Saturday 31 August 2013

லட்சம் ஹிட்சை நோக்கி ஒரு லட்சியப்பெண்ணும்.. பதிவரின் குறும்படமும்...

                    நாளை இந்நேரம் இரண்டாம் தமிழ் பதிவர் திருவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கும். வெளிநாடுகளில் வசிப்பதால் நெருங்கிய உறவினர்களின் விஷேசங்களில் கலந்துகொள்ள முடியவில்லையே என்கிற ஆதங்கமும் வருத்தமும் முன்பு இருக்கும்.தற்போது அதோடு பதிவர் மாநாடும் சேர்ந்துவிட்டது. தன் ரசனைமிக்க எழுத்துகளால் வாசிப்பவர்களை வசியம் செய்த பதிவர்களையும் ஊடகவியலார்களையும் நேரில் சந்திப்பதென்பது நெகிழ்ச்சியான நிகழ்வல்லவா...!  அந்தக் கொடுப்பினைக்கும் கொஞ்சம் அதிஷ்டம் வேண்டும் போல...

இணையத்தில் முகம் காட்டாமல் எழுத்தின் மூலம் பரிட்சையமான பதிவர்கள் பலர்.  அவர்களை வெளிக் கொணரும் நிகழ்வாகவும் இந்தப் பதிவர் திருவிழா அமைவது அதன் தனிச்சிறப்பு. சிலர் தன் எழுத்தின் மூலம் பலரது மனதில் குடிகொண்டுவிட்டு பின்பு முகத்தைக் காண்பித்து பரவசப்பட வைப்பார்கள். சமீபத்தில் செங்கோவி, மாத்தியோசி மணி போன்றவர்களின் நிஜ முகத்தைப் பார்க்கும் பாக்கியம்(போட்டோவில்தான்) கிட்டியது.

சென்ற ஆண்டு பதிவர் திருவிழாவில் நகைச்சுவைச்செம்மல் சேட்டைக்காரனின் தரிசனம் கிடைத்தது. இந்த ஆண்டு மங்குனி அமைச்சர்,பன்னிக்குட்டி ராமசாமி உட்பட சில பிரபல பதிவர்கள் வரக்கூடும் என்கிற தகவல் மேலும் சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது. நேரில் பார்க்க முடியாவிட்டாலும் 'லைவ் டெலிகாஸ்ட்' இருப்பதாக சொல்கிறார்கள். ஒரு பதிவராக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்...


லட்சம் ஹிட்ஸ் என்கிற லட்சியத்தை நோக்கி போலந்து அம்மணி...

மிழ் வலைப்பூவில் முதன்முதலில் ஒரு லட்சம் ஹிட்சை எட்டியது கேபிள்ஜி என நினைக்கிறேன்.வலைப்பூ எழுதுவதற்கு முன் அவரது பதிவுகளை ஒரு வாசகனாக தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். லட்சம் ஹிட்சை வாரிவழங்கிய வாசகர்களுக்கு நன்றி அப்படின்னு ஒரு பதிவு போட்டார்.   அடேங்கப்பா லட்சம் ஹிட்சா என அன்று வாயைப் பிளந்தேன். பிறகு நான் பதிவு எழுத ஆரம்பித்த பொழுது லட்சம் ஹிட்ஸ் என்பதை ஒரு லட்சியமாக கொண்டு பதிவெழுத ஆரம்பித்தேன்.எப்படியோ அந்த மைல் கல்லை தாண்டிவிட்டேன்னு வச்சுக்குங்க.. இப்போ எதுக்கு இந்த வெட்டி டீடைல்ஸ்னு கேட்குறீங்களா...

நம்மைப்போலவே போலந்து நாட்டு அம்மணி ஒன்னு, லட்சம் ஹிட்சை அடைந்தே தீருவேன் என வெறியோடு கிளம்பியிருக்கு. இதுவரை 284 ஹிட்சை தாண்டிவிட்டதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கிறது...அந்த அம்மணியோட வலைப்பூ என்ன... நானும் ஒரு ஹிட்சை போட்டுட்டு வந்துடுறேன் என உள்ளங்கை லேசாக நமைச்சல் எடுத்தால், அடுத்து சொல்லப்போகும் சங்கதியைக் கேட்டுவிட்டு பின்பு முடிவு செய்யவும்...

அந்த போலந்து நாட்டு பெண்ணின் பெயர் அனியா. 21 வயதே நிரம்பிய இவருக்கு ஒரு வினோத ஆசை. அதை ஆசை என்பதைவிட லட்சியம்(!) என்றே சொல்லலாம். உலகம் முழுவதும் சுற்றி ஒரு லட்சம் ஆண்களை சந்திக்க வேண்டும் என்பதுதான் இவருடைய தனியாத தாகம்.இது என்ன பெரிய விசயம்னு கேக்க தோணுமே..

இவர் சொல்கிற ''சந்திப்பு'' வேற.. சினிமாவில் 'நான் சந்தித்ததில நீ ஒருத்தன்தான் ஆம்பளை' என மேட்டரா வர்ற வில்லிக்கு ஒரு டெம்ப்ளேட் டயலாக் வச்சிருப்பாங்களே.. அதே சந்திப்புதான். லட்சம் பேரை 'சந்தித்து' கின்னஸில் இடம்பெறப்போவதாக வேற சொல்லியிருக்கு... என்ன ஒரு லட்சியம்..!


இதுவரையில 284 பேர 'சந்திச்சிருக்கிறதா' தன்னோட முகநூல் பக்கத்தில தெரிவிச்சிருக்கு.  இதற்காக தனி முகநூல் பக்கமே  இருக்கிறதாம்... அங்க சில பயபுள்ளைக WE WILL MEET IN SRILANKA..THAILAND..INDIA..என அட்வான்ஸ் புக்கிங் வேற பண்ணியிருக்காணுவ. (நல்லா வருவீங்கடா...)

பாவம் அந்த பொண்ணுக்கு சரியா விவரம் பத்தல. எதுக்கு அம்மணி உலகம் பூரா சுத்தணும்...? எங்க தலைநகர் டெல்லி, பம்பாய் ..அப்படியே கொஞ்சம பீகார்,ஆந்திரா வழியா தமிழ் நாட்டை ஒரு ரவுண்டு அடிச்சா பத்தாது..? உங்க லட்சியத்தை சொல்லாமலே நிறைவேற்றி வைப்பானுக..

சிறுமிகளைக் கூட விட்டுவைக்காத வெறிப்பிடித்த மிருகங்கள் இங்க நிறைய இருக்கு அம்மணி... உங்க லட்சியத்தை நிறைவேற்றின மாதிரியும் இருக்கும்... எங்க பிஞ்சுகளை காப்பாற்றின மாதிரியும் இருக்கும்.

துலைக்கோ போறியள்..... 
லையுலகில் நீண்ட காலமாக எழுதிவரும் சில பதிவர்கள்  தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் அடுத்தக்கட்டத்திற்கு நகர்கிறார்கள். கேபிள் சங்கர், கருந்தேள்.. என இந்த பட்டியல் நீளும். இதில் சமீபத்தில் இணைந்திருப்பவர் ஈழத்திலிருந்து எழுதும் மதியோடை மதிசுதா..

தன் சொந்த முயற்சியில் "துலைக்கோ போறியள்" என்கிற குறும்படத்தை எடுத்துள்ளார். இதற்கு திரைக்கதை, வசனம், இயக்கம் என்கிற மூன்று பொறுப்புகளையும் ஏற்று, மண்மணம் கமழ ஒரு குறுங்காவியத்தை படைத்துள்ளார் என்றுதான் சொல்லவேண்டும்.

தெனாலி படத்தில் கமலும், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சில கதாபாத்திரங்களும் பேசியதைத்தான் ஈழத்தமிழ் என இவ்வளவு நாட்களாக நம்பிக்கொண்டிருந்தேன்.அவர்கள் மிமிக்கிரி செய்ய முயற்சித்திருக் கிறார்கள் என்பதை இந்தக் குறும்படத்தைப் பார்த்தபோதுதான் தெரிந்து கொண்டேன்.

விளிம்புநிலை மனிதர்களின் சின்னச்சின்ன உணர்வுகளை அற்புதமாக படம் பிடித்திருக்கிறார். பின்னணி இசை அபாரம்.முதல் படைப்பு என்பதால் சிறு தவறுகள் இருக்கலாம். அதைப் புறந்தள்ளிவிட்டுப் பார்த்தால் ஈழப் பதிவர்கள் மத்தியில் இது ஒரு மைல் கல். மென்மேலும் வளர சக பதிவர் என்கிற வகையில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.



(துலைக்கோ போறியள்--->எங்கே போகிறீர்கள்)






Monday 26 August 2013

விஜய் TIME TO REALIZE ...!


ணக்குங்ண்ணா....

 திரும்பவும் நம்ம அணில் மேட்டர்தான்.

"எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. ரசிகர்கள் தயவு செய்து பேனர்களில் அரசியல் வசனங்களை எழுத வேண்டாம்.என் வேண்டுகோளையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் ரசிகர் மன்றத்தை கலைப்பேன். ரசிகர் மன்றம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இனி நானே நேரடியாக ஈடுபடுவேன்.என் தந்தையோ வேறு யாரோ ரசிகர் மன்ற விஷயங்களில் தலையிட மாட்டார்கள்."

இப்படி ஒரு புரட்சிகர சிந்தனைகளோடு நம்ம இளைய தளபதி விஜயிடமிருந்து அறிக்கை வந்ததாக அறிந்தேன். விஜய் முதன்முதலாக தன் சொந்த வாயிலிருந்து(!) ,சுயமாக(!) ஒரு அறிக்கை விட்டிருக்கிறார் என்பதே பெரிய விஷயம் தானே. அதிலும் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்பது வியப்பிலும் வியப்பல்லவா....

ஆனா பிறகுதான் தெரிந்தது... அது யாரோ கிளப்பிவிட்ட புரளியாம்... அதான... தங்கம் வச்சி தேய்ச்சாலும்​​​​ எதோ ஒன்னோட நிறம் வெளுக்குமா என்ன ..?

ஆனால் ஒன்னுங்க.... 'உண்மை கண்டறியும் சோதனை ' னு ஒன்னு இருக்காமே. அதை வச்சி விஜய் மனசில் என்ன இருக்குனு சோதித்தால் நிச்சயமாக இதையேத்தான் சொல்வார்.ஏனென்றால், இந்த விசயத்தில் விஜய் ரஜினி மாதிரி. அரசியலில் ஈடுபட துளிகூட ஆர்வமில்லாதவர்.

ஒருகாலத்தில் அரசியல் அசிங்கத்தில் பின்னிருந்து தள்ளிவிட சில சக்தியில் முயன்றபோது எந்த தடுமாற்றமும் இல்லாமல் ஸ்டெடியாக இருந்தவர் ரஜினி. அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என குழம்பிப் போனது என்னவோ நாம்தான். அதில் ரஜினி தெளிவாகத்தான் இருந்தார்...இப்பவும் இருக்கிறார்.

ஆனால் விஜயின் நிலைமை வேறு. வந்தோமா... நடித்தோமா.. ரிலாக்சா  இருந்தோமா என்கிற மனநிலை அவருக்கு. அதேவேளையில் தன்னை இந்தளவு உச்சத்திற்கு கொண்டுசென்ற அப்பாவின் வார்த்தையைத்  தட்ட முடியாத திரிசங்கு நிலையில் தற்போது தவிக்கிறார்.

எஸ்.ஏ.சி ஏற்கனவே அரசியல் தொடர்பில் இருந்தவர்.ஒருகாலத்தில் கலைஞரின் அதிதீவிர விசுவாசி. தீவிர அரசியலில் நுழைய ஏதாவது ஓட்டை கிடைக்குமா எனத் தேடிக்கொண்டிருந்தவர். அதைத் தற்போது தன் மகன் மூலம் சாதிக்க நினைக்கிறார். தன் மகனுக்கு இளைஞர்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை அரசியல் பக்கம் திருப்பி அடுத்த எம்ஜியாராக்கிவிடலாம் என பகல்கனவு காண்கிறார். தமிழகத்தில் தன் வாய்ஸ் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய சூப்பர் ஸ்டாரே கால் வைக்க தயங்கும் அரசியல் களத்தில்,தைரியமாக ஒரு அறிக்கை விடக்கூட வக்கில்லாத விஜயை வைத்து எப்படி இப்படியொரு மனக்கோட்டையைக் கட்டுகிறார் எனத் தெரியவில்லை.


இன்று ரஜினிக்கு அடுத்து தமிழ்த் திரையுலகில் வசூல் சக்ரவர்த்தியாக விளங்கும் விஜய்க்கு அவரின் தந்தை அமைக்கத் துடிக்கும் அரசியல்பாதை சரியானதுதானா...?  விஜயை இவ்வளவு பெரிய நடிகராக மாற்றிய அவர் அப்பாவுக்கு எல்லாம் தெரியும் என்கிற குருட்டு வாதம் இங்கே சரிவராது. முதலில் விஜயை ஒரு மாஸ் ஹீரோவாக மாற்றியது எஸ்.ஏ.சி கிடையாது. இன்னும் சொல்லப்போனால் உச்சத்தில் இருக்கும் விஜயை அவ்வப்போது காலைப்பிடித்து கீழே இழுத்து விடுவது எஸ்.ஏ.சி தான்.

சிம்புவுக்கு டி.ஆர் போல,அருணுக்கு விஜயகுமார் போல,சூர்யா-கார்த்திக்கு சிவகுமார் போல,விஜய்க்கு எஸ்.ஏ.சி அவ்வளவே. ஆனால் விஜயின் அதிர்ஷ்டம் விக்கிரமன், பாசில் போன்ற இயக்குனர்களின் ஆசி கிடைத்தது. விஜயைப்போல் எல்லா திறமைகள் இருந்தும் அருண்விஜயகுமார் ஜொலிக்காமல் போனது எப்படியென்று யோசித்தால் தெளிவாக ஒரு விஷயம் புரியும்...."விஜய்க்கு வாய்த்த இயக்குனர்கள் திறமைசாலிகள்..."

ஒருவேளை எஸ்.ஏ.சி விஜயை வைத்து எடுத்த அற்புத காவியங்களான ரசிகன்,தேவா,விஸ்ணு, மாண்புமிகு மாணவன்..என இந்த வரிசையில் விஜயின் பாதை அமைந்திருந்தால்,இந்நேரம் விஜய் டிவியின் ஜோடி NO-1 ல் ஆடக் கூட இடம் கிடைத்திருக்காது. ரசிகன் படம் வந்தபோது குமுதம் தன் விமர்சனத்தில்,இவர் தந்தை ஒரு இயக்குனர் என்பதால் இந்த மூஞ்சியை எல்லாம் பார்க்க வேண்டியிருக்கு என்கிற ரீதியில் எழுதியிருந்தது. பிறகு விஜய் வளர்ந்து அதே குமுதத்தில் தன் வாழ்க்கைத் தொடரை எழுதினார் என்பது வேறு விஷயம்.

சரி.. விஜய் அரசியலுக்கு வந்து ஜொலிப்பது இருக்கட்டும். அஜித்துக்கு 'தலை' போல விஜய்க்கு 'தலைவா' நிலைக்க எஸ்.ஏ.சி பட்ட பாடு இருக்கே...

'தலைவா' வுக்கும் விஜய்க்கும் கொஞ்சம் கூட ராசி கிடையாது.  விஜய்க்கு தலைவா என்கிற பட்டத்திற்காக  இப்போது முயற்சிக்க வில்லை. ஏற்கனவே முயன்று அடிவாங்கியவர்தான் எஸ்.ஏ.சி. உண்மையச்சொன்னால் தற்போது வந்திருப்பது தலைவா பார்ட்-2.  இதன் முதல் பாகம் ஏற்கனவே வெளிவந்து அட்டர் பிளாப் ஆனது. அது 2006-ல் வெளிவந்த ஆதி.

கிட்டத்தட்ட தலைவா பிரச்சனைகளை அதுவும் சந்தித்து.ஒரே வித்தியாசம், தலைவா படம் வெளிவருவதற்கு முன்பு . ஆதியில் வெளியான பின்பு. கில்லி, திருப்பாச்சி, சிவகாசி என உச்சத்தில் சென்றவரை ஒரேயடியாக வீழச்செய்ததுமில்லாமல் அதுவரை விநியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளையாக இருந்த விஜய்க்கு எதிராக அவர்களை வெகுண்டெழச்செய்தது.இழப்பை சரிசெய்யாவிட்டால் இனி விஜய் படங்களை வெளியிடப்போவ -தில்லை என ஒட்டுமொத்தமாக போர்க்கொடி உயர்த்த, நொந்தே போனார் எஸ்.ஏ.சி. ஏனென்றால் அதுதான் விஜய்யை வைத்து அவர் தயாரித்த முதல் படம். முதல் படமே கோணலாகப் போனதால் அதன்பிறகு அவர் தயாரிப்பில் இறங்கவே இல்லை.

ஆதி என்கிற ஒரே படத்தில் விஜயின் இமேஜை எஸ்.ஏ.சி எப்படி உடைத்தார் என்பது ஒரு சுவாரஸ்யமான கதை.

ஆதி படத்தின் இயக்குனர், திருமலை படத்தை இயக்கிய ரமணா. திருமலை செம ஹிட்தான்.ஆனால் இவரின் அடுத்த படைப்பு அப்போதைய தனுஷ் மார்க்கெட்டை  தவிடு பொடியாக்கிய சுள்ளான். தனுஷ் கேரியரில் மகா மொக்கை.இந்தப்படத்தின் பிரிவியூ ஷோவுக்கு எஸ்.ஏ.சியும் விஜயும் சென்றிருக்கிறார்கள்.பிறகு நடந்ததை ரமணாவே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். படம் முடிந்து வெளிவந்தபோது எஸ்.ஏ.சிக்கு வார்த்தையே வராமல் ரமணாவின் கையைப் பிடித்து கண்கலங்கிப் போனாராம்." இப்படி ஒரு படம் உங்கிட்டேருந்து எதிர் பார்க்கல. இது தமிழ் சினிமாவின் மைல்கல். என் சொந்த பேனர்ல விஜய்யை வைத்து முதன்முதலா ஒரு படம் தயாரிக்கிறேன்.அதுக்கு நீதான் டைரக்டர்" என அங்கேயே அட்வான்ஸ் கொடுத்தாராம்.. என்ன ஒரு கலைரசனை மிக்கவர் எஸ்.ஏ.சி..!

 
தலைவா பார்ட் -1

ஆனால் அந்தப் படத்திலேயே விஜய்க்கு 'தலைவா' இமேஜ் கொடுக்க முயன்று வாங்கிக் கட்டிக்கொண்டவர்தான் எஸ்.ஏ.சி. ஆதியில் விஜயின் தங்கையாக வருபவர் படம் முழுக்க விஜயை 'அண்ணா' என்றுதான் அழைப்பார். ஒரு காட்சி மட்டும் வலிய திணிக்கப்பட்டிருக்கும்.

"என்ன தலைவா சாட்டிங்கா.." இது அவரின் தங்கை.

"இந்த தலைவா வாலுவால்லாம் கூப்பிடுறத விட்டுட்டு ஒழுங்கா அண்ணனு கூப்பிடு .." இது பெருந்தன்மையாக(!!!) விஜய்.

"ஊரே கூப்பிடும்போது நான் கூப்டக்கூடாதா  ..? " 

பார்ரா...நமக்கே தெரியாம அப்படியொரு ஊரு எந்த கன்ட்ரிலப்பா இருக்கு..? ஆனாஅதுக்கு நாம சரிபட்டு வரமாட்டோம்னு அப்பவே விஜய் சுதாரிச்சிருந்தா இப்போ இப்படி ஒரு கேவலம் நடந்திருக்குமா...?

ஒரு டிவி பேட்டியில தன் வீட்டில் உட்காந்திருந்த இடத்தைக் காட்டி 'இது எனக்கு ராசியான இடம். இதோ இங்க தான் துள்ளாத மனமும் துள்ளும் கதை கேட்டேன்,இங்கதான் பூவே உனக்காக ,காதலுக்கு மரியாதை,லவ் டுடே, குஷி,கதை கேட்டேன் ' என விஜய் அவரின் வெற்றிப்படங்களாக சொன்னார்.அப்படினா தலைவா,ஆதி,சுறா, வேட்டைக்காரன் கதை எல்லாம் எஸ்.ஏ.சி-யின் செலச்சனா..?

தக்காளி இனிமே யாராவது தல...தலைவா னு சொல்வீங்க...?  கவுண்டர் ராக்ஸ்...!

விஜயின் சினிமா கேரியரிலே இவ்வளவு குழப்பத்தை ஏற்படுத்தும் எஸ்.ஏ.சி, அவரை வைத்து அரசியல் களமாட துடிக்கிறார். அரசியல் எவ்வளவு சிரமம் என்பது விஜய்க்கு தெரியும். ரஜினிக்கு எப்படி கன்னடன் என்கிற நெகடிவ் இமேஜ் இருக்கிறதோ அதேப்போல விஜய்க்கும் இன்னொரு பிரச்சனை இருக்கிறது. கடந்த வருடம் விஜய் பிறந்த நாளுக்கு அவரின் முகத்தை சிவனோடும், முருகனோடும் கிராபிக்ஸ் பண்ணி ரசிகர்கள் பேனர் வைத்தபோது என்ன மாதிரி எதிர்ப்பு வந்தது என்பதை அவர் அறிவார். அரசியல்னு வந்தா எப்படிப்பட்ட எதிர்ப்பு வேண்டுமானாலும் கிளம்பும். அதை சமாளிக்கும் ஆற்றல் வேண்டும்.

படம் ஓடினால்தான் விஜய் மாஸ் ஹீரோ. இல்லையென்றால் ஜீரோ. அதை விஜய் நிச்சயம் உணர்ந்திருப்பார். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தாது என்பதை அவர் உணரவேண்டும். தற்போதைய சூழலில் விஜய்க்கு இது TIME TO LEAD அல்ல...TIME TO REALIZE ...!

Wednesday 21 August 2013

ஐந்து ஐந்து ஐந்து -விழலுக்கு இறைத்த நீர்


ரம்பத்தில் படத்தின் டைட்டில் 'ஜந்து ஜந்து ஜந்து' என்றுதான் நினைத்திருந்தேன். அதற்கேற்றாற்போல் போஸ்டரில் பரத்தும் அர்னால்டு மாதிரி நெஞ்சு எது,வயிறு எது என தெரியாமல் ஆங்காங்கே முட்டிக்கொண்டு காட்சியளித்ததால், ஏதோ ஒரு ஜந்துவை அழிப்பதுபோல் கதையிருக்குமோ என நினைத்திருந்தேன்.

உள்ளே சென்று பார்த்தால் கதையே வேறு.

பலர் ஏற்கனவே விமர்சனத்தில் சுமார் என எழுதியிருந்ததால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் திரையரங் கிற்கு சென்றிருந்தேன். தியேட்டரில் 125 க்கு மேல் (ஐந்து X  ஐந்து X ஐந்து) இருக்க வாய்ப்பில்லை என்றாலும் 15 பேராவது (ஐந்து +  ஐந்து + ஐந்து) இருப்பார்கள் என நினைத்து போயிருந்தேன். கடைசியில் வெறும் ஐந்து பேருடன் மட்டுமே உட்கார்ந்து படம் பார்க்கும் அற்புத அனுபவம் கிட்டியது.

மனதை வருடும் மென்மையான படங்களை மட்டுமே தமிழ் ரசிகர்களுக்குப் படைத்துவந்த இயக்குனர் சசி, இந்தமுறை ஆக்சன் திரில்லர் கலந்த ஒரு வித்தியாசமான பாதையில் பயணித்திருக்கிறார்.

புற்று நோய்னு ஒன்னு இருக்கு. அது இருக்கிறவங்க கண்டிப்பா லவ் பண்ணுவாங்க.கடைசில ரத்த ரத்தமா கக்கி சாவாங்க என்கிற விசயமே சினிமாவைப் பார்த்துதானே தெரிந்துகொண்டோம்.......!.அதேபோல மல்டிபிள் டிஸ்ஆர்டர் பர்சனாலிடி, ஸ்ப்லிட் பர்சனாலிடி,ஷார்ட்டெர்ம் மெமரி லாஸ் இதெல்லாம் வந்தா லூசுத்தனமா நடந்துக்குவாங்க என்பதையும் அதே சினிமாவிலிருந்துதான் கற்றுக்கொண்டோம்.அந்த வரிசையில் அடுத்ததாக வருகிறது 'பாரா அம்னீசியா'. இது கிட்டத்தட்ட கஜினியில் வருகிற ஷார்ட்டெர்ம் மெமரி லாஸ் மாதிரி. அதனால் அதுபோலவே இந்தப்படத்தை உருவாக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் பாதிகிணறு கூட தாண்டவில்லை.

படம் நெடுக சஸ்பென்ஸ்...அதிரவைக்கும் ட்விஸ்ட்கள் என கொஞ்சம் வேகமாகத்தான் செல்கிறது. ஒரு கார் ஆக்சிடெண்டில் பலமாக அடிபட்ட பரத்துக்கு பாரா அம்னீசியா நோய் இருப்பதாக சொல்லப்படுகிறது. தான் ஒரு பெண்ணை காதலித்ததாகவும் அவருடன் காரில் சென்றபோது விபத்துக்குள்ளாகி அவர் இறந்துவிட்டார் என பரத் புலம்ப,அப்படி ஒரு பெண்ணே கிடையாது அது கற்பனை என பரத் அண்ணனாக வரும் சந்தானமும், சைக்யாட்ரிஸ்ட் டாக்டரும் திரும்ப திரும்ப சொல்கிறார்கள். ஆனால் உண்மை என்ன என்பதை கொஞ்சம் சஸ்பென்ஸ் கலந்து சொல்லியிருக்கிறார்கள்

அவர்கள் சுத்தி வளைத்து சொல்ல வந்த கதை இதுதான்.

பாயல் இன்ஃபோடெக் CEO-வாக வரும் சுதேஷ் பெர்ரிக்கு (வில்லன்) ஒரு லவ் ஃபிளாஸ்பேக் இருக்கிறது. குஜராத்தில் வறுமையில் வாடிய தன் இளவயதில் வேறு குலத்தைச் சார்ந்த பாயல் என்கிற பெண்ணுடன் காதல் மலர்ந்து,ஊரைவிட்டே ஓடும்போது பாயலின் உறவினர்களால் கடுமையாக தாக்கப்படுகிறார். அடுத்து பாயலையும் பூச்சி மருந்து கொடுத்து கொன்று விடுகிறார்கள். பிறகு எப்படியோ தப்பித்து சென்னையில் பிரபல பிசினெஸ் மேக்னெட்டாகவும்,அண்டர்வேர்ல்டு தாதாவாகவும் மாறிவிடுகிறார்.

நாற்பது வயது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தவர் எதேச்சையாக பள்ளி மாணவியாக இருக்கும் ஹீரோயின் லியானாவை சந்திக்கிறார்.அவர் தன் பழைய காதலி பாயலின் சாயலில் இருக்க, அவரைத்தான் திருமணம் செய்வது என முடிவுக்கு வருகிறார். அவரின் பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் அவர்களைப் போட்டுத்தள்ளி,அந்தப் பெண்ணை அனாதையாக்கித் தானே தத்தெடுக்கிறார். தான் யாரென்று தெரியக் கூடாது என்பதற்காக வேறொருவரை கார்டியன் போல் செட்டப் செய்து வளர்த்துவருகிறார். இவ்வளவு விசயங்கள் கடைசி பதினைந்து நிமிடத்தில்தான் சொல்லப்படுகிறது.

இந்தக் கட்டத்தில்தான் பரத்க்கும் லிசானாவுக்கும் காதல் மலருகிறது.இவர்களின் காதல் விஷயம் வில்லனுக்கு தெரியவரும் நேரத்தில் இருவரும் பெரிய கார் விபத்தில் சிக்குகிறார்கள். இவர்களின் துரதிஷ்டம்  இருவரும் வில்லனின் ஹாஸ்பிடலுக்கே கொண்டு வரப்படுகிறார்கள். இப்போதுதான் லியானாவிற்கு தான் யார் என்பதை சொல்லி தன்னை திருமணம் செய்ய வற்புறுத்துகிறான் வில்லன். ஆனால் பரத்தை என்னால் மறக்க முடியாது என லியானா அடம்பிடிக்க,இருவருக்குள்ளும் ஒரு ஒப்பந்தம்(!!) செய்து கொள்ளப்படுகிறது. இன்னும் ஒரு வருடத்தில் பரத் உன்னை மறக்காமல் இருந்தால் உன்னை விட்டுவிடுகிறேன்,இல்லையென்றால் என்னைத் தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என மிரட்டி தன் கஸ்டடியில் அடைத்து விடுகிறான். அடுத்து என்ன...? பரத்,லியானாவை மறக்க என்ன கேப்மாரித்தனம் பண்ணவேண்டுமோ அதையெல்லாம் செய்கிறது வில்லன் தரப்பு.  பரத்துக்கு பாரா அம்னீசியா நோய் வந்ததாக பொய் சொல்லி நம்ப வைக்கிறது. அதற்காக பரத்தைச் சுற்றி இருக்கும் டாக்டரிலிருந்து, புது காதலி வரைக்கும் தன் ஆட்களையே நியமித்து அவரை அரை மென்டலாக்குகிறது.

சந்தானமும் அவர்களுக்கு பயந்து நடிக்க ஒரு கட்டத்தில் தனக்கு அந்த நோய் இருப்பதாகவும், தான் முன்பு வாழ்ந்த வாழ்க்கை ஒரு இமாஜினேசன் எனவும் பரத்தும் அவரோடு சேர்ந்து நாமும் நம்புகிற வேளையில்தான் அடுத்தடுத்த திருப்பங்கள்...சஸ்பென்ஸ்.. என திகில் ஏற்றுகிறது.


படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படும் பில்டப்புக்கு கடைசியில் சொல்லப்படும் பிளாஸ்பேக் தான் முதல் சொதப்பல். இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். பரத்தின் காதலி லியானாவாக வரும் மிர்த்திகா அவ்வளவாக மனதில் ஒட்டவில்லை. கஜினிக்கு அசின் எந்த அளவு பிளஸ்ஸோ அந்தளவு இவர் இதில் மைனஸ்.

பரத்-மிர்த்திகா காதல் காட்சிகள் அமெச்சூர்தனமாக இருக்கிறது. பரத் தனக்கு ஏதோ ஸ்பெசல் பவர் இருப்பதாக மிர்த்திகாவை நம்பவைக்கிறார். அவர் எப்படி அப்படியே நம்புகிறார் என்பதைத்தான் நம் மனம் நம்ப மறுக்கிறது.

இதிலும் பன்ச்டயலாக் பேசித்தான் காமெடியை ஒப்பேற்றுகிறார் சந்தானம்.இதுபோன்ற பன்ச்கள் பேஸ்புக்கிலும் ட்வீட்டரிலும் மலிந்து கிடக்கிறது. அதைப்பேச ஒரு காமெடியன் வேண்டுமா..?  சாமிநாதனும்,மனோபாலாவும் வரும் காட்சிகள் காமெடிக்காகத்தான் சேர்க்கப்பட்டது என்பதை பக்கத்தில் ஒருவர் சிரித்ததைக் கண்டு உணரமுடிந்தது.

ஒரு சஸ்பென்ஸ்ஸான படத்தில் ஒவ்வொரு முடிச்சுகளையும் அடுத்தடுத்து அவிழ்க்கும்போது அது பார்வை யாளனை பிரமிப்புக்குள்ளாக்க வேண்டும்.நம்பும்படியாகவும் இருக்கவேண்டும். ஆனால் இதில் பரத்தை சுற்றி நடக்கும் அனைத்தும் வில்லனின் செட்டப்தான் என்று தெரியவரும்போது, 'அட போங்கப்பா...' என்றுதான் சொல்லத்தோணுது.

இதில் எழும்பும் முக்கியமான கேள்வி,பரத்தின் சிக்ஸ்பேக் படத்திற்கு நல்ல விளம்பரம்தான். ஆனால் எதற்காக அவர் சிக்ஸ்பேக் வைக்க வேண்டும்...? காதலிக்கும் போது அமுல்பாயாக இருக்கும் பரத் , ஏழு மாதத்திற்கு முன் நடத்த ஆக்சிடெண்டில் காதலியை இழந்து மன உளைச்சலில் இருப்பவர் சிக்ஸ்பேக் வைக்கும் அளவுக்கு அப்படியென்ன அவசியம். கஜினியில சூர்யா கூடத்தான் வச்சிருந்தார் என கேள்வி எழுப்பினால், அவர், காதலியை கொன்றவனைப் பழிவாங்க தன்னை தயார் படுத்திக்கொண்டார் என்பதில் ஒரு லாஜிக் இருக்கிறது. இதில் கடைசியில்தானே வில்லனே வருகிறார்.

அதேவேளையில், மாஸ் ஹீரோக்கள் எல்லாம் ஒரே கெட்டப்பில் தொடர்ந்து பத்து படம் நடிக்கும் போது, தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டவேண்டும் என்பதற்காக பரத் எடுத்த சிரத்தை உண்மையிலேயே பாராட்டுக்குரியது. ஆனால் கதையிலும் காட்சியமைப்பிலும் இயக்குனர் விட்ட கோட்டையால் பரத்தின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகிப் போனது.


Friday 16 August 2013

வெளிநாடுகளில் பிய்த்துக் கொண்டு 'ஓடு'கிறதா தலைவா...?

(எந்திரனையும் விஸ்வரூபத்தையும் ஒண்ணா கலக்கி,நடுவுல கொஞ்சம் தசாவரதத்தை மிக்ஸ் பண்ணி, சைடுல லைட்டா அந்நியனை சொருகி, மேல அப்படியே ரமணாவை தூவி, புதுசா படம் எடுப்பதைப் பற்றி தீவிர சிந்தனையில் இளைய தளபதி.) 

முதல்லே சொல்லிடுறேன் விஜய்க்கும் நமக்கும் எந்த வாய்க்கா தகராறும் கிடையாது. படம் வெளிவந்து அடுத்த நாளே இணையத்தில் ரிலீஸ் ஆகும் இன்றைய சூழலில், துப்பாக்கியை இரண்டுமுறை தியேட்டரில் பார்த்தவன். ஒரு விதத்தில் நானும் விஜய் ரசிகன்தான். அவரின் நல்ல படங்களை மனதார பாராட்டும் ரசிகன்...

ஆக-15 தலைவா படம் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்தேன். ஆனால் 23ஆம் தேதி என எங்கேயோ படித்தேன். இப்போ விஜய் உண்ணாவிரதமெல்லாம் வேற இருக்க போறாராம்.(அப்பாடா...இத வச்சி இன்னும் அஞ்சு பதிவு தேத்திடனும் ) சரி..நம்ம விசயத்துக்கு வருவோம்.

தலைவா படத்தை பார்த்தவர்கள் எல்லோருமே சமூக வலைத்தளங்களில் இயக்குனர் விஜய்யையும், நடிகர் விஜய்யையும் துவைத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் இயக்குனர் சறுக்கி இருக்கலாம்.. ஹீரோ சொதப்பியிருக்கலாம்... ஆனால் தயாரிப்பாளர்..?

அவரைப்பத்தி யாராவது யோசிச்சிப் பாத்தீங்களாயா...?

பாவம்.. இவங்க அடிச்ச கூத்துல அந்த மனுஷன் எப்படி இருக்கிறாரோனு  நினைக்கும் போதுதான், அவரின் அறிக்கை வந்திருக்கு.தலைவா படம் வெளிவரவில்லை என்றால் என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடும் என அறிக்கை விட்டுருக்கிறார்.ஆனால் அப்படி ஆவதற்கு வாய்ப்பில்லை.விஜய் சம்பளத்தில் பாதி திருப்பிக் கொடுத்தாலே போதும்.ஓரளவு சரிகட்டிவிடுவார்.

அதேவேளையில், தமிழ் நாட்டில் படம் ரிலீஸ் ஆகவில்லையே தவிர உலகம் முழுவதும் ரிலீசாகி படம் பிய்த்துக்கொண்டு 'ஓடு'கிறது அல்லவா...!

கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் தலைவாவின் வசூலைப் பற்றி பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. முகநூளில் இதற்கென்று தனி பேஜ் உருவாக்கி நூல் நூலாக விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதாவது பரவாயில்லீங்ண்ணா. நம்ம இளைய தளபதி ஒரு அறிக்கை விட்டிருக்கிறார் பாருங்க....

அதாவது ''நான் நடித்து எந்த படம் வந்தாலும்,அது நன்றாக வந்திருக்கிறது என்று நானே சொல்வதில்லை. ஆனால், தலைவா படத்தை மற்ற நாடுகளில் பார்த்தவர்கள் கூறும் தகவல்கள் சந்தோஷத்தை அளிப்பதாக உள்ளது.'' (ஆய்...ஏ..ச்சூ...சிரிக்கப்படாது..என்ன சின்னப்புள்ளத்தனமா...)

ஆத்தா கோபத்துக்கு இதுதான் காரணமா..!?
அப்புறம்தான் தெரிஞ்சது... வெளிநாட்டு ரசிகர்கள் ஒன்னு சொல்ல, அத நம்ம விஜய் வேறு மாதிரியா புரிஞ்சியிருக்கிறாருனு.

ஆக்சுவலா என்ன நடந்ததுனா......

(அலைபேசியில்...)

ஒரு ரசிகர்:  தியேட்டர்ல உட்கார முடியிலீங்ண்ணா.  (செம கடி)

         விஜய்:  அப்போ என் டான்சை பாத்து தியேட்டரே எழுந்து ஆடியிருக்குனு சொல்றீங்க..! தேங் யூ..தேங் யூ.

ஒரு ரசிகர்: மூணு மணிநேரம் போனதே தெரியிலீங்ண்ணா ( தூங்கிட்டேன்)

         விஜய்: எனக்கு தெரியும். படம் செம விருவிருப்பா இருக்கும்னு... ஆங்..ரொம்ப நன்றிங்ண்ணா...

ஒரு ரசிகர்:  பாப்கார்ன், பப்ஸ், டீ, காபி சேல்ஸ் அபாரம் ( மொத்த கூட்டமும் வெளியதான நின்னது)

         விஜய்:   புரியுது... புரியுது... இதுவரை எந்தப்படத்துக்கும் வராத கூட்டம்னு சொல்றீங்க...
தேங்ஸ்ங்ண்ணா

ஒரு ரசிகர்:  சோல்டரை குலுக்கி ஒரு டான்ஸ் ஸ்டெப் வரும் பாருங்க..செம கிளாப்ஸ்(சாம் ஆண்டர்சன்..)

          விஜய்: என்னை ரொம்ப புகழாதீங்க... ஆக்சுவலா அது நானே கொரியோகிராஃபி பண்ணினது. இது வரையில நான் போட்ட ஸ்டெப்ஸ்ல இதுதான் பெஸ்ட்...

ஒரு ரசிகர்: இந்த படம் நாயகன்,பாட்சா ,தேவர் மகன்,பம்பாய் , தளபதி....

        விஜய்: போதும்..போதும்...எனாஃப்...எனாஃப். இதுக்குமேல ஒரு வார்த்தை சொல்லாதிங்க ...

ஒரு ரசிகர்: இல்லீங்ண்ணா..அது வந்து...  

      விஜய்: வேணாம்..வேணாம்.இந்தப் படத்தையெல்லாம் விட தலைவா சூப்பரா இருக்குனு சொல்லவாறீங்க. எனக்கு புரிஞ்சிடுச்சி.. போதும்...போதும்...

ஒரு ரசிகர்: ங்ண்ணா.. போனை வச்சிடீங்களா...அடச்சே...அதையெல்லாம் எப்படி அட்டக்காப்பி அடிக்க மனசு வந்ததுனு கேக்கலாம்னு பாத்தேன்.அதுக்குள்ளே வச்சிட்டாரே..

- இதுதாங்க நடந்தது...!

தமிழ்நாட்டின் 'தலையாயப் பிரச்சனை'யில் முதல்வர் தலையிட்டு தீர்த்து வைக்கும்படி வேண்டும் 'எதிர்கால இந்தியா'
ரி அடுத்த முக்கியமான மேட்டருக்கு வருவோம்.வெளிநாடுகளில் எந்திரன் வசூலையே தலைவா மிஞ்சி -விட்டது என தகவல் வருகிறதே உண்மையா... ? அது உண்மைதாங்கண்ணா(அணில் ரசிகர்களே சந்தோசமா.. ). ஆனால் அதைவைத்து படத்துக்கு பில்டப் கொடுக்கிறது கொஞ்சம் ஓவர்ங்ண்ணா.. அது எப்படினு சொல்றேன்..

இது தலைவா படத்திற்காக சொல்லவில்லை.. பொதுவாக வெளிநாடுகளில் வரும் வசூலை வைத்து எந்தப் படத்தின் வெற்றியையும் தீர்மானிக்க முடியாது. ஏன்னா, எந்த பெரிய நடிகரின் படம் ரிலீஸ் ஆனாலும் முதல் வாரக்காட்சிகள் ரிசர்வேசனில் ஹவுஸ்ஃபுல்லாகி விடும். பொதுவாக வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு என்டர்டெயின்மென்ட் என்பதே இது போன்ற புதுப்படங்கள் வரும்போதுதான். அந்தப்படம் படுமொக்கை என்றாலும் பிளாக்பஸ்டர் மூவி என்றாலும் எல்லோரும் ஒருமுறை பார்த்துவிடுவது வழக்கம்.

குறிப்பாக சிங்கையை மட்டும் எடுத்துக்கொண்டால், ஒரு டிக்கெட்டின் விலை $15. இந்திய ரூபாயின் மதிப்பு 700. அங்கிருந்து பார்த்தால் இது கொஞ்சம் அதிகமாக தெரியும். ஆனால் இங்கு சலூனில் முடிவெட்டிக்கொள்ளும் பணம். மதுரை முத்து,ரோபோ சங்கர் வகையறாக்களை அழைத்து வந்து நடத்தும் கலை நிகழ்ச்சிக்கு  $100, $150 என டிக்கெட் இருக்கும்போது, அதையே வாங்கிப் பார்க்கும் நம் மக்களுக்கு 15 டாலர் ஒன்றும் பெரிய விசயமில்லை.

தலைவா படம் ரிசர்வேசன் இருக்கிறதா என காலையில் விசாரிக்கும் போது, இன்னும் முடிவாகவில்லை என சொன்னார்கள். மாலை போய் கேட்டபோது நான்கு நாட்களுக்கு  ஹவுஸ்புல்.  சிங்கையில் மட்டுமல்ல, மலேசியாவிலும் அப்படித்தான் இருந்திருக்கும். அதற்க்கு காரணம் அடுத்த நான்கு நாட்கள் விடுமுறை.

படம் புதன்கிழமை நைட்டே இங்க ரிலீஸ். நைட்டு 8 மணியிலிருந்து 10மணி,12 மணி, 3 மணி என தொடர்ந்து ஷோ. அடுத்தநாள் ஹரிராயா, அதற்கடுத்து நேசனல் டே ,சனி, ஞாயிறு என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை. விடுமுறை தினங்களில் இரவு விடிய விடிய காட்சி உண்டு. அப்படியென்றால் நான்கு நாட்களில் எத்தனைக் காட்சி ஓட்டியிருப்பார்கள் என கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

TOP 5 All Time Kollywood Opening Weekend in Malaysia & Singapore..

1.Thalaivaa -4.2 crore

2.Endhiran -4 crore

3.Singam 2 -3.8 crore

4.Thuppaki -3.5 crore

5.Nanban -3 crore

இப்படியொரு தகவலை முகநூளில் Vijai Fans Club வெளியிட்டிருந்தார்கள். இது உண்மைதான்.முதல் நான்கு நாட்களுக்கான வசூல் இதுவாக இருக்கலாம். ஆனால் எந்திரன் வசூலை மிஞ்சிவிட்டதுன்னு சொல்றது கொஞ்சம் ஓவருங்ண்ணா... அது எப்படினா....
.
இப்போ ஒரு ஷோவை எடுத்துக்கிங்க...

மொத்த 1200 சீட்டுன்னு வச்சிக்குங்க... 1200X $15 = $18,000. அதாவது எந்திரன் வெளியான போது இந்திய ரூபாய் மதிப்பு படி $18,000 X 35  =₹6,30,000 ( ஒரு ஷோ வசூல்)

அதே தியேட்டர்ல  தலைவா படத்துக்கு இன்றைய இந்திய ரூபாய் மதிப்பு படி  $18000 X 48 = ₹8,64,000 (ஒரு ஷோ வசூல்)

ஆக எந்திரனையே தலைவா முந்திவிட்டதுனு சொன்னா நீங்க நம்பலாம். ஆனா நாங்க நம்பமாட்டோங்ண்ணா.. அதே மாதிரிதான் அமெரிக்காவிலும். எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் உலகம் முழுவதும் வசூல் இப்படித்தான் இருக்கும். இதில் மாற்றமிருக்காது.ஆனால் இந்திய ரூபாயில் கணக்கிடும்போது அன்றைய Exchange rate -க்கு அதிகமாகக் காண்பிக்கும்.

இது பொதுவாக சொல்லப்பட்ட விஷயம்.. வெளிநாடுகளின் புதிதாக வெளிவரும் படங்களின் ஓபனிங் வசூல் பழைய படங்களின் சாதனைகளை முறியடிப்பது இப்படித்தான்.ஆனால் சிவாஜியும் எந்திரனும் தசாவதாரமும் ஐம்பது நாட்கள் இங்கே வெற்றிகரமாக ஓடியது.அந்த சாதனையை எந்தப்படம் முறியடிக்கும்..?
                  
கார்த்திக் என்கிற நண்பர் பின்னூட்டத்தில் அளித்த லிங்க்லிருந்து பெறப்பட்டது இந்த தகவல். கடந்த ஆறு ஆண்டுகளாக மலேசியாவின் டாப் 20 படங்களின் வசூல் இது. (MYR = Malaysian Ringgit ). 

 (நன்றி - ரசிகன் karthik)

இது தலைவா ரிலீசுக்கு முன்பு எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் என்றாலும் துப்பாக்கியை விடவா வசூல் மழை பொழிந்துவிடப்போகிறது தலைவா..?  இதில எந்திரனை தலைவா மிஞ்சிவிட்டதாக பில்டப் வேற...!  அசைக்க முடியாத இடத்தில் அல்லவா இருக்கிறது எந்திரன்..!


Monday 12 August 2013

'தக்காளி...' உனக்கு இது தேவையா..?(சும்மா அடிச்சு விடுவோம்..3 )

      வழக்கமா சனி,ஞாயிறுகளில் வீட்டுக்கு காய்கறி,மளிகை சாமான்கள் நாந்தேன் வாங்குவேனுங்க... ஒரு வாரத்துக்கு தேவையானதை மொத்தமா வாங்கிடுறது. அதில நிறைய நேரங்களில பில்லை சரி பார்க்க மாட்டேன். சிவப்பா இருக்கிறவன் ஏமாத்த மாட்டான்(!!!) என்கிற நம்பிக்கைதான்.அதிலும் பில் கவுண்டர்ல பூரா பொம்பள புள்ளைகளா போட்டுருக்கானுவளா...அதுக பில் போட்டு முடிஞ்ச உடனையே பில்லையும், ATM  கார்டையும் கையில திணிச்சி Thank you-னு சொல்லிட்டு ஒரு ஸ்மைல் பண்ணும் பாருங்க. ஹி..ஹி... அப்புறம் எங்க பில்லை செக் பன்றது...?


போன வாரம் சாமான் வாங்கினபோது ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பாட்டி (பின்ன குமரியா) பில் போட்டுச்சு. சரி பில்லை செக் பண்ணலாம்னு பாத்தா,வாங்காத ஒரு சாமானுக்கு சேத்து பில்லு போட்டு வச்சிருக்கு.எனக்கு செம கோபம். நேரா போயி,என் பில்லுல 'கார்லிக் பிரட்'- $ 4.50னு இருக்கே. நான் எப்போ வாங்கினேன்னு சத்தம் போட்டேன்.

அது எல்லா சாமானையும் செக் பண்ணிப் பாத்துட்டு,  'வெரி சாரி..ஏதோ தப்பு நடந்திடுச்சி. திரும்பவும் சாரி கேட்டுகிறேன்'-னு சொல்லிட்டு $4.50 திருப்பி கொடுத்துட்டு.நான் விடல..'யு ஆர் வேஸ்டிங் மை டைம்..ஆ ஊ'-னு கொஞ்சம் சவுண்டு விட்டேன். அந்த பாட்டி கொஞ்சம் பயந்து போயி அடுத்த தடவை இப்படி நடக்காதுனு சொல்லிட்டு ஒரு சின்ன பிரட் பாக்கெட்டை தூக்கி( ஃப்ரீயாத்தான் ) என் பேக்குக்குள்ள போட்டிச்சி. அப்பத்தான் என் கோபமே அடங்கிச்சி.!  

இது போல வீர தீர செயல்கள் ஏதாவது செஞ்சேனா உடனே வீட்ல அம்மணிகிட்ட சொல்லி நம்ம இமேஜ கொஞ்சம் பில்டப் பண்ணிக்கிறது.

இப்படித்தான் நேத்திக்கு இன்னொரு கடைக்கு போனேன்.கூட அம்மணியும் வந்திச்சு.பில் போட்டுட்டு வெளிய வந்து பாத்தா,ஒரே அயிட்டத்தை ரெண்டு தடவ பில் போட்டிருக்காங்க. Banana - $ 1.50னு மேல இருக்கு.பிறகு பத்து அயிட்டம் தள்ளி திரும்பவும் Banana - $2.50 னு இருந்துச்சி.அம்மணி வேற பக்கத்தில இருந்துச்சுங்களா.. ஆட்டோமேடிக்கா எனக்கு கோபம் வந்திடுச்சி.ஆனா அம்மணியோ, 'விடுங்க 2.50 தான...இவ்வளவு கூட்டமா இருக்கு.எதுக்கு போயி சண்டை போட்டுக்கிட்டு.அதுவுமில்லாம பில் போட்ட பொண்ணு புதுசு மாதிரி தெரியுது. விடுங்க'-னு சொல்லிடிச்சி.

நான் விடல.. அது எப்படி $2.50, நம்ம ஊரு காசுக்கு 120 ரூபாய்.. விடமாட்டேன்.என் டேலண்ட இன்னும் நீ நேரா பாத்ததில்லையே. இப்போ பார்னு சொல்லிட்டு நேரா பில் கவுண்டர் போயி பில்லை காட்டி 'வாட் ஈஸ் திஸ்'னு கேட்டேன்.அந்த பொண்ணு புதுசு போல. மிரண்டு போயி அதோட சூப்பர்வைசர கூட்டிட்டு வந்துட்டு. அதுகிட்ட விஷயத்தை சொன்னவுடனையே நீங்க வாங்கின அயிட்டத்தை காமிங்கனு சொல்லி செக் பண்ணினது.

செக் பண்ணிட்டு அந்த பொண்ணு சொல்லிச்சி.. 'சாரி சார்... நீங்க ரெண்டு கிலோ தக்காளி வாங்கியிருக்கீங்க. தக்காளிக்கான நம்பரை அடிக்கிறதுக்கு பதிலா Banana-வுக்கான நம்பரை தெரியாம அடிச்சிடிச்சி. ஒன்னும் பிராப்ளம் இல்ல' னு சொல்லிட்டு  தக்காளியை திரும்பவும் வெயிட் போட்டு செக் பண்ணினா அது 5.00 டாலர்னு காமிக்குது.

'சாரி சார்...நீங்க இப்போ எக்ஸ்ட்ரா 2.50 பே பண்ணனும்'-னு சொல்லிடிச்சி. அடங்கொன்னியா அம்மணி சொன்ன மாதிரி அப்படியே போயிருக்கலாம்.கொஞ்சம் ஓவராத்தான் சவுண்ட் விட்டுட்டோமோனு  திரும்பினா,பின்னாடி அம்மணி கோவில்பட்டி வீரலட்சுமி கணக்கா நிக்குது. உனக்கு இது தேவையா...?

ன்னப்பா தமிழ்நாட்ல தலைவா படம் ரிலீஸ் ஆச்சா..? இன்னும் எத்தனைப் பதிவுதான் அதை வச்சு தேத்தறது....?

சமீபத்தில் தான் ஒரு நியூஸ் படிச்சேன். படம் ரிலீஸ் ஆவுரதுல எந்த சிக்கலும் இல்லையாம். இப்ப பிரச்சனையே வரி விலக்கு சம்மந்தமாகத்தானாம்.

இந்தப் படத்தை விநியோகஸ்தர்கள் கிட்ட போட்டு காமிச்ச உடனையே படத்தின் ரிசல்ட் தெரிஞ்சிடுச்சாம். ஒருவேளை பெரிய அளவில லாஸ் ஆனா என்ன பன்றதுனு யோசிக்கிறப்போதான் அட்லீஸ்ட் வரிவிலக்கு இருந்தா கொஞ்சம் நல்லாயிருக்கும் என திரையரங்க தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டதாம். ஆனால் வரிவிலக்கு கிடைக்காமல் போகவே தலைவா தரப்பு செம அப்செட். இதுக்காகத்தான் தந்தையும் மகனும் கொடநாடு வரை சென்றதாக ஒரு தகவல் சொல்லுது.

சரி படத்தைப் பற்றிய விமர்சனங்கள் எப்படி இருக்குனு ஒரு ரவுண்டு வந்தேன். எங்க போயி பாத்தாலும் கழுவி கழுவி ஊத்துறாங்க. இங்க 8 ஆம் தேதி இரவே ரிலீஸ் ஆச்சு. எங்க ஆபிஸ் பக்கத்தில் தியேட்டர் இருந்ததால் சும்மா ஒரு எட்டு பாக்கலாம்னுதான் போனேன். இரவுக் காட்சிக்கு ஒரே ஒரு டிக்கெட் இருக்குனு சொன்னாங்க.. சரின்னு வாங்கி பாத்துட்டேன்.ஆனா விமர்சனம் எழுதுற மூடோட படம் பாக்க போகல.படம் பார்த்தப் பிறகு தான் எழுதனும்னு தோணிச்சி.. எப்படி விஜய் இப்படி  ஒரு கதையில் நடிக்க சம்மதித்தார் என்று. நைட்டே வந்து விமர்சனத்தை போட்டேன். ஆனால் அதற்கு எதிர்வினைகள் நிறைய வந்தது.விஜயின் ரசிக குஞ்சுகள் சிலர் உணர்ச்சி வசப்பட்டு சில ' நாகரிகமான ' கமெண்டை போட்டிருந்தனர். நல்லவேளை கமெண்ட் மாடரேசன் வச்சதால தப்பிச்சேன். ஒருவேளை ஓவராத்தான் எழுதிட்டோமோனு நெனச்சேன். ஆனால் அதற்குப் பிறகு வந்த எல்லா விமர்சனமும் அப்படியேத்தான் இருந்தது.

படம் பார்க்கும் முன்         /            படம் பார்த்த பின்.
முதன் முதலாக பிளாக்கில் விமர்சனம் போட்ட வகையில் அதற்கு 5000 ஹிட்சுக்கு மேல் கிடைத்தது(இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா..). அதனால நம்ம கொடநாட்டு கோமாதா கிட்ட ஒரே ஒரு கோரிக்கை வச்சிக்கிறேன். "ஆத்தா இதே மாதிரி எல்லா பெரிய ஹீரோக்களின் படத்தையும் தமிழ்நாட்ல நீங்க தடைபண்ணி போடனும். படத்தை நான் இங்க பாத்துட்டு நைட்டே விமர்சனம் பண்ணி போடனும்...அத வச்சி நான் எப்படியாவது பிரபல பதிவரா ஆயிடனும்..எனக்கு கொஞ்சம் கருணை காட்டு தாயே...."

( தமிழக முதல்வருக்கு என் சார்பாக இன்னொரு எச்சரிக்கை... தலைவா படத்தை திரையிட அனுமதிக்கா விட்டால் தலைவாவைப் பற்றி இன்னும் நாலு பதிவு ரெடி பண்ணி வச்சிருக்கேன்..அடுத்தடுத்து அதை ரிலீஸ் செய்வேன் என்று எச்சரிக்கிறேன்..)

Sunday 11 August 2013

'ஆணை'யை முட்டிய 'யானை'...( சும்மா அடிச்சு விடுவோம்...2 )


ஒருவேளை இதுதான் அதோட கோபத்துக்கு காரணமா இருக்குமோ..?
செய்த வினையும், செய்கின்ற தீவினையும் ஓர் எதிரொலியைக் காட்டாமல் மறையமாட்டாது என யாரோ எங்கேயோ சொன்னது ஞாபகத்துக்கு வந்தாலும் இந்த செய்திக்கும் அதுக்கும் சம்மந்தமில்லைனு சொன்னா நீங்க நம்பவா போறீங்க...

சரி... மேட்டருக்கு வாறேன்... போன வாரம் நம்ம முதல்வரை யானைக்குட்டி ஒன்னு முட்டிடிச்சாமே.. அது முட்டினிச்சா, முட்ட வந்ததா இல்ல மோந்து பாத்ததா அதெல்லாம் தெரியாது.ஆனா அம்மாவுக்கு எதுவும் ஆகாது. அது மட்டும் உறுதியா தெரியும். எப்படினு கேட்கிறீங்களா.?  கோழி மிதிச்சி குஞ்சு முடமாகுமா..?  (பழமொழி சொன்னா அனுபவிக்கனும்..ஆராய்ச்சி எல்லாம்  பண்ணக்கூடாது.)

இதைப்பற்றி பத்திரிக்கையில என்ன செய்தி போட்டிருக்காங்கனு தீவிரமா தேடியபோது ஒரு விஷயம் புலப்பட்டது. எல்லா பத்திரிக்கையிலும் முதல்வரை முட்டிய யானைக்குட்டி.., யானைக்குட்டி முட்ட வந்ததால் நிலை தடுமாறிப்போன முதல்வர்.. இதுமாதிரிதான் தலைப்பு வச்சு செய்தி வெளியிட்டிருந்தாங்க...ஆனா வழக்கமா சொம்படிக்கிற தினமலர்காரன் இந்த தடவை பெரிய அண்டாவா அடிக்கலாம்னு 'துள்ளிக் குதித்த யானைக்குட்டி " அப்படின்னு தலைப்பு போட்டிருந்தான். அதாவது முட்டியதுனு சொன்னா அம்மா மனசு ரொம்ப கஷ்டப்படும் இல்லையா...? அதானால கொஞ்சம் பக்குவமா சொம்படிக்க பார்த்திருக்கான்.

ஆனா வித்தியாசமா சிந்திக்கிறேனு கடைசில சொந்த செலவிலே சூனியன் வச்சிகிட்டான். அது எப்படினா... அந்த வீடியோவை பார்த்தப் பின்பு ஒரு உண்மை தெரிஞ்சது.முட்டியது யானைக்குட்டிதான்.ஆனா துள்ளிக் குதித்தது அம்மா... ! இப்ப திரும்பவும் தலைப்பை படிச்சிப் பாருங்க...(தக்காளி இப்படித்தான் கோத்து விடனும்)

சரி எதுக்காக அந்த யானைக்குட்டி ஜெயாவ முட்டனும்...? எப்படி உக்காந்து யோசிச்சாலும் இதைத்தவிர வேற ஒன்னும் தோன மாட்டேங்குது.அந்த யானைக்குட்டி பேரு காவேரியாம்.இங்கதான் மேட்டரே இருக்கு.அங்க ஜெயாவுக்கு கோசம் போடுற ஏதோ ஒரு அல்லக்கை 'காவிரித்தாயே வாழ்க'னு கோசம் போட்டிக்கான். 'என்னை இவள நாளு தவிக்கவிட்டுப்போன என்னப்பெத்த தாயி நீதான' னு பாசத்துல ஓடி வந்து முட்டியிருக்கும்...

இல்லனா,காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்தவுடன் நூறு வரி அறிக்கையில என் ஆணைப்படி..என் ஆணைப்படி -னு நூத்தியெட்டு தடவை சொல்லிட்டு பொன்னியின் செல்வி பட்டமெல்லாம் வாங்கினாயே.... அதுக்கப்புறம் அந்த காவிரிய கண்டுக்கினியானு கோபத்தில அந்த ஆண்டவனே காவிரி ரூபத்தில வந்து முட்டியிருப்பான்...

சரி...அத விடுங்க... முட்டிய செய்தி அறிந்தவுடன் என்னோட கவலையெல்லாம் இந்த ஐந்தறிவு யானைக்குட்டிக்கு என்ன ஆகப் போகிறங்கிறதுதான். பயந்தபடியே அடுத்த ரெண்டுநாள்ல அந்த யானைக்குட்டி 'ஒரு குருடு' என்கிற அதிர்ச்சி உண்மையை(!?) கண்டுபுடிச்சிருகானுவ... என்னோட அடுத்த கவலை... எப்படி இரட்டையிலையை 'உயர்த்தப் பட்ட குதிரையின் சிறகு'னு சொல்லி உலகத்தை நம்ப வச்சானுவளே... அதே மாதிரி இந்த யானைக்குட்டியை 'மூக்கு நீண்ட பன்னிக்குட்டி' -னு சொல்லி ஏதாவது சாக்கடையில தள்ளி விட்டாலும் விடுவானுவ...(ஒரு ஆங்கிள்ல அப்படித்தாம்ல இருக்கு..) அந்த குருவாயுரப்பாதான் காப்பாத்தணும்.

 டிக் டிக் டிக் இறுதி நிமிடங்கள்...

ந்த வாரம் எதேச்சையாக சன் டிவியில டிக் டிக் டிக் படம் பார்க்க நேர்ந்தது. படம் வெளிவந்தபோது எந்த அளவுக்கு வரவேற்பு பெற்றது என தெரியவில்லை. ஆனால் இப்போது பார்த்தாலும் அதே த்ரில்லிங். படத்தில் நிறைய கதாநாயகிகள் வருவார்கள்.அதில் திடீரென ஒரு முகம் வெகு பரிச்சயமான முகமாக இருந்தது. சமீபத்தில் எங்கேயோ பார்த்து மனதில் ஆழப்பதிந்த முகம்... அட..நிஷா...!  ஆம்..சமீபத்தில் எயிட்ஸ் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு எழும்பும் தோலுமாக இருந்த படம் இணையத்தில் கூட பரவலாக வந்ததே அவரேதான். என்ன ஒரு களையான,சாந்தமான துருதுரு முகம். இவருக்கு போய் இப்படி ஒரு கொடுமையான முடிவு அமைந்துவிட்டதே.


ஆனால் இவர் மீது கோபமெல்லாம் வரவில்லை.எந்த நடிகை இங்கே உத்தமியாக,பத்தினியாக இருக்கிறார்கள்? வாய்ப்புக்காக முந்திவிரிக்காத நடிகை இந்த லோகத்தில் உண்டா..?  வாய்ப்பு இழந்த பின்பு வருமானத்திற்கு வழியில்லாமல் இது போன்ற படுகுழியில் விழுந்த நடிகைகள்தான் எவ்வளவு..!. ஆனால்,  இவர் கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்துவிட்டார். தாயின் தவறான நடத்தை இவரையும் அந்த வழியில் பயணிக்க வைத்திருக்கிறது. இவரின் பூர்வீகம் எங்க ஊருக்கு அருகில் உள்ள நாகூராம்... இவருக்காக பரிதாபப்படுவதைத் தவிர வேற என்ன செய்ய முடியும்..?


Saturday 10 August 2013

தலைவா படத்தை ரிலீஸ் செய்வது எப்படி..?


ன்றைக்கு தமிழ் நாட்டோட தலையாய பிரச்சனையே(!?)  தலைவா படம் ரிலீஸ் ஆகுமா என்பது தான்... சில செய்திகள் நாளை ரிலீஸ் எனவும் சிலர் ஆக-15 னும் சொல்றாங்க...

சரி அப்படியென்ன இந்தப்படத்தில வில்லங்கமான காட்சிகள் இருக்கு...? படம் பார்த்தவங்கள கேட்டீங்னா நாலு நாளைக்கு ரூம் போட்டு சிரிப்பாங்க. படத்துக்கு பில்டப் கொடுக்கிறதுக்கும் ஒரு அளவு இருக்குங்ண்ணா...

முதல்ல தலைவா தரப்பு ஒரு விஷயத்தை சரியா புரிந்து கொள்ளவில்லை. எல்லா படமும் விஸ்வரூபம் ஆகிவிட முடியாது. எல்லா நடிகரும் கமல்ஹாசனாகவும்  முடியாது. 'விஸ்வரூப பார்மலா'வை அதற்கு பின் வந்த சில படங்கள் முயற்சி செய்து பார்த்தது.ஆனால் தோல்வியில் தானே முடிந்தது.கடலும் அன்னக்கொடி யும் கடலில் கரைத்த பெருங்காயமானதே  ...

விஸ்வரூப பிரச்சனையே வேறு. அவர் சில அமைப்புகளை அழைத்து படத்தை திரையிட்டுக் காண்பித்தார். நிச்சயம் கமல் என்ன சொல்ல வந்தார் என்பதை முழுவதும் புரிந்திருக்க மாட்டார்கள். ஆனாலும் படம் ரிலீஸ் ஆகி ஏதாவது ஏடாகூடமான எதிர்வினைகள் வந்துவிட்டால், அனுமதித்த நம் அமைப்பின் மீதுதானே குற்றம் சொல்வார்கள் என்கிற அச்சத்தில் குருட்டாம் போக்கில் தடை கோரப்பட்டது.பிறகு இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி கமல் என்கிற கலைஞானி மீது அனுதாபத்தை ஏற்படுத்தியது. அதுவே அந்தப்படத்திற்கு ஒத்த பைசா செலவில்லாமல் விளம்பரமாகிப் போனது.

அது மட்டுமல்லாது, வெளிநாடுகளில் முதலில் திரையிட்டபோது படத்தைப் பற்றிய விமர்சனங்கள் எல்லாமே பாசிட்டிவாகத்தான் வந்தது. சிலர் ஆகா ஓகோ என புகழ்ந்திருந்தனர். அதுகூட படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியது.

ஆனால் தலைவா பிரச்சனை வேறு. எதிர்ப்பு என்கிறார்கள். யார்னு கேட்டா தெரியாதாம். தியேட்டரில் 'பாம்' வைப்பதாக மிரட்டல் வந்தாக சொல்கிறார்கள். அது யார்னு கேட்டா, புரட்சி மாணவர் படையாம். திடீர்னு அது எங்கிருந்துய்யா வந்தது..? விட்டா, ரமணா படத்தில் வந்த ACF குரூப்னு சொன்னாலும் சொல்வாய்ங்க.

சரி...கமல் செய்தது போல யாருக்காவது படத்தை போட்டுக் காண்பித்தாவது பிரச்னையை முடிக்கலாம்னு பாத்தா..அது யாருக்கு போட்டுக் காமிக்கிறதுனு தெரியில.. அப்படியே ரோட்ல போற யாரோ பத்து பேரை வலுக் கட்டாயமா இழுத்து வந்து படத்தை போட்டுக் காமிச்சாலும், இடைவேளையின் போது 'நம்பர் ஒன்' போறதா பொய் சொல்லிட்டு சுவரேறி குதிச்சி தப்பிச்சி போகமாட்டாங்கனு என்னய்யா நிச்சயம்..?

முதல்வரை சந்திக்க கொடநாடு போனாங்களாம்.. அனுமதி கிடைக்கவில்லையாம்.. அப்படின்னு தலைவா தரப்புதான் சொல்லுது. அரசு தரப்பிலிருந்து எந்த ரியாக்சனும் காணோம்.

ஒருவேளை படத்தை ரிலீஸ் செய்ய விடாவிட்டால் நான் வேறு தேசம் நோக்கி சென்றுவிடுவேன் என விஜய் சொன்னா என்ன ஆகும்..?  " ங்ண்ணா இதைத்தாங்ண்ணா எதிர்பாத்தேன்...ஃபிளைட் டிக்கெட் வேணும்னா எடுத்து தரவாங்ண்ணா.." னு சொல்லிட்டா என்ன பண்றது ...?

சரி இந்த சிக்கலிலிருந்து வெளியேறி படத்தை ரிலீஸ் பண்ண என்னால் முடிந்த சில யோசனைகளை சொல்றேன்...

1. டிவி ரைட்சை சன் டிவிக்கு வித்துட்டதா எங்கேயோ படிச்சேன்...என்னங்ண்ணா நீங்க... சன் பிக்சர்ஸ்தான் தமிழ் சினிமாவையே அழிச்சிடிச்சினு சொல்லித்தானே அம்மாவுக்கு அனிலா மாறி பிரச்சாரம் செஞ்சீங்க... திரும்ப சன் டிவிக்கே வித்தா எப்படிங்ண்ணா...? உடனே அக்ரிமெண்டை கேன்சல் பண்ணி, ஜெயா டிவிக்கு 90 பர்சென்ட் தள்ளுபடில வித்துடுங்ண்ணா.

2. தலைப்புதான் ஆத்தாவை கோபப்படுத்திடுச்சினா அதுக்கு பரிகாரமா நான் சொல்றத செஞ்சிடுங்ண்ணா.....
     

தலைவா டைட்டிலுக்கு கீழ 'TIME TO LEAD 'னு இருக்கிறது தூக்கிட்டு இதுல ஏதாச்சும் ஒன்ன வச்சிடுங்க.

             " சத்தியமா நான் இல்லீங்க
ண்ணா...."
             "என்கிற நெனப்பே வரக்கூடாது "
             " அப்படினு எவண்டா சொன்னான்.." 
             " 2095 க்கு மேல் "
             " தலைவி இருக்குபோதா.."



3. படத்தில் டைட்டிலின் போது பேக்ரவுண்டில் மகாத்மா காந்தி,சேகுவாரா, நெல்சன் மண்டேலா,ஹோசி மின், பிடல் காஸ்ட்ரோ, லெனின், லீ குவான் யு, தலாய்லாமா என வரிசையா வருது . ஆனா...... ஆனா....... அகிலம் போற்றும் அகிலாண்டேஸ்வரி, தங்கத்தாரகை, பொன்மனச்செல்வி, காவிரித்தாய், பாரதமாதா, பன்னியின்..ச்சீ பொன்னியின் செல்வி, வீரமங்கை வேலு நாச்சியார், இதய தெய்வம், டாக்டர் புரட்சித்தலைவி அம்மாவின் போட்டோவை விட்டுடீங்கலய்யா....மொதல்ல எல்லா படத்தையும் தூக்கிட்டு அம்மா சின்ன வயசுலேருந்து இப்ப வரைக்கும் எடுத்த போட்டோவை வரிசையா காமிச்சிங்கனு வையுங்க வரிச்சளுகைக்கு நான் கேரண்டி தாறேன்.

4. படத்தில முதல்ல வர்ற அப்பா வில்லனோட பேர கருணாநிதினோ அல்லது தெட்சனா மூர்த்தினோ மாத்தணும். அந்த பையன் வில்லன் பெயரை குஞ்சாநெஞ்சன் கொலைகிரி வைக்கணும்...அப்படியே கூட இருக்கிற அல்லக்கைகள் பேரோட கடைசில 'நிதி' யை சேர்த்து விட்டுடுங்க.ஆத்தாவை ஓரளவு சாத்தப்படுத்த இது உதவும். 


5. படத்தில சத்யராஜ் பேரு 'அண்ணா'... அப்படினா விஜய் என்ன எம்ஜியாரா....? யோவ் முதல்ல அத  மாத்துங்கய்யா..

6. படத்தோட ஓபனிங் சாங்க்சை கட் பண்ணிட்டு  "அடி கோமாதா ..நீ இந்த ஊரு காக்கிற குல மாதா.." பாட்டை ரீமிக்ஸ் பண்ணி " கொடநாட்டு கோமாதா... நீ எங்க ஊரு காக்கிற குல மாதா" னு மாத்திடனும்..


7. படத்தில விஜய் ஆஸ்திரேலியவில குடி தண்ணீர் பிசினெஸ் பன்ற மாதிரி காமிக்கிறாங்க... அதை மாத்தி டாஸ்மாக் தண்ணி பிசினெஸ் பன்ற மாதிரி காமிச்சா,
த்தாவின் புகழ் உலக அளவில ரீச் ஆகங்கிறதால உடனே அனுமதி கெடச்சிடும்.
 

8. சண்டைக்காட்சிகளில அடிக்கடி டிவி பெட்டி உடையுற மாதிரி காமிக்கணும்.அது கலைஞர் கொடுத்த இலவச டிவி மாதிரி தெரியனும்..
 
9. ஆஸ்திரேலியவில சுரேஷ் ரெஸ்டாரென்ட் நடத்துவார். அங்க தயிர் சாதம் மட்டுமே போடுவதாக காண்பிக்கணும். அப்படியே அந்த தயிர் சாதத்தை அடிக்கடி ZOOOOOM பண்ணி காமிக்கணும். அதுல ரெட்டை இலை ஷேஃப்புல கறிவேப்பிலை எப்போதும் கிடக்கிற மாதிரி பாத்துக்கணும்.

இப்படியெல்லாம் மாத்தினா படம் ஓடுமானு கேக்க கூடாது. அது வேற டிபார்ட்மென்ட். இப்போதைக்கு படம் ரிலீஸ் ஆகணும்னா இப்படி ஏதாவது செஞ்சுதான் ஆகணுங்ண்ணா..


Friday 9 August 2013

தலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)


சிங்கையின் மிகப்பெரிய திரையரங்கம். 1500 பேருக்கு மேல் கொள்ளளவு கொண்டது. நான்கு நாட்களுக்கு ஹவுஸ் புல். நிறைய எதிர்பார்ப்புகளுடன் அரங்கமே நிரம்பி வழிந்தது. படம் ஆரம்பித்து 15 நிமிடங்களுக்கு ஒரே விசில்,ஆர்பாட்டம்,சப்தம் என வசனங்களே காதில் விழாத அளவுக்கு ரசிகர்களின் கொண்டாட்டம். பதினைந்தாவது நிமிடத்தில் வருகிறார் இளைய தளபதி விஜய். அடுத்த ஐந்து நிமிடங்களில் அரங்கத்தில் 'பின்ட்ராப்' சைலண்ட். பிறகு மெல்ல மெல்ல சப்தங்கள் கூடி ஒரு கட்டத்தில் 'டேய் படத்தை போடுங்கடா' என்கிற அளவுக்கு விஜய் ரசிகர்களின் பொறுமையை மொத்தமாக சோதித்திருக்கிறார் இயக்குனர் விஜய்.

படத்திற்கு எந்த எதிர்ப்பும் கிளம்பாத நிலையில் வெடிகுண்டு மிரட்டல்,திரையிட மாட்டோம் என வாண்டேடாக வண்டியில் ஏறும்போதே தெரியும். படம் மொக்கை என்று..ஆனால் இப்படி ஒரு மரண மொக்கையை எதிர்பார்க்கவில்லை.இன்னும் ஒரு வார காலத்திற்கு இணையத்தில் அடித்துத் துவைத்துத் தொங்கவிடப் போகும் தலைவா-விற்கு முதலில் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..

இயக்குனர் விஜயிடம் எஸ்.ஏ.சி இப்படி சொல்லியிருப்பார். நாயகனையும் பாட்சாவையும் கலந்து கட்டி விஜய்க்கு ஏற்றவாறு எடுங்கள் என்று. மனுஷன் சாதாரணமாவே அட்ட காப்பி அடிக்கிறவரு.இப்படி சொன்னா கேக்கவா வேணும். நாயகன்ல ஒரு சீன்,பாட்சாவில ஒரு சீன்,திரும்பவும் நாயகனில் ஒரு சீன்..பாட்சாவில ஒரு சீன்...என அப்படியே ஜெராக்ஸ் எடுத்திருக்கிறார். சரி எல்லோரும் கதையையும் காட்சியையும் தான் காப்பி அடிப்பாங்க.இந்த ஆளு லொகேசனையும் காப்பி அடிச்சிருக்கான்யா.. நாயகனில் வரும் அதே தாராவி, அதே ஆலமரம் ,மேடை என எல்லாம் அப்படியே....

வேலுநாயக்கர் கேரக்டர்தான் விஜயின் அப்பாவாக வரும் சத்யராஜுக்கு. பெயர் மட்டும் மாறியிருக்கிறது 'அண்ணா' என்று.

மும்பை தாராவியில் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளை தட்டிக் கேட்பவராக சத்யராஜ். அதனால் பிரபல தாதாவால் கட்டம் கட்டப்பட்டு சுட்டுக்கொல்ல முயல்கையில் அவரின் மனைவி ரேகா துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு இறந்து போகிறார்( சரண்யா கேரக்டராம்). சினம் கொண்ட சத்தியராஜ் அந்த தாதாவை போட்டுத் தள்ளிவிட்டு தான் தாதாவாக மாறுகிறார்.தம் மகனான ஐந்து வயது விஸ்வா(விஜய்)வுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று அவரை நாசரிடம் கொடுத்து,தான் யார் என்பதே தெரியக்கூடாது என்று சொல்லி ஆஸ்ட்ரேலியா அனுப்பி விடுகிறார்.

பிறகு வேலுநாயக்க....ச்சே.. 'அண்ணா'வான சத்யராஜ் தாராவி மக்களுக்கு தலைவனாக தொண்டு செய்கிறார். தலை மறைவு வாழ்க்கையும் நடத்துகிறார்.

ஆஸ்திரேலியாவில் விஜய் தண்ணி பிசினெஸ்(குடிக்கிற தண்ணிதான்) செய்கிறார். 'தமிழ் நாட்டுக்கு தண்ணி கொண்டுவர முடியவில்லை...ஆனால் நீ ஆஸ்திரேலியாவுக்கு தண்ணி கொண்டு வந்துட்டியே' என்கிற பன்ச் டயலாக் வேற இருக்கிறது. அங்கு அமலாபாலையும் அவர் தந்தை சுரேசையும் சந்திக்கிறார். விஜயுக்கும் அமலாபாலுக்கும் காதல் மலர்ந்து திருமணம் வரை செல்கிறது. திருமணத்திற்கு விஜயின் அப்பாவை சந்தித்தே ஆகவேண்டும் என சுரேஷ் பிடிவாதம் பிடிக்க,சொல்லாமல் கொள்ளாமல் எல்லோரும் மும்பை வருகின்றனர். அங்கே கல்யாண விசயமாக பேசவரும் சத்யராஜை நோக்கி அமலாபாலும் சுரேஷும் துப்பாக்கியை நீட்டுகிறார்கள். ஏன்னா இருவரும் சிபிஐயாம்.  

கைது செய்து கொண்டு செல்லும் வழியில் குண்டுவைத்து கொல்லப்படுகிறார் சத்யாஜ். அவரைக் கொன்றது யார் எனக் கேக்க தோணுமே...முன்பு சத்யராஜ் ஒரு தாதாவை போட்டுத்தள்ளினார் அல்லவா...அவரோட மகன்தான்.அப்புறமென்ன அப்பா விட்டுவிட்டுப் போன அந்த அற்புத பணியை மகன் விஜய் தொடர்ந்து செய்ய, கடைசியில் அப்பாவைக் கொன்ன அந்த வில்லனை கொல்கிறார்.

அம்புட்டுதேன் கதை. ரஜினியை பாட்சா பாய்..பாட்சா பாய் என்று அழைத்தது போல இதில் விஜயை விஸ்வா பாய் என்கிறார்கள். எங்கிருந்து பாய் வந்தது என்பதுதான் தெரியவில்லை.தலைவா என்று டைட்டில் இருப்பதால் ஏதோ விஜயின் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமாக இந்தப்படம் இருக்கும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. ஏன்னா இதில் தமிழ்நாட்டை துளி அளவு கூட காண்பிக்கவில்லை.முற்பகுதி ஆஸ்ட்ரேலியா ..பிற்பகுதி முழுவதும் மும்பை.

முதல் பாதி செம ஜவ்வு... சந்தானம் காமெடியும் செம போர். இப்படியே போனால் விவேக் மாதிரி ஓரங்கட்டப் படுவார். இண்டர்வலுக்கு முன்பு படம் லேசாக சூடுபிடித்தது போல் இருந்தாலும் பிறகு தலை குப்புற படுத்து விடுகிறது. அது என்னப்பா சீரியசான காட்சிகளில் எல்லாம் எல்லோரும் முகத்தைப் பார்த்து பேசாமல் மோட்டு வளையை பாத்து பேசுறாங்க.. ஒருவேளை ஓலகத்தரத்தில் முயற்சி பண்ணி இருக்காங்களோ..

விஜயின் அட்டர்பிளாப் படங்களில் கூட அவரின் அறிமுக காட்சி அற்புதமாக இருக்கும். படத்தின் முதல் சொதப்பலே இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. அறிமுகப் பாடலும் வெறுப்பேற்றுகிறது.துப்பாக்கி என்கிற முழு நீள ஆக்சன் படத்திற்கு அடுத்தாக வரும் இதில் இடைவேளை வரை ஒரு பைட் சீன் கூட இல்லை. ஜோடி நம்பர் ஒன்னில் ஆடிய சில்லரைப் பசங்களை வைத்துக்கொண்டு 'தமிழ் பசங்க' என்கிற டான்ஸ் குருப்பை நடத்துகிறார் விஜய். அடடே.. அப்போ டான்ஸில் பின்னி எடுத்திருப்பார் என கேக்க தோணுமே... அந்தக் கொடுமையை தியேட்டரில் பாருங்க..சுறா தோத்துடும். அதிலும் புன்னகை மன்னன் கமல் ரேவதி மாதிரி விஜய் அமலாபால் ஒரு BGM க்கு ஆடுவாங்க பாருங்க... கண்கொள்ளா காட்சி.

அமலாபாலிடம் முகத்தைத் தவிர காட்டுவதற்கு வேறொன்றும் இல்லையென நினைத்திருப்பார் போல இயக்குனர். நல்லவேளை இருக்கிற வெறுப்பில் அப்படி எந்த விபரீத முயற்சியும் இயக்குனர் எடுக்காதது பாராட்டுக்குரியது.

 

படத்தில் மற்றொரு மைனஸ் இசை.ஒரு பாட்டு கூட ரசிக்கும்படி இல்லை.மும்பையில் நடக்கும் கலவரத்தின் போது இந்தியன் படத்தில் வரும் பின்னணி இசை ஒலிக்கிறது.இதில் விஜய் பாடும் ஒரு பாடலில் G.V.பிரகாஷ் அவருடன் ஒரு சீன் ஆடுகிறார்(இது வேறயா..)

படத்தில் லாஜிக் மிஸ்டேக் என்று தனியாக எதுவும் கிடையாது.ஏன்னா லாஜிக்கே இல்லாத படத்தில் எங்கே போயி லாஜிக் மிஸ்டேக்கை தேடுறது. படத்தில் வில்லன்கள் சம்மந்தப்பட்ட ஒரு முக்கியமான வீடியோ டேப் யார் கையிலும் கிடைக்காமல் ஒருவனால் பிக்பாக்கெட் அடிக்கப்படுகிறது.அது பிக்பாக்கெட்டுதான் அடிக்கப் பட்டிருக்கும் என்பதை வில்லனும் விஜயும் ஒரு சேர கணிப்பது எட்டாவது அதிசயம்.அந்த பிக்பாக்கெட் காரனைத் தேடி விஜயும் வில்லனும் ஒரே நேரத்தில் செல்கிறார்கள். ஒரே நேரத்தில் போன் பண்ணுகிறார்கள். மைக்ரோ செகன்ட் வித்தியாத்தில் விஜயின் போனை எடுத்துவிடுகிறார் அந்த பிக்பாக்கெட் ஆசாமி. அடுத்த முனையில் வில்லன் டயல் செய்து கொண்டே இருக்கிறான். அதைத் தெரிந்து கொண்ட விஜய் போனை கட் செய்தால் வில்லனின் போனை அட்டென்ட் பண்ணி விடுவானோ என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார். நமக்கு டென்சன் ஏத்துராங்கலாமாம்.. அட பக்கிகளா அவன்கிட்ட,இந்த போனை கட் பண்ண உடனையே ஒருத்தன் போன் பண்ணுவான் அத எடுக்காதனு சொல்லிட்டா பிரச்சனை முடிந்தது.காதுல பூ வைக்கிறதுக்கு பதிலா புய்ப்பமே வைப்பீங்க போல..

படத்தில் ஒரே ஆறுதல் 'ரைசிங் ஸ்டார்' சாம் ஆண்டர்சன். மனுஷன் ஒரு நிமிஷம் வந்தாலும் தியேட்டரை அதிரவைக்கிறார். அதிலும் ராசாத்தி பாடலுக்கு ஷோல்டரை குலுக்கி ஒரு மூவ்மென்ட் போடுவார் பாருங்க... சோர்ந்து உட்காந்தவங்க எல்லாரையும் நிமிர்ந்து உட்கார வச்சிட்டாரய்யா..

இந்தப்படம் மூலம் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பதை ஏதாவது போட்டி வைத்துதான் கண்டுபிடிக்க வேண்டும். விஜய் என்கிற ஒரு மாஸ் ஹீரோவுக்கு படம் பண்ணுகிறபோது அவர் ரசிகர்களை குஷிப்படுத்த எந்த மாதிரியான காட்சியமைப்பு வைக்க வேண்டும் என்பதில் மெகா கோட்டை விட்டிருருக்கிறார் இயக்குனர். 

கண்டிப்பாக இந்தப்படத்தை ஒரு தடவையாவது பாருங்கள். இவ்வளவு நாள் கழுவி ஊத்திய ஆதி, சுறா, வில்லு வேட்டைக்காரன் எல்லாம் காவியமாக தெரியும்..

தலைவா... மூணு மணிநேரம் கதறக் கதற.....முடியில.



Wednesday 7 August 2013

சேரனை புரிந்துகொள்ளுங்கள்...!



யக்குனர் சேரன் மகளின் காதல் சம்மந்தமாக எல்லோரும் கருத்து கந்தசாமியாக மாறி ஆளுக்காளு ஒரு கருத்தை சொல்லிகிட்டே இருக்காங்க.. அப்படினா நம்ம பங்குக்கு ஏதாவது சொல்லித்தானே ஆகணும்.. இல்லனா சமூக அக்கரையற்றவன்(!?) என்ற பழிச்சொல்லை இந்த உலகம் நம்மீது சுமத்திவிடும் அல்லவா....!

இணையத்தில் இருவேறுவிதமான விமர்சனங்கள எழுப்பப்படுகின்றன. ஒரு சாரார் காதலுக்கு ஆதரவாகவும் மற்றவர்கள் பிள்ளையை பெற்ற அப்பா ஸ்தானத்திலிருந்து கருத்துரைக்கின்றனர்.

எனக்கு சேரன் என்கிற தனிப்பட்ட மனிதர் மீது நிறைய விமர்சனங்கள் உண்டு.தன்னை ஒரு புரட்சி இயக்குனராக காதலுக்கு தனி இலக்கணம் வகுத்த படைப்பாளனாக சமூகத்தில் காட்டிக் கொள்ளும் சேரன்,தன் மகளின் காதல் பிரச்சனைக்காக 'என்னைப் புரிந்துகொள்ளுங்கள்' என தொலைக்காட்சி யில் அழுவது எவ்வளவு அபத்தமாக உள்ளது..! அதைக் கண்டு எத்தனை திரைப்பிரமுகர்கள் சேரனுக்கு ஆதரவாக கிளம்பியுள்ளனர்.!.இணையத்தில் கூட அவர் மகளின் காதலனைப்பற்றி தவறான செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது. சரி..சேரனை புரிந்து கொள்ளும் அளவுக்கு அவ்வளவு பெரிய உத்தமனா அவர்...? 

15 வருடத்திற்கு முன் திருச்சியில் நிஷா என்கிற இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட சம்பவத்தில், போலிஸ் விசாரணையில் அந்தப்பெண் வெளியிட்ட இரண்டு பெயர்கள் இயக்குனர் சேரன்,தங்கர் பச்சான். அந்தப்பெண் சொன்ன அதே நேரத்தில் இவர்கள் திருச்சியில் இருந்தது உண்மை என்றாலும் பிறகு எப்படியோ சரி கட்டப்பட்டு மூடி மறைக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் தந்தை ஐந்து வருடம் கோர்ட்டுக்கு நடையாக நடந்து கடைசியில் வழக்கு ஒன்றுமில்லாமல் போனது. அந்தத் தகப்பனை யார் புரிந்து கொண்டார்கள்...?

ஒருமுறை எழுத்தாளர் பாலகுமாரன்,உதவி இயக்குனர்களின் நிலையைப்பற்றி பத்திரிகையில் ஏதோ சொல்லி வைக்க, நிறைய உதவி இயக்குனர்களைத் திரட்டிக்கொண்டு பாலகுமாரனின் வீட்டின் முன்பு கோசம் போட்டு பொங்கு பொங்குனு பொங்கினார். இதை எதிர்பார்க்காத பாலகுமாரன் எல்லோரின் முன்பும் கைகூப்பி மன்னிப்பு கேட்டுக்கொண்டது எல்லா பத்திரிக்கையிலும் வந்ததே... அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டாரா சேரன்...?

ஒரு நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்களை 'பாடுகளா' என திட்டியவர், இன்று டிவியில் கதறி மக்களிடம் சிம்பதி தேடுகிறார். இருதரப்பிலும் ரகசியமாக பேசித் தீர்க்க வேண்டிய பிரச்னையை இப்படி தமிழகம் முழுவதும் பேச வைத்திருப்பது  'ஒரு வெளம்பரம்....' போலல்லவா தெரிகிறது.

காதலை வெறுக்கும் கதாநாயகியின் தந்தையை வில்லனாகவே நம் தமிழ் சினிமா தொடர்ந்து சித்தரித்து வந்திருக்கிறது.அதற்காக ரவுடியிசம்,கொலை மிரட்டல் என்கிற எந்த எல்லைக்கும் அவர்கள் போவார்கள். அதை அப்படியே ரியல் ஃலைப்பில் செய்துவிட்டு என்னைப் புரிந்துகொள்ளுங்கள் என தொலைக்காட்சியில் அழுதால் நாமும் கண்கலங்கி உருகிவிடுகிறோம்... இந்த சமூகத்தில் சினிமாகாரனின் அழுகைக்குத்தான் எவ்வளவு வலிமை...!!

அதேநேரத்தில் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தவிர்த்து,ஒரு சாராசரி தந்தையாக அவர் பக்கம் சில நியாயங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை டீலிங் செய்த விதம்தான் தவறு.மகளைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் அதன் வலி.இல்லையென்று சொல்லவில்லை.திரையில் காதலின் புனிதத்தைப் பற்றி பாடமெடுத்தவர் தன் சொந்த வாழ்க்கையில் எந்த காதலையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் கிடையாதுதான். ஆனால் 'முன்பு நல்லவனா தெரிந்தான். இப்ப கெட்டவனா தெரியிறான்' என்கிற வழக்கமான விளக்கத்தை இவரும் கொடுக்கும்போதுதான் கொஞ்சம் சறுக்குகிறார்.

சேரன் அவர்களே.. உங்கள் ஸ்தானத்தில் வைத்துப் பார்த்தால் எங்களுக்கும் அதே படபடப்புதான் வருகிறது. ஆனால் 20 வயது என்பது நல்ல பக்குவப்பட்ட நிலை.மூன்று வருடம் காதலித்தவர் அந்தப் பையனின் செயல்பாடுகளை நன்கு அறிந்திருப்பார். உங்கள் மகள் மீது நம்பிக்கை வையுங்கள். இவ்வளவு கடந்த பின்னும் இந்தக் காதலை பிரித்து வைப்பது சமூகத்தில் உங்கள்மீது தவறான பிம்பத்தை உருவாக்குவதுடன் அது கடைசி வரை உங்கள் ஆழ்மனதை  உறுத்திக்கொண்டே இருக்கும். "இந்தியா காதலின் பூமி தான்..காதலர் பூமியல்ல.!" என்று கவிப்பேரரசு சொன்னதை மீண்டும் நிருபித்துவிடாதீர்கள். 

ஓகே..கருத்து முடிந்தது.





Friday 2 August 2013

பிரபல காப்பி பேஸ்ட் பதிவரிடம் பல்பு (கவிதை) வாங்கிய சீனு..

 (கடந்த பதிவின் தொடர்ச்சி...)
ங்கிருந்து தலைதெறிக்க ஓட, பின்னால் ஒரு அபலக் குரல் ... .திரும்பிப் பார்த்தால் பிரபல காப்பி பேஸ்ட் பதிவர்.

பிகாபே பதிவர்: ஹி... ஹி...என்ன சீனு இந்தப்பக்கம்...?

சீனு : சும்மா காபிபேஸ்ட்.. ச்சே...காபி சாப்பிட்டு போவலாம்னு வந்தேண்ணே..  

பிகாபே பதிவர்: ஏதோ காப்பி பேஸ்டுனு காதுல விழுந்துச்சி...

சீனு :  (விழுந்துடுச்சா..) பேஸ்ட் வாங்கிட்டு அப்படியே காப்பி குடிச்சிட்டு போலாம்னு வந்தேன்.. இதைதான் சுருக்கி சொல்லிட்டேன்..

பிகாபே பதிவர்: காதல் கடித போட்டியெல்லாம் வக்கிறீங்க. என்னை கூப்பிட மாட்டீங்களா...

சீனு : நீங்க மூக்கு சிந்துற கேப்புல மூணு பதிவு போடுற ஆளு...  டிக்கெட் கவுண்டர எட்டிப்பாத்தே எட்டு பக்கத்துக்கு விமர்சனம் எழுதுற ஆளு...உங்களைபோயி எப்படிண்ணே... நீங்க 'மலை'.. நாங்க சும்மா  மடு...

பிகாபே பதிவர்: சாரி சீனு.எனக்கு புகழ்ச்சி புடிக்காது.என்னைப்பத்தி ஏதாவது புகழ்ந்து சொல்லனும்னா அதை அப்படியே ஒரு பதிவா போட்டுடுங்க..ஹி... ஹி.. அப்புறம் என்னை யாருமே கூப்பிடாதால நானே என்னை கூப்பிட்டு  காதல் கவிதை எழுதலாம்னு இருந்தேன். ஆனா அது சொந்தமா எழுதணுமாமே..அந்த ஒரு காரணத்துக்காக விட்டுட்டேன்.

சீனு :அதனால என்னாண்ணே இப்ப சொல்லுங்க...

பிகாபே பதிவர்: (ச்சே..வாயக்குடுத்து மாட்டிக்கிட்டேனே..) சரி...நீங்க கேக்கிறதால என் கற்பனையில் ஊறினத கக்குறேன்... பட் என் கவிதையை பாத்துட்டு ரொம்ப புகழக் கூடாது. ..ஏன்னா எனக்கு புகழ்ச்சி புடிக்காது...

"கொடியிடை விளைவது கனி...
இந்த கனியிடை விளைவது சுவை....
அந்த சுகம் பெற நமக்கென்ன குறை...
நெருக்கம் கொடுக்கும் நிலை தான் மயக்கம்.."
எப்படி என் வார்த்தை வீச்சு....?

சீனு : அண்ணே இது 'அழகிய தமிழ் மகள் இவள்' பாட்ல வர்ற சரணம்ண்ணே... 

பிகாபே பதிவர்: என்னது முன்னாடி யாரோ எழுதிட்டாங்களா..? ச்சே..நாம என்ன மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம்..? சரி அடுத்தத கேளுங்க..அசந்துடுவீங்க.

மாணிக்கத் தேரின் காணிக்கையாக
முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்....
தீராத ஆசை கோடானு கோடி
தேனாக ஓடும் தானாகத் தீரும்...
தங்கத் தாமரை மொட்டு விரிந்தது
மஞ்சள் நீராட சொல்லுங்கள் அங்கங்கே...

சீனு : அண்ணே இது 'அவளுக்கென்று ஓர் மனம்' படத்தில வர்ற பாட்டுண்ணே..கண்ணதாசன் எழுதினது.


பிகாபே பதிவர்: என்னது இதையும் எழுதிட்டாங்களா.... என்கிட்டே ஒரு கெட்ட பழக்கம் சீனு... அப்பப்போ எனக்கு தோணுறத அப்படியே ஒரு பேப்பர்ல கிறுக்கி தூக்கிப் போட்டுடுவேன். அதை எடுத்து இவனுக சினிமாவில பாட்டா போட்டுறாங்க. சரி இது கனநேரத்தில் கற்பனையில் உதித்தது ....

" கை வீசிடும் தென்றல்... கண் மூடிடும் மின்னல்...
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ..!
பண்பாடிடும் சந்தம்... உன் நாவினில் சிந்தும்....
இது மழையோ புயலோ நதியோ கலையழகோ...!

சீனு : ' மேகமொன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி...தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி..  '

பிகாபே பதிவர்: (கோபத்துடன்..) சீனு.. இது எப்படி உங்களுக்கு தெரியும்...?

சீனு : சும்மா வெறுப்பேத்தாதிங்கண்ணே..இது உலகத்துக்கே தெரியும்...

பிகாபே பதிவர்:   என்னது அதுக்குள்ளே வேர்ல்ட் முழுக்க ரீச் ஆச்சா...? இப்படித்தான் சீனு நான் இன்னிக்கி என்ன பதிவு போடப் போறேனோ அதை ஒரு வாரத்துக்கு முன்னாடி எப்படியோ தெரிஞ்சிகிட்டு பத்திரிக்கையில போட்டுடுறாங்க... அதுவும் ஒரு எழுத்து கூட மாறாம. கடைசில என்னை காப்பி பேஸ்ட் பதிவர்னு இந்த உலகம் சொல்லது. ச்சே..என்ன மாதிரியான உலகத்தில வாழ்றோம்..?    

சீனு :விடுங்கண்ணே...விடுங்கண்ணே... நம்பர் ஒன் போகணும்னா கால் சட்டையை கழட்டுறதும்.....நம்பர் ஒன் பதிவர்னா காபி பேஸ்ட் பன்றதும் சகஜம்தானே...

பிகாபே பதிவர்: சரி சீனு...இதுதான் பைனல் பீஸ்... இத எங்கேயும் கேட்டிருக்க முடியாது.. இப்ப ஏன் கற்பனை குதிரைய தட்டி விடறேன் பார்..

"கனவுகளில் வாழ்ந்த நாளை கண் எதிரே பார்க்கிறேன்...
கதைகளிலே கேட்டப் பெண்ணா திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்...
அங்கும் இங்கும் ஓடும் கால்கள் அசைய மறுத்து வேண்டுதே...
இந்த இடத்தில் இன்னும் நிற்க இதயம் கூட ஏங்குதே..
கண்ணாடி போல் உடைந்திடும் மனது கவிதை ஒன்று பார்த்து போக..
கண்கள் கலங்கி நானும் ஏங்க மழையின் சாரல் என்னைத் தாக்க..
விழிகள் எல்லாம் கேள்வி கேட்க..."

சீனு :   இதைத்தான் எதிர்பார்த்தேன்...அடடடா.. வரிக்குவரி சிக்சர்...பின்னிட்டீங்க... அனேகமா உங்களுக்குதான் முதல் பரிசு..

பிகாபே பதிவர் : சாரி சீனு.எனக்கு...........

சீனு : புகழ்ச்சி புடிக்காதுனு சொல்ல வறீங்க. இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தன்னடக்கம்....

( சீனு  அங்கிருந்து புறப்பட்டவுடன் ......)

பிகாபே பதிவர்: அப்பாடா நல்லவேளை.இது " யாரடி நீ மோகினி" படத்தில வர்ற பாட்டுனு கண்டுபிடிக்கல. ச்சே...ஒரு காப்பி பேஸ்ட் பதிவரா இருக்கிறது எவ்வளவு சிரமம்..!