Friday 23 March 2012

சிதறல்கள்-4

உலகின் மிகப்பெரிய டிவி அறிமுகம்.

           LCD TV தயாரிப்பில் இது ஒரு மைல் கல்லுன்னு சொல்லலாம். சீனாவின் மிகப்பெரிய டிவி தயாரிப்பு நிறுவனமான TCL கம்பெனி உலகின் மிகப்பெரிய 110 "  LCD TV  யை தயாரித்து வெளியிட்டிருக்கிறது.இது 4096 X 2160 படத்துடன் தொடு திரை வசதியுடன் அறிமுகமாகும் இந்த முப்பரிமான(3D)TV விற்பனைக்கு வருமா என்பது இன்னும் தெரியவில்லை.ஏற்கனவே LG நிறுவனம் 84 அங்குல டிவி யை ஐ.டி ஷோவில் அறிமுகப்படுத்தியிருந்தது. அதை விஞ்சும் விதத்தில் TCL நிறுவனத்தின்அதிரடியான தயாரிப்பு தான் இந்த Multi-TouchTechnology 110"LCDTV.இதை நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தியது .   
                                                     

World's Biggest 3D TV at 110 Inches Across!


LG-84inch tv
   ------------------------------------------- X ------------------------------------------------------------------
ஆத்தா வச்ச ஆப்பு ...

                சில நாட்களுக்கு முன் சங்கரன்கோயில் இடைத்தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய வரும்  கருணாநிதிக்கு கருப்பு கொடி காட்டப்போவதாக கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் தெரிவித்திருந்தார்.இவரு எதுக்குடா ஓஞ்சி கிடக்கிற ஆள உசுப்பேத்தி வுடுராறேனு விசாரிச்சா... கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்படாத காரணத்தால் நாள்தோறும் ஐந்து கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக கருணாநிதி அண்மையில் தெரிவித்திருந்தார்.அதுக்கான பதிலடிதான் இதுவாம்.பின்ன...1.76 லட்சம் கோடி இழப்புக்கே வருந்தாதவர் இதுக்கு வருத்தப்பட்டா கோவம் வராம பின்ன என்னவாம்?ஆனா... பாவம் இடைத்தேர்தலுக்குப் பிறகு அம்மா வைக்கப்போற ஆப்பு சும்மா ராக்கெட் கணக்கா இவரு மேல பாயப்போகுதுன்னு தெரியாப் போச்சு.மின்தடை அவதியால் போராட்டம் எல்லாம் பிசுபிசுத்துப் போக,இப்போ தலைக்கு மேல கத்தி. ஆத்தா ரூபத்தில ஆப்பு..


--------------------------------------------------------------------------------------------------------------------
 தம்பி... டீ இன்னும் வரல.... 
                 
தமிழீழம் அமைவது தான் திமுகவின் குறிக்கோள்: கலைஞர்                                
---------------------------------------------------------------------------------------------------------------------
கேப்டனுக்கு விழுந்த நெத்தியடி..

 சங்கரன்கோயில் பிரச்சாரத்தில் இன்னொரு சுவாரஸ்யம்....பிரச்சாரத்துக்கு போற விசயகாந்து எக்குத்தப்பா எதையாவது பேசி வசம்மா வாங்கிக் கட்டிக்கிறதே வேலையாப் போச்சு.இந்த தடவ சங்கரன்கோயில் கடையாலுரூட்டியில் விசயகாந்துக்குக்கும் அந்த ஊர் கிராமவாசிக்கும் நடந்த சூடான உரையாடல்.

விசயகாந்து : இடைத்தேர்தலுக்குப் பிறகு மின்வெட்டு இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.இது மேலும் அதிகரித்தால் மக்கள் என்ன பாடுபடுவார்கள் என்பதை எல்லோரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.அந்த அம்மா என்னடான்னா..........  ........      

இதை கேட்டுகிட்டிருந்த ஒரு கிராமவாசி கடுப்பாகி உடனே குறிக்கிட்டு........

கிராமவாசி:  ஏன்யா.....மின்சாரம் இருப்பதால்தானே உன்னால இப்ப மைக்க  புடிச்சி பேசமுடியுது..."

 உடனே கடுப்பான நம்ம விசயகாந்து: யாருயா நீ?  எந்த ஊருயா உனக்கு..?

கிராமவாசி:எங்க ஊர்ல வந்து என்னப்பாத்து யாருன்னு கேக்கிற...  மொதல்ல நீ யாரு?

உடனே நம்ம விசயகாந்துக்கு கண்கள் தீப்பிழம்பாக மாறுகிறது.அவர் நாக்கு பற்களுக்கிடையே சிக்கி நான்காக மடிகிறது.....

விசயகாந்து : அப்ப... நீ மேல வா பாக்கலாம்...

கிராமவாசி: நான் எதுக்கு மேலே வரணும் ?...மொதல்ல நீ கீழே வா....

இப்படியே தொடர்ந்த வாக்குவாதம் பிறகு கொழுந்துவிட்டு எரிய கடைசியில் போலிஸ் வந்து தண்ணி ஊற்றி அணைத்தார்களாம்.

        முடிஞ்சா.... என் கைக்குள்ள இருக்கிற 'கமார்கட்'ட புடிங்கிப்பாரு!!!!..
---------------------------------------------------x --------------------------------------------------------------

கிரிஷ்ணலீலை

                சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி பூச்சாண்டி காட்டின கதையா இருக்கு இலங்கைக்கு எதிரான  அமெரிக்க தீர்மானத்தில இந்தியாவின் நிலை.
     இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், ஆயிரக்கணக்கான அப்பாவி  தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட சில காட்சிகளை  சானல் 4  தொலைக்காட்சி வெளியிட்டபோது கலங்காத நெஞ்சங்கள் கூட கண்ணீர் வடித்தது.தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் (காங்கிரஸ் உட்பட)வெகுண்டு எழ,வேறு வழியில்லாமல் மௌன சாமியார் முதல் முறையாக மனமிறங்கி தமிழர்களுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.தமிழர்களின் வாழ்வை பறித்து சாகடித்த இலங்கைக்கு ஐ.நா.,வில் பாடம் புகட்ட இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்தது.ஆனால் நமக்கு ஆப்பு வைக்கிறவன் நம்மை சுத்தி தான் இருப்பான் என்பது போல கன்னடகாரன் S.M.கிருஷ்ணா,இலங்கைக்கு எதிரான நிலையை எடுப்பதில் இந்தியா யோசிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.நம்ம நாட்டின் மீது ரொம்ப அக்கரைத்தான் இந்தாளுக்கு......நம்ம நாட்டு தீர்மானத்தைப் படிக்கிறதுக்குப் பதிலா பக்கத்து நாட்டு தீர்மானத்தை வாங்கி படிச்சி மானத்தை வாங்கினவனாச்சே....கன்னட பிரசாதத்தோட டீலிங் பேசவே உனக்கு நேரம் பத்தாதே...ஏன் ராசா...எங்கே அந்த டோப்பா முடியையும்,பல் செட்டையும் கெழட்டி உன் உண்மையான மொகத்த மக்களுக்கு காமி பாப்போம்....... 
 

 --------------------------------------------x---------------------------------------------------

டாக்டராக நடிக்கும் புவ்வா....
                                           
                                'அந்த' மாதிரி வேலை செஞ்சி 'அந்த' மாதிரி கேரக்டர்ல நடிச்சி 'அந்த' மாதிரி நடிகைன்னு பேர் வாங்குன புவ்வா (புவனேஸ்வரியை செல்லமா..)கடைசியில சவுத்ல உள்ள ஒரு டாகுடருகிட்ட ஐக்கியமானது எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.இப்ப இதுவல்ல நியுஸ்.....இப்ப நம்ம புவ்வா, இயக்குனர் வெங்கடேஷ் இயக்கத்துல  ஒரு படத்துல டாகுடரா நடிக்கிறாராம். இனிமேல் நான் அந்த மாதிரி கேரக்டர்ல நடிக்காம இந்த மாதிரி நடிக்கப் போறேன்னு சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்திட்டாங்க...ஏன் வெங்கடேஷ் சார்....டாகுடருனா மாத்ருபூதம் டைப் டாகுடருதானே?

 வெயிட்.. வெயிட்..இதெல்லாம் ஒரு நியூஸானு பிக்காலித்தனம்மா கேள்வி கேட்கக் கூடாது...நேத்திக்கு சிங்கபூர் தமிழ் முரசுல இதுதான் 'ஹாட் நியூஸ்'      
 ------------------------------------------------------- x ----------------------------------------------------------------------

பொழைக்க வந்த எடத்தில் எதுக்கு தம்பி பொல்லாப்பு 


       சிங்கப்பூரில் நேற்று ஒரு இந்தியருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பெயர் கோபிநாதன்.முழு பெயர் பிஜிகுமார் ரேமாதேவி நாயர் கோபிநாதன்.நம் நாட்டிலிருந்து இங்கு வந்து ஷிப் யார்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.இவருக்கும் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோசலின் ரெய்ஸ் பாஸ்கா என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதி அந்தப்பெண், மேன்ஷனில் அவரது அறையில் கொலையுண்டு கிடந்தார்.அவருடைய உடலில் மார்பு, வயிறு, கழுத்துப் பகுதியில் பல தடவை ஆயுதத்தால் குத்தப்பட்டு இருந்தது.சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட கோபிநாதன்  பின்பு உண்மையை ஒத்துக் கொண்டுள்ளார்.தவறாக அந்தப் பெண் தன்னை அணுகியதாகச் சொன்ன கோபிநாதன்,அந்தப் பெண்ணை தான் கொலை செய்ததை மறுக்கவில்லையாம்.பிழைப்பைத் தேடி வெளி நாடுகளுக்கு வரும் நம்மவர்கள் அந்தந்த நாட்டு சட்டத்திட்டங்களின் கடுமையை உணர்ந்து,தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்துவிட்டால் இது போன்ற  துயரங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லாமல் போகும்.
--------------------------------------------------------------- x ----------------------------------------------------------
      
      என்ன அதுக்குள்ளே கெளம்பிடீங்க....கடைசியா ஒரு தெய்வத்தரிசனம் பாத்துட்டு போங்க... ஆனா இவர் எல்லாருடையக் கண்களுக்கும் தெரிய மாட்டார்.உங்கள் கண்களுக்கு ஒரு அற்புத சக்தி இருக்க வேண்டும்.அதை எவ்வாறு பெறுவதுனு யோசிக்கிறவங்க இங்கே  போய் பார்க்கவும். 

 ஒரு க்ளு... இதன் உருவம் இப்படித்தான் இருக்கும்.


--------------------------------(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))))))))))))----------------------

3 comments:

 1. அந்த 3டி படம் சூப்பர்...

  நட்புடன்
  கவிதை காதலன்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பரே

   Delete
 2. 3D படத்தை நானும் ட்ரை பண்றேன். அவுட்-ஒவ்-போகஸ் மட்டும் ஆகுது. படம் தெரியலயே.

  ReplyDelete