Monday 26 August 2013

விஜய் TIME TO REALIZE ...!


ணக்குங்ண்ணா....

 திரும்பவும் நம்ம அணில் மேட்டர்தான்.

"எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. ரசிகர்கள் தயவு செய்து பேனர்களில் அரசியல் வசனங்களை எழுத வேண்டாம்.என் வேண்டுகோளையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் ரசிகர் மன்றத்தை கலைப்பேன். ரசிகர் மன்றம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இனி நானே நேரடியாக ஈடுபடுவேன்.என் தந்தையோ வேறு யாரோ ரசிகர் மன்ற விஷயங்களில் தலையிட மாட்டார்கள்."

இப்படி ஒரு புரட்சிகர சிந்தனைகளோடு நம்ம இளைய தளபதி விஜயிடமிருந்து அறிக்கை வந்ததாக அறிந்தேன். விஜய் முதன்முதலாக தன் சொந்த வாயிலிருந்து(!) ,சுயமாக(!) ஒரு அறிக்கை விட்டிருக்கிறார் என்பதே பெரிய விஷயம் தானே. அதிலும் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்பது வியப்பிலும் வியப்பல்லவா....

ஆனா பிறகுதான் தெரிந்தது... அது யாரோ கிளப்பிவிட்ட புரளியாம்... அதான... தங்கம் வச்சி தேய்ச்சாலும்​​​​ எதோ ஒன்னோட நிறம் வெளுக்குமா என்ன ..?

ஆனால் ஒன்னுங்க.... 'உண்மை கண்டறியும் சோதனை ' னு ஒன்னு இருக்காமே. அதை வச்சி விஜய் மனசில் என்ன இருக்குனு சோதித்தால் நிச்சயமாக இதையேத்தான் சொல்வார்.ஏனென்றால், இந்த விசயத்தில் விஜய் ரஜினி மாதிரி. அரசியலில் ஈடுபட துளிகூட ஆர்வமில்லாதவர்.

ஒருகாலத்தில் அரசியல் அசிங்கத்தில் பின்னிருந்து தள்ளிவிட சில சக்தியில் முயன்றபோது எந்த தடுமாற்றமும் இல்லாமல் ஸ்டெடியாக இருந்தவர் ரஜினி. அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என குழம்பிப் போனது என்னவோ நாம்தான். அதில் ரஜினி தெளிவாகத்தான் இருந்தார்...இப்பவும் இருக்கிறார்.

ஆனால் விஜயின் நிலைமை வேறு. வந்தோமா... நடித்தோமா.. ரிலாக்சா  இருந்தோமா என்கிற மனநிலை அவருக்கு. அதேவேளையில் தன்னை இந்தளவு உச்சத்திற்கு கொண்டுசென்ற அப்பாவின் வார்த்தையைத்  தட்ட முடியாத திரிசங்கு நிலையில் தற்போது தவிக்கிறார்.

எஸ்.ஏ.சி ஏற்கனவே அரசியல் தொடர்பில் இருந்தவர்.ஒருகாலத்தில் கலைஞரின் அதிதீவிர விசுவாசி. தீவிர அரசியலில் நுழைய ஏதாவது ஓட்டை கிடைக்குமா எனத் தேடிக்கொண்டிருந்தவர். அதைத் தற்போது தன் மகன் மூலம் சாதிக்க நினைக்கிறார். தன் மகனுக்கு இளைஞர்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை அரசியல் பக்கம் திருப்பி அடுத்த எம்ஜியாராக்கிவிடலாம் என பகல்கனவு காண்கிறார். தமிழகத்தில் தன் வாய்ஸ் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய சூப்பர் ஸ்டாரே கால் வைக்க தயங்கும் அரசியல் களத்தில்,தைரியமாக ஒரு அறிக்கை விடக்கூட வக்கில்லாத விஜயை வைத்து எப்படி இப்படியொரு மனக்கோட்டையைக் கட்டுகிறார் எனத் தெரியவில்லை.


இன்று ரஜினிக்கு அடுத்து தமிழ்த் திரையுலகில் வசூல் சக்ரவர்த்தியாக விளங்கும் விஜய்க்கு அவரின் தந்தை அமைக்கத் துடிக்கும் அரசியல்பாதை சரியானதுதானா...?  விஜயை இவ்வளவு பெரிய நடிகராக மாற்றிய அவர் அப்பாவுக்கு எல்லாம் தெரியும் என்கிற குருட்டு வாதம் இங்கே சரிவராது. முதலில் விஜயை ஒரு மாஸ் ஹீரோவாக மாற்றியது எஸ்.ஏ.சி கிடையாது. இன்னும் சொல்லப்போனால் உச்சத்தில் இருக்கும் விஜயை அவ்வப்போது காலைப்பிடித்து கீழே இழுத்து விடுவது எஸ்.ஏ.சி தான்.

சிம்புவுக்கு டி.ஆர் போல,அருணுக்கு விஜயகுமார் போல,சூர்யா-கார்த்திக்கு சிவகுமார் போல,விஜய்க்கு எஸ்.ஏ.சி அவ்வளவே. ஆனால் விஜயின் அதிர்ஷ்டம் விக்கிரமன், பாசில் போன்ற இயக்குனர்களின் ஆசி கிடைத்தது. விஜயைப்போல் எல்லா திறமைகள் இருந்தும் அருண்விஜயகுமார் ஜொலிக்காமல் போனது எப்படியென்று யோசித்தால் தெளிவாக ஒரு விஷயம் புரியும்...."விஜய்க்கு வாய்த்த இயக்குனர்கள் திறமைசாலிகள்..."

ஒருவேளை எஸ்.ஏ.சி விஜயை வைத்து எடுத்த அற்புத காவியங்களான ரசிகன்,தேவா,விஸ்ணு, மாண்புமிகு மாணவன்..என இந்த வரிசையில் விஜயின் பாதை அமைந்திருந்தால்,இந்நேரம் விஜய் டிவியின் ஜோடி NO-1 ல் ஆடக் கூட இடம் கிடைத்திருக்காது. ரசிகன் படம் வந்தபோது குமுதம் தன் விமர்சனத்தில்,இவர் தந்தை ஒரு இயக்குனர் என்பதால் இந்த மூஞ்சியை எல்லாம் பார்க்க வேண்டியிருக்கு என்கிற ரீதியில் எழுதியிருந்தது. பிறகு விஜய் வளர்ந்து அதே குமுதத்தில் தன் வாழ்க்கைத் தொடரை எழுதினார் என்பது வேறு விஷயம்.

சரி.. விஜய் அரசியலுக்கு வந்து ஜொலிப்பது இருக்கட்டும். அஜித்துக்கு 'தலை' போல விஜய்க்கு 'தலைவா' நிலைக்க எஸ்.ஏ.சி பட்ட பாடு இருக்கே...

'தலைவா' வுக்கும் விஜய்க்கும் கொஞ்சம் கூட ராசி கிடையாது.  விஜய்க்கு தலைவா என்கிற பட்டத்திற்காக  இப்போது முயற்சிக்க வில்லை. ஏற்கனவே முயன்று அடிவாங்கியவர்தான் எஸ்.ஏ.சி. உண்மையச்சொன்னால் தற்போது வந்திருப்பது தலைவா பார்ட்-2.  இதன் முதல் பாகம் ஏற்கனவே வெளிவந்து அட்டர் பிளாப் ஆனது. அது 2006-ல் வெளிவந்த ஆதி.

கிட்டத்தட்ட தலைவா பிரச்சனைகளை அதுவும் சந்தித்து.ஒரே வித்தியாசம், தலைவா படம் வெளிவருவதற்கு முன்பு . ஆதியில் வெளியான பின்பு. கில்லி, திருப்பாச்சி, சிவகாசி என உச்சத்தில் சென்றவரை ஒரேயடியாக வீழச்செய்ததுமில்லாமல் அதுவரை விநியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளையாக இருந்த விஜய்க்கு எதிராக அவர்களை வெகுண்டெழச்செய்தது.இழப்பை சரிசெய்யாவிட்டால் இனி விஜய் படங்களை வெளியிடப்போவ -தில்லை என ஒட்டுமொத்தமாக போர்க்கொடி உயர்த்த, நொந்தே போனார் எஸ்.ஏ.சி. ஏனென்றால் அதுதான் விஜய்யை வைத்து அவர் தயாரித்த முதல் படம். முதல் படமே கோணலாகப் போனதால் அதன்பிறகு அவர் தயாரிப்பில் இறங்கவே இல்லை.

ஆதி என்கிற ஒரே படத்தில் விஜயின் இமேஜை எஸ்.ஏ.சி எப்படி உடைத்தார் என்பது ஒரு சுவாரஸ்யமான கதை.

ஆதி படத்தின் இயக்குனர், திருமலை படத்தை இயக்கிய ரமணா. திருமலை செம ஹிட்தான்.ஆனால் இவரின் அடுத்த படைப்பு அப்போதைய தனுஷ் மார்க்கெட்டை  தவிடு பொடியாக்கிய சுள்ளான். தனுஷ் கேரியரில் மகா மொக்கை.இந்தப்படத்தின் பிரிவியூ ஷோவுக்கு எஸ்.ஏ.சியும் விஜயும் சென்றிருக்கிறார்கள்.பிறகு நடந்ததை ரமணாவே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். படம் முடிந்து வெளிவந்தபோது எஸ்.ஏ.சிக்கு வார்த்தையே வராமல் ரமணாவின் கையைப் பிடித்து கண்கலங்கிப் போனாராம்." இப்படி ஒரு படம் உங்கிட்டேருந்து எதிர் பார்க்கல. இது தமிழ் சினிமாவின் மைல்கல். என் சொந்த பேனர்ல விஜய்யை வைத்து முதன்முதலா ஒரு படம் தயாரிக்கிறேன்.அதுக்கு நீதான் டைரக்டர்" என அங்கேயே அட்வான்ஸ் கொடுத்தாராம்.. என்ன ஒரு கலைரசனை மிக்கவர் எஸ்.ஏ.சி..!

 
தலைவா பார்ட் -1

ஆனால் அந்தப் படத்திலேயே விஜய்க்கு 'தலைவா' இமேஜ் கொடுக்க முயன்று வாங்கிக் கட்டிக்கொண்டவர்தான் எஸ்.ஏ.சி. ஆதியில் விஜயின் தங்கையாக வருபவர் படம் முழுக்க விஜயை 'அண்ணா' என்றுதான் அழைப்பார். ஒரு காட்சி மட்டும் வலிய திணிக்கப்பட்டிருக்கும்.

"என்ன தலைவா சாட்டிங்கா.." இது அவரின் தங்கை.

"இந்த தலைவா வாலுவால்லாம் கூப்பிடுறத விட்டுட்டு ஒழுங்கா அண்ணனு கூப்பிடு .." இது பெருந்தன்மையாக(!!!) விஜய்.

"ஊரே கூப்பிடும்போது நான் கூப்டக்கூடாதா  ..? " 

பார்ரா...நமக்கே தெரியாம அப்படியொரு ஊரு எந்த கன்ட்ரிலப்பா இருக்கு..? ஆனாஅதுக்கு நாம சரிபட்டு வரமாட்டோம்னு அப்பவே விஜய் சுதாரிச்சிருந்தா இப்போ இப்படி ஒரு கேவலம் நடந்திருக்குமா...?

ஒரு டிவி பேட்டியில தன் வீட்டில் உட்காந்திருந்த இடத்தைக் காட்டி 'இது எனக்கு ராசியான இடம். இதோ இங்க தான் துள்ளாத மனமும் துள்ளும் கதை கேட்டேன்,இங்கதான் பூவே உனக்காக ,காதலுக்கு மரியாதை,லவ் டுடே, குஷி,கதை கேட்டேன் ' என விஜய் அவரின் வெற்றிப்படங்களாக சொன்னார்.அப்படினா தலைவா,ஆதி,சுறா, வேட்டைக்காரன் கதை எல்லாம் எஸ்.ஏ.சி-யின் செலச்சனா..?

தக்காளி இனிமே யாராவது தல...தலைவா னு சொல்வீங்க...?  கவுண்டர் ராக்ஸ்...!

விஜயின் சினிமா கேரியரிலே இவ்வளவு குழப்பத்தை ஏற்படுத்தும் எஸ்.ஏ.சி, அவரை வைத்து அரசியல் களமாட துடிக்கிறார். அரசியல் எவ்வளவு சிரமம் என்பது விஜய்க்கு தெரியும். ரஜினிக்கு எப்படி கன்னடன் என்கிற நெகடிவ் இமேஜ் இருக்கிறதோ அதேப்போல விஜய்க்கும் இன்னொரு பிரச்சனை இருக்கிறது. கடந்த வருடம் விஜய் பிறந்த நாளுக்கு அவரின் முகத்தை சிவனோடும், முருகனோடும் கிராபிக்ஸ் பண்ணி ரசிகர்கள் பேனர் வைத்தபோது என்ன மாதிரி எதிர்ப்பு வந்தது என்பதை அவர் அறிவார். அரசியல்னு வந்தா எப்படிப்பட்ட எதிர்ப்பு வேண்டுமானாலும் கிளம்பும். அதை சமாளிக்கும் ஆற்றல் வேண்டும்.

படம் ஓடினால்தான் விஜய் மாஸ் ஹீரோ. இல்லையென்றால் ஜீரோ. அதை விஜய் நிச்சயம் உணர்ந்திருப்பார். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தாது என்பதை அவர் உணரவேண்டும். தற்போதைய சூழலில் விஜய்க்கு இது TIME TO LEAD அல்ல...TIME TO REALIZE ...!

12 comments:

 1. வணக்கம் மணி...,

  மிக அழகாக, ஆய்வு செய்து, சம்பவங்களை நினைவில் வைத்து, ஆணித்தரமா எழுதியிருக்கீங்க!! அழகிய நடை வேறு! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி பாஸ்.. உங்கள் ஊக்கத்திற்கு மீண்டும் நன்றி,,

   Delete
 2. விஜய் தந்தையின் பேச்சு கேட்டு நடக்க கூடாது என்பதே அனைவரினதும் விருப்பமும்..!!

  அது ஏன்? எதனால்? எனபதை மிக அழகாக விளக்கியுள்ளீர்கள் !!!

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக தமிழ் திரையுலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் அவர்தான். அதில் சந்தேகமில்லை... தேவையில்லாமல் அரசியலில் அசிங்கப்படவேண்டாம் என்பதே எல்லோருடைய விருப்பமும்.

   Delete
 3. ஆதி பட மேட்டர் இப்பதான் தெரியும் பாஸ்!

  ஆங்..... அப்படியா நடந்திச்சு??

  ReplyDelete
  Replies

  1. " ஆதி என்றால் முதல்...எஸ்.ஏ.சி யின் சூரியன் ஆர்ட்ஸ்-ன் முதல் படத்தை நான் பண்ணுவது பெருமை" அப்படியெல்லாம் பேட்டி கொடுத்தார் ரமணா... பட் ரிசல்ட்...???? ஹி..ஹி...

   Delete
 4. எஸ்.ஏ.சி விஜயை வைத்து எடுத்த அற்புத காவியங்களான....!!!!!

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா... பின்ன..? சுக்ரன்...நெஞ்சினிலே விட்டுடிச்சினு நெனைக்கிறேன்..

   Delete
 5. தற்போதைய சூழ்நிலை பழைய அரசியல் போல இல்லை. ஜனங்க ரொம்ப தெளிவு. நடிகன் என்றால் கூட்டம் கூடும் ஆனால் ஓட்டு போடமாட்டார்கள். வடிவேலைப் பார்த்தாச்சும் இவங்க திருந்தனும்.

  ReplyDelete
  Replies

  1. கரெக்டுதான் பாஸ்... கூட நாலு அல்லக்கைகள் சேர்த்து கோசம் போட்டால் அடுத்தநாளே சி.எம் ஆகிவிடலாம் என்கிற நெனப்பு இவுங்களுக்கு

   Delete
 6. சிங்கப்பூரில் இருந்துகொண்டு தமிழ்நாட்டில் நடக்கின்ற அனைத்தையும் கரைத்து குடித்துள்ளீர்களே. எங்கே இருந்தாலும் உங்களின் `கண்’ விஜய்’யின் மேல்தான் என்பது உர்ஜிதம். இப்படி நாற்காலி வரலாறு எல்லாம் அலசி ஆராய்கிறீர்கள்.. ! சூப்பர்

  ReplyDelete
  Replies

  1. நன்றி சகோ....

   //எங்கே இருந்தாலும் உங்களின் `கண்’ விஜய்’யின் மேல்தான் என்பது உர்ஜிதம். //

   ஹா..ஹா...உண்மைதான்.

   Delete