Wednesday, 17 July 2013

கேதார்நாத் துயரத்தில் மதச்சாயம் பூசி ஆதாயம் தேடும் உமாசங்கர் ஐ.ஏ.எஸ்..

            'மதம்' பிடித்தால், யானையை மட்டுமல்ல மனிதனையும் காட்டுமிராண்டியாக்கிவிடும் என்பதை நிருபித்திருக்கிறார் இந்த படித்த முட்டாள்..

எப்படி ஐபிஎஸ் என்றால் உடனே நமக்கு வைஜெயந்தி.. ச்சே.. திலகவதி ஐபிஎஸ் பெயர் ஞாபகம் வருகிறதோ அதே போல் ஐ.ஏ.எஸ் என்றால் முதலில் நம் மூளையில் உதிக்கும் பெயர் உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.

பொதுவாகவே, அரசாங்கத்தில் பெரிய பதவிகள் வகிக்கும் அதிகாரிகளின் அன்றாட வேலைகள் என்ன என்பதை சினிமாவில் பார்த்துதான் நம் சமூகம் தெரிந்து வைத்திருக்கிறது.மிடுக்கான,செருக்கான,திமிரான பதவி என்றால் அது காவல்துறைதான் என்கிற பிம்பம் நம் எண்ணத்தில் தோன்றுவதற்கும் சினிமாதான் காரணம். வைஜெயந்தி ஐபிஎஸ்,சேதுபதி ஐபிஎஸ்,தமிழ்ச்செல்வன் ஐபிஎஸ்... இப்படி நிறைய ஐபிஎஸ்-சை சினிமா மிகைப்படுத்திக் காட்டினாலும் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை வெறும் தயிர் சாதமாகவே தொடர்ந்து காட்டி வந்திருக்கிறது.

ஆனால் தளபதியில் சூர்யா-தேவாவுக்கே தண்ணிகாட்டும் அர்ஜுன் ஐ.ஏ.எஸ் ஆக வரும் அரவிந்த்சாமியின் கேரக்டர்தான், ஒரு கலெக்டருக்கு இவ்வளவு அதிகாரம் இருக்கா என வெளி உலகுக்கு(!?) தெரியப்படுத்தியது. ஆனால் நிஜ வாழ்க்கையில் இவ்வளவு தைரியமான கலெக்டர் இருப்பாங்களா என்ன.. என்கிற என் பொதுப் புத்தியில் தோன்றிய சந்தேகத்திற்கு ஐந்தரையடி உயரத்தில் ஒரு பதில் கிடைத்தது. அதுதான்  உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.

சுடுகாட்டு கொட்டகை ஊழலை தோண்டியெடுத்து போயஸ் தோட்டத்துக்கே பயாஸ்கோப் காட்டியவர் என்கிற வகையிலே உலகம் இவரை அறிந்திருக்கும். அதைவிட இவர் ரியல் ஹீரோவாகவே வாழ்ந்த ஒரு ஸ்டோரி இருக்கிறது. விலாவாரியாக வேண்டுமானால் திருவாரூர் பகுதி மக்களிடம் கேட்டுப்பாருங்கள். இவரைப் பற்றி எனக்குத் தெரிந்த இரண்டு சம்பவங்கள் சொல்கிறேன்...

1999 என்று நினைக்கிறேன்.திருவாரூருக்கு மாவட்ட ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்கிறார். இது கலைஞரின் செல்லத் தொகுதி என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.இவர் பொறுப்பேற்றவுடன் இதுவரையில்லாத மாற்றங்கள் மின்னல் வேகத்தில் நடந்தேறுகிறது. கள்ளச்சாராயம்,ரவுடிசம்,லஞ்சம் எல்லாம் கட்டுப்படுத்தப் பட்டு பேருந்துகளில் பெண்களின் இருக்கையில் ஆண்கள் அமரக்கூடாது, புகார்களை தெரிவிக்க ஆங்காங்கே புகார் பெட்டிகள் என புதுமைகள் செய்து புரட்சிக் கலெக்டராக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் வலம் வந்து கொண்டிருந்த இவருக்கு ஒரு புகார் வருகிறது.ஒரு குறிப்பிட்ட பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வந்த தகவல்தான் அது.

உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்கிறார்.அவர்கள் அப்படியெல்லாம் இல்லை என மறுக்கிறார்கள். நேரடியாக களத்தில் குதிக்கிறார் உமாசங்கர். கைலி,பனியன் , தலையில் முண்டாசு என ஒரு கிராமத்தானின் கெட்டப்பில் சாராயம் விற்கப்படுவதாக சொல்லப்பட்ட அந்தப் பகுதிக்கு செல்கிறார்.அங்கு உண்மையிலேயே சாராயம் விற்கப்பட்டுக் கொண்டிருந்தது.குள்ளமாக கருத்த தேகத்துடன் இருந்ததால் யாருக்கும் சந்தேகமும் வரவில்லை. எல்லோரையும் போல இவரும் பணத்தைக் கொடுத்துவிட்டு ஒரு கிளாஸ் சாராயத்தை வாங்குகிறார். அதை அப்படியே எடுத்துக் கொண்டுபோய் மாவட்ட காவல்துறை அலுவலகத்துக்குச் சென்று அந்த அதிகாரியின் டேபிளில் வைத்து 'இப்போ என்ன சொல்றீங்க..?' எனக் கேட்டாராம்.

இன்னொரு சம்பவம், தியேட்டர்களில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக வசூலிக்கப் படுவதாக புகார் வர,இவரே நேரில் சென்று தியேட்டரில் டிக்கெட் வாங்கியிருக்கிறார். அவர்கள் கையும் களவுமாகப் பிடிபட ,உடனே சீல் வைக்கப்பட்டது அந்த தியேட்டர்...

இப்படி எத்தனையோ....! இந்தியாவிலேயே முதல் கணிப்பொறி மாவட்டமாக திருவாரூரை மாற்றிய பெருமை கூட இவருக்கு உண்டு.. அப்படிப்பட்ட இந்த ரியல் ஹீரோ,இந்த வார நக்கீரனில் கொடுத்த பேட்டியை
ப் படித்த போது கடும் அதிர்ச்சிக்குள்ளானேன்.இவர் மத போகராக மாறிவிட்டார் என்ற செய்தி ஏற்கனவே அறிந்தது தான்.அதற்காக தன் படிப்புக்கும் செயல்பாட்டுக்கும் சம்மந்தமே இல்லாத மாதிரி இவர் கூறிய செய்திகள் படிப்பறிவே இல்லாத பாமரனைவிட கேவலமாக உள்ளது. 

அதாவது கேதர்நாத் சம்பவமே கர்த்தரின் கோபத்தால் நடந்தது என்கிறார் மத போஷகர் உமா சங்கர். சில நாட்களுக்கு முன்பு, மக்களே அழிந்தாலும் சாமி சிலை மட்டும் அப்படியே இருக்கிறது என்றால் அதுதான் இறைவனின் சக்தி என வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய ஜெயேந்திரரின் அறிக்கைக்கு 'கவுன்டர் ' அடித்தது போல் இருக்கிறது இவரின் பேட்டி.

மேலும், இதுபோன்ற சம்பவம் நடக்கும் என்று 2011 மார்ச் 8-ல் இவருக்கு தேவதூதர் 'தந்தி' அனுப்பினாராம். சரி நீங்கள் ஏன் முன்கூட்டியே தெரிவித்து அந்த ஆபத்துகளைத் தடுக்கக் கூடாது என கேட்டதற்கு இவர் அளித்த பதில் "தேவனுடைய தண்டனையிலிருந்து தப்பிக்க எந்த அரசாங்க நடவடிக்கையும் பயன் தராது. யேசுவிடம் சரணடைவது மட்டுமே தப்பிக்க ஒரே வழி..."


கேதர்நாத் சம்பவத்தில் ஒரு மாநிலமே நிலைகுலைந்து போயிருக்கையில்,எரிகிற வீட்டில் பிடிங்கின வரைக்கும் லாபம் என்பதுபோல் இது இந்து மக்களின் சிலைவழிபாடுகளுக்கு எதிரா
கர்த்தருடைய கோபத்தின் வெளிப்பாடு என்கிறார். குஜராத் பூகம்பத்திற்குக் கூட இதே மாதிரியான ஒரு விளக்கம் அப்போது சொல்லப் பட்டதாக ஞாபகம்.ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காண்பி எனவும், கொலை செய்திருந்தாலும் திருந்தி வருந்தினால் பாவ மன்னிப்பு வழங்கப்படும் போன்ற உயரிய கோட்பாடுகளை சொல்லிய கிருஸ்துவ மதத்திலிருந்து இப்படி ஒரு மத போகர் இருப்பது எவ்வளவு பெரிய ஆபத்தான விஷயம்..!    

இந்துத்வா மதவாதிகளுக்கு எந்த விதத்திலும் நான் சளைத்தவனல்ல என கர்த்தர் மேல் சத்தியம் செய்யாத குறையாக  நிருபித்திருக்கிறார் இந்த படித்த முட்டாள். கடந்த ஆட்சியில் இவர் மேல் பல குற்றச்சாட்டுகளைச் சொல்லி திமுக அரசு நெருக்கடி கொடுத்தபோது இணையத்தில் உமா சங்கருக்கு ஆதரவாக பொங்கி எழுந்தவர்கள் ஏராளம். இன்று எல்லோரையும் வாயடைக்கச் செய்திருக்கிறார் இந்த 'Man of the Next Millennium' MR.C.Umashankar IAS.


17 comments:

 1. Pathaviyai asinga paduthum aasami.

  ReplyDelete
 2. தமிழ் நாட்டில் மதப் பிரச்சாரம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில்,எப்படி IAS படித்த திரு .உமாசங்கர் இப்படி பேசுகிறார் என்றே புரியவில்லை!இயற்கைச் சீற்றத்தில் இருந்து எப்படி நம்மை பாதுகாத்து கொள்வது பற்றி சொல்லவேண்டியவரே ,மதப் பிரச்சாரம் செய்வது கண்டனத்திற்கு உரியது !

  ReplyDelete
  Replies
  1. படித்த முட்டாள் என்று நிருபித்திருக்கிறார். நன்றி பாஸ்..

   Delete
 3. கொலை செய்திருந்தாலும் திருந்தி வருந்தினால் பாவ மன்னிப்பு வழங்கப்படும் போன்ற உயரிய கோட்பாடுகளை சொல்லிய கிருஸ்துவ மதத்திலிருந்து இப்படி ஒரு மத போதகர் இருப்பது எவ்வளவு பெரிய ஆபத்தான விஷயம்.
  >>
  நிஜம்தான்

  ReplyDelete
 4. He is no more the person with dignity. He cheated all who supported his crusade against corruption with his new action/view.

  ReplyDelete
 5. // இணையத்தில் உமா சங்கருக்கு ஆதரவாக பொங்கி எழுந்தவர்கள் ஏராளம். //

  ஆமாம் ... ஆமாம் ...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி பாஸ்..

   Delete
 6. Replies
  1. ஹா.ஹா.. கரெக்டா சொன்னீங்க நன்றி..

   Delete
 7. இது இந்தப் பதிவிற்கான பதில் இல்லை.வேறு ஒரு பதிவில் உங்களுக்கு அளித்த பதில்.

  நீங்கள் அறியவே இங்கேயும் பதிகின்றேன்.


  மணிமாறன்...இங்கே காப்பி செய்யமுடியவில்லை....நேர்மை..விசுவாசம் இரண்டும் வேறு வேறு என்று எனக்கும் தெரியும்.

  ஆனால்....தான் விசுவாசமாக இருந்த ஒரு தலைவர் தன்னை நேர்மையாக நடத்தவில்லையென்றால் அந்த தலைவரின் பரம்பரையின் மீதே சந்தேகம் கொள்வார்.தான் வாழ்நாள் முழுதும் விசுவாசமாக இருக்கவேண்டுமானால் அதற்கு ஈடான சன்மானம் கிடைக்கவேண்டும். சும்மா விசுவாசமாக இருக்க இது ஒன்றும் அடிமை காலம் கிடையாது.

  மேலும் கருணாநிதி என்ற நபரிடம் விசுவாசமாக இருக்க அந்தக் கட்சியில் யாரும் இல்லை. பதவியும்..வாய்ப்பும் இல்லாவிட்டால் போய்யா என்று போய்விடுவார்கள்.
  வைகோவைப் போல் அனைவரும் கட்டுப்பாடாக பேசுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. அதிலும் கருணாநிதி போன்ற நாலாந்தர அரசியல் வாதிகளைப் பற்றி எது வேண்டுமானாலும் பேசுவார்கள்.அதில் குறை ஒன்றும் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராவணன்... உங்களுக்கான பதில் அந்தப்பதிவிலே கொடுத்திருக்கிறேன்..
   (http://www.rahimgazzali.com/2013/07/some-questions-to-parithi.html)

   Delete
 8. ITs correct word of the MR>uma sankar I A S

  ReplyDelete