Sunday 24 February 2013

இப்படியும் ஒரு லூசு உலகத்தில் உண்டா..?த்ததானம் செய்வீர்...ரத்ததானம் செய்வீர்....என இந்தியா முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த பல சேவை அமைப்புகள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ரத்தம் மனித உயிருக்கு எவ்வளவு அவசியம் என்பதை சொல்லத் தேவையில்லை.விபத்து ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனை
க்குக் கொண்டு சென்ற பிறகு,இன்னும் அரைமணி நேரத்திற்கு முன்னமே கொண்டு வந்திருந்தால் பிழைக்க வைத்திருக்கலாம் என டாக்டர்கள் கைவிரிப்பது பெருமளவு ரத்தம் உடலிலிருந்து வெளியேறியதால்தான்.

ரத்தத்தில் எழுதி கேள்விப்பட்டிருக்கிறோம். ரத்தத்தில் சிலைவடித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா..?


ரத்ததானம் செய்வதின் அவசியத்தைப் பற்றி உலகமே வகுப்பெடுத்துக் கொண்டிருக்கும் சூழலில் ஒரு விவரம் தெரிந்த லூசு இப்படியொரு கேவலமான செயலை செய்திருக்கிறது. இவர் படிப்பறிவில்லாத காட்டுவாசியல்ல...புகழ் பெற்ற கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி ..! (கொஞ்சநாள் சன் டிவியில திடீர் சமையல் கூட செய்தாரே.. ) 

கடந்த 8 வருடங்களில் தனது உடலில் இருந்து எடுக்கப்பட்ட 6.5 லிட்டர் , மற்றும் தானமாகப் பெறப்பட்ட 4.5 லிட்டர் ரத்தத்தை உறைய வைத்து, கெட்டியாக்கி அதிலிருந்து அகிலம் போற்றும் அகிலாண்டேஸ்வரி,தங்கத் தாரகை, காவிரித்தாய், புரட்சித் தலைவி, பொன்மனச்செல்வி, புனிதவதி, மாண்புமிகு தமிழக முதல்வர் (ஸ்ஸ்... அப்பாடா.) அவர்களின் திருவுருவச் சிலையை வடித்திருக்கிறது அந்த லூசு.

சரி....... இதயதெய்வம் புரட்சித் தலைவி இதயத்தில் இடம் பெற முயற்சி செய்வது தவறில்லை தான். அம்மாவின் பிறந்த நாளுக்கு அதிர்ச்சிகரமான அன்பளிப்பு கொடுக்க நினைத்ததும் தவறில்லைதான். தா.பா-வையும், சித்தப்புவையும், ஓ.பி.எஸ்-யும் ஓவர் டேக் செய்து,போயஸ்கார்டனில் புல்லு வெட்டும் வேலைக்கு மல்லு கட்ட முயன்றதும் தப்பில்லைதான். அதற்காக இப்படியொரு கேவலமான முன்னுதாரணத்தை ரத்தத்தின் ரத்தங்களுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டாயே ஹுசைனி...இது லூசுத்தனமா தெரியில..?   மனித ரத்தம் அவ்வளவு மலிவா போச்சா ?

மொத்தம் 11 லிட்டர் ரத்தமாம்.இதன்மூலம் குறைந்தது பத்து உயிரையாவது காப்பாற்றியிருக்கலாமே..இது அடுத்த ப்ராஜெக்ட்டோ..?  
                                          
என் ரத்தம்.. என் இஷ்டம்..என இறுமாப்பில் எல்லாம் இங்கே பேசமுடியாது. கட்சித் தலைமைக்காக உயிரைக்கூட கொடுக்கக் கூடிய அப்பாவி அடிமட்டத் தொண்டர்கள் ஒவ்வொரு கட்சியிலும் இருக்கின்றனர். அவர்களுக்கு இது தவறான வழிகாட்டல்லவா..?  ஒவ்வொரு தலைவரின் பிறந்தநாளுக்கும் ' .'.பண்ட் '  கலெக்ட் பண்ணுவதற்குப் பதிலாக இனி ' பிளட் ' கலெக்ட் பண்ண ஆரம்பிக்க மாட்டார்களா..?

இது மாதிரி பிரபலங்களே இப்படி முட்டாள்தனமான செயல்களில் இறங்குவதால்தான், சுண்டு விரலை வெட்டுவது, நாக்கை வெட்டுவது போன்ற ஈன செயல்கள் அதிமுகவில் நடைபெறுகிறது. ரத்தத்தை வைத்து சிலை செய்த இந்த சொம்பின் மீது நடவடிக்கை எடுத்து தான் ரத்தம் கேட்கும் 'டிராகுலா' இல்லை என்று ஜெயலலிதா நிரூபிக்க வேண்டும்..! 

இவர் வடித்த அந்த தெய்வீக சிலைக்கு ' தமிழ்த் தாய் ' என பெயர் வேறு வைத்திருக்கிறார். இதை விட தமிழ்த் தாயை யாரும் கேவலப்படுத்த முடியாது .

நீ கேவலப்படுத்தியது ரத்தத்தை இல்லைடா  மடையா ..! உன் தாயிடம் குடித்த பாலை...!!

-------------------------------((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))----------------------------

5 comments:

 1. இது போல் "பைத்தியங்கள்" நிறைய பெருகி விட்டன...

  ReplyDelete
 2. காலக்கொடுமை என்பது இதுதானோ?

  ReplyDelete
 3. முட்டாள்தனமான செயல்களை ஊக்கப் படுத்தக் கூடாது. ஜெயலலிதா தன் சிலை அவாறு செய்ததற்கு கண்டிக்க வேண்டும்.

  ReplyDelete
 4. நீ கேவலப்படுத்தியது ரத்தத்தை இல்லைடா மடையா ..! உன் தாயிடம் குடித்த பாலை...!!//////


  மூஞ்சியில செம பஞ்ச்.....

  ReplyDelete
 5. முட்டாப்பய மண்டையிலே ஒண்ணுமே இல்லாத .......
  இந்த செய்தியை படிக்கும் போது இன்னும் கேவலமா திட்டினேன் இந்த .....

  ReplyDelete