Monday 14 October 2013

ராவண லீலை - உனக்கெல்லாம் என்னய்யா வேண்டும்...?

அரசியல் நிலைப்பாடு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்... உங்களுக்கு பிடிக்காத தலைவரை எனக்குப் பிடிக்கும். எனக்கு பிடித்த தலைவர் உங்களுக்கு பிடிக்காமல் போகும்... இது அவரவர்களுடைய  உரிமை. அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது. தலையிடவும் முடியாது. அதே மாதிரி உங்களுக்கு பிடிக்காத அரசியல் தலைவர்களை விமர்சிக்க உங்களுக்கு தகுதியுண்டு. அவரை எப்படி விமர்சிக்கலாம் என்று கேள்வி கேட்க எவனுக்கும் இங்கே உரிமை கிடையாது... அவரை விமர்சித்து விட்டு இவரை ஏன் விமர்சிக்கவில்லை என்று சண்டை போடவும் எவனுக்கும் உரிமை கிடையாது.

எனக்கென்று ஒரு அரசியல் நிலைப்பாடு உண்டு. தலைவர் உண்டு. கட்சி உண்டு. அவர்களைப் போற்றுவதும், அவர் எதிர்ப்பாளர்களை விமர்சிக்கவும் எனக்கு உரிமையில்லையா...?   உங்கள் நிலைப்பாடு என்னவோ அதையே நானும் ஒத்துப்போகவேண்டும் என எப்படி நினைக்கலாம்....?

என் அரசியல் பதிவுகளில் நிறைய பேரை விமர்சித்திருக்கிறேன்.எங்கள் குடும்பம் தி.க, திமுக தொடர்புடையது. நன்னிலம் தொகுதியில் மூன்று முறை தொடர்ந்து எம் .எல்.ஏ வாக இருந்த மணிமாறன் எங்கள் உறவினர். அவர் நினைவாகத்தான் எனக்கு அந்தப் பெயர் வைத்தார்கள்.எனது தாய்வழி தாத்தா, பெரியாருடன் நெருங்கிய தொடர்புடையவர். திருவாருரிலிருந்து கங்களாஞ்சேரி வழியாக நாகூர் செல்லும் வழியில் உள்ள நிறைய பெரியார் சிலைகளில் எனது தாத்தா பெயர் இருக்கும்... அந்த வகையில் சிறுவயதிலேயே கலைஞரை தலைவராக ஏற்றுக்கொண்டவன். தவிர எங்கள் மண்ணின் மைந்தன்.ஆனால் அவரின் அரசியல் நிலைப்பாடு களில் நிறைய முரண்பாடு உண்டு. என் வலைப்பூவில் நிறைய பதிவுகளில் அவரை விமர்சித்திருக்கிறேன்.

நான் பதிவெழுத வந்த புதிதிலே அவரைக் கண்டித்து பதிவு போட்டிருக்கிறேன். இந்த வருடத்தில் முதல் பதிவிலேயே அவரை நக்கலடித்திருக்கிறேன். நான் கலைஞருக்கு சொம்பு அடிக்கிறேனாம். ஒரு அறிவுஜீவி சொல்லுது.திருக்குவளையில் அவர் வீட்டை விசிட் அடித்தபோது  ஒரு பதிவு போட்டேன் .  அதைத்தவிர அவருக்கு சொம்படித்த ஏதாவது  ஒரு பதிவு இருந்தால் காண்பிக்கட்டும்...என் பிளாக்கை மொத்தமாக மூடிவிட்டு சென்றுவிடுகிறேன்.

மாறாக அவரது அரசியல் நிலைபாடுகளை நிறைய விமர்சனம் செய்துதான் பதிவிட்டிருக்கிறேன்.

 http://www.manathiluruthivendumm.blogspot.com/2011/11/blog-post_22.html

 http://www.manathiluruthivendumm.blogspot.com/2012/11/blog-post_27.html

http://www.manathiluruthivendumm.blogspot.com/2013/01/blog-post.html


சரி என் நிலைப்பாட்டை தீர்மானிக்க நீ யார்...? நான் என்ன மாதிரி பதிவு போடணும்னு முடிவு பண்ண நீ யார்..? நான் யாருக்கு சொம்பு தூக்கினா, யாரைக் கழுவி ஊத்தினா உனக்கு என்னையா... நான் என்ன பேஸ்புக்ல 'டாக்' பன்ற மாதிரி உன் பேருக்கு கோர்த்து விடுறேனா என்ன... ? இல்ல.. தயவுசெய்து என் பதிவை படித்துப் பார்த்து விட்டு கமென்ட் போடவும்னு கெஞ்சவா செய்றேன்.... பிடிக்கிலனா போய்கிட்டே இருய்யா ...

எனக்கு ஊரு திருச்சியாம்..இதையும் அந்த ஆராய்ச்சியாளர் கண்டு பிடித்திருக்கிறார். காலேஜ் படிச்ச ஊருதான் எல்லோருக்கும் சொந்த ஊரா...? நான் என்ன ஊருனு என் பிளாக் புரஃபைல்லே இருக்கு... சொந்த ஊரை நான் எதுக்குயா மறைக்கணும்.

என் பையனை இந்தி தாய்மொழியாகக் கொண்டு படிக்க வைக்கிறேனாம். அவனுக்கு ஆறு வயதாம்.இதையும் அந்த ஆராய்ச்சி மணிதான் கண்டுபிடித்திருக்கு. அவன் பிறந்தது 2011-ல் . முதல் கணினி அனுபவம் பற்றி எழுதிய பதிவிலே குறிப்பிட்டிருந்தேன்(அந்தப் பதிவில்தான் இவரையும் ஒரு நண்பனாக மதித்து தொடர் பதிவு எழுதக் கூப்பிட்டேன் ). இப்பத்தான் ' பிரி நர்சரி'யே போகிறான். எங்கள் பகுதியில் உள்ள ஏதோ ஒரு பள்ளியைக் குறிப்பிட்டு அங்கு ஒன்றாம் வகுப்பு படிக்கிறான் என சொல்லியிருக்கு. 2011ல பிறந்த குழந்தைக்கு ஆறு வயதுனு எந்த கணக்கு வாத்தியாருய்யா உனக்கு சொல்லிக்கொடுத்தாரு  ..?

கல்லூரியில் நான்கு வருடங்கள் 'நார்த் இண்டியன்' மாணவர்களுடன் இணைந்து படித்தேன். ஆனால் ஒரு இந்தி வார்த்தைக் கூட கற்றுக்கொள்ள எனக்கு விருப்பமில்லை.ஒரு இந்தி படம் கூட பார்த்தது கிடையாது. எனக்கே விருப்பமில்லாத இந்தியை நான் ஏன் என் மகனுக்கு திணிக்கவேண்டும்...?

மீண்டும் சொல்கிறேன்... இது என் தளம். முழுவதும் என் கருத்து. எந்த கருத்தையும் சொல்வதற்கு எனக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. யாரை வேண்டுமானாலும் விமர்சிப்பேன். கருத்தியல் ரீதியாக, நாகரீகமாக, பதிவு சம்மந்தமாக அதற்கு எதிர்கேள்வி வைத்தால் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். எந்த வாதம் செய்யவும் ரெடி... அதைவிடுத்து அநாகரிகமாக பின்னூட்டம் இடுவது பதிவரான உனக்கு அழகா...?  அதற்கான பதிலை  நாகரிகமாக தனிப்பட்ட முறையில் தெரிவித்தும் எனக்காக இட்டுக்கட்டி ஒரு பதிவு போடுவது முறையா...?

சிங்கையில் நிறைய பதிவர்கள் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் இணையத்தில் தொடர்ந்து எழுதிக்கொண்டு வந்தவர்கள் தற்போது பதிவைக் குறைத்துக் கொண்டுள்ளனர். நான் எழுத வரும் முன்பே பதிவர் சந்திப்பு எல்லாம் நடத்தி முடித்துவிட்டார்கள். தற்போது யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. மாணவன் சிம்புவிடம் மட்டும் தொலைபேசியில் உரையாடியிருக்கிறேன். ஆனால் இந்த அறிவாளி எட்டு வருசமா பிளாக் எழுதறார். இவரின் நாகரீகம் இந்த லெவலில் உள்ளது.

மறுபடியும் சொல்றேன்... நாகரிகம், அநாகரிகம் என்கிற வரையறை எனக்கும் தெரியும்.  எந்த எல்லைவரையும் நானும் போவேன். போகத்தெரியும். பதிவுலகின் மூலம் நட்பை வளர்க்கவே விரும்புகிறேன். எந்த பதிவிற்கும்  இதுவரை நான் அநாகரிகமான கமென்ட் எதையும் போட்டதில்லை. அது பதிவுலகில் இருக்கும் நண்பர்களுக்கு நன்றாகவே தெரியும். உன்னை நான் நேரில் கூட பார்த்ததில்லை. அப்படியிருந்தும் நட்பாக்கிக் கொள்ளத்தான் விரும்பினேன். என் பதிவு சம்மந்தப்பட்ட விசயங்களை விட்டுவிட்டு என் குடும்பத்தைப் பற்றி இட்டுக்கட்டி பதிவில் போட்டு உன் நாகரிகத்தை வெளிப்படுத்திவிட்டாய் .

பதிவுலகில் நீண்ட நாட்களாக எழுதுபவர்கள் ஏதோ அறிவாளிகள் மாதிரியும், சமீபத்தில் எழுத வந்தவர்கள் தற்குறிகள் மாதிரியும் சில மரமண்டைகள் நினைத்துக் கொண்டிருக்கிறது. முகநூளில் போய் பாருங்கள். நிலைத்தகவல் பதிபவர்களை விட அதற்கு கமென்ட் செய்து வாதம் செய்பவர்கள் அவர்களைவிட அரசியல் நுண்ணறிவும் தமிழ்ப்புலமையும் உடையராக இருப்பார்கள். அவர்கள் சுவரில் சென்று பார்த்தால் ஒரு ஸ்டேடஸ் கூட போட்டிருக்க மாட்டார்கள். பதிவுலகிலும் அப்படித்தான். நீண்ட நாட்கள் எழுதுபவர்கள் பெரிய புத்திசாலியும் கிடையாது, சமீபத்தில் வந்தவர்கள் தற்குறியும் கிடையாது, பதிவே எழுதாதவர்கள் முட்டாள்களும் கிடையாது. அவர்களுக்கு எழுத நேரமில்லை. அல்லது  விருப்பமில்லை அவ்வளவுதான், அதற்காக அவர்கள் அரசியல் தெளிவற்றவர்கள் என்ற முடிவுக்கு வரக்கூடாது. நீண்ட நாட்களாக பதிவுலகில்  இருப்பதால் என் நிலைபாடுதான் சரியானது என்கிற அகங்காரம் கொண்டால், உங்களை விட முட்டாள் இந்த உலகத்தில் எவரும் கிடையாது.

எனக்கு வேலைப்பளு காரணமாக பதிவெழுத நேரம் கிடைப்பதில்லை. வாரத்திற்கு ஒரு பதிவு எழுதுவதே குதிரைக்கொம்பாக உள்ளது. போன வாரம் பார்த்த சினிமாவிற்கு இந்த வாரம்தான் விமர்சனம் எழுத முடிகிறது. இப்படியிருக்கையில் இந்த விளக்கம், வெங்காயம், ம^*&^%$று, மண்ணாங்கட்டினு பதிவெழுத வைத்து ஏன்யா உசிர எடுக்கிறீங்க...

மீண்டும் சொல்றேன்... இது நல்ல மூடுல இருக்கிறப்போ எழுதின பதிவு...என் பதிவு பிடிக்கலனா எல்லாத்தையும் இழுத்து மூடி பொத்திகிட்டு போ...எனக்கு நிறைய வேலை இருக்கு.

11 comments:

 1. ராவண லீலை என்பதை விட ராவண வதம் என்றே தலைப்பு இட்டுருக்கலாம் !

  ReplyDelete
  Replies

  1. மிகச்சரிதான் பாஸ்... நண்பராக நினைத்தவரே இப்படி அநாகரிகமாக நடந்து கொள்வது வேதனையை அளிக்கிறது.

   Delete
 2. எனது குடும்பமும் உங்களது குடும்பம் போன்ற திமுக கட்சி சார்ந்த குடும்பம்தான் நானும் உங்களை போலதான் நிறைய திமுக ,கலைஞர் போன்றவர்களை விமர்சித்து பதிவுகள் பல போட்டுஇருக்கிறேன். உங்களைப் போலவே என்னையும் இப்படி சில விமர்சித்தார்கள் நான் அவர்களை அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டேன் நீங்கள் அவர்களை மதித்து பதில் இட்டு இருக்கிறீர்கள் நண்பரே.

  நண்பரே உங்கள் மனதில் தோன்றுவதை எழுதுங்கள் மற்றவர்களைப்பற்றி கவலைபடாதீர்கள்

  ReplyDelete
 3. பதிவுகள் படிப்பவர்களுக்கும் பிரபலம் என்று தங்களை நினைத்து கொள்ளும் பழைய பதிவாளர்களுக்கும் நெத்தியில் அடிக்கும் படியான மிக சரியான விளக்கம்......

  பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி அவர்கள் உண்மைகள் .சரிதான் பாஸ்... அவர் எனக்கு போட்ட பின்னூடங்களை வெளியிடாமல், தனிப்பட்டமுறையில் அவரிடம் என் ஆதங்கத்தை தெரிவித்தேன்... மீண்டும் எனக்காக இட்டுக்கட்டி ஒரு பதிவைப் போட்டு சீண்டுகிறார்...

   Delete
 4. வாழ்த்துக்கள் பிரபல பதிவர் ஆனதுக்கு..

  அவர் பதிவ படிச்சேன்.. எப்பா கோவம் தலைக்கு ஏறிட்டு... # நான் சொல்லல சார் நல்லா காமெடி பண்ணுவாப்லன்னு

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா.. என்னையும் பிரபல பதிவராக ஆக்காமல் விட மாட்டாய்ங்க போல...

   Delete
 5. முதலிரண்டு பத்திகள் ஏதோ கமல் மேடையில பேசுற மாதிரி இருந்துச்சு...

  ReplyDelete
  Replies
  1. ஹா.ஹா. அது பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே புரியும்.

   Delete
 6. எதுக்கு தலைவரே இவ்ளே கோபம்..நம்ம தொழிலுக்கு பொருமைதான முக்கியம்..( ஏட்டு ஏகாம்பரம்)

  ReplyDelete