Monday 25 February 2013

வித்யாவின் கொலையில் இருக்கும் நிஜ பின்னணி...!ரு வழியாக ஆசிட் கலாச்சாரமும் நம் வாழ்வியல் சூழலோடு மிக ஆழமாக ஊடுருவ ஆரம்பித்திருக்கிறது. நேற்று வினோதினி..இன்று வித்யா...!

கடந்த சில நாட்களாக வித்யாவின் ஆசிட் தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெவ்வேறு தகவல்கள் வந்து கொண்டிருந்து.இருவரும் தீவிரமாக காதலித்ததாகவும், திருமணம் செய்ய வித்யாவின் தாய் மறுத்ததாகவும் அந்த ஆத்திரத்தில் ஆசிட் ஊற்றிவிட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

ஆனால் வித்யாவின் வீட்டிற்கு இன்று (24.02.2013) தொல்.திருமாவளவன் அவர்கள் சென்றபோது பல அதிர்ச்சித் தரத்தக்க தகவல்கள் வித்யாவின் பெற்றோர்,உறவினர்களின் மூலம்  வெளிவந்திருக்கிறது.இதற்கு பின்புலமாக ஒரு தலித் பெண் மீது ஏவப்பட்ட வன்முறைத் தாக்குதல் என்றே தோன்றுகிது.

முகநூளில் வெளிவந்த அந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.   

 வித்யாவிற்கு 22 வயது. ஆசிட் ஊற்றிய விஜய பாஸ்கர் என்ற அந்த கொடுரனின் வயது 37. இதனால் வித்யா பாஸ்கரின் காதலை ஏற்கவில்லை. தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். ஆனால் அவன் அந்தப் பெண்ணை விட்டபாடக இல்லை.

வித்யா தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். பாஸ்கர் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவன்.

இதனால் ஒருதலைக் காதலாகவே அவன் அலைந்திருக்கிறான். வயதும் சாதியும் ஒத்துப்போகாத நிலையில் மிகுந்த ஏழ்மையில் வாடிய வித்யா என்ன செய்ய முடியும்...?

வித்யாவின் அப்பா 2000ஆம் ஆண்டு இறந்தபோது வித்யாவிற்கு பத்து வயது மட்டுமே. பிறகு அவரது அம்மா வீட்டு வேலை செய்து தமது மூத்த மகனையும், இளைய பெண்ணான வித்யாவையையும் காப்பாற்றி வந்துள்ளார்.

குடும்பத்தில் கொஞசம் அதிகமாக சம்பாதிக்கும் பெண் வித்யா மட்டுமே. மாத சம்பளம் ரூ-4000.

இவ்வளவு வறுமையில் வாடும் குடும்பத்தை எளிதில் வளைத்துவிடலாம் என்று பாஸ்கர் செய்த சூழ்ச்சி அந்தப் பெண் இணங்க விரும்பவில்லை.

எனவே சம்வத்தன்று வித்யா வேலை செய்யும் இணைய மையத்திற்கு வந்த பாஸ்கர் திருமணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்த அவர் மறுக்கிறார். உடனே கையில் மறைத்து வைத்த ஆஸிட்டை எடுத்து வித்யாவின் முகத்தை குறிவைத்து ஊற்ற வித்யா திரும்பிக் கொள்ள முதுகு முழுவதும் ஆசிட்டால் நனைந்து துணி கருகி கீழே விழுகிறது. பின் முன்பக்கம் ஊற்றுகிறான், அதற்குள் ஆசிட் தீர்ந்துவிட தலையை பிடித்து கீழே சிந்தியிருந்த ஆசிட்டில் வித்யாவின் முகத்தை அழுத்தி தரையில் தேய்க்க முகம் முழுதும் வெந்துக் கருகிப் போகிறது.

அடுத்து கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்.எந்த அடிப்படை வசதியும் அங்கு இல்லை.உடம்பு முழுதும் ஊற்றிய ஆசிட்டால் உடலின் மேலுள்ள சதைகள் உருகி கரைந்து உதிர்கின்றன, எலுப்புகள் வெளியேத் தெரிய நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன, காயங்கள் தீவிரமாகி இன்று காலை 4 மணிக்கு வித்யா மரணத்தைத் தழுவுகிறார்.

ஒரு தலைக் காதலில் வித்யாவைத் மிரட்டி திருமணம் செய்துக் கொள்ள முடியும் என்ற அவனின் நம்பிக்கை பொய்த்துவிடுமோ என தெரிந்துக் கொண்ட பாஸ்கர் முழு குடி போதையில் நடத்திய கொடூரமான படுகொலை இது.

தொல்.திருமாவளவன் அவர்கள் மருத்துவமனைக்கும் பின்பு வித்யாவின் வீட்டிற்கும் சென்று பார்க்கும் போது கிடைத்த உண்மைத் தகவல்கள் இவை.

மேலும் மாவட்ட ஆட்சியருடன் அவர் பேசியதும் அவர் உடனே கிளம்பி வந்து மலர் வளையம் வைத்தார். அப்போது வித்யாவின் உடலை வைத்துக் கொண்டே அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் முன்வைத்தக் கோரிக்கைகள்.

1. வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்ய வேண்டும். குற்றவாளி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

2. வழக்கை தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கைப் பதிவு செய்து உரிய இழப்பீட்டினை உடனடியாகத் தரவேண்டும்.

3. வித்யாவின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தரவேண்டும்.

4. ஈமச்சடங்கினைச் செய்வதற்கு உடனடி செலவை அரசு ஏற்க வேண்டும்.

5. அதை சிறப்பு வழக்காக எடுத்து உரிய நிவாரணத்தை முதல்வர் வழங்க வேண்டும்.

என்ற கோரிக்கைகளை முன்வைத்தார். மாவட்ட ஆட்சியர் அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டார். உடனடியாக ஈமச்சடங்கிற்கான தொகை வழங்கப்பட்டது. மற்றவை உடனே நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

மனசாட்சியுடன் இங்கே எழுப்பப்படும் கேள்விகள்.....

1. டில்லியில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டபோது மனசாட்சியோடு வந்து வீதிக்கு வந்து போராடிய இளைய சமுதாயம் ,விநோதினி ஆசிட் வீச்சில் கொல்லப்பட்டபோது வீதிக்கு வந்து போராட்டம் நடத்திய தமிழ்நாட்டுப் போராளிகள்,வித்யா ஆசிட் வீச்சின் போதும் அவர் இறந்தபோதும் தமது மனசாட்சியை எங்கே கொண்டுபோய் அடகு வைத்தார்கள்.

2.தலித் இளைஞர்கள்தான் ஜீன்ஸ் போட்டு எங்கள் இனப் பெண்களை மயக்குகிறார்கள் என அறிய கண்டுபிடிப்பை வெளியிட்ட
ஜாதி சங்கத் தலைவர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்...?

3.ஒரு காதல் பிரச்னையை சாதித்தீ மூட்டி,அதில் அரசியல் பொடிதூவி வடதமிழகத்தில் பதட்டமான சூழலை ஏற்படுத்திய பிற்போக்குவாதிகள் இப்பொழுது என்ன சொல்லப் போகிறார்
கள்.....?

4. இதை எந்த ஊடகமும், சமூக ஆர்வலர்களும் பெரிதாக கண்டுகொள்ளவில்லையே....ஏன் தலித் என்பதற்காகவா..?


5.முகநூல் உள்ளிட்ட இணைய ஊடகங்களிலும் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லையே..?

6.சரியான சிகிச்சையளித்திருந்தால் என் மகளைக் காப்பாற்றியிருக்கலாம் என அந்த அப்பாவிப் பெண்ணின் தாய் கதறி அழுதாரே...ஏன் அவர் சமூகத்திற்கு சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெருவதற்கெல்லாம் தகுதி இல்லையோ..?

இதில் இன்னொரு விசயத்தையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.இந்த சம்பவத்தை அரசியலாக்காமல்,மூன்று ஊரைக் கொளுத்தாமல்,குடிசைகளை எரித்து சாம்பலாக்காமல், பொருட்களைக் கொள்ளையடிக்காமல், அப்பாவி பொதுஜனங்களின் மீது தாக்குதல் நடத்தாமல் மிக அமைதியாக தனக்கேயுரிய அரசியல் முதிர்ச்சியோடு செயற்பட்ட தொல்.திருமாவளவன் அவர்கள் இன்றைய அரசியல்வாதிகளுக்கும் ஜாதி சங்கத் தலைவர்களுக்கு
ம் நிச்சயமாக ஒரு முன்னுதாரணம்.  
----------------------------------------------(((((((((((((((())))))))))))))---------------------------------

Sunday 24 February 2013

இப்படியும் ஒரு லூசு உலகத்தில் உண்டா..?த்ததானம் செய்வீர்...ரத்ததானம் செய்வீர்....என இந்தியா முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த பல சேவை அமைப்புகள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ரத்தம் மனித உயிருக்கு எவ்வளவு அவசியம் என்பதை சொல்லத் தேவையில்லை.விபத்து ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனை
க்குக் கொண்டு சென்ற பிறகு,இன்னும் அரைமணி நேரத்திற்கு முன்னமே கொண்டு வந்திருந்தால் பிழைக்க வைத்திருக்கலாம் என டாக்டர்கள் கைவிரிப்பது பெருமளவு ரத்தம் உடலிலிருந்து வெளியேறியதால்தான்.

ரத்தத்தில் எழுதி கேள்விப்பட்டிருக்கிறோம். ரத்தத்தில் சிலைவடித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா..?


ரத்ததானம் செய்வதின் அவசியத்தைப் பற்றி உலகமே வகுப்பெடுத்துக் கொண்டிருக்கும் சூழலில் ஒரு விவரம் தெரிந்த லூசு இப்படியொரு கேவலமான செயலை செய்திருக்கிறது. இவர் படிப்பறிவில்லாத காட்டுவாசியல்ல...புகழ் பெற்ற கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி ..! (கொஞ்சநாள் சன் டிவியில திடீர் சமையல் கூட செய்தாரே.. ) 

கடந்த 8 வருடங்களில் தனது உடலில் இருந்து எடுக்கப்பட்ட 6.5 லிட்டர் , மற்றும் தானமாகப் பெறப்பட்ட 4.5 லிட்டர் ரத்தத்தை உறைய வைத்து, கெட்டியாக்கி அதிலிருந்து அகிலம் போற்றும் அகிலாண்டேஸ்வரி,தங்கத் தாரகை, காவிரித்தாய், புரட்சித் தலைவி, பொன்மனச்செல்வி, புனிதவதி, மாண்புமிகு தமிழக முதல்வர் (ஸ்ஸ்... அப்பாடா.) அவர்களின் திருவுருவச் சிலையை வடித்திருக்கிறது அந்த லூசு.

சரி....... இதயதெய்வம் புரட்சித் தலைவி இதயத்தில் இடம் பெற முயற்சி செய்வது தவறில்லை தான். அம்மாவின் பிறந்த நாளுக்கு அதிர்ச்சிகரமான அன்பளிப்பு கொடுக்க நினைத்ததும் தவறில்லைதான். தா.பா-வையும், சித்தப்புவையும், ஓ.பி.எஸ்-யும் ஓவர் டேக் செய்து,போயஸ்கார்டனில் புல்லு வெட்டும் வேலைக்கு மல்லு கட்ட முயன்றதும் தப்பில்லைதான். அதற்காக இப்படியொரு கேவலமான முன்னுதாரணத்தை ரத்தத்தின் ரத்தங்களுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டாயே ஹுசைனி...இது லூசுத்தனமா தெரியில..?   மனித ரத்தம் அவ்வளவு மலிவா போச்சா ?

மொத்தம் 11 லிட்டர் ரத்தமாம்.இதன்மூலம் குறைந்தது பத்து உயிரையாவது காப்பாற்றியிருக்கலாமே..இது அடுத்த ப்ராஜெக்ட்டோ..?  
                                          
என் ரத்தம்.. என் இஷ்டம்..என இறுமாப்பில் எல்லாம் இங்கே பேசமுடியாது. கட்சித் தலைமைக்காக உயிரைக்கூட கொடுக்கக் கூடிய அப்பாவி அடிமட்டத் தொண்டர்கள் ஒவ்வொரு கட்சியிலும் இருக்கின்றனர். அவர்களுக்கு இது தவறான வழிகாட்டல்லவா..?  ஒவ்வொரு தலைவரின் பிறந்தநாளுக்கும் ' .'.பண்ட் '  கலெக்ட் பண்ணுவதற்குப் பதிலாக இனி ' பிளட் ' கலெக்ட் பண்ண ஆரம்பிக்க மாட்டார்களா..?

இது மாதிரி பிரபலங்களே இப்படி முட்டாள்தனமான செயல்களில் இறங்குவதால்தான், சுண்டு விரலை வெட்டுவது, நாக்கை வெட்டுவது போன்ற ஈன செயல்கள் அதிமுகவில் நடைபெறுகிறது. ரத்தத்தை வைத்து சிலை செய்த இந்த சொம்பின் மீது நடவடிக்கை எடுத்து தான் ரத்தம் கேட்கும் 'டிராகுலா' இல்லை என்று ஜெயலலிதா நிரூபிக்க வேண்டும்..! 

இவர் வடித்த அந்த தெய்வீக சிலைக்கு ' தமிழ்த் தாய் ' என பெயர் வேறு வைத்திருக்கிறார். இதை விட தமிழ்த் தாயை யாரும் கேவலப்படுத்த முடியாது .

நீ கேவலப்படுத்தியது ரத்தத்தை இல்லைடா  மடையா ..! உன் தாயிடம் குடித்த பாலை...!!

-------------------------------((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))----------------------------

Sunday 17 February 2013

நாமெல்லாம் முட்டாப்பயலுகளாம்..ஒரு அறிவுஜீவி சொல்லுது..!

கொஞ்ச நாட்களுக்கு இந்தப்பக்கமே வரவேண்டாமென நினைத்த என்னை வெறியூட்டி மீண்டும் எழுத வைத்திருக்கிறது இரண்டு சம்பவம்.

முதல்ல விஸ்வரூபம் பற்றிய பிரச்சனை...

கமலின் அதிமேதாவித்தனமான படங்களின் வரிசையில் விஸ்வரூபமும் ஒன்றுதான் என்பதை அவரின் படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அறிந்ததுதான்.கமல் எடுக்கும் வித்தியாசமான முயற்சிகள் அனைத்தும் ஆரம்பத்தில் எல்லோராலும் ஏகமனதாக எற்றுக்கொள்ளப்படுவதில்லை.கடும் விமர்சனத்துக்குள்ளான குணாவும் ஹேராமும் தற்போது பார்த்தால் வியப்பில் ஆழ்த்துகிறது.குணாவைக் காப்பியடித்து கிளைமாக்சை மட்டும் மாற்றி எடுத்த 'காதல் கொண்டேன்' படத்தை வெள்ளி விழா வரை கொண்டு சென்றதும் நாம்தான்.நிதி நிறுவன முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த மகாநதியும்,சுனாமியைப் பற்றி எச்சரித்த அன்பேசிவமும்,கமல் என்கிற கலைஞானி எந்த அளவுக்கு சமூக அக்கரையில் முற்போக்காக சிந்திக்கிறார் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. 

கமல் ரசிகர்களின் ரசனை வித்தியாசமானது.அவரின் மசாலா மொக்கைப் படங்களை விட வித்தியாசமான முயற்சிகளைத்தான் கைதட்டி வரவேற்பார்கள்.பரவலான விளம்பரப்படுத்தல் இல்லாவிட்டாலும் கமல் படங்களுக்கு கிடைக்கும் 'ஓபனிங்' அவரது ரசிகர்கள் மூலமே அமையப்பெற்றது.விஸ்வரூபம் சர்ச்சையில் சிக்கும் முன்பே ஒரு வாரத்திற்கு தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள திரையரங்குகளில் ரிசர்வேசன் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது இதற்கு தெளிவான சாட்சி.

அதே நேரத்தில் விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் காட்டிய எதிர்ப்பின் வெளிப்பாடாக தமிழக அரசு விதித்த தடையும்,அதைத்தொடர்ந்து கமலின் வேறு தேசம் நோக்கி இடம்பெயரல் பேட்டியும் இந்தப்படத்திற்கு கூடுதல் விளம்பரத்தை தேடித் தந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மைதான்.

வழக்கமாக கமல் படங்கள் 'பி' மற்றும் 'சி' சென்டர்களில் கல்லாக் கட்டுவது கடினம்தான்.விஸ்வரூபம் வெளிவந்து (ஒரு சில குறைகள் இருந்தாலும்) வெளிநாட்டிலும், தமிழகத்தின் 'ஏ' சென்டர்களிலும் வசூலை வாரிக்குவிக்கிறது என்பதை சமீபத்தில் அதன் கலெக்சன் நூறு கோடியைத்தாண்டியதாக கமல் வெளியிட்ட தகவல் உறுதிப்படுத்துகிறது. ஆனால் இந்தப்படத்தை பார்க்கச் செல்பவர்களெல்லாம் அடிமுட்டாள்கள் என ஒரு அறிவுஜீவி தனது முகப்புத்தகத்தில் நிலைத்தகவலாகப் பதிவு செய்திருக்கிறது.


ஊர்ல எங்கே எது நடந்தாலும் உடனே ஏதாவது ஒரு டிவி ஸ்டேசனுக்கு "சம்முவம் உட்ரா வண்டியை.." என அறச்சீற்றம் அடைந்து பொங்கி எழுபவர்தான் இந்த மனித குல மாணிக்கம் மனுஷ்யபுத்திரன். சமூக பிரச்சனைகள் சார்ந்த அநேக தொலைக்காட்சி விவாதங்களில் இவரின் வாதங்கள் பிரதானமாக இருக்கும். நிறைய நேரங்களில் நியாயமாகவும் இருக்கும்.

அதற்காக தான் கொண்ட நிலைப்பாடுதான் ஆகச்சிறந்தது என குருட்டு கர்வமும் இவருக்கு உண்டு என்பதை மறுக்கவும் முடியாது.தூக்கு
த் தண்டனை குறித்த இவரின் குரல் உண்மையிலேயே மதிக்கப் பட வேண்டியது தான். ஆனால் சினிமாவைப் பற்றிய இவரின் விமர்சனம் சினிமாவின் அடிப்படை அறிவுகூட இல்லாத ஒரு அடித்தள ரசிகனின் ரசனையை கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்குத்தான் இருக்கிறது.

கடந்த வருடத்தின் சிறந்த படைப்பான 'வழக்கு எண்' படத்தை தன் விமர்சனத்தில் தாறுமாறாக அடித்து கிழித்து துவைத்து தொங்கப் போட்டிருந்தார். இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல்தான் ஒரு படத்தின்  பாடல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அறிவுமதி மனுஷ்யபுத்திரனை கடுமையாக விமர்சித்தார். அந்த விமர்சனத்தை நான் படிக்கவில்லை என்றாலும் ஒரு படத்தை விமர்சனம் செய்வது அவரவர் விருப்பம். பத்திரிகை சுதந்திரமும் கூட. அப்படியிருக்க விமர்சித்தது தவறு என்று அறிவுமதி எப்படி சொல்லலாம் என்ற ரீதியில் நான் கூட ஒரு பதிவிட்டிருந்தேன்.(மனுஷ்யபுத்திரன் VS அறிவுமதி...பத்திரிக்கையாளனுக்கு அருகதை இருக்கிறதா?)
 
கவிஞர் அறிவுமதி அவர்கள் அன்று உணர்ந்த வலியை இன்று நான் உணர்கிறேன். சினிமாத்துறையும் பத்திரிக்கைத் துறையும் கலைவடிவங்கள்தான்.எந்த ஒரு கலைஞனின் படைப்பையும் பார்த்த மாத்திரத்தில் 'குப்பை' என புறந்தள்ளிவிட முடியாது.வேண்டுமானால் விரிவான விமர்சனத்தை முன்வைத்து விட்டு பிறகு குப்பையா மொக்கையா என சொல்லியிருக்கலாமே.விஸ்வரூபம் படத்திற்கு தடை கோரிய போது அதற்கு எதிராக தன் கருத்தை தைரியமாக பதிவு செய்தவர் என்ற அடிப்படையில் எப்படி வேண்டுமானாலும் ஒரு திரைப்படத்தைப் பற்றி விமர்சித்து விட முடியுமா..?

சரி..உங்கள் பார்வையில் அது குப்பையாகவே இருக்கட்டும். அதற்காக அந்தப் படத்தை பார்ப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் என சொல்லும் அளவுக்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது...? சமூகப் பிரச்சனைகளைப் பற்றி நித்தம் ஒரு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்து விட்டால் தன் நிலைப்பாட்டோடுதான் எல்லோரும் ஒத்துப் போகவேண்டும் என்ற நியதி இருக்கிறதா..? அப்படியொரு நிலைப்பாடு இல்லாத தமிழர்கள் அனைவரும் உங்கள் பார்வையில் முட்டாள்களா...? அப்படியானால் எங்கள் கருத்தோடு ஒத்துப் போகாத நீங்கள் எங்கள் பார்வையில் அடிமுட்டாள் தானே..?

//தமிழனைவிட ஒரு முட்டாள் இந்த உலகத்தில் கிடைக்க மாட்டான் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் வேறு எதுவும் இல்லை..//

இந்த வரியை படிக்கும் போது தான் கோபமும் வெறுப்பும் உச்சத்திற்கே செல்கிறது.கமலின் 'உன்னைப் போல் ஒருவன்' படத்திற்கு பாடல் எழுதும் வாய்ப்பளித்ததால் அன்று அந்தப் படம் உங்கள் பார்வையில் சிறந்த படம். வாய்ப்பளிக்காத விஸ்வரூபம் ஒரு குப்பை.அதை பார்க்கும் தமிழ
ர்கள் முட்டாள்கள்.நல்லா இருக்குதையா உங்களின் சமூக நிலைப்பாடு..?

நாலு பேர் மதிச்சி பேசக் கூப்பிட்டா தமிழ் கூறும் நல்லுலகுக்கே ராஜா என்ற நினைப்பா..? வழக்கு எண்-னும் விஸ்வரூபமும் குப்பை என்றால் பின்ன எது நல்ல படம் என்று பட்டியலிடு.உன் ரசனை என்னவென்று நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.விஸ்வரூபம் ஆகச்சிறந்த படம் இல்லை தான்.அமெரிக்காவிற்கு சொம்பு தூக்கும் படம் தான்.ஆனால் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த முயற்சி.அதற்கு பாராட்ட வேண்டாம். மூடிகிட்டாவது இருந்திருக்கலாமே.எதற்கு இந்த வாய்க்கொழுப்பு..? நான் சொல்ல வருவதை புரிந்துகொள்ளாத முட்டாள்கள் என்று இதற்கு பதில் ஸ்டேடஸ் வேறு.இன்னொரு மேடை ஏறாமலா போய்விடுவார்.இன்னொரு அறிவுமதி நாக்கைப் புடுங்கிற மாதிரி கேள்விக் கேட்காமலா போய்விடுவார்...? 


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
 

தைப்பற்றி எழுதனும்னா அசிங்க அசிங்கமா வாயில வருது.யாரையோ திருப்திப் படுத்துவதற்காக இப்படி கூட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்யும் குமுதம் ரிபோர்ட்டர் மாமா பசங்களை தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தையால் அர்ச்சனைப் பண்ணினாலும் கோபம் தீராது.குஷ்புவின் முன் சரித்திரம் கேவலமானது தான். ஆனால் இப்பொழுது இரண்டு பெண்களுக்கு தாய்.அதற்காவது கண்ணியம் வேண்டாமா..? கலைஞர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை இப்படித்தான் தீர்த்துக் கொள்ள வேண்டுமா..?  இதில அய்யாவையும்  மணியம்மையையும் வேற அசிங்கப் படுத்தியிருக்காணுவ பேமாளிப் பசங்க.ஜெயலலிதாவின் காலை நக்க ஆசைப்பட்டு இப்படி அபத்தமாக எழுதும் விகடனும் குமுதமும் பேசாம......நல்லா அசிங்கமா வாயில வருது.

இதை எழுதின குமுதம் ரிபோர்ட்டர் நாயி மட்டும் என் முன்னே வந்தானா... த்தா.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் த்த்த்த்த்த்தூ... மூஞ்சிலே காரித்துப்புவேன்.          --------------------------------(((((((((((((((((()))))))))))))))))))))))))))-----------------------

Friday 1 February 2013

உலகத்தரத்தில் விஸ்வரூபம் -கமல் செய்த வரலாற்று பிழை..


மிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு நகர்த்தும் கலைஞானி கமல்ஹாசனின் மற்றுமொரு விஸ்வரூப முயற்சி.படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒவ்வொரு பிரேமிலும் உலகநாயகனின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.

அல்-குவைதா தீவிரவாத அமைப்பின் நியுக்ளியர் தாக்குதலிலிருந்து அமெரிக்காவை காப்பதற்காக கமல் எடுக்கும் விஸ்வரூபம்தான் படத்தின் ஒன் லைன்.அந்நிய சக்தியிடமிருந்து காலங்காலமாக கேப்டனும் அர்ஜுனும் மாறி மாறி போராடி இந்தியாவை மீட்டுக்கொடுத்துவிட்டதால், இதில் கமலுக்கு அமெரிக்காவை மீட்கும் வேலை. வழக்கமாக அமெரிக்க FBI க்கும் ரஷ்ய உளவாளிக்கும் இடையே நடக்கும் மோதலை காண்பித்தே ஜல்லியடித்திக் கொண்டிருந்த ஹாலிவுட் பட பாணியிலிருந்து அல்-குவைதா-இந்திய உளவாளி என வேறு கோணத்தில் சிந்தித்திருக்கிறார்.

சரி.... அமெரிக்காவுக்கு மட்டும்தான் தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கிறதா..இந்தியாவில் இல்லையா....? இந்தியாவை காப்பது போல் எடுக்கக் கூடாதா...என 'லாஜிக் மிஸ்டேக் அண்ணன்'
விமர்சனத்தில் ஏதாவது கேள்விகேட்டு விடுவாரோ என்று பயந்து(!?) இறுதியில்  Comming soon...VISHWAROOPAM-II...ln India...என முடிக்கிறார்.

இதில் கமலுக்கு  விஸ்வநாத்,விஸாம், தா.'.பிக்(ஏதோ ஒன்னு..வாயில நுழையில ) என மூன்று அவதாரம். முதல் பகுதி அமெரிக்காவில் விரிகிறது.கமலின் நிஜ வாழ்க்கையில் வாழ நினைத்த 'லிவிங் டுகெதர்' பாலிசியில் பூஜா குமாருடன் வாழ்வதாகக் காட்டப்படுகிறது.அச்சு அசலான கதக் டான்ஸ் மாஸ்டராக வரும் விஸ்வநாத் கமலின் நடிப்பு அபாரம்.பெண்ணின் நளினங்கள்,நடன மாடும் கண்கள்,பேச்சில் தெறிக்கும் பெண்மை என இம்மி பிசகினாலும் வேறு ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடும் ரிஸ்கான பாத்திரப்படைப்பு.


 ப்ப்ப்பா....பூஜா குமாரா இது....???!!! 'இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது'  என காதல் ரோஜாவில் கசிந்துருகச் செய்த கொழு பொம்மையா இது.வயசு ஆக ஆக பெண்களின் அழகும் வசீகரமும் குறைந்து விடும்னு எவன் சொன்னான்..? முப்பத்தாறு வயது கொஞ்சம் கூட முகத்தில் தெரியவில்லை.கமலைப்பற்றி ஒவ்வொரு விசயமும் தெரியவரும் போது ஆச்சர்யத்தில் அவர் கண்களில் காட்டும் உணர்ச்சிகள் அடடா...! அவ்வளவு அழகு..!!! அடியேனை அவரின் அடி மட்ட ரசிகனாக்கி விட்டது... :-))  அவ்வப்போது முன்னழகை முடிந்தவரையில் காட்ட முயற்சிப்பதால் கோயில் கட்டும் அளவுக்கு இல்லாவிட்டாலும் கோஷம் போடும் அளவுக்காவது ரசிகர்கள் அமைவதற்கு வாய்ப்பிருக்கிறது. 

ஆரம்பத்தில் 'அவா' பாசையுடன் மை.ம.கா.ராஜன் போல கலகலப்பாக படம் செல்வதால் எங்கே.. எப்போது... என்ன.. வெடிக்கப்போகிறதோ என்ற திகிளுணர்வு மனதுக்குள் எழுந்துகொண்டே வருகிறது. அவா கமல் திடீரென அல்லாஹு அக்பர் என மசூதிக்குள் தொழும் போது தான் படம் மின்னல் வேகம் எடுக்கிறது.

கமலும் அவரது மனைவியும் அல்கொய்தா தீவிரவாதிகளிடம் சிக்கிக்கொள்ள,தன்னைக் காத்துக் கொள்வதற்காகவும் தான் யாரென்று தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவும் கமல் எடுக்கும் அந்த மகா விஸ்வரூபம்...ஹாலிவுட் படங்களையே மிஞ்சிவிடுகிறது! .அந்தத் தருணத்தில் படம் பார்க்கும் அனைவரும் உற்சாகத்தில் ஆர்ப்பரிக்க ஒட்டு மொத்தத் திரையரங்கமே அதிர்கிறது.இந்த ஒரு காட்சிக்காகவே மீண்டும் ஒருமுறை படம் பார்க்கும் ஆவலில் உள்ளேன்.

கமல் உண்மையிலே யார் என்ற பிளாஷ்பேக் தாலிபான்களின் ரத்த பூமியான ஆப்கானிஸ்தானில் விரிகிறது. பாலைவனப்பகுதியும்,ஆங்காங்கே சிறு மலைகள்,குகைகள்,மணல் படிந்த வீடுகள் என ஊடகங்களில் பார்த்த அதே ஆப்கானிஸ்தானை கண் முன்னே நிறுத்துகிறார்கள். கேமராமேன் சானுவர்கீஸ் மற்றும் கலை இயக்குனருக்கும் ராயல் சல்யுட். 

இஸ்லாம் மதத்தைச் சார்ந்த கமல் இந்தியாவின் உளவாளியாக ஆப்கானிஸ்தான் அனுப்பி வைக்கப்படுகிறார்.அல்-குவைதாயுடன் இணைந்து அவர்களுக்கு பயிற்சி கொடுப்பது போல் நடித்து அவர்களையே சிக்க வைக்கிறார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை 'நியுக்ளியர் பாம்' மூலம் தகர்க்கும் திட்டத்தைக் கண்டறிகிறார்.அதை எப்படித் தடுக்கிறார் என்பதே மீதிக்கதை.

அல்-கைதாவின் தலைவனாக உமர் வேடத்தில் வில்லன் ராகுல் போஸ்.உடனிருக்கும் கமலிடம் அவ்வப்போது செமையாக பல்பு வாங்குகிறார்.கமலின் சாதூர்யத்தைப் பார்த்து "அப்பன் இல்லாதவன் எல்லாம் இப்படித்தான் ஷார்ப்பா இருப்பாங்க...உன்னை மாதிரி.." என உமர் கலாய்க்க,பதிலுக்கு "அப்பன் யாருனே தெரியாதவன் எல்லாம் இப்படித்தான் இருப்பாங்க..உன்னை மாதிரி" என கமல் திருப்பித்தாக்க தியேட்டரில் செம விசில். கமலின் இது போன்ற வசனங்கள் படம் முழுக்க பட்டையைக் கிளப்புகிறது.
 

கமல் படம்.. ஹாலிவுட் பாணி என்று வேறு சொல்லிவிட்டார்கள்.கண்டிப்பாக ரெண்டு மூணு இடத்திலாவது 'அது' இருக்கும்னு பார்த்தால் பெருத்த ஏமாற்றம் :-(( . சும்மா சாஸ்திரத்திற்காவது ஒன்னாவது இருக்க வேண்டாமா... 'அனிருத் ஆண்ட்ரியா' இருந்தும் அதுக்கு கடும் பஞ்சம்.கடைசி சீனில் கூட அது இல்லை.(இப்படியே போனால் கமலின் அடுத்தப் படத்தை கமல் ரசிகர்களாகிய எங்களுக்குப் போட்டுக்காட்ட வேண்டும்.'அது' இல்லாத பட்சத்தில் எங்கள் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக கமல் மீது  கேஸ் போடுவோம்.. )     
  
சுடச்சுட சிக்கனை எடுத்து " பாப்பாத்தியமா...நீ பார்த்து சொல்லு உப்பு காரம் சரியா இருக்கானு..." என கமல் ஆண்ட்ரியாவிடம் கேட்கும்போதே,கமலின் 'அக்மார்க் நக்கல்' படம் முழுவதும் விரவி இருக்கும் என்ற ஆர்வம் ஆரம்பத்திலேயே துளிர்விடுகிறது( நியாயப்படி பார்த்தால் இதுபோன்ற வசனங்களுக்காக 'நாம கோபாலன்' தான் கேஸ் போட்டிருக்கணும்....)

கமலின் வழக்கமான செண்டிமெண்ட் ஸீன் இதிலும் உண்டு.அது என்னவோ தெரியவில்லை அடிப்பதற்கும் உதைப்பதற்கும் உடலில் பல பாகங்கள் இருக்கும்போது அந்த இடத்தில் மட்டும் காலைத்தூக்கி அடிக்கும் பழக்கத்தை எப்போ விடப்போகிறார்களோ தெரியவில்லை.(அது என்ன .'.புட் பாலா ..?)

ஆங்கிலம் பேசுவதையே குற்றமாக நினைப்பது,குழந்தைகளை தீவிரவாதியாக மாற்றுவது,பொது இடத்தில் மரணதண்டனை என தாலிபான்களின் பிற்போக்குத் தன்மையை காட்சிகளாக நம் கண்முன்னே நிறுத்தினாலும், பெண் அடிமைத்தனம்,பெண்கள்-சிறுவர்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகளை இன்னமும் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியிருக்கலாம்.

ஹேராம் படத்தில் அதுல்குல்கர்னி பேசும் வங்காள மொழியில் லயித்து பாதியிலேயே குறட்டை விட்டு தூங்கிவிட்டேன்.காந்தியை கொள்வதற்காக கமலை மூளைச்சலவை செய்யும் முக்கியமான வசனங்கள் அது.அதற்கு தமிழில் சப்-டைட்டில் போட்டிருக்கலாமே என்ற ஆதங்கம் அப்போது இருந்தது.ஆனால் அப்படி ஒரு சங்கடம் இதில் இல்லை.அல்-கைதாவினர் பேசுவதை கீழே ஆங்கிலத்தில் போடுகிறார்கள்.ஓரளவு(!?) புரிகிறது.ஆனால் ஆங்கிலத்தில் பேசும் வசனங்களை எப்படி 'சி' சென்டரில் பார்க்கும் மக்கள் புரிந்து கொள்ளப்போகிறார்களோ தெரியவில்லை.

 எது எப்படியிருந்தாலும் இது உலக நாயகனுக்கு இன்னொரு மணிமகுடம்...!!
 

தெல்லாம் சரி... இதில் இஸ்லாமியருக்கு எதிரான காட்சிகள் எங்கே வருகிறது..? படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை உன்னிப்பாக கவனிக்க எத்தனித்தது இந்த விசயத்தைதான்.வழக்கமான மணிரத்னம்,கேப்டன்,அர்ஜுன் படங்களில் வந்த அளவுக்குக் கூட வசனங்களோ,எந்தவொரு காட்சியமைப்போ இஸ்லாத்துக்கு எதிராக இல்லை.

பிரதான வில்லன் உமர் தமிழ் பேசுகிறார்.(இல்லாட்டி இந்தப் படத்திலேயும் குறட்டை விட்டிருப்பேன்...).எப்படி தமிழ் தெரியும் என்று கமல் கேட்க,மதுரையிலேயும்,கோயம்புத்தூரிலும் கொஞ்சநாள் தங்கியிருந்தேன்னு சொல்றார்.இதுக்கு போயி போராட்டம் செய்வாங்கன்னு தெரிந்திருந்தா,"மூன்று மாதத்தில் தமிழ் சரளமாக பேசுவது எப்படி...?"என்ற புத்தகம் படிச்சேன்னு டயலாக்க மாற்றி எழுதியிருப்பாரு.

கமலை தங்களுடன் இணைத்து கொள்ள பிரதான தீவிரவாதி உமர் சொல்லும் காரணம், ”தமிழ் ஜிகாதிகள் கிடைப்பது மிகவும் கடினம்” என்பதுதான். இதற்கு தமிழில் அர்த்தம் , தமிழ் இஸ்லாமிய தீவிரவாதிகள் மிகவும் அரிது என்பதுதான்.அப்படிஎன்றால் தமிழகத்தில் தீவிரவாதத்தில் ஈடுபடும் இஸ்லாமியர்களே கிடையாது என்றுதானே அர்த்தம்...!

இந்தப்படத்திற்கு தமிழ் இஸ்லாமிய இயக்கங்கள் கடும் ஆட்சோபம் தெரிவிப்பதற்கு வேறு என்ன ஆணித்தரமான காரணங்கள் இருக்கிறது எனப்புரியவில்லை.மத ரீதியாக மனதைப் புண்படுத்துகிறது என்றால் மற்ற மாநிலங்களிலும் குறிப்பாக முஸ்லிம் நாடான மலேசியாவிலும்,கடுமையான சட்ட திட்டம் உள்ள நான் வசிக்கும் சிங்கப்பூரிலும் எப்படி வெளியிட அனுமதியளித்தார்கள்...?

ஆனால் ஒரு விஷயம் மட்டும் புலப்படுகிறது.கமல் ஒரு வரலாற்று பிழையை செய்துவிட்டார்.தணிக்கை அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட தன் படத்தை வேறு யாருக்கும் போட்டுக் காட்டியிருக்கக் கூடாது.தமிழ் சினிமாவில் பல தொழில்நுட்பங்கள் வேருன்ற காரணமாயிருந்த பத்மஸ்ரீ கமல்ஹாசன் இந்த விசயத்தில் தவறான ஒரு விதையை விதைத்து விட்டார்.

ஒரு திரைப்படத்தால் ஒட்டு மொத்த மனித குலத்தையும் திருப்தி படுத்திவிட முடியாது.எல்லோருக்கும் ஒரே நிலைப்பாடும்,ஒத்தக் கருத்தும் அமைந்துவிடாது.ஒரு செயலை நியா
ப்படுத்த வேண்டுமென்றால் அதற்கு எதிர் மறையான செயலை தவறு என்று நிருபித்ததாக வேண்டும்.அப்படி நிருபிக்கும் பட்சத்தில் எதிர் கருத்துகளும் கண்டனங்களும் வரத்தானே செய்யும்.

இஸ்லாமிய இயக்கங்களை அழைத்துக் காண்பித்தது மூலமாக அவர்களை சங்கடத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார் கமல் என்று தான் சொல்லவேண்டும்.ஏனென்றால் படம் வெளிவந்த பிறகு முளைக்கும் புதுப்புது விமர்சனங்களுக்கு இவர்களும் பொறுப்பாகத்தானே வேண்டும்.கமலின் கூர்மையான வசனங்களும் காட்சிப்படுத்தலும் அவரின் பரம ரசிகர்களாகிய எங்களுக்கே சில நேரங்களில் புரியாமல் போகும் போது,அவர்களுக்கு மட்டும் எப்படி ஒரு தெளிவான புரிதல் இருக்கும்...? " படம் புரியுதே இல்லையோ..கமல் ஒரு வில்லங்கமான ஆளு.. எப்படியும் பொடி வச்சுத்தான் படம் எடுத்திருப்பாரு.. அதனால போட்டுவுடு ஒரு கேசை...வாங்கிப்போடு ஒரு தடையை.."னு போட்டுட்டாங்க...

இப்படி எல்லாப்படத்தையும் எங்களுக்கும் போட்டுக்காட்டனும்னு எல்லோரும் கிளம்பிட்டா அப்புறம் என்ன பன்றது.கடைசியா..... பாம்பு படம் எடுத்தாலும் 'எங்கே கொஞ்சம் போட்டுக் காமி...அப்பத்தான் நம்புவோம்'னு அது கிட்ட கையை நீட்டினாலும் நீட்டுவாங்க..     
  

சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி என்றாலும், கமல் என்ற ஒரு மகா கலைஞனின் உழைப்பு,பணம்,திறமை என மொத்தமாக இந்தப்படத்தில் விதைக்கப்பட்டுள்ளது.தன் மகளோடு தன்னை இணைத்து இழிவாகப் பேசியதையும் கேட்டுவிட்டார்.அவரது புதிய முயற்சிகளுக்கு நிறைய தடவை பொருளாதார ரீதியாக மரண அடி விழுந்திருக்கிறது.இருந்தாலும் நான் வீழ்ந்ததே எழுவதற்காகத்தான் என சினிமாவிற்காகவே தன்னை அர்பணிக்கும் அந்த மகா கலைஞனுக்கு ஆதரவு கொடுப்போம்..!  

வணக்கங்களுடன்....
மணிமாறன் 

----------------------------------------------------(((((((((((((((((())))))))))))))))))))))))))))-------------------------------