Wednesday 29 May 2013

குருநாத் 'மெய்'யப்பன்.. பயோடேட்டா..                        பெயர் 


குருநாத் 'மெய்'யப்பன்.
 (ஆனா செய்யுறதெல்லாம்  மொள்ளமாரித்தனம்)

                  தகுதி (க.மு)

கிரான்ட் சன் ஆஃப்  A.V .மெய்யப்ப செட்டியார்.

                   தகுதி (க.பி )

வைஃப் ஆஃப் ரூபா ஸ்ரீனிவாசன்.
 (அதான் தாலிக்கு பதில் ஐடி கார்டு தொங்குதே)

                           படிப்பு
நீங்க SSLC பெயில்ண்ணே..நான் ஏழாவது பாஸ்ண்ணே.. 
(பின்ன.. கேப்மாரித்தனம் பண்றதுக்கு கேம்ப்ரிப்ஜ் யுனிவர்சிடியிலா படிக்கணும்.)

                         தொழில்

ரம்மி,மங்காத்தா,ஸ்பாட் பிக்சிங், மேட்ச் பிக்சிங் உள்ளிட்ட அனைத்து சூதாட்டமும்.

                  சைடு தொழில்

கிரிக்கெட் வீரர்களுக்கு கூட்டிக் கொடுப்பது
 (அட...சம்பளத்தை சொன்னேங்க.. ) 
                
              பொழுதுபோக்கு

 மனைவிக்கும் மாமனாருக்கும் ஒத்தாசையாக இருப்பது போல் நடிப்பது

                          பலம்

பாரம்பரியமான குடும்பப் பின்னணி

                          பலவீனம் குறுக்கு புத்தி

               ஆட்டம் போட்டது

CSK க்கே ஓனர் என்று சீன் போட்டது.

             
               அடங்கி போனது 

 மாட்டிக் கொண்டவுடன் அரக்க பறக்க எல்லாத்தையும் அழித்தது.

                        
                     நண்பர்கள்

சாக்ஷி,ஸ்ருதி,லட்சுமிராய்,சோனியா அகர்வால் உள்ளிட்ட CSK  வுக்கு விசில் போட்ட அனைத்து அம்மணிகளும்.
                 திடீர் நண்பர்கள்

 ஜெயில் வார்டனும் சக கைதிகளும்


                ஒரே சந்தோசம்
 ஹோமோசெக்ஸ் மச்சான்..
 (அது திருந்துற வரை சொத்துக்கு நாம தான வாரிசு..)


                   சாதனை
கோல்ப் விளையாட்டில் ஸ்ரீனிவாசன் பொண்ண கவிழ்த்தது.. 
(திருட்டு பயலே ஸ்டோரி உங்களோடதா...? )

                சமீபத்திய சாதனை

கிரிக்கெட்டில் ஸ்ரீனிவாசனையே கவிழ்த்தது...
                சமீபத்திய புலம்பல்

 பேசாம இந்தியா சிமென்ட்ல செக்யுரிட்டி வேலையாவது பார்த்திருக்கலாம்..
தூக்கத்தில் அடிக்கடி புலம்புவது

 ஹலோ துபாயா...அங்க என் பிரதர் மார்க் இருக்காரா...

       கிரிக்கெட்டில் சாதித்தது
மரியாதையில் 'கைகட்டி' நின்ற ஏவிஎம் குடும்பத்தை இன்று அவமானத்தால் கைகட்டி நிற்க வைத்தது. 

Tuesday 28 May 2013

எங்கே போனது புலிகளின் வீரம்....?1987-ஆம் வருடம் புலிகளின் போராட்ட வாழ்க்கையில் மிக சோதனையான காலகட்டம். எந்த நாடு தமக்கு விடுதலை வாங்கித்தரும் என்று இத்தனை நாட்களாக நம்பி இருந்தார்களோ அதே நாடு அமைதிப்படை என்கிற ரூபத்தில் தங்களை கொன்றழிக்கும் என்பதை துளியும் எதிர்பார்க்கவில்லை...

சாகும்வரை உண்ணாவிரதமிருந்த திலீபனின் மரணம், குமரப்பா,புலேந்திரன் உட்பட பதினேழு விடுதலைப் புலிகள் சயனைடு குப்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்,ஜெயவர்தனே அரசுடன் இணைந்து  இந்திய அரசு செய்த குள்ளநரித்தனம்,ஒரு கட்டத்தில் பிரபாகரனையே கொல்ல உத்தரவு கொடுத்த அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியின் நய வஞ்சகத்தனம் என அடுத்தடுத்த நம்பிக்கை
த் துரோகத்தால் விடுதலைப் புலிகள் முற்றிலுமாக இந்திய அமைதிப்படைக்கு எதிராக போர் புரிய ஆயத்தமாகி யிருந்தனர்.அதாவது உலகின் நான்காவது மிகப் பெரிய ராணுவமாகிய இந்தியாவைப் போர் முனையில் எதிர்கொள்ளவேண்டிய கட்டாயம் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகளுக்கு உருவானது.

அக்டோபர் 10-ஆம் தேதி இந்திய அமைதிப் படையால் புலிக
ளிம் டிவி நிலையமும்,வானொலி நிலையமும் தகர்க்கப்பட்டு, அதைத் தொடர்ந்து ஈழமுரசு மற்றும் முரசொலி ஆகிய பத்திரிக்கை அலுவலகங்களும் தாக்கி அழிக்கப்பட்டன.

யாழ் பல்கலைக் கழகத்துக்கு அருகில் கொக்குவில் பகுதியில் பிரம்படி வீதியில் விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர் நிலை கொண்டிருப்பதாக அவர்களின் ரேடியோ தொலைத் தொடர்பை ஒட்டுக் கேட்ட இலங்கை ராணுவத்தின் உளவுத் துறை இந்திய அமைதிப்படைக்குத் தகவல் தந்தது.

'தலை'யை அகற்றி விட்டால் புலிப் போராளிகள் சீர் குலைந்து,மனம் தளர்ந்து எதிர்ப்
பில்லாமல் சரணடைந்து விடுவார்கள் என்று கணிக்கப்பட்டது. விமானப் படையைக் கொண்டுவந்து பிரபாகரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை அழிப்பதாகத் திட்டம்.அதை செயல் படுத்தும் விதமாக யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்குப் பக்கத்தில் அமைந்திருந்த வளாகத்தை இந்திய ராணுவம் தேர்ந்தெடுத்திருந்தது.

ஆனால் அதை பிரபாகரன் முன்கூட்டியே கணிக்கத் தவறவில்லை.இந்திய ராணுவம் தன்னை எப்படியும் கைது செய்யும் என்று அவருக்குத் தெரியும் .அப்படிக் கைது செய்ய முயற்சிக்கும் பட்சத்தில் மருத்துவ பீட மைதானம் அவர்களது தேர்வில் இருக்கும் என்று பிரபாகரனின் போர் தந்திர அறிவு சொல்லியது.


பிரபாகரன் அவர்களால் நூறு வீரர்களுக்கு சமமானவர் என்று புகழப்பட்ட புலேந்திரன்.இந்தியா -இலங்கை கூட்டு சதியால் கைது செய்யப்பட்டு சயனைட் அருந்தி வீரச்சாவை தழுவினார்.இறக்கும் தருவாயிலும் இரண்டு சிங்கள வீரர்களை கொன்றவர்.அன்றைய காலத்திலேயே இவர் தலைக்கு இலங்கை அரசு பத்து லட்ச ரூபாய் அறிவித்திருந்ததாம்.
அக்டோபர் 12 ஆம் தேதி,அதிகாலை 72 பேரைக் கொண்ட காலாட்படை ஒரு வழியாகவும்,91 பேரைக் கொண்ட காலாட்படை இன்னொரு வழியாகவும் பிரபாகரன் தளத்தை நெருங்கிய அதே சமயத்தில் ஹெலிகாப்டர் மூலம் 303 அதிரடிப் படையினரும், 33 பேர் கொண்ட சீக்கியப்படை கமாண்டோக்களும் இறக்கப்பட்டனர்.

எதையும் சமாளிக்கும் போர்த்தந்திர வியூகத்துடன் பிரபாகரனும் தயாராக இருந்தார்.மைதானத்தைச் சுற்றி யிருந்த கட்டடங்களில் தாமே தேர்ந்தெடுத்த ஆட்களை பிரபாகரன் நிறுத்தியிருந்தார்.அதில் குறிப்பிடத் தக்கவர்கள் மாத்தையா,ஜானி,உளவுப் பிரிவு தலைவர் பொட்டம்மான்,நடேசன்.

பிரபாகரன் மைதானத்தின் மைய கட்டிடத்தில் இருக்க , மேலிருந்து கீழே இறங்கும் வீரர்களை சுட்டுவீழ்த்த வேண்டும் என்பது அவரின் கட்டளை. எதிர்பார்த்தது போல வீரர்கள் கீழே இறங்க இறங்க புலிகள் அவர்களை சுட்டுக் கொண்டே இருந்தனர்.பிரபாகரனைப் பிடிக்க வந்த 296 இந்திய இராணுவத்தினரில் இருவர் தவிர மற்றவர்கள் கொல்லப்பட்டனர்.


நாற்பது ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இந்திய ராணுவத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்திய கறுப்புத் தினமாக அந்த நாள் உருமாறியது.பி
பாகரனை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று திட்டம் தீட்டிய ராஜீவ் காந்தியின் அமைதிப்படையால் அந்த குள்ள சிங்கத்தின் கால் மயிரைக்கூட பிடுங்க முடிய வில்லை.

புலிகளை இரண்டே வாரத்தில் அழித்துவிடுவோம் என்று ராஜீவ் காந்தியிடம் அப்போதைய இந்திய ராணுவத் தளபதி சுந்தர்ஜி நம்பிக்கைத் தெரிவித்திருந்தார்.ஆனால் கிட்டத்தட்ட இரண்டரை வருடம் நீடித்த போரில் சுமார் 1500 வீரர்களை இழந்ததுமில்லாமல் பிரபாகரனின் நிழலைக்கூட நெருங்க முடியாமல் தோல்வி முகத்தோடு திரும்பியது உலகின் நான்காவது பெரிய ராணுவத்தை வைத்திருந்த இந்தியா..

உலகமே வியந்த புலிகளின் போர்த்தந்திரமும்,எதிர்த்துப் போராடும் குணமும்,பலமான தலைமைத்துவமும், நேர்த்தியான திட்டமிடலும் எப்படி நிலைகுழைந்து போனது என்பதுதான் இந்த நூற்றாண்டின் புரியாத புதிர்..
    


பி.கு.
சமீபத்தில் செல்லமுத்து குப்புசாமி அவர்கள் எழுதிய' பிரபாகரன் ஒரு வாழ்க்கை' என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்த போது என்னை மெய்சிலிர்க்க வைத்த பகுதி இது.அதிலுள்ள தகவல்களை மட்டும் எடுத்துக்கொண்டு இது எழுதப்பட்டது.. 


Sunday 26 May 2013

இந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா....?

நாட்ல எவ்ளோ சட்டங்கள் போட்டாலும் பெண்ணியத்திற்கு எதிராக நடக்கும் ஆணாதிக்க வன்செயல்கள் தொடர்ந்து பெருகிய வண்ணமே உள்ளது. அதை ஊடகங்கள் வழியாக அறியும் போது ஏனோ மனம் சொல்லொனாத் துயரம் அடைகிறது.

'வன்புணர்வு '...இந்த ஒற்றைச் சொல்லில்தான் எத்தனை வலிகள்..இதில் ஒளிந்திருக்கும் ஆற்றொணாத் துயரங்கள்தான் எவ்வளவு..எவ்வளவு...!

தான் கொண்ட அன்பை  பிற உயிர்கள் மீது மென்மையாக பிரயோகிக்கப் பழக்கப்பட்ட இந்த ஆண் வர்க்கங்கள் ஏனோ இந்த சிற்றின்பத்திற்காக பெண்மை மீது வக்கிர அம்பை மட்டும் வலுக்கட்டாயமாக செலுத்த முற்படுவதேன்..?

அடிக்கிற கைதான் அணைக்கும்....அணைக்கிற கைதான் அடிக்கும்...ஆனால் எப்போதும் ஆக்ரோசமாகவே திரிந்தால் எப்படி.........?    எப்படின்னேன்...?

சரி...சரி...மேட்டருக்கு வாறேன்..

இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் பட்டப்பகல்ல பலபேர் குடியிருக்கும் ஒரு பிளாட்ல பலவந்தமாக ஒரு பாலியல் வன்புணர்வு நடந்திருக்கு. அதுவும் வீட்டில் யாரும் இல்லை என்கிற எதேச்சையான சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இந்த சில்லுண்டி வேலையை செய்திருக்கு அந்த காம மிருகம்.

பாதிக்கப்பட்டது நம் இந்திய பிரஜை என்றால் பிரச்சனை நம்ம நாட்டோட முடிந்திருக்கும்.ஆனால் ஒரு வெளிநாட்டு..........,   இதுக்கு மேல என்னத்த சொல்றது...

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நேற்று காவல் நிலையம் வந்து புகார் கொடுத்துள்ளனர். அவர்களோ இது வெளிநாட்டு சமாச்சாரமாச்சே...மேட்டர் வெளியே தெரியாமல் இரு தரப்பையும் கூப்பிட்டு சமாதானம் செய்ய முற்பட்டுள்ளனர்.ஆனால் அந்த வெளிநாட்டு பார்ட்டி பிடிவாதமாக சண்டைபோட ஒருவழியாக இது ஊடகப் பார்வையில் பட்டு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், பாதிக்கப்பட்ட அந்த வெளிநாட்டு பார்ட்டி கீழ்தளத்தில்தான் குடியிருந்திருக்கிறது.மேல்தளத்தில்தான் அந்த காமகொடூரனின் வீடு இருந்திருக்கிறது.

நேற்று வெளிநாட்டுப் பார்ட்டியின் வீட்டில் எல்லோரும் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய போதுதான் அந்த அதிர்ச்சிகர சம்பவத்தை கண்டு மனம் பதை பதைத்து போயுள்ளனர்.அங்கே இருவரும் ஒட்டுத் துணியில்லாமல் உல்லாசமாக இருந்துள்ளனர்.

சரி...ஏதோ சின்னஞ்சிறுசுக.. அணைப் போட்டுத்தடுக்க அது என்ன ஆற்று வெள்ளமா...?  உணர்ச்சி மிகுதியில் சுயநிலை இழந்து மனநிலை பிறழ்ந்து தவறு செய்துவிட்டார்கள். காதும் காதும் வச்ச மாதிரி பெரிய மனசு பண்ணி அந்த ரெண்டு பேருக்கும் திருமணம் செய்து வைத்திருக்கலாம். அதானயா பெரிய மனுஷனுக்கு அழகு.அதை விட்டுட்டு பிரம்பை எடுத்து அந்த மேல்வீட்டு பார்ட்டியை வெளுத்து எடுத்திருக்கார். ஏதோ அலறல் சத்தம் கேட்குதேன்னு மேல் வீட்டிலிருந்து எல்லோரும் கீழே ஓடிவர அப்போதுதான் அவர்களுக்கு விவரம் தெரிந்திருக்கிறது.

" ஒழுங்கா கண்டிச்சி வீட்டுக்குள்ளேயே வச்சிருந்தா இந்த தப்பு நடந்திருக்குமா....." இது மேல் வீட்டுக்காரர்.

" ஏன்...ஒங்க வீட்ல கண்டிச்சி வளர்க்கப் படாதா... பகலெல்லாம் ஊர் மேயுது... தெருவுல சுத்துற நாயிக்கு வெளிநாட்டு ஆசையா...இது சும்மா விடப்போறதில்ல..போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறேன்..." இது கீழ்வீட்டுக்காரர்.

" போ..போ..தாரளாமா குடு... ஆனா ஒன்னு மட்டும் புரிஞ்சுக்க...ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா?.."

இப்படியாக தொடர்ந்த வாக்குவாதம் கடைசியில் கைகலப்பில் முடிய..இறுதியில் காவல்துறை நுழைய வேண்டிய கட்டாயம் உருவானது.

துடியலூர் காவல் நிலையத்தில் அவர்கள் செய்த வாக்குவாதம் எப்படியோ ஊடகங்களில் வெளிவர அதைத் தான் இங்கே போட்டிருக்கேன் சாமி... எம்மேல எந்த தப்பும் கிடையாது.

கீழ்வீட்டுக்காரர்:  ஐயா...நான் வளர்ப்பது வெளிநாட்டு ஜாதி நாய். சாதாரணமாக வெறும் சோறும் குழம்பும் ஊற்றி வளர்க்கவில்லை. மட்டன் போட்டு வளர்க்கிறேன். தினமும் சோப்பு, ஷாம்பு போட்டு குளிப்பாட்டி விடுகிறேன். பிறகு பவுடர்,சென்ட் போட்டு  எந்த ஊர் நாயின் கண்ணின் படாமல் வீட்டுக்குள்ளேயே பொத்திப் பொத்தி வளர்த்து வந்தேன்யா...  ஊர் மேயும் அந்த  நாட்டு நாய்க்கு என் ஜாதி நாய் கேட்குதாய்யா..?

மேல் வீட்டுக்காரர்: நாய்கள் என்றால் அப்படித்தான் இருக்கும். உன்னுடையது ஜாதி நாய் என்றால் வீட்டுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டியது தானே? வெளியே விட்டது உன் தப்பு...ஊசி இடம்கொடுக்காமல் நூல் நுழையுமா?


பாவங்க அந்த போலீஸ்கார்....எவ்வளவு சமாதானம் சொல்லியும் அந்த 'வெளிநாட்டு நாய்' வீட்டுக்காரர் சமாதானம் அடையவில்லையாம்..அதுக்கு பிறக்கபோற குட்டிக்கு  யார் அப்பான்னு தெரியாம ஒரு புதியபாதை பார்திபனாகவோ...தளபதி சூர்யாவாகவோ மாறிட்டா என்ன பண்றது..?

(யோவ்..கோயம்பத்தூர்காரங்க எல்லாம் குசும்பு காரங்கனு தெரியும்...அதுக்குனு இவ்ள அலும்பு தாங்காதுய்யா...)