Saturday 31 March 2012

சிதறல்கள்-6

முத்தத் திருவிழா ...       
   
     நம்ம ஊர்ல கலாச்சார சீர்கேடு என்று சொல்லப்படும் பொது இடத்தில் முத்தமிடுதல்,இந்தோனேசியாவில் ஒரு கலாச்சார விழாவாகவே நடத்தப் படுகிறது.பல தீவுகளை உள்ளடக்கிய இந்தோனேசியாவில் பாலித்தீவு மிகப் பிரபலமான சுற்றுலாத்தலம்.இங்கு வருடந்தோறும்  ஓமெட்- ஓமெடன் (Omed-Omedan) என்ற முத்தமிடும் திருவிழா நடக்கிறதாம்.இது கடந்த வாரம் இந்தத் தீவில் வெகு விமரிசையாக நடந்து முடிந்ததாம்.


     இது 17ஆம் நூற்றாண்டிலிருந்து இங்கு நடக்கிறதாம்.ஓமெட் என்றால் பாலி மொழியில் இழு என்று பொருள்.ஓமெட்- ஓமெடன் என்றால் ஒருவரை ஒருவர் இழுத்துக்கொள்ளுதல் என்று அர்த்தம் வருமாம்(இதில் எங்கே கிஸ் வருகிறது?). ஆனால் இதற்கு ஒரு கதை சொல்கிறார்கள்.பல ஆண்டுகளுக்கு முன் இங்குள்ள ஒரு அரசன்  உடல்நிலை சுகமில்லாமல் படுத்த படுக்கையாய் கிடந்தாராம். அப்போது அவரது மாளிகைக்கு வெளியே சில இளைஞர்களும் பெண்களும் இதுபோல் முத்த விளையாட்டில் ஈடுபட்டுள்ளனராம்.ஒரு பக்கம் ஆண்களும் மறுபக்கம் பெண்களும் நின்று கொண்டு இரண்டு பக்கத்திலிருந்தும் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்கள் முத்தமிட்டுக் கொள்வதற்காக தள்ளிவிடுவார்களாம். இவர்கள் போட்ட சத்தத்தில் தூக்கத்தை இழந்த அரசர் படுக்கையை விட்டு எழுந்து வந்து இவர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டிவிட்டு பின் உள்ளே சென்ற அரசருக்கு ஒரே ஆச்சர்யம். அது வரை இவரைப் பிடித்திருந்த நோய் விலகி பூரண குணமாகிவிட்டாராம். உடனே அவர் மூளையில் உதித்தது அந்த யோசனை.இனி ஒவ்வொரு ஆண்டும் இந்த விளையாட்டை இங்குள்ளவர்கள் விளையாட வேண்டும் என்று புலிகேசி ஸ்டைலில் உத்தரவு போட்டுவிட்டாராம்.
போருக்கு புறப்படும் முன் 
தயார் நிலையில் பெண்களும் ஆண்களும் 
ஓசியில் படம் பார்க்கும் உற்சாகத்தில் திரண்ட கூட்டம் 

    முத்தத் திருவிழா என்றால் கண்டபடி கண்ட இடத்தில் அவரவர் இஷ்டம் போல் முத்தமிட்டுக்கொள்வது என்று பொருளாகாது.இதற்கென்று நிறைய விதிமுறைகள் உள்ளனவாம்.இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் முதலில் முன்பதிவு செய்து கொள்ளவேண்டும்.பிறகு இதற்கென்று இருக்கும் 'பதினோரு பேர் கொண்ட ஒரு குழு' 50ஆண்கள்,50பெண்களை தேர்ந்தெடுக்கும்.பின்பு அவர்கள்  அனைவரும் 'புர பன்ஜார்' என்ற கடவுளை வணங்கி பிராத்தனை செய்து விட்டு, இந்த முத்தப் போருக்கு தயாராகி விடுவார்களாம்.இதில் இன்னொரு சுவாரஸ்யம் யாருடன் யார் ஜோடி சேருவார்கள் என்று  யாருக்குமே தெரியாதாம்.எல்லாம் அந்த சாமிக்கே வெளிச்சம்.காஞ்சமாடு கம்புல புகுந்த கதையா எதுவும் ஆகிட கூடாது என்று உஷாரா நாலு ஆளுங்க சுத்தி நின்னு தண்ணிய ஊத்திகிட்டே இருப்பாங்களாம்(பின்ன...தீப்பிடிக்க முத்தம் கொடுத்தா.. அத எப்படி அணைக்கிரதாம்?) 
       வரம்பு மீறவில்லை என்றால் எதுவும் தப்பில்லை போல.....

மேலே சொன்ன செய்திக்கும் இந்தப் படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
------------------------------------------------------------x -------------------------------------------------------- 
 உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?

அடுத்து ஒரு சூடான மேட்டர்..(மேலே சொன்னது மட்டும் என்னவாம்?) 

  சீன அதிபர் ஜின்டாவோ இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம் யாங் யேஷி எ‌ன்ற 26 வயததிபெத் வாலிபர் கடந்த திங்கட்கிழமை டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தீக்குளித்தார்.சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தை தனி நாடக பிரிக்க வேண்டும் என்று திபெத்தியர்கள் தலாய்லாமா தலைமையில் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.இவர்களின் கோரிக்கைகளுக்கு சீனாவும்  செவி சாய்ப்பதாக இல்லை.சீனா பல முறை எச்சரித்தாலும் இவர்கள் விசயத்தில் இந்தியா எப்போதும் தலாய்லாமாவிற்கு ஆதரவாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் இலங்கை விசயத்தில் மட்டும் ஏன் இந்த ஒரு  தலை பட்சமோ....?


உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?....ஒரு ஜீவன் இங்கே தீயில் கருகி மரணத்தின் வாசலில் விழுந்து துடித்துக் கொண்டிருக்க.... அவரைக்  காப்பாற்றுவதை விட்டுவிட்டு தன் தொழிலில் கண்ணும் கருத்துமாக இருக்கும் பத்திரிக்கையாளர்கள். 


-----------------------------------------------x ----------------------------------------------------

 நெத்தியடி....

தந்தை பெரியாரிடம் ஒருவர், "மதம் வேண்டாம் என்று கூறுகிறீர்களே..அதற்குப் பதிலாக வேறு எதைப் பின்பற்றுவது?...."

 இதற்கு பெரியாரின் நெத்தியடி பதில்...

"கதவு இடுக்கிலிருந்து கையை எடு..கை நசுங்கி விடும் என்றால் கையை வேறு எங்கே வைப்பது என்று கேட்கிறீர்களே?......."

----------------------------------------------x------------------------------------------------------------------------
 சும்மா அதிரப்போகுதுல்ல!!!!!!...


 21 வருடங்களுக்குப் பிறகு சொந்தக்குரலில் பாடி அசத்தப்போகும் சூப்பர் ஸ்டார் ...கலக்கு தலைவா...
----------------------------------------------------------x---------------------------------------------------------
       MAESTRO......


----------------------------------------------------X------------------------------------------------------

3D CORNER


                         தெய்வ தரிசனம்: சிவன் பார்வதியுடன் கணேசன்...



------------------------------------((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))-------------------------------

Tuesday 27 March 2012

சிதறல்கள்-5

   
 சைனீஸ் மொழியிலும் கலக்கும் இசைப்புயல்.

   சமீபத்தில் ஆபிசில் நான் மும்முரம்மாக வேலை பார்த்துக்கொண்டிருந்த  போது என் அருகே உள்ள  சைனீஸ் நண்பர் ரேடியோவில் பாட்டு கேட்டுக் கொண்டே வேலை செய்து கொண்டு இருந்தார்.சட்டென்று ஒரு பாடல் என் கவனத்தை திசை திருப்பியது.அது முதல்வன் படத்தில் வரும் ஷக்கலக்க பேபி பாடல்.ஆனால் ஒலித்தது சீன மொழியில்.சீன நண்பரிடம் விசாரித்தபோது இது சிங்கப்பூர் பாடகி 'கெல்லி பூன்' 2007 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆல்பத்தில் உள்ள பாடல் எனவும் இது சீனர்களின் மிக விருப்பமான பாடல்களில் இதுவும் ஓன்று என தெரிவித்தார்.ஆனால் முதல்வன் படம் 2001-ல் வந்ததல்லவா... அதிலிருந்து சுட்டுவிட்டார்களோ என்று நண்பரிடம் கேட்டபோது இல்லவே இல்லை இது ஒரிஜினல் வெர்சன் என்று கூற,எனக்கு பொறுக்க முடிய வில்லை.நம் இசைப்புயலின் பாடல்தான் இது என நிருபிக்க வேண்டும் என்று முதல்வன் பாடலை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து ஓடவிட்டு நண்பரை கவனிக்க சொன்னேன்.ஆனால் அவர் மனம் ஏனோ ஒத்துக்கொள்ள மறுத்தது.சரி..எப்படி அவரை நம்ப வைப்பது என்று யோசித்த நான் பின்பு நேரடியாகவே அந்தப் பாடலை இணையத்தில் தேடிய போது எனக்கு அந்த இன்ப அதிர்ச்சி கிடைத்தது.அந்த ஆல்பத்திலே இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்று எழுதப்பட்டிருந்தது.அதை அவரிடம் காண்பித்தவுடன் அவர் தலையை சொரிந்து அசடு வழிந்ததைப் பார்த்து எனக்கு பாவமாக தெரியவில்லை.. மாறாக பெருமையாக இருந்தது நம் இசைப்புயலை நினைத்து.

      
----------------------------------------------x----------------------------------------------

கூகுள் மேப்பில் மறைக்கப்படும் பத்து இடங்கள்.

        உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் இருந்த இடத்திலிருந்தே பார்க்கும் வசதியுடைய கூகுள் எர்த் மற்றும் கூகுல் மேப்பில் மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியிருக்கிறது.இதில் சில இடங்கள் வேண்டுமென்றே மங்கலாக தெரியும் படி செய்யப்பட்டுள்ளது என்பது தான் அது.வடகொரியாவில் பெரும்பாலான இடங்கள்,ராயல் பேலஸ் நெதர்லாந்து,நியூயார்க் அணுமின் நிலையம் உட்பட ஒரு சில இடங்கள் மங்கலாக தெரிவதாகச் சொல்லப்படுகிறது.
   
   ஆனால் இதைப்பற்றி கருத்து தெரிவித்த கூகுள் நிர்வாகம்,எங்களுக்கு தகவல் மற்றும் படங்கள் தரும் நிறுவனங்கள் அந்தந்த நாட்டின் பாதுகாப்பிற்கும் சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு தான் படங்களை வெளியிடவேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள்.அவர்கள் தரும் படங்களைத்தான் நாங்கள் பிரசுரிக்கிறோம்.அதில் ஒரு சில படங்கள் இது போல மங்கலாகத்தான் தெரிகிறது.

கூகுள் மேப்பில் மங்கலாக தெரிவதாகச் சொல்லப்படும் அந்த பத்து இடங்கள்...

1. The Royal Residence, The Netherlands 

2. Buffalo Niagara International Airport

3. Tantauco National Park, Chile

4. Keowee Dam, South Carolina

5. Mysterious Russian Site

6. Minami Torishima Airport, Japan

7. The Michael Aaf Building, Utah

8. Cornell University Combined Heat and Power Plant, New York

9. Babylon, Iraq

10. Vlissingen, The Netherlands

-------------------------------------------------------------x-------------------------------------------------------------------  

அனுபவம் பேசுது...

  #   எல்லா காரியத்திற்கும் கடவுளையே நம்பாதீர்கள்.பிறகு கடவுள் நம்பிக்கையே இல்லாமல் போய்விடும்.

#  கலகலன்னு பேசுறவங்க எல்லோரும் காசு விசயத்துல கறாரா இருப்பாங்க..

#   பாசம் அதிகமாக இருக்கிற எல்லோர்கிட்டேயும் கோபமும் அதிகமாக இருக்கும்.ஆனா கோபம் இருக்கிற எல்லோர்கிட்டேயும் பாசம் இருக்கும்னு சொல்ல முடியாது. 
 
 -----------------------------------------------------------x--------------------------------------------------

பழிக்குப் பழி?

     கிரிக்கெட் விளையாட்டுல நம்மள விட பாகிஸ்தான் ரசிகர்கள்  பயங்கர வெறியர்கள்.வெற்றியோட திரும்பினா ஏர்போர்ட்டுல ஏக போக வரவேற்பு கிடைக்கும்.பலே..பலே...நம்ம ஆளுங்கனு அந்த நாட்டு பத்திரிக்கையெல்லாம் பாராட்டுவாங்க.அதுவே தோத்துட்டாய்ங்க அவ்வளவுதான்.அழுகின முட்டை, தக்காளி அபிஷேகம் தான் ஏர்போர்ட்டுல.அங்க இவ்வளவு வாங்கினாங்க.இங்க இவ்வளவு வாங்கினாங்க-னு நோண்டி நொங்கெடுத்துடுவாய்ங்க.வாங்கலனா கூட வாங்கினதா பேசுவாங்க.ஒரு சில நேரங்களில பயந்துகிட்டு ஊருப்பக்கம் வராம அப்படியே ஒவ்வொரு நாடா சுத்திட்டு யாரும் கண்டு கொள்ளாத நேரத்தில ஊருக்கு திரும்பின வீரர்களெல்லாம் நிறைய பேர் இருக்காங்க.இப்ப இதெல்லாம் எதுக்குன்னு யோசிக்கிறவங்க அடுத்ததா படிங்க.

  சமீபத்தில ஆசியக்கோப்பையை வென்று திருப்பின பாகிஸ்தான் வீரர்களுக்கு வரவேற்பு தருவதற்காக  ஏர்போர்ட்டுல ஏராளமான ரசிகர்கள் காத்திருந்திருக்காங்க.வீரர்கள் வந்து இறங்கியதும் அவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்காக முண்டியடித்து எல்லோரும் வர பெரிய தள்ளுமுள்ளு நடந்ததாம்.இதுல கோபமான அ.'.ப்பிரிடி ஒரு ரசிகரை ஓங்கி அறைந்து விட்டாராம்.பிறகு சமாதானப்படுத்தி அவரை(அடி வாங்கியவரை அல்ல) காரில் ஏற்றி அனுப்பி விட்டார்களாம்


   (தோத்தா அவிங்க இவிங்கள அடிக்கிறாய்ங்க....ஜெயிச்சா இவிங்க அவிங்கள அடிக்கிறாய்ங்க..பழிக்குப் பழி வாங்குறதுல பாகிஸ்தான்காரங்கள அடிச்சுக்க முடியாதுப்பா... ) ----------------------------------------------------------------x-----------------------------------------------------

  மிழ்ல எழுதும் போது வரும் சிறு சிறு குழப்பங்களில் இதுவும் ஒன்னு. ர-ற.மொதல்ல உள்ளத 'சின்ன ர'- ம்பாங்க....அடுத்து உள்ளத 'பெரிய ற'- ம்பாங்க. எழுதுவதிலும் சரி பேசுவதிலும் சரி..இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஆனால் பேச்சு வழக்குல இது ஒன்னும் பெரிய பிரச்சனையில்ல.இருந்தாலும்  ப்ளாகர்ல எழுதும் போது சில நேரங்களில தவறா வந்துடுது. உதாரணத்திற்கு, 

    அதற்கு      -           அதற்க்கு 
    சிறிய-பெரிய      சிரிய-பெறிய             
    கற்போம்       -      கற்ப்போம்                      
   வரவேற்பு      -   வரவேற்ப்பு    


   இந்த சின்ன 'ர' இருக்கு பாருங்க...இது ரொம்ப மென்மையானது.இது புள்ளி எழுத்தா (மெய்யெழுத்து) வரும்போது பக்கத்துல இன்னொரு புள்ளியெழுத்து வருவதற்கு அனுமதிக்கும். 
  
          உதாரணம்.....உணர்ச்சிகள்.
       
      ஆனா இந்த பெரிய'ற' (வல்லினம்) இருக்கு பாருங்க....ரொம்ப கறாரான பேர்வழி.தன் பக்கத்துல புள்ளி எழுத்து வர எப்போதும் அனுமதிக்காதுங்க. அதற்கு உண்டான சத்தத்தைதையும் இதுவே சேர்த்து கொடுத்துடும்.  
         உதாரணம் ..அதற்கு,வரவேற்பு,கற்போம். 

--------------------------------------------------------------------x-------------------------------------------------------- 
Legends.....
 
----------------------------------------------------------X ----------------------------------------------

சரி....இது உள்ளே இருக்கிற கிருஸ்துமஸ் தாத்தாவை கண்டுபிடிங்க பாப்போம்.




-------------------------------------------((((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))))----------------------




Sunday 25 March 2012

நெஞ்சு பொறுக்குதில்லையே!!!

                                   

 இது...... வியட்நாம் நாட்டின் வரலாற்றையே மாற்றி எழுதிய ஒரே ஒரு புகைப்படம்.......!!!!



       மேலே உள்ள புகைப்படம் 1972 ம் வருடம் ஜூன் -8 ஆம் தேதி அமெரிக்க இராணுவத்தின் விமானங்கள் டிராங்பாங் என்கிற வியட்நாமிய கிராமத்தின் மீது பாஸ்பரஸ் குண்டு மழை பொழிந்த போது உடைகள் முழுவதும் பற்றி எரிய  இந்தச் சிறுமி ஓடி வந்த புகைப்படம் அமெரிக்க நாளிதழ் ஒன்றில் வெளி வந்தது. அதைக் கண்ட அமெரிக்க மக்கள் கொதித்தெழுந்தார்கள்.வீதிகளில் கூடி போராட்டம் நடத்தினார்கள்.வியட்நாம் சுதந்திரம் பெற்றது.
        அமெரிக்கர்களுக்கும் அவர்களுக்கும் எந்த ரத்த உறவும் இல்லை...தன் நாட்டைச் சேர்ந்தவர்களும் இல்லை...தன் நாடு அடிமைப்படுத்தியிருக்கும் ஒரு நாடு!!அந்த மக்களுக்காக அமெரிக்கர்கள் கொதித்தார்கள்!!!.

        ஆனால் நம் நாட்டின் சகோதர சகோதரிகள் இலங்கை வீதிகளில் கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டு,சிறுமிகள் கூட பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு  நடுவீதியில் பிணமாய் தூக்கியெரியப்பட்ட காட்சிகள் புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் தொடர்ந்து வெளிவந்தாலும் அதைக்கண்டும் காணாததும் போல இருந்து வந்த இந்தியா,மனமிறங்கி செவிசாய்க்க இத்தனை வருடங்களா?

    தமிழினத்தை அழிக்கும் இலங்கைக்கு எதிராக தமிழத்தின் அத்தனை கட்சிகளும் ஒருமித்தக்குரலில் பேச இத்தனை காலங்களா?...நல்லவேளை .. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்திருக்கும் இந்த பொன்னான தருணத்தில் திமுக ஆட்சியில் இல்லை.ஒருவேளை இருந்திருந்தால்.... மௌன சாமியார் யோசித்திருப்பார்.ராசபட்சியோடு கைகுலுக்கி சிரித்து மகிழ இன்னொரு குழு இலங்கைக்கு சென்றிருக்கும்.

    பல்லாயிரக்கணக்கான இன அழிப்பு புகைப்படங்கள் இருந்தும் ஈழத்தை காப்பாற்ற முடியவில்லையே!!! தமிழினத்தை பாதுகாக்க முடியவில்லையே!!! 

       ரத்தகறை படிந்த முசோலினியின் கரங்களை தொட்டு கைகுலுக்க மாட்டேன் என உரைத்தவர்  நேரு. அவர் பரம்பரையின் வழிவந்த சோனியா, தமிழ் மக்களின் மீது பாஸ்பரஸ் குண்டுகளை தெளித்த ராஜபக்ஸேவுடன் கை குலுக்கியது எந்த விதத்தில் நியாயம்? சோனியாவுக்கு தான் இந்திய வரலாறு தெரியாது....காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கும், தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கும் கூடவா தெரியாது?…..


   நெஞ்சு பொறுக்குதில்லையே!!! இந்த நிலை கெட்ட மாந்தர்களை நினைத்தால்.


 -------------------------------------------------------------------------------------------------------------




        யாருய்யா நீங்களெல்லாம்?... எங்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு எப்படி அய்யா வந்தது?.தமிழ்..தமிழ்...தமிழ்....என்று சொல்லியே காலத்தை ஓட்டும் எங்களுக்கு தமிழ் இனம் அழிவதைப்பற்றி சிந்திக்க கூட நேரமில்லாத போது உங்களுக்கு மட்டும் எப்படி அய்யா இந்த யோசனை வந்தது?.எங்களுக்கு ஆட்சி முக்கியம்,பதவி முக்கியம்,குடும்பம் முக்கியம்,சொத்து முக்கியம்,சுகம் முக்கியம்,சொந்த பந்தங்கள் எல்லாம் முக்கியம்.ஆனால்  இதையெல்லாம் விட்டு விட்டு எப்படி அய்யா உங்களால் மட்டும் இப்படி ஒரு காரியம் செய்ய முடிந்தது?.எங்கள் டிஆர்பி ரேட்டை உயர்த்துவதற்கு நாங்கள் செய்வது மானாட மயிலாட,ஜோடி நம்பர் ஒன்,ஜாக்பாட்,கையில் ஒரு கோடி...இதுமாதிரி ஏதாவது ஒன்னு செய்யுரத விட்டுட்டு இதப்போயி எப்படி அய்யா செஞ்சீங்க?.... பொழைக்கத் தெரியாத ஆளா இருக்கீங்களே....   

Dear Mr.Jon Snow ,

   தமினினத்தின் மீது ஏவப்பட்ட அத்துமீறலையும், வன்முறையையும், பாலியல் கொடுமைகளையும் உலகுக்கே வெளிச்சம் போட்டுக் காட்டிய மவராசா.... நீங்கள்(Channel-4) மட்டும் இல்லை என்றால் இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்கள் அப்படியே மறைக்கப்பட்டு இந்நேரம் மறக்கப்பட்டு இருக்கும்..ராஜபட்சே என்ற அரக்கனின் முகத்திரை கிழிக்கப்படாமல் போயிருக்கும்.இலங்கைக்கு எதிரான உலக நாடுகளின் தீர்மானம் வெற்றி பெறாமல் போயிருக்கும்.உங்கள் சேவை இன்னும் தொடரவேண்டும்.உலகத் தமிழர்கள் எல்லோரும் உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கோம் அய்யா.

Saturday 24 March 2012

வரலாற்று பொக்கிஷங்கள்

உலகின் முதல் ஏரோபிளேன் 

அஞ்சா சிங்கங்கள்.....சேகுவாரா உடன் பிடல் காஸ்ட்ரோ

யாரிந்த குட்டிப்பையன்?...உலகையே மிரளவைத்த ஹிட்லர் 

சார்பியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தன் சகாக்களுடன்
School grades of Albert Einstein
 ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் -யைப் பற்றி நான் வியந்து எழுதின கட்டுரை  இங்கே


கோகோ கோலாவின் பரிணாம வளர்ச்சி 

உலகின் முதல் கம்ப்யூட்டர்  

டைடானிக் கப்பலின் முதல் டிக்கெட்

இவர் விஞ்ஞானி அல்ல ..எழுமின்!!விழிமின்!!!என்று முழங்கிய சுவாமி விவேகானந்தர்.

கப்பலோட்டியத்தமிழன் 

ஹிட்லரின் அட்டுழியங்கள் 

கார் விபத்தில் டயானா 

ஒசாமா பின்லாடன் குடும்பம் ..கட்டத்திற்குள் ஒசாமா 
உலகின் முதல் McDONALD
செப் 11...ரெட்டைக் கோபுரம் தாக்கப்பட்டச் செய்தி ஜார்ஜ் புஷ் ஷிடம் சொல்லப்பட்ட தருணம்..


கண்ணிலே கருணை தெரியும் இந்த அன்னை.....அன்னை தெரேசா 

--------------------------------------------------(((((((((((((((()))))))))))))))))))----------------------------


Friday 23 March 2012

சிதறல்கள்-4

உலகின் மிகப்பெரிய டிவி அறிமுகம்.

           LCD TV தயாரிப்பில் இது ஒரு மைல் கல்லுன்னு சொல்லலாம். சீனாவின் மிகப்பெரிய டிவி தயாரிப்பு நிறுவனமான TCL கம்பெனி உலகின் மிகப்பெரிய 110 "  LCD TV  யை தயாரித்து வெளியிட்டிருக்கிறது.இது 4096 X 2160 படத்துடன் தொடு திரை வசதியுடன் அறிமுகமாகும் இந்த முப்பரிமான(3D)TV விற்பனைக்கு வருமா என்பது இன்னும் தெரியவில்லை.ஏற்கனவே LG நிறுவனம் 84 அங்குல டிவி யை ஐ.டி ஷோவில் அறிமுகப்படுத்தியிருந்தது. அதை விஞ்சும் விதத்தில் TCL நிறுவனத்தின்அதிரடியான தயாரிப்பு தான் இந்த Multi-TouchTechnology 110"LCDTV.இதை நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தியது .   
                                                     

World's Biggest 3D TV at 110 Inches Across!


LG-84inch tv
   ------------------------------------------- X ------------------------------------------------------------------
ஆத்தா வச்ச ஆப்பு ...

                சில நாட்களுக்கு முன் சங்கரன்கோயில் இடைத்தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய வரும்  கருணாநிதிக்கு கருப்பு கொடி காட்டப்போவதாக கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் தெரிவித்திருந்தார்.இவரு எதுக்குடா ஓஞ்சி கிடக்கிற ஆள உசுப்பேத்தி வுடுராறேனு விசாரிச்சா... கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்படாத காரணத்தால் நாள்தோறும் ஐந்து கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக கருணாநிதி அண்மையில் தெரிவித்திருந்தார்.அதுக்கான பதிலடிதான் இதுவாம்.பின்ன...1.76 லட்சம் கோடி இழப்புக்கே வருந்தாதவர் இதுக்கு வருத்தப்பட்டா கோவம் வராம பின்ன என்னவாம்?ஆனா... பாவம் இடைத்தேர்தலுக்குப் பிறகு அம்மா வைக்கப்போற ஆப்பு சும்மா ராக்கெட் கணக்கா இவரு மேல பாயப்போகுதுன்னு தெரியாப் போச்சு.மின்தடை அவதியால் போராட்டம் எல்லாம் பிசுபிசுத்துப் போக,இப்போ தலைக்கு மேல கத்தி. ஆத்தா ரூபத்தில ஆப்பு..


--------------------------------------------------------------------------------------------------------------------
 தம்பி... டீ இன்னும் வரல.... 
                 
தமிழீழம் அமைவது தான் திமுகவின் குறிக்கோள்: கலைஞர்                                
---------------------------------------------------------------------------------------------------------------------
கேப்டனுக்கு விழுந்த நெத்தியடி..

 சங்கரன்கோயில் பிரச்சாரத்தில் இன்னொரு சுவாரஸ்யம்....பிரச்சாரத்துக்கு போற விசயகாந்து எக்குத்தப்பா எதையாவது பேசி வசம்மா வாங்கிக் கட்டிக்கிறதே வேலையாப் போச்சு.இந்த தடவ சங்கரன்கோயில் கடையாலுரூட்டியில் விசயகாந்துக்குக்கும் அந்த ஊர் கிராமவாசிக்கும் நடந்த சூடான உரையாடல்.

விசயகாந்து : இடைத்தேர்தலுக்குப் பிறகு மின்வெட்டு இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.இது மேலும் அதிகரித்தால் மக்கள் என்ன பாடுபடுவார்கள் என்பதை எல்லோரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.அந்த அம்மா என்னடான்னா..........  ........      

இதை கேட்டுகிட்டிருந்த ஒரு கிராமவாசி கடுப்பாகி உடனே குறிக்கிட்டு........

கிராமவாசி:  ஏன்யா.....மின்சாரம் இருப்பதால்தானே உன்னால இப்ப மைக்க  புடிச்சி பேசமுடியுது..."

 உடனே கடுப்பான நம்ம விசயகாந்து: யாருயா நீ?  எந்த ஊருயா உனக்கு..?

கிராமவாசி:எங்க ஊர்ல வந்து என்னப்பாத்து யாருன்னு கேக்கிற...  மொதல்ல நீ யாரு?

உடனே நம்ம விசயகாந்துக்கு கண்கள் தீப்பிழம்பாக மாறுகிறது.அவர் நாக்கு பற்களுக்கிடையே சிக்கி நான்காக மடிகிறது.....

விசயகாந்து : அப்ப... நீ மேல வா பாக்கலாம்...

கிராமவாசி: நான் எதுக்கு மேலே வரணும் ?...மொதல்ல நீ கீழே வா....

இப்படியே தொடர்ந்த வாக்குவாதம் பிறகு கொழுந்துவிட்டு எரிய கடைசியில் போலிஸ் வந்து தண்ணி ஊற்றி அணைத்தார்களாம்.

        முடிஞ்சா.... என் கைக்குள்ள இருக்கிற 'கமார்கட்'ட புடிங்கிப்பாரு!!!!..
---------------------------------------------------x --------------------------------------------------------------

கிரிஷ்ணலீலை

                சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி பூச்சாண்டி காட்டின கதையா இருக்கு இலங்கைக்கு எதிரான  அமெரிக்க தீர்மானத்தில இந்தியாவின் நிலை.
     இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், ஆயிரக்கணக்கான அப்பாவி  தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட சில காட்சிகளை  சானல் 4  தொலைக்காட்சி வெளியிட்டபோது கலங்காத நெஞ்சங்கள் கூட கண்ணீர் வடித்தது.தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் (காங்கிரஸ் உட்பட)வெகுண்டு எழ,வேறு வழியில்லாமல் மௌன சாமியார் முதல் முறையாக மனமிறங்கி தமிழர்களுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.தமிழர்களின் வாழ்வை பறித்து சாகடித்த இலங்கைக்கு ஐ.நா.,வில் பாடம் புகட்ட இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்தது.ஆனால் நமக்கு ஆப்பு வைக்கிறவன் நம்மை சுத்தி தான் இருப்பான் என்பது போல கன்னடகாரன் S.M.கிருஷ்ணா,இலங்கைக்கு எதிரான நிலையை எடுப்பதில் இந்தியா யோசிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.நம்ம நாட்டின் மீது ரொம்ப அக்கரைத்தான் இந்தாளுக்கு......நம்ம நாட்டு தீர்மானத்தைப் படிக்கிறதுக்குப் பதிலா பக்கத்து நாட்டு தீர்மானத்தை வாங்கி படிச்சி மானத்தை வாங்கினவனாச்சே....கன்னட பிரசாதத்தோட டீலிங் பேசவே உனக்கு நேரம் பத்தாதே...ஏன் ராசா...எங்கே அந்த டோப்பா முடியையும்,பல் செட்டையும் கெழட்டி உன் உண்மையான மொகத்த மக்களுக்கு காமி பாப்போம்....... 
 

 --------------------------------------------x---------------------------------------------------

டாக்டராக நடிக்கும் புவ்வா....
                                           
                                'அந்த' மாதிரி வேலை செஞ்சி 'அந்த' மாதிரி கேரக்டர்ல நடிச்சி 'அந்த' மாதிரி நடிகைன்னு பேர் வாங்குன புவ்வா (புவனேஸ்வரியை செல்லமா..)கடைசியில சவுத்ல உள்ள ஒரு டாகுடருகிட்ட ஐக்கியமானது எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.இப்ப இதுவல்ல நியுஸ்.....இப்ப நம்ம புவ்வா, இயக்குனர் வெங்கடேஷ் இயக்கத்துல  ஒரு படத்துல டாகுடரா நடிக்கிறாராம். இனிமேல் நான் அந்த மாதிரி கேரக்டர்ல நடிக்காம இந்த மாதிரி நடிக்கப் போறேன்னு சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்திட்டாங்க...ஏன் வெங்கடேஷ் சார்....டாகுடருனா மாத்ருபூதம் டைப் டாகுடருதானே?

 வெயிட்.. வெயிட்..இதெல்லாம் ஒரு நியூஸானு பிக்காலித்தனம்மா கேள்வி கேட்கக் கூடாது...நேத்திக்கு சிங்கபூர் தமிழ் முரசுல இதுதான் 'ஹாட் நியூஸ்'      
 ------------------------------------------------------- x ----------------------------------------------------------------------

பொழைக்க வந்த எடத்தில் எதுக்கு தம்பி பொல்லாப்பு 


       சிங்கப்பூரில் நேற்று ஒரு இந்தியருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பெயர் கோபிநாதன்.முழு பெயர் பிஜிகுமார் ரேமாதேவி நாயர் கோபிநாதன்.நம் நாட்டிலிருந்து இங்கு வந்து ஷிப் யார்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.இவருக்கும் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோசலின் ரெய்ஸ் பாஸ்கா என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதி அந்தப்பெண், மேன்ஷனில் அவரது அறையில் கொலையுண்டு கிடந்தார்.அவருடைய உடலில் மார்பு, வயிறு, கழுத்துப் பகுதியில் பல தடவை ஆயுதத்தால் குத்தப்பட்டு இருந்தது.சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட கோபிநாதன்  பின்பு உண்மையை ஒத்துக் கொண்டுள்ளார்.தவறாக அந்தப் பெண் தன்னை அணுகியதாகச் சொன்ன கோபிநாதன்,அந்தப் பெண்ணை தான் கொலை செய்ததை மறுக்கவில்லையாம்.பிழைப்பைத் தேடி வெளி நாடுகளுக்கு வரும் நம்மவர்கள் அந்தந்த நாட்டு சட்டத்திட்டங்களின் கடுமையை உணர்ந்து,தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்துவிட்டால் இது போன்ற  துயரங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லாமல் போகும்.
--------------------------------------------------------------- x ----------------------------------------------------------
      
      என்ன அதுக்குள்ளே கெளம்பிடீங்க....கடைசியா ஒரு தெய்வத்தரிசனம் பாத்துட்டு போங்க... ஆனா இவர் எல்லாருடையக் கண்களுக்கும் தெரிய மாட்டார்.உங்கள் கண்களுக்கு ஒரு அற்புத சக்தி இருக்க வேண்டும்.அதை எவ்வாறு பெறுவதுனு யோசிக்கிறவங்க இங்கே  போய் பார்க்கவும். 

 ஒரு க்ளு... இதன் உருவம் இப்படித்தான் இருக்கும்.


--------------------------------(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))))))))))))----------------------

Thursday 22 March 2012

CAD -CAM PROGRAMMER ஆக வேண்டுமா?-PART-5


 MASTERCAM-தமிழில்...


   MASTERCAM-ன்  விளக்க வரைபடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இதிலுள்ள மொத்த COMMANDS-யையும் வகைப்படுத்தி உங்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக இந்த FLOW CHART வரைந்துள்ளேன். ஒவ்வொரு COMMAND-யையும் தனித்தனியே விளக்கும் போது இது எதற்கு?... இதன் உபயோகம் என்ன?... என்பது  தெரியவில்லை என்றால் மேற்கொண்டு படிப்பதற்கு உங்களுக்கு ஆர்வமில்லாமல் போகலாம்.அதற்காகத் தான் இவ்வளவு அறிமுகம் கொடுக்க வேண்டியதாயிருக்கிறது.
 


MASTERCAM-ஐ இரண்டு பிரிவுகளாப் பிரிக்கலாம்.  

1.DESIGNING ( வடிவமைத்தல் )
2.TOOL PATH ( இதன் விளக்கம் இங்கே சென்று பார்க்கவும் )

சரி... DESIGNING-ன்ன என்ன?  நமக்கு 'கஸ்டமர்' கொடுத்த வரை படத்தை (DRAWING) அல்லது மாதிரியை (SAMPLE) அவர்களின் தேவையை அறிந்து MASTERCAM-ல் வரைவது.

                  சில நேரங்களில் கஷ்டமர்களே AUTOCAD-ல் வரைந்து DWG/DXF  .'.பைல்களாகவோ அல்லது STEP, PARASOLID, IGES .'.பைல்களாகவோ கொடுத்து விடுவர்.இது மாதிரி தருணங்களில் நமக்கு ஒரு வேலை மிச்சம். இதை நேரடியாக MASTERCAM-ல் இறக்குமதி(IMPORT) செய்து TOOLPATH எடுத்து விடலாம்.ஆனால் இது போல கொடுக்கப்படும் .'.பைல்கள் சில நேரங்களில்  பிரச்சனை கொடுத்து விடும்.TOOLPATH எடுத்தால் ERROR காண்பிக்கும்.என்னப் பிரச்சனை என்று கண்டு பிடிப்பதற்குள் உயிரே போய்விடும்.பேசாமல் புதுசாவே  MASTERCAM-ல் வரைந்து விடலாம் என்று எண்ணத்தோன்றும். இதற்கு என்ன காரணம்னா...AUTOCAD என்பது வரைபடத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் ஒரு மென்பொருள்.அதில் வரையும் போது கோடுகள் இணையாமலோ அல்லது புள்ளிகள் அழிக்கப்படாமலோ இருத்தால் AUTOCAD -ல் பெரிய பிரச்சனை ஒன்றும் வராது.ஆனால் அதையே MASTERCAM-ல் இறக்குமதி செய்து TOOLPATH எடுக்கும் போது தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.
  
    ஆனால் அதே வரை படத்தை MASTERCAM-ல் நேரடியாக வரையும் போது இது போன்ற தவறுகள் வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.சில நேரங்களில் பெரிய  நிறுவனங்களுக்கு 'MOULD' அல்லது 'DIE' செய்யும் போது அவர்களுக்கென்றே பிரத்தியோகமான குறீயீடு,வெளிப்புற அமைப்பு ( உதாரணம்..கோகோ கோலா பாட்டில்)இருப்பதால் அவர்களே DESIGN செய்ததை மாற்றாமல் TOOLPATH எடுக்க வேண்டிவரும். 

 மேலே உள்ள படத்தில் DESIGN-ஐ இரண்டாக பிரித்துள்ளேன்.

1 . CREATION    2.MODIFICATION.

        எந்த ஒரு வரைபடம் வரைந்தாலும் அதற்கு அடிப்படையான COMMANDS தான் புள்ளி(POINT), கோடு(LINE), செவ்வகம்(RECTANCLE), வட்டம்(CIRCLE), போன்றவைகள்.எல்லா வரைபடங்களும் இதிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. இவைகள் CREATION என்று வகைப் படுத்தப்பட்டுள்ளது.  

          இதன் பிறகு MODIFICATION.அதாவது வரைந்த படங்களை வெட்டுவது, சேர்ப்பது,சுற்றுவது,சிறிது-பெரிதாக்குவது,ஒன்றை பத்தாக்குவது-பத்தை நூறாக்குவது போன்ற பல வேலைகள் இதில் நடக்கும். இது முடிந்தவுடன்  உங்கள் வரைபடம் TOOLPATH எடுப்பதற்கு தயாராகிவிடும்.                  

3.TOOLPATH.
   
      MASTERCAM-ன்  புஜபல பராக்கிரமம் இதில் தான் அடங்கி உள்ளது.இதில் இரண்டு வகை உள்ளது.

1.  2D TOOLPATH 

2.  3D TOOLPATH

     இதன் தெளிவான விளக்கம் இங்கே சென்று பார்க்கவும்.சரி... முன்னோட்டத்தை இத்தோடு நிறுத்திக்கிறேன்.
----------------------------------------------------------------------X--------------------------------------------------------- 

  இப்ப DESKTOP -ல உள்ள MASTERCAM ஐகான டபுள் கிளிக் பண்ணா,இதோ கீழே உள்ள மாதிரி ஸ்க்ரீன் உங்களுக்காக பிரகாசமாக விரியும்.இதை சுருக்கமா சொல்லிட்டு நேரா மேட்டருக்கு போகலாம்.   
 



 சைடுல முதல்ல இருக்கிறது MAIN MENU.

    அதாவது மேலே சொன்ன விளக்கவரைபடத்துல இருக்கிற எல்லா COMMANDS-ம் இதில் தான் அடங்கியிருக்கு.நீங்க DESIGN அல்லது TOOLPATH எடுக்கணும்னா இங்கே போய்தான் செலக்ட் பண்ணனும்.

 அடுத்ததா MENU BUTTONS.

      ஒவ்வொரு தடவையும் MAIN MENU -ல உள்ள COMMANDS-யை கிளிக் செய்து அடுத்தடுத்து இன்னும் உள்ளே போயிட்டு திரும்ப முன்னால இருக்கிற  COMMANDS-க்கு வர்றதுக்கு இந்த 'BACKUP'  COMMAND நமக்கு உபயோகமாகுது. திரும்ப ஒரேயடியா MAIN MENU-க்கு வரணும்னா அடுத்ததா உள்ள MAIN MENU-வ ஒரு கிளிக் பண்ணிடுங்க போதும்.  

குறிப்பு:  நீங்கள் 'BACKUP' பட்டனை சொடுக்குவதற்குப் பதில் கிபோர்டு-ல் உள்ள Esc பட்டனைக் கூட உபயோகப் படுத்தலாம். 


அடுத்து SECONDARY MENU  
 
  அடுத்ததா இருக்கிற 'Z = 0' இது 2D வரைபடத்துக்கு எந்த மாற்றமும் இருக்காது. 3D-ல வரையும் போதுதான் இது மாறும்.இதுக்கு CONSTRUCTION DEPTH-னு சொல்வாங்க.இதைப்பற்றி SOLID வரையும்போது விளக்கமா சொல்றேன்.   

 டுத்ததா COLOR.இது ஒன்னும் கஷ்டமான விஷயம் அல்ல.நீங்கள் வரையக் கூடிய படத்தின் வண்ணத்தை உங்கள் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். இதைக் கிளிக் பண்ணினா 16 கலர் காண்பிக்கும்.இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.


 அல்லது இன்னும் நிறைய வண்ணங்கள் வேண்டுமென்றால் 16/256 கிளிக் செய்தால் 256 வண்ணங்கள் கிடைக்கும்.


இதிலுள்ள மற்ற COMMANDS களை நாம 3D வரையரப்போ பார்க்கலாம் .

              அடுத்ததா நான் சொல்லப்போறது அடிப்படை எற்பாடு(BASIC SETUP).இது ரொம்ப ரொம்ப முக்கியம்ங்க.பிற்பாடு நீங்க MASTERCAM-ல பெரிய கில்லி  ஆயிட்டீங்கனா இந்தத் தலையை சுத்தி மூக்கத்தொடுற வேலையையெல்லாம் தவிர்க்கனும்.என்ன சொல்றேன்னு புரியுதுங்களா? நீங்க சீக்கிரமா வரைந்து புரோகிராம வெளிய எடுக்கிற விஷயத்தை தான் சொல்றேன்.உதாரணமா... உங்க கம்பெனியில என்ன மாதிரி மெசின் இருக்கு,அதுல எத்தன டூல்ஸ் இருக்கு,அது என்னென்ன டைப்புல இருக்கு,என்ன மாதிரி புரோகிராம அது படிக்கும் என்பதை ஆராய்ந்து அதை MASTERCAM-ல செட் பண்ணிடீங்கனா அதுக்கப்பறம் உங்க வேகத்தை  யாராலும் தடுக்க முடியாது.

     மொத்த SETUP-யும் இப்பவே சொன்னா குழம்பிடுவீங்க.மொதல்ல முக்கியமான இரண்டு விஷயம் செய்யப்போறோம்.உங்களுக்கு கொடுக்கப்பட்ட வரைபடம் எந்த அலகு(UNIT)ல இருக்குனு பாருங்க.ஒன்னு MM (மில்லிமீட்டர்-METRIC) அல்லது INCH(இன்ச்-ENGLISH) இருக்கும்.அதை  எங்கே போயி தேடுரதுன்னு யோசிக்க வேணாம்.அதன் விவரம் வரைபடத்தின் கீழே இருக்கும்.      


சரி  இதை எப்படி SET பண்றது?
               
MAINMENU-க்கு மொதல்ல போங்க...

 அப்பறம்   Screen -------->Configure .இப்ப System Configuration -னு ஒரு பேஜ்  திறக்கும். இதுல Start/Exit பட்டனை சொடுக்கினா,கீழே உள்ள மாதிரி இன்னொரு பக்கம் திறக்கும்.இதுல Startup Configuration File-ல போயிட்டு உங்களுக்கு தேவையானதை மாற்றிக்கொள்ளலாம்.      


அடுத்ததா AUTO SAVE.இது ரொம்ப  முக்கியமான COMMAND.நம்ம ஊருக்கு இது மிக மிக அவசியம்..நாம பல மணி நேரமா கஷ்டப்பட்டு வரைந்து, TOOLPATH எடுத்து முடிக்கிற நேரத்தில பவர்கட் ஆயிடும்.அல்லது சில நேரங்களில் சிஸ்டமே மக்கர் பண்ணி அப்படியே நின்னுடும்.நாம வரையிற ஆர்வத்தில SAVE பண்ணாம விட்டுடுவோம்.இப்ப சிஸ்டத்தை ஓபன் பண்ணிப் பாத்தா நாம இதுவரை வரைந்தது எதுவுமே இருக்காது.ஒரு இன்டர்வியுல எனக்கு இப்படித்தான் ஆயிடுச்சு.

     சரி AUTOSAVE -ன்னா  என்ன?.உதாரணமா  AUTOSAVE-ல 5 நிமிடம்-னு செட் பண்ணினா,ஐந்து நிமிட இடைவெளில ஒவ்வொரு தடவையும் அந்த பேஜ் ஓபன் ஆகி SAVE பண்ணவா?-னு  கேட்கும்.நாம ஓகே-னு க்ளிக் பண்ணினா தானாகவே SAVE-ஆகிடும்.

  இத எங்க போயி பன்றது?.இதுவும் அதே  Start/Exit பேஜ்லதான் இருக்கு.அங்கே கீழே போய் AutoSave என்கிற பட்டனை சொடுக்கினா கீழே உள்ள மாதிரி இன்னொரு பேஜ் திறக்கும்.அதுல போய் Active பட்டனை ஒரு டிக்.உங்களுக்கு எவ்வளவு கால இடைவெளி வேண்டும் என்பதை Interval -ல் பதிய வேண்டும். சரி...இது எங்கே போய் SAVE ஆகும்.குழம்ப வேண்டாம்.ஏற்கனவே இருக்கும் இடத்தில் அதே பெயரில் SAVEஆக வேண்டுமென்றால் அடுத்ததாக உள்ள 'Save using active Mastercam file name' -ஐ ஒரு  டிக் செய்யவும். 

 அடுத்ததா உள்ள Prompt before saving file-ன்னா என்ன?....இதை டிக் செய்துவிட்டால் ஒவ்வொரு ஆறு நிமிடத்திற்கும் இந்த பேஜ் திறக்கப்பட்டு நம்மிடம் SAVE பண்ணவா? என்று  கேட்கும்.உடனே OK என்று சொடுக்க வேண்டும்.ஒருவேளை டிக் செய்யாமல் விட்டால் நம்மிடம் கேட்காமல் அதுவாகவே SAVE ஆகிக் கொண்டிருக்கும்.இது சில நேரங்களில் சிக்கலாகிவிடும்.நாம் AUTOSAVE போட்டோமா என்று கூட தெரியாமல் போய்விடும்.அதனால் நீங்கள் கீழே கண்பிக்கப்பட்டுளது போல் டிக் செய்து OK கொடுத்து மீண்டும் ஒரு OK,கடைசியாக YES கொடுக்க வேண்டும்.
   
 
சரி ...அடுத்தப் பதிவிலிருந்து CREATE-ல உள்ள ஒவ்வொரு COMMAND யையும் பார்க்கலாம்.

அடுத்தப் பதிவிலும் ச(சி)ந்திப்போம்......

---------------------------------------((((((((((((((((((((((((())))))))))))))))))))))-------------------------