Wednesday, 16 October 2013

ஒரு போராளியை புறந்தள்ளிய தமிழகம்.


தோழர் தியாகு அவர்களின் உண்ணாவிரதம் வேண்டுமென்றே தமிழக அரசாலும் ஊடகங்களாலும் இருட்டடிப்பு செய்யப்படுகிறதோ என்கிற சந்தேகம் வருகிறது.  சமூக வலைத்தளங்களில் தொப்புளுக்கு கொடுத்த முக்கியத்துவம் கூட தோழரின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்திற்கு கொடுக்கவில்லை. ஒருவேளை தோழர் கடந்து வந்த போராட்ட பாதையை யாரும் சரிவர அறிந்திருக்கவில்லை போல.

தோழர் தியாகு ஒரு உண்மையான போராளி. காவிரி டெல்டா பகுதிகளில் 60-80 களில் இருந்து வந்த பண்ணை அடிமைமுறையை ஒழிக்க 'அழித்தொழிப்பு ' என்கிற கொள்கை வடிவத்தைக் கட்டமைத்து புரட்சியில் ஈடுபட்டவர். இவரைப்பற்றி அறிந்திராத திருவாரூர்-நாகை பகுதி விவசாய தொழிலாளிகள் யாருமே இருக்க முடியாது. அழித்தொழிப்பு என்பது பயிர்களை அழிப்பது அல்ல. பண்ணையார்களை அழிப்பது. அவர்களைத் தீர்த்துக் கட்டுவது. அது ஒன்றே நிரந்தரத் தீர்வு என்று அன்று ஆயுதத்தை கையிலேந்தியவர். திருவாரூர் பகுதிகளில் ' தோழர் தியாகு பேசுகிறார்' என்கிற சுவரொட்டிகளை பலமுறை பார்த்திருக்கிறேன்.ஆனால் அவர் பேச்சைக் கேட்கும் வாய்ப்பு ஒருமுறை கூட கிட்டவில்லை.அன்றையக் காலகட்டத்தில் திருவாருரை மையமாகக் கொண்டுதான் நிறையப் போராட்டங்கள் நடந்திருக்கிறது.

இந்த நிஜப் போராளியைப் பற்றி தெரியாதவர்கள் கீற்று தளத்தில் அவரின் நேர்காணல் வந்திருக்கிறது. படித்துப் பாருங்கள். இந்த உலகம் தற்போது கொண்டாடும் மற்ற எந்த போராளிக்கும் இவர் சளைத்தவரல்ல என்பதை உணரலாம். இவர் அதில் குறிப்பிடும் ஏ.எம்.கே. என்பது தோழர் ஏ.எம்.கோபு. சிலமாதங்கள் முன்புதான் அவர் காலமானார். என் மூத்த சகோதரரின் திருமணத்திற்கு வந்திருந்து வாழ்த்தினார். அவரும் எங்கள் பகுதி மக்களுக்காக தன் உயிரையே துச்சமெனக் கருதி போராடிய போராளி.

மார்க்சிய சித்தாந்தத்தில் ஊறித்திளைத்த இந்த பொதுவுடமைப் போராளி தற்போது இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தி “வெற்றி அல்லது வீரச்சாவு” எனும் முழக்கத்துடன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறார். இவரது அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு எற்றுக்கொள்ளவில்லை என்றாலும் காமல்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்கிற பிரதமரில் நம்பிக்கை வார்த்தை, இவரின் உண்ணாவிரதப் போராட்டத்தினை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

முதிர்ந்த வயதிலும் இவரது போராட்ட குணத்தைக் கண்டு தமிழகம் முழுவதும் ஏற்பட்ட மாபெரும் எழுச்சி(!?)யினால் இனி போராடி என்ன பயன் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் போல...

தலையில் வெள்ளை நிறக் குல்லாவுடன் காந்தியவாதி என்கிற அடையாளத்துடன் உண்ணாவிரதப்  போராட்டம் நடத்தினால் திரையுலகம்,ஊடகம், அரசியல்வாதிகள் என பலர் வந்து ஆதரவு தெரிவித்துவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு செல்வார்கள். பாவம் இவர்தான் அடித்தள மக்களுக்காக தன் வாழ்க்கையை மொத்தமாக அர்ப்பணித்தவராச்சே... யார் கண்டுகொள்வார்கள்..?
அடுத்து ஒரு சுயபுராணம்... :-)

இது நேற்றைய புதுச்சேரி பதிப்பு, தினத்தந்தியில் வந்த செய்தி.  இவர் எனது மூத்த சகோதரர்.  இப்படி சொல்வதற்கு நான் ஒன்றும் சாதிக்கவில்லை. நான் அவரது இளைய தம்பி. பத்து வருடத்திற்கு முன்பு பாண்டிச்சேரியில் சிறிய நிறுவனமாக தொடங்கியவர், தன் அயராத உழைப்பினாலும் சொந்த முயற்சியாலும் இன்று மிகப்பெரிய தொழிலதிபராக உயர்ந்து நிற்கிறார்.


இவர் கடந்து வந்த பாதை, சந்தித்த நெருக்கடிகள், எதிர்கொண்ட சவால்கள் என எந்த பில்டப்பும் கொடுக்க விரும்பவில்லை... சும்மா சந்தோசத்தை பகிர்ந்துகிட்டேன் அவ்வளவுதான். தொழில் ரீதியாக உதவியோ தகவலோ வேண்டுமென்றால் தொடர்புகொள்ளலாம்.

இவரின் வெப்சைட்.  http://www.metalandtech.com

அண்ணாச்சிக்கு கொஞ்சம் கலைத்துறையிலும் ஆர்வம் உண்டு... கடந்த வருடம் ஒரு குறும்படத்தை இயக்கி கலைஞர் டிவியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளார்..




9 comments:

  1. தோழர் தியாகுவின் உண்ணாவிரதம் மிகவும் வேடிக்கையாக முடித்து வைக்கப் பட்டிருக்கிறது .. இதற்கு அவர் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது .... இதனால் அவரின் மீதிருந்த மதிப்பு குறைகிறது ..

    ReplyDelete
    Replies
    1. நன்றி அரசன் சே.... அதுமட்டுமல்ல இது மக்கள் மத்தியில் எந்த எழுச்சியும் ஏற்படுத்தவில்லை. குறிப்பாக மாணவர்கள் மத்தியில். இவரும் எதோ ஒரு பெரிய கட்சியில் இணைந்து பதவி சுகம் அனுபவித்திருந்தால் குறைந்தது அவரது அல்லக்கைகளாவது ஆதரவு தெரிவித்திருப்பார்கள்.

      Delete
  2. உங்க மூத்த சகோதரருக்கு எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வேகநரி....

      Delete
  3. இளங்கோவன் அண்ணாச்சிக்கு எனது வாழ்த்துக்களும்..

    மனதில் உறுதி கொண்டு பதிவுலகில் வலம் வருகிறீர்கள், மனதில் உறுதி வேண்டும் என்ற தலைப்பில் சக பதிவர்களை பதிவெழுத ஊக்குவித்து உள்ளீர்கள் இதைவிட வேறு என்ன அளப்பரிய சாதனை வேண்டும் :-)))))))

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி சீனு.... ஹா..ஹா... எவ்வளவு பெரிய வார்த்தைகள்...!!

      Delete
  4. தோழர் தியாகு பற்றி உண்மையில் அறியவில்லை! தங்கள் பதிவின் மூலம் அறிந்துகொண்டேன்! நல்லவர்களை மீடியாக்கள் இருட்டடிப்பு செய்வது வேதனையானவிசயம்! தங்கள் சகோதரருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி சுரேஷ்..

      Delete