Tuesday 27 March 2012

சிதறல்கள்-5

   
 சைனீஸ் மொழியிலும் கலக்கும் இசைப்புயல்.

   சமீபத்தில் ஆபிசில் நான் மும்முரம்மாக வேலை பார்த்துக்கொண்டிருந்த  போது என் அருகே உள்ள  சைனீஸ் நண்பர் ரேடியோவில் பாட்டு கேட்டுக் கொண்டே வேலை செய்து கொண்டு இருந்தார்.சட்டென்று ஒரு பாடல் என் கவனத்தை திசை திருப்பியது.அது முதல்வன் படத்தில் வரும் ஷக்கலக்க பேபி பாடல்.ஆனால் ஒலித்தது சீன மொழியில்.சீன நண்பரிடம் விசாரித்தபோது இது சிங்கப்பூர் பாடகி 'கெல்லி பூன்' 2007 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆல்பத்தில் உள்ள பாடல் எனவும் இது சீனர்களின் மிக விருப்பமான பாடல்களில் இதுவும் ஓன்று என தெரிவித்தார்.ஆனால் முதல்வன் படம் 2001-ல் வந்ததல்லவா... அதிலிருந்து சுட்டுவிட்டார்களோ என்று நண்பரிடம் கேட்டபோது இல்லவே இல்லை இது ஒரிஜினல் வெர்சன் என்று கூற,எனக்கு பொறுக்க முடிய வில்லை.நம் இசைப்புயலின் பாடல்தான் இது என நிருபிக்க வேண்டும் என்று முதல்வன் பாடலை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து ஓடவிட்டு நண்பரை கவனிக்க சொன்னேன்.ஆனால் அவர் மனம் ஏனோ ஒத்துக்கொள்ள மறுத்தது.சரி..எப்படி அவரை நம்ப வைப்பது என்று யோசித்த நான் பின்பு நேரடியாகவே அந்தப் பாடலை இணையத்தில் தேடிய போது எனக்கு அந்த இன்ப அதிர்ச்சி கிடைத்தது.அந்த ஆல்பத்திலே இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்று எழுதப்பட்டிருந்தது.அதை அவரிடம் காண்பித்தவுடன் அவர் தலையை சொரிந்து அசடு வழிந்ததைப் பார்த்து எனக்கு பாவமாக தெரியவில்லை.. மாறாக பெருமையாக இருந்தது நம் இசைப்புயலை நினைத்து.

      
----------------------------------------------x----------------------------------------------

கூகுள் மேப்பில் மறைக்கப்படும் பத்து இடங்கள்.

        உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் இருந்த இடத்திலிருந்தே பார்க்கும் வசதியுடைய கூகுள் எர்த் மற்றும் கூகுல் மேப்பில் மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியிருக்கிறது.இதில் சில இடங்கள் வேண்டுமென்றே மங்கலாக தெரியும் படி செய்யப்பட்டுள்ளது என்பது தான் அது.வடகொரியாவில் பெரும்பாலான இடங்கள்,ராயல் பேலஸ் நெதர்லாந்து,நியூயார்க் அணுமின் நிலையம் உட்பட ஒரு சில இடங்கள் மங்கலாக தெரிவதாகச் சொல்லப்படுகிறது.
   
   ஆனால் இதைப்பற்றி கருத்து தெரிவித்த கூகுள் நிர்வாகம்,எங்களுக்கு தகவல் மற்றும் படங்கள் தரும் நிறுவனங்கள் அந்தந்த நாட்டின் பாதுகாப்பிற்கும் சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு தான் படங்களை வெளியிடவேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள்.அவர்கள் தரும் படங்களைத்தான் நாங்கள் பிரசுரிக்கிறோம்.அதில் ஒரு சில படங்கள் இது போல மங்கலாகத்தான் தெரிகிறது.

கூகுள் மேப்பில் மங்கலாக தெரிவதாகச் சொல்லப்படும் அந்த பத்து இடங்கள்...

1. The Royal Residence, The Netherlands 

2. Buffalo Niagara International Airport

3. Tantauco National Park, Chile

4. Keowee Dam, South Carolina

5. Mysterious Russian Site

6. Minami Torishima Airport, Japan

7. The Michael Aaf Building, Utah

8. Cornell University Combined Heat and Power Plant, New York

9. Babylon, Iraq

10. Vlissingen, The Netherlands

-------------------------------------------------------------x-------------------------------------------------------------------  

அனுபவம் பேசுது...

  #   எல்லா காரியத்திற்கும் கடவுளையே நம்பாதீர்கள்.பிறகு கடவுள் நம்பிக்கையே இல்லாமல் போய்விடும்.

#  கலகலன்னு பேசுறவங்க எல்லோரும் காசு விசயத்துல கறாரா இருப்பாங்க..

#   பாசம் அதிகமாக இருக்கிற எல்லோர்கிட்டேயும் கோபமும் அதிகமாக இருக்கும்.ஆனா கோபம் இருக்கிற எல்லோர்கிட்டேயும் பாசம் இருக்கும்னு சொல்ல முடியாது. 
 
 -----------------------------------------------------------x--------------------------------------------------

பழிக்குப் பழி?

     கிரிக்கெட் விளையாட்டுல நம்மள விட பாகிஸ்தான் ரசிகர்கள்  பயங்கர வெறியர்கள்.வெற்றியோட திரும்பினா ஏர்போர்ட்டுல ஏக போக வரவேற்பு கிடைக்கும்.பலே..பலே...நம்ம ஆளுங்கனு அந்த நாட்டு பத்திரிக்கையெல்லாம் பாராட்டுவாங்க.அதுவே தோத்துட்டாய்ங்க அவ்வளவுதான்.அழுகின முட்டை, தக்காளி அபிஷேகம் தான் ஏர்போர்ட்டுல.அங்க இவ்வளவு வாங்கினாங்க.இங்க இவ்வளவு வாங்கினாங்க-னு நோண்டி நொங்கெடுத்துடுவாய்ங்க.வாங்கலனா கூட வாங்கினதா பேசுவாங்க.ஒரு சில நேரங்களில பயந்துகிட்டு ஊருப்பக்கம் வராம அப்படியே ஒவ்வொரு நாடா சுத்திட்டு யாரும் கண்டு கொள்ளாத நேரத்தில ஊருக்கு திரும்பின வீரர்களெல்லாம் நிறைய பேர் இருக்காங்க.இப்ப இதெல்லாம் எதுக்குன்னு யோசிக்கிறவங்க அடுத்ததா படிங்க.

  சமீபத்தில ஆசியக்கோப்பையை வென்று திருப்பின பாகிஸ்தான் வீரர்களுக்கு வரவேற்பு தருவதற்காக  ஏர்போர்ட்டுல ஏராளமான ரசிகர்கள் காத்திருந்திருக்காங்க.வீரர்கள் வந்து இறங்கியதும் அவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்காக முண்டியடித்து எல்லோரும் வர பெரிய தள்ளுமுள்ளு நடந்ததாம்.இதுல கோபமான அ.'.ப்பிரிடி ஒரு ரசிகரை ஓங்கி அறைந்து விட்டாராம்.பிறகு சமாதானப்படுத்தி அவரை(அடி வாங்கியவரை அல்ல) காரில் ஏற்றி அனுப்பி விட்டார்களாம்


   (தோத்தா அவிங்க இவிங்கள அடிக்கிறாய்ங்க....ஜெயிச்சா இவிங்க அவிங்கள அடிக்கிறாய்ங்க..பழிக்குப் பழி வாங்குறதுல பாகிஸ்தான்காரங்கள அடிச்சுக்க முடியாதுப்பா... ) ----------------------------------------------------------------x-----------------------------------------------------

  மிழ்ல எழுதும் போது வரும் சிறு சிறு குழப்பங்களில் இதுவும் ஒன்னு. ர-ற.மொதல்ல உள்ளத 'சின்ன ர'- ம்பாங்க....அடுத்து உள்ளத 'பெரிய ற'- ம்பாங்க. எழுதுவதிலும் சரி பேசுவதிலும் சரி..இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஆனால் பேச்சு வழக்குல இது ஒன்னும் பெரிய பிரச்சனையில்ல.இருந்தாலும்  ப்ளாகர்ல எழுதும் போது சில நேரங்களில தவறா வந்துடுது. உதாரணத்திற்கு, 

    அதற்கு      -           அதற்க்கு 
    சிறிய-பெரிய      சிரிய-பெறிய             
    கற்போம்       -      கற்ப்போம்                      
   வரவேற்பு      -   வரவேற்ப்பு    


   இந்த சின்ன 'ர' இருக்கு பாருங்க...இது ரொம்ப மென்மையானது.இது புள்ளி எழுத்தா (மெய்யெழுத்து) வரும்போது பக்கத்துல இன்னொரு புள்ளியெழுத்து வருவதற்கு அனுமதிக்கும். 
  
          உதாரணம்.....உணர்ச்சிகள்.
       
      ஆனா இந்த பெரிய'ற' (வல்லினம்) இருக்கு பாருங்க....ரொம்ப கறாரான பேர்வழி.தன் பக்கத்துல புள்ளி எழுத்து வர எப்போதும் அனுமதிக்காதுங்க. அதற்கு உண்டான சத்தத்தைதையும் இதுவே சேர்த்து கொடுத்துடும்.  
         உதாரணம் ..அதற்கு,வரவேற்பு,கற்போம். 

--------------------------------------------------------------------x-------------------------------------------------------- 
Legends.....
 
----------------------------------------------------------X ----------------------------------------------

சரி....இது உள்ளே இருக்கிற கிருஸ்துமஸ் தாத்தாவை கண்டுபிடிங்க பாப்போம்.
-------------------------------------------((((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))))----------------------
18 comments:

 1. ரஹ்மான்...ரஹ்மான் தான்...
  அப்புறம் அந்த படம்...அருமை...தலைப்பும் அருமை..legends

  ReplyDelete
  Replies
  1. வாங்க ..மாலைவணக்கம்..மிக்க நன்றி

   Delete
 2. நச்..நச்..நச்..நச்....நாலு வார்த்தை சொல்லிட்டேன்

  ReplyDelete
  Replies
  1. ப்ச்.. ப்ச்.. ப்ச்.. ப்ச்..கலக்கிடீங்க.....

   Delete
 3. சிதறல்கள் சூப்பர்......

  ReplyDelete
 4. என்னதான் இருந்தாலும் நம்ம லோக்கல் ஷக்கலக்க பேபியை அடிச்சுக்கமுடியாது.. இருந்தாலும் அந்த ஃபிகர்ஸ் சூப்பர்ப்.. ஹி..ஹி,,


  நட்புடன்
  கவிதை காதலன்

  ReplyDelete
  Replies
  1. //நம்ம லோக்கல் ஷக்கலக்க பேபி//
   யு மீன் சுஷு..... புரியுது.. புரியுது..வருகைக்கு நன்றி நண்பா...

   Delete
 5. சிதறல் அழகாக இருக்கிறது. அதிலும் அந்த Legends போட்டோ அருமை. எங்கிருந்து எடுத்தீங்க?

  ReplyDelete
  Replies
  1. வாங்க....ரொம்ப நன்றி...

   Delete
 6. சிதறல்கள் சிறப்பு..... பிடிச்சிருக்குங்க

  ReplyDelete
 7. அனுபவம் பேசுது...


  அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 8. Replies
  1. தகவலுக்கு நன்றி...

   Delete
 9. //இந்த சின்ன 'ர' இருக்கு பாருங்க...இது ரொம்ப மென்மையானது.இது புள்ளி எழுத்தா (மெய்யெழுத்து) வரும்போது பக்கத்துல இன்னொரு புள்ளியெழுத்து வருவதற்கு அனுமதிக்கும்.

  உதாரணம்.....உணர்ச்சிகள்.

  ஆனா இந்த பெரிய'ற' (வல்லினம்) இருக்கு பாருங்க....ரொம்ப கறாரான பேர்வழி.தன் பக்கத்துல புள்ளி எழுத்து வர எப்போதும் அனுமதிக்காதுங்க. அதற்கு உண்டான சத்தத்தைதையும் இதுவே சேர்த்து கொடுத்துடும். //
  எளிமையாக சுவாரஸ்யமாக

  ஒரு விளக்கம் வரவேகிறேன் ................

  உங்கள் மற்ற பதிவுகளை பார்த்த பின் மீண்டும் கருத்திடுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ.நம் பதிவுகள் எல்லாம் சேர்ந்த கலவையாக இருக்கும்.ஒரு சிலவையே உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன்.

   Delete