Monday 12 August 2013

'தக்காளி...' உனக்கு இது தேவையா..?(சும்மா அடிச்சு விடுவோம்..3 )

      வழக்கமா சனி,ஞாயிறுகளில் வீட்டுக்கு காய்கறி,மளிகை சாமான்கள் நாந்தேன் வாங்குவேனுங்க... ஒரு வாரத்துக்கு தேவையானதை மொத்தமா வாங்கிடுறது. அதில நிறைய நேரங்களில பில்லை சரி பார்க்க மாட்டேன். சிவப்பா இருக்கிறவன் ஏமாத்த மாட்டான்(!!!) என்கிற நம்பிக்கைதான்.அதிலும் பில் கவுண்டர்ல பூரா பொம்பள புள்ளைகளா போட்டுருக்கானுவளா...அதுக பில் போட்டு முடிஞ்ச உடனையே பில்லையும், ATM  கார்டையும் கையில திணிச்சி Thank you-னு சொல்லிட்டு ஒரு ஸ்மைல் பண்ணும் பாருங்க. ஹி..ஹி... அப்புறம் எங்க பில்லை செக் பன்றது...?


போன வாரம் சாமான் வாங்கினபோது ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பாட்டி (பின்ன குமரியா) பில் போட்டுச்சு. சரி பில்லை செக் பண்ணலாம்னு பாத்தா,வாங்காத ஒரு சாமானுக்கு சேத்து பில்லு போட்டு வச்சிருக்கு.எனக்கு செம கோபம். நேரா போயி,என் பில்லுல 'கார்லிக் பிரட்'- $ 4.50னு இருக்கே. நான் எப்போ வாங்கினேன்னு சத்தம் போட்டேன்.

அது எல்லா சாமானையும் செக் பண்ணிப் பாத்துட்டு,  'வெரி சாரி..ஏதோ தப்பு நடந்திடுச்சி. திரும்பவும் சாரி கேட்டுகிறேன்'-னு சொல்லிட்டு $4.50 திருப்பி கொடுத்துட்டு.நான் விடல..'யு ஆர் வேஸ்டிங் மை டைம்..ஆ ஊ'-னு கொஞ்சம் சவுண்டு விட்டேன். அந்த பாட்டி கொஞ்சம் பயந்து போயி அடுத்த தடவை இப்படி நடக்காதுனு சொல்லிட்டு ஒரு சின்ன பிரட் பாக்கெட்டை தூக்கி( ஃப்ரீயாத்தான் ) என் பேக்குக்குள்ள போட்டிச்சி. அப்பத்தான் என் கோபமே அடங்கிச்சி.!  

இது போல வீர தீர செயல்கள் ஏதாவது செஞ்சேனா உடனே வீட்ல அம்மணிகிட்ட சொல்லி நம்ம இமேஜ கொஞ்சம் பில்டப் பண்ணிக்கிறது.

இப்படித்தான் நேத்திக்கு இன்னொரு கடைக்கு போனேன்.கூட அம்மணியும் வந்திச்சு.பில் போட்டுட்டு வெளிய வந்து பாத்தா,ஒரே அயிட்டத்தை ரெண்டு தடவ பில் போட்டிருக்காங்க. Banana - $ 1.50னு மேல இருக்கு.பிறகு பத்து அயிட்டம் தள்ளி திரும்பவும் Banana - $2.50 னு இருந்துச்சி.அம்மணி வேற பக்கத்தில இருந்துச்சுங்களா.. ஆட்டோமேடிக்கா எனக்கு கோபம் வந்திடுச்சி.ஆனா அம்மணியோ, 'விடுங்க 2.50 தான...இவ்வளவு கூட்டமா இருக்கு.எதுக்கு போயி சண்டை போட்டுக்கிட்டு.அதுவுமில்லாம பில் போட்ட பொண்ணு புதுசு மாதிரி தெரியுது. விடுங்க'-னு சொல்லிடிச்சி.

நான் விடல.. அது எப்படி $2.50, நம்ம ஊரு காசுக்கு 120 ரூபாய்.. விடமாட்டேன்.என் டேலண்ட இன்னும் நீ நேரா பாத்ததில்லையே. இப்போ பார்னு சொல்லிட்டு நேரா பில் கவுண்டர் போயி பில்லை காட்டி 'வாட் ஈஸ் திஸ்'னு கேட்டேன்.அந்த பொண்ணு புதுசு போல. மிரண்டு போயி அதோட சூப்பர்வைசர கூட்டிட்டு வந்துட்டு. அதுகிட்ட விஷயத்தை சொன்னவுடனையே நீங்க வாங்கின அயிட்டத்தை காமிங்கனு சொல்லி செக் பண்ணினது.

செக் பண்ணிட்டு அந்த பொண்ணு சொல்லிச்சி.. 'சாரி சார்... நீங்க ரெண்டு கிலோ தக்காளி வாங்கியிருக்கீங்க. தக்காளிக்கான நம்பரை அடிக்கிறதுக்கு பதிலா Banana-வுக்கான நம்பரை தெரியாம அடிச்சிடிச்சி. ஒன்னும் பிராப்ளம் இல்ல' னு சொல்லிட்டு  தக்காளியை திரும்பவும் வெயிட் போட்டு செக் பண்ணினா அது 5.00 டாலர்னு காமிக்குது.

'சாரி சார்...நீங்க இப்போ எக்ஸ்ட்ரா 2.50 பே பண்ணனும்'-னு சொல்லிடிச்சி. அடங்கொன்னியா அம்மணி சொன்ன மாதிரி அப்படியே போயிருக்கலாம்.கொஞ்சம் ஓவராத்தான் சவுண்ட் விட்டுட்டோமோனு  திரும்பினா,பின்னாடி அம்மணி கோவில்பட்டி வீரலட்சுமி கணக்கா நிக்குது. உனக்கு இது தேவையா...?

ன்னப்பா தமிழ்நாட்ல தலைவா படம் ரிலீஸ் ஆச்சா..? இன்னும் எத்தனைப் பதிவுதான் அதை வச்சு தேத்தறது....?

சமீபத்தில் தான் ஒரு நியூஸ் படிச்சேன். படம் ரிலீஸ் ஆவுரதுல எந்த சிக்கலும் இல்லையாம். இப்ப பிரச்சனையே வரி விலக்கு சம்மந்தமாகத்தானாம்.

இந்தப் படத்தை விநியோகஸ்தர்கள் கிட்ட போட்டு காமிச்ச உடனையே படத்தின் ரிசல்ட் தெரிஞ்சிடுச்சாம். ஒருவேளை பெரிய அளவில லாஸ் ஆனா என்ன பன்றதுனு யோசிக்கிறப்போதான் அட்லீஸ்ட் வரிவிலக்கு இருந்தா கொஞ்சம் நல்லாயிருக்கும் என திரையரங்க தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டதாம். ஆனால் வரிவிலக்கு கிடைக்காமல் போகவே தலைவா தரப்பு செம அப்செட். இதுக்காகத்தான் தந்தையும் மகனும் கொடநாடு வரை சென்றதாக ஒரு தகவல் சொல்லுது.

சரி படத்தைப் பற்றிய விமர்சனங்கள் எப்படி இருக்குனு ஒரு ரவுண்டு வந்தேன். எங்க போயி பாத்தாலும் கழுவி கழுவி ஊத்துறாங்க. இங்க 8 ஆம் தேதி இரவே ரிலீஸ் ஆச்சு. எங்க ஆபிஸ் பக்கத்தில் தியேட்டர் இருந்ததால் சும்மா ஒரு எட்டு பாக்கலாம்னுதான் போனேன். இரவுக் காட்சிக்கு ஒரே ஒரு டிக்கெட் இருக்குனு சொன்னாங்க.. சரின்னு வாங்கி பாத்துட்டேன்.ஆனா விமர்சனம் எழுதுற மூடோட படம் பாக்க போகல.படம் பார்த்தப் பிறகு தான் எழுதனும்னு தோணிச்சி.. எப்படி விஜய் இப்படி  ஒரு கதையில் நடிக்க சம்மதித்தார் என்று. நைட்டே வந்து விமர்சனத்தை போட்டேன். ஆனால் அதற்கு எதிர்வினைகள் நிறைய வந்தது.விஜயின் ரசிக குஞ்சுகள் சிலர் உணர்ச்சி வசப்பட்டு சில ' நாகரிகமான ' கமெண்டை போட்டிருந்தனர். நல்லவேளை கமெண்ட் மாடரேசன் வச்சதால தப்பிச்சேன். ஒருவேளை ஓவராத்தான் எழுதிட்டோமோனு நெனச்சேன். ஆனால் அதற்குப் பிறகு வந்த எல்லா விமர்சனமும் அப்படியேத்தான் இருந்தது.

படம் பார்க்கும் முன்         /            படம் பார்த்த பின்.
முதன் முதலாக பிளாக்கில் விமர்சனம் போட்ட வகையில் அதற்கு 5000 ஹிட்சுக்கு மேல் கிடைத்தது(இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா..). அதனால நம்ம கொடநாட்டு கோமாதா கிட்ட ஒரே ஒரு கோரிக்கை வச்சிக்கிறேன். "ஆத்தா இதே மாதிரி எல்லா பெரிய ஹீரோக்களின் படத்தையும் தமிழ்நாட்ல நீங்க தடைபண்ணி போடனும். படத்தை நான் இங்க பாத்துட்டு நைட்டே விமர்சனம் பண்ணி போடனும்...அத வச்சி நான் எப்படியாவது பிரபல பதிவரா ஆயிடனும்..எனக்கு கொஞ்சம் கருணை காட்டு தாயே...."

( தமிழக முதல்வருக்கு என் சார்பாக இன்னொரு எச்சரிக்கை... தலைவா படத்தை திரையிட அனுமதிக்கா விட்டால் தலைவாவைப் பற்றி இன்னும் நாலு பதிவு ரெடி பண்ணி வச்சிருக்கேன்..அடுத்தடுத்து அதை ரிலீஸ் செய்வேன் என்று எச்சரிக்கிறேன்..)

29 comments:

 1. பல்பு வாங்கினா இப்படித்தான் வாங்கணும்.
  தலைவா பதிவுலகிற்கு கிடைத்த வரப்பிரசாதம்

  ReplyDelete
  Replies
  1. நன்றி T.N.MURALIDHARAN

   பல்பு வாங்கினது இருக்கட்டும் பாஸ்.. அதுக்கப்புறம் அம்மணிகிட்ட வாங்கி கட்டிக்கிட்டத எங்க போயி சொல்றது... :-)

   Delete
 2. ஹா ஹா.... சூப்பரா ஏமாந்தீங்களா... இருந்தாலும் வாங்கின பொருளுக்கு பணத்தை சரியாய் கொடுப்பதுதான் சரி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்கூல் பையன்...

   நீங்க வேற பாஸ்... நிறைய தடவ இதுமாதிரி விட்டுட்டு வந்து செமையா வாங்கி கட்டிருக்கேன்,... அதை சரி கட்டலாம்னு பாத்தேன்... ஆனா மீண்டும் பல்பு...


   //இருந்தாலும் வாங்கின பொருளுக்கு பணத்தை சரியாய் கொடுப்பதுதான் சரி.//

   சரிதான் பாஸ்... ஆனா யாரும் ஏமாத்தணும்னு செய்யில இல்லையா... இதை ஒரு அதிஷ்டம் என்கிற வகையில கூட சேர்க்கலாம். ரோட்டுல நடந்து போகும்போது பத்து ரூவா பணம் கிடந்தா , போட்டுட்டு போனவன நெனச்சி வருத்தமா படுவோம்...சுத்திமுத்தி பாத்துட்டு பாக்கெட்டுல போட்டுகிறதில்ல... ஹி..ஹீ...அதே மாதிரிதான் இதுவும்..

   Delete
 3. நீங்க ஷாப்பிங் போன இரண்டு அனுபவங்களும் அருமையா நகைச்சுவையாக இருந்தது. மிக்வும் ரஸித்துப்படித்தேன். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சார்..

   Delete
 4. கொட நாட்டு கோமாதாவுக்கு நீங்க கொடுத்த எச்சரிக்கையும், வேண்டுகோளும் சூப்பருங்க! பதிவு செம கலக்கல்! ஆமா அமேரிக்காவுலயா இருக்கீங்க?? :))

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாஸ்...சிங்கப்பூரில் இருக்கேன்...


   இப்படித்தான் ஏற்கனவே விஸ்வரூபம் படத்தை வச்சி கொஞ்சம் கல்லா கட்னேன்.. இப்போ தலைவா... போற பாக்க பாத்தா கொடநாட்டு கோமாதாவால் நான் பிர்ர்ரபல பதிவர் ஆயிடுவேன் போல..:-))

   Delete
 5. # திரும்பினா,பின்னாடி அம்மணி கோவில்பட்டி வீரலட்சுமி கணக்கா நிக்குது.#இதுக்கு அப்புறம் நடந்ததை எழுதவே இல்லையே?மூக்குலே குத்து வாங்கினதா கேள்விப்பட்டேனே ...எதுக்கும்மூக்கு தெரியுற ஒரு போடோவைப் போடுங்க பாஸ் !

  ReplyDelete
  Replies
  1. //இதுக்கு அப்புறம் நடந்ததை எழுதவே இல்லையே?//


   ச்சே ச்சே இது மாதிரி விசயத்தில அம்மணி ரொம்ப டீசன்ட்....;-)) எவ்வள அடி அடிச்சாலும் வெளிய ஒரு சத்தம் கேக்காது..அடிச்ச மாதிரி தெரியாது..ஆனா அடி விழுந்திருக்கும்.

   Delete
 6. காலையிலேயே நீங்களும் ரௌடிதான் என்பதை தெரிந்துகொண்டு கலகலவென சிரித்தேன். என்னா ஒரு லொள்ளு.

  மணிமாறன் விஜய் படம் நல்லாதான் இருக்கு.. நல்லதா சொல்லுங்க. அவரின் உடலோடு ஒட்டிய அந்த வெள்ளை சட்டையில் அப்படியே ஆண் தேவதையைப்போலவே இருந்தார். ஐ லைக் விஜய்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ...

   //மணிமாறன் விஜய் படம் நல்லாதான் இருக்கு..//


   நானும் ஒத்துக்குறேன் சகோ ..விஜய் படம் (போட்டோ) நல்லாத்தான் இருந்திச்சி. :-)) அதை நம்பித்தான் படம் பாக்க போனேன்..ஆனா படம் மொக்கையாயிடுச்சி.

   //ஆண் தேவதையைப்போலவே ..//

   ஹி..ஹி..

   Delete
 7. நேரமிருந்தால் என்னுடைய இன்றைய சிறப்புப்பதிவுக்கு வருகை தாருங்கள்.

  http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு பெரிய மனசு சார்.... மிக்க நன்றி

   Delete
 8. ஹா ஹா.. தல... இங்க கண்ணன் டிபார்ட்மெண்டல் கடையில ஒரே பில்லுல சுமார் 250 ரூபா வரை எக்ஸ்ட்ரா போட்டிருந்தான்...

  சண்டை போட்டு காசை வாங்கிட்டோம்ல...

  ReplyDelete
  Replies
  1. நீங்களாவது காசு வாங்கிடீங்க..நான் அம்மணிக்கு முன்னாடி பல்பு வாங்கிட்டேன். :-)

   Delete
 9. தலைவா.... தலைவலி வா...

  தமிழ்நாட்டுல கூப்புடுராங்கையா...

  ReplyDelete
  Replies
  1. வருது வருது... யாம் பெற்ற தலைவலி நீங்களும் பெருக..

   Delete
 10. ,பின்னாடி அம்மணி கோவில்பட்டி வீரலட்சுமி கணக்கா நிக்குது.//

  பின்னே? நீங்க சொன்ன டாலர் கணக்குல இந்திய மதிப்புல ரூ.150/- போச்சே!

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா.. இதுதான் சிந்த செலவில சூனியம் வச்சிகிறங்கிறது.

   Delete
 11. பின்னாடி அம்மணி கோவில்பட்டி வீரலட்சுமி கணக்கா நிக்குது. உனக்கு இது தேவையா...?// அடி வாங்குனதை எல்லாம் எழுத மாட்டீங்களா?? :-)

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா.. அது ஒரு தனி கதை பாஸ்..

   Delete
 12. ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பாட்டி (பின்ன குமரியா) பில் போட்டுச்சு. // இங்கதான் பிரச்சினையே... கொமரியா இருந்திருந்தா நாம எங்க பில்லைப் பார்க்கப் போறோம்.ஹி ஹி....

  ReplyDelete
  Replies
  1. அதேதான்... இது மாதிரி எத்தனை தடவை விட்டுட்டு வந்தேனோ தெரியில..

   Delete
 13. ஷாப்பிங் அனுபவம் ஒரு பாடம் ..

  ReplyDelete
 14. ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துரைத்து
  சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த
  இனிய அன்பு நன்றிகள்..!

  ReplyDelete
 15. ஹா ஹா ஹா தக்காளி யாருக்கு வந்தாலும் அது ரத்தம் தான்யா... :-)))))))))))

  //ஆனால் அதற்குப் பிறகு வந்த எல்லா விமர்சனமும் அப்படியேத்தான் இருந்தது.// ஹா ஹா ஹா துச்சமாக என்னை நம்மை ஊறு செய்த போதிலும்......

  //அத வச்சி நான் எப்படியாவது பிரபல பதிவரா ஆயிடனும்..எனக்கு கொஞ்சம் கருணை காட்டு தாயே....// மங்களம் உண்டாவட்டும் மவனே :-))))))

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா நன்றி சீனு

   Delete