Wednesday 21 August 2013

ஐந்து ஐந்து ஐந்து -விழலுக்கு இறைத்த நீர்


ரம்பத்தில் படத்தின் டைட்டில் 'ஜந்து ஜந்து ஜந்து' என்றுதான் நினைத்திருந்தேன். அதற்கேற்றாற்போல் போஸ்டரில் பரத்தும் அர்னால்டு மாதிரி நெஞ்சு எது,வயிறு எது என தெரியாமல் ஆங்காங்கே முட்டிக்கொண்டு காட்சியளித்ததால், ஏதோ ஒரு ஜந்துவை அழிப்பதுபோல் கதையிருக்குமோ என நினைத்திருந்தேன்.

உள்ளே சென்று பார்த்தால் கதையே வேறு.

பலர் ஏற்கனவே விமர்சனத்தில் சுமார் என எழுதியிருந்ததால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் திரையரங் கிற்கு சென்றிருந்தேன். தியேட்டரில் 125 க்கு மேல் (ஐந்து X  ஐந்து X ஐந்து) இருக்க வாய்ப்பில்லை என்றாலும் 15 பேராவது (ஐந்து +  ஐந்து + ஐந்து) இருப்பார்கள் என நினைத்து போயிருந்தேன். கடைசியில் வெறும் ஐந்து பேருடன் மட்டுமே உட்கார்ந்து படம் பார்க்கும் அற்புத அனுபவம் கிட்டியது.

மனதை வருடும் மென்மையான படங்களை மட்டுமே தமிழ் ரசிகர்களுக்குப் படைத்துவந்த இயக்குனர் சசி, இந்தமுறை ஆக்சன் திரில்லர் கலந்த ஒரு வித்தியாசமான பாதையில் பயணித்திருக்கிறார்.

புற்று நோய்னு ஒன்னு இருக்கு. அது இருக்கிறவங்க கண்டிப்பா லவ் பண்ணுவாங்க.கடைசில ரத்த ரத்தமா கக்கி சாவாங்க என்கிற விசயமே சினிமாவைப் பார்த்துதானே தெரிந்துகொண்டோம்.......!.அதேபோல மல்டிபிள் டிஸ்ஆர்டர் பர்சனாலிடி, ஸ்ப்லிட் பர்சனாலிடி,ஷார்ட்டெர்ம் மெமரி லாஸ் இதெல்லாம் வந்தா லூசுத்தனமா நடந்துக்குவாங்க என்பதையும் அதே சினிமாவிலிருந்துதான் கற்றுக்கொண்டோம்.அந்த வரிசையில் அடுத்ததாக வருகிறது 'பாரா அம்னீசியா'. இது கிட்டத்தட்ட கஜினியில் வருகிற ஷார்ட்டெர்ம் மெமரி லாஸ் மாதிரி. அதனால் அதுபோலவே இந்தப்படத்தை உருவாக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் பாதிகிணறு கூட தாண்டவில்லை.

படம் நெடுக சஸ்பென்ஸ்...அதிரவைக்கும் ட்விஸ்ட்கள் என கொஞ்சம் வேகமாகத்தான் செல்கிறது. ஒரு கார் ஆக்சிடெண்டில் பலமாக அடிபட்ட பரத்துக்கு பாரா அம்னீசியா நோய் இருப்பதாக சொல்லப்படுகிறது. தான் ஒரு பெண்ணை காதலித்ததாகவும் அவருடன் காரில் சென்றபோது விபத்துக்குள்ளாகி அவர் இறந்துவிட்டார் என பரத் புலம்ப,அப்படி ஒரு பெண்ணே கிடையாது அது கற்பனை என பரத் அண்ணனாக வரும் சந்தானமும், சைக்யாட்ரிஸ்ட் டாக்டரும் திரும்ப திரும்ப சொல்கிறார்கள். ஆனால் உண்மை என்ன என்பதை கொஞ்சம் சஸ்பென்ஸ் கலந்து சொல்லியிருக்கிறார்கள்

அவர்கள் சுத்தி வளைத்து சொல்ல வந்த கதை இதுதான்.

பாயல் இன்ஃபோடெக் CEO-வாக வரும் சுதேஷ் பெர்ரிக்கு (வில்லன்) ஒரு லவ் ஃபிளாஸ்பேக் இருக்கிறது. குஜராத்தில் வறுமையில் வாடிய தன் இளவயதில் வேறு குலத்தைச் சார்ந்த பாயல் என்கிற பெண்ணுடன் காதல் மலர்ந்து,ஊரைவிட்டே ஓடும்போது பாயலின் உறவினர்களால் கடுமையாக தாக்கப்படுகிறார். அடுத்து பாயலையும் பூச்சி மருந்து கொடுத்து கொன்று விடுகிறார்கள். பிறகு எப்படியோ தப்பித்து சென்னையில் பிரபல பிசினெஸ் மேக்னெட்டாகவும்,அண்டர்வேர்ல்டு தாதாவாகவும் மாறிவிடுகிறார்.

நாற்பது வயது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தவர் எதேச்சையாக பள்ளி மாணவியாக இருக்கும் ஹீரோயின் லியானாவை சந்திக்கிறார்.அவர் தன் பழைய காதலி பாயலின் சாயலில் இருக்க, அவரைத்தான் திருமணம் செய்வது என முடிவுக்கு வருகிறார். அவரின் பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் அவர்களைப் போட்டுத்தள்ளி,அந்தப் பெண்ணை அனாதையாக்கித் தானே தத்தெடுக்கிறார். தான் யாரென்று தெரியக் கூடாது என்பதற்காக வேறொருவரை கார்டியன் போல் செட்டப் செய்து வளர்த்துவருகிறார். இவ்வளவு விசயங்கள் கடைசி பதினைந்து நிமிடத்தில்தான் சொல்லப்படுகிறது.

இந்தக் கட்டத்தில்தான் பரத்க்கும் லிசானாவுக்கும் காதல் மலருகிறது.இவர்களின் காதல் விஷயம் வில்லனுக்கு தெரியவரும் நேரத்தில் இருவரும் பெரிய கார் விபத்தில் சிக்குகிறார்கள். இவர்களின் துரதிஷ்டம்  இருவரும் வில்லனின் ஹாஸ்பிடலுக்கே கொண்டு வரப்படுகிறார்கள். இப்போதுதான் லியானாவிற்கு தான் யார் என்பதை சொல்லி தன்னை திருமணம் செய்ய வற்புறுத்துகிறான் வில்லன். ஆனால் பரத்தை என்னால் மறக்க முடியாது என லியானா அடம்பிடிக்க,இருவருக்குள்ளும் ஒரு ஒப்பந்தம்(!!) செய்து கொள்ளப்படுகிறது. இன்னும் ஒரு வருடத்தில் பரத் உன்னை மறக்காமல் இருந்தால் உன்னை விட்டுவிடுகிறேன்,இல்லையென்றால் என்னைத் தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என மிரட்டி தன் கஸ்டடியில் அடைத்து விடுகிறான். அடுத்து என்ன...? பரத்,லியானாவை மறக்க என்ன கேப்மாரித்தனம் பண்ணவேண்டுமோ அதையெல்லாம் செய்கிறது வில்லன் தரப்பு.  பரத்துக்கு பாரா அம்னீசியா நோய் வந்ததாக பொய் சொல்லி நம்ப வைக்கிறது. அதற்காக பரத்தைச் சுற்றி இருக்கும் டாக்டரிலிருந்து, புது காதலி வரைக்கும் தன் ஆட்களையே நியமித்து அவரை அரை மென்டலாக்குகிறது.

சந்தானமும் அவர்களுக்கு பயந்து நடிக்க ஒரு கட்டத்தில் தனக்கு அந்த நோய் இருப்பதாகவும், தான் முன்பு வாழ்ந்த வாழ்க்கை ஒரு இமாஜினேசன் எனவும் பரத்தும் அவரோடு சேர்ந்து நாமும் நம்புகிற வேளையில்தான் அடுத்தடுத்த திருப்பங்கள்...சஸ்பென்ஸ்.. என திகில் ஏற்றுகிறது.


படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படும் பில்டப்புக்கு கடைசியில் சொல்லப்படும் பிளாஸ்பேக் தான் முதல் சொதப்பல். இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். பரத்தின் காதலி லியானாவாக வரும் மிர்த்திகா அவ்வளவாக மனதில் ஒட்டவில்லை. கஜினிக்கு அசின் எந்த அளவு பிளஸ்ஸோ அந்தளவு இவர் இதில் மைனஸ்.

பரத்-மிர்த்திகா காதல் காட்சிகள் அமெச்சூர்தனமாக இருக்கிறது. பரத் தனக்கு ஏதோ ஸ்பெசல் பவர் இருப்பதாக மிர்த்திகாவை நம்பவைக்கிறார். அவர் எப்படி அப்படியே நம்புகிறார் என்பதைத்தான் நம் மனம் நம்ப மறுக்கிறது.

இதிலும் பன்ச்டயலாக் பேசித்தான் காமெடியை ஒப்பேற்றுகிறார் சந்தானம்.இதுபோன்ற பன்ச்கள் பேஸ்புக்கிலும் ட்வீட்டரிலும் மலிந்து கிடக்கிறது. அதைப்பேச ஒரு காமெடியன் வேண்டுமா..?  சாமிநாதனும்,மனோபாலாவும் வரும் காட்சிகள் காமெடிக்காகத்தான் சேர்க்கப்பட்டது என்பதை பக்கத்தில் ஒருவர் சிரித்ததைக் கண்டு உணரமுடிந்தது.

ஒரு சஸ்பென்ஸ்ஸான படத்தில் ஒவ்வொரு முடிச்சுகளையும் அடுத்தடுத்து அவிழ்க்கும்போது அது பார்வை யாளனை பிரமிப்புக்குள்ளாக்க வேண்டும்.நம்பும்படியாகவும் இருக்கவேண்டும். ஆனால் இதில் பரத்தை சுற்றி நடக்கும் அனைத்தும் வில்லனின் செட்டப்தான் என்று தெரியவரும்போது, 'அட போங்கப்பா...' என்றுதான் சொல்லத்தோணுது.

இதில் எழும்பும் முக்கியமான கேள்வி,பரத்தின் சிக்ஸ்பேக் படத்திற்கு நல்ல விளம்பரம்தான். ஆனால் எதற்காக அவர் சிக்ஸ்பேக் வைக்க வேண்டும்...? காதலிக்கும் போது அமுல்பாயாக இருக்கும் பரத் , ஏழு மாதத்திற்கு முன் நடத்த ஆக்சிடெண்டில் காதலியை இழந்து மன உளைச்சலில் இருப்பவர் சிக்ஸ்பேக் வைக்கும் அளவுக்கு அப்படியென்ன அவசியம். கஜினியில சூர்யா கூடத்தான் வச்சிருந்தார் என கேள்வி எழுப்பினால், அவர், காதலியை கொன்றவனைப் பழிவாங்க தன்னை தயார் படுத்திக்கொண்டார் என்பதில் ஒரு லாஜிக் இருக்கிறது. இதில் கடைசியில்தானே வில்லனே வருகிறார்.

அதேவேளையில், மாஸ் ஹீரோக்கள் எல்லாம் ஒரே கெட்டப்பில் தொடர்ந்து பத்து படம் நடிக்கும் போது, தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டவேண்டும் என்பதற்காக பரத் எடுத்த சிரத்தை உண்மையிலேயே பாராட்டுக்குரியது. ஆனால் கதையிலும் காட்சியமைப்பிலும் இயக்குனர் விட்ட கோட்டையால் பரத்தின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகிப் போனது.


17 comments:

 1. படம் பார்த்ததிற்கும் விமர்சனம் எழுதியமைக்கும் ஒரு பரிசு கொடுக்க வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... :-) நன்றிங்க D.D

   Delete
 2. புற்று நோய்னு ஒன்னு இருக்கு. அது இருக்கிறவங்க கண்டிப்பா லவ் பண்ணுவாங்க.கடைசில ரத்த ரத்தமா கக்கி சாவாங்க என்கிற விசயமே சினிமாவைப் பார்த்துதானே தெரிந்துகொண்டோம்.......!. ////

  ஹா ஹா ஹா அட ஆமால்ல!

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாஸ்... ஆ...இது உங்க போட்டோவா...இப்பதான் முதல்முறையா பார்க்கிறேன்..

   Delete
 3. உங்க பாணியில நல்ல விமர்சிச்சு எழுதி இருக்கீங்க... ஆங்க் சொல்ல மறந்துட்டேன்! உங்களுக்கு காமெடி செமையா வருது பாஸ்..! கீப் இட் அப் :))

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாஸ்... காமெடிக்கும் நமக்கும் ரொம்ப தூரம்... ஆனா உங்க பதிவுகளை படிச்ச பின்னதான் காமெடியா கொஞ்சம் எழுதிப்பாக்கலாம்னு முயற்சி செய்யிறேன்... நீங்களே சொன்னது பெரிய விஷயம்.

   Delete
 4. Fantastic... i have to see this movie...

  ReplyDelete
 5. Tambi un peru ennapa pls ata konjam kadaisiya type panniruntina konjam nalla irunthurukkum unna kilikka unnna yeodi titturarunu yenaku teriyala yenda nee yenna sankar ku cinema solli kudutavana unna mathiri alungalam inta ulagatula irukuratu palarukku loss nee inta padata pathu vimarsanam eluthura itha naaanga nambanum yetho theaterpoga kasu illama news paperla vimarsanam padichittu inga build up kudukuriya neelam intha pakkame varathada unmaya cinemava rasikkira yevanukkum inta padam pudikkum apdi pudikkalana ava cinema rasikkirathula arthame illa neelam sura mathiri padataha nalla padamnu sollura alunga kootahula ullavanda unna mathiri aalungalam vanthu padam kudungada vlangidum tamillcinema

  ReplyDelete
  Replies
  1. //Tambi un peru ennapa pls ata konjam kadaisiya type panniruntina konjam nalla irunthurukkum unna kilikka //

   எதுக்கு இங்க வந்து லூசு மாதிரி உளறுற... கீழையும் சைடுலேயும் என் பேரு இருக்கே. அத கூட பாக்காம வக்கனையா கேள்வி கேக்கிற..

   Delete
  2. டேய் லூசு விமர்சனம் பன்றதுக்கு சங்கர்கிட்ட எதுக்கு வேலை பாக்கணும்.? முதல்ல விமர்சனத்தை ஒழுங்கா படிச்சி பாரு.. படம் மொக்கைனா சொல்லியிருக்கேன்..?. விறுவிறுப்பான படத்தில இருக்கிற ஒருசில மைனசைதான் சொல்லியிருக்கேன். உனக்கு புடிச்ச மாதிரி விமர்சனம் வேணும்னா போயி சன் டிவில பாரு. சும்மா இருந்த பரத்துக்கு சின்ன தளபதின்னு போட்டு மொத்தமா ஒழிச்ச ரசிக குஞ்சுகள்ல நீயும் ஒருத்தன் தான..

   Delete
 6. உங்களின் பார்வையில் உள்ள இந்தக் கதைப்போக்கு விமர்சனம் வித்தியாசமாக அருமையாகவே உள்ளது. படம் பார்க்கின்ற ஆர்வத்தை உண்டுபண்ணுகிறது.

  சிக்ஸ்பேக் வைப்பதற்கான காரணம்..? புரியல சகோ... சுறுசுறுப்பாக சுழலும், ஆரோக்கிய உணவு முறையும் கொண்ட ஆண்களுக்கு சிக்ஸ்பேக் இயற்கையாகவே அமையப்பெற்ற ஒன்று என்பது கேள்விப்பட்ட ஒன்று. இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ... ஆக்சிடென்ட் ஆவதற்கு முன் அமுல்பாயாக கொழுக்மொழுக்னு இருந்தவர் அதற்குப் பின் அர்னால்டு ரேஞ்சுக்கு மாறிவிட்டார். அந்த உடல்கட்டமைப்பைப் பெறுவதற்கு குறைந்தது ஒரு வருடமாவது தொடர்ந்து உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும்... ஆனால் இது ஒரு குறையாக சொல்லவில்லை. அவரின் உழைப்பு பிரமிப்பு.

   Delete
 7. கதைய கேட்டா ஜெய்சங்கர் நடித்த யார்நீ போல உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. கரெக்டுதான் பாஸ்.. கொஞ்சம் டிங்கரிங், பட்டி, பெயிண்டிங் செஞ்சிருப்பாங்க போல.

   Delete
 8. Replies
  1. yes.. corrected. Thanks ரிஷான் ஷெரீப்..

   Delete