Tuesday 28 May 2013

எங்கே போனது புலிகளின் வீரம்....?1987-ஆம் வருடம் புலிகளின் போராட்ட வாழ்க்கையில் மிக சோதனையான காலகட்டம். எந்த நாடு தமக்கு விடுதலை வாங்கித்தரும் என்று இத்தனை நாட்களாக நம்பி இருந்தார்களோ அதே நாடு அமைதிப்படை என்கிற ரூபத்தில் தங்களை கொன்றழிக்கும் என்பதை துளியும் எதிர்பார்க்கவில்லை...

சாகும்வரை உண்ணாவிரதமிருந்த திலீபனின் மரணம், குமரப்பா,புலேந்திரன் உட்பட பதினேழு விடுதலைப் புலிகள் சயனைடு குப்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்,ஜெயவர்தனே அரசுடன் இணைந்து  இந்திய அரசு செய்த குள்ளநரித்தனம்,ஒரு கட்டத்தில் பிரபாகரனையே கொல்ல உத்தரவு கொடுத்த அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியின் நய வஞ்சகத்தனம் என அடுத்தடுத்த நம்பிக்கை
த் துரோகத்தால் விடுதலைப் புலிகள் முற்றிலுமாக இந்திய அமைதிப்படைக்கு எதிராக போர் புரிய ஆயத்தமாகி யிருந்தனர்.அதாவது உலகின் நான்காவது மிகப் பெரிய ராணுவமாகிய இந்தியாவைப் போர் முனையில் எதிர்கொள்ளவேண்டிய கட்டாயம் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகளுக்கு உருவானது.

அக்டோபர் 10-ஆம் தேதி இந்திய அமைதிப் படையால் புலிக
ளிம் டிவி நிலையமும்,வானொலி நிலையமும் தகர்க்கப்பட்டு, அதைத் தொடர்ந்து ஈழமுரசு மற்றும் முரசொலி ஆகிய பத்திரிக்கை அலுவலகங்களும் தாக்கி அழிக்கப்பட்டன.

யாழ் பல்கலைக் கழகத்துக்கு அருகில் கொக்குவில் பகுதியில் பிரம்படி வீதியில் விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர் நிலை கொண்டிருப்பதாக அவர்களின் ரேடியோ தொலைத் தொடர்பை ஒட்டுக் கேட்ட இலங்கை ராணுவத்தின் உளவுத் துறை இந்திய அமைதிப்படைக்குத் தகவல் தந்தது.

'தலை'யை அகற்றி விட்டால் புலிப் போராளிகள் சீர் குலைந்து,மனம் தளர்ந்து எதிர்ப்
பில்லாமல் சரணடைந்து விடுவார்கள் என்று கணிக்கப்பட்டது. விமானப் படையைக் கொண்டுவந்து பிரபாகரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை அழிப்பதாகத் திட்டம்.அதை செயல் படுத்தும் விதமாக யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்குப் பக்கத்தில் அமைந்திருந்த வளாகத்தை இந்திய ராணுவம் தேர்ந்தெடுத்திருந்தது.

ஆனால் அதை பிரபாகரன் முன்கூட்டியே கணிக்கத் தவறவில்லை.இந்திய ராணுவம் தன்னை எப்படியும் கைது செய்யும் என்று அவருக்குத் தெரியும் .அப்படிக் கைது செய்ய முயற்சிக்கும் பட்சத்தில் மருத்துவ பீட மைதானம் அவர்களது தேர்வில் இருக்கும் என்று பிரபாகரனின் போர் தந்திர அறிவு சொல்லியது.


பிரபாகரன் அவர்களால் நூறு வீரர்களுக்கு சமமானவர் என்று புகழப்பட்ட புலேந்திரன்.இந்தியா -இலங்கை கூட்டு சதியால் கைது செய்யப்பட்டு சயனைட் அருந்தி வீரச்சாவை தழுவினார்.இறக்கும் தருவாயிலும் இரண்டு சிங்கள வீரர்களை கொன்றவர்.அன்றைய காலத்திலேயே இவர் தலைக்கு இலங்கை அரசு பத்து லட்ச ரூபாய் அறிவித்திருந்ததாம்.
அக்டோபர் 12 ஆம் தேதி,அதிகாலை 72 பேரைக் கொண்ட காலாட்படை ஒரு வழியாகவும்,91 பேரைக் கொண்ட காலாட்படை இன்னொரு வழியாகவும் பிரபாகரன் தளத்தை நெருங்கிய அதே சமயத்தில் ஹெலிகாப்டர் மூலம் 303 அதிரடிப் படையினரும், 33 பேர் கொண்ட சீக்கியப்படை கமாண்டோக்களும் இறக்கப்பட்டனர்.

எதையும் சமாளிக்கும் போர்த்தந்திர வியூகத்துடன் பிரபாகரனும் தயாராக இருந்தார்.மைதானத்தைச் சுற்றி யிருந்த கட்டடங்களில் தாமே தேர்ந்தெடுத்த ஆட்களை பிரபாகரன் நிறுத்தியிருந்தார்.அதில் குறிப்பிடத் தக்கவர்கள் மாத்தையா,ஜானி,உளவுப் பிரிவு தலைவர் பொட்டம்மான்,நடேசன்.

பிரபாகரன் மைதானத்தின் மைய கட்டிடத்தில் இருக்க , மேலிருந்து கீழே இறங்கும் வீரர்களை சுட்டுவீழ்த்த வேண்டும் என்பது அவரின் கட்டளை. எதிர்பார்த்தது போல வீரர்கள் கீழே இறங்க இறங்க புலிகள் அவர்களை சுட்டுக் கொண்டே இருந்தனர்.பிரபாகரனைப் பிடிக்க வந்த 296 இந்திய இராணுவத்தினரில் இருவர் தவிர மற்றவர்கள் கொல்லப்பட்டனர்.


நாற்பது ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இந்திய ராணுவத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்திய கறுப்புத் தினமாக அந்த நாள் உருமாறியது.பி
பாகரனை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று திட்டம் தீட்டிய ராஜீவ் காந்தியின் அமைதிப்படையால் அந்த குள்ள சிங்கத்தின் கால் மயிரைக்கூட பிடுங்க முடிய வில்லை.

புலிகளை இரண்டே வாரத்தில் அழித்துவிடுவோம் என்று ராஜீவ் காந்தியிடம் அப்போதைய இந்திய ராணுவத் தளபதி சுந்தர்ஜி நம்பிக்கைத் தெரிவித்திருந்தார்.ஆனால் கிட்டத்தட்ட இரண்டரை வருடம் நீடித்த போரில் சுமார் 1500 வீரர்களை இழந்ததுமில்லாமல் பிரபாகரனின் நிழலைக்கூட நெருங்க முடியாமல் தோல்வி முகத்தோடு திரும்பியது உலகின் நான்காவது பெரிய ராணுவத்தை வைத்திருந்த இந்தியா..

உலகமே வியந்த புலிகளின் போர்த்தந்திரமும்,எதிர்த்துப் போராடும் குணமும்,பலமான தலைமைத்துவமும், நேர்த்தியான திட்டமிடலும் எப்படி நிலைகுழைந்து போனது என்பதுதான் இந்த நூற்றாண்டின் புரியாத புதிர்..
    


பி.கு.
சமீபத்தில் செல்லமுத்து குப்புசாமி அவர்கள் எழுதிய' பிரபாகரன் ஒரு வாழ்க்கை' என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்த போது என்னை மெய்சிலிர்க்க வைத்த பகுதி இது.அதிலுள்ள தகவல்களை மட்டும் எடுத்துக்கொண்டு இது எழுதப்பட்டது.. 


No comments:

Post a Comment