Sunday, 11 August 2013

'ஆணை'யை முட்டிய 'யானை'...( சும்மா அடிச்சு விடுவோம்...2 )


ஒருவேளை இதுதான் அதோட கோபத்துக்கு காரணமா இருக்குமோ..?
செய்த வினையும், செய்கின்ற தீவினையும் ஓர் எதிரொலியைக் காட்டாமல் மறையமாட்டாது என யாரோ எங்கேயோ சொன்னது ஞாபகத்துக்கு வந்தாலும் இந்த செய்திக்கும் அதுக்கும் சம்மந்தமில்லைனு சொன்னா நீங்க நம்பவா போறீங்க...

சரி... மேட்டருக்கு வாறேன்... போன வாரம் நம்ம முதல்வரை யானைக்குட்டி ஒன்னு முட்டிடிச்சாமே.. அது முட்டினிச்சா, முட்ட வந்ததா இல்ல மோந்து பாத்ததா அதெல்லாம் தெரியாது.ஆனா அம்மாவுக்கு எதுவும் ஆகாது. அது மட்டும் உறுதியா தெரியும். எப்படினு கேட்கிறீங்களா.?  கோழி மிதிச்சி குஞ்சு முடமாகுமா..?  (பழமொழி சொன்னா அனுபவிக்கனும்..ஆராய்ச்சி எல்லாம்  பண்ணக்கூடாது.)

இதைப்பற்றி பத்திரிக்கையில என்ன செய்தி போட்டிருக்காங்கனு தீவிரமா தேடியபோது ஒரு விஷயம் புலப்பட்டது. எல்லா பத்திரிக்கையிலும் முதல்வரை முட்டிய யானைக்குட்டி.., யானைக்குட்டி முட்ட வந்ததால் நிலை தடுமாறிப்போன முதல்வர்.. இதுமாதிரிதான் தலைப்பு வச்சு செய்தி வெளியிட்டிருந்தாங்க...ஆனா வழக்கமா சொம்படிக்கிற தினமலர்காரன் இந்த தடவை பெரிய அண்டாவா அடிக்கலாம்னு 'துள்ளிக் குதித்த யானைக்குட்டி " அப்படின்னு தலைப்பு போட்டிருந்தான். அதாவது முட்டியதுனு சொன்னா அம்மா மனசு ரொம்ப கஷ்டப்படும் இல்லையா...? அதானால கொஞ்சம் பக்குவமா சொம்படிக்க பார்த்திருக்கான்.

ஆனா வித்தியாசமா சிந்திக்கிறேனு கடைசில சொந்த செலவிலே சூனியன் வச்சிகிட்டான். அது எப்படினா... அந்த வீடியோவை பார்த்தப் பின்பு ஒரு உண்மை தெரிஞ்சது.முட்டியது யானைக்குட்டிதான்.ஆனா துள்ளிக் குதித்தது அம்மா... ! இப்ப திரும்பவும் தலைப்பை படிச்சிப் பாருங்க...(தக்காளி இப்படித்தான் கோத்து விடனும்)

சரி எதுக்காக அந்த யானைக்குட்டி ஜெயாவ முட்டனும்...? எப்படி உக்காந்து யோசிச்சாலும் இதைத்தவிர வேற ஒன்னும் தோன மாட்டேங்குது.அந்த யானைக்குட்டி பேரு காவேரியாம்.இங்கதான் மேட்டரே இருக்கு.அங்க ஜெயாவுக்கு கோசம் போடுற ஏதோ ஒரு அல்லக்கை 'காவிரித்தாயே வாழ்க'னு கோசம் போட்டிக்கான். 'என்னை இவள நாளு தவிக்கவிட்டுப்போன என்னப்பெத்த தாயி நீதான' னு பாசத்துல ஓடி வந்து முட்டியிருக்கும்...

இல்லனா,காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்தவுடன் நூறு வரி அறிக்கையில என் ஆணைப்படி..என் ஆணைப்படி -னு நூத்தியெட்டு தடவை சொல்லிட்டு பொன்னியின் செல்வி பட்டமெல்லாம் வாங்கினாயே.... அதுக்கப்புறம் அந்த காவிரிய கண்டுக்கினியானு கோபத்தில அந்த ஆண்டவனே காவிரி ரூபத்தில வந்து முட்டியிருப்பான்...

சரி...அத விடுங்க... முட்டிய செய்தி அறிந்தவுடன் என்னோட கவலையெல்லாம் இந்த ஐந்தறிவு யானைக்குட்டிக்கு என்ன ஆகப் போகிறங்கிறதுதான். பயந்தபடியே அடுத்த ரெண்டுநாள்ல அந்த யானைக்குட்டி 'ஒரு குருடு' என்கிற அதிர்ச்சி உண்மையை(!?) கண்டுபுடிச்சிருகானுவ... என்னோட அடுத்த கவலை... எப்படி இரட்டையிலையை 'உயர்த்தப் பட்ட குதிரையின் சிறகு'னு சொல்லி உலகத்தை நம்ப வச்சானுவளே... அதே மாதிரி இந்த யானைக்குட்டியை 'மூக்கு நீண்ட பன்னிக்குட்டி' -னு சொல்லி ஏதாவது சாக்கடையில தள்ளி விட்டாலும் விடுவானுவ...(ஒரு ஆங்கிள்ல அப்படித்தாம்ல இருக்கு..) அந்த குருவாயுரப்பாதான் காப்பாத்தணும்.

 டிக் டிக் டிக் இறுதி நிமிடங்கள்...

ந்த வாரம் எதேச்சையாக சன் டிவியில டிக் டிக் டிக் படம் பார்க்க நேர்ந்தது. படம் வெளிவந்தபோது எந்த அளவுக்கு வரவேற்பு பெற்றது என தெரியவில்லை. ஆனால் இப்போது பார்த்தாலும் அதே த்ரில்லிங். படத்தில் நிறைய கதாநாயகிகள் வருவார்கள்.அதில் திடீரென ஒரு முகம் வெகு பரிச்சயமான முகமாக இருந்தது. சமீபத்தில் எங்கேயோ பார்த்து மனதில் ஆழப்பதிந்த முகம்... அட..நிஷா...!  ஆம்..சமீபத்தில் எயிட்ஸ் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு எழும்பும் தோலுமாக இருந்த படம் இணையத்தில் கூட பரவலாக வந்ததே அவரேதான். என்ன ஒரு களையான,சாந்தமான துருதுரு முகம். இவருக்கு போய் இப்படி ஒரு கொடுமையான முடிவு அமைந்துவிட்டதே.


ஆனால் இவர் மீது கோபமெல்லாம் வரவில்லை.எந்த நடிகை இங்கே உத்தமியாக,பத்தினியாக இருக்கிறார்கள்? வாய்ப்புக்காக முந்திவிரிக்காத நடிகை இந்த லோகத்தில் உண்டா..?  வாய்ப்பு இழந்த பின்பு வருமானத்திற்கு வழியில்லாமல் இது போன்ற படுகுழியில் விழுந்த நடிகைகள்தான் எவ்வளவு..!. ஆனால்,  இவர் கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்துவிட்டார். தாயின் தவறான நடத்தை இவரையும் அந்த வழியில் பயணிக்க வைத்திருக்கிறது. இவரின் பூர்வீகம் எங்க ஊருக்கு அருகில் உள்ள நாகூராம்... இவருக்காக பரிதாபப்படுவதைத் தவிர வேற என்ன செய்ய முடியும்..?


11 comments:

 1. tears from my eyes for nisha

  ReplyDelete
 2. ஆணையை முட்டிய யானை. நல்லாத்தான் கலாய்க்கிறீங்க.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கும்மாச்சி...

   Delete
 3. ஆனால் இவர் மீது கோபமெல்லாம் வரவில்லை.எந்த நடிகை இங்கே உத்தமியாக,பத்தினியாக இருக்கிறார்கள்? வாய்ப்புக்காக முந்திவிரிக்காத நடிகை இந்த லோகத்தில் உண்டா..? /////////

  இப்பவுமா அப்படி

  ReplyDelete
  Replies
  1. நன்றி சக்கர கட்டி...

   //இப்பவுமா அப்படி//

   என்னங்க இப்படி கேட்டுடீங்க... முன்பைவிட தற்போதுதான் போட்டிகள் அதிகம்... எங்கிருந்தெல்லாமோ நடிகைகளை இறக்குமதி செய்கிறார்கள். ஒருமுறை நடிகை லட்சுமி குமுதம் பேட்டியில் ஒரு ஓபன் சேலஞ் விடுத்தார். நடிகைகளில் யாராவது பத்தினி என நிருபிக்க முடியுமா என்று... நடிகைகள் சைடிலிருந்து பெரிய எதிர்ப்பு எதையும் காணோம்...

   இது நடிகைகளின் கற்பைப் பற்றிய பதிவு கிடையாது நண்பா... அவர்களின் கற்பைப் பற்றிய சந்தேகத்தை எழுப்ப நமெக்கென்ன உரிமை...? :-)) நடிப்பு அவர்களின் தொழில். அதில் உச்ச நிலையை அடைய அவர்களுக்குள் நடக்கும் 'அப்படி இப்படி மேட்டர் ' நமக்கெதுக்கு.. :-)) ஆனால் இவர் கொஞ்சம் கேர்லஸ்சாக இருந்துவிட்டார்.

   Delete
 4. தலைப்பில் எழுத்துப்பிழை இருக்கே பாஸ்!!!

  ReplyDelete
  Replies

  1. வாங்க சென்கோவி...எம் தளத்திற்கு முதன்முறையாக வருகை தந்ததற்கு நன்றி..

   //'ஆணை'யை முட்டிய 'யானை'// அனேகமாக இதைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன்...

   ஆணை என குறிப்பிட்டது 'என் ஆணைப்படி...என் ஆணைப்படி...' என அடிக்கடி அறிக்கைவிடும் அம்மாவை...

   அதனால்தான் ஆணையை முட்டிய யானை . வேறு எதுவும் தெரியவில்லையே நண்பா..வேறு இருந்தால் தயவு செய்து குறிப்பிடவும்,

   Delete
  2. ////'ஆணை'யை //

   எதுக்கு? சொல்லிட்டு நான் உள்ளே போகவா? ஐய்..அஸ்க்கு..புஸ்க்கு!

   Delete
 5. Very funny (Aaanaiya muttiya Yaanai).

  ReplyDelete
 6. முதலில் சிரிக்க வைத்து கடைசில அழ வச்சுட்டீங்க

  ReplyDelete
 7. //அதே மாதிரி இந்த யானைக்குட்டியை 'மூக்கு நீண்ட பன்னிக்குட்டி' -னு சொல்லி ஏதாவது சாக்கடையில தள்ளி விட்டாலும் விடுவானுவ...(ஒரு ஆங்கிள்ல அப்படித்தாம்ல இருக்கு..) அந்த குருவாயுரப்பாதான் காப்பாத்தணும்.// இதை படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்..... ஹா ஹா ஹா முதுகு நீண்ட பன்றிக் குட்டி...

  முதல் செய்தி எவ்வளவு மகிழ்ச்சி அளித்ததோ அதனை அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது நிஷா பற்றிய செய்தி... ச்ச பாவம்...

  ReplyDelete