Tuesday 27 November 2012

தலைவரின் 'சில்லறைத்தனமான' முடிவு..தடுமாற்றத்தில் உடன்பிறப்புகள்.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு ஆரம்பத்திலிருந்து எதிர்ப்பைக் காட்டிய தலைவர்,தற்போது திடீரென்று  தன் முடிவை மாற்றியிருக்கிறார்.தலைவர் அவ்வப்போது எடுக்கும் தடாலடி முடிவுக்கு இணையதள உடன்பிறப்புகள் விளக்கம் கொடுத்தே சோர்ந்து போகிறார்கள்.நேற்றுவரை FDI-க்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த உடன்பிறப்புகள், தலைவரின் இந்த முடிவை எதிர்பார்க்காததால் தற்போது FDI -க்கு ஆதரவாக என்ன எழுதலாம் எனத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்..

திமுகவின் அரசியல் ரீதியான நிலைப்பாடுகள்,டெல்லியிலிருந்து வரும் காங்கிரஸ்காரர்களால் மாற்றிவிட முடியும் என்றால், கட்சியின் அடிப்படை அரசியல் கொள்கையையே கேள்விக்குறியாக்குகிறதல்லவா ..?

வெளிப்படையாகவே அரசியல்பேரம் நடந்ததுபோல் ஒரு பிம்பம் உருவாகிவிட்டதே...! இனி ஒவ்வொரு முறையும் டெல்லியிலிருந்து 'சிறப்பு பிரதிநிதிகள்' உங்களை சந்திக்க வந்தால் உங்களிடமிருந்து மாறுபட்ட அரசியல் நிலைப்பாடு வெளிப்படுமென்பது திமுகவின் எழுதப்படாத கொள்கையாகவே மாறிவிட்டதே...!  ஒரு முறையாவது பிரச்சினையின் தன்மை சார்ந்து முடிவு எடுக்காதவரை திமுகவின் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடுமோ என்கிற அச்சம் ஒவ்வொரு உடன்பிறப்புகளின் அடி மனதில் தோன்றியிருப்பது நிதர்சன உண்மை.!


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

என் வீடு..என் உரிமை...!!

இரண்டு படங்களுக்கும் அடிப்படையில் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை.முதல்படம் மனிதாபிமானத்தின் உச்சம்.முல்லைக்குத் தேர்கொடுத்த பாரி ஒரு வள்ளல் என்றால் இந்தச் சாலையை வடிவமைத்தவரும் ஒரு வள்ளலே..! இரண்டாவது படம் மனித உரிமையின் ஆகப்பெரிய வெற்றி.இது இரண்டுமே உலகின் ஆகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் சாத்தியமில்லை என்பது கூட யதார்த்த உண்மைதானே?.

1.தன் ஆடம்பர வாழ்க்கைக்காகவும்,அளவிட முடியாத பேராசைக்கும் இயற்கை வளங்களை அழிக்கத் தயங்காத மனிதர்களின் சுயநல சிந்தனைக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது முதல்படம்.சாலையோரம் வளர்ந்த பாவத்திற்காகவே வேரடி மண்ணோடு வெட்டி வீழ்த்தப்படும் நம்மூர் புளியமரங்களுக்கு இது சமர்ப்பணம்...


2.மனித உரிமைகள் மறுக்கப்படுவதுடன்,ஜனநாயக ஆட்சிமுறைக்கு சங்கு ஊதும் உலகின் மிகப்பெரிய நாடு என வளர்ந்த நாடுகளின் வசைமொழிக்கு ஆளாகிய கம்யூனிசிய நாடான சீனாவில் தான் இப்படியொரு அதிசய நிகழ்வு.சாலைகள் போடும்போது நிலத்திற்கு சொந்தக்காரர்களின் சம்மதம் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என சீனாவில் சட்டமே இருக்கிறது.என்னதான் இழப்பீட்டுத்தொகை கொடுத்தாலும் நிலத்திற்குச் சொந்தக்காரர் எடுக்கும் முடிவே அங்கு இறுதியானது.

அரசாங்கம் கொடுக்கும் இழப்பீட்டுத்தொகை தனக்கு போதுமானதாக இல்லையென்று தன் வீட்டை இடிக்க மறுத்துவிட்டார் அதன் "ஹவுஸ் ஓனர்".வேறு வழியில்லாமல் அவர் வீட்டைமட்டும் விட்டுவிட்டு அதைச் சுற்றியுள்ள இடங்களில் சாலையைப் போட்டிருக்கிறது சீன அரசு.

பெய்ஜிங்கில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தபோது அங்கு வசித்து வந்த பழங்குடி மக்களைத் துரத்தியடித்தக் குற்றச்சாட்டு ஏற்கனவே இருக்கையில் இப்படியொரு படத்தைப் பார்க்கும் போது ஆச்சர்யம் வருவது இயல்புதானே...! (மேலே, என் வீடு.. என் உரிமை..! என வீட்டுப் பட்டாவை உயர்த்திக் காண்பிப்பவர் அந்த வீட்டு "ஹவுஸ் ஓனர்"..!!)&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

விடாமுயற்சி..விஸ்வரூப வெற்றி...

வாழ்க்கையில...(இப்படித்தான் ஆரம்பிப்பாங்க...) ஆயிரம் தடைக் கற்கள் வரலாம்...!
அதிஷ்டம் உன்னை எட்டி உதைக்கும்..!
சந்தர்ப்பங்கள் உன்னை சம்மட்டியால் அடிக்கும்...!
வாய்ப்புகள் வாய்க்கு வந்தவாரு திட்டும்..!
சில்லி மேட்டருக்கெல்லாம் உலகம் உன்னை எள்ளி நகையாடும்..!
காணுமிடத்தில் கையை நீட்டினால் உலகம் உன்னை நையப் புடைக்கும்...!
தன்னம்பிக்கைத் தளரவிடாதே மானிடா...!!
விடாமுயற்சி..விஸ்வரூப வெற்றி...!!!

எனக்கெல்லாம் மூணு வயசு இருக்கும்போதே...

தன்னம்பிக்கை என்பது தண்ணி சாப்டற மாதிரி....! 
விடாமுயற்சி என்பது விரல் சூப்ற மாதிரி...!

நம்பிக்கை இல்லைன்னா வீடியோவைப் பாருங்க...நான் ஒன்னு முடிவு பண்ணிட்டேனா.. என் பேச்சை நானே கேட்க மாட்டேன்.. :-))))))


 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சும்மா..ரிலாக்ஸ்...

 ச்சே...பத்திரிக்கையாளர் சந்திப்பில தலைவரு மானத்தை வாங்கிட்டாரு...

என்ன செஞ்சாரு..?

உங்களுக்கு 'இன்பீரியாரிட்டி காம்ளக்ஸ்' இருக்கிறதா பேசிகிறாங்களே உண்மையானு கேட்டதுக்கு...'இது எதிர் கட்சிகளின் திட்டமிட்ட சதி..எங்கே, எந்த இடத்தில் அந்த காம்ப்ளெக்ஸ் இருக்கிறது என்பதை சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்'-னு சொல்லியிருக்காரு..


                                        ---------------X-------------

கேப்டன்..நீங்க சர்வதேச நீரோட்டத்தில கலந்துட்டதா அறிக்கை விட்டத பேஸ்புக் -ல வேற மாதிரியா கமென்ட் போட்டு கேவலப்படுத்திட்டாங்க..

என்ன எழுதினாங்க...?

இதுவரை லோக்கல் சரக்கு அடிச்சிட்டு இருந்தவரு..இப்போ பாரின் சரக்கு அடிக்க ஆரம்பிச்சுட்டாரு போல..அதைத்தான் இப்படி நாசுக்கா சொல்றாருன்னு சொல்றாங்க...
வணக்கங்களுடன்..
மணிமாறன். 
---------------------------------------------((((((((((((((((((((())))))))))))))))))))))))))---------------------------------------------


Friday 23 November 2012

அதிமுக கவுன்சிலரின் கந்துவட்டி அடாவடி...உயிரை மாய்த்துக்கொண்ட கொடூரம்.....!

டந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவைப் படுதோல்வி அடையச்செய்த காரணிகளில், கொடநாட்டிலிருந்து  கடைசி பஸ்ஸைப் பிடித்து, கடைசி நேரத்தில்,கடைசிக் கட்டப் பிரச்சாரங்களில் காவியத்தலைவிப் பேசிய நெஞ்சுருகும் வசனம்தான் மிக முக்கியமானது.அதிலும் ஓவ்வொரு ஊரில் பேசும் போதும் அங்குள்ள திமுக பெரும்புள்ளிகளும் கவுன்சிலர்களும் செய்த அடாவடித்தனத்தையும் அத்துமீறல்களையும் பட்டியலிட்டு, அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுப் பேசியபோது கேட்டுக்கொண்டிருந்த மக்கள் அகமகிழ்ந்துப் போனார்கள்.அம்மாவின் ஆஸ்தான பினாமி தா.பா. தினம்தோறும் உச்சரிக்கும் மந்திரமான 'இந்தியாவைக் காக்கும் சக்தியின் வடிவமே...' என்பதை மக்களும் அன்று ஓரளவு நம்பத்தான் செய்தனர்.

ஆட்சியில் அமர்ந்தவுடன் அதை ஓரளவு நிருபிக்கவும் செய்தார்.மீட்டுக் கொடுத்த நிலங்களின் மொத்த மதிப்பு பலநூறு கோடிகள் என ஊடகங்களில் வந்த செய்தியைப் படித்தபோது சாட்டையைச் சுழற்றும் ரிங் மாஸ்டரின் வடிவமாகத்தான் அன்று தெரிந்தார்.அந்தச் சாட்டை இன்றுவரை சுழன்றுக் கொண்டுதான் இருக்கிறது, உடன்பிறப்புகளுக்கு எதிராக மட்டும்.

இடைத்தேர்தல் வெற்றியை மட்டுமே வைத்து தனக்குத் தானே நற்சான்றிதல் கொடுத்துக் கொண்டு அடித்தள மக்களின் அடிப்படைத் தேவைகளில் கோட்டைவிட்ட திமுகவின் அதே தவறை அதிமுக அரசும் செய்கிறது.ஒட்டுமொத்த நடுத்தர மக்களின் கோபங்கள் திமுக பக்கம் திரும்பியதற்கு அந்தக் கட்சியின் கவுன்சிலர்களின் அடாவடி-அடிதடி அரசியல்தான் காரணம் என்பது யதார்த்த உண்மை.அவர்களுக்கு எந்த விதத்திலும் இவர்கள் சளைத்தவர்களல்ல என்பதைப் பட்டவர்த்தனமாக  நிரூபித்திருக்கிறது திருச்சியில் நடந்த அந்த சம்பவம்.  தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி,சமூக விரோதிகளைக் கூட்டு சேர்ந்துக் கொண்டு கட்டப் பஞ்சாயத்து,கந்துவட்டி போன்ற விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த  திருச்சி 25 வது வார்டு கவுன்சிலர் ஜெரால்டு மில்டன்-னின் கொலை மிரட்டலுக்குப் பயந்து தொழில் அதிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.அவரின் கடைசிகட்ட நிமிடங்கள் மரண வாக்குமூலம் போல் செல்போனில் வீடியோவாகப் பதியப்பட்டு வெளிவந்ததைப் பார்க்கும் போது நெஞ்சே வெடித்துவிடுவது போல் உள்ளது.

"வாங்கினது நாங்க அஞ்சு லட்சம்தான்....இன்னிக்கி 25  லட்ச ரூபாய் என்னை கட்டு..கட்டு... கட்டு...கட்டு...கட்டு...கட்டு...கட்டுனு தொந்தரவு பண்றாய்ங்க...எவ்வளவோ வெத்து பேப்பர்ல எழுதி வாங்கினாங்க ...இதை வச்சி உங்களை என்ன வேணும்னாலும் செய்வோம் அப்படீன்னு மிரட்டுராய்ங்க.. கலக்டரம்மா...முதல்வரம்மா..நீங்கதான் என் பொண்டாட்டியை இவங்க கிட்டேருந்து காப்பாத்தணும்.." இது அவரின்  மூச்சு மொத்தமாக அடங்குவதற்கு சில நொடிகளுக்கு முன் பேசியது.  கொஞ்சம் நேரம் ஒதுக்கி இந்த வீடியோவைப் பாருங்க...இப்படியொரு நிகழ்வு என் பரம எதிரிக்குக் கூட வரக்கூடாது...  :-((((((

கந்துவட்டியைப் பற்றி சினிமாவில்தான் பார்த்திருக்கேன். கனாகண்டேன்,தடையறதாக்க போன்ற திரைப்படங்களில் கந்துவட்டியின் உக்கிரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியபோது மிகைப்படுத்தப்பட்ட காட்சியமைப்பு போல் தோன்றியது.ஆனால் இந்த வீடியோவைப் பார்க்கும் போதுதான் அது எந்த அளவுக்கு உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர முடிகிறது. 

தன் சாவு கந்துவட்டி கலாச்சாரத்துக்கு ஒரு முற்றுபுள்ளியாக இருக்கவேண்டும் என்பது அவர் பேச்சில் தெரிகிறது.இது முதல்வர் அவர்களுக்கு வைக்கும் வேண்டுகோளாகவே அமையவேண்டும் என்பதில் அவர் தீர்மானமாக இருந்ததும் உணரமுடிகிறது. முதல்வர் இந்த 'கந்துவட்டி கோயிந்தன்கள்' மீது நடவடிக்கை எடுப்பார..?அல்லது இது திமுகவின் திட்டமிட்ட சதியென்று அலட்சியப் படுத்துவார..?  
வணக்கங்களுடன் ...
மணிமாறன்  

-----------------------------------------------------(((((((((((((((((())))))))))))))))))))))))))))))------------------------------------------ 

Thursday 22 November 2012

தமிழக அரசியல் களத்தில் 'வௌவால்கள்'


"ஆமை புகுந்த வீடு உருப்புடாது"  என்று தமிழில் முற்போக்குச் சிந்தனையைத் தூண்டக்கூடிய(?!) ஒரு பழமொழி உண்டு.அதனாலையோ என்னவோ தமிழக அரசியலில் களம் பல கண்ட அந்தப் புகழ்பெற்ற நடிகரை  'ஆமை' என்று அரசியல் நோக்கர்கள் அழைத்தனர்.........!!!

அதேபோல் தமிழக அரசியலில் 'வௌவால்கள்' நிறையவே உண்டு.

தான் இருக்கும் கட்சி மட்டுமே ஜெயிக்கவேண்டும் என நினைப்பவன் அரசியல்வாதி...ஜெயிக்கும் கட்சியில் மட்டுமே தான் இருக்க வேண்டும் என நினைப்பவன் வௌவால்..(புரியலையே....என்று உச்சந்தலையை சொரிபவர்கள் கடைசியில் சொல்லப்பட்ட கதையை முழுவதுமாகப் படிக்கும் வரை பொறுத்திருக்கவும்.)

நான் சொல்லப்போ
தும் அதுமாதிரியான ஒரு வௌவாலைப் பற்றிதான்.

"காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி....பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி........"   

இப்படி பாட்டாவே படிக்க வேண்டிய விஷயத்தை,பேஸ்புக்ல ஸ்டேடஸ் போடுற மாதிரி அந்தக் கட்சியின் தலைமைக்கு 'சுருக்கமா' தெரியப் படுத்தியிருக்கார் அவர்.ஆனால் இது முதல்முறை அல்ல...மாசத்துக்கு ஒருக்கா இப்படித்தான் கெஞ்சிப் பார்க்கிறார்.ஆனால் அழைப்பு வந்தபாடில்லை.கடைசில இவருக்கு அழைப்பு வருகிற நேரம் பார்த்து ஆட்சி மாறும்.அப்புறம் இந்தப் பக்கம் தாவுவார்(பின்ன...அதனாலதானே வௌவால்-னு சொல்றோம்..)

நான் எந்த வெளவாலைப் பற்றி சொல்றேன்னு புரியுதுங்களா...? அவர் ஒரு 'காமெடி நடிகர்' கம் 'நாடக நடிகர்' கம் 'அரசியல் கோமாளி..ச்சீ அரசியல்வாதி' கம் 'முன்னாள் எம்எல்ஏ' (போற இடமெல்லாம் 'பசை' போட்டு ஓட்டிப்பார் போல)..ஓரளவு யூகித்து இருப்பீங்க....

 
"தோட்டத்திலிருந்து அழைப்பு வந்தால் அதிமுகவில் சேருவேன்.." இதுதான் அந்த மறைமுக
க் கெஞ்சல்.

அதுசரி ...எதனால் வெளவால்...?

முதலில் வெளவால் ஏன் தலை கீழாக தொங்குகிறது என்ற இந்தக் கதையை படித்தீர்கள் என்றால் தமிழக அரசியலில் எத்தனை வெளவால்கள் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதை இனம் காணமுடியும். 

முதலில் வெளவால் ஏன் தலைகீழாக தொங்குகிறது ?(முகநூலில் படித்தது)

ரு காட்டில் விலங்குகளுக்கும்,பறவைகளுக்கும் பலத்த போர்.காடு யாருக்குச் சொந்தமென்று. பல நாட்கள், மாதங்கள் நடைபெறுகிறது போர். ஒரு கட்டத்தில் விலங்கினங்கள் ஜெயிக்கிற மாதிரி ஒரு சூழல் வருகிறது. பறவைக்கூட்டத்தில் இருந்த வௌவால் இதைக் கணிக்கிறது. உடனே பறந்து விலங்கின் கூட்டணியில் தன்னை இணைத்துக் கொள்ள நினைக்கிறது.

வௌவாலைத் தடுக்கிற பறவைக்கூட்டணி. ‘நீ செய்வது நியாயமா’ என்று கேட்கிறது.

பறவைக்கூட்டணி தன்னைப் பார்த்து அவ்வாறு கேட்டதும் வௌவால் சொன்னது: ‘நானென்ன உங்களைப் போல முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிறேனா? நான் குட்டியிட்டு பாலூட்டுகிறேன். பாலூட்டுவதால் நான் விலங்கினம்’ என்று சொல்லிவிட்டு விலங்குக் கூட்டணியில் சேரப் பறந்தோடியது.போரில் வெல்ல எவர் வந்து கூட்டத்தில் சேர்ந்தாலும் சேர்த்துக் கொள்வோமென விலங்கினமும் வௌவாலைச் சேர்த்துக் கொண்டது.

போர் தொடர்ந்தது. இரு தரப்பும் சம பலத்தில் இருக்க, இப்போது பறவையினம் ஜெயிக்கிறாற்போல ஒரு தோற்றம். பயந்தது வௌவால். சடாரெனப் புறப்பட்டது பறவைக் கூட்டத்தில் சேர. தடுத்த விலங்கினத்திடம் கூறியது: ‘நானென்ன உங்களைப் போல நாலு காலால் நடக்கிறேனா?இதோ பாருங்கள்..இறக்கை இருக்கிறது.. பறக்கிறேன். பறப்பதால் நான் பறவையினம்!’ என்று சொல்லிவிட்டுப் பறந்தது. கூட்டணி தர்மத்தில் பறவையினமும் வௌவாலைச் சேர்த்துக் கொண்டது!

மீண்டும் பல நாட்கள், வாரங்கள், மாதங்கள் போர் தொடர்ந்தது. பொறுத்துப் பார்த்த வனதேவதை சடாரென இரண்டு தரப்பினரின் முன்பும் தோன்றினாள்.

“இதோ பாருங்கள்…. இந்தக் காடு உங்கள் இருவருக்கும் சொந்தமானதல்ல. அப்படி ஓர் எண்ணமிருந்தால் அதை மூட்டை கட்டி வையுங்கள். இந்தக் காடு எனக்குச் சொந்தம். இதில் நீங்கள் இருக்க வேண்டுமானால் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.இந்த இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். இப்படி சண்டையிடுவீர்- களேயானால் இப்போதே இந்தக் காட்டை விட்டு வெளியேறுங்கள்’ என்றது கண்டிப்பான குரலில்.

வனதேவதையின் உக்கிரத்தைக் கண்ட விலங்கினமும், பறவையினமும் தங்கள் போரை நிறுத்திக் கொள்வதென தீர்மானித்தன. போரை வாபஸ் வாங்கிக் கொண்டு ஒற்றுமையாக காட்டின் நலனுக்காக உழைப்பது என முடிவெடுத்தன.

இப்போது திண்டாடியது வௌவால். பறவையினம் ‘நீ என்ன எங்களைப் போல முட்டையிட்டா குஞ்சு பொரிக்கிறாய்? போ.. போ.. விலங்குகளுடனே வாழ்’ என்று துரத்த விலங்கினமோ ‘நீ இறக்கையெல்லாம் வைத்துக் கொண்டு பறக்கிற பறவையல்லவா.. போ.. போ… பறவைக் கூட்டத்தில் சென்று வாழ்’ என்று துரத்தின.

சந்தர்ப்பத்திற்காக மாறி மாறி கூட்டு சேர முற்பட்டதால் இரண்டு புறமும் சேர முடியாத வௌவால், அவமானத்தால் பகலில் தலைகாட்ட இயலாமல் பகல் முழுதும் தலைகீழாகத் தொங்கி இரவு மட்டுமே இரை தேடி, உண்ணும் வாய் வழியாகவே மலமும் கழிக்கிற அவல நிலைக்கு ஆளானதாம்!

இப்போது புரியுதுங்களா வௌவால் என்று அழைத்ததற்கான பின்னணி...! அப்படிப் பார்த்தால் காட்டில் உள்ள வௌவால்களை விட நாட்டில் உள்ள வௌவால்களின் எண்ணிக்கையே  அதிகம்.

டிஸ்கி
 நம் அரசியல்வாதிகளை வௌவால்களோடு ஒப்பிட்டுப் பேசியதால் ஏற்பட்ட கடும் மன உளைச்சலின் அடிப்படையில்  காட்டில் உள்ள வௌவால்கள் அனைத்தும் சட்டப் பிரிவு 66A -ன் கீழ் என் மீது வழக்குப் பதிவு செய்தால் அதை சந்திக்கும் மனதைரியமும், எதிர்த்துப் போராடும் போர்க்குணம் கொண்ட காகிதப் புலிகளின் ஆதரவும் எனக்கு இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.:-))))))))வணக்கங்களுடன்...
மணிமாறன்.
-----------------------------------------------------------------(((((((((((((()))))))))))))))))--------------------------------------------------------

Wednesday 21 November 2012

அமெரிக்காவில் ஒரு இந்தியப் பிஞ்சுக் குழந்தைக்கு நிகழ்ந்த கொடூரம்...டந்த மாதம் அமெரிக்காவில் நடந்த குழந்தைக் கடத்தல் சம்பவம் வெளிநாட்டு வாழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கணவன் மனைவி இருவருமே கட்டாயமாக வேலைப் பார்க்க வேண்டிய  பொருளாதாரச் சூழலில் குழந்தைகளை வளர்ப்பதற்காக ஊரிலிருந்து வயதான பெற்றோர்களை (Baby Sitters) உடன் அழைந்து வந்து அவர்களின் கண்காணிப்பில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்பவர்கள் மிக அதிகம்.

   குழந்தைகளின் மீது தனிப்பட்ட அக்கறை,பாசத்துடன் கூடிய பராமரிப்பு,பாதுகாப்பு,பொருளாதார சமாளிப்பு போன்ற காரணங்களால் 'HOUSE MAID' எனப்படும் முன்பின் அறிமுகமில்லாத பணிப்பெண்களை அமர்த்துவதை விட,தாத்தா பாட்டிகளின் அரவணைப்பில் வளர்வதையே பெரும்பாலும் விரும்புகின்றனர். குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக
வெளிநாட்டுக்கு செல்லும் தாத்தா,பாட்டியை 'சம்பளமில்லா ஆயா' வேலைப் பார்க்கச் செல்வதாக கிண்டலாக சொல்வதுண்டு.ஆனால் அதிலுள்ள சௌகரிகம் அவர்களுக்குத் தான் தெரியும்.அப்படியொரு குடும்ப அமைப்பு இல்லாதவர்கள் மட்டுமே வேறு வழியில்லாமல் 'ஹவுஸ் மெய்டு' வைத்துக்கொள்கிறார்கள்.என்னதான் அதிக சம்பளம் கொடுத்து இவர்களை வைத்துக்கொண்டாலும் ரத்த சொந்தங்களின் அன்பான அரவணைப்புக்கு இது ஒருபோதும் ஈடாகாது.


சிவ பிரசாத்,லதா,சத்யவதி மற்றும் சான்வி

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள பிலடெல்பியா (Philadelphia) நகரில் வசித்த அந்த ஆந்திர குடும்பத்தில் இப்படியொரு கொடுமை நடக்கும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.இரண்டு வாரம் முன்பு இணையத்தில் இது பற்றிய செய்திகளைப் படித்தபோது மனம் கொஞ்சம் பதறித்தான் போனது.

அமெரிக்காவில் பத்து மாத இந்திய குழந்தை ஓன்று கடத்தப்பட்டிருக்கிறது என்ற செய்தி இணையத்தில் வர,முதலில் சாதாரண ஒரு சம்பவம் என்று தான் தோன்றியது.ஆனால் அந்தக் குழந்தையைக் கவனித்து வந்த அதன் பாட்டியை கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு குழந்தைக் கடத்தப்பட்டிருக்கிறது என்று அறிந்தபோதுதான் அதிலுள்ள அபாயத்தை உணரமுடிந்தது. 

அமெரிக்கா-ஆந்திரா.... இது இரண்டையும் முடிச்சிப் போடும் ஒரே விஷயம் சாப்ட்வேர் துறைதான் என்பதை விளக்கத்தேவையில்லை.சில மாதங்களுக்கு முன் இன்போசிசில் வேலைப் பார்த்த நீலிமா என்ற பெண்ணின் தற்கொலைச் சம்பவம் ஏற்படுத்திய சுவடுகள் முற்றிலுமாக மறைவதற்குள் மற்றொரு சம்பவம் நடந்தேறியிருக்கிறது..


ஆறு வருடத்திற்கு முன்பே அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட "சாப்ட்வேர் தம்பதி"  சிவா பிரசாத் -லதா. இவர்களின் ஒரே செல்ல மகள் பத்து மாதமே ஆன "சான்வி வென்னா". குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக சென்ற வருடம் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார் சிவபிரசாத்தின் தாயார் சத்யவதி வென்னா.


வழக்கம் போல 'சாப்ட்வேர் தம்பதி' குழந்தையை பாட்டியின் பராமரிப்பில் விட்டுவிட்டு ஷாப்பிங் சென்ற நேரத்தில் இந்த சம்பவம்  நடந்திருக்கிறது.சத்யவதி வென்னா கொடுமையான முறையில் மார்பிலும் வயிற்றிலும் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்.மேலும் பத்து மாத குழந்தை 'மிஸ்ஸிங்'. அங்கு வசிக்கும் தெலுங்கு சமூகம் உட்பட அனைத்து இந்தியர்களிடமும் இந்தச் செய்தி காட்டுத் தீயாய் பரவ,கடத்தப்பட்ட குழந்தையின் நிலை என்ன என்பது தான் அவர்களின் அடுத்தகட்ட பரபரப்பு. குழந்தை கடத்தப்பட்டது வெறும் பணத்துக்காக மட்டுமே என்பது கடத்தியவர்கள் விட்டுச்சென்று அந்த நோடீஸ் (Ransom note) பட்டவர்த்தனமாக உணர்த்தியது.ஆனால் அதுவே கடத்தியவனைக் கண்டுபிடிக்கும் துருப்புச் சீட்டாக அமையும் என்பது அப்போது அவனுக்குத் தெரிந்திருக்காது.  "உன்னுடைய ஒரு வயது குழந்தை முக்கியமா..அல்லது ஐந்து மாத சம்பளம் முக்கியமா...நீயே முடிவு செய்துக்கொள்"

பிணையத்தொகைக்காக எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில் குழந்தையை விடுவிக்க ஐம்பதாயிரம் அமெரிக்க டாலர்கள் கோரப்பட்டிருந்தது. முதலில் இதை,இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஒரு சில ஆப்பிரிக்க-அமெரிக்கரின்  வேலையாக இருக்கும் என சந்தேகப்பட்ட போலிஸ்(FBI), பின்பு அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களை வைத்தே நட்பு வட்டத்தில் உள்ளவர்கள்தான் செய்திருக்கிறார்கள் என முடிவுக்கு வந்தது.

சிவபிரசாத்தின் முழு பெயர் 'வெங்கடகொண்ட சிவபிரசாத் வெண்ணா'.லதாவின் முழுப்பெயர் 'செஞ்சு லதா புனரு'.ஆனால் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டது போல் சிவா,லதா என்று ஒரு சில நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைப்பார்கள் என தெரிந்துகொண்ட போலிஸ்,அவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தது. அப்புறமென்ன...? "முறையான விசாரணையை " தொடங்குவதற்கு முன்பாகவே உண்மையை ஒப்புக்கொண்டான் அவர்கள் குடும்பத்தில்  ஒருவனாகப் பழகிய சிவபிரசாத்தின் நண்பன் ரகு என்கிற 'ரகுநந்தன் யன்டமுரி'.

ரகுநந்தன் கொடுத்த வாக்குமூலம் படி,குழந்தையை கடத்துவதைப் பற்றி ஏற்கனவே தெளிவான திட்டத்தில் இருந்துள்ளான்.திங்கள் கிழமை(22 -10 -2011 ) காலை தன் ஆபிஸ்-க்கு சென்று அங்குள்ள கம்ப்யூட்டரில் மேலே உள்ள அந்த நோட்டிசை(
Ransom Note) டைப் செய்துள்ளான்.அந்த ஆதாரம்தான் முதலில் போலீசிடம் சிக்கியது. அங்கிருந்து புறப்பட்டு 11-00 மணிக்கு ரகுபிரசாத் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டியிருக்கிறான்,கையில் கத்தியோடு..!. கதவைத்திறந்த சத்தியவதி முதலில் பயந்து பின்வாங்க,பின்பு குழந்தையை தூக்குவதைப் பார்த்து அவனுடன் மல்லுக்கட்டி போராடியிருக்கிறார். கடைசியில் தன் கையில் வைத்திருந்த கத்தியால் கழுத்திலும் மார்பிலும் கொடூரமான முறையில் சத்யவதியை குத்தி
க் கொலை செய்துள்ளான் ரகு.குழந்தை அழுவதைத் தடுப்பதற்காக அதன் வாயில் கர்சீப்பை நுழைத்து,அது வெளிவராமல் இருக்க முகத்தைச் சுற்றி பாத் டவலால் இறுக்கி கட்டியுள்ளான்.பின்பு அவர்கள் வீட்டிலே இருந்த நீல நிற சூட்கேசில் அந்தப் பிஞ்சுப் பூவை அடைத்து அவர்கள் அபார்ட்மெண்டுக்கு கீழே இருக்கும் உடற்பயிற்சிக்கூடத்தின் கழிவறையில் இருந்த 'ஸ்டீம் ரூமில்' மறைத்து வைத்துவிட்டு எதுவும் நடக்காதது போல் இருந்துள்ளான்.

பிற்பாடு இந்த சம்பவம் பெரும் பரபரப்பாகி,இணையம்,அச்சு ஊடகங்களின் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டு, குழந்தைப் பற்றிய தகவல் கொடுத்தாலோ அல்லது உயிருடன் ஒப்படைத்தாலோ 30ஆயிரம் டாலர்கள் சன்மானம் அளிக்கப்படும் என அங்குள்ள தெலுங்கு சமூகத்தினரால் அறிவிக்கப்பட்டது.யாரும் தொடர்பு கொள்ளாததால் தொகையை உயர்த்தி 50ஆயிரம் டாலர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் ரகுவந்தனும் அவர்களுடன் சேர்த்து தேடுவதைப்போல் நடித்துள்ளான்.தனது கம்ப்யூட்டரிலே "MISSING SAANVI "என போட்டோவுடன் போஸ்டர் அடித்து அங்குள்ளவர்களிடம் விநியோகம் செய்துள்ளது தான் கொடுமையின் உச்சம்.


ஐந்து நாட்களுக்குப் பின் அந்த அப்பாவிக் குழந்தை மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது வெறும் சடலமாக.... ! 'கொலை செய்யும் நோக்கத்திற்காக கடத்தப்படவில்லை' என்று கருப்பு அங்கியுடன் வெட்டி வாதம் செய்து இவனைக் காப்பாற்ற முயற்சி செய்யும் ஒரு கூட்டம்.அந்த மழலையின் வாயில் துணியை வைத்து அழுத்திய நொடியே இவன் மனித இனத்திற்கு அப்பாற்பட்டவன் என முடிவாயிற்று.இந்த மண்ணில் வாழ தகுதியே இல்லாதவன்........!


ரகுநந்தன் (மாப்ள...உனக்கு இருக்குடி...!!!)

ரகுநந்தன் ஏற்கனவே கிரடிட் கார்டு கடன்,லோன் என கடுமையான பண நெருக்கடியில் இருந்துள்ளான்.அந்தக் கடனை அடைப்பதற்காகத்தான் இப்படியொரு கொடுஞ்செயலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.ஒருசில இணையதளங்களில் வேறு ஒரு கதையும் சொல்லப்படுகிறது.அக்யுஸ்ட் ரகுவும் லதாவும் நீண்ட காலமாகவே நண்பர்கள்.லதாவை திருமணம் செய்துகொள்வதற்காக பலமுறை வற்புறுத்தியிருக்கிறான். வேறு சாதி என்பதால் லதாவின் குடும்பத்தினர் இதற்கு சம்மதிக்க வில்லை.தவிர லதாவுக்கும் இதில் விருப்பமில்லை.இதற்கு பழிவாங்கும் நோக்கில் கூட நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

கள்ளங்கபடமற்ற சிரிப்பு....பஞ்சு போன்ற பாதங்கள்...கருணையே வடிவான கண்கள்...அந்த பிஞ்சு புஷ்பத்தை கைகளால் வாரி தூக்கும் போதே எவ்வளவு கல் நெஞ்சக்காரனாக இருந்தாலும் மனம் பஞ்சாய் மாறிவிடுமே. அதன் மூச்சை நிறுத்த அந்த பாதகனுக்கு எப்படி மனம் வந்தது...? இந்தக் கொடூரச் சம்பவத்திற்கான பின்புலம் என்னவாக இருக்கும் என்று யூகிக்கத் தேவையில்லை. பணம்..பணம்..பணம்... அதன்மீது கொண்ட வெறித்தனமான பேராசை.அந்தப் பேராசைதான் அவனை உழைத்து சம்பாதிப்பதை விட அடித்துச் சம்பாதிக்கத் தூண்டியிருக்கிறது.

இந்த சம்பவம் நமக்கு இன்னொரு படிப்பினையையும் கற்பித்திருக்கிறது.வெளிநாடுகளிலும் சரி..பெரு நகரங்களிலும் சரி...தன் வயதான பெற்றோர்களின் பராமரிப்பில் குழந்தைகளை விட்டுச்செல்வதுதான் பாதுகாப்பு என்று உணர்பவர்கள்,அவர்களுக்கு என்ன  மாதிரியான பாதுகாப்பு அமைப்பு இருக்கிறது என்பது முதலில் ஆராயவேண்டும்.அவர்களின் பாதுகாப்புக்கு சில வழிமுறைகளை கற்றுக்கொடுப்பது மிக அவசியம்.நகரங்களில் பெரும்பாலான வீடுகளில் வாசல் கதவுக்கு வெளியே இரும்புக் கம்பிகளாலான 'கிரில் கேட் ' பொருத்தப்பட்டுள்ளது.முடிந்தவரையில் இதை எப்போதும் பூட்டியே இருக்கும்படி அறிவுறுத்த வேண்டும்.அறிமுகமில்லாதவர்கள் யார் வந்தாலும் ' கேட்டை' திறக்காமலே பதில் சொல்லி அனுப்பிவிடுவது நல்லது.தெரிந்தவர்கள் அல்லது ஹவுசிங் போர்டிலிருந்து சோதனை செய்பவர்கள் என்று யார் வந்தாலும் உடனே தொலைபேசிமூலம் தங்களுக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்துங்கள்.அக்கம் பக்கம் வசிப்பவர்கள் வேறு மொழி, இனத்தினவராக இருந்தாலும் 'சிறு நட்பு' வைத்திருங்கள்.உயிர் விலைமதிப்பற்றது.நம் பாதுகாப்பு நம் கையில்தான் உள்ளது.
வணக்கங்களுடன்.....
மணிமாறன்.

----------------------------------------------------((((((((((((((((((()))))))))))))))))---------------------------------------

Friday 2 November 2012

ஜாதிச் சண்டை மைதானமாகும் பேஸ்புக்...


கோதரி சின்மயி கொழுத்திப் போட்ட " so called thaazhthappaattavrkal " என்ற வெடியின் சப்தம் முழுவதும் அடங்குவதற்குள் இன்னொரு வெடி வெடித்திருக்கிறது.இந்த முறை கொழுத்திப் போட்டது 'கிஷோர் சாமி' என்ற முகநூல் நண்பர்.அம்மாவின் தீவிர அபிமானியான இவரின் பெரும்பாலான பதிவுகள் மம்மியை போற்றியோ அல்லது கலைஞர் குடும்பத்தை வசைபாடியோ இருக்கும்.

   சமீபத்தில் தேவர் குருபூஜைக்கு சென்றவர்கள் மீது ஒரு வன்முறை கும்பல் தாக்கியதில் நால்வர் கொல்லப்பட்டனர்.இதன் பின்புலம் என்னவென்று இங்கு விளக்கத் தேவையில்லை.சமீப காலங்களாக இரு தரப்பு சாதியினர்களுக்கிடையே தோன்றிய வன்மங்களின் அடிப்படையில் இது போன்ற சம்பவங்கள் தென் தமிழ் நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.சாதி ஒழியவேண்டும் என போராடிய தலைவர்களை தன் இனக்காவலனாக போற்றும் இவர்கள்,த
ன் தலைவன் போதித்த கொள்கையைக் காற்றில் பறக்கவிட்டதுதான் இவர்களின் மிகப்பெரிய சாதனை...!

பரமக்குடி கலவரத்திற்குப் பின் ஓரளவு அமைதியுடன் இருந்த தென் தமிழக பூமி தற்போது குருதி மழையால் கொதித்துக் கொண்டிக்கிருக்கிறது. கலவரத்தை
க் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறை முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்க,முகநூலில் சிலர் எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுவது போல் நிலைத் தகவல்களை பதிந்துள்ளனர்.

சமீபத்தில் நண்பர் கிஷோர் சாமி போட்ட நிலைத்தகவல் அப்படிப்பட்ட ஒன்றுதான்..ஒரு வன்முறைக்கும்பல் செய்த செயலுக்கு ஒட்டுமொத்த தாழ்த்தப்படவர்களையே இழிவுபடுத்துவதுபோல அமைந்துள்ளது அவரது நிலைத்தகவல்.

"  இதுங்களை குளிப்பாட்டி நடுக் கூடத்தில் வைத்தாலும்,தன் வேலையைத் தான் காட்டிடும்"

"  வெறிபிடித்த சொறிநாய்கள்,சிறு நீர் கழித்து அவைகளது எல்லையை குறிக்குமாம்,அதைப் போன்ற செயல் தான் இது"
   
வன்முறையைக் கண்டிக்க வேண்டியதுதான்.அதுவே வன்மமாக மாறிவிடும் அளவுக்கு இருக்கக் கூடாது. இதற்கு அவரின் நெருக்கிய நண்பர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.ஆனாலும் அவர் பதிவை நீக்கியதாகத் தெரியவில்லை.கடைசி
யில் விடுதலை சிறுத்தை அமைப்பினர் கமிஷனரிடன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.சாதி,இனம்,மொழி என்று எந்தவித இன பாகுபாடுமின்றி இணையம் மூலம் பரஸ்பர நட்பைப் பகிர்ந்து கொள்ளத்தான் பேஸ்புக்,டிவீட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஏற்கனவே ஈழம் தொடர்பாக தனிமனித ஆபாசத் தாக்குதல்களால் நாறிப்போய் கிடக்கிறது.தற்போது நடக்கும் செயல்களை வைத்துப் பார்த்தால் இது ஒரு ஜாதிச் சண்டை மைதானமாகவும் மாறிவிடும் அபாயம் உள்ளது.


கிஷோர் சாமியின் நிலைத்தகவல் பற்றி கமிஷனரிடம் விடுதலை சிறுத்தைகள் அளித்த கம்ப்ளைன்ட்..
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ட பிக்காலிப் பயலுகளா..உங்க சாதி வெறிக்கு அளவே இல்லையா..விட்டா ராஜராஜசோழன் பெயரில் ஜாதிக்கட்சி ஆரம்பிச்சாலும் ஆரம்பிப்பாங்க.ஆமா எங்கே ராஜராஜசோழ அய்யங்கார் போஸ்டரைக் காணோம்.ஒருவேளை 'அவா' கண்ணில் இது படவில்லையா..ச்சே...தெரிந்திருந்தால் இவரும் 'HIGH..YENKAAR' ஆகியிருப்பாரே...!!! 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

லகமே அன்பு சகோதரி சின்மயி-யின் (ஒரு வழியா பேரு வாயில் வந்திடுச்சுங்க...) துணிச்சலைப் பற்றியும்,அவரின் பொது அறிவைப் பற்றியும் பெருமையாகப் பேசிக்கொண்டிருக்க,அப்படி என்னதான் எழுதுகிறார் என்று அவரின் டிவீட்டர் பக்கம் போய் கொஞ்சம் எட்டிப் பார்த்தேன். பார்த்தவுடனேயே தலை சுற்றி போனது..!!!

"என்னது ...அன்பேசிவம் படம் சுந்தர்.C டைரக்ட் பண்ணினதா..?" என்று அதுவும்  குஷ்புவிடம் அவர் கேட்ட அந்த ஒரு கேள்வியிலேயே நான் கதிகலங்கிப் போனேன்.ஆத்தாடி.. இனிமேல் அந்தப்பக்கமே போகக் கூடாது..பாவம் குஷ்பு மேடம்(பப்ளிக்..பப்ளிக்...) எப்படி சங்கடப் பட்டிருப்பாங்களோ ...!


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 நாங்கெல்லாம் அப்பவே ப்படி..!!!


ஆசிரியர்     :     நீ பெரியவனா ஆனா என்ன பண்ணுவ...?
மாணவன்  :     கல்யாணம் பண்ணுவேன்.

ஆசிரியர்     :    இல்லப்பா..நான் கேட்டது..நீ பெரியவனா ஆன பின்ன என்ன ஆகுவ..?
மாணவன்  :    மாப்பிள்ளை ஆகுவேன்..

ஆசிரியர்     :    அடேய்..அதாவது..பெரியவனாகி நீ என்ன சாதிக்கப் போற?
மாணவன்  :    லவ் பண்ணுவேன்..

ஆசிரியர்     :   முட்டாள்..
முட்டாள்..நான் என்ன கேட்கிறனா..நீ பெரிவனாகி உங்க அப்பா,அம்மாவுக்கு என்ன பண்ண போற..?
மாணவன்   :   நல்ல மருமகளை கொண்டு வந்து கொடுப்பேன்.

ஆசிரியர்      :   அறிவு கெட்ட முண்டம்..உங்க அப்பா அம்மா உன்கிட்ட என்ன எதிர்பார்
ப்பாங்க..?
மாணவன்   :   பேரன் பேத்திகள்..

ஆசிரியர்      :   கடவுளே.... முடியில..!! உன் வாழ்க்கை
க் குறிக்கோள்தான் என்னடா..?
மாணவன்   :  நாம் இருவர்..நமக்கு இருவர்..

## ஹி..ஹி..நாங்கெல்லாம் அப்பவே
ப்படி..!!!வணக்கங்களுடன் ....
மணிமாறன்..

------------------------------------------------------(((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))-------------------------------------