Monday 29 July 2013

சீமானின் அரிய கண்டுபிடிப்பும் ஒத்த ரூவா ஃபுல் மீல்சும்.. (சும்மா அடிச்சு விடுவோம்..1)

 ம்ம செந்தப்ளர் சீமான் அண்ணாச்சி தமிழ் கூறும் நல்லுலகே பெருமைப்படத்தக்க ஒரு அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டுருக்கிறார். அது என்னான்னு சொன்ன உடனையே எல்லோரும் கைதட்டி ஆதரவு தெரிவித்து தமிழர்களின் பண்பாட்டைக் காப்பாத்தனும்னு வேண்டி விரும்பி கேட்டுக்கிறேன்.

அதாவது "தோற்றோர் இயல்" எனும் தமிழ் சொல்லே "Tutorial" என்னும் ஆங்கில சொல்லாக மாறி இருக்கிறது. இதுதான் அந்த அரிய கண்டுபிடிப்பு....சரி தட்டினது போதும்.. அடுத்த மேட்டருக்கு வருவோம்.(அப்போ ' TUTOR ' என்கிற சொல் ' தோற்றார் ' என்கிற சொல்லிலிருந்து வந்ததா என கேள்வி எல்லாம் எழுப்பக் கூடாது.) இதையடுத்து அண்ணனின் அடுத்த ஆராய்ச்சியைப் பற்றி விசாரித்தபோது நமக்கு கிடைத்த தகவல்கள் இதோ...

FACIAL -  பேசா இயல் ( அதாவது இது போடும்போது யாரும் பேசாமல் இருப்பதால்)

BACTERIAL  - பாக்க முடியா இயல்...

PRINCIPAL -பிரிச்சி மேய்ஞ்ச ஆள்.(இதுவே காலப்போக்கில் பிரிஞ்ச ஆள் என மாறி கடைசியில் பிரின்சிபால் ஆனது)

VICTORY -வெற்றியைத்தான் அப்படி விரிச்சி சொல்றானுவ....
  
DONKEY -தாங்கி  ( பொதி சுமக்கும்போது தாங்கி தாங்கி நடப்பதால் தமிழில் தாங்கி என அழைக்கப்பட்டு பிற்பாடு ஆங்கிலத்தில் டாங்கி என மாறியது.)

MONKEY - மரத்துக்கு மரம் தொங்குவதால் தமிழில் 'மர தொங்கி' என்பது பின்பு ஆங்கிலத்தில் மங்கி ஆனது. 

-இன்னும் அண்ணனின் ஆராய்ச்சி தீவிரமாக போய்க்கொண்டிருப்பதாக தகவல்.
 
தாவது  பரவாயில்ல.. நம்ம ஃபரூக் அப்துல்லா அதைவிட அருமையான மேட்டர கண்டுபிடிச்சிருக்கார். அவர் என்ன சொல்றார்னா ஒரு ரூபாய் இருந்தாலே போதும் நம் இந்தியாவில் வயிறு நிறைய சாப்பிடலா ங்கிறார்.  இது இந்தியா முழுவதும் கடும் கண்டனங்களையும் அதிர்ச்சியையும் உண்டு பண்ணினாலும் ஏன் அப்படி சொன்னார் என்பதை கொஞ்சம் யோசித்துப் பாக்கணும்..

சரி இதப்பத்தி நம்ம விஐபி எல்லாம் என்ன சொல்றாங்கன்னு கேக்குரதுக்காக ஒரு ரவுண்டு வந்தேன்.

 ஜெயா:.இதில் ஒன்றும் ஆச்சர்யம் இருப்பதாக எனக்குப் படவில்லை. என் ஆணைப்படி... மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய நான் பிறகு என் ஆணைப்படி... எப்படி ஐந்தே வருடத்தில் அறுபது கோடிக்கு மேல் சொத்து சேர்க்க முடிந்தது என கேள்வி கேட்ட கோர்ட்டையே என் ஆணைப்படி நான் வாய்தா மேல வாய்தா வாங்கி இழுத்தடிக்க வில்லையா...? பிறகு என் ஆணைப்படி....

கேப்டன்: (நாக்கை நான்காக மடிக்கிறார்.)  எவண்டா சொன்னது ங்கொய்யால. ஒரு ரூபாயை வச்சு சரக்குக்கு சைடு டிஷ் கூட வாங்க முடியாதுடா ங்கொம்மால. இதுல புல் மீல்ஸ் சாப்பிட முடியுமா.. தமிழ் நாட்டுல மொத்தம் 8658 சாப்பாடு கடை இருக்கு. அதுல நான் வெஜ் 6854. வெஜ்....................(குதிச்சிடுடா கைப்புள்ள...) 

கமல்:ஒரு ரூபாய் என்பது மிகச்சிறிய தொகையாக இருந்தபோதிலும் அது நம் சமூகத்துக்கு நன்மை பயக்கும் என்று எண்ணுகிற அதே வேளையில், அனைவருக்கும் ஒருவேளை உணவு கிடைப்பதரிதான இந்த அசாதாரண சூழலில் ஒரு ரூபாய்க்கான  உணவை கற்பனையாக வடிக்கும் பட்சத்தில்,அது உணவுத் தேவையை எந்த அளவுக்கு நிறைவு செய்யும் என்பதை கருத்தில் கொள்ளவேண்டிய காலகட்டத்தின் மையப்புள்ளியிலிருந்து யோசிக்க வேண்டியது  இங்கே மிக கட்டாயமாகிறது. இன்னும் சொல்லப்போனால்.... (என்னது இன்னுமா...? )

 கவுண்டமணி செந்தில்

'அண்ணே ... ஒரு ரூவாய்க்கு சோறு தர்றாங்கலாமே.. நான் வேணா வாங்கியாரவாண்ணே...? '

'யாரு..நீயி  ..? டேய் கோமுட்டித்தலையா நீ யாருன்னு எனக்கு தெரியும்.. நான் யாருன்னு உனக்கு தெரியும். நாம ரெண்டு பேரும் யாருன்னு இந்த உலகத்துக்கே தெரியும்... நான் ஒரு ரூவா கொடுப்பேன்.நீ வாங்கி தின்னுட்டு கீழ கெடக்கிற ஒரே ஒரு பருக்கையை எடுத்து வந்து ஒரு ரூவாய்க்கு இதா
ண்ணே கொடுத்தாங்கன்னு சொல்லுவ.. இந்த டகால்டில்லாம் என்கிட்டே நடக்காது மகனே . ஓடிப்போயிடு நாயே...'

கடைசியா நம்ம தலகிட்ட போனோம்...

ஒரு  மணிநேரமா எப்படி கொடைஞ்சும் வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட வரல. ஆனா கண்ணு மட்டும் சிவந்து போறத வச்சி தல ரொம்ப கோபமா இருக்கிறத உணர முடிஞ்சது. ஒரு கட்டத்துக்கு மேல பொறுமை இழந்து...

'இந்தாயா ஒரு ரூபாய்...இதுல போயி ஒரு புல் மீல்ஸ் வாங்கி வா...'

'ஒரு ரூபாய்க்கு எங்க தல புல் மீல்ஸ் கிடைக்கும்..?'

'தெரியுதுல...பின்ன எதுக்கு இங்க வந்து கேக்குற....?'

'இல்ல..அந்த பாரூக்..............'

'ஆமாயா....அந்த ஆளுதான் சொன்னான்.. டெயிலி ஒரு வேலையும் செய்யாம வெட்டியா சோறு திங்கிறேன்ல. அந்த வயித்தெரிச்சல்ல குத்திக் காமிக்கிரான்யா அந்த ஆளு.. உண்மை தெரிஞ்சிடுச்சுல... கிளம்பு கிளம்பு ."

Saturday 27 July 2013

உங்களை பிரபல பதிவராகக் காட்டிக் கொள்வது எப்படி..?

     எப்படி பதிவு போட்டாலும் ஹிட்ஸ் ஆக மாட்டேங்குது. ஓட்டும் விழ மாட்டேங்குது. கமெண்ட்ஸ்-ம் கிடைக்கல. பாலோயர்ஸ்-ம் அதிகரிக்க மாட்டேங்குது. இப்படியே போனா நான் எப்போ பிரபல பதிவர் ஆவது என பீல் பன்றிங்களா....?

' பிரபல பதிவர் ஆவது எப்படி...? ' னு 'மிகப் பிரபலபல பதிவர்கள்' போட்ட பழைய பதிவை ஃபாலோ பண்ணியும் பாத்துட்டேன்.அப்பவும் பிரபல பதிவராக முடியலனு வருத்தப்படுறீங்களா...?

கவலையை விடுங்க. நீங்களும் பிரபல பதிவர்தான். அது எப்படி சாத்தியம்னு தர்க்க ரீதியா கேள்வி எழுப்பாம கீழே உள்ளத பாலோ பண்ணினா நீங்களும் பிரபலபல பதிவர்தான்...


1. பிரபல பதிவருக்கான முதல் தகுதி மத்தவங்க பதிவுல போயி கமெண்ட் போடக்கூடாது. அதிலும் இந்த புதுசா எழுத வர்றவங்க, ஒரு வருசத்துக்கு முன்னால எழுத ஆரமிச்சவுங்க.....இவுங்க  பதிவுல போயி கமெண்ட் போட்டீங்க.... அவ்வளவுதான். பிரபல பதிவருக்கான தகுதியை அடுத்த நொடியே  இழந்திருவீங்க.

2. சரி.. கமெண்டே போடலனா நம்மை எப்படி கண்டுக்குவாங்கனு கேட்பீங்களே...அதுக்கு ஒரு டெக்னிக் இருக்கு. மிகப் பிரபலபல பதிவர்னு சொல்லிட்டு சிலர் இருப்பாங்க. அவுங்க பதிவுல போயி, அருமை.., கலக்கல்..., நல்லாயிருக்கு..., great writeup. keep it up  இப்படி ஏதாவது  ஒரு டெம்பிளேட் கமெண்ட் போட்டுட்டு வந்திடுங்க. ஸ்மைலி மட்டும் போட்டால் இன்னும் வசதி. பார்ரா.. மிகப் பிரபலபல பதிவர் போஸ்ட்ல மட்டும் கமெண்ட் போடுறாரு.. அதுவும் டெம்பிளேட் கமெண்ட்.அப்படினா இவரும்  பிரபல பதிவர்தான்யானு ஒரு இமேஜ் தானா வந்துடும்.


3.முக்கியமா உங்க பதிவில யாராவது கமெண்ட் போட்டா விழுந்தடிச்சி ரிப்ளை பண்ணக் கூடாது. அப்புறம் கமெண்டுக்கு அலையிறான்னு இமேஜ் உருவாகிடும்(பின்ன.. பிரபல பதிவர் ஆக வேண்டாமா ). அப்படியே பண்ணினாலும் குறிப்பிட்ட 'மிகப் பிரபலபல பதிவர்' போட்ட கமெண்டுக்கு மட்டும் ரிப்ளை பண்ணிட்டு விட்டுடணும். 

4.முக்கியமா  'Comment moderation has been enabled ' இதை விட்டுடாதிங்க. கமெண்டே விழலனானும் இதை வச்சி மெயிண்டைன் பண்ணிக்கலாம். நிறைய கமெண்ட் விழுந்தும் அத ரிலீஸ் பண்ண டைம் இல்லாம பிசியா இருக்கிற மாதிரி காட்டிக்கலாம். ஒரு கமெண்ட் கூட விழலனா அனானியா ரெண்டு கமெண்ட் நாமே போட்டுக் கலாம்.

5.மொத்தமா பத்தே பதிவுதான் போட்டிருந்தாலும்(அதுல ஒன்பது காபி பேஸ்டா இருந்தாலும் ) 'எனது பத்தாவது பதிவு' அப்படின்னு ஒரு பதிவு போடுங்க. அதுல செண்டிமெண்டா சில மேட்டர சேக்கணும்.. பெத்தவங்க, வளத்தவங்க, வாத்தியார் மொத கொண்டு எல்லாருக்கும் ஒரு நன்றியை சொல்லிபோடனும். அப்படியே, நான் யாருக்குமே கமெண்ட் போட்டதில்லைனாலும் எனக்கு தொடர்ந்து கமெண்ட் போடுற உங்களுக்கு நான் என்ன செய்யபோறேன்னு கண் கலங்கிற மாதிரி ஒரு பத்தி சேத்து விடுங்க.

6. ' வலையுலகத்திலிருந்து விடைபெறுகிறேன் நண்பர்களே' அப்படின்னு திடீர்னு ஒரு பதிவு போடனும். ஒரே நாள்ல பிரபல பதிவர் ஆவதற்கு இதுதான் சிறந்த வழி.இதுவரையில வராதவங்க எல்லாம் வருவாங்க. கமெண்டு போடாதவங்க எல்லாம் போடுவாங்க... சீக்கிரமே வரணும், மறுபரிசீலனை செய்யனும்னு சொல்வாங்க. சில பேரு ஒருபடி மேலே போயி பதிவுலகத்திற்கே பேரிழப்புனு சொல்வாங்க. அதெல்லாம் பிரியத்தில சொல்றாங்கன்னு நினைக்கக் கூடாது.அப்பாடா எண்ணிக்கையில ஒன்னு கொறைஞ்சி போச்சு என்கிற சந்தோசத்திலதான்.

7. ஆனால் அடுத்த வாரமே ' மீண்டும் பதிவுலகில் நான்'  என இன்னொரு பதிவு போடனும். ( நைசா முன்னாடி போட்ட பதிவை அழிச்சிடனும்) . உடனே , வருக நண்பரே..மீண்டும் பதிவுலகத்திற்கு வந்ததற்கு நன்றி..... அடுத்த இன்னிங்க்சை ஆரம்பிங்க....இப்படி வரிசையா கமெண்ட் விழும்.  எல்லாம் சந்தோசத்தில போடுறாங்கனு நெனைப்பீங்க. அதுதான் இல்ல.. ' ங்கொய்யால  உடனே வந்துட்டான்யா..." இதைத்தான் அப்படி சொல்ல வர்றாங்க.
8.  எந்த பத்திரிக்கையாளரோ அல்லது எழுத்தாளரோ இணையத்தில் எழுதும் யாரையோ மறைமுகமா குறிப்பிட்டு சொன்னால், அவர் என்னைத்தான் சொன்னார்னு ஒரு பதிவு போடனும்.  

9. ஏதாவது ஒரு திரட்டியை திட்டி பதிவு போடனும். அந்த திரட்டி இல்லனா வலைப்பூவே இயங்காதானு கேள்வி கேக்கணும். இவ்வளவு போல்டா பதிவு போடுறார்னா இவர் கண்டிப்பா பிரபல பதிவர்தான்னு நினைப்பாங்க. ஆனா அடுத்த மாசமே நைசா அதே திரட்டில உங்க பதிவைகளை இணைச்சு விட்டுடணும்.

10. சமீபத்தில், முகநூளில் அதிக லைக் வாங்கிறவங்க பின்னால மாபியா கும்பல் இருக்குனு மனுஷ்ய புத்திரன் சொன்னவுட
ன், அஞ்சு பத்து லைக் வாங்கிறவன் கூட பொங்கி எழுந்தான். அப்பத்தான் எவன் எவன் தன்னை பேஸ்புக் பிரபலம்னு நினைச்சுட்டு இருக்கான்னு தெரிஞ்சது. அதேப் போல பிளாக்கரைப் பத்தி யாராவது, எங்கேயாவது , ஏதாவது சொன்னா.. பொங்குற மொத ஆளு நீங்களா இருக்கணும்.

11. ஒரு பொண்ணோட மனச இன்னொரு பொண்ணுதான் புரிஞ்சுக்க முடியும் என்பது மாதிரி..பிரபல பதிவர் ஆவது எப்படிங்கிறது ஒரு பிரபல பதிவருக்குத்தான் தெரியும் என்கிற லாஜிக் படி, 'பிரபல பதிவர் ஆவது எப்படி' னு ஒரு பதிவ போட்டீங்கனா...


இந்த நாள் மட்டுமல்ல வருடத்தில் எல்லா நாட்களும் நீங்கள் பிரபல பதிவர்தான்.Thursday 25 July 2013

என் முதல் கணினி அனுபவமும் என் முதல் மனைவியும்.... (தொடர் பதிவு)


சகோ.."காணாமல் போன கனவுகள்" ராஜி அவர்கள் முதல் கணினி அனுபவத்தைப் பற்றிய தொடர்பதிவை ஆரம்பித்து வைத்தார். அதற்காக இரண்டாவது ரவுண்டிலே நான் வருவேன் என எதிர்பார்க்கவில்லை.தொடர் பதிவுக்கு அழைத்த தமிழ்வாசி பிரகாசுக்கு கோடானுகோடி நன்றிகள் சொல்லி என் அனுபவத்தை இங்கே பகிர்கிறேன்.

( கொஞ்சம் பெரிய பதிவு...உங்களின் பொறுமைக்கு நன்றி)

1993-ல திருச்சி மண்டல பொறியியல் கல்லூரியில இஞ்சினியரிங் சேர்ந்தேன்.அதுக்கு முன்னால கம்ப்யூட்டரை கண்ணால கூட பாத்தது இல்ல.நகர்ப்புறங்களிலேயே அவ்வளவாக பயன்பாட்டுக்கு வராத கம்ப்யூட்டரை கிராமத்திலிருந்து வந்த எனக்கு எப்படி தெரியும்..?

முதல் வருசத்தில் ஃபோர்ட்டான் 77 என்கிற சப்ஜெக்ட்.அதன் மூலம்தான் எனக்கு கம்ப்யூட்டர் பரிச்சயம் ஆனது. அப்போதெல்லாம் MS-DOS மட்டுமே இருந்ததால்(அப்படித்தான் நெனைக்கிறேன்) இப்ப இருக்கிற மாதிரி கலர்ஃபுல் கவர்ச்சி எல்லாம் கிடையாது.இணையமும் கிடையாது. புரோக்ராம், AUTOCAD போன்ற மேல்மாடி சமாச்சாரங்களுக்கு மட்டுமே உபயோகப் படுத்துவதால் இயற்பியல் லேபில் உள்ளதுபோல் கம்ப்யூட்டரும் ஏதோ ஒரு இன்ஸ்ட்ருமென்ட்/எக்யுப்மென்ட் அவ்வளவுதான் .

எனக்கு கணிதம் கொஞ்சம் நல்லா வந்தாலும்( நம்பித்தான் ஆகணும்) இந்த கம்ப்யூட்டர் புரோக்ராம் என்றாலே கொஞ்சம் உதறல்தான். எங்க காலேஜ்ல ஆக்டகன்(Octagon) என்கிற மிகப்பெரிய கம்ப்யூட்டர் சென்டர் இருக்கு. அப்பவே 500 கம்ப்யூட்டருக்கு மேல் இருக்கும்.ஆசியாவிலேயே இதுதான் ரொம்பப் பெருசுனு சொல்வாங்க. அங்கதான் ரெகுலரா எங்களுக்கு கம்ப்யூட்டர் வகுப்பு நடக்கும்.

தமிழ் மீடியம் என்பதால்,சேர்ந்த புதிதில் சாதாரணமாவே எல்லா வகுப்பிலேயும் பேந்தபேந்த முழிக்கும் எனக்கு கம்ப்யூட்டர் கிளாஸ் என்பது கண்ணை கட்டி காட்ல விட்டது போலதான்.அந்த பயத்தாலேயே முதல் ரெண்டு மூணு வகுப்பை கட்டடிச்சுட்டேன்.கூடவே இன்னும் ரெண்டு பேரும்(எங்க போனாலும் நமக்குனே இப்படி ஒரு செட் சேரும்). அதுக்குள்ளே எப்படி லாக்இன் செய்வது ,பேசிக் புரோகிராம் எழுவது எல்லாம் நடத்திட்டாங்க. அடுத்த கிளாசுக்கு நான் போனப்போ, என்னைத்தவிர எல்லோரும் ஏதோ டைப்பிகிட்டு இருந்தாங்க.எனக்கு ஒன்னுமே புரியில. இருந்தாலும் AC ரூம்..எதிர்ல தனி கம்ப்யூட்டர்...வேறு ஒரு உலகத்ல இருக்கிற ஃபீலிங்..!

நமக்கு எப்போதும் எதையாவது நோண்டிகிட்டு இருக்கணும். மெக்கானிகல் எஞ்சினியர்(!) இல்லையா..? அது ஒத்த பைசாவுக்கு பிரயோசம் இல்லன்னாலும் எதையாவது கழட்டி உள்ள என்ன இருக்குனு பாக்குற ஆர்வம். அப்படியொரு ஆர்வக் கோளாறுல ஒரு தப்பு செஞ்சுட்டேன்.

எனக்கு கம்ப்யூட்டரே ஆச்சர்யம் என்றால் அதைவிட பெரிய ஆச்சர்யம் மவுஸ். இது எப்படி டேபிள்ள வச்சு தேய்ச்சா ஸ்க்ரீன்ல வேலை செய்யுது...? என் மூளை பரபரன்னு வேலை செய்ய ஆரம்பிச்சது. உடனே திருப்பி பாத்தேன்.  உள்ள ஏதோ பால் சுத்திகிட்டு இருந்தது.  இந்த பால் சுத்தறதால தான் கம்ப்யூட்டரே வேலை செய்யுதுனு நெனச்சிட்டு எதையோ திருகி என்னவோ பண்ணிட்டேன் போல.பால் கையோட வந்துடிச்சி...! ஆகா இந்த பாலுக்கும் மவுசுக்கும் எதோ கனெக்சன் இருக்கு போல. இப்ப கட்டயிடுச்சி.அடுத்து என்ன பன்றதுனு தெரியாம முழிச்சிகிட்டு இருந்தேன்.

மத்தவிங்க எல்லாம் புரோகிராம் எழுதறதுல வந்த டவுட்ட கேட்கிறதுக்காக மாஸ்டரை அங்கயும் இங்கயும் கூப்பிட்டுகிட்டு இருந்தாங்க. இப்போ நான் என்ன சொல்லி அவர கூப்பிடறதுனு தெரியாம முழிக்க,அதை மாஸ்டர் எப்படியோ நோட் பண்ணிட்டாரு. நான் ஏதோ ப்ரோக்ராம் எழுதுற சந்தேகத்தில உட்காந்திருக்கேனு வேகவேகமா என்கிட்டே வந்து, எஸ்...எனி டவுட்..? னு கேட்டுட்டு கீழ பாத்தாரு..அங்க ஒரு கையில மவுஸ்.. இன்னொரு கையில பால்.. அவ்வளவுதான்.. @#$&^&%#%^^&%&% ஸ்டுபிட்... #&*&*^^^%$%^%$#$%^^ இடியட்..  நல்லவேளை இங்கிலிஸ்ல திட்டினதால பொறுத்துகிட்டேன்.மவனே தமிழ்ல மட்டும் திட்டி இருந்தாரு........ அழுதிருப்பேன்.  :-(

ஆக்டகன் 24 மணி நேரமும் திறந்திருக்கும்.அதனால் எப்போ வேண்டுமானாலும் உள்ளே போய் பிராக்டிஸ் செய்யலாம். மொத வருஷம் பூரா, விழுந்த அரியரை கிளியர் பன்றதுக்குள்ள தாவு தீர்ந்து போச்சு. இதுல எங்க பிராக்டிஸ் செய்யுறது..? ஒரு வருஷம் கழிச்சி போனா அவனவன் எங்கேயோ போய்கிட்டு இருந்தானுவ. இப்ப போயி எப்படி லாக்இன் பன்றதுன்னு கேக்க முடியுமா..சரி நாம தான் மெக்கானிகல் பிராஞ்ச் ஆச்சே. நமக்கு எதுக்கு கம்ப்யூட்டர்னு விட்டுடேன்.

ஆக்டகன் முன்பு நான்... வலப்பக்க படத்தில் இடமிருந்து வலமாக கீழே முதலில் உட்காந்திருக்கேன்.(1994 ல எடுத்தது)
ஆனா சில பக்கிக நைட்டு பத்து மணிக்கு நோட்டும் கையுமா கிளம்பி போவானுக. எங்கடா மாப்ள போறனு கேட்டா ஆக்டகன்னு சொல்லி வெறுப்பேத்துவானுவ.கடைசில வேற வழியில்லாம நானும் போக ஆரம்பிச்சி ட்டேன். போயி பிராக்டிஸ் பன்றதுக்கு தானேனு கேட்கிறீங்களா..அதுதான் இல்ல. அங்க ஒரு வாட்டர் கூலர் இருக்கும்.காலேஜ்லே அங்கதான் சில்ல்டு வாட்டர் கிடைக்கும். அப்படியே குருப்பா போயி தண்ணி குடிச்சிட்டு திரும்பி வந்துடுவோம்.

அதிலும் அந்த செக்யூரிட்டி இருக்கானே.உள்ள போறதுக்கு எல்லோரும் ஐடி கார்டு காமிச்சிட்டுதான் போகணும். நாங்க வந்தாலே,'தண்ணி குடிக்க தான வந்தீங்க.அதுக்கெல்லாம் ஐடிகார்டு தேவையில்ல.குடிச்சுட்டு போங்க'னு நக்கலடிப்பான்.

காலேஜ் முடிக்கிறப்போ,என்கிட்ட இருந்த அறிவுக்கும் திறமைக்கும் ஆஃப்ட்ரால் இந்த கேம்பஸ் இன்டர்வியூவ் -ல செலக்ட் பண்ணிதான் எனக்கு வேலை கொடுக்குனுமான்னு என்னை யாருமே எடுக்கல.அப்புறம் அம்பத்தூர் வந்து CNC பீல்டுல முட்டி மோதி செட்டிலானேன்..

ஆனா எந்த அளவுக்கு கணினியை வெறுக்க ஆரம்பிச்சேனோ,பின்பு அதைவிட அதிகமாக அதை காதலிக்க ஆரம்பித்தேன். சிங்கப்பூருக்கு தேர்வாகி விசா கூட வந்துட்டு. நான் கிளம்பு இரண்டு வாரம் இருக்கையில் செப்-11 தாக்குதல் நடத்தது( பில்லேடனுக்கே பொறுக்கல போல). அதனால கிளம்புற டேட் தள்ளிப் போயிட்டே இருந்தது. அந்த நேரத்தில ஏற்பட்ட மன உளைச்சலைப் போக்க ' MASTERCAM ' படிச்சேன். படிச்சி முடிச்சுட்டு நானே மாஸ்டரா ஆயிட்டேன். அப்ப தொட்டதுதான். இப்ப தூங்கிற,திங்கிற,குளிக்கிற நேரம் மட்டும்தான் கணினியை தொடல.

 அடுத்து என் முதல் மனைவியைப் பற்றி...

ணினி மீது அதீத காதல் ஏற்பட்டவுடன் எனக்குள்ள ஒரு வெறி(!?) என்னையறியாமலே பரவ ஆரம்பிச்சுட்டு. அது சொந்தமாக கம்ப்யூட்டர் வாங்கியாகனும் என்று. அந்த நேரத்தில நம்ம ஊரில் அது சாத்தியமில்லை என்பதால் சிங்கை வந்த பின்பு முதல் மாத சம்பளத்தில் கம்ப்யூட்டர் வாங்கியே தீருவது என முடிவு செய்தேன். பொதுவாக வெளிநாடு வருபவர்கள் முதலில் எஜென்ட்டுக்கு கொடுக்க வாங்கிய கடனை செட்டில் பண்ண முயற்சிப்பார்கள்..நானோ வீட்டில், 'மொத மாச சம்பளம் அனுப்ப முடியாது,எங்க கம்பெனியில வேலை செய்யுறவங்க எல்லோரும் சொந்தமா கம்ப்யூட்டர் வச்சிருக்கனுமாம். இல்லனா ஊருக்கு திருப்பி அனுப்பிடு வாங்கலாம்'னு ஒரு பொய்யை அடிச்சிவிட்டேன்.

2002 ஆம் வருஷம் மே மாதம் எனது கனவான கம்ப்யூட்டர் சொந்தமாக வாங்கப்பட்டது.ஸ்பீக்கர்,பிரிண்டரோடு சேர்த்து 1200 டாலர் ஆனது.

என் வாழ்கையில மிக சந்தோசமான தருணங்கள் அப்படினு ரெண்டு நிகழ்வை சொல்லுவேன்.ஒன்னு,இரண்டு வருசத்துக்கு முன்னால என் மகன் பிறந்த அடுத்த நொடியில் நர்ஸ் அந்த பிஞ்சுப் பூவை என் கைகளில் தவழ விட்ட தருணம். இன்னொன்று சிங்கையில் உள்ள Sim Lim Square -ல் அந்த கடைக்காரன் என் முதல் கம்ப்யூட்டரைத் தூக்கி என் கையில் கொடுத்த தருணம்.

என் முதல் மனைவியுடன் நான்.... (2004 ல எடுத்தது  )
கிட்டத்தட்ட அஞ்சு வருஷம் என்கூட அது இருந்தது.WINDOWS -XP தான் இன்ஸ்டால் செய்திருந்தேன். கொஞ்சம் ஸ்லோ ஆனாலும் உடனே ஃபார்மட் செய்திடுவேன். எந்த நண்பனும் அதைத் தொட அனுமதி கிடையாது.அதில் தான் நான்கு வருடமாக MASTERCAM கிளாஸும் எடுத்தேன். பிறகு லேப்டாப் வாங்கியும் அதைத் தூக்கிப்போட மனசு வரல. வீடு மாறும் போது கூட அது எக்ஸ்ட்ரா வெயிட்டாக தெரியவில்லை.2008ல மானிட்டர் படுத்த படுக்கையா ஆயிட்டு. கடையில கொடுத்தா ஒன்னுமே பண்ண முடியாதுனு சொல்லிட்டான். கடைசில மனசே வறாம தூக்கிப் போட்டேன். அடுத்த சில மாதங்களில் பிரிண்டரும் வேலை செய்யவில்லை.சர்வீஸ் செய்யிற காசுக்கு புதுசா வாங்குங்க சார்னு அதே ஆளு கடுப்பேத்திட்டான் . ஆனா CPU மட்டும் ஓடிகிட்டு இருந்தது. பிறகு அதுவும் SMPS ,ஹார்ட் டிஸ்க்,CDROM  எல்லாம் வரிசையா புட்டுகிச்சி.

ஆனாலும் அதைத் தூக்கிப் போடாம உள்ளே உள்ள எல்லா பார்ட்ஸ்-யும் மாற்றி,இப்ப பிளாக் அதில்தான் எழுதிகிட்டு இருக்கேன். என் முதல் கம்ப்யூட்டரில் தற்போது என்னிடம் இருப்பது CPU வெளிப்புற ஃபிரேம் மட்டும்தான்.. :-(

தொடர் பதிவை கொஞ்சம் பொறுமையாக எழுதலாம்னா ,நாம அடுத்து அழைக்க நினைத்த நபர்களை வேறு யாராவது அழைத்து விடுவார்களோ என்கிற பரபரப்பு பதிவை அவசர அவசரமாக எழுத வைத்திருக்கிறது. அப்படியும் இருவரை ஏற்கனவே அழைத்து விட்டார்கள்.

தற்போது தொடர் பதிவு எழுத நான் அழைப்பது...

டெர்ரர் கும்மியில் ஒருகாலத்தில் செம கும்மு கும்மியவர், எந்த மொக்கையும் போடாமல் வரலாற்று நாயகர்களைப் பற்றி தொடர்ந்து எழுதி வரும் 'மாணவன்' சிம்பு அவர்களையும் ( சமீபத்தில்தான் தொலைபேசியில் உரையாடினோம்..)

சிங்கையில் இருக்கும் மற்றொரு நண்பர் சொற்"க்"குற்றம் ராவணன்

ஆரம்பத்தில் தொடர்ந்து எனக்கு பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய (தற்போது ஏனோ ஒதுங்கியிருக்கிறார்)  மனசாட்சி முத்தரசு 

நவரசமாக தொடர்ந்து எழுதிவரும் நண்பர்  பாலாவின்-பக்கங்கள் பாலா....

தமிழ் கூறும் வலையுலகில் இவர் அளவுக்கு நீ..ண்ட பதிவு யாரும் போடுவது கிடையாது. அவ்வளவு பெரிய பதிவாக  போடாமல் நூறு வார்த்தைக்குள் சுருக்கி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. 'தினசிரி ஜோக்' Bagawanjee KA


Monday 22 July 2013

'மரியான்..' இப்ப என்ன சொல்ல வர்றியான்..?


ரோஜா படத்தை வேறு ஒரு கோணத்தில் வைத்து சிந்தித்திருக்கிறார் பரத்பாலா.. அங்கே வயலும் வயல் சார்ந்த இடம். இதில் கடலும் கடல் சார்ந்த இடம். அங்கே பசுமையான காஷ்மீர் என்றால் இதில் வறண்ட சூடான் பாலைவனம். மற்றபடி ஃபீலிங்க்ஸ் எல்லாம் அதேதான்.

தன் காதலியின் தந்தை பட்ட கடனையடைக்க சூடான் செல்லும் நாயகன்,தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறார். அங்கிருந்து த..ப்..பி...த்...து எப்படி தன் காதலியை சேர்கிறார் என்பதுதான் கதை.

தனுஷ்...

கதைக்கு இருநூறு சதவிகிதம் நச்சென பொருத்துகிறார் மீனவ இளைஞனாக வரும் தனுஷ்.ஆரம்பத்தில் 'சுறா' ரேஞ்சுக்கு கொடுக்கப்படும் பில்டப் கொஞ்சம் ஓவர்தான் என்றாலும் பிற்பகுதியில் தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொள்ளும்போது,பறந்து அடிச்சா பதினாறு டன் வெயிட்டுடா பாக்குறியா..என ஒரே அடியில் பத்துபேரை சாய்த்துவிட்டு, துப்பாக்கி ரவைகளை பல்லால் கடித்து துப்பிவிட்டு,பாலைவன பூமியை பொளந்து கொண்டு தப்பித்து வரும் ஹீரோயிசம் எதுவும் இல்லாதது வியக்கத்தக்க விஷயம்.

நிச்சயம் ஆடுகளத்திற்குப் பிறகு தனுசின் இயல்பான நடிப்பை இதில் காணலாம்.மரியான் சாவே வராதவன் என்று ஆரம்பத்தில் விளக்கம் கொடுக்கப்படுவதால் தனுசுக்கு எதுவும் ஆகாது என முன்னமே தெரிந்து விடுகிறது.

சில காட்சிகளில் அழுத்தமான முத்திரையை பதித்திருக்கிறார். லிப் டு லிப் ரொமான்ஸ் காட்சி, நண்பனின் சாமாதியில் உடைந்துபோய் உட்காந்திருக்க அங்கு வரும் பார்வதியிடம் காட்டும் கோபம், தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும்போது கம்பெனிக்கு பேசுவதாக சொல்லிவிட்டு தன் காதலிடம் பேசும்போது இருக்கும் தவிப்பு  என ஆங்காங்கே எதார்த்த நடிப்பில் பின்னியெடுக்கிறார் தனுஷ். கமல், விக்கிரமுக்கு பிறகு அந்த சீட் உனக்குதாம்ல...!

ஆனால் தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தும்போது ஏனோ முகத்தில் ஒரு சலனமும் இல்லாமல் இயல்பாக இருக்கிறார்.

பார்வதிமேனன்..

பனிமலாரக வரும் பார்வதிமேனன் ஏற்கனவே பூ படத்தில் ஜொலித்தவர் என்பதால் சிரமமில்லாமல் நிறைய காட்சிகளில் வாழ்த்திருக்கிறார். அந்த 'லிப் டு லிப்' காட்சி ஓன்று போதும். மிக எதார்த்தமாக அமைந்திருக்கிறது. அதன்பிறகு வரும் நெருக்கமான காட்சிகளில் நம் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டு கடைசி வரை ஏமாற்றி விடுகிறார். கடைசி வரை இவரை டாப் ஆங்கிளில் காட்டி ஏதோ உணர்த்த முற்படுகிறார் இயக்குனர். நம்ம மரமண்டைக்குத்தான் ஒன்னும் விளங்கல.. :-)

பிற்பகுதியில், ' மரியான் கண்டிப்பா வருவான்..இதோ வந்துகிட்டு இருக்கான்... ' என பினாத்துவது கொஞ்சம் ஓவர். சரி எதற்காக இவர் தனுசை இந்த அளவுக்கு லவ்வி வருகிறார்..? அழுத்தமான காரணம் எதுவும் இல்லாததால் 'அபிராமி..அபிராமி' குழப்பம் இதிலும் வருகிறது.


ஏ.ஆர். ரகுமான்..

படத்தின் ஒரே பலம். ஒத்த ஆளாக நின்று போராடியிருக்கிறார். படத்தின் ஒவ்வொரு பிரேமையையும் உயர்த்திப் பிடிக்கிறது இசைப்புயலின் பிரமாண்டமான பின்னணி இசை. 'சோனா பிரியா தானா வறியா..',  'இன்னும் கொஞ்சம் நேரம்..' பாடல்கள் பரவாயில்லை. தாய் மண்ணே வணக்கம்.. பாடலை மனதில் கொண்டு 'நெஞ்சே எழு..! காதல் அழிவதில்லை..!' பாடலை உருவாக்கியிருக்கிறார்கள் போல.வருங்கால சந்ததியினருக்கு காதலர்களின் தேசிய கீதமாக ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..

படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய இன்னொருவர் வசனம் எழுதிய ஜே.டி.குரூஸ். 'வாழ்க்கையில சாதிக்க நினைக்கிறவனுக்கு எல்லாம் பொம்பளையோட மூச்சுக் காத்து பட்டுகிட்டே இருக்கணும்..' என்கிற வரி வேறு ஒரு அர்த்தம் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. 'ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்.....' என்பதைத் தான் அப்படி சொல்லியிருக்கணும்.

அடடே.. கமலா காமேஷ் திரும்பவும் நடிக்க வந்தாச்சே என நினைத்தால் அது உமா ரியாஸ்... நடிப்பில் குட்டி பதினாறு அடி பாய்கிறது.. (அப்புறம் என்ன விசு சார்..ஜோடி கிடைச்சாச்சு.சம்சாரம் அது மின்சாரம் பார்ட் -2 எப்போ எடுக்க போறீங்க..?)

காமெடிக்காக சேர்க்கப்பட்ட ஜெகனும் அப்புக்குட்டியும் அப்பாவியாய் செத்துப் போகிறார்கள்.முற்பகுதியில் மீனவ குப்பத்தை சுற்றியே கதை நகர்கிறது. மீனவர் என்றாலே இலங்கையின் அத்துமீறலையும் காட்சிப் படுத்தவேண்டும் என்கிற சமீபத்திய தமிழ் சினிமாவின் மரபு இதிலும் கடைப்பிடிக்கப் படுகிறது. அதற்காக நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே பிணமாக ஒதுங்குவது சாத்தியமா..?

'அண்ணே நீ எந்தப் பொண்ணை பாத்தாலும் ஒன்னு குத்தகைக்கு எடுத்திடுவ...இல்ல கொள்முதல் செஞ்சிருவ..இந்த பனிமலர் கிட்ட மட்டும் ஏன் இப்படி இறங்கி போகணும்'

' டேய்...மத்தப் பொண்ணுங்க மாதிரி இல்லைடா , பனிமலரை நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன்.கல்யாணம் பண்ணினா அது பனிமலரைத்தான்..'

டேய் தமிழ்நாட்டு வில்லன்களா நீங்க அம்புட்டு நல்லவிங்களாடா..? இன்னும் எத்தனைப் படத்திலடா இந்த டயலாக் பேசுவீங்க...?

அனுப்பி வைக்கிறது மட்டும்தான் என் வேலை.. மத்ததுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது என சர்வ சாதாரணமாக சொல்லும் வெளிநாட்டு ஏஜென்டின் மற்றொரு முகத்தை அற்புதமாய் படம்பிடித்திருக்கிறார்கள். சிங்கைக்கு இரண்டு லட்சம் பணம் கட்டி அழைத்து வந்து,இரண்டே மாதத்தில் வேலையில்லாமல் திருப்பி அனுப்பப்பட்ட நண்பருக்காக ஒரு ஏஜென்டிடம் நான் வாதாடிய போதும் இதே டயலாக்தான்.

சூடானில் எங்கேயோ ரெகார்ட் டான்ஸ் ஆடின கும்பலை கூட்டியாந்து தீவிரவாதியாக நடிக்க வைத்திருக் கிறார்கள் போல. ஒண்ணுக்கும் நடிப்பு வரல. அதாவது பரவாயில்ல..சின்ன வயசில தீபாவளிக்கு அப்பா வாங்கிக் கொடுத்த துப்பாக்கியில் கேப்பை நிரப்பி தெருவெல்லாம் டப் டப்னு மேலே நோக்கி சுடுற மாதிரி அடிக்கடி வானத்தை நோக்கி சுட்டுகிட்டே இருக்காங்க. கடத்தினவர்கள் எவ்வளவு ரகசியமா இருக்கணும்..?  இப்படித்தான் போற வழியெல்லாம் வானத்தைப் பார்த்து சுட்டுகிட்டே இருக்கணுமா.? பணம் பறிப்பது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருக்கும் போது எதற்காக பார்வதியின் போட்டோவை சிகரெட்டால் சுட்டு சிற்றின்பம் அடையவேண்டும்..?


இரண்டாம் பாதி செம இழுவை.பத்து நிமிடத்தில் முடித்திருக்க வேண்டிய படத்தை  ஜவ்வு போல இழுத்தது மிகப்பெரிய மைனஸ். பசி தாங்க முடியாமல் ஜெகன் புலம்ப, அந்த நேரத்தில் வறுமையின் நிறம் சிவப்பு காட்சி தேவையா..? நெஞ்சைப் பிழியவேண்டிய காட்சி நம்மை பொறுமையின் எல்லைக்கே கொண்டு செல்கிறது.

தனுசை துப்பாக்கியால் வில்லன் கடுமையாக தாக்குவதை பின்னாலிருந்து காட்டுகிறார்கள். அடுத்தநாள் குருதிப்புனல் கமல் போல் குத்துயிரும் கொலையுருமாய் இருப்பார் என நினைத்தால் கன்னத்தில் சிறு கீறலோடு மட்டும் காட்சி தருகிறார். ஒருவேளை ரப்பர் துப்பாக்கி போல. 

சூடான் தீவிரவாதிகளிடமிருந்து தனுஷ் தப்புவது பு.கோ.சரவணன் படத்தில் பார்டரை தாண்டுவதை விட காமெடியாக இருக்கிறது.தப்பித்து வருபவர் பட்டினியால் சோர்ந்து, சாவை வென்று, அடுத்தடுத்த கடுமையான சோதனைகளைத் தாண்டி இறுதியில் கடல் மாதாவை அடைகிறார். ஆனால் அப்போதுதான் ஃபுல் மீல்ஸை செம கட்டு கட்டியவர் போல் ஃபிரசாக காட்சியளிக்கிறார்.இறுதியில் கடல் ராசாவாக வில்லனை சாகடிக்கும் உத்தி அருமை.

அப்பாடா ஒரு வழியாக படத்தை முடிச்சுட்டாங்கப்பா..சீக்கிரம் கதவை திறங்கடா..என எழும்ப முற்படுகையில், "இன்னும் கொஞ்சநேரம் இருந்தாதான் என்ன...ஏன் அவசரம்..என்ன அவசரம்.." என திரையில் பாடல் ஒலிக்க., கால்கள் EXIT -ஐ நோக்கி ஓட்டம் பிடிக்கிறது...! 

தனுசுக்காக ஒரு தடவை பார்க்கலாம்..!

Saturday 20 July 2013

திடங்கொண்டு போராடு சீனுவுக்காக ஒரு காதல் கடிதம்..

       இந்த 'காதல்' என்கிற படுகுழியில் விழுந்த அனுபவம் எல்லாம் நமக்கு கிடையாதுங்க.. ஆனா காதலிச்சிருக்கேன். காதல் உணர்வு வராத உயிர் இந்த உலகத்தில் உண்டா என்ன..? அட்லீஸ்ட் ஒருதலைக் காதலாவது செய்திருப்பார்களே. 

அந்தந்த வயதில் ஏதோ ஒரு காரணத்தால்(பெரும்பாலும் அழகு) காதல் தூண்டப்படும்.அது இன்பா
ச்சுவேசன் என்றாலும் அந்த தருணத்தில மனசு கிடந்து படபடனு அடிச்சுக்கும் பாருங்க...அந்த உணர்வை எத்தனை வருஷம் கழிச்சி நெனச்சி பாத்தாலும் பரவசமா இருக்கத்தானே செய்யும்...

எந்த வயசில காதல் வரும்னு சொல்லவே முடியாதுங்க.. அதை காதல் என்பதைவிட ஒருவித ஈர்ப்புனு சொல்லலாம். காமம் என்கிற வரையறைக்குள் வராதவரை காதல் தவறில்லை.

ஒன்னாம் வகுப்பிலேயே காதல் வரலாம்... கிழிஞ்ச டவுசரும் அழுக்குச் சட்டையுமாய் பள்ளிக்கு செல்லும் போது கலர் கலரா கவுன் போட்டுக்கிட்டு வாய் நிறைய லிப்ஸ்டிக் நிரப்பிகிட்டு வரும் சக மாணவியைப் பாத்து வரலாம். வாத்தியார் பொண்ணு என்றால் பயம் கலந்த காதல் வரலாம். சுதந்திர தினத்திற்கும் ஆண்டு விழாவிற்கும் பாரத நாட்டியம் என்கிற பெயரில் உடற்பயிற்சி செய்யும் பெண்ணைப் பாத்தும் வரலாம். பாக்க மொக்கையாக இருந்தாலும் வகுப்பில் முதல் மாணவியாக வரும் பெண்ணின் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு வரலாம். வாத்தியார் எந்த பெண்ணையாவது புகழ்ந்து பேசிவிட்டால் அந்தப் பெண்ணின் மீது திடீர் ஈர்ப்பு வரலாம்.. ஏன்...டீச்சர் மீது கூட காதல் வரலாம்...இப்படி ஏதோ ஒரு விதத்தில் காதல் வயப்படாதவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் இதெல்லாம் அந்தந்த பருவத்தைக் கடக்கும்போது நம்மோடு பயணிக்க முடியாமல் மறைந்து விடுகிறது.

என் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் பாத்தாலும் காதலில் கசிந்துருகி நின்றதா ஞாபகமே இல்லை. அவ்வளவு நல்லவனா நீங்க-னு கேக்க தோணுமே..? அதுதான் இல்ல.உண்மைய சொல்லனும்னா எதுவும் செட்டாகல....

காலேஜ்ல படிக்கும்போது ஜூனியர் செட் பொண்ணு ஒன்னு நட்போட பழகினது. எங்க ஊர் பொண்ணுங்கிறதால பழைய கொஸ்டின் பேப்பர் தர்றது,புக்ஸ் தர்றதுனு உதவி செய்வேன்.அப்பப்போ லைப்ரரில சந்திப்போம். நல்லா தெளிவா புரிஞ்சுங்கனும்னு ஒரே பேப்பரை ரெண்டு மூணு தடவை எழுதறதால (அதத்தான் இந்த உலகம் அரியர்னு சொல்லுது) பல டிசைன்ல நம்மகிட்ட கொஸ்டின் பேப்பர் இருக்கும். இப்படி நட்பு போய்கிட்டு இருந்த சமயத்தில அந்த புள்ளைக்கு பொறந்த நாள் வந்தது. நான் சும்மா இருக்காம ஒரு வாழ்த்து மடல் வாங்கி அதோட ஹாஸ்டல் அட்ரசுக்கே அனுப்பிட்டேன். என்ன நினைச்சுதோ தெரியில...அடுத்த நாள் என்ன பாத்துச்சி. அவ்வளவுதான்..சைக்கிள எடுத்துட்டு சிட்டா பறந்து போயிடிச்சி. அடுத்தத் தடவை பாக்குறப்போ நட்புக்கும் காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை விக்கிரமன் படத்து டயலாக்கெல்லாம் சொல்லி விளக்கலாம்னு இருந்தேன். ஆனால் அதுக்குப் பிறகு அந்தப் புள்ளையே பாக்கவே இல்ல..        

இப்படி ஒரு ஃபிளாஷ்பேக்கை வச்சிக்கிட்டு என்னத்த காதல் கடிதம் எழுதறது
னு தெரியில. வீட்டுக்காரியை நினைச்சி ஏதாவது எழுதலாம்னா கொழம்பு கரண்டியும், தோசை பிரட்டியும் கண் முன்னால வந்து மூட் அவுட்டாக்குது. ஒருவேளை நானெல்லாம் காதலிச்சிருந்தேனா கண்டிப்பா ஊர்ல மாடு தான் மேய்ச்சிகிட்டு இருந்திருப்பேன்.ஏனா எத செஞ்சாலும் நிறைய ஈடுபாட்டோடத்தான் செய்வேன். 

சரி.. சீனுவுக்கு வாக்கு கொடுத்திட்டேன்..போட்டிக்கான கடைசி நாளும் வந்துட்டு. எதையாவது எழுதலாம்னு யோசிச்சேன்.காதல் திருமணம் செய்து பணத்தேவைக்காக வெளிநாட்டில் வாழும் கணவன், தாயகத்தில் இருக்கும் மனைவிக்கு திருமண நாளன்று கடிதம் எழுதினால் எப்படியிருக்கும் என்கிற கற்பனையில் வடித்து தான் இந்தக் கடிதம்.

 (எக்ஸ் கியுஸ் மீ..ஒன் மினிட். படிச்சி முடிச்சிட்டு காரித்துப்புறதா இருந்தா கொஞ்சம் தள்ளிப் போயி துப்புங்க.. அது உங்க மானிட்டர்.. அப்புறம் உங்க இஷ்டம்..)பிரியமான பிரியதர்ஷினி....

இன்னைக்கு என்ன நாள் தெரியுமா.....? 

இப்படி கேட்டதுக்கு இந்நேரம் உன் கண்ணில் நீர் பூத்திருக்கும்.காலையிலிருந்து குறைந்தது அஞ்சு ஆறு கோயிலாவது ஏறி இறங்கியிருப்ப... ஐநூறு தடவையாவது என் பேரை உச்சரிச்சிருப்ப... நொடிக்கு நூறு தடவை என்னை நினைச்சிருப்ப... உன் நினைவே நான் தான்னு எனக்குத் தெரியாதாடா செல்லம் ...!

உன்னை முதன் முதலில் எப்போ பார்த்தேன்னு யோசிக்கிறேன்..

ரியா அஞ்சு வருசத்து முன்னால.... அப்போ உனக்கு காலேஜ் லீவு. எங்க வீட்டுக்கு பின்னால இருக்கிற உங்க சித்தி வீட்டுக்கு வந்திருந்த... ஒரு நாள் சாயங்காலம் அஞ்சு மணி வாக்கில், போன் டவர் கிடைக்கலனு எங்க வீட்டு  மொட்டை மாடிக்கு நான் வந்தப்போ, உங்க வீட்டு மொட்டை மாடில கையில ஏதோ புக்கை வச்சிக்கிட்டு தீவிரமா படிச்சிகிட்டு இருந்த.. அதுவும் முகத்தை அந்தப் பக்கமா திருப்பிகிட்டு...!

நான் சத்தம் போட்டு பேசினதில கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகியிருப்ப போல.கோபத்தில சட்டென திரும்பி பாத்துட்டு இறங்கி போயிட்ட. அப்பத்தான் உன் முகத்தை நான் முதன் முதலா பாத்தேன். என்னவோ தெரியில. எப்படினும் சொல்லத் தெரியில... ஆனா பாத்த உடனையே உன்னை புடிச்சிப் போச்சி...!

அதுக்கப்புறம் ஏதோ ஒன்னு  என் மனசுக்குல உருண்டுகிட்டே இருந்துச்சி. நைட் உறக்கமே வரல. நாம கல்யாணம் செஞ்சு குடும்பம் நடத்துற மாதிரி எல்லாம் கற்பனை ஓடிகிட்டே இருந்துச்சு. பிறகு எப்போ தூங்கினேன்னு தெரியில.. !

அடுத்த நாளிலிருந்து....

அஞ்சு நிமிசத்துக்கு ஒருக்கா மாடிக்கு வந்து பா
ர்ப்பேன்.. நீ இருக்க மாட்ட..  சாயங்காலம் வரை ஐம்பது  தடவை யாவது ஏறி இறங்கி இருப்பேன்.. ஆனா சூரியன் மறையுதோ இல்லையோ கரெக்டா தினமும் அஞ்சு மணிக்கு மொட்டைமாடி  நிலாவா நீ உதிப்ப...

திரும்பவும் போன் பேசுற மாதிரி உன்னை பார்ப்பேன்.. ஆனா ஒரு தடவை கூட என்னை பாக்க மாட்ட... இப்படியே அஞ்சு நாள் போச்சு.ஆனா நீ என்னை கண்டுக்கிற மாதிரி தெரியில..

எனக்கு வெறுத்துப் போச்சி... நான் முட்டாள் தனமா நடந்துகிறதா மனசு சொல்லிச்சி.. உன்கிட்ட பேச முயற்சிக்கலாம்னு கூட தோணிச்சி... ஒருவேளை நீ  சத்தம் போட்டு ஊரை கூட்டிட்டா அவமானமா போயிடுமோனு ஒரு பக்கம் பயம் வேற. கடைசில ஒரு முடிவுக்கு வந்தேன்.வேணாம். காதலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். இது வேணவே வேணாம்னு முடிவு செஞ்சிட்டேன்...

அடுத்த ரெண்டு நாள் மொட்டை மாடிக்கு போகவே இல்ல...ஆனா ஒருபக்கம் மனசு கிடந்து துடிக்கும். மறுபக்கம் அதுக்கு நாம சரிபட்டு வரமாட்டோம்னு மனசாட்சி தடுத்து நிறுத்தும்...

ஆனா முடியில.. ரெண்டு நாள் கூட முடியில.. கடைசியா இன்னிக்கு ஒரு தடவை பாத்துட்டு வந்திடலாம். அதுக்கு பிறகு மாடிப்பக்கம் தலைவச்சே படுக்கக் கூடாதுனு முடிவு பண்ணினேன். திரும்பவும் போனை எடுத்துட்டு ஒவ்வொரு படியா ஏறினேன். மனசு படக் படக்னு அடிச்சிகிட்டு.. ஒரு பத்து நிமிஷம் நின்னு பாப்போம்...திரும்பி பாக்கலனா அதுக்கப்புறம் காதல்ன்ற நினைப்பே மனசுக்குள்ள வரக்கூடாதுனு முடிவு பண்ணிட்டு ஒவ்வொரு படியா ஏறினேன்...


கடைசி படி வந்து விட்டது.. ஒரு வித படபடப்போடு மொட்டை மாடிக்குள் காலடி எடுத்து வச்சேன் ...

அங்கே.............


வச்ச கண் வாங்காம எங்க வீட்டு மாடியையே உத்துப் பாத்துகிட்டு இருந்த. என்னைப் பார்த்த அந்த நொடியில் உன் கண்களில் இருந்த தவிப்பு இருக்கே.. அப்பப்பா...! அந்தக் கண்களில் என்ன ஒரு காதல்..! என்னவொரு ஏக்கம்..! என்னவொரு தவிப்பு...! இருபதடி தூர இடைவெளியில் எந்தப் பெண்ணும் என்னை இந்தளவுக்கு உற்று நோக்கியதில்ல.. எனக்கு அப்படியே உடம்புக்குள்ள ஜிவ்வுன்னு ஏதோ ஒன்னு ஏறுற மாதிரி இருந்துச்சி.

உண்மையிலேயே அப்போது தான் வைரமுத்து சொன்ன  உருவமில்லா உருண்டையின் விளக்கம் புரிந்தது. அப்படியே என்னை யாரோ அந்தரத்தில தூக்கிட்டு போற மாதிரி இருந்தது.விரல்கள் நடுங்க ஆரம்பிச்சுட்டு...என் முகம் சிவந்து போவதை கண்ணாடி இல்லாமலே பார்த்தேன்.

ஒரே பார்வையில உன் காதலை சொல்லிவிட்டு போயிட்ட..! கண்ணின் கடைப்பார்வை எவ்வளவு வலிமையானது என்பதை பாரதிதாசன் சொன்னபோது நம்பவில்லை. அப்போதுதான் உணர்ந்தேன்.


விழுந்தேன்....  சொத்து சுகம், சாதி சனம் எதுவும் தேவையில்லை  நீதாண்டி என் வாழ்க்கைனு மொத்தமாக விழுந்தேன். ஆனா இந்த பாழாய்ப்போன சாதி நம்மை பிரிச்சி வைக்க என்னென்ன இடைஞ்சல் பண்ணினது உனக்கு தெரியாதா...?

அந்த நேரத்தில நீ மட்டும் என் மேல நம்பிக்கை வைக்காம சாதியும் சொந்தமும் தான் முக்கியம்னு என்னை விட்டு போயிருந்திருந்தா இந்நேரம் நான் உசுரோடவே இருந்திருக்க மாட்டேன். நம்மை பிரிக்க பாத்தவங்க முன்னால வாழ்ந்து காட்டணும்னு நீ சொன்ன பாரு... அப்பவே முடிவு பண்ணினேன். உன் கூட சேர்ந்து வாழ, சாகுற அளவுக்கு கூட ரிஸ்க் எடுக்கலாம்னு...

மத்தவங்க வாயடச்சிப் போற அளவுக்கு வாழ்ந்து காட்ட
ணுங்கிறதுக்குத்தான் இவ்வளவு தூரம் உன்னை பிரிஞ்சி வந்து இருக்கேன்... ஆனா உன் கூட இல்லாத ஒவ்வொரு கணமும் நரக வேதனையா இருக்கு.இன்னும் எத்தனை இரவுகள்...?  

தூக்கம் கலையும் ஒவ்வொரு அதிகாலையும் ஊரில் இருக்க மாட்டேனா என தோணுது.உன் மடிமேல தலை வைத்து  தூங்கணும் போல இருக்கு...மார்போட அணைச்சுகனும் போல இருக்கு...உன் நெத்தில முத்தமிடனும் போல ஆசையா இருக்கு. உன் பாதங்களை எடுத்து என் கன்னத்தில ஒத்திக்கணும் போல இருக்கு...

இந்த எழவெடுத்த காசு பணம் எதுக்கு. இப்பவே கிளம்பி வந்திடலாம்னு தோணும். ஆனா வாழ்ந்து காட்டனும்...  கவலைப் படாத. இன்னும் ஒரு வருஷம் பொறுத்திரு. வாழ்க்கை பூரா பிரியா
இருக்க  இன்னும் ஒரு வருஷம் பிரிஞ்சி இருப்போம்...

Wednesday 17 July 2013

கேதார்நாத் துயரத்தில் மதச்சாயம் பூசி ஆதாயம் தேடும் உமாசங்கர் ஐ.ஏ.எஸ்..

            'மதம்' பிடித்தால், யானையை மட்டுமல்ல மனிதனையும் காட்டுமிராண்டியாக்கிவிடும் என்பதை நிருபித்திருக்கிறார் இந்த படித்த முட்டாள்..

எப்படி ஐபிஎஸ் என்றால் உடனே நமக்கு வைஜெயந்தி.. ச்சே.. திலகவதி ஐபிஎஸ் பெயர் ஞாபகம் வருகிறதோ அதே போல் ஐ.ஏ.எஸ் என்றால் முதலில் நம் மூளையில் உதிக்கும் பெயர் உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.

பொதுவாகவே, அரசாங்கத்தில் பெரிய பதவிகள் வகிக்கும் அதிகாரிகளின் அன்றாட வேலைகள் என்ன என்பதை சினிமாவில் பார்த்துதான் நம் சமூகம் தெரிந்து வைத்திருக்கிறது.மிடுக்கான,செருக்கான,திமிரான பதவி என்றால் அது காவல்துறைதான் என்கிற பிம்பம் நம் எண்ணத்தில் தோன்றுவதற்கும் சினிமாதான் காரணம். வைஜெயந்தி ஐபிஎஸ்,சேதுபதி ஐபிஎஸ்,தமிழ்ச்செல்வன் ஐபிஎஸ்... இப்படி நிறைய ஐபிஎஸ்-சை சினிமா மிகைப்படுத்திக் காட்டினாலும் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை வெறும் தயிர் சாதமாகவே தொடர்ந்து காட்டி வந்திருக்கிறது.

ஆனால் தளபதியில் சூர்யா-தேவாவுக்கே தண்ணிகாட்டும் அர்ஜுன் ஐ.ஏ.எஸ் ஆக வரும் அரவிந்த்சாமியின் கேரக்டர்தான், ஒரு கலெக்டருக்கு இவ்வளவு அதிகாரம் இருக்கா என வெளி உலகுக்கு(!?) தெரியப்படுத்தியது. ஆனால் நிஜ வாழ்க்கையில் இவ்வளவு தைரியமான கலெக்டர் இருப்பாங்களா என்ன.. என்கிற என் பொதுப் புத்தியில் தோன்றிய சந்தேகத்திற்கு ஐந்தரையடி உயரத்தில் ஒரு பதில் கிடைத்தது. அதுதான்  உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.

சுடுகாட்டு கொட்டகை ஊழலை தோண்டியெடுத்து போயஸ் தோட்டத்துக்கே பயாஸ்கோப் காட்டியவர் என்கிற வகையிலே உலகம் இவரை அறிந்திருக்கும். அதைவிட இவர் ரியல் ஹீரோவாகவே வாழ்ந்த ஒரு ஸ்டோரி இருக்கிறது. விலாவாரியாக வேண்டுமானால் திருவாரூர் பகுதி மக்களிடம் கேட்டுப்பாருங்கள். இவரைப் பற்றி எனக்குத் தெரிந்த இரண்டு சம்பவங்கள் சொல்கிறேன்...

1999 என்று நினைக்கிறேன்.திருவாரூருக்கு மாவட்ட ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்கிறார். இது கலைஞரின் செல்லத் தொகுதி என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.இவர் பொறுப்பேற்றவுடன் இதுவரையில்லாத மாற்றங்கள் மின்னல் வேகத்தில் நடந்தேறுகிறது. கள்ளச்சாராயம்,ரவுடிசம்,லஞ்சம் எல்லாம் கட்டுப்படுத்தப் பட்டு பேருந்துகளில் பெண்களின் இருக்கையில் ஆண்கள் அமரக்கூடாது, புகார்களை தெரிவிக்க ஆங்காங்கே புகார் பெட்டிகள் என புதுமைகள் செய்து புரட்சிக் கலெக்டராக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் வலம் வந்து கொண்டிருந்த இவருக்கு ஒரு புகார் வருகிறது.ஒரு குறிப்பிட்ட பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வந்த தகவல்தான் அது.

உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்கிறார்.அவர்கள் அப்படியெல்லாம் இல்லை என மறுக்கிறார்கள். நேரடியாக களத்தில் குதிக்கிறார் உமாசங்கர். கைலி,பனியன் , தலையில் முண்டாசு என ஒரு கிராமத்தானின் கெட்டப்பில் சாராயம் விற்கப்படுவதாக சொல்லப்பட்ட அந்தப் பகுதிக்கு செல்கிறார்.அங்கு உண்மையிலேயே சாராயம் விற்கப்பட்டுக் கொண்டிருந்தது.குள்ளமாக கருத்த தேகத்துடன் இருந்ததால் யாருக்கும் சந்தேகமும் வரவில்லை. எல்லோரையும் போல இவரும் பணத்தைக் கொடுத்துவிட்டு ஒரு கிளாஸ் சாராயத்தை வாங்குகிறார். அதை அப்படியே எடுத்துக் கொண்டுபோய் மாவட்ட காவல்துறை அலுவலகத்துக்குச் சென்று அந்த அதிகாரியின் டேபிளில் வைத்து 'இப்போ என்ன சொல்றீங்க..?' எனக் கேட்டாராம்.

இன்னொரு சம்பவம், தியேட்டர்களில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக வசூலிக்கப் படுவதாக புகார் வர,இவரே நேரில் சென்று தியேட்டரில் டிக்கெட் வாங்கியிருக்கிறார். அவர்கள் கையும் களவுமாகப் பிடிபட ,உடனே சீல் வைக்கப்பட்டது அந்த தியேட்டர்...

இப்படி எத்தனையோ....! இந்தியாவிலேயே முதல் கணிப்பொறி மாவட்டமாக திருவாரூரை மாற்றிய பெருமை கூட இவருக்கு உண்டு.. அப்படிப்பட்ட இந்த ரியல் ஹீரோ,இந்த வார நக்கீரனில் கொடுத்த பேட்டியை
ப் படித்த போது கடும் அதிர்ச்சிக்குள்ளானேன்.இவர் மத போகராக மாறிவிட்டார் என்ற செய்தி ஏற்கனவே அறிந்தது தான்.அதற்காக தன் படிப்புக்கும் செயல்பாட்டுக்கும் சம்மந்தமே இல்லாத மாதிரி இவர் கூறிய செய்திகள் படிப்பறிவே இல்லாத பாமரனைவிட கேவலமாக உள்ளது. 

அதாவது கேதர்நாத் சம்பவமே கர்த்தரின் கோபத்தால் நடந்தது என்கிறார் மத போஷகர் உமா சங்கர். சில நாட்களுக்கு முன்பு, மக்களே அழிந்தாலும் சாமி சிலை மட்டும் அப்படியே இருக்கிறது என்றால் அதுதான் இறைவனின் சக்தி என வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய ஜெயேந்திரரின் அறிக்கைக்கு 'கவுன்டர் ' அடித்தது போல் இருக்கிறது இவரின் பேட்டி.

மேலும், இதுபோன்ற சம்பவம் நடக்கும் என்று 2011 மார்ச் 8-ல் இவருக்கு தேவதூதர் 'தந்தி' அனுப்பினாராம். சரி நீங்கள் ஏன் முன்கூட்டியே தெரிவித்து அந்த ஆபத்துகளைத் தடுக்கக் கூடாது என கேட்டதற்கு இவர் அளித்த பதில் "தேவனுடைய தண்டனையிலிருந்து தப்பிக்க எந்த அரசாங்க நடவடிக்கையும் பயன் தராது. யேசுவிடம் சரணடைவது மட்டுமே தப்பிக்க ஒரே வழி..."


கேதர்நாத் சம்பவத்தில் ஒரு மாநிலமே நிலைகுலைந்து போயிருக்கையில்,எரிகிற வீட்டில் பிடிங்கின வரைக்கும் லாபம் என்பதுபோல் இது இந்து மக்களின் சிலைவழிபாடுகளுக்கு எதிரா
கர்த்தருடைய கோபத்தின் வெளிப்பாடு என்கிறார். குஜராத் பூகம்பத்திற்குக் கூட இதே மாதிரியான ஒரு விளக்கம் அப்போது சொல்லப் பட்டதாக ஞாபகம்.ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காண்பி எனவும், கொலை செய்திருந்தாலும் திருந்தி வருந்தினால் பாவ மன்னிப்பு வழங்கப்படும் போன்ற உயரிய கோட்பாடுகளை சொல்லிய கிருஸ்துவ மதத்திலிருந்து இப்படி ஒரு மத போகர் இருப்பது எவ்வளவு பெரிய ஆபத்தான விஷயம்..!    

இந்துத்வா மதவாதிகளுக்கு எந்த விதத்திலும் நான் சளைத்தவனல்ல என கர்த்தர் மேல் சத்தியம் செய்யாத குறையாக  நிருபித்திருக்கிறார் இந்த படித்த முட்டாள். கடந்த ஆட்சியில் இவர் மேல் பல குற்றச்சாட்டுகளைச் சொல்லி திமுக அரசு நெருக்கடி கொடுத்தபோது இணையத்தில் உமா சங்கருக்கு ஆதரவாக பொங்கி எழுந்தவர்கள் ஏராளம். இன்று எல்லோரையும் வாயடைக்கச் செய்திருக்கிறார் இந்த 'Man of the Next Millennium' MR.C.Umashankar IAS.


Monday 15 July 2013

ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது தம்பி...(ஏதோ சொல்லனும்னு தோணிச்சி..)ன் மனைவி வழி நண்பர் ஒருத்தர் இங்க(சிங்கப்பூர்) குடும்பத்தோடு இருக்காரு. நான்கு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது.குழந்தைகள் கிடையாது.ஆனால் சொந்த வீடு ,நல்ல கம்பெனி என ஓரளவு செட்டில்டு லைப் தான். அவர் மனைவியும் வேலை பார்கிறார்.சமீபத்தில் அவர்களைப் பற்றி அதிர்ச்சியான செய்தி ஓன்று கேள்விப்பட்டேன். இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக அவர்களின் உறவினர் மூலம் தகவல் கிடைத்தது.

ஒருவரின் சொந்த விவகாரங்களில் தலையிடுவது நாகரிகமற்ற செயல்தான் என்றாலும் இதற்கான அடிப்படை காரணம் என்னவாக இருக்கும் என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன்..

ஒருவேளை முடிவை மாற்றிக்கொண்டு சேர்ந்து வாழ அவர்களின் குடும்பத்தினர் முயற்சி எடுக்கலாம்.அது வெற்றியும் பெறலாம். ஆனால் எதற்காக இந்த எல்லை வரை செல்லவேண்டும். இவர்கள் மட்டுமல்ல வெளிநாட்டுச் சூழலில் வாழும் பல பேர் டைவர்ஸ் என்ற எல்லையை தொடாவிட்டாலும் அதை நெருங்கி மீண்டும் திரும்பியவர்கள்தான். இப்படிப்பட்ட மனநிலைக்கு ஏன் அவர்கள் தள்ளப் படுகிறார்கள்..?

இதற்கான முக்கிய காரணம் 'ஓவர் பில்ட் அப்'. அதாவது வெளிநாட்டில் வேலை செய்பவர்களில் 90 சதவிகிதத் திற்கு மேற்பட்டவர்கள் தங்களின் உண்மையான நிலையை பெண் வீட்டாரிடம் சொல்வதில்லை. குறிப்பாக மனைவியாக வரப்போகிறவளிடமே மறைத்து விடுகிறார்கள். எதையும் சமாளித்து விடலாம் என்கிற குருட்டு தைரியம் இதற்கு காரணமாக இருக்கலாம்.

ஊரில், சில ஆயிரங்களில் சம்பளம் வாங்கும் போது ,ஓரளவு படிச்ச, சுமாரா இருக்கிற,ஓரளவு வசதி உள்ள பெண் இருந்தால் போதும் என்கிற மனது, அந்நிய மண்ணில் கால் வைத்தவுடன் 'ஐஸ்வர்யா' ரேஞ்சுக்கு தேடுகிறது. வசதி வாய்ப்புகள் நல்ல படியாக இருப்பவர்கள் தங்கள் ஸ்டேடஸ்-க்கு தகுந்த பெண்ணை தேடுவது தவறில்லைதான்.ஆனால் ஃபிளைட்டை விட்டு இறங்கி,வெளிநாட்டில் கால் பதித்த உடனையே தன்னை பில்கேட்ஸ் அளவுக்கு பீத்திக் கொள்பவர்களை என்ன செய்வது....?

இதில் இன்னொரு வகை இருக்கிறது. வெளிநாட்டுக்கு செல்பவர்கள் எல்லாம் ஒரே மாதிரியான வேலைக்கு செல்வதில்லை.குறிப்பாக வளைகுடா மற்றும் சிங்கப்பூர்-மலேசியா போன்ற நாடுகளுக்குச் செல்பவர்களில் ஐ.டி மென் பொறியாளர்களிலிருந்து புல் வெட்டும் தொழிலாளர்கள் வரை இருக்கிறார்கள்.ஆனால் ஊரில் இவர்களை பொத்தாம் பொதுவாக அழைப்பது 'வெளிநாட்டு மாப்பிள்ளை'.

அதற்கேற்றார்போல், இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஊருக்குச் செல்லும் போது LED TV ,லேட்டஸ்ட் மொபைல், கையில் பிரேஸ்லெட்,கழுத்தில் பட்டையாக செயின் சகிதமாக இறங்கி ஊரையே கலக்கிவிட்டு வருவார்கள். அதற்காக
இவர்கள் வெளிநாடுகளில் கொடுக்கும் விலை கொஞ்ச நஞ்சமல்ல. இங்கே சரியான தங்கும் வசதி,சாப்பாடு,வெளியுலகத் தொடர்புகள் கூட இல்லாமல் பல புதுக்கோட்டை சரவணன்கள் படும் கஷ்டங்கள் ஊரில் உள்ளவர்களுக்குத் தெரிவதில்லை.


சிங்கப்பூருக்கு சுற்றுலா வருபவர்கள் ஒரு விஷயத்தை கவனிக்கலாம். அழுக்கு படிந்த ஆடை, தலையில் அழுக்குத் தொப்பி, முகம் முழுவதும் அழுக்குத் துணியால் மூடி, முதுகில் புல் வெட்டும் இயந்திரத்தை சுமந்து கொண்டு ஒருவர் ரோட்டோரங்களில் புல்வெட்டிக் கொண்டிருப்பார்.அது மிகக் கடினமான வேலை. அவர் யாரோ ஒருவர் என இதுவரை நீங்கள் கடந்து சென்றிருக்கலாம். அதை செய்பவர் நிச்சயமாக மேலே குறிப்பிட்டவர் களில் ஒருவராக இருப்பார். நான் பார்த்தவகையில் அனைவருமே நம் மாநிலத்தவர். 


இதைவிட கொஞ்சம் பராவாயில்லை கப்பல் கட்டும் துறை. இதில், இவர்கள் படும் கஷ்டங்களைப் பார்க்கும் போது ஊரிலே வேலை செய்யலாமே எனத் தோன்றும். ஆனால் ஊரில் சொல்வது " கப்பல்ல வேலை செய்யிறேன் ". அதேப் போல கட்டுமானத்துறையும். வெளிநாடுகளில் இந்தத்துறைகளில் உள்ளவர்கள் சபிக்கப்பட்டவர்கள் போல.நான் இவர்களின் வேலையையோ அல்லது நிலைமையையோ குற்றம் சொல்லவில்லை. எந்த வேலையும் குறைத்து மதிப்பிட முடியாது. தான் என்ன வேலை செய்கிறோம் என்பதை தன் உறவினர்களிடமே மறைப்பவர்கள், பெண்வீட்டாரிடம் மட்டும் உண்மையை சொல்வார்களா என்ன..?

என் நெருங்கிய நண்பர் ஒருவர்,CNC (MECHANICAL )துறையில் உள்ளார். பொறியியல் பட்டம் பெற்றிருந்தாலும் MECHINIST  ஆகத்தான் இருந்தார். நம்மூர் பணத்திற்கு ஒரு லட்சத்திற்குக் குறையாத சம்பளம். பெண் தேடும் போது 'டாக்டர் ரேஞ்சில்' பார்த்ததால், பல் மருத்துவர் சம்மந்தம் ஓன்று செட்டாகியது. நம்ம நண்பரும் சொந்த வீடு இருக்கு,கார் இருக்கு என அளந்துவிட, நல்ல குடும்பம் என்பதால் அதை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை பெண் வீட்டார்கள்.ஆனால் பெண்ணோ , வேறு ஒரு கற்பனை உலகத்தில் இருந்திருக்கிறார். நம்ம நண்பரோ, கல்யாணம் முடிந்த பிறகு வாங்கத்தான போறோம்.இது ஒன்றும் பெரிய தப்பில்லை என இருந்திருக்கிறார். திருமணம் முடிந்து வந்தபோது தான் எதிர்பார்த்தது எதுவுமே இல்லையென்று கோபமாகி,தினமும் சண்டைவர கடைசியில் விவகாரத்துவரை சென்றிருக்கிறது. விளைவு நண்பரின் நிரந்தர குடியுரிமையே ரத்தாகிவிட்டது.

இன்னொரு நண்பர், வீடு ஒப்பந்தம் எல்லாம் முடிந்தது.திருமணம் முடிந்து சில மாதங்களில் இவளுக்கும் நிரந்தர குடியுரிமை கிடைத்துவிடும்.அடுத்த மாதமே வீடு எங்கள் கைக்கு வந்துவிடும்.கிரகப்பிரவேசத்துக்கு எல்லோரும் பாஸ்போர்ட் எடுத்து வையுங்கள்.நான் டிக்கெட் எடுத்து அனுப்புகிறேன் என்று பெண் பார்க்க செல்லும்போதே ஏகபோகமாக அள்ளி விட்டுருக்கிறார். திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகிறது. இன்னமும் வாடகை வீடுதான்.அவர்களுக்குள்ளும் ஏதோ பிரச்சனை என்று கேள்விப்பட்டேன். அது வீட்டுப் பிரச்சனைக்காக என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும்,மணமாகி ஆறு வருசமாகியும் இன்னும் குழந்தைப் பாக்கியம் இல்லை.

நண்பரின் நண்பர் கதை வேறு.பெண்பார்க்கும் போது WORK PERMIT என்கிற ஒப்பந்த அடிப்படையில்தான் இருந்திருக்கிறார்.ஆனால் அவர்களிடம், நான் எத்தனை வருடம் வேண்டுமானாலும் மனைவியுடன் தங்கும் அனுமதி  உள்ளது.திருமணம் முடிந்த கையோடு அழைத்து சென்றுவிடுவேன்.அவளும் வேலைப் பார்க்கலாம் என சொல்லியிருக்கிறார்.ஆனால் இவரின் உண்மையான நிலை பிறகு தெரியவர , நிச்சயதார்த்ததோடு நின்றுவிட்டது.

இப்படி நிறைய சம்பவங்கள் உதாரணமாக சொல்லலாம். வெளிநாட்டில்தானே இருக்கிறோம். யாருக்கு என்ன தெரியப் போகிறது. திருமணத்திற்குப் பிறகு சமாளித்துக் கொள்ளலாம் என்கிற அலட்சிய சிந்தனைகளால் பாதிக்கப்படுவது ஏனோ பெண்கள்தான்.

மற்ற நாடுகள் எப்படியென்று தெரியவில்லை.சிங்கப்பூரில் தனி ஃபிளாட் வாடகைக்கு எடுத்தால் மினிமம் ரெண்ட் 80 ஆயிரம் ரூபாய். கேபிள் டிவி,இன்டர்நெட்,வாட்டர்,எலெக்ட்ரிசிட்டி இதில் வராது. ஒரு அறை  மட்டும் வாடகை எடுத்தால் 40 ஆயிரம் ரூபாய். அது என்ன
ஒரு அறை ..?


உதாரணமாக இரண்டு பெட்ரூம் உள்ள ஒரு பிளாட்டில், டாய்லட் இணைப்புள்ள அறையில் ஹவுஸ் ஓனர் குடும்பம் தங்கிக் கொண்டு மற்றொரு அறை வாடகைக்கு விடப்படும். அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே சமையல் செய்ய அனுமதிக்கப்படும். ஹாலை உபயோகப் படுத்தக் கூடாது. தவிர,ஏசி போடக்கூடாது, நண்பர்கள் வரக்கூடாது, சத்தம் போட்டுப் பேசக்கூடாது...etc  என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். ஹவுஸ் ஓனர் கூடவே வசிப்பதால் இதில் எதையும் மீறவும் முடியாது.இது மாதிரியான ஒரு அமைப்பில்தான் இந்தியாவி லிருந்து திருமணமாகி வரும் நிறையப் பெண்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதில் நண்பர்கள் வீட்டில் தங்குபவர்களுக்கு  ஓரளவு சலுகைகள் கிடைக்கும்.என் வீட்டில் உள்ள மூன்று பெட்ரூமில் ஒன்றை மட்டும் வாடகைக்கு விட்டுள்ளேன்.அதில் ஆந்திரா குடும்பம் ஓன்று குடியிருக்கிறது.  கணவன் மனைவி இருவரும் வேலைக்குச்செல்ல அவர்களின் குழந்தையைப் பார்த்துக்கொள்ள நண்பரின் பெற்றோரும் உடன் இருக்கிறார்கள். ஆக மொத்தம் ஐந்து பேர் அந்த அறையில். இருப்பினும் எந்தவிதக் கட்டுப்படும் விதிக்காமல் ஓரளவு மனிதாபிமானத்தோடு நடந்து கொள்வதால் அவர்களும் சிரமமில்லாமல் இருக்கிறார்கள்.

ஆனால் எல்லா இடங்களிலும் இதுபோல் இருப்பதில்லை.சீனன் வீட்டில் குடியிருந்தால் சமைப்பதில் கெடுபிடி, மலாய் வீட்டில் ஏற்கனவோ கும்பலாக இருப்பதால் பிரைவேசி இருக்காது, பூர்வீக தமிழர்களின் வீட்டில் தங்கும் போது இன்னும் அதிக சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். இப்படி பல சிக்கல்கள் வெளிநாட்டு வாழ்க்கையில்...

ஆனால்...இதையெல்லாம் நன்றாகத் தெரிந்து வைத்துக் கொண்டு,பெண் வீட்டாரிடம் உண்மையான நிலைமையை எடுத்துச் சொல்லாமல் மறைத்துவிடுகின்றனர் நிறைய வெளிநாடு வாழ் நண்பர்கள். பெண் பார்க்கும் சமயத்தில் நம்  உறவினர்கள் நம்மைப் பற்றி கொஞ்சம் மிகைப்படுத்திதான் சொல்வார்கள். திருமணத்திற்குப் பிறகு நடக்கும் எந்த பிரச்சனைகளையும் அவர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள். ஆனால் பிரச்சனைகளை சந்திக்கப் போகும் நாம் தான் உஷாராக இருக்கவேண்டும்.இதுதான் சம்பளம்,மாதத்திற்கு இவ்வளவு செலவாகும்,இது மாதிரி இடத்தில்தான் தங்கப் போகிறோம், இன்னென்ன கட்டுபாடுகள் இருக்கிறது, ஆபிசில் என் பொறுப்பு இதுதான்,தினமும் இத்தனை மணிக்குத்தான் வருவேன்,சனி ஞாயிறுகளில் வேலை இருந்தால் செய்துதான் ஆகவேண்டும்...போன்ற முக்கியமான சில விசயங்களை மனைவியாக வரப்போறவளிடம் திருமணத்திற்கு முன்பே தெரிவித்து விடுவது நல்லது. குறைந்த பட்சம் அழைத்து வரும் முன்பாகவாவது தெரிவித்து,தெளிய வைத்து விடுவது சாலச்சிறந்தது. 


இது, நண்பர்கள் மத்தியில் உள்ள பிரச்சனைகளை ஓரளவு அறிந்தவன் என்ற வகையில் என் மனதில் பட்டதை ஏதோ சொல்லனும்னு தோணிச்சிஅவ்வளவுதான்....


Thursday 11 July 2013

எழுச்சித் தலைவி பாபிலோனாவின் புரட்சிகர சிந்தனை....


விஸ்வரூபம் படத்துக்குக் கூட இவ்வளவு எதிர்பார்ப்பில் இல்லை. சன்டிவி விவாத நிகழ்ச்சியில், அதுவும் கில்மா சைட்டுகளை தடை பண்ணுவது தொடர்பாக எழுச்சித் தலைவி பாபிலோனா பேசியிருக்கிறார் என தெரியவந்தபோது, எப்படியாவது அதைப் பார்த்துவிடும் ஆவலில் தேடாத கில்மா சைட் கிடையாது. கூகுளில் தேடினால் எழுச்சித் தலைவி கண்ணியமாக நடித்த டூ பீஸ் & டாப் லெஸ் மட்டுமே காணக் கிடைக்கிறது. பிறகுதான் காரணம் புரிந்தது. வழக்கத்துக்கு மாறாக புடவை ரவிக்கை அணித்திருந்த காரணத்தால் படு ஆபாசமாக இருந்ததால் எந்த வெப்சைட்டும் அந்த காணொளியை வெளியிடவில்லை. இதையடுத்து எழுச்சித் தலைவி பேரவை சார்பில் ஸ்பெசல் யாகம் நடத்தப்பட்டது.

கடைசியில் தெய்வ அனுக்கிரகமும் ஆசீர்வாதமும் ஒருசேர கிட்ட நேற்றுதான் அந்த காணொளியை காணும் பாக்கியம் கிட்டியது. கூடவே லொள்ளு புடிச்ச அராத்து பல திசைகளிலிருந்தும் கேள்விக்கணைகளைத் தொடுக்க அதை கச்சிதமாக எதிர்கொண்டார், பார் போற்றும் பேரழகி எழுச்சித் தலைவி பாபிலோனா..

இளைஞர்களின் எழுச்சித் தலைவி டாக்டர் செல்வி பாபிலோனா
எழுச்சித் தலைவி பேசிய புரட்சிகர சிந்தனைகளை எழுச்சித் தலைவி பேரவை சார்பில் இங்கே பதிகிறோம். வரும் காலத்தில் ஆட்சிபீடத்தில் அமரும்போது கட்சிக்கென்று தனியாக கொள்கை இல்லாமல் போனால் இதுவே கட்சியின் கொள்கையாக பின்பு அறிவிக்கப்படும் என்பதையும் பேரவை சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்போ விவாதத்துக்கு போகலாம்....

மேட்டரு இதுதான்... இந்தியாவில 39 ஆபாச இணையதளங்களை முடக்கி விட்டார்களாம். இதைப் பற்றி சன் டிவியில் நடந்த சூடான விவாதத்தில் நமது எழுச்சித் தலைவி பொத்தாம் பொதுவாக பொதுவெளியில் வைத்த கருத்துக்களை  இங்கே பகிர்கிறோம்.(வீடியோ கீழே)


கேள்வி : 39 வெப்சைட்டை அரசு முடக்கியிருக்கிறது.அரசு எடுத்த நடவடிக்கை போதுமானதா..?  

எழுச்சித் தலைவி: என்னைப் பொறுத்த முட்டும் 39 தானே அப்படினு ஒரு சாதாரணமா சொல்லாம 39 -தை கட் பண்ணியிருக்காங்களே..இதுதான் ஃபர்ஸ்ட் ஸ்டெப்... இத நெனைச்சி ரொம்ப பெருமைபடுறேன்.( எது எதுக்கெல்லாம் பெருமைபடுறதுன்னு விவஸ்தையே இல்லையா அம்மணி...  

அதாவது ஒரு எட்டு மாத பையன் மொபைல்ல இன்டர்நெட் கனெக்சன் கொடுத்து பலான வெப்சைட் பாத்திருக்கான்.இந்த 39 வெப்சைட் தடை பண்ணினா பத்தாது வேரோட தடை பண்ணனும்.. (என்னது எட்டு மாசமா...கிழிஞ்சது போ .மாசத்துக்கும் வருசத்துக்குமே வித்தியாசம் தெரியில...என்னத்த கட்சி ஆரம்பிச்சி..சி.எம் ஆகிறது..) 

பாதி மரத்தோட கட் பண்ணிட்டு விட்டாதான் நமக்கு ரொம்ப கஷ்டம்..இட் வில் ஆட்டோமேட்டிகலி குரோவ். அதனால வேரோட வெட்டனும்.அதேப்போல ஒரு ஸ்டெப் ஏறினாத்தான் வீ கேன் கோ...நம்மளால தொடர்ந்து மேலே ஏறி போக முடியும்..  ஒரு  ஸ்டெப் ஏறாம மேலே போகணும் மேலே போகணும்னா வி கான்ட் இல்லையா..(நோட் பண்ணுங்கப்பா...நோட் பண்ணுங்கப்பா...)  

அதாவது சின்னப்பசங்களா இருக்கட்டும்,எங்ஸ்டெரா இருக்கட்டும், வயசானவங்களா இருக்கட்டும் யாரா இருந்தாலும் இனிமேல் அவுங்க மனசில ஒரு பயம் இருக்கும். (என்னான்னு அம்மணி...பலான வெப்சைட் பாத்தா எய்ட்ஸ் வருமா..)
" யாருல அது...எழுச்சித் தலைவி பேசுறப்போ எகத்தாளமா சிரிக்கிறது..? தோலை உரிச்சிப் போடுவேன்."
கேள்வி : அரசு வேர் வரைக்கும் போவணும்னு சொல்றீங்க...இந்த பொறுப்பு அரசுக்கு மட்டும்தான் இருக்கிறதா மத்தவங்களுக்கு  இல்லையா..  

எழுச்சித் தலைவி: அரசு வந்து எந்த அளவுக்கு ட்ரை பண்ணினாலும் அந்த அளவுக்கு எடுக்கமுடியாது அப்படினு ஆணித்தரமா சொல்றது வந்து ஒரு ஃபூலிஷான ஆன்ஸ்வர்னு நான் ஆணித்தரமா சொல்றேன். (கிழிஞ்சது...). 

 ஒரு கொலைகாரனா இருக்கட்டும் செயின் பறிக்கிரவனா இருக்கட்டும் இதே அரசுதான் கெட்டவன நல்லவனா மாத்துது.( போர்ன் சைட் பாக்கிறது ஒரு குத்தமாயா..கொலைகாரன் ரேஞ்சுக்கு அம்மணி கொண்டு போவுது)  

என்னை மாதிரி மக்களுக்கு இந்த 39 சாதரணமா இருக்கலாம். ஆனா 39 பிளாக் பண்ணியிருக்காங்ககிற நியுஸ் வெளியே தெரிஞ்சா இப்படி பண்ணியிருக்காங்கனு எல்லோரும் ஷாக் ஆயி இத பாக்கிறதா நிறுத்திடுவாங்க.  (ஆமா.. நான் கூட அப்படியே ஷாக் ஆயிட்டேன்) 

அதுவுமில்லாம ஸ்டுடெண்ட்ஸ்,பொது மக்கள் எல்லாம் போராட்டம் நடத்தினாங்கனா இன்னும் தடை செஞ்சி பாக்கக் கூடிய டெம்ப்ட் கம்மியாகும். சோ ..பொதுமக்கள் எல்லோரும் ஸ்ட்ரைக் பண்ணினா கண்டிப்பா இதை தடை பண்ணிடலாம். ( என்னது  இதுக்கு மாணவர் போராட்டமா...கிரேட் இன்சல்ட்..)
 
"யோவ் அராத்து.. எழுச்சித் தலைவிகிட்டேயே சண்டை போடுறியா..பேரவை சார்பா கண்டன தீர்மானம் போட்டுடுவோம் ஆமா.."
அராத்து: இல்லைங்க இந்த மாணவர்களெல்லாம் ஸ்ட்ரைக் பண்ணனும்னு சொன்னீங்களே.அதை கற்பனை பண்ணிப் பாத்தேன் ரொம்ப காமெடியா இருந்தது.     

எழுச்சித் தலைவி: காலேஜ் ஸ்டுடெண்ட்ஸ் கண்டதுகெல்லாம் ஸ்ட்ரைக் பன்றாங்க..அர்த்தமே இல்லாம ஸ்ட்ரைக் பன்றாங்க..இதுக்கு ஏன் பண்ணக் கூடாது. இது ஒரு கேன்சர் போல பரவி போயிட்டு இருக்கு. (என்னது கண்டதுக்குமா...லயோல்லா காலேஜ் ஸ்டுடெண்ட்ஸ் கவனிக்க ...)   

ஊசி இடம் கொடுத்தாதான் நூல் நொழைய முடியும்னு ஒரு பல மொழி இருக்கு...அதே போல எந்த மாணவனும் இந்த வெப்சைட்ட பாத்தாதான் தூக்கம் வரும்,சாப்பாடே இறங்காதுன்னு சொல்லறதில்லை. (இதுக்கு எதுக்கு அம்மணி அப்படியொரு பழமொழி..)   

இந்த ஆபாச வெப்சைட்ட பசங்க மட்டுமில்ல வயசான கிழவன் கிழவி வரைக்கும் பாக்குறாங்க... இப்போ  அந்த காலம் மாறி போயிடுச்சி..(உங்க ஆதங்கம் புரியுது அம்மணி..பரங்கிமலை ஜோதி ஹவுஸ் புல்லா ஓடினதே பல்லுபோன கிழடுகளாலதான...)  
 
"எழுச்சித் தலைவியின் தத்துவார்த்த சிந்தனைகளின் சாரம்சம் புரியாமல் 'முழிக்கும்' நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் . "
அராத்து..: அமாங்க எல்லோரும் பாக்குறாங்க..இல்லன்னு சொல்லல..ஆனா அதில் கிரைம் இருக்கா கிரைம் இல்லையான்னு பாக்கணும். அதைவிட்டுட்டு காலேஜ் ஸ்டுடெண்ட்ஸ் எல்லாம் ரோட்ல இரங்கி ஸ்ட்ரைக் பண்ணனும்னு சொல்றது வேடிக்கையா இருக்கு... 

எழுச்சித் தலைவி: ஏங்க நான் ஒன்னும் வடிவேல் காமெடி பன்னல...காலேஜ் ஸ்டுடெண்ட்ஸ் கொடி புடிச்சி ஸ்ட்ரைக் பண்ணனும்னு சொல்றதுக்கு நான் ஒன்னும் வடிவேலோ சந்தானமோ இல்ல..( யோவ் அராத்து நாங்க எப்போயா சொன்னோம் ..அது போன கேள்வி...இது இந்த கேள்வி..)  

நான் என்ன சொல்ல வரேனா இது ஒரு கேன்சர் மாதிரி கொடிய நோயா பயங்கர நோயா பரவிகிட்டே இருந்தா மக்களும் கொந்தளிச்சி போவாங்க என்னை மாதிரி..( அடங்கொன்னியா....இது உலக நடிப்புடா சாமி.... )

அராத்து.:ஏங்க நான் என்ன சொல்றேனா இது கிரைமா இல்லாதவரை எந்த தவறும் இல்லை...ஏங்க சினிமாவில் இல்லாத  ஆபாசமா... 

எழுச்சித் தலைவி:ஏங்க சினிமாவில் யாரும் நியூடா நடிக்கிலையே..கிளாமர் வேற.. வல்கர் வேற..(யோவ் அராத்து தேவையா உனக்கு...அதான் யாரும் நியூடா நடிக்கிறதில்லன்னு அம்மணி சொல்லுதுல... மூடிகிட்டு போயா... ) 

கேள்வி: சரி...ஆபாசத்தளங்கள்  பெருகுவதற்கு என்ன காரணம்..?   

எழுச்சித் தலைவி: அவர் சொல்ற மாதிரி முன்னெல்லாம் நிறைய புளுபிலிம் இருந்ததாம்,  CD இருந்ததாம்,  தியேட்டரில் போய் பாத்தாங்களாம்...ஓகே பைஃன்..அது முன்னாடி இருந்தது.ஆனா இப்ப வந்து ஒரு தப்பான கிட்டத்தட்ட வந்து, வெப்சைட் நிறைய வந்து,மேலைநாடுகளில் வந்து,அதிகமா இருக்குனா வந்து,தப்பான செய்திகள் வந்து மக்கள்தான் காரணம்னு   அவர் சொல்றாரு.அத நான் ஏத்துக்க மாட்டேன்..( கரெக்ட் இப்படித்தான் புரிஞ்ச மாதிரியும் இருக்கக் கூடாது...புரியாத மாதிரியும் இருக்கக் கூடாது.)

அராத்து.:சரிங்க மக்கள்தான பாக்குறாங்க...அவுங்க எப்படி காரணம் இல்லைன்னு சொல்றீங்க..
 

எழுச்சித் தலைவி: நீங்க சொல்றீங்க...மக்கள்தான் கிரிடிட் கார்டு ATMகார்டு யூஸ் பண்ணி வெப்சைட்ல பாக்கிறதாலதான் ஆபாச தளம் பெருகுது..இதனால மக்கள் கிட்டேருந்து பணம் கோடிக்கணக்கில் போயிட்டே இருக்கு.ஆனா மக்கள் மேல தப்பே இல்ல.மக்களை பிலேம் பண்ண  கூடாது. இந்த விவாத மேடையில இப்படி ஒரு விசயத்த வந்து சாதரணமா ஒரு குப்பை விசயமா நினைக்காம முக்கியத்துவம் கொடுத்து பேசுரதாலதான் மக்கள் வந்து,மில்லியன் கணக்கா இருக்கிற மக்கள் வந்து, அதுல யாரவது ஒருத்தர் வந்து யோசிபாங்களா...இது எவ்ளோ ஒரு தப்புன்னு ..இதுவே ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் தானே..(என்னது வரப்பிரசாதமா..? ) இதுவே ஸ்பிரெட் ஆகுமே...யாரும் இனிமேல் பாக்கக் கூடாது.இப்ப பாக்கிறவங்களுக்கு கண்டிப்பா அடிவயித்த கலக்கியிருக்கும்.  (நாம ஒரு கேள்வி கேட்டா நாம அசர்ற மாதிரி அம்மணி ஒரு பதில் சொல்லும் பாருங்க......) 


அராத்து.:இல்லங்க இதன்மூலம் கண்டிப்பா ஆர்வம் அதிகமாகத்தானே செய்யும்..... 

எழுச்சித் தலைவி: கண்டிப்பா கிடையவே கிடையாது.சான்சே இல்லை உங்களுக்கும் எனக்கும் என்ன பெட்டு...நான் பெட் கட்டிக்கிறேன் எவ்ளோ குரோர்ஸ் வேணும்னாலும்.ஆர்வமா இருக்கிறதுக்கு இது ஒன்னும் தங்கமோ,புடவையோ இல்ல...இது வந்து ஒரு கேவலமான விஷயம்...ஆபாசம் என்பது படு கேவலம்.( மகா  ஜனங்களே நல்லா கேட்டுக்குங்க இந்த பழி பாவத்துக்கு நாள் ஆளாகவே மாட்டேன்) இந்த 39 சைட் தடை பண்ணினத நாம வரவேற்கனும்..

அராத்து.:பாபிலோனா 39 என்ன 3900 வெப்சைட்ட தடை பண்ணினா கூட நான் சந்தோஷ படுவேன்...இப்ப கேள்வியே ஏன் ஆபாச வெப்சைட் பெருகுது. இதுக்கு ஏன் இப்படி உணர்ச்சி வசப்படுறீங்க..

 
எழுச்சித் தலைவி: இதே வெப்சைட்டில் என்னோட போட்டோவ மார்பிங் பண்ணி தப்பு தப்பா பண்ணியிருக்காங்க...(அடங்கொன்னியா..) சிலபேர் பாபிலோனா அப்படிப் பட்டவங்க இல்லன்னு நம்புறாங்க. சில பேரு அப்படி இருக்குமோனு சந்தேகப்படுறாங்க... எனக்கு 50 வயசாகி ரெண்டு குழந்தை இருந்தா பரவாயில்லை.(இருந்தா காறித் துப்பிருக்கும்...) ஆனா ஸ்டில் நான் வந்து கல்யாணமே ஆகல.. இதுக்குதான் இவளவு உணர்சிவசப்படுறேன்... (அதாவது இணையத்தில் இருக்கும் அம்மணியோட அனைத்து பலான வீடியோவும்  ஹாலிவுட் தொழில்நுட்ப உதவியுடன் மார்பிங் செய்யப்பட்டது...இது சத்தியம்..சத்தியம்..)     

கேள்வி: இதை தடுப்பதற்கு என்ன செய்யவேண்டும்... 

எழுச்சித் தலைவி: அதெல்லாம்  மிகப்பெரிய பாவம்..அதை பாக்கிறதாலதான் அப்படியே பரவுது.அது ஒரு நோய் மாதிரி...எதுக்கு பாக்கணும்...பாத்தாதான் பீல் வருமா...ஒரு ஹஸ்பண்டு ஒரு வைஃப பாத்தாலோ அல்லது ஒரு வைஃப் ஒரு ஹஸ்பண்ட பாத்தா பீல் வரதா...? (அம்மணி கோவப்படுதுனா அதுல ஒரு அர்த்தம் இருக்குங்க.... இந்த போர்னோகிராஃபி வெப்சைட் வந்தப் பின்னாடிதானே பதினோருமணி காட்சி எல்லாம் காத்து வாங்கினது. அம்மணி பொழப்புல மண்ணை அள்ளி போட்டா கோவம் வராதா பின்ன..? )

ஒரு வழியாக எழுச்சித் தலைவி பேரவையில் இணைந்த அராத்து.
எழுச்சித் தலைவி பேரவை : ஹோய்...யார்ரா அது என் தலைவியைப் பத்தி தப்பா பேசுறது. இன்னும் அஞ்சு வருசத்துல ஆட்சியைப் புடிக்கிறோம்.அப்பால பிரதமர். இந்தியாவிலே பிரதமர் ஆகும் தகுதி எங்க எழுச்சித் தலைவிக்கு மட்டும் தாண்டா இருக்கு...