Sunday 25 March 2012

நெஞ்சு பொறுக்குதில்லையே!!!

                                   

 இது...... வியட்நாம் நாட்டின் வரலாற்றையே மாற்றி எழுதிய ஒரே ஒரு புகைப்படம்.......!!!!       மேலே உள்ள புகைப்படம் 1972 ம் வருடம் ஜூன் -8 ஆம் தேதி அமெரிக்க இராணுவத்தின் விமானங்கள் டிராங்பாங் என்கிற வியட்நாமிய கிராமத்தின் மீது பாஸ்பரஸ் குண்டு மழை பொழிந்த போது உடைகள் முழுவதும் பற்றி எரிய  இந்தச் சிறுமி ஓடி வந்த புகைப்படம் அமெரிக்க நாளிதழ் ஒன்றில் வெளி வந்தது. அதைக் கண்ட அமெரிக்க மக்கள் கொதித்தெழுந்தார்கள்.வீதிகளில் கூடி போராட்டம் நடத்தினார்கள்.வியட்நாம் சுதந்திரம் பெற்றது.
        அமெரிக்கர்களுக்கும் அவர்களுக்கும் எந்த ரத்த உறவும் இல்லை...தன் நாட்டைச் சேர்ந்தவர்களும் இல்லை...தன் நாடு அடிமைப்படுத்தியிருக்கும் ஒரு நாடு!!அந்த மக்களுக்காக அமெரிக்கர்கள் கொதித்தார்கள்!!!.

        ஆனால் நம் நாட்டின் சகோதர சகோதரிகள் இலங்கை வீதிகளில் கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டு,சிறுமிகள் கூட பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு  நடுவீதியில் பிணமாய் தூக்கியெரியப்பட்ட காட்சிகள் புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் தொடர்ந்து வெளிவந்தாலும் அதைக்கண்டும் காணாததும் போல இருந்து வந்த இந்தியா,மனமிறங்கி செவிசாய்க்க இத்தனை வருடங்களா?

    தமிழினத்தை அழிக்கும் இலங்கைக்கு எதிராக தமிழத்தின் அத்தனை கட்சிகளும் ஒருமித்தக்குரலில் பேச இத்தனை காலங்களா?...நல்லவேளை .. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்திருக்கும் இந்த பொன்னான தருணத்தில் திமுக ஆட்சியில் இல்லை.ஒருவேளை இருந்திருந்தால்.... மௌன சாமியார் யோசித்திருப்பார்.ராசபட்சியோடு கைகுலுக்கி சிரித்து மகிழ இன்னொரு குழு இலங்கைக்கு சென்றிருக்கும்.

    பல்லாயிரக்கணக்கான இன அழிப்பு புகைப்படங்கள் இருந்தும் ஈழத்தை காப்பாற்ற முடியவில்லையே!!! தமிழினத்தை பாதுகாக்க முடியவில்லையே!!! 

       ரத்தகறை படிந்த முசோலினியின் கரங்களை தொட்டு கைகுலுக்க மாட்டேன் என உரைத்தவர்  நேரு. அவர் பரம்பரையின் வழிவந்த சோனியா, தமிழ் மக்களின் மீது பாஸ்பரஸ் குண்டுகளை தெளித்த ராஜபக்ஸேவுடன் கை குலுக்கியது எந்த விதத்தில் நியாயம்? சோனியாவுக்கு தான் இந்திய வரலாறு தெரியாது....காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கும், தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கும் கூடவா தெரியாது?…..


   நெஞ்சு பொறுக்குதில்லையே!!! இந்த நிலை கெட்ட மாந்தர்களை நினைத்தால்.


 -------------------------------------------------------------------------------------------------------------
        யாருய்யா நீங்களெல்லாம்?... எங்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு எப்படி அய்யா வந்தது?.தமிழ்..தமிழ்...தமிழ்....என்று சொல்லியே காலத்தை ஓட்டும் எங்களுக்கு தமிழ் இனம் அழிவதைப்பற்றி சிந்திக்க கூட நேரமில்லாத போது உங்களுக்கு மட்டும் எப்படி அய்யா இந்த யோசனை வந்தது?.எங்களுக்கு ஆட்சி முக்கியம்,பதவி முக்கியம்,குடும்பம் முக்கியம்,சொத்து முக்கியம்,சுகம் முக்கியம்,சொந்த பந்தங்கள் எல்லாம் முக்கியம்.ஆனால்  இதையெல்லாம் விட்டு விட்டு எப்படி அய்யா உங்களால் மட்டும் இப்படி ஒரு காரியம் செய்ய முடிந்தது?.எங்கள் டிஆர்பி ரேட்டை உயர்த்துவதற்கு நாங்கள் செய்வது மானாட மயிலாட,ஜோடி நம்பர் ஒன்,ஜாக்பாட்,கையில் ஒரு கோடி...இதுமாதிரி ஏதாவது ஒன்னு செய்யுரத விட்டுட்டு இதப்போயி எப்படி அய்யா செஞ்சீங்க?.... பொழைக்கத் தெரியாத ஆளா இருக்கீங்களே....   

Dear Mr.Jon Snow ,

   தமினினத்தின் மீது ஏவப்பட்ட அத்துமீறலையும், வன்முறையையும், பாலியல் கொடுமைகளையும் உலகுக்கே வெளிச்சம் போட்டுக் காட்டிய மவராசா.... நீங்கள்(Channel-4) மட்டும் இல்லை என்றால் இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்கள் அப்படியே மறைக்கப்பட்டு இந்நேரம் மறக்கப்பட்டு இருக்கும்..ராஜபட்சே என்ற அரக்கனின் முகத்திரை கிழிக்கப்படாமல் போயிருக்கும்.இலங்கைக்கு எதிரான உலக நாடுகளின் தீர்மானம் வெற்றி பெறாமல் போயிருக்கும்.உங்கள் சேவை இன்னும் தொடரவேண்டும்.உலகத் தமிழர்கள் எல்லோரும் உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கோம் அய்யா.

4 comments:

 1. உண்மையில் நான் அனைவரும் நமக்கு நடந்த கொடுமைச் செயலைத் தட்டிக்கேட்டதற்காக “ஒரு வெள்ளைக்காரனுக்கு” நன்றிக் கடமைப்பட்டிருக்கிறோம். ஏதோ ... வெட்கித் தலை குனிந்தாலும் நல்லது நடந்தால் சரி.

  ReplyDelete
  Replies
  1. தமிழனுக்கு வராத அக்கறை இவர்களுக்கு வந்தது ஆச்சர்மே...வருகைக்கு நன்றி நண்பா..

   Delete
 2. சரியாய் சொல்லி இருக்கீங்க

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பா..

   Delete