Thursday 11 July 2013

எழுச்சித் தலைவி பாபிலோனாவின் புரட்சிகர சிந்தனை....


விஸ்வரூபம் படத்துக்குக் கூட இவ்வளவு எதிர்பார்ப்பில் இல்லை. சன்டிவி விவாத நிகழ்ச்சியில், அதுவும் கில்மா சைட்டுகளை தடை பண்ணுவது தொடர்பாக எழுச்சித் தலைவி பாபிலோனா பேசியிருக்கிறார் என தெரியவந்தபோது, எப்படியாவது அதைப் பார்த்துவிடும் ஆவலில் தேடாத கில்மா சைட் கிடையாது. கூகுளில் தேடினால் எழுச்சித் தலைவி கண்ணியமாக நடித்த டூ பீஸ் & டாப் லெஸ் மட்டுமே காணக் கிடைக்கிறது. பிறகுதான் காரணம் புரிந்தது. வழக்கத்துக்கு மாறாக புடவை ரவிக்கை அணித்திருந்த காரணத்தால் படு ஆபாசமாக இருந்ததால் எந்த வெப்சைட்டும் அந்த காணொளியை வெளியிடவில்லை. இதையடுத்து எழுச்சித் தலைவி பேரவை சார்பில் ஸ்பெசல் யாகம் நடத்தப்பட்டது.

கடைசியில் தெய்வ அனுக்கிரகமும் ஆசீர்வாதமும் ஒருசேர கிட்ட நேற்றுதான் அந்த காணொளியை காணும் பாக்கியம் கிட்டியது. கூடவே லொள்ளு புடிச்ச அராத்து பல திசைகளிலிருந்தும் கேள்விக்கணைகளைத் தொடுக்க அதை கச்சிதமாக எதிர்கொண்டார், பார் போற்றும் பேரழகி எழுச்சித் தலைவி பாபிலோனா..

இளைஞர்களின் எழுச்சித் தலைவி டாக்டர் செல்வி பாபிலோனா
எழுச்சித் தலைவி பேசிய புரட்சிகர சிந்தனைகளை எழுச்சித் தலைவி பேரவை சார்பில் இங்கே பதிகிறோம். வரும் காலத்தில் ஆட்சிபீடத்தில் அமரும்போது கட்சிக்கென்று தனியாக கொள்கை இல்லாமல் போனால் இதுவே கட்சியின் கொள்கையாக பின்பு அறிவிக்கப்படும் என்பதையும் பேரவை சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்போ விவாதத்துக்கு போகலாம்....

மேட்டரு இதுதான்... இந்தியாவில 39 ஆபாச இணையதளங்களை முடக்கி விட்டார்களாம். இதைப் பற்றி சன் டிவியில் நடந்த சூடான விவாதத்தில் நமது எழுச்சித் தலைவி பொத்தாம் பொதுவாக பொதுவெளியில் வைத்த கருத்துக்களை  இங்கே பகிர்கிறோம்.(வீடியோ கீழே)


கேள்வி : 39 வெப்சைட்டை அரசு முடக்கியிருக்கிறது.அரசு எடுத்த நடவடிக்கை போதுமானதா..?  

எழுச்சித் தலைவி: என்னைப் பொறுத்த முட்டும் 39 தானே அப்படினு ஒரு சாதாரணமா சொல்லாம 39 -தை கட் பண்ணியிருக்காங்களே..இதுதான் ஃபர்ஸ்ட் ஸ்டெப்... இத நெனைச்சி ரொம்ப பெருமைபடுறேன்.( எது எதுக்கெல்லாம் பெருமைபடுறதுன்னு விவஸ்தையே இல்லையா அம்மணி...  

அதாவது ஒரு எட்டு மாத பையன் மொபைல்ல இன்டர்நெட் கனெக்சன் கொடுத்து பலான வெப்சைட் பாத்திருக்கான்.இந்த 39 வெப்சைட் தடை பண்ணினா பத்தாது வேரோட தடை பண்ணனும்.. (என்னது எட்டு மாசமா...கிழிஞ்சது போ .மாசத்துக்கும் வருசத்துக்குமே வித்தியாசம் தெரியில...என்னத்த கட்சி ஆரம்பிச்சி..சி.எம் ஆகிறது..) 

பாதி மரத்தோட கட் பண்ணிட்டு விட்டாதான் நமக்கு ரொம்ப கஷ்டம்..இட் வில் ஆட்டோமேட்டிகலி குரோவ். அதனால வேரோட வெட்டனும்.அதேப்போல ஒரு ஸ்டெப் ஏறினாத்தான் வீ கேன் கோ...நம்மளால தொடர்ந்து மேலே ஏறி போக முடியும்..  ஒரு  ஸ்டெப் ஏறாம மேலே போகணும் மேலே போகணும்னா வி கான்ட் இல்லையா..(நோட் பண்ணுங்கப்பா...நோட் பண்ணுங்கப்பா...)  

அதாவது சின்னப்பசங்களா இருக்கட்டும்,எங்ஸ்டெரா இருக்கட்டும், வயசானவங்களா இருக்கட்டும் யாரா இருந்தாலும் இனிமேல் அவுங்க மனசில ஒரு பயம் இருக்கும். (என்னான்னு அம்மணி...பலான வெப்சைட் பாத்தா எய்ட்ஸ் வருமா..)
" யாருல அது...எழுச்சித் தலைவி பேசுறப்போ எகத்தாளமா சிரிக்கிறது..? தோலை உரிச்சிப் போடுவேன்."
கேள்வி : அரசு வேர் வரைக்கும் போவணும்னு சொல்றீங்க...இந்த பொறுப்பு அரசுக்கு மட்டும்தான் இருக்கிறதா மத்தவங்களுக்கு  இல்லையா..  

எழுச்சித் தலைவி: அரசு வந்து எந்த அளவுக்கு ட்ரை பண்ணினாலும் அந்த அளவுக்கு எடுக்கமுடியாது அப்படினு ஆணித்தரமா சொல்றது வந்து ஒரு ஃபூலிஷான ஆன்ஸ்வர்னு நான் ஆணித்தரமா சொல்றேன். (கிழிஞ்சது...). 

 ஒரு கொலைகாரனா இருக்கட்டும் செயின் பறிக்கிரவனா இருக்கட்டும் இதே அரசுதான் கெட்டவன நல்லவனா மாத்துது.( போர்ன் சைட் பாக்கிறது ஒரு குத்தமாயா..கொலைகாரன் ரேஞ்சுக்கு அம்மணி கொண்டு போவுது)  

என்னை மாதிரி மக்களுக்கு இந்த 39 சாதரணமா இருக்கலாம். ஆனா 39 பிளாக் பண்ணியிருக்காங்ககிற நியுஸ் வெளியே தெரிஞ்சா இப்படி பண்ணியிருக்காங்கனு எல்லோரும் ஷாக் ஆயி இத பாக்கிறதா நிறுத்திடுவாங்க.  (ஆமா.. நான் கூட அப்படியே ஷாக் ஆயிட்டேன்) 

அதுவுமில்லாம ஸ்டுடெண்ட்ஸ்,பொது மக்கள் எல்லாம் போராட்டம் நடத்தினாங்கனா இன்னும் தடை செஞ்சி பாக்கக் கூடிய டெம்ப்ட் கம்மியாகும். சோ ..பொதுமக்கள் எல்லோரும் ஸ்ட்ரைக் பண்ணினா கண்டிப்பா இதை தடை பண்ணிடலாம். ( என்னது  இதுக்கு மாணவர் போராட்டமா...கிரேட் இன்சல்ட்..)
 
"யோவ் அராத்து.. எழுச்சித் தலைவிகிட்டேயே சண்டை போடுறியா..பேரவை சார்பா கண்டன தீர்மானம் போட்டுடுவோம் ஆமா.."
அராத்து: இல்லைங்க இந்த மாணவர்களெல்லாம் ஸ்ட்ரைக் பண்ணனும்னு சொன்னீங்களே.அதை கற்பனை பண்ணிப் பாத்தேன் ரொம்ப காமெடியா இருந்தது.     

எழுச்சித் தலைவி: காலேஜ் ஸ்டுடெண்ட்ஸ் கண்டதுகெல்லாம் ஸ்ட்ரைக் பன்றாங்க..அர்த்தமே இல்லாம ஸ்ட்ரைக் பன்றாங்க..இதுக்கு ஏன் பண்ணக் கூடாது. இது ஒரு கேன்சர் போல பரவி போயிட்டு இருக்கு. (என்னது கண்டதுக்குமா...லயோல்லா காலேஜ் ஸ்டுடெண்ட்ஸ் கவனிக்க ...)   

ஊசி இடம் கொடுத்தாதான் நூல் நொழைய முடியும்னு ஒரு பல மொழி இருக்கு...அதே போல எந்த மாணவனும் இந்த வெப்சைட்ட பாத்தாதான் தூக்கம் வரும்,சாப்பாடே இறங்காதுன்னு சொல்லறதில்லை. (இதுக்கு எதுக்கு அம்மணி அப்படியொரு பழமொழி..)   

இந்த ஆபாச வெப்சைட்ட பசங்க மட்டுமில்ல வயசான கிழவன் கிழவி வரைக்கும் பாக்குறாங்க... இப்போ  அந்த காலம் மாறி போயிடுச்சி..(உங்க ஆதங்கம் புரியுது அம்மணி..பரங்கிமலை ஜோதி ஹவுஸ் புல்லா ஓடினதே பல்லுபோன கிழடுகளாலதான...)  
 
"எழுச்சித் தலைவியின் தத்துவார்த்த சிந்தனைகளின் சாரம்சம் புரியாமல் 'முழிக்கும்' நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் . "
அராத்து..: அமாங்க எல்லோரும் பாக்குறாங்க..இல்லன்னு சொல்லல..ஆனா அதில் கிரைம் இருக்கா கிரைம் இல்லையான்னு பாக்கணும். அதைவிட்டுட்டு காலேஜ் ஸ்டுடெண்ட்ஸ் எல்லாம் ரோட்ல இரங்கி ஸ்ட்ரைக் பண்ணனும்னு சொல்றது வேடிக்கையா இருக்கு... 

எழுச்சித் தலைவி: ஏங்க நான் ஒன்னும் வடிவேல் காமெடி பன்னல...காலேஜ் ஸ்டுடெண்ட்ஸ் கொடி புடிச்சி ஸ்ட்ரைக் பண்ணனும்னு சொல்றதுக்கு நான் ஒன்னும் வடிவேலோ சந்தானமோ இல்ல..( யோவ் அராத்து நாங்க எப்போயா சொன்னோம் ..அது போன கேள்வி...இது இந்த கேள்வி..)  

நான் என்ன சொல்ல வரேனா இது ஒரு கேன்சர் மாதிரி கொடிய நோயா பயங்கர நோயா பரவிகிட்டே இருந்தா மக்களும் கொந்தளிச்சி போவாங்க என்னை மாதிரி..( அடங்கொன்னியா....இது உலக நடிப்புடா சாமி.... )

அராத்து.:ஏங்க நான் என்ன சொல்றேனா இது கிரைமா இல்லாதவரை எந்த தவறும் இல்லை...ஏங்க சினிமாவில் இல்லாத  ஆபாசமா... 

எழுச்சித் தலைவி:ஏங்க சினிமாவில் யாரும் நியூடா நடிக்கிலையே..கிளாமர் வேற.. வல்கர் வேற..(யோவ் அராத்து தேவையா உனக்கு...அதான் யாரும் நியூடா நடிக்கிறதில்லன்னு அம்மணி சொல்லுதுல... மூடிகிட்டு போயா... ) 

கேள்வி: சரி...ஆபாசத்தளங்கள்  பெருகுவதற்கு என்ன காரணம்..?   

எழுச்சித் தலைவி: அவர் சொல்ற மாதிரி முன்னெல்லாம் நிறைய புளுபிலிம் இருந்ததாம்,  CD இருந்ததாம்,  தியேட்டரில் போய் பாத்தாங்களாம்...ஓகே பைஃன்..அது முன்னாடி இருந்தது.ஆனா இப்ப வந்து ஒரு தப்பான கிட்டத்தட்ட வந்து, வெப்சைட் நிறைய வந்து,மேலைநாடுகளில் வந்து,அதிகமா இருக்குனா வந்து,தப்பான செய்திகள் வந்து மக்கள்தான் காரணம்னு   அவர் சொல்றாரு.அத நான் ஏத்துக்க மாட்டேன்..( கரெக்ட் இப்படித்தான் புரிஞ்ச மாதிரியும் இருக்கக் கூடாது...புரியாத மாதிரியும் இருக்கக் கூடாது.)

அராத்து.:சரிங்க மக்கள்தான பாக்குறாங்க...அவுங்க எப்படி காரணம் இல்லைன்னு சொல்றீங்க..
 

எழுச்சித் தலைவி: நீங்க சொல்றீங்க...மக்கள்தான் கிரிடிட் கார்டு ATMகார்டு யூஸ் பண்ணி வெப்சைட்ல பாக்கிறதாலதான் ஆபாச தளம் பெருகுது..இதனால மக்கள் கிட்டேருந்து பணம் கோடிக்கணக்கில் போயிட்டே இருக்கு.ஆனா மக்கள் மேல தப்பே இல்ல.மக்களை பிலேம் பண்ண  கூடாது. இந்த விவாத மேடையில இப்படி ஒரு விசயத்த வந்து சாதரணமா ஒரு குப்பை விசயமா நினைக்காம முக்கியத்துவம் கொடுத்து பேசுரதாலதான் மக்கள் வந்து,மில்லியன் கணக்கா இருக்கிற மக்கள் வந்து, அதுல யாரவது ஒருத்தர் வந்து யோசிபாங்களா...இது எவ்ளோ ஒரு தப்புன்னு ..இதுவே ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் தானே..(என்னது வரப்பிரசாதமா..? ) இதுவே ஸ்பிரெட் ஆகுமே...யாரும் இனிமேல் பாக்கக் கூடாது.இப்ப பாக்கிறவங்களுக்கு கண்டிப்பா அடிவயித்த கலக்கியிருக்கும்.  (நாம ஒரு கேள்வி கேட்டா நாம அசர்ற மாதிரி அம்மணி ஒரு பதில் சொல்லும் பாருங்க......) 


அராத்து.:இல்லங்க இதன்மூலம் கண்டிப்பா ஆர்வம் அதிகமாகத்தானே செய்யும்..... 

எழுச்சித் தலைவி: கண்டிப்பா கிடையவே கிடையாது.சான்சே இல்லை உங்களுக்கும் எனக்கும் என்ன பெட்டு...நான் பெட் கட்டிக்கிறேன் எவ்ளோ குரோர்ஸ் வேணும்னாலும்.ஆர்வமா இருக்கிறதுக்கு இது ஒன்னும் தங்கமோ,புடவையோ இல்ல...இது வந்து ஒரு கேவலமான விஷயம்...ஆபாசம் என்பது படு கேவலம்.( மகா  ஜனங்களே நல்லா கேட்டுக்குங்க இந்த பழி பாவத்துக்கு நாள் ஆளாகவே மாட்டேன்) இந்த 39 சைட் தடை பண்ணினத நாம வரவேற்கனும்..

அராத்து.:பாபிலோனா 39 என்ன 3900 வெப்சைட்ட தடை பண்ணினா கூட நான் சந்தோஷ படுவேன்...இப்ப கேள்வியே ஏன் ஆபாச வெப்சைட் பெருகுது. இதுக்கு ஏன் இப்படி உணர்ச்சி வசப்படுறீங்க..

 
எழுச்சித் தலைவி: இதே வெப்சைட்டில் என்னோட போட்டோவ மார்பிங் பண்ணி தப்பு தப்பா பண்ணியிருக்காங்க...(அடங்கொன்னியா..) சிலபேர் பாபிலோனா அப்படிப் பட்டவங்க இல்லன்னு நம்புறாங்க. சில பேரு அப்படி இருக்குமோனு சந்தேகப்படுறாங்க... எனக்கு 50 வயசாகி ரெண்டு குழந்தை இருந்தா பரவாயில்லை.(இருந்தா காறித் துப்பிருக்கும்...) ஆனா ஸ்டில் நான் வந்து கல்யாணமே ஆகல.. இதுக்குதான் இவளவு உணர்சிவசப்படுறேன்... (அதாவது இணையத்தில் இருக்கும் அம்மணியோட அனைத்து பலான வீடியோவும்  ஹாலிவுட் தொழில்நுட்ப உதவியுடன் மார்பிங் செய்யப்பட்டது...இது சத்தியம்..சத்தியம்..)     

கேள்வி: இதை தடுப்பதற்கு என்ன செய்யவேண்டும்... 

எழுச்சித் தலைவி: அதெல்லாம்  மிகப்பெரிய பாவம்..அதை பாக்கிறதாலதான் அப்படியே பரவுது.அது ஒரு நோய் மாதிரி...எதுக்கு பாக்கணும்...பாத்தாதான் பீல் வருமா...ஒரு ஹஸ்பண்டு ஒரு வைஃப பாத்தாலோ அல்லது ஒரு வைஃப் ஒரு ஹஸ்பண்ட பாத்தா பீல் வரதா...? (அம்மணி கோவப்படுதுனா அதுல ஒரு அர்த்தம் இருக்குங்க.... இந்த போர்னோகிராஃபி வெப்சைட் வந்தப் பின்னாடிதானே பதினோருமணி காட்சி எல்லாம் காத்து வாங்கினது. அம்மணி பொழப்புல மண்ணை அள்ளி போட்டா கோவம் வராதா பின்ன..? )

ஒரு வழியாக எழுச்சித் தலைவி பேரவையில் இணைந்த அராத்து.
எழுச்சித் தலைவி பேரவை : ஹோய்...யார்ரா அது என் தலைவியைப் பத்தி தப்பா பேசுறது. இன்னும் அஞ்சு வருசத்துல ஆட்சியைப் புடிக்கிறோம்.அப்பால பிரதமர். இந்தியாவிலே பிரதமர் ஆகும் தகுதி எங்க எழுச்சித் தலைவிக்கு மட்டும் தாண்டா இருக்கு...


13 comments:

 1. ஹா ஹ ஹா ஹா ஹா என்னையும் இந்த பே[நா]ரவையில் சேர்க்கவேண்டும் என்று உங்கள் கால் சுண்டு விரலை பிடித்து வேண்டிக்குறேன் சாமீஈஈஈ.......

  ReplyDelete
  Replies
  1. நண்பர் நாஞ்சில் மனோ அவர்களே பேரவையில் சேர்வதற்கு முதல் தகுதியாக,எழுச்சித் தலைவி திரையில் 'தத்ரூபமாக ' நடித்த புரட்சிகர காட்சிகளை எத்தனை முறை கண்டுகளித்தீர்கள் என்பதின் அடிப்படையிலேயே பேரவையில் சேர்வதற்கு முன்னுரிமை வழக்கப்படும்... அந்தக் கண்கொள்ளா காணொளியை எனது மெயிலுக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பிவைத்தால் உடனடியாக பேரையில் இடம் கிடைக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

   Delete


  2. Now days tv channels are making her as a seductive tool for their TRP rating.....she has no qualities of a women

   There are many other well qualified social awarness womens, doctors .....
   BUT why suntv network is selecting these kind of xxxx.....only for TRP rating.....

   [ Her videos can be easily found in youtube and video sites, wap sites.... ....even in xxxx sites and indian ,mallu ,gilma sites... rolling over youngster mobiles...

   .Even ...this is SHIT is appearing infront of media....]

   Delete
 2. இந்த நிகழ்ச்சியில அராத்து கலந்துகிட்டேன்னு சொல்லி பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்ருந்தப்பவே ஆர்வமா லிங்க் தேடிப்பார்த்தோம் கிடைக்கல... பயபுள்ளைங்க லேட்டாதான் அப்லோட் பண்ணியிருப்பாய்ங்க போல.... :-)

  எழுச்சித்தலைவி பதில்களுக்கு உங்க கமெண்ட்ஸ் கலக்கல்...... :-)

  ReplyDelete
  Replies
  1. நன்றி மாணவன்... தற்போது சிங்கையில்தான் இருக்கிறேன்...விரைவில் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்..

   Delete
 3. செம காமடி. நல்லா சிரித்தேன்.. காலையிலேயே கிளம்பிட்டாங்கய்யா..!!
  புரியாத ஆள் கிட்ட தெளிவான கேள்விகள். அதுசரி யார் அந்த பாபிலோன்.? குத்தாட்ட சினிமா நடிகையா?
  அராத்து.. செம செம. அறிவாளி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ...


   //அதுசரி யார் அந்த பாபிலோன்.? //

   எழுச்சித் தலைவியை யாரென்று கேட்டதின் மூலம் பேரவை நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை இட்டுவிடலாம் என சிலர் நினைக்கிறார்கள்...அது ஒரு போதும் நடக்காது.

   //குத்தாட்ட சினிமா நடிகையா?//

   தமிழ்நாட்டு அரசியலில் கலக்குவதற்கு இதைவிட வேறென்ன பெரிய தகுதி வேண்டியிருக்கு..?

   Delete
  2. அதுசரி யார் அந்த பாபிலோன்.? குத்தாட்ட சினிமா நடிகையா?

   BIO DATA:

   (why i this commenting is this one of the idiot bi..h actress videos spoil my friend during our final year eng coellege life ... my friend eager to watching mallu x movies(not porn)....he caught in a mobile raid on college...though he is well talented named as good person in both ,family and college.....he lost his selfimage,diginity....
   he is suspended for some days..... he himself ashamed..stressed.....
   i am also a reason for such a situation ...........]


   she is a indian B-grade(adult) film actress, mallu masala movie(malayalam adult movie)actress, Toples Gilma actress.......acted with sh..la movies, in mid nineties, she is semi-nude in starting movies.....

   **Later she started acting in tamil films as comedy roles...
   side by side she also acted in Tamil ADULt movies........


   **POLICE also petition & case against babilona for doing prostituion & taking porn
   in SALIGRAMaM chennai .....i think it is between 2005-2009.

   Now days tv channels are making her as a seductive tool for their TRP rating.....she has no qualities of a women

   There are many other well qualified social awarness womens, doctors .....
   BUT why suntv network is selecting these kind of xxxx.....only for TRP rating.....

   [ Her videos can be easily found in youtube and video sites, wap sites.... ....even in xxxx sites and indian ,mallu ,gilma sites... rolling over youngster mobiles...

   .Even ...this is SHIT is appearing infront of media....]

   Delete
 4. தலைவியின் சிந்தனை வீடியோ இன்னும் பார்க்கல ... உங்க பதிவை படிச்சி எழுச்சி தலைவியின் புரட்சி சிந்தனை கண்டு சிலிர்த்தேன் ... அட்டகாசம் தல அவங்க கருத்துக்கான உங்க கமெண்ட் ....

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தல...

   Delete
 5. அதுசரி யார் அந்த பாபிலோன்.? குத்தாட்ட சினிமா நடிகையா?

  BIO DATA:

  (why i am commenting is .... she is one of the idiot bi..h actress videos spoil my friend during our final year eng coellege life ... my friend eager to watching mallu x movies(not porn)....he caught in a mobile raid on college...though he is well talented named as good person in both ,family and college.....he lost his selfimage,diginity....
  he is suspended for some days..... he himself ashamed..stressed.....
  i am also a reason for such a situation ...........]


  she is a indian B-grade(adult) film actress, mallu masala movie(malayalam adult movie)actress, Toples Gilma actress.......acted with sh..la movies, in mid nineties, she is semi-nude in starting movies.....

  **Later she started acting in tamil films as comedy roles...
  side by side she also acted in Tamil ADULt movies........


  **POLICE also petition & case against babilona for doing prostituion & taking porn
  in SALIGRAMaM chennai .....i think it is between 2005-2009.

  Now days tv channels are making her as a seductive tool for their TRP rating.....she has no qualities of a women

  There are many other well qualified social awarness womens, doctors .....
  BUT why suntv network is selecting these kind of xxxx.....only for TRP rating.....

  [ Her videos can be easily found in youtube and video sites, wap sites.... ....even in xxxx sites and indian ,mallu ,gilma sites... rolling over youngster mobiles...

  .Even ...this is SHIT is appearing infront of media....]

  ReplyDelete
 6. ஹலோ பாஸ், சத்தியமா என்னால அவங்க பேச்சை ஒரு 3 நிமிஷம்கூட கேக்கமுடியல,

  ReplyDelete