Friday 2 August 2013

பிரபல காப்பி பேஸ்ட் பதிவரிடம் பல்பு (கவிதை) வாங்கிய சீனு..

 (கடந்த பதிவின் தொடர்ச்சி...)
ங்கிருந்து தலைதெறிக்க ஓட, பின்னால் ஒரு அபலக் குரல் ... .திரும்பிப் பார்த்தால் பிரபல காப்பி பேஸ்ட் பதிவர்.

பிகாபே பதிவர்: ஹி... ஹி...என்ன சீனு இந்தப்பக்கம்...?

சீனு : சும்மா காபிபேஸ்ட்.. ச்சே...காபி சாப்பிட்டு போவலாம்னு வந்தேண்ணே..  

பிகாபே பதிவர்: ஏதோ காப்பி பேஸ்டுனு காதுல விழுந்துச்சி...

சீனு :  (விழுந்துடுச்சா..) பேஸ்ட் வாங்கிட்டு அப்படியே காப்பி குடிச்சிட்டு போலாம்னு வந்தேன்.. இதைதான் சுருக்கி சொல்லிட்டேன்..

பிகாபே பதிவர்: காதல் கடித போட்டியெல்லாம் வக்கிறீங்க. என்னை கூப்பிட மாட்டீங்களா...

சீனு : நீங்க மூக்கு சிந்துற கேப்புல மூணு பதிவு போடுற ஆளு...  டிக்கெட் கவுண்டர எட்டிப்பாத்தே எட்டு பக்கத்துக்கு விமர்சனம் எழுதுற ஆளு...உங்களைபோயி எப்படிண்ணே... நீங்க 'மலை'.. நாங்க சும்மா  மடு...

பிகாபே பதிவர்: சாரி சீனு.எனக்கு புகழ்ச்சி புடிக்காது.என்னைப்பத்தி ஏதாவது புகழ்ந்து சொல்லனும்னா அதை அப்படியே ஒரு பதிவா போட்டுடுங்க..ஹி... ஹி.. அப்புறம் என்னை யாருமே கூப்பிடாதால நானே என்னை கூப்பிட்டு  காதல் கவிதை எழுதலாம்னு இருந்தேன். ஆனா அது சொந்தமா எழுதணுமாமே..அந்த ஒரு காரணத்துக்காக விட்டுட்டேன்.

சீனு :அதனால என்னாண்ணே இப்ப சொல்லுங்க...

பிகாபே பதிவர்: (ச்சே..வாயக்குடுத்து மாட்டிக்கிட்டேனே..) சரி...நீங்க கேக்கிறதால என் கற்பனையில் ஊறினத கக்குறேன்... பட் என் கவிதையை பாத்துட்டு ரொம்ப புகழக் கூடாது. ..ஏன்னா எனக்கு புகழ்ச்சி புடிக்காது...

"கொடியிடை விளைவது கனி...
இந்த கனியிடை விளைவது சுவை....
அந்த சுகம் பெற நமக்கென்ன குறை...
நெருக்கம் கொடுக்கும் நிலை தான் மயக்கம்.."
எப்படி என் வார்த்தை வீச்சு....?

சீனு : அண்ணே இது 'அழகிய தமிழ் மகள் இவள்' பாட்ல வர்ற சரணம்ண்ணே... 

பிகாபே பதிவர்: என்னது முன்னாடி யாரோ எழுதிட்டாங்களா..? ச்சே..நாம என்ன மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம்..? சரி அடுத்தத கேளுங்க..அசந்துடுவீங்க.

மாணிக்கத் தேரின் காணிக்கையாக
முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்....
தீராத ஆசை கோடானு கோடி
தேனாக ஓடும் தானாகத் தீரும்...
தங்கத் தாமரை மொட்டு விரிந்தது
மஞ்சள் நீராட சொல்லுங்கள் அங்கங்கே...

சீனு : அண்ணே இது 'அவளுக்கென்று ஓர் மனம்' படத்தில வர்ற பாட்டுண்ணே..கண்ணதாசன் எழுதினது.


பிகாபே பதிவர்: என்னது இதையும் எழுதிட்டாங்களா.... என்கிட்டே ஒரு கெட்ட பழக்கம் சீனு... அப்பப்போ எனக்கு தோணுறத அப்படியே ஒரு பேப்பர்ல கிறுக்கி தூக்கிப் போட்டுடுவேன். அதை எடுத்து இவனுக சினிமாவில பாட்டா போட்டுறாங்க. சரி இது கனநேரத்தில் கற்பனையில் உதித்தது ....

" கை வீசிடும் தென்றல்... கண் மூடிடும் மின்னல்...
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ..!
பண்பாடிடும் சந்தம்... உன் நாவினில் சிந்தும்....
இது மழையோ புயலோ நதியோ கலையழகோ...!

சீனு : ' மேகமொன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி...தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி..  '

பிகாபே பதிவர்: (கோபத்துடன்..) சீனு.. இது எப்படி உங்களுக்கு தெரியும்...?

சீனு : சும்மா வெறுப்பேத்தாதிங்கண்ணே..இது உலகத்துக்கே தெரியும்...

பிகாபே பதிவர்:   என்னது அதுக்குள்ளே வேர்ல்ட் முழுக்க ரீச் ஆச்சா...? இப்படித்தான் சீனு நான் இன்னிக்கி என்ன பதிவு போடப் போறேனோ அதை ஒரு வாரத்துக்கு முன்னாடி எப்படியோ தெரிஞ்சிகிட்டு பத்திரிக்கையில போட்டுடுறாங்க... அதுவும் ஒரு எழுத்து கூட மாறாம. கடைசில என்னை காப்பி பேஸ்ட் பதிவர்னு இந்த உலகம் சொல்லது. ச்சே..என்ன மாதிரியான உலகத்தில வாழ்றோம்..?    

சீனு :விடுங்கண்ணே...விடுங்கண்ணே... நம்பர் ஒன் போகணும்னா கால் சட்டையை கழட்டுறதும்.....நம்பர் ஒன் பதிவர்னா காபி பேஸ்ட் பன்றதும் சகஜம்தானே...

பிகாபே பதிவர்: சரி சீனு...இதுதான் பைனல் பீஸ்... இத எங்கேயும் கேட்டிருக்க முடியாது.. இப்ப ஏன் கற்பனை குதிரைய தட்டி விடறேன் பார்..

"கனவுகளில் வாழ்ந்த நாளை கண் எதிரே பார்க்கிறேன்...
கதைகளிலே கேட்டப் பெண்ணா திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்...
அங்கும் இங்கும் ஓடும் கால்கள் அசைய மறுத்து வேண்டுதே...
இந்த இடத்தில் இன்னும் நிற்க இதயம் கூட ஏங்குதே..
கண்ணாடி போல் உடைந்திடும் மனது கவிதை ஒன்று பார்த்து போக..
கண்கள் கலங்கி நானும் ஏங்க மழையின் சாரல் என்னைத் தாக்க..
விழிகள் எல்லாம் கேள்வி கேட்க..."

சீனு :   இதைத்தான் எதிர்பார்த்தேன்...அடடடா.. வரிக்குவரி சிக்சர்...பின்னிட்டீங்க... அனேகமா உங்களுக்குதான் முதல் பரிசு..

பிகாபே பதிவர் : சாரி சீனு.எனக்கு...........

சீனு : புகழ்ச்சி புடிக்காதுனு சொல்ல வறீங்க. இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தன்னடக்கம்....

( சீனு  அங்கிருந்து புறப்பட்டவுடன் ......)

பிகாபே பதிவர்: அப்பாடா நல்லவேளை.இது " யாரடி நீ மோகினி" படத்தில வர்ற பாட்டுனு கண்டுபிடிக்கல. ச்சே...ஒரு காப்பி பேஸ்ட் பதிவரா இருக்கிறது எவ்வளவு சிரமம்..!




23 comments:

  1. குத்துங்க எசமான் குத்துங்க! ஹா! ஹா! ஹா!

    ReplyDelete
    Replies
    1. ஹா.ஹா..மொத்தமா குத்தியாச்சி நன்றி..

      Delete
  2. சூப்பர்.சிரிப்பை அடக்க முடியல.

    ReplyDelete
  3. அந்த காபி பேஸ்ட் பதிவர் பற்றி ஒரு clue கொடுத்தா கொஞ்சம் நல்லா இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. //அந்த காபி பேஸ்ட் பதிவர் பற்றி ஒரு clue கொடுத்தா கொஞ்சம் நல்லா இருக்கும்//


      கா.பி என்றெல்லாம் க்ளு கொடுக்க முடியாது... இல்ல தல

      Delete

    2. இது யாரையும் தனியாக குறிப்பிடவில்லை.. பதிவுலகில் உள்ள காப்பி பேஸ்ட் பதிவர்களை நக்கலடிக்க எழுதப்பட்ட பதிவு..நன்றி பாஸ்.

      Delete
    3. //கா.பி என்றெல்லாம் க்ளு கொடுக்க முடியாது... இல்ல தல //

      ஹி..ஹி...

      Delete
  4. அடுத்து யாருப்பா சீக்கிரம்

    ReplyDelete
    Replies

    1. பாஸ் நல்லாத்தான் உசுப்பேத்தி விடுறீங்க...நன்றி..

      Delete
  5. இன்னும் அவரை ஒட்டுரீங்களா....
    நீங்க...உங்களுக்கு நீங்களே காரி துப்பிக்கிறீங்க....வேஸ்ட் ....

    ReplyDelete
    Replies
    1. முதலில் என்னையும் ஒரு பதிவராக மதித்து முதன்முதலாக கமென்ட் போட்டதற்கு மிக்க நன்றி அண்ணே...

      Delete
    2. இது எந்த தனிப்பட்ட நபரையும் ஓட்டுவதற்காக எழுதப்பட்ட பதிவு அல்ல...காபி பேஸ்ட் செய்யும் எல்லா பிரபல பதிவர்களுக்கும் எதிராக நானும் ஒரு பதிவர் என்ற முறையில் எழுப்பிய விமர்சனம். இதில் வாண்டேடாக யாரையும் வண்டியில் ஏற்ற வேண்டாமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

      Delete

    3. //உங்களுக்கு நீங்களே காரி துப்பிக்கிறீங்க....வேஸ்ட் ....//

      உங்களின் அறச்சீற்றம் சரிதான்..ஆனால் வலைப்பூவில் ஏகப்பட்ட மொக்கைகளும் குப்பைகளும் இருக்கு . இதுவரை எத்தனைப் பதிவில் இதுபோல கமெண்டை நீங்க போட்டுருக்கீங்க பாஸ்.... எத்தனை பதிவில் போயி நீங்க காரி துப்பியிருக்கீங்க.. எத்தனைப் பதிவர்கள் நேரிடையாக பெயரைக் குறிப்பிட்டு அநாகரிகமாக பதிவு போட்ருக்காங்க. இதில் அநாகரிகமான ஒரு வார்த்தையை சொல்லுங்க...

      Delete
  6. இனி இந்த மாதிரி பதிவுக்கு தகவல் சொல்லவும்...அட் போட்டு...

    ReplyDelete
    Replies
    1. சரிதான்,... எனக்கு இதுவரை தெரியாது.. இனிமேல் தகவல் அனுப்புறோம் அண்ணே... உங்கள் தரப்பு ஆட்சோபங்களை நாகரிகமான முறையில் வைத்ததற்கு மீண்டும் நன்றி.

      Delete
    2. நாய் நக்ஸ் அண்ணாச்சி நீங்க சீரியஸா போட்டீங்கலா அல்லது ஜாலியாக போட்டீங்கலானு தெரியில... ஆனால் நான் ஜாலியாகத்தான் போட்டேன்... ச்சியர்ஸ்... :-))

      Delete
  7. //சீனு :விடுங்கண்ணே...விடுங்கண்ணே... நம்பர் ஒன் போகணும்னா கால் சட்டையை கழட்டுறதும்.....நம்பர் ஒன் பதிவர்னா காபி பேஸ்ட் பன்றதும் சகஜம்தானே...//

    ஹா ஹா.... சீனு இப்படிப் பேசக்கூடிய ஆள் தான்.... யாருப்பா அங்க கல்லெடுக்கிறது?

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா.. சீனுவாச்சி நீங்களாச்சி.....நன்றி..

      Delete
  8. எங்க அண்ணனை நாறடைத்தமைக்கு நன்றி சொல்லி கிளம்பமாட்டேன்.

    அவன் கில்மா படம் ஓடும் டிக்கெட் கவுண்டரைப் பார்த்தே நூறு பதிவு போடுவானே அவ்வ்வ்வ்.....

    ReplyDelete
    Replies

    1. நண்பா யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதற்காக எழுதல... நீங்க யாரைக் குறிப்பிடுறீங்களோ அவர் மட்டுமே இங்கே காபி பேஸ்ட் கிடையாது. மொத்தமாக வைக்கப்பட்ட விமர்சனம். நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. அதை ஓரளவு நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். அதுவரையில் நன்றி..

      Delete
  9. பப்பி பேஸ்ட் ச்சே ச்சீ காப்பி பேஸ்ட் போடுறதுக்கும் ஒரு கட்ஸ் வேணுமய்யா....!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா...ஹா..ஹா.. காபி பேஸ்ட் செய்யிறதுல என்ன நண்பா கட்ஸ் இருக்கு..?

      ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இது தவறான அணுகுமுறை. பதிவுலகில் லட்ச லட்சமாக ஹிட்ஸ் வைத்திருப்பவர்கள், 500 பாலோயர்சுக்கு மேல் வைத்திருப்பவர்கள் இன்னமும் ஏன் காபி பேஸ்ட் செய்யவேண்டும்...? இது புதிதாக பதிவெழுத வருபவர்களுக்கு தவறான வழிகாட்டுதல் அல்லவா..?

      நிச்சயம் ஹிட்ஸ்யை வைத்துகொண்டு ஒரு சிங்கிள் டீ கூட சாப்பிட முடியாது. ஆனால் எந்த பதிவு போட்டாலும் ஹிட் ஆகும் என்ற நிலையில் இருப்பவர்கள் காபி பேஸ்ட் செய்துதான் பதிவு போடவேண்டுமா..? பிளாக்கருக்கு பிறகு வந்த பேஸ்புக் எங்கேயோ போயிடுச்சி... அங்கே தவறென்றால் தைரியமாக சுட்டிக் காட்டுகிறார்கள். கடுமையான எதிர்வினையும் இருக்கிறது. எனக்கென்னவோ பிளாக்கரில் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவது போல்தான் இருக்கிறது :-)..

      Delete