Tuesday, 8 October 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - இன்னும் மீளவில்லை.

            
டம் வெளிவந்த அன்றே பார்த்தாயிற்று. எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் பார்த்த படம். உண்மையில் அன்று ராஜா ராணி படம் பார்க்கலாம் என்கிற முடிவோடுதான் சென்றிருந்தேன். ' SOLD OUT ' என ஒட்டியிருந்தார்கள். ஒரு டிக்கெட்டாவது இருக்குமா என்று அந்தப் பெண்மணியிடம் கேட்டேன்.  ' படம் போட்டு பதினைத்து நிமிஷம் ஆச்சு சார்.வேணும்னா இன்னொரு படம் ஓடுது' என வேறு ஏதோ ஒரு பெயர் சொன்னார். கண்ணாடித் தடுப்பில் சரியாக கேட்கவில்லை. திரும்பிப் பார்த்தேன், மிஷ்கின் படம் போட்டு போஸ்டர் ஒட்டப் பட்டிருந்தது.

முகமூடி கொடுத்த அனுபவம் அவரின் அடுத்தப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அவ்வளவாக இல்லை.திரும்பிப் போக மனமில்லாமல், ' சரி.. ஓநாயும் நாய்க்குட்டியும் ஒன்னு குடுங்க' என பணத்தை நீட்ட,அவர் சற்று முறைத்து விட்டு டிக்கெட் கொடுத்தார்.திரும்பியபோது தான் கவனித்தேன்.அது 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்'. அடக்கொடுமையே இந்த லட்சனத்தில் விமர்சனம் எல்லாம் எழுதிட்டு இருக்கோமே.  சரி பரவாயில்ல.. இரண்டு குட்டிகளும் என் செல்லப்பிராணிதான் என சமாதானம் படுத்திக்கொண்டு அரங்கத்தினுள் நுழைந்தேன். அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலைகள் தெரிய, கூட்டினால் இரட்டை இலக்கத்தைக்கூட தொடவில்லை.

சிங்கையில் இது ஒன்றும் புதிய அனுபவமில்லை என்பதால் வெளியில் சென்று பாப்கார்ன்,கோக் வாங்கிக் கொண்டு ஆற ஆமர வந்து இருக்கையில் ஐக்கியமானேன். முன்னணி இசை கோர்ப்பு இளையராஜா என்கிற 'டைட்டில் கார்டு கவுரவம்' இசைஞானிக்கு கொடுக்கப்பட்ட போதே, படத்தில் ராஜாவின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறக்கும் என்கிற நம்பிக்கைக்கீற்று திடீர் உற்சாகத்தைக் கொடுத்தது.அதற்காக ஒவ்வொரு பிரேமிலும் இப்படி அடித்து விளாசுவார் என  எதிர்பார்க்கவில்லை. ராஜா சோலோவாக பின்னணியில் கோலோச்சும் இது போன்ற படங்களைப் பார்த்து எவ்வளவு நாளாகிவிட்டது.

துல்லியமான திரைக்கதை, அலட்டலில்லாத நடிப்பு, குழப்பமில்லாத காட்சியமைப்பு, கதைசொல்லும் புதிய யுக்தி, இவை எல்லாவற்றுக்கும் உயிர் கொடுக்கும் பின்னணி இசை... இப்படியொரு ஒருங்கிணைப்போடு ஒரு படைப்பு இருந்தால் எந்த  ரசிகனைத்தான் அறிதுயில் நிலையை அடையச்செய்யாது..? இரண்டரை மணிநேரத்தில் மொத்தமாக வசப்பட்டுப் போனேன். சமீப காலங்களில் எந்தப்படமும் இந்தளவு தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தவில்லை.

விமர்சனம் எழுதலாம் என உட்கார்ந்தால்,வார்த்தைகள் வசப்படவில்லை. ஒருவேளை  இந்தப் படைப்புக்கு விமர்சனம் எழுதும் அளவுக்கு நீ என்ன பெரிய அப்பாடக்கரா என என் மனசாட்சியே என்னைக் கேள்வி கேட்டு குடைந்தது கூட காரணமாக இருக்கலாம்.அந்தத் தாக்கத்திலிருந்து மீண்டுவரும் வேளையில், மொக்கைப் படங்களை வஞ்சகமில்லாமல் கழுவி ஊற்றும்போது சமகாலத்திய தமிழ் சினிமாவில் அரிதாக வரும் இதுபோன்ற நல்ல படைப்புகளைப் பாராட்டி இரண்டு வார்த்தைகளாவது எழுதவில்லை என்றால் என் விமர்சனப்பார்வை சமநிலை அடையாது என்கிற சமாதானத்தை மனசாட்சி ஓரளவு ஏற்றுக்கொண்டது.

இன்னும் அந்த கதை சொல்லும் காட்சி கண் முன்னே விஷுவலாக விரிந்துக்கொண்டே இருக்கிறது. அது வெறுமனே கதை சொல்லும் காட்சி என்கிற வரையறைக்குள் அடக்கிவிட முடியாது. உலக சினிமா அறிவு எனக்கு அவ்வளவாக கிடையாது. ஆனால் என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் தமிழ் சினிமாவில் இது வியக்கத்தக்க முயற்சி.

சமகாலத்திய தமிழ் சினிமாவில் பொதுவாகவே நாயகன், ஆரம்பத்தில் கொடூரமானவனாகவோ அல்லது சைக்கோ மாதிரியாகவோ அல்லது சிறைக் கைதியாகவோ அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவனாகவோ காண்பிக்கப்பட்டால் கண்டிப்பாக அவனுக்கு ஒரு 'கலர்ஃபுல்'  பிளாஸ்பேக் இருக்கும். இதிலும் அப்படித்தான் எதிர்பார்த்தேன். "அவர் யார் தெரியுமா..அவர் எப்படி வாழ்ந்தார் தெரியுமா..." " பூஞ்சோலைனு ஒரு கிராமம்.. வறுமைனா என்னானு தெரியாது.." " எனக்கு இன்னொரு பேரு இருக்கு.." இது மாதிரி வழக்கமான வசனத்தோடு எப்போ பிளாஸ்பேக் ஆரம்பிக்கப் போகுதோ என்றுதான் நினைத்திருந்தேன்.

அதிலும் தொடர்ந்து வுல்ஃப்-ஐ சிக்கலில் மாட்டிவிடும் ஸ்ரீயை எதுவுமே செய்யாமல் மன்னித்துவிடுவது, பிளாஸ்பேக்கை யாரிடமாவது சொல்லவேண்டும் என்கிற வழமையான தமிழ்சினிமா கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பத்தை மிஷ்கினும் பிரதிபலிக்கிறாரோ என்கிற என் சந்தேகம் கடைசியில் உடைபட்டுப் போனது. ஒவ்வொரு தடவையும் ஸ்ரீ மூலம் தொல்லைகள் வர, எப்படியும் இவரிடம்தான் பிளாஸ்பேக்கை அவிழ்க்கப்போகிறார்...அதை இப்பவே சொல்லித் தொலையவேண்டியதுதானே என்கிற நம் ஆதங்கம், அப்படி ஒரு அவசியமே இல்லை என்பதை அந்தக் கதைமூலம் உணர்ந்து அடங்கிவிடுகிறது

கிளைமாக்சுக்கு நெருக்கமாக வரும் அந்த 'ஓநாய்- ஆட்டுக்குட்டி' கதைக்கு முன், வுல்ஃப் ஆக வரும் மிஸ்கின் மொத்தமாக முப்பது வார்த்தைகள் கூட பேசியிருக்க மாட்டார். நம்மை அப்படியொரு எதிர்பார்ப்புக்குள்ளாக்கி அந்தக் 'குட்டிக்கதை'யில் நம்மை மொத்தமாக லயிக்க வைத்தது மிஸ்கினின் மாபெரும் வெற்றி.


"எட்வர்டு அண்ணா  நீங்களாவது  ஒரு கதை சொல்லுங்களேன் ...."


"ஒரு ஊர்ல ஒரு ஓநாய் இருந்துச்சாம். அந்த ஓநாய் ஒரு பெரிய கரடிகிட்ட வேலை செஞ்சிச்சாம். கரடிக்கு பிடிக்காத நரியை எல்லாம் ஓநாய் காட்ல போயி வேட்டையாடுமாம். அப்போ ஒரு நாள்...., ஒரு நரியை  வேட்டையாடும் போது  ஒரு ஆட்டுக்குட்டி குறுக்க வந்திச்சி. ஓநாய் தெரியாம அந்த ஆட்டுக்குட்டியை கொன்னுடிச்சி. அந்த ஆட்டுக்குட்டிய  கொன்னதால என்ன பண்றதுனு தெரியாம அந்த ஆட்டுக்குட்டி வீட்டுக்கு அந்த ஓநாய் போச்சாம். அந்த ஆட்டுக்குட்டி வீட்ல ஒரு அப்பா ஆடும், ஒரு அம்மா ஆடும், ஒரு குட்டி தங்கச்சி ஆடும் இருந்திச்சாம். அந்த மூணு பேருக்கும் கண்ணு தெரியாதாம். அவுங்கள பாத்து ரொம்ப கஷ்டப்பட்டு தன் பழைய வேலையெல்லாம் விட்டுட்டு அந்த குடும்பத்தோடயே அந்த ஓநாய் தங்கி அவுங்கள ரொம்ப பத்திரமா பாத்துகிச்சாம் .

வேட்டைக்கு வராத ஓநாயை தேடி ஒரு நாள் கரடி அந்த ஆட்டுக்குட்டி வீட்டுக்கு வந்திச்சாம். 'வேட்டைக்கு வா.. வேட்டைக்குவா...' னு கூப்பிட, நான் வரமாட்டேன்னு அந்த ஓநாய் சொல்ல, கோபமான அந்த கரடி அந்த அப்பா, அம்மா ஆட்டுக்குட்டிங்ககிட்ட உங்க ஆட்டுக்குட்டிய இந்த  ஓநாய்தான் கொன்னிச்சுனு சொன்னுச்சாம்.அதை கேட்டு அந்த ஓநாய், ஒரு மூலையில் உட்கார்ந்து ஒடஞ்சி அழுதுச்சாம். அப்போ அந்த அம்மா ஆடும், அப்பா ஆடும் அந்த ஓநாய் பக்கத்தில வந்து ' நீ அந்த ஆட்டுக்குட்டிய வேணும்னு கொன்னுருக்க மாட்டேடா கண்ணா. அழாதடா..'னு சொல்லி கட்டிப்புடுச்சி நீதான்டா அந்த ஆட்டுக்குட்டினு சொல்லிச்சாம்.

அந்த ஓநாய் மூணு போரையும் கூட்டிட்டு வேற இடத்துக்கு போச்சாம். போற இடத்துக்கெல்லாம் அந்த கரடி ஓநாயை தேடிவந்து 'வேட்டைக்கு வா... வேட்டைக்கு வா...' னு சொல்லிச்சாம். வராட்டினா, அந்த அம்மா,அந்த அப்பா,அந்த குட்டி ஆடுகளை கொன்னுடுவேன்னு பயமுடிச்சிதாம். என்ன பண்றதுன்னு தெரியாம அந்த ஓநாய் அந்த கரடியை கடிச்சிபோட்டுடுச்சாம். அப்பறம் அந்த மூணு பேரையும் கூட்டிட்டு அந்த ஓநாய் எங்கெங்கோ போச்சாம்..

காட்டை காவல் காக்கிற புலிகள் எல்லாம் அந்த ஓநாயை தேடித்தேடி அலைஞ்சிச்சாம். எப்படியோ ஓநாய் இருக்கிற இடத்தைத் தேடிக் கண்டுபுடிச்சி அத கொல்ல வர, திரும்பவும் ஓநாய் ஓட, அதுகூட ஓட முடியாம அந்த அப்பா ஆடும்,அம்மா ஆடும், குட்டி ஆடும் ஒரு பத்திரமான இடத்தில ஒளிச்சி வச்சிட்டு அந்த ஓநாய் ஓடிச்சாம். ஆனா ஒரு புலி அந்த ஓநாயை கடிச்சி போட, அந்த ஓநாய் தப்பிச்சி நொண்டி நடத்து போயி ஒரு  மூலையில கீழ விழுந்திடுச்சாம்...

அப்போ இன்னொரு குட்டி ஆடு வந்து அந்த ஓநாயை வீட்டுக்கு கூட்டிட்டு போயி காயத்துக்கு மருந்து போட்டுச்சாம். ஆனா மறுநாள் காலையில அந்த ஓநாய், அப்பா,அம்மா,குட்டியை
த் தேடி போச்சாம். அவங்கள கூட்டிட்டு ஓடறதுக்குள்ள, அந்தக் கரடி... அந்தக் காயம்பட்ட வெறிப்புடிச்ச கரடி அவுங்க எல்லோரையும் கொல்றதுக்கு தொரத்தி தொரத்தி வர, இன்னொரு பக்கம் புலிகளெல்லாம் தொரத்த, இப்போ ஒவ்வொரு இடமா ஓடிகிட்டு இருக்காம்.

எங்க ஓடுமோ....எப்படி ஓடுமோ....???? "


இந்த ஒரு காட்சிக்காகவே என் வாழ்நாளில் ஒரு முறையேனும் மிஷ்கினை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் கட்டிப்பிடித்து கதறவேண்டும் போல இருக்கிறது.



இந்தப்படத்தில் குறிப்பிட்டு சொல்ல நிறைய காட்சிகள் இருக்கிறது.ஏற்கனவே பாராட்டி நிறைய விமர்சனங்கள் வந்துள்ளதால் இந்த ஒரு காட்சியை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.

படத்தில் சில இடங்களில் தர்க்கப்பிழைகள் இருக்கலாம். இது போன்ற சிறந்த கலைப்படைப்புகளில் அதை மட்டும் விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்வது நாகரிகமற்றது.

இணையத்தில் சில இலக்கிய ஓநாய்கள் திரிந்துக்கொண்டிருக்கிறது. கூடவே சில ஊடக நரிகளும். இவர்கள் சாமானிய மக்களின் சராசரிப் பார்வையிலிருந்து விலகி நிற்பது போன்ற பிம்பத்தை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு படம் மொக்கை என்று உலகமே கழுவி ஊற்றும். ஆனால் அதுதான் தமிழின் ஆகச்சிறந்த படம் என்று குருட்டு வாதம் செய்து மற்றவர்களின் பார்வையை தன் பக்கம் திருப்புவார்கள். நல்ல படம் என்று நிறைய பேர் பாராட்டிவிட்டால் போதும், அதுதான் தமிழ் சினிமாவின் அவமானச்சின்னம் என்கிற ரீதியில் விமர்சனத்தை அடுக்குவார்கள்.

ஒரு விஷயம் கவனிக்கலாம். படம் வெளிவந்த உடனையே விமர்சனம் செய்ய மாட்டார்கள். படத்திற்கு பொதுவான விமர்சனம் எப்படி இருக்கு என்று சில நாட்கள் நோட்டம் விடுவார்கள். பிறகு, "இன்னிக்குதான் அந்த படம் பார்த்தேன்.இப்படி ஒரு குப்பையை எப்படித்தான் இவர்கள் கொண்டாடுகிறார்களோ தெரியில..." என்றவாறு விமர்சனத்தை ஆரம்பிப்பார்கள். அதுவும் சொந்தமா காசு கொடுத்து தியேட்டர்ல பார்க்காம திருட்டு விசிடியிலோ அல்லது இணையத்திலேயோ பார்த்துவிட்டு,'அந்த காட்சியில லைட்டிங் சரியில்ல, அவர் பேசுற வசனம் தெளிவாவே இல்ல... படம் ஒரே இருட்டா இருக்கு.. அப்படி இப்படினு அளந்து விடுவதைப் பார்க்கும் போது இந்த ஓநாய்களையும்  நரிகளையும் எந்த புலியாவது வந்து கடிச்சி வைக்கக் கூடாதா என தோன்றும்.



48 comments:

  1. full aa post padichen sir.. padam pathi nala solli irukkuringa... paarkka thundi irukku unga vimarsanam... paarkkanum..

    ReplyDelete
    Replies
    1. thanks for your comment mahesh...

      Delete
    2. best movie in tamil cinema history.
      from canada

      Delete
  2. ராஜா ராணி டிக்கெட் கிடைக்காதது நல்லது... மிக மிக ரசனையுடன் எழுதி உள்ளீர்கள்...

    ReplyDelete
  3. நல்ல விமர்சனம் . நானும் படம் பார்த்தேன். வித்தியாசமாக சொல்லப்பட்ட கதை அனைவரையும் ஈர்த்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி முரளிதரன்...

      Delete
  4. அருமையான எழுத்துகள். படம் என்னையும் ரொம்பவே பாதித்து விட்டது. அந்த கதை சொல்லும் காட்சி...தமிழ் சினிமாவின் மைல் கல்.
    யுஸ்ல படம் ரீலீஸ் இல்ல பாஸ். நான் இந்த படத்தை இணையத்தில் தான் பார்த்தேன். இப்பொழுது மிஷ்கினுக்கு படத்துக்கான டிக்கெட் காசை அனுப்ப வேண்டும் என்று எண்ணுகிறேன். அப்பொழுது தான் என் மனசு ஆறும். எத்தனையோ படத்தை இணையத்தில் தான் பார்கிறேன், ஆனால் இந்த படத்துக்கு மட்டும் குற்றஉணர்ச்சி மாதிரி ஏதோ வந்து மனசு போட்டு குடையுது.

    நான் படிச்சா விமர்சனங்களில் "ஜாக்கி" மட்டுமே குறை சொல்லி இருந்தார். அது கூட ஏதோ பர்சனல் காரணங்களுக்கு என்று படித்தேன். மத்த படி இந்த படத்தை குறை கூறுபவர்கள் நீங்கள் சொல்லுவது போல் பிப்ளிசிட்டி ஸ்டன்ட்க்கு தான் அப்படி சொல்வார்கள்.. :):)

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நன்றி ராஜ்..... என்னால் முடிந்தது தியேட்டரில் போய் இரண்டுதடவை பார்த்தேன்...இங்கே கொஞ்சம் லேட் பிக்கப்தான். சரியான விளம்பரம் இல்லை போல..

      படம் வெளிவந்து எல்லோரும் கொண்டாடி முடிந்த பிறகு முகநூளில் ஈசல் போல சில கூட்டங்கள் கிளம்பியிருக்கிறது. ஏற்கனவே கமர்சியலாக சரியாக போகாத நிலையில், நொந்து போயிருக்கிற மிஸ்கினுக்கு இவர்களின் விமர்சனம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும்படி உள்ளது... அவர் முகமூடி போல இன்னும் இரண்டு படங்கள் எடுக்க வைக்கவிடாமல் ஓயமாட்டார்கள் போல...

      Delete
  5. நானும் இந்த படம் பார்த்தேன் ஆனா விமர்சனம் பண்ணல சூப்பர் அந்த காட்சியில் கலங்கிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சக்கர கட்டி....

      Delete
  6. படத்தை மிகச்சரியாக உள் வாங்கி இருக்கிறீர்கள்.
    எனவே கொண்டாடி விட்டீர்கள்.
    அதே சமயத்தில் ‘பதிவுலக இலக்கியவாதிகளையும்’ தோலுரித்து...
    உப்பு, மிளகாய் தடவி பொறித்து விட்டீர்கள்.

    அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
  7. மிக அருமையாக வெளிபடுத்தி உள்ளீர்கள் .... நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாஸ்...

      Delete
  8. ஓநாய்களையும் நரிகளையும் எந்த புலியாவது வந்து கடிச்சி வைக்கக் கூடாதா என தோன்றும்.// சரியான கேள்வி..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாஸ்...

      Delete
  9. Well said , I saw the post from Pichaikaran blog and he has an attitude as you mentioned.
    There some who try to show off themselves like you said.

    Thanks for the review. I am from singapore as well.

    ReplyDelete
    Replies
    1. thanks for your comment Krishna Kumar....

      மிக்க நன்றி பாஸ்...

      முதல் எதிர் விமர்சனம் அவர்தான் போட்டார்... பாராட்டுவதற்கு எவ்வளவோ விசயங்கள் இருக்க அல்ப விசயங்களை குறிப்பிட்டு எழுதிய அவர் விமர்சனத்தை பல 'ஊடக பெரும்புள்ளிகள்' தங்கள் பக்கங்களில் பகிர்ந்து சந்தோசம் அடைத்தார்கள்...

      Delete
  10. மணிமாறன் உங்கள் பாராட்டுக்கள் அருமை. நான் எந்த காட்சியை ரசித்தோனோ அதே காட்சியை விரிவாக எழுதியிருக்கிறீர்கள். மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி. அவமானச்சின்னம் என்று எழுதிய சில ஊடக ஓநாய்களையும் மேற்கோள் காட்டி திட்டியிருக்கிறீர்கள். இதுதான் தமிழர்களின் சாபக்கேடாக இருந்து வருகிறது. எத்துனை கலைபடைப்புகள் வந்தாலும் குறைகள் சொல்லி சொல்லியே வாழ்ந்து வருகின்ற கூட்டத்தை என்னவென்று சொல்வது? விட்டு விடவேண்டியதுதான். உங்களைப்போன்ற நல்ல படைப்புகளை போற்றும் உள்ளங்கள் இருக்கும் வரையில் தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் வந்து கொண்டே இருக்கும். நன்றி!

    ReplyDelete
    Replies

    1. இவர்கள் இணைய ஊடகங்களில் தனித்து நிற்கவேண்டும் என்பதற்காக இப்படி எதிர்மறையான விமர்சனங்களை மேற்கொள்கிறார்கள்.

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே,,,

      Delete
    2. இவர்கள் இணைய ஊடகங்களில் தனித்து நிற்கவேண்டும் என்பதற்காக இப்படி எதிர்மறையான விமர்சனங்களை மேற்கொள்கிறார்கள்.

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே,,,

      Delete
  11. அண்ணேன்...அப்படியே பதிவர்களையும் ஒரு கடி கடிச்ச மாதிரி இருக்கு...நல்ல கலைப்படைப்பாளிகள் போற்றப்படாத நாடு...இங்கே டாஸ்மாக் மனிதர்கள் பற்றிய படம்தான் கல்லா கட்டுது...மிஷ்கின்...ராம்...போன்ற கலைப்படைப்பாளிகள் இன்றைய காலத்திற்கு ஏற்ப தங்களை கொஞ்சம் மாற்றிக்கொண்டால்தான் உயிர்வாழ முடியும்..இன்னும் நிறைய படைப்புகளை தர முடியும் ...இல்லையேல் வேதனை அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களை நேசிப்பவர்களுக்கும்தான்.......

    ReplyDelete
    Replies
    1. சரியான கருத்து பாஸ்... மிக்க நன்றி

      Delete
  12. ஜான் ஆப்பிராகம் கூறுவது போல் எல்லா படமும் இயக்குநர் படம்,நடிகனின் படம் அல்ல. இயக்குநர் என்பவர் எல்லா இடத்திலும் நிறைந்து கானபட வேண்டும்.
    மிஷ்கின் சரியாக செய்து விட்டார் முடிந்தவரைஅருமையான படம்.

    நன்றி...மிஷ்கின்


    இசையை தவிர
    (-காரணம் தமிழ் சினிமா) ....

    ReplyDelete
  13. "அதுதான் தமிழ் சினிமாவின் அவமானச்சின்னம் என்கிற ரீதியில் விமர்சனத்தை அடுக்குவார்கள்."

    அவமான சின்னம் என்று விமர்சனம் வரக்காரணம் அதை எழுதியவர் பிரபல சரோஜாதேவி கதை எழுத்தாளர் சாருநிவேதிதாவின் மானம் கெட்ட அல்லக்கை பிச்சைக்காரன்.
    தனது எஜமானனுக்கு விசுவாசத்தை காட்ட அப்படி எழுதியிருக்கு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே,,,

      சாரு கிட்ட ஒருவர் இந்தப்படத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர் என கேட்டுருக்கிறார்... அதற்கு அவர் அளித்த மேதாவித்தனமான பதிலை அவர் வலைத்தளைத்தில் படித்து நொந்து விட்டேன்.. அதாவது உலக எழுத்தாளரான அவர் தமிழ் சினிமாவிற்கெல்லாம் விமர்சனம் எழுத மாட்டாராம்... தமிழ் சினிமாவைப்பற்றி அவரிடம் எதுவும் கேட்கக் கூடாதாம்... அதற்கெல்லாம் முகநூளில் நிறைய பேர் இருக்கிறார்கள். அங்கே போய் கேளுங்கள் என சொல்கிறார்... சரி அப்படியானால் பரதேசி படத்தை பகுதி பகுதியாகப் போட்டு விமசனத்தில் கிழித்து எடுத்தது இதே சாரு தானே ....! அப்போது அவர் உலக எழுத்தாளர் இல்லையா..?

      Delete
  14. அண்ணா படம் பார்க்க முடியாத ஊர்ல இருக்கேன்..பதிவை படித்தால் ஆசை முட்டுகிறது....உங்களையெல்லாம் நினைத்தால் பொறாமையா இருக்கு.......மிக விரிவான விமர்சனம் இது....வாழ்த்துக்கள் அண்ணா

    ReplyDelete
    Replies
    1. நன்றி சதீஷ்.... கண்டிப்பாக ஒருமுறையாவது பாருங்கள்.

      Delete
  15. இனிய காலை வணக்கம்.
    தங்கள் தளத்தை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன். நேரம் இருப்பின் வருகை தரவும்.

    ReplyDelete
    Replies
    1. என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சகோ

      Delete
  16. http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_11.html

    ReplyDelete
  17. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_11.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு மிக்க நன்றி DD

      Delete
  18. இன்னும் படம் பார்க்கவில்லை. உங்கள் விமரிசனம் படத்தை பார்க்கத் தூண்டுகிறது. இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி மேடம்...

      Delete
  19. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா...

      Delete
  20. ரசித்து விமர்சனம் கொடுத்து இருக்கீங்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கலாகுமரன்....

      Delete
  21. விமர்சனம் ரசிக்கும்படி இருந்தது.. நன்றிகள் பல...

    ReplyDelete
  22. அருமையான விமர்சனம்.. இந்தப் பதிவை எப்படி தவறவிட்டேன் என்று தெரியவில்லை, பல நாட்களாக இனியம் பக்கம் வர முடியவில்லை...

    படம் எனக்குப் பிடித்திருந்தது என்பதையே சந்தோசமாக நினைகிறேன்... ஊடகம் பூடகமாக மாறி வருகிறது :-)

    ReplyDelete
  23. நல்ல விமர்சனம்.
    ஆனாலும் கடைசி இரு பத்திகளும் ரொம்ப பிடிச்சிப் போச்சு!

    ReplyDelete
  24. //படத்தில் சில இடங்களில் தர்க்கப்பிழைகள் இருக்கலாம். இது போன்ற சிறந்த கலைப்படைப்புகளில் அதை மட்டும் விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்வது நாகரிகமற்றது. //

    மிகச் சரியாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  25. படம் அருமை. கொண்டு சென்ற விதம் பிரமாதம். ஆனால் ப்ளாஷ் பெக் எதோ ஒரு மர்ம முடிச்சுகள் அவிழுலாம் என்று காத்திருந்த எனக்கு அது ஏமாற்றமாகவே இருந்தது. ஒரு குடும்பத்தைக் காப்பாற்றவா இவ்வளவு அக்கப்போர்கள் என்று நினைத்த போது படம் மனதில் நிற்கவில்லை. இருப்பினும் மிஸ்கின் படம் என்றால் எனக்கு அதிகம் பிடிக்கும். அனைவரும் படுமோசமாக விமர்சனம் செய்திருந்த முகமூடி’யை நான் மட்டும் பலமுறை பார்த்து ரசித்தேன். ஜீவா நடித்த படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தத் திரைப்படம் அது. விமர்சனம் அருமை சகோ. வாழ்த்துகள்

    ReplyDelete