Thursday 20 September 2012

பேஸ்புக்கின் துயர்துடைப்பு வெளக்குமாறு....


" பேஸ்புக் மூலமாக காதலித்து இளம்பெண்களிடம் மோசடி... " இது மாதிரியான சங்கதிகள்தான் செய்திகளாக நிறைய படித்திருக்கிறோம்.ஆனால் பேஸ்புக்கில் பரபரப்பாக இயங்கிகொண்டிருக்கும் பல பிரபலங்களுக்கும் ஒட்டு மொத்தமாக அல்வா கொடுத்திருக்கிறது ஒரு 'பழ வெளக்கமாறு'. நல்ல நட்புக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது.'முகநூல் நட்பது நட்பன்று'என நட்புக்கு இலக்கணம் எழுதியிருக்கு அந்த பழம்  . 

"எல்லோரையும் நம்பி ஏமாந்தது போதும்... இளைஞர்களே புறப்படுங்கள்..." இப்படித்தான் ஆரம்பித்தது அவர்களின் விளம்பரம்.சிவகாசி வெடிக்கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் பதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் அந்த 'சிவகாசி துயர்துடைப்பு குழு'.


பேஸ்புக் என்பது வெறும் வெட்டி அரட்டைக் கச்சேரிக்கான பொழுதுபோக்கு தளம்தான் என்பதையும் மீறி சமுதாயத்தொண்டு செய்யும் மையமாக மாற்றமுடியும் என்பதை  நிறுபித்தது இந்தக்குழு.ஆரம்பத்தில் இந்தக்குழுவை பாராட்டி தினமலர்,இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களில் வெளிவர,அதுவே இதற்கு மிகப்பெரிய அங்கீகாரமாக மாறிப்போனது.நான்கே நாட்களில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தங்களை இந்தக்குழுவில் இணைத்துக்கொண்டனர்.பேஸ்புக் பிரபலங்களால் விளம்பரப்படுத்தப்பட்டு நிதியும் திரட்டப்பட்டது.

இதற்கிடையே இந்தக்குழுவின் ஒருங்கிணைப்பாளரைப்பற்றி பணமோசடி விஷயம் ஓன்று வெளியே கசிந்தது.பேஸ்புக் மூலமாக நட்பான ஒரு பெண்ணிடம் மூன்று லட்சம் ரூபாய் அவசரக்கடனாகப் பெற்று,பிறகு திரும்பக் கொடுக்காமல் இழுத்தடிக்க,போலீசில் வரை சென்று இன்னும் அந்தப்பிரச்சனை முடிந்தபாடில்லை.ஆரம்பத்தில் அவரின் நண்பர்கள் யாரும் இதை நம்பவில்லை.ஏனென்றால் அந்தளவுக்கு அந்த பழமான 'அண்ணனின்' மீது இவர்களுக்கு அளவுகடந்த நம்பிக்கை..மரியாதை.!!..ஒருகட்டத்தில் அந்தப்பெண் சொல்வது உண்மையாக இருக்கலாமென்று சிலர் சொல்ல,அதற்குப் பிறகுதான் அந்த அண்ணனின் சுயரூபம் வெளியே தெரியவந்தது.தான் இந்தக் குழுவிலிருந்து விலகிக் கொள்வதாகவும்,பொறுப்பை ஏற்க வேறு யாராவது முன்வரவேண்டுமென்றும் ஒரு 'ஸிம்பதி ஸ்டேடஸ்' போட்டு எல்லோரையும் நம்பும்படிசெய்தார். "வீட்டைக்கூட்டும் வெளக்கமாறு சுத்தமாக இருக்கவேண்டும் என்று அவசியம் கிடையாது.." என்று பஞ்
ச் டயலாக் அடிக்க,அது இவர்மீது சந்தேகம் கொண்ட மற்ற நண்பர்களின் நெஞ்சை பஞ்சாக்கியது.

அதன் பிறகுதான் அண்ணனின் திருவிளையாடல் ஆரம்பமானது.பணம் அனுப்பியவர்களின் பட்டியலை தெரிவித்துவிட்டு,சேர்த்த பணத்தோடு நம்ம அண்ணன் எஸ்கேப்.பிறகுதான் அவரின் களவாணித்தனம் எல்லோருக்கும் தெரியவந்திருக்கிறது.சில வாரங்களுக்கு முன் மயிலாடுதுறையில் நடந்த ஒரு முகநூல் நண்பரின் திருமணத்திற்கு திரட்டப்பட்ட பணம் அண்ணனிடம்தான் இருந்திருக்கிறது.அதையும் ஆட்டையைப்போட்ட விஷயம் இப்போதுதான் தெரியவந்திருக்கிறது.பாவம் அந்த நண்பர்."அந்தமானைப் பாருங்கள் அழகு...." என டுயட் பாடவேண்டியவர், "அந்தமான் எங்கேயிருக்கு.."என புலம்பும்படி ஆகிவிட்டது.
 

தான் வேலைசெய்யும் 'ஷேர் டிரேடிங்' வியாபாரப் புத்தியை ஒரு நல்ல காரியத்திற்கு திரட்டப்பட்ட நிதியிலும் காண்பித்திருக்கிறார் அந்த 'பழஅண்ணன்'.

கடைசியாக,மற்ற நண்பர்கள் அவரை நேரில் பிடித்து ஒருவழியாக அவரிடமிருந்து பணத்தைப் பெற்று தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.பணத்தைப்பெற கடுமையான முயற்சி எடுத்து அதை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து குழுவின் பெயரைக் காப்பாற்றிய மற்ற நண்பர்களை பாராட்டியே ஆகவேண்டும்.

அவரின் பேஸ்புக் அக்கவுன்ட் பிளாக் செய்யப்பட்டுள்ளது.மீண்டும் வேறு ' பேக்ஐடி' யில் வரலாம்.உஷாராக இருங்கள் என அவரின் நண்பர்களே எச்சரிக்கை செய்யுமளவுக்கு நட்புக்கு மிகப்பெரிய துரோகம் செய்திருக்கிறது அந்த பழம்.
இப்படிக்கு....

பாதிக்கப்பட்ட நண்பரின் நண்பன்  

 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பவர்ஸ்டார் துயர் துடைப்பு குழு
 

ங்கள் செயற் சிங்கம்,தென்னாட்டு தங்கம்,சிந்தனை சிற்பி,சயனைடு குப்பி,சங்கீத பீப்பீ,கருப்பு கண்ணாடியுடன் பிறந்த கர்ணன்,தன்னிடம் இல்லையென்றாலும் மற்றவர்களிடம் ஆட்டையைப் போட்டாவது ஊருக்கெல்லாம் துயர் துடைத்த எட்டாவது வள்ளல்,தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் அண்ணன் பவர்ஸ்டார் அவர்களை சிறையிலடைத்து சீண்டிப்பார்க்கத் துடிக்கிறது ஒரு சில்லுண்டி கூட்டம்... 

சிங்கத்தை கூண்டிலடைத்தால் சிதைந்துவிடுமா அதன் வீரம்...! அதன் கரங்கள் கட்டப்பட்டால் குறைந்து விடுமா அதன் பாசம்...! ஒரு சிங்கத்தின் உள்ளே ஒளிந்திருக்கும் இன்னொரு சிங்கத்தை தட்டி எழுப்பினால் நீ ஆகிவிடுவாய் நாசம்..!!!

இப்படிக்கு..

அண்ணன் பவர்ஸ்டார் துயர் துடைப்பு குழு...    


(இனி  'கோல்ட் அக்யுஸ்ட்' நடத்தியோ,'பிளாக் கோப்ரா' வளர்த்தோ பணக்காரன் ஆகணும்கிற ஐடியாவை தூரத் தூக்கி போட்டுடனும்...  ஸ்ட்ரைட்டா  'துயர் துடைப்பு குழு'தான்..! இனி பூகம்பம்,புயல்,விபத்து எது நடந்தாலும் விடப்படாது.உடனே ஒரு 'துயர் துடைப்பு குழு' ஆரம்பிச்சி சீக்கிரம் செட்டில் ஆகிடனும்..!! )

பாஸ்...சிங்கப்பூர்ல ஒரு முருகன் கோயில் இருக்கு.அண்ணனுக்கு பிடித்த சனி விலகுறதுக்காக முருகனுக்கு அலகு குத்தி,காவடி எடுத்து தங்கவேல் சாத்துவதாக வேண்டியிருக்கேன்.உங்களால் முடிந்த உதவியை எங்கள் துயர் துடைப்பு குழுவுக்கு 'செக்'காகவோ, 'டிடி'எடுத்தோ அனுப்பவும்.வசதி குறைந்தவர்கள் ஒரு லட்சமோ,இரண்டு லட்சமோ அனுப்பினாலும் பரவாயில்லை.(பின் குறிப்பு: பத்து லட்சத்துக்கு மேல் அனுப்புவர்களுக்கு அண்ணன் நடித்த 'ஆனந்ததொல்லை' புத்தம்புது பிரின்ட் DVD இலவசமாக அனுப்பிவைக்கப்படும்.)
 
அனுப்பவேண்டிய முகவரி...
பவர் ஸ்டார் துயர் துடைப்பு குழு.
NO .6, பிரேமானந்தா தெரு.சிங்கப்பூர் குறுக்கு சந்து,
சிங்கப்பூர் மெயின் ரோடு.
சிங்கப்பூர்.
(பழைய பஸ்டாண்டு பின்புறம் )  ---------------------------------------------------------------------((((((((((((((((((()))))))))))))))))))))--------------------------------------

9 comments:

 1. ஒரு மனிதனின் இறக்க குணத்தை கூட பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் இவர்களை போன்ற விசப்புளுக்கள் இப்புவியில் வாழ தகுதியற்றவர்கள்!

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. உங்க கோபம் நியாயமானதுதான் பாஸ்..நன்றி..

   Delete
 2. பாஸ்,
  எனக்கு இந்த பேஸ்புக் புரட்சிபடை மேல கால் எனாவுக்கு கூட மரியாதை இல்லை. இது மாதிரி scandle எதிர் பார்த்தது தான். ஆனா scandle ரொம்ப சிக்கிரமே நடந்து விட்டது. அந்த பேஸ்புக் வெளக்குமாறு யாருன்னு நீங்க பேரை சொன்ன அந்த டுபாகூர் பத்தி தெரிஞ்சுக்க முடியும்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜ்..


   //அந்த பேஸ்புக் வெளக்குமாறு யாருன்னு நீங்க பேரை சொன்ன அந்த டுபாகூர் பத்தி தெரிஞ்சுக்க முடியும்.//

   அந்த தினமலர் விளம்பரத்திலேயே இருக்குது பாஸ்..

   Delete
 3. 'சிவகாசி துயர்துடைப்பு குழு' - எனது பக்கம் வந்து செய்த சிரமம் இருக்கே.... வேண்டாம் அது... ஒரு பெரிய பதிவு எழுத வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா... உங்களுக்குமா....தப்பிச்சிடீங்க...நன்றி..

   Delete
 4. "வீட்டைக்கூட்டும் வெளக்கமாறு சுத்தமாக இருக்கவேண்டும் என்று அவசியம் கிடையாது.."
  பழமொழி சூப்பர் மணிமாறன்.

  ReplyDelete
 5. 'பழ'மொழியெல்லாம் நல்லாதாங்க இருந்தது....கடைசில துயர்துடைக்க கிளம்பினவங்களுக்கே துயர் துடைக்கிற மாதிரி ஆயிடிச்சி...

  ReplyDelete