Wednesday 21 November 2012

அமெரிக்காவில் ஒரு இந்தியப் பிஞ்சுக் குழந்தைக்கு நிகழ்ந்த கொடூரம்...டந்த மாதம் அமெரிக்காவில் நடந்த குழந்தைக் கடத்தல் சம்பவம் வெளிநாட்டு வாழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கணவன் மனைவி இருவருமே கட்டாயமாக வேலைப் பார்க்க வேண்டிய  பொருளாதாரச் சூழலில் குழந்தைகளை வளர்ப்பதற்காக ஊரிலிருந்து வயதான பெற்றோர்களை (Baby Sitters) உடன் அழைந்து வந்து அவர்களின் கண்காணிப்பில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்பவர்கள் மிக அதிகம்.

   குழந்தைகளின் மீது தனிப்பட்ட அக்கறை,பாசத்துடன் கூடிய பராமரிப்பு,பாதுகாப்பு,பொருளாதார சமாளிப்பு போன்ற காரணங்களால் 'HOUSE MAID' எனப்படும் முன்பின் அறிமுகமில்லாத பணிப்பெண்களை அமர்த்துவதை விட,தாத்தா பாட்டிகளின் அரவணைப்பில் வளர்வதையே பெரும்பாலும் விரும்புகின்றனர். குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக
வெளிநாட்டுக்கு செல்லும் தாத்தா,பாட்டியை 'சம்பளமில்லா ஆயா' வேலைப் பார்க்கச் செல்வதாக கிண்டலாக சொல்வதுண்டு.ஆனால் அதிலுள்ள சௌகரிகம் அவர்களுக்குத் தான் தெரியும்.அப்படியொரு குடும்ப அமைப்பு இல்லாதவர்கள் மட்டுமே வேறு வழியில்லாமல் 'ஹவுஸ் மெய்டு' வைத்துக்கொள்கிறார்கள்.என்னதான் அதிக சம்பளம் கொடுத்து இவர்களை வைத்துக்கொண்டாலும் ரத்த சொந்தங்களின் அன்பான அரவணைப்புக்கு இது ஒருபோதும் ஈடாகாது.


சிவ பிரசாத்,லதா,சத்யவதி மற்றும் சான்வி

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள பிலடெல்பியா (Philadelphia) நகரில் வசித்த அந்த ஆந்திர குடும்பத்தில் இப்படியொரு கொடுமை நடக்கும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.இரண்டு வாரம் முன்பு இணையத்தில் இது பற்றிய செய்திகளைப் படித்தபோது மனம் கொஞ்சம் பதறித்தான் போனது.

அமெரிக்காவில் பத்து மாத இந்திய குழந்தை ஓன்று கடத்தப்பட்டிருக்கிறது என்ற செய்தி இணையத்தில் வர,முதலில் சாதாரண ஒரு சம்பவம் என்று தான் தோன்றியது.ஆனால் அந்தக் குழந்தையைக் கவனித்து வந்த அதன் பாட்டியை கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு குழந்தைக் கடத்தப்பட்டிருக்கிறது என்று அறிந்தபோதுதான் அதிலுள்ள அபாயத்தை உணரமுடிந்தது. 

அமெரிக்கா-ஆந்திரா.... இது இரண்டையும் முடிச்சிப் போடும் ஒரே விஷயம் சாப்ட்வேர் துறைதான் என்பதை விளக்கத்தேவையில்லை.சில மாதங்களுக்கு முன் இன்போசிசில் வேலைப் பார்த்த நீலிமா என்ற பெண்ணின் தற்கொலைச் சம்பவம் ஏற்படுத்திய சுவடுகள் முற்றிலுமாக மறைவதற்குள் மற்றொரு சம்பவம் நடந்தேறியிருக்கிறது..


ஆறு வருடத்திற்கு முன்பே அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட "சாப்ட்வேர் தம்பதி"  சிவா பிரசாத் -லதா. இவர்களின் ஒரே செல்ல மகள் பத்து மாதமே ஆன "சான்வி வென்னா". குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக சென்ற வருடம் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார் சிவபிரசாத்தின் தாயார் சத்யவதி வென்னா.


வழக்கம் போல 'சாப்ட்வேர் தம்பதி' குழந்தையை பாட்டியின் பராமரிப்பில் விட்டுவிட்டு ஷாப்பிங் சென்ற நேரத்தில் இந்த சம்பவம்  நடந்திருக்கிறது.சத்யவதி வென்னா கொடுமையான முறையில் மார்பிலும் வயிற்றிலும் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்.மேலும் பத்து மாத குழந்தை 'மிஸ்ஸிங்'. அங்கு வசிக்கும் தெலுங்கு சமூகம் உட்பட அனைத்து இந்தியர்களிடமும் இந்தச் செய்தி காட்டுத் தீயாய் பரவ,கடத்தப்பட்ட குழந்தையின் நிலை என்ன என்பது தான் அவர்களின் அடுத்தகட்ட பரபரப்பு. குழந்தை கடத்தப்பட்டது வெறும் பணத்துக்காக மட்டுமே என்பது கடத்தியவர்கள் விட்டுச்சென்று அந்த நோடீஸ் (Ransom note) பட்டவர்த்தனமாக உணர்த்தியது.ஆனால் அதுவே கடத்தியவனைக் கண்டுபிடிக்கும் துருப்புச் சீட்டாக அமையும் என்பது அப்போது அவனுக்குத் தெரிந்திருக்காது.  "உன்னுடைய ஒரு வயது குழந்தை முக்கியமா..அல்லது ஐந்து மாத சம்பளம் முக்கியமா...நீயே முடிவு செய்துக்கொள்"

பிணையத்தொகைக்காக எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில் குழந்தையை விடுவிக்க ஐம்பதாயிரம் அமெரிக்க டாலர்கள் கோரப்பட்டிருந்தது. முதலில் இதை,இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஒரு சில ஆப்பிரிக்க-அமெரிக்கரின்  வேலையாக இருக்கும் என சந்தேகப்பட்ட போலிஸ்(FBI), பின்பு அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களை வைத்தே நட்பு வட்டத்தில் உள்ளவர்கள்தான் செய்திருக்கிறார்கள் என முடிவுக்கு வந்தது.

சிவபிரசாத்தின் முழு பெயர் 'வெங்கடகொண்ட சிவபிரசாத் வெண்ணா'.லதாவின் முழுப்பெயர் 'செஞ்சு லதா புனரு'.ஆனால் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டது போல் சிவா,லதா என்று ஒரு சில நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைப்பார்கள் என தெரிந்துகொண்ட போலிஸ்,அவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தது. அப்புறமென்ன...? "முறையான விசாரணையை " தொடங்குவதற்கு முன்பாகவே உண்மையை ஒப்புக்கொண்டான் அவர்கள் குடும்பத்தில்  ஒருவனாகப் பழகிய சிவபிரசாத்தின் நண்பன் ரகு என்கிற 'ரகுநந்தன் யன்டமுரி'.

ரகுநந்தன் கொடுத்த வாக்குமூலம் படி,குழந்தையை கடத்துவதைப் பற்றி ஏற்கனவே தெளிவான திட்டத்தில் இருந்துள்ளான்.திங்கள் கிழமை(22 -10 -2011 ) காலை தன் ஆபிஸ்-க்கு சென்று அங்குள்ள கம்ப்யூட்டரில் மேலே உள்ள அந்த நோட்டிசை(
Ransom Note) டைப் செய்துள்ளான்.அந்த ஆதாரம்தான் முதலில் போலீசிடம் சிக்கியது. அங்கிருந்து புறப்பட்டு 11-00 மணிக்கு ரகுபிரசாத் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டியிருக்கிறான்,கையில் கத்தியோடு..!. கதவைத்திறந்த சத்தியவதி முதலில் பயந்து பின்வாங்க,பின்பு குழந்தையை தூக்குவதைப் பார்த்து அவனுடன் மல்லுக்கட்டி போராடியிருக்கிறார். கடைசியில் தன் கையில் வைத்திருந்த கத்தியால் கழுத்திலும் மார்பிலும் கொடூரமான முறையில் சத்யவதியை குத்தி
க் கொலை செய்துள்ளான் ரகு.குழந்தை அழுவதைத் தடுப்பதற்காக அதன் வாயில் கர்சீப்பை நுழைத்து,அது வெளிவராமல் இருக்க முகத்தைச் சுற்றி பாத் டவலால் இறுக்கி கட்டியுள்ளான்.பின்பு அவர்கள் வீட்டிலே இருந்த நீல நிற சூட்கேசில் அந்தப் பிஞ்சுப் பூவை அடைத்து அவர்கள் அபார்ட்மெண்டுக்கு கீழே இருக்கும் உடற்பயிற்சிக்கூடத்தின் கழிவறையில் இருந்த 'ஸ்டீம் ரூமில்' மறைத்து வைத்துவிட்டு எதுவும் நடக்காதது போல் இருந்துள்ளான்.

பிற்பாடு இந்த சம்பவம் பெரும் பரபரப்பாகி,இணையம்,அச்சு ஊடகங்களின் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டு, குழந்தைப் பற்றிய தகவல் கொடுத்தாலோ அல்லது உயிருடன் ஒப்படைத்தாலோ 30ஆயிரம் டாலர்கள் சன்மானம் அளிக்கப்படும் என அங்குள்ள தெலுங்கு சமூகத்தினரால் அறிவிக்கப்பட்டது.யாரும் தொடர்பு கொள்ளாததால் தொகையை உயர்த்தி 50ஆயிரம் டாலர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் ரகுவந்தனும் அவர்களுடன் சேர்த்து தேடுவதைப்போல் நடித்துள்ளான்.தனது கம்ப்யூட்டரிலே "MISSING SAANVI "என போட்டோவுடன் போஸ்டர் அடித்து அங்குள்ளவர்களிடம் விநியோகம் செய்துள்ளது தான் கொடுமையின் உச்சம்.


ஐந்து நாட்களுக்குப் பின் அந்த அப்பாவிக் குழந்தை மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது வெறும் சடலமாக.... ! 'கொலை செய்யும் நோக்கத்திற்காக கடத்தப்படவில்லை' என்று கருப்பு அங்கியுடன் வெட்டி வாதம் செய்து இவனைக் காப்பாற்ற முயற்சி செய்யும் ஒரு கூட்டம்.அந்த மழலையின் வாயில் துணியை வைத்து அழுத்திய நொடியே இவன் மனித இனத்திற்கு அப்பாற்பட்டவன் என முடிவாயிற்று.இந்த மண்ணில் வாழ தகுதியே இல்லாதவன்........!


ரகுநந்தன் (மாப்ள...உனக்கு இருக்குடி...!!!)

ரகுநந்தன் ஏற்கனவே கிரடிட் கார்டு கடன்,லோன் என கடுமையான பண நெருக்கடியில் இருந்துள்ளான்.அந்தக் கடனை அடைப்பதற்காகத்தான் இப்படியொரு கொடுஞ்செயலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.ஒருசில இணையதளங்களில் வேறு ஒரு கதையும் சொல்லப்படுகிறது.அக்யுஸ்ட் ரகுவும் லதாவும் நீண்ட காலமாகவே நண்பர்கள்.லதாவை திருமணம் செய்துகொள்வதற்காக பலமுறை வற்புறுத்தியிருக்கிறான். வேறு சாதி என்பதால் லதாவின் குடும்பத்தினர் இதற்கு சம்மதிக்க வில்லை.தவிர லதாவுக்கும் இதில் விருப்பமில்லை.இதற்கு பழிவாங்கும் நோக்கில் கூட நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

கள்ளங்கபடமற்ற சிரிப்பு....பஞ்சு போன்ற பாதங்கள்...கருணையே வடிவான கண்கள்...அந்த பிஞ்சு புஷ்பத்தை கைகளால் வாரி தூக்கும் போதே எவ்வளவு கல் நெஞ்சக்காரனாக இருந்தாலும் மனம் பஞ்சாய் மாறிவிடுமே. அதன் மூச்சை நிறுத்த அந்த பாதகனுக்கு எப்படி மனம் வந்தது...? இந்தக் கொடூரச் சம்பவத்திற்கான பின்புலம் என்னவாக இருக்கும் என்று யூகிக்கத் தேவையில்லை. பணம்..பணம்..பணம்... அதன்மீது கொண்ட வெறித்தனமான பேராசை.அந்தப் பேராசைதான் அவனை உழைத்து சம்பாதிப்பதை விட அடித்துச் சம்பாதிக்கத் தூண்டியிருக்கிறது.

இந்த சம்பவம் நமக்கு இன்னொரு படிப்பினையையும் கற்பித்திருக்கிறது.வெளிநாடுகளிலும் சரி..பெரு நகரங்களிலும் சரி...தன் வயதான பெற்றோர்களின் பராமரிப்பில் குழந்தைகளை விட்டுச்செல்வதுதான் பாதுகாப்பு என்று உணர்பவர்கள்,அவர்களுக்கு என்ன  மாதிரியான பாதுகாப்பு அமைப்பு இருக்கிறது என்பது முதலில் ஆராயவேண்டும்.அவர்களின் பாதுகாப்புக்கு சில வழிமுறைகளை கற்றுக்கொடுப்பது மிக அவசியம்.நகரங்களில் பெரும்பாலான வீடுகளில் வாசல் கதவுக்கு வெளியே இரும்புக் கம்பிகளாலான 'கிரில் கேட் ' பொருத்தப்பட்டுள்ளது.முடிந்தவரையில் இதை எப்போதும் பூட்டியே இருக்கும்படி அறிவுறுத்த வேண்டும்.அறிமுகமில்லாதவர்கள் யார் வந்தாலும் ' கேட்டை' திறக்காமலே பதில் சொல்லி அனுப்பிவிடுவது நல்லது.தெரிந்தவர்கள் அல்லது ஹவுசிங் போர்டிலிருந்து சோதனை செய்பவர்கள் என்று யார் வந்தாலும் உடனே தொலைபேசிமூலம் தங்களுக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்துங்கள்.அக்கம் பக்கம் வசிப்பவர்கள் வேறு மொழி, இனத்தினவராக இருந்தாலும் 'சிறு நட்பு' வைத்திருங்கள்.உயிர் விலைமதிப்பற்றது.நம் பாதுகாப்பு நம் கையில்தான் உள்ளது.
வணக்கங்களுடன்.....
மணிமாறன்.

----------------------------------------------------((((((((((((((((((()))))))))))))))))---------------------------------------

15 comments:

 1. வெளி நாட்டில் வேலை செய்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்ப்தைக்காட்டுகிறது இங்கழ்வ்ஹு. இது போன்று இனி நடைபெறாமல் இருக்க வேண்டும்.

  ReplyDelete
 2. வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா..இதற்கு விழிப்புணர்வு மிக அவசியம்...கருத்துக்கு நன்றி பாஸ்..

   Delete
 3. மனது கணத்துவிட்டது...
  எவ்வளவு பெரிய இரக்கமில்லாத கொடூரக் காரனாக இருக்கிறான்...
  இவனுக்கு மரண தண்டனைதான் கொடுக்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. நம் நாட்டில் நடந்திருந்தால் கேசை அப்படி இப்படி இழுத்து விடுதலை ஆகியிருப்பான்.ஒரே ஒரு சர்டிபிகேட் போதும்,மெண்டல் என்று சொல்வதற்கு.ஆனால் இது அமெரிக்கா...கட்டாயம் மரண தண்டனைதான்.. நன்றி

   Delete
 4. நண்பரே மிகவும் கொடுமை. பணப்பைத்தியம் ஒரு பிஞ்சு குழந்தையை கொலை செய்யும் அளவிற்கு இட்டு சென்றுள்ளது. வாயில் துணியை அடைக்கும்போது கூடவா அந்த குழந்தையின் முகத்தை பார்த்து அவனுக்கு இரக்கம் வரவில்லை?

  ReplyDelete
  Replies
  1. இரக்கமே இல்லாத அரக்கன்.எல்லாம் பணம்தான் பாஸ் காரணம்.நன்றி

   Delete
 5. கவலையான விடயம்

  ReplyDelete
 6. பணம் எல்லாத்தையும் செய்யச் சொல்லுது.....

  ReplyDelete
  Replies
  1. சரிதான் பிரகாஷ்...

   Delete
 7. ANTHA ARAKKANAI VIRAIVIL KODUMAIYAGA THANDANAI KODUTHU UYIRODU VALIODU VAZHA VIDA VENDUM

  ReplyDelete