ன...மின்சார கம்பம் அகற்றுவது, சாலையோர கடைகளை அப்புறப்படுத்துவது, குளம், குட்டை, சாக்கடை கால்வாய் தூர்வாருவது இதுபோலத்தானே அண்ணா வளைவையும் இடிப்பது. இதைப்போய் முதல்வரிடம் சென்று கலந்தாலோசிக்கலாமா? அது அவருக்கு எவ்வளவுப் பெரிய பணிச்சுமை. அதுவும் இல்லாமல் இந்த வளைவு தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள ஒரு குக்கிராமத்தில் மக்கள் நடமாட்டமேயில்லாத பகுதியில் இருக்கிறதல்லவா...இதையெல்லாம் போய் முதல்வரின் கவனத்திற்குக் கொண்டுசெல்வது எவ்வளவு பெரிய அறிவீனம்....!  

   பத்திரிகைகளில் சில வாரங்களுக்கு முன்பே அண்ணா வளைவு இடிப்பு பற்றி செய்திவெளியாகியிருந்தது. முகநூலில் கூட நிலைத்தகவலாகப் பதியப்பட்டு பலபேர் வருத்தமும் ஆட்சோபமும் தெரிவித்திருந்தனர். அப்போதெல்லாம் நம் முதல்வருக்கு இந்த செய்தி காதில் எட்டவில்லையா...? முதல்வரின் துதிபாடும் அந்த தினப் பத்திரிக்கைக் கூட முன்பே இதைப்பற்றி 'நமது சிறப்பு நிருபர்' மூலம் கட்டுரை வெளியிட்டதே.அதைக் கூட முதல்வரின் பார்வைக்கு எடுத்து செல்ல பொறுப்பான அதிகாரிகள் தோட்டத்தில் இல்லையா? 

  அது சரி ...கொடநாட்டு குளிர்காற்றில் இதமான கிளைமேட்டில் சுகவாச ஓய்வில் அவ்வப்போது ஆங்கிலப் பத்திரிக்கையை மட்டும் படித்துப் பொழுதைப் போக்கிக்கொண்டிருப்பவருக்கு அடித்தட்டு மக்களில் தலையாயப் பிரச்சனை எங்கே தெரியப்போகிறது.?

   திமுகவின் நீண்டகால கோட்டையை முற்றிலுமாகக் கைப்பற்றிய ஜெயா மீண்டும் அவர்களுக்கே கொஞ்ச கொஞ்சமாக தாரைவார்த்து
க் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தற்போது தெளிவாகப் புலப்படும் உண்மை...


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


ஹசந்த விஜேநாயகே.....  'பிளடி பாஸ்..........' 

     உண்மையான மனசாட்சியுள்ள எந்த சிங்களவனும் உன் தரங்கெட்ட செயலை மன்னிக்ககூட மாட்டான்டா எச்சக்கல நாயே... பேனாவும் காகிதமும் இருந்துவிட்டால் எதைவேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கிறுக்கித் தள்ளுவதுதான் கார்ட்டூன் என்று உனக்கு கற்பித்த அந்த கேடுகெட்ட ஆசான் யாரடா?  உன் பேனாவில் ஊற்றப்பட்ட வக்கிர மையும் பிஞ்சிலே பழுத்த காம எண்ணங்களும் உன் கேடுகெட்ட பிறப்பைத்தான் சந்தேகப்பட வைக்கிறது... 

ஒவ்வொரு ஊரிலும் ஒரு " டவுசர் உருவி "..... கார்ட்டூன்களின் கஷ்டகாலம்..!  


---------------------------------------------------------(((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))------------------------

Friday 7 September 2012

கையில் ஒரு தட்டு..உனக்கு குழியை நீயே வெட்டு....அஞ்சே மாசத்துல அம்பானியாவுறது எப்படி?

"வெளிநாட்டில் வேலை செஞ்சி கிழிச்சதெல்லாம் போதும்.சம்பாதிக்கிறதுக்கு இங்க ஆயிரம் வழிகள் இருக்கு.நமக்கே அடிமையா நிறைய பேர் இங்க இருக்கும்போது மத்தவிங்களுக்கு அடிமையா நாம ஏன் வேலை செய்யணும்.உடனே அடுத்த பிளைட்ட புடிச்சி சுருக்கால ஊரு வந்து சேருடா"-னு போன் போட்டு உசுப்பேத்தி விட்டுட்டான் என் நண்பன்.நான் வேற 'அஞ்சே மாசத்துல அம்பானியாவுறது எப்படி?'-னு தீவிரமா யோசிச்சிகிட்டு இருந்த நேரம்.தாமதிக்காமல் ஊர் வந்து சேர்ந்துட்டேன்.

         பத்து பைசாகூட முதலீடு செய்யாம பணக்காரன் ஆவது எப்படி...? இதுதான் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து செய்யப்போற திட்டத்தின் தாரகமந்திரம்.எங்க திட்டத்தில நீங்களும் சேர்ந்தா உங்களையும் தெருக்கோடியில.......... வெயிட்..வெயிட்..தெருக்கோடியில இருக்கிற பிள்ளையார் மேல சத்தியமா லட்சாதிபதியா ஆக்கிடுவோம்னு சொல்ல வந்தேன்.

   எங்ககிட்ட மூன்று கவர்ச்சிகரமான திட்டங்கள் உள்ளது.உங்க வசதிக்கேற்ப எதுல வேணும்னாலும் நீங்க சேரலாம்.ஆனா என்ன...... கொஞ்சம் டெபாசிட் கட்டணும் அவ்வளவுதான்.கையில பணமில்லையா? கவலையை விடுங்க. சொத்தோ,பத்தோ,நகையோ,நட்டோ எது இருந்தாலும் பரவாயில்ல.அதை விற்று பணமாக மாற்றுவதற்கு எங்களிடமே முகவர்கள் இருக்கிறார்கள்.

        என்னது கல்வி தகுதியா?... கல்வியே இல்லாதுதான் மிகப்பெரிய தகுதியே....!!! அஞ்சாம் கிளாஸ் வரை படித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

 1.'கோல்ட் அக்யூஸ்ட்' தங்கத்தட்டு திட்டம்....


 கடைசி காலத்தில பெத்தப்புள்ளைங்க கஞ்சி ஊத்தாம கையேந்த விட்டுவிடுவாங்கனு கவலைப்படுரீங்களா? இனி கவலையே வேண்டாம். அதுக்குத் தானே நாங்க இருக்கிறோம்.உங்கள் கடைசிக்கட்டக் கண்ணீரைத் துடைக்க அவதாரம் எடுத்த அட்சயப்பாத்திரம் தான் இந்த தங்கத்தட்டு திட்டம். இதோட விதிமுறைகள் என்னான்னு மொதல்ல தெரிஞ்சுகிங்க...

  இந்தத்திட்டத்தில சேர விரும்புகிறவங்க முதல்ல ஒரு சிறிய தொகையை டெபாசிட்டா கட்டணும். அதிகமில்லை வெறும் முப்பதாயிரம் ரூபாய் தான். டெபாசிட் கட்டின உடனே உங்கள் மன தைரியத்தைப் பாராட்டி உங்களை ஊக்குவிக்கும் விதமா எங்க கம்பெனி ஒரு அதிசயப்பரிசு தரும்.அதை ஒரு கையாள பிடிக்க முடியாதுங்க.இரண்டு கையையும் விரிச்சு வச்சுதான் பிடிக்கணும்.உலகத்தில எல்லா ஜீவன்களும் இதுக்கு முன்னால தலை குனிஞ்சுதான் ஆகணும்.மண்ணுல விளையிறது எல்லாமே மனுஷன் வாயிக்கு போறதுக்கு முன்னால இங்க வந்துட்டுதான் போகணும்.இவ்வளவு ஏன்.இதுல சோறும் போடலாம்.சோத்துக்கு தாளமும் போடலாம்.இப்பத்தெரியுதா அந்த அதிசயப்பொருள்..அதுதான் 'அலுமினியத்தட்டு....'

  எங்க திட்டத்தில சேர்ந்த உடனையே நீங்க ஒரு 'டீம் லீடர்'.அதாவது நோகாம நொங்கு திங்கிறவர்னு அர்த்தம்.இனிமேல்தான் உங்களுக்கு நிறைய பொறுப்பு இருக்கு.இந்த அலுமினியத்தட்டை கையில எடுத்துட்டு தெருத்தெருவா போயி...(யாருப்பா அங்க பிச்சை எடுக்கணுமானு கேட்கிறது..? அதுக்குள்ளே அவசரப்பட்டா எப்படி...?)உங்க பங்காளிங்க,பகையாளிங்க,நீங்க பழி வாங்கனும்னு நெனைக்கிறவங்க,ஓசி சோறு திங்கிறதுக்காகவே உங்க வீடு தேடி வர்றவங்க இப்படி தேடிப்புடிச்சி இந்தத்திட்டத்தில சேர்க்கணும்.

      மொதல்ல உங்க டீம்ல ரெண்டு பேர புடிச்சி போடணும்.அந்த ரெண்டு பேரும் தனித்தனியா ரெண்டு பேரை புடிச்சி போட சொல்லணும்.இப்ப உங்களுக்கு கீழ ஆறு பேராச்சா..!கடைசியா சேர்ந்த நாலு பேரும் தனித்தனியா ரெண்டு பேரை சேர்க்கணும்...இப்படி சேர்த்துகிட்டே போகணும்.ஆனால் பணத்தை கம்பெனில கட்டிடணும்.யாரும் கவலைப்பட வேண்டாம் எல்லாருக்கும் அலுமினியத்தட்டு நிச்சயம் உண்டு.


  அப்பறம் ஒவ்வொரு வாரமும் உங்க தெருக்கோடியில இருக்கிற மூத்திர சந்து முக்குல மீட்டிங் போடுவோம். அங்க நம்ம கம்பெனியோட சிறப்பு பேச்சாளர் 'சீட்டிங்கானந்தா' சிறப்புரையாற்றுவார்.எவன் காலிலாவது விழுந்து கூட்டத்தை சேர்க்கவேண்டியது உங்க பொறுப்பு.அப்படியே வந்தவங்க எல்லோரையும் வளைச்சிப் போட்டு இந்தத்திட்டத்தில சேர்த்து விட்டீங்கனா உங்களுக்கு  'எக்சிகியுடிவ் லீடாரா' பதவி உயர்வு கொடுத்து உங்க கையில உள்ள அலுமினியத்தட்டுக்குப் பதிலாக 'பளபளக்கும் எவர் சில்வர் தட்டு' கொடுப்போம். (சரி...சரி....கைதட்டுனது போதும் நிறுத்துங்க..)

   இப்படியே உங்க டீம்ல ஆயிரம் பேர சேர்த்து விட்டீங்கனா...உங்கள் வீட்டைத்தேடி ஒரு 'செக்' வரும்.அந்த அமவுண்ட பார்த்தீங்க,சந்தோசத்துல அப்படியே ஆடிப்போயிடுவீங்க.வாழ்க்கையில இப்படியொரு பணத்தை பார்த்திருக்க மாட்டீங்க.இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்திற்கு சம்பளம்தான் அந்த 111ரூபாய்.

இன்னொரு முக்கியமான கண்டிசன்...உங்க டீம்ல ஆள் சேர்க்கிறது நின்னுடிச்சினா உங்களுக்கு வர்ற 'செக்'கும் நின்னுடும்.அதனால தீயா வேலை செய்யணும். "செக் எப்ப வரும்","திட்டத்திலிருந்து விலகிக்கிறேன்", "டெபாசிட்ட திருப்பிக்கொடு","தங்கத்தட்டு எப்பவரும்" இப்படி யாராவது கேள்வி கேட்டா எல்லாத்துக்கும் ஒரே பதிலைத்தான் சொல்லணும். 'போயி ஆள் சேரு..அப்பறம் வரும்'.எங்கே திருப்பி சொல்லுங்க... 
 
"போயி ஆள் சேரு..அப்பறம் வரும்"... "போயி ஆள் சேரு..அப்பறம் .."  "போயி ஆள் சேரு...."  "போயி ஆள் ....." "போயி ..."   "போ......"

(ஆள் சேர்க்காம போனா கம்பெனிக்கு டெபாசிட் லாபம்.டெபாசிட் கட்டினதால ஆள் சேர்த்தே ஆகணும். கொய்யால சாவட்டும்.இதுதான் கம்பெனியின் சீக்ரெட் பாலிசி..)

ஓகே .. எல்லோரும் ரெடியா..?
கையில் ஒரு தட்டு....உனக்கு குழியை நீயே வெட்டு....

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

2. பிளாக் கோப்ரா வளர்ப்புத் திட்டம்..


பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காட்டிலிருந்து பிடிக்கப்பட்ட அஞ்சு ஜோடி உயர் ரக கருநாக குஞ்சுகளை உங்களுக்கு கொடுப்போம்.அது வீரியம் உள்ள குஞ்சானு சந்தேகப்படுறவுங்க உங்க கையில கடிக்க விட்டு சோதனை செய்துகொள்ளலாம்.
 
   அஞ்சு ஜோடி குஞ்சுகள் வாங்குபவருக்கு  பத்து பச்சைமூங்கில் இலவசம். பத்து ஜோடி வாங்கினா தென்னை ஓலை,சீவின இளநீ இலவசம்.இருபது ஜோடி வாங்கினா,பத்தி,சாம்பிராணி,ரோஜாப்பூ மாலை இலவசமா கொடுப்போம். அதுக்கு மேல வாங்கினா நாலு பேர உங்ககூடயே அனுப்பி வைப்போம்..   

 இந்தத்திட்டத்தில சேர விரும்புகிறவங்க ரூபாய் ஒரு லட்சம் முதலீடா போடணும்.உங்க முதலீட்டுக்கு ஏற்றமாதிரி உங்க வீட்டு தோட்டத்திலேயோ அல்லது வீட்டுக்குள்ளேயோ  சிறிய / பெரிய புற்றுகளை நாங்களே ஏற்படுத்திக் கொடுப்போம்.இதற்காக 'ஸ்பெசல் மண்' ஆப்பிரிக்கவிலிருந்து கப்பல் மூலமாக எடுத்து வரப்பட்டுள்ளது.

உங்க வீட்டுக்குள்ளேயே சந்து,பொந்து,இண்டு,இடுக்கு,வெடிப்பு,ஓட்டை இதெல்லாம் இருந்தால் புற்று கட்டுவதற்கான செலவை கொஞ்சம் மிச்சப் படுத்தலாம்.வீட்டிற்குள் ஆங்காங்கே பழைய ஈயப் பித்தளை சாமான்கள், பிஞ்சுபோன துணிமணிகள்,நஞ்சுப்போன கோணிப்பைகள்,உடைந்து போன மரச்சாமான்கள் இதையெல்லாம் போட்டு வச்சீங்கனா இவைகள் ஓடிப்பிடித்து, ஒளிஞ்சான்கண்டு விளையாடுவதற்கு வசதியாக இருக்கும். 


 கருநாகப்பாம்புக்கு தேவையான தீவனம்,எலி,தவளை,முட்டை ஆகியவற்றை எங்களிடமோ நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.ஐந்து மாதத்திற்குப் பிறகு நன்கு வளர்ந்த பாம்புகள் இனப்பெருக்கத்திற்கு தயாராகும். அந்த நேரத்தில் நீங்கள் வீட்டைபூட்டி விட்டு ஒரு வாரம் எங்கேயாவது தங்கிவிட்டு வரவும்.சுமார் எட்டு மாதத்திற்குப் பிறகு முட்டையிட ஆரம்பிக்கும்.அந்த முட்டையை நாங்களே வாங்கிக் கொள்வோம்.இதில் 'விட்டமின் Z ',ஒமேகா 6+9- போன்ற சத்துக்கள் உள்ளதால் மேலை நாடுகளில் இதன் ஆம்ப்லேட்டுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.
 
இதன் கழிவுகளில்  மருத்துவகுணம் உள்ளதால் அமெரிக்காவில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.அதனால் கழிவுகளை பத்திரமாக பாலிதீன் பைகளில் சேகரித்து வைக்கவும்.இதன் இறைச்சி கிலோ ஆயிரம் ரூபாய்க்கு மேலே போகும். சீனாவில் ஒரு பிளேட் 'கருநாகப்பாம்பு பிரியாணி' இரண்டாயிரம் ரூபாய் வரை விற்கப்படுவதாக செய்தி கிடைத்திருக்கிறது.ஐந்து ஜோடி கருநாகப்பாம்பிலிருந்து 1லிட்டர் விஷமும்,அதன் இறைச்சியிலுள்ள கொழுப்பிலிருந்து  3 லிட்டர் எண்ணையும் எடுக்கப்படுகிறது.இதன் மதிப்பு கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம்.

ஆக...இந்த கரு நாகப்பாம்பு வளர்ப்பால் ஒரே வருடத்தில் நீங்களும் உங்க குடும்பமும் மேலே(?!) போயிடுவீங்க.. அதாவது பெரிய பணக்காரனாயிடுவீங்கனு சொல்ல வந்தேன்....


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 அரளிவிதை கொள்முதல் திட்டம்.


   

ங்களுடைய இந்த இரண்டு திட்டங்களிலும் சேர்ந்து ஓரிரு மாதங்களில் நடுத்தெருவுக்கு வரும் சூழல் ஏற்பட்டால் எங்கள் கம்பெனி உங்களை கைவிட்டுவிடாது.உங்கள் பிரச்சனைகளை ஒரேயடியாக(!) தீர்க்க எங்கள் கைவசம் மற்றொரு திட்டமும் உள்ளது.அதுதான் அரளிவிதை கொள்முதல் திட்டம்.

    இதற்கு தேவையான கன்றுகளை எங்களிடமே பெற்றுக்கொள்ளலாம். உங்கள் வீட்டைச்சுற்றி இந்த கன்றுகளை நட்டு அதற்கு தேவையான உரம்,தண்ணி விட்டுவந்தால் ஒரே வருடத்தில் பெரிய மரமாக வளர்ந்து காய்க்கத் தொடங்கும் .


    உங்கள் வீட்டு கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு,வாந்தி வந்தால் இதன் தழைகளை பறித்து உண்ண செய்யலாம்.பிறகு எல்லாமே மொத்தமாக(!) நின்றுவிடும்.

   கடன் பிரச்சனை,உடல் ரீதியான பிரச்சனை,குடும்பப் பிரச்சனை எதுவாக இருந்தாலும் உங்களுக்கு உடனடித்தீர்வு இதன் மூலம் கிடைக்கும்.அரை கிலோ அரளி விதையை எடுத்து அதனுடன் மிளகாய், சோம்பு,சீரகம்,ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு மற்றும் சிறுது தண்ணீர் சேர்த்து பதமாக மிக்சியில் அடித்து ஏழு மண்டலமாக பிரித்து சாப்பிட்டு வந்தால் உங்கள் ஒட்டு மொத்த பிரச்சனையும் ஒரேயடியாக முடிந்து(!) விடும்.    

 ---------------------------------((((((((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))--------------------------