பொதுவாகவே 'தல' படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்வதில்லை. ஆழ்வார், ஆஞ்சநேயா, ஏகன் போன்ற கடந்தகால கசப்பான அனுபவங்கள் ஏற்படுத்திய காயங்கள் இன்னும் அப்படியே இருக்கிறது. இளையதளபதி படம் எப்போதாவது ஊற்றிக்கொள்ளும் என்றால், தல படம் எப்போதாவது ஹிட்டடிக்கும். ஆனால் இப்போது வரை தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியில் மிகப்பெரிய ஓபனிங் அஜித்திற்கு இருக்கிறது. ரசிகர் மன்றங்களைக் கலைத்தாலும் ரசிகர்களின் கூட்டம் அதிகரிக்கவே செய்கிறது. வெளிநாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
அஜித்- நயன்தாரா, ஆர்யா- நயன்தாரா இரண்டு கூட்டணியுமே சமகால தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக வலம்வந்த கூட்டணிகள். இந்த மூன்றுபேரும் சேர்ந்தால் கேட்கவா வேண்டும்..? மூன்று மணிநேர ஆக்சன் பேக். இறுதிவரை தொய்வில்லாமல் அட்டகாசமாக செல்கிறது.தயங்காமல் சொல்லலாம், தல-க்கு இன்னொரு மங்காத்தா..!
ஹாலிவுட் படத்தை சுட்ட மாதிரியும் இருக்கணும்... சுடாத மாதிரியும் தெரியனும். இது விஷ்ணுவரதனுக்கு கைவந்த கலையாச்சே... SWORDFISH படத்தை அப்படியே எடுத்தால், 'அய்யய்யோ இது அட்ட காப்பியாச்சே..' என சொல்லிவிடுவார்கள் என்பதால் அங்கங்கே சுட்டிருக்கிறார். அதே கதைக்களம். ஹாலிவுட் பிஸ்ஸாவுடன் நம்மூர் கரம் மசாலாவை தூவி காரம் சாரமாக பரிமாறியிருக்கிறார்.
நம்மூர் அரசியல்வாதிகள் கோடிகோடியாக ஊழல் செய்து சுவிஸ் பேங்கில் போட்டிருக்கும் பணத்தை எடுத்து இந்தியன் ரிசர்வ் பேங்க்-க்கு கொடுப்பதுதான் படத்தின் ஒன் லைன். அதற்காக இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்ட, அதேநேரத்தில் பட வெளியீட்டுக்கு பிரச்சனை வராத ஊழலாக இருக்கவேண்டும் என யோசித்திருக் -கிறார்கள். வாஜ்பாய் காலத்தில் நடந்த சவப்பெட்டி ஊழலை கொஞ்சம் மாற்றி 'புல்லட் புரூவ் ஜாக்கெட்' வாங்கியதில் நடந்த ஊழலாக மாற்றியிருக்கிறார்கள்.
இதில் எங்கே SWORDFISH வருகிறது..? சுவிஸ்பேங்க் அக்கவுண்டை ஹேக் செய்து பணப் பரிமாற்றம் செய்வதாக திரைக்கதை அமைக்கும்போது இந்தப்பெயர் அடிப்பட்டிருக்கலாம். அயன் படத்தில் சூர்யாவிடம் ஒரு இயக்குனர் பேங்க் ராப்பரி சீன் வர்ற மாதிரி படம் சொல்லு என்பார். அவர் சொன்ன பட்டியலில் இந்தப் படமும் வரும். அதுமாதிரி ஒரு டிஸ்கஸனில் இந்தப் படம் சிக்கியிருக்கும்.
தொடக்கத்தில் மும்பையில் பல அடுக்கு மாடிக் கட்டிடங்கள் தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலுக்கு இலக்காகி சின்னாபின்னாமாகிறது. அதற்கு காரணம் கைது செய்து வைத்துள்ள தீவிரவாதி துரானிதான் என்று மும்பை போலிசாக வரும் கிசோர் அறிந்து அவரது நெட்வொர்க்கை கண்டுபிடித்து அழிக்க அலைகிறார். இன்னொருபுறம் அஜித், நயன்தாராவுடன் சேர்ந்து இந்த நெட்வொர்க்கின் மேல்மட்ட அரசியல் தொடர்புகளை குறிவைத்து வேட்டையாடுகிறார். இடைவேளைவரை யார் வில்லன், யார் ஹீரோ என்று வரும் குழப்பத்திற்கு இடைவேளைக்குப் பின் தெளிவு கிடைக்கிறது.
ஆர்யாவின் கிளாஸ்மெட் நயன்தாராவும், டாப்சியும். கல்லூரியில் படிக்கும்போது ஆர்யா செம பிரில்லியண்ட். கம்ப்யூட்டரில் அனைத்தும் அத்துப்படி. கம்ப்யூட்டரை ஹேக் செய்து யுனிவர்சிட்டி மார்க்ஷீட்டில் கைவைக்கும் அளவுக்கு புத்திசாலி. அப்படி உதவப்போய் டாப்சியின் கடைக்கண் பார்வையில் சிக்குகிறார். கல்லூரி மாணவராக ஆர்யா வரும் கெட்டப் செம.. தமிழ் சினிமாவில் புதிய யுத்தி. திரையில் பாருங்கள்,ஆர்யா கலக்கியிருப்பார்.
ஆர்யாவின் ஹேக்கர் மூளையைத்தான் பிற்பாடு நயன்தாரா மூலம் அஜித் பயன்படுத்திக் கொள்வார். அதற்கு டாப்சியை வைத்து பிளாக் மெயில் செய்து அந்தக் காரியத்தை சாதிப்பார்.அஜித் பின்புலம் எதுவும் தெரியாமல் அவரை போலீசில் ஆர்யா சிக்கவைக்க, வேறு வழியில்லாமல் அந்த பிளாஸ்பேக்கை ஆர்யாவிடம் அவிழ்க்கிறார் நயன்தாரா..
அஜித் வழக்கம்போல இதிலும் ஒரு நேர்மையான அஸிஸ்டண்ட் கமிஷ்னர். அதுதவிர ஆன்டி டெர்ரரிசம் ஸ்குவாடு (ATS) -ல் 'பாம் எக்ஸ்பெர்ட்' ஆகவும் இருக்கிறார். மும்பையில் தீவிரவாதிகள் பாம் வைத்தால் அதை செயலிழக்கச் செய்வது இதன் வேலை. அப்படி ஒரு தாக்குதலில் அவரின் சக 'பாம் எக்ஸ்பெர்ட்'டும் உயிர் நண்பனுமாகிய ராணா (திரிஷா கூட சுத்துறதா சொல்றாங்களே.அவரேதான் ) பலியாகிறார்.இவரின் தங்கைதான் நயன்தாரா.
புல்லட் புரூப் ஜாக்கெட்டு போட்டும் எப்படி குண்டு உடலைத்துளைத்தது என ஆராய்கையில்,அது தரமற்ற புல்லட் புரூவ் என தெரியவருகிறது. உடனே மேலதிகாரியிடம் முறையிடுகிறார்.அவரும் இதற்கு உடந்தை என பிறகு தெரியவர, இதில் 200 கோடிக்குமேல் ஊழல் நடந்திருப்பதை அஜித் கண்டறிகிறார். அந்த ஊழலை செய்திருப்பது சாட்சாத் நம்ம எஸ்.எம் கிருஸ்ணா சாயலில் இருக்கும் மத்திய அமைச்சர் என்பதையும் கண்டுபிடித்து, இப்படி ஊழல் செய்த பணம் அனைத்தும் சுவிஸ் பேங்கில் டெபாசிட் செய்திருக்கும் உண்மையும் கண்டறிகிறார். அதை மறைக்க ரானா குடும்பத்தில் அனைவரையும் விஷம் கொடுத்து கொன்று,அஜித்தையும் தீவிரவாதிபோல் பிம்பம் உருவாக்கி அவரை ஆற்றில் தள்ளி கொலை செய்கிறது அந்த அமைச்சர் குரூப். எப்படியோ விஷம் குடித்த நயன்தாராவும் ஆற்றில் விழுந்த அஜித்தும் தப்பி இவர்களை பழிவாங்குவதுதான் மீதி கதை.
படத்திற்கு மையபலம் அஜித் தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் ஒன் மேன் ஆர்மியாக கலக்கியிருக்கிறார். படத்தில் அஜித்துக்கு வசனங்கள் அதிகமாக கிடையாது. அனைத்தும் ஆக்சன் தான். ஆனால் மொத்தமாக கிளைமாக்சில் கேப்டன் மாதிரி, ஊழல், லஞ்சம், அரசியல் என சமகாலப் பிரச்சனைகளைப் பன்ச் களாக அடித்து பின்னியெடுக்கிறார்.
வழக்கம் போல இந்தப்படத்திலும் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை 'நடராஜா' சர்வீஸ் செய்கிறார் அஜித். ஆனால் அதுதான் அவரின் அட்டகாசமான ஸ்டைல் என்பதால் சலிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அதற்கு தல ரசிகர்களிடமிருந்து விசில் பறக்கிறது. சால்ட் அன்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் மங்காத்தாவுக்குப் பிறகு பேஷனாகிவிட்டது சரி.. ஆனால் தல யின் தொப்பை அப்பட்டமாக வயதை கூட்டிக் காண்பிக்கிறதே..
சுவிஸ் பேங்க் அக்கவுண்ட்லிருந்து துபாயிலுள்ள அமைச்சர் மகளின் அக்கவுண்டுக்கு பணம் மாறிவிட,அதை ஆர்யாவும், அஜித்தும் ஹேக் செய்து தன் அக்கவுண்டுக்கு மாற்றும் அந்த பரபர பத்து நிமிடங்கள் அட்டகாசம்.
அமைச்சராக வரும் மகேஷ் மஞ்ச்ரேகர் அச்சு அசல் எஸ்.எம். கிருஸ்ணா போலவே இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு அருகில் இருந்த வேறொரு நாட்டின் அறிக்கையை தப்பாகப் படித்தும், தேசியக் கொடியை தலைகீழாக வைத்தும் பரபரப்பை ஏற்படுத்திய எஸ்.எம். கிருஸ்ணாவின் அதே சம்பவங்களை இதில் வேறு மாதிரி கலாய்த்திருக்கிறார்கள். பெங்களூரு மக்களுக்கு புரியாமல் இருந்தால் சரி..
மாநகரக் காவல் படத்தில் 'வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை' என்று கேப்டனுடன் குத்தாட்டம் போட்ட சுமா ரகுநாத், இதில் டிவி ஆங்கராகவும் பின்பு அமைச்சரின் வில்லன் குரூப்பிலும் வந்து செத்துப் போகிறார்.
SWORDFISH படத்துக்கும் இந்தப்படத்திற்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. பல காட்சிகள் அப்படியே காப்பி அடிக்கப்பட்டுள்ளது. அதில் வந்த நிறைய கேரக்டர்கள் இதிலும் வருகிறது. அஜித் (John Travolta), ஆர்யா (Hugh Jackman) நயன்தாரா (Halle Berry) என்று நீள்கிறது. அதில் FBI வங்கியில் வைத்துள்ள SLUSH FUND என்றால், இந்தப்படத்தில் சுவிஸ் பேங்க் பணம். அந்தப்படத்தில் ஹேக்கரின் மகளை வைத்து பிளாக்மெயில் நடக்கும். இதில் காதலி.
ஆனால் ஹாலிவுட் படத்திற்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப விறுவிறுப்பாக செல்கிறது ஆரம்பம். SWORDFISH படத்தை அணுவணுவாக ரசித்தவர்களுக்கு வேண்டுமானால் இந்தப்படம் திருப்தியளிக்காமல் போகலாம். ஆனால் சாராசரி தமிழ் ரசிகனுக்கு, முக்கியமாக தல ரசிகர்களுக்கு இந்தப்படம் செமத்தியான தீபாவளி விருந்து.
சூப்பர் பாஸ்....... படம் வெற்றி அடைஞ்சது ரொம்ப சந்தோஷம்.. நான் இன்னைக்கு நைட் போறேன்... :):)
ReplyDeleteநன்றி பாஸ் கண்டிப்பாக ஏ .. , பி சென்டர்களில் செம ஹிட் ஆகும் .
Delete//முக்கியமாக தல ரசிகர்களுக்கு இந்தப்படம் செமத்தியான தீபாவளி விருந்து. // இத மட்டுந்தான் வாசிச்சேன்.. இது போதும் எனக்கு இது போதுமே வேறென்ன வேணும் .....
ReplyDelete
Deleteநன்றி சீனு ... அதில் சந்தேகம் ஏதும் இல்லை ..
// ஆர்யாவிடம் அவிழ்க்கிறார் நயன்தாரா //
ReplyDeleteஹி... ஹி... ஹி...
நீ ரசிகன்டா நயன்தார உனக்கு தாண்டா ஹாஹா என்னமா கவனிக்கிறாங்காயா
Deleteஹா ஹா நிஜமாகவே நயனுக்கு ஒரு அவிழ்க்கும் சீன் இருக்குது பிரபா . ஆனா ஆள் வேற :-))
Deleteவணக்கம்
ReplyDeleteபடத்தின் விமர்சனம் எழுதிய விதம் அருமை... வாழ்த்துக்கள்
இனியதீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி பாஸ் .. இனியதீபாவளி வாழ்த்துக்கள்
பாரபட்சமில்லா ஒரு திரைப்படத்தின் நல்ல விமர்சனத்தை படித்தேன். அருமை. நன்றி. வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி chinnapiyan..
Deleteபடம் பாத்துட்டு அவசரப்படாம நிதானமா பல விஷயங்களை அலசி எழுதியிருக்கீங்க அண்ணே....
ReplyDeleteநன்றி ..ஸ்கூல் பையன். ஹா ஹா நிதானமாவா... நைட்டோட நைட்டா உட்காந்து எழுதி போஸ்ட் பண்ணின என் கடமை உணர்ச்சியை நினைச்சா எனக்கே கண் கலங்குது.
Deleteமுதன் முதலில் உங்க விமர்சனம்தான் படிக்குறேன், பார்ப்போம்...!
ReplyDeleteநன்றி மனோ... இதெல்லாம் கடமையா...பெருமை..!! :-)))
Deleteசூப்பர்.
ReplyDeleteநன்றி பொ.முருகன்...
Deletesuperr boss
ReplyDeletethanks boss
Deletethanks boss
Deleteஆரம்பம்....செம போல...
ReplyDeleteகண்டிப்பா நண்பா.. தல ரசிகர்களுக்கு தலைப்பா கட்டு பிரியாணிதான்
Deleteவிஷ்ணுவரதனின் கைவந்த கலையின் விளக்கம் சூப்பர்...!
ReplyDelete"ஆரம்பம்" விமர்சனம் உங்களது தான் முதல் என்று நினைக்கிறேன்... நன்றி...
'தல' தீபாவளி தான்...!
நன்றி...DD . கண்டிப்பாக அவர் ரசிகர்களுக்கு..!
Deleteயுவன்,ஓம் பிரகஷ் பத்தி ஒண்ணுமே சொல்லையே தலைவா???
ReplyDeleteநன்றி.. யுவன் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. cinematography அப்படி ஒன்றும் அசத்தல் இல்லை பாஸ்
Deleteமுழு கதையையும் சொல்லிட்டீங்க போல.... ரசிச்சு சொல்லிட்டீங்களா, அதான் நானும் அப்படியே படிச்சுட்டேன் (y)
ReplyDeleteநன்றி.. காயத்ரி தேவி (ஜி.டி) ;-)))
Deleteஉங்க விமர்சனம் படித்த பின் ஸ்வார்டுபிஷ் பார்க்கலாமென்று இருக்கிறேன். அதை netflix ல் பார்த்துவிடலாம் ஆரம்பம் படத்திற்கு 2 வாரம் பொறுத்து இருக்கணும் அப்பதான் எங்க ஊரு டிவியில பாரக்க முடியும்
ReplyDeleteஹா..ஹா... அதைப் பார்த்துவிட்டு பார்த்தால் அந்தளவுக்கு பிடிக்காது பாஸ்.
Deleteஉங்கள் விமர்சனத்தின் மூலம் ,இந்த படத்தின் மூலம் எதுவென்று தெரிகிறது !
ReplyDeleteத.ம 4
நன்றி.. பாஸ் .
Deleteரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்;
ReplyDeleteமறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?
ஹா..ஹா...நன்றி. அதைவிட எனக்கு என்ன பாஸ் வேலை... கண்டிப்பாக வருகிறேன்
Deleteஆரம்பம் முதல் விமர்சனம் உங்களோடது தான்
ReplyDeleteமிக்க நன்றி சக்கரக்கட்டி
Deleteonly aarambam its nothing like anything
ReplyDeleteexactly... thanks boss
Deleteரஜினி படம் இல்லாத குறைய தல பாத்துகிறாரு... mass opening
ReplyDeleteஅதுதான் மறுக்கமுடியாத உண்மை.. நன்றி sri raji..
Deleteநல்லவேளை உங்கள் விமர்சனத்தை படிக்கும் முன் படம் பார்த்துவிட்டேன் . இப்படி மொத்த கதையயுமா சொல்வீர்கள் பார்பவர்களுக்கு கொஞ்சம் சஸ்பென்சை மிச்சம் வையுங்கள் ...
ReplyDeleteஅட திரும்பவும் படிச்சிப் பாருங்க பாஸ்.... :-))
Delete//எப்படியோ விஷம் குடித்த நயன்தாராவும் ஆற்றில் விழுந்த அஜித்தும் தப்பி இவர்களை பழிவாங்குவதுதான் மீதி கதை. // இப்படித்தான் முடிச்சிருக்கேன்.
அந்த அமைச்சர் என்ன ஆனார்..? அமைச்சரின் மகள் என்ன ஆனாள்..? அந்த தீவிரவாதி பிறகு என்ன ஆனான்... எதுவுமே சொல்லலையே. படம் இடைவேளை வரை சுத்தி வளைத்து சொல்வதால் நிறைய பேர் குழம்பிப் போயிருக்கிறார்கள். அதனால்தான் படம் பார்த்த பலர் first half சரியில்லை என்கிறார்கள். ஒருவேளை அவர்கள் படம் பார்க்கும் முன் இதைப் படித்திருந்தால் ஒரு தெளிவு(!) கிடைக்கும் அல்லவா . :-)))
விஷ்ணுவரதனின் கைவந்த கலையின் விளக்கம் சூப்பர்...!
ReplyDelete"ஆரம்பம்" விமர்சனம் உங்களது தான் முதல் என்று நினைக்கிறேன்... நன்றி...
'தல' தீபாவளி தான்...!
மிக்க நன்றி செந்தில்குமார்
Deletesuper review tq ji happy diwali
ReplyDeletethanks AJATHA SATHRU.. Happy diwali..
ReplyDeleteThanks for this positive review thala...
ReplyDeleteHappy diwali. .
Thanks vivek kayamozhi...Happy diwali..
Deleteதல படம் தீபாவளி கொண்டாடுவது மகிழ்ச்சி! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி s suresh
Deleteதல தல தான்
ReplyDeleteதல கலக்குங்க
ReplyDeleteமிக்க நன்றி Dharmaraj
Deleteவிமர்சனம் நன்று!!!ஒவ்வொருவர் பார்வையில் ஒவ்வோர் விதம்!
ReplyDeleteஉண்மைதான் .மிக்க நன்றி Subramaniam Yogarasa
Deletethala padam superu.. aanaa lastla taapsi news vasipaangalea iyyo supero superu
ReplyDeleteஆரம்பம் அஜித் கரியர்ல நல்லதொரு லேடர்..
ReplyDeleteமிக்க நன்றி
Deleteஹாரி