Sunday 17 February 2013

நாமெல்லாம் முட்டாப்பயலுகளாம்..ஒரு அறிவுஜீவி சொல்லுது..!

கொஞ்ச நாட்களுக்கு இந்தப்பக்கமே வரவேண்டாமென நினைத்த என்னை வெறியூட்டி மீண்டும் எழுத வைத்திருக்கிறது இரண்டு சம்பவம்.

முதல்ல விஸ்வரூபம் பற்றிய பிரச்சனை...

கமலின் அதிமேதாவித்தனமான படங்களின் வரிசையில் விஸ்வரூபமும் ஒன்றுதான் என்பதை அவரின் படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அறிந்ததுதான்.கமல் எடுக்கும் வித்தியாசமான முயற்சிகள் அனைத்தும் ஆரம்பத்தில் எல்லோராலும் ஏகமனதாக எற்றுக்கொள்ளப்படுவதில்லை.கடும் விமர்சனத்துக்குள்ளான குணாவும் ஹேராமும் தற்போது பார்த்தால் வியப்பில் ஆழ்த்துகிறது.குணாவைக் காப்பியடித்து கிளைமாக்சை மட்டும் மாற்றி எடுத்த 'காதல் கொண்டேன்' படத்தை வெள்ளி விழா வரை கொண்டு சென்றதும் நாம்தான்.நிதி நிறுவன முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த மகாநதியும்,சுனாமியைப் பற்றி எச்சரித்த அன்பேசிவமும்,கமல் என்கிற கலைஞானி எந்த அளவுக்கு சமூக அக்கரையில் முற்போக்காக சிந்திக்கிறார் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. 

கமல் ரசிகர்களின் ரசனை வித்தியாசமானது.அவரின் மசாலா மொக்கைப் படங்களை விட வித்தியாசமான முயற்சிகளைத்தான் கைதட்டி வரவேற்பார்கள்.பரவலான விளம்பரப்படுத்தல் இல்லாவிட்டாலும் கமல் படங்களுக்கு கிடைக்கும் 'ஓபனிங்' அவரது ரசிகர்கள் மூலமே அமையப்பெற்றது.விஸ்வரூபம் சர்ச்சையில் சிக்கும் முன்பே ஒரு வாரத்திற்கு தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள திரையரங்குகளில் ரிசர்வேசன் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது இதற்கு தெளிவான சாட்சி.

அதே நேரத்தில் விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் காட்டிய எதிர்ப்பின் வெளிப்பாடாக தமிழக அரசு விதித்த தடையும்,அதைத்தொடர்ந்து கமலின் வேறு தேசம் நோக்கி இடம்பெயரல் பேட்டியும் இந்தப்படத்திற்கு கூடுதல் விளம்பரத்தை தேடித் தந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மைதான்.

வழக்கமாக கமல் படங்கள் 'பி' மற்றும் 'சி' சென்டர்களில் கல்லாக் கட்டுவது கடினம்தான்.விஸ்வரூபம் வெளிவந்து (ஒரு சில குறைகள் இருந்தாலும்) வெளிநாட்டிலும், தமிழகத்தின் 'ஏ' சென்டர்களிலும் வசூலை வாரிக்குவிக்கிறது என்பதை சமீபத்தில் அதன் கலெக்சன் நூறு கோடியைத்தாண்டியதாக கமல் வெளியிட்ட தகவல் உறுதிப்படுத்துகிறது. ஆனால் இந்தப்படத்தை பார்க்கச் செல்பவர்களெல்லாம் அடிமுட்டாள்கள் என ஒரு அறிவுஜீவி தனது முகப்புத்தகத்தில் நிலைத்தகவலாகப் பதிவு செய்திருக்கிறது.


ஊர்ல எங்கே எது நடந்தாலும் உடனே ஏதாவது ஒரு டிவி ஸ்டேசனுக்கு "சம்முவம் உட்ரா வண்டியை.." என அறச்சீற்றம் அடைந்து பொங்கி எழுபவர்தான் இந்த மனித குல மாணிக்கம் மனுஷ்யபுத்திரன். சமூக பிரச்சனைகள் சார்ந்த அநேக தொலைக்காட்சி விவாதங்களில் இவரின் வாதங்கள் பிரதானமாக இருக்கும். நிறைய நேரங்களில் நியாயமாகவும் இருக்கும்.

அதற்காக தான் கொண்ட நிலைப்பாடுதான் ஆகச்சிறந்தது என குருட்டு கர்வமும் இவருக்கு உண்டு என்பதை மறுக்கவும் முடியாது.தூக்கு
த் தண்டனை குறித்த இவரின் குரல் உண்மையிலேயே மதிக்கப் பட வேண்டியது தான். ஆனால் சினிமாவைப் பற்றிய இவரின் விமர்சனம் சினிமாவின் அடிப்படை அறிவுகூட இல்லாத ஒரு அடித்தள ரசிகனின் ரசனையை கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்குத்தான் இருக்கிறது.

கடந்த வருடத்தின் சிறந்த படைப்பான 'வழக்கு எண்' படத்தை தன் விமர்சனத்தில் தாறுமாறாக அடித்து கிழித்து துவைத்து தொங்கப் போட்டிருந்தார். இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல்தான் ஒரு படத்தின்  பாடல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அறிவுமதி மனுஷ்யபுத்திரனை கடுமையாக விமர்சித்தார். அந்த விமர்சனத்தை நான் படிக்கவில்லை என்றாலும் ஒரு படத்தை விமர்சனம் செய்வது அவரவர் விருப்பம். பத்திரிகை சுதந்திரமும் கூட. அப்படியிருக்க விமர்சித்தது தவறு என்று அறிவுமதி எப்படி சொல்லலாம் என்ற ரீதியில் நான் கூட ஒரு பதிவிட்டிருந்தேன்.(மனுஷ்யபுத்திரன் VS அறிவுமதி...பத்திரிக்கையாளனுக்கு அருகதை இருக்கிறதா?)
 
கவிஞர் அறிவுமதி அவர்கள் அன்று உணர்ந்த வலியை இன்று நான் உணர்கிறேன். சினிமாத்துறையும் பத்திரிக்கைத் துறையும் கலைவடிவங்கள்தான்.எந்த ஒரு கலைஞனின் படைப்பையும் பார்த்த மாத்திரத்தில் 'குப்பை' என புறந்தள்ளிவிட முடியாது.வேண்டுமானால் விரிவான விமர்சனத்தை முன்வைத்து விட்டு பிறகு குப்பையா மொக்கையா என சொல்லியிருக்கலாமே.விஸ்வரூபம் படத்திற்கு தடை கோரிய போது அதற்கு எதிராக தன் கருத்தை தைரியமாக பதிவு செய்தவர் என்ற அடிப்படையில் எப்படி வேண்டுமானாலும் ஒரு திரைப்படத்தைப் பற்றி விமர்சித்து விட முடியுமா..?

சரி..உங்கள் பார்வையில் அது குப்பையாகவே இருக்கட்டும். அதற்காக அந்தப் படத்தை பார்ப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் என சொல்லும் அளவுக்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது...? சமூகப் பிரச்சனைகளைப் பற்றி நித்தம் ஒரு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்து விட்டால் தன் நிலைப்பாட்டோடுதான் எல்லோரும் ஒத்துப் போகவேண்டும் என்ற நியதி இருக்கிறதா..? அப்படியொரு நிலைப்பாடு இல்லாத தமிழர்கள் அனைவரும் உங்கள் பார்வையில் முட்டாள்களா...? அப்படியானால் எங்கள் கருத்தோடு ஒத்துப் போகாத நீங்கள் எங்கள் பார்வையில் அடிமுட்டாள் தானே..?

//தமிழனைவிட ஒரு முட்டாள் இந்த உலகத்தில் கிடைக்க மாட்டான் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் வேறு எதுவும் இல்லை..//

இந்த வரியை படிக்கும் போது தான் கோபமும் வெறுப்பும் உச்சத்திற்கே செல்கிறது.கமலின் 'உன்னைப் போல் ஒருவன்' படத்திற்கு பாடல் எழுதும் வாய்ப்பளித்ததால் அன்று அந்தப் படம் உங்கள் பார்வையில் சிறந்த படம். வாய்ப்பளிக்காத விஸ்வரூபம் ஒரு குப்பை.அதை பார்க்கும் தமிழ
ர்கள் முட்டாள்கள்.நல்லா இருக்குதையா உங்களின் சமூக நிலைப்பாடு..?

நாலு பேர் மதிச்சி பேசக் கூப்பிட்டா தமிழ் கூறும் நல்லுலகுக்கே ராஜா என்ற நினைப்பா..? வழக்கு எண்-னும் விஸ்வரூபமும் குப்பை என்றால் பின்ன எது நல்ல படம் என்று பட்டியலிடு.உன் ரசனை என்னவென்று நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.விஸ்வரூபம் ஆகச்சிறந்த படம் இல்லை தான்.அமெரிக்காவிற்கு சொம்பு தூக்கும் படம் தான்.ஆனால் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த முயற்சி.அதற்கு பாராட்ட வேண்டாம். மூடிகிட்டாவது இருந்திருக்கலாமே.எதற்கு இந்த வாய்க்கொழுப்பு..? நான் சொல்ல வருவதை புரிந்துகொள்ளாத முட்டாள்கள் என்று இதற்கு பதில் ஸ்டேடஸ் வேறு.இன்னொரு மேடை ஏறாமலா போய்விடுவார்.இன்னொரு அறிவுமதி நாக்கைப் புடுங்கிற மாதிரி கேள்விக் கேட்காமலா போய்விடுவார்...? 


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
 

தைப்பற்றி எழுதனும்னா அசிங்க அசிங்கமா வாயில வருது.யாரையோ திருப்திப் படுத்துவதற்காக இப்படி கூட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்யும் குமுதம் ரிபோர்ட்டர் மாமா பசங்களை தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தையால் அர்ச்சனைப் பண்ணினாலும் கோபம் தீராது.குஷ்புவின் முன் சரித்திரம் கேவலமானது தான். ஆனால் இப்பொழுது இரண்டு பெண்களுக்கு தாய்.அதற்காவது கண்ணியம் வேண்டாமா..? கலைஞர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை இப்படித்தான் தீர்த்துக் கொள்ள வேண்டுமா..?  இதில அய்யாவையும்  மணியம்மையையும் வேற அசிங்கப் படுத்தியிருக்காணுவ பேமாளிப் பசங்க.ஜெயலலிதாவின் காலை நக்க ஆசைப்பட்டு இப்படி அபத்தமாக எழுதும் விகடனும் குமுதமும் பேசாம......நல்லா அசிங்கமா வாயில வருது.

இதை எழுதின குமுதம் ரிபோர்ட்டர் நாயி மட்டும் என் முன்னே வந்தானா... த்தா.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் த்த்த்த்த்த்தூ... மூஞ்சிலே காரித்துப்புவேன்.          --------------------------------(((((((((((((((((()))))))))))))))))))))))))))-----------------------

14 comments:

 1. தல,
  ம.பு - விஸ்வரூபம் பார்த்த தமிழர்களை முட்டாள் என்று சொல்லியது கண்டிக்கத்தக்கது.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக--நன்றி பிரகாஷ்.

   Delete
 2. மானா.பூனாவின் (இதை விட பெயரையே டைப் பண்ணி இருக்கலாம்.. ஹி ஹி) கருத்துக்கள் சிலவை மரண மொக்கைகள் அதிலும் இது ஒன்று.. விஸ்வரூபம் மிக சில குறைகள் இருந்தாலும் தமிழ் சினிமாவின் முக்கிய படம் அதை தாண்டி காலம் தாண்டி ரசிக்க படபோகிற இதுவும் ஒன்று..

  சூப்பர் மணி அண்ணா

  MY FB ID

  http://www.facebook.com/harry.rushanth.7

  ReplyDelete
  Replies
  1. //மானா.பூனாவின் (இதை விட பெயரையே டைப் பண்ணி இருக்கலாம்.. ஹி ஹி)//

   hahahahahahahaha

   Delete
  2. நன்றி ஹாரி..

   Delete
 3. நமக்கு என்னாச்சு?

  …வேலைக்குப் போகும் போது (ஸ்கூட்டரில் போகும் போது) எதுக்கு தேவையில்லாத டென்சன்?

  ReplyDelete
 4. மனுஷ்யபுத்திரன் நிலைப்பாடு குறித்து நீங்கள் எழுதி இருப்பது சூப்பர்... தன நிலையில் அனைவரும் ஒத்துப் போக வேண்டும் என்ற கர்வம் இருக்கும் மனிதனின் அழகு முகத்தில் தெரியும்.....

  ReplyDelete
  Replies
  1. எனக்கென்னவோ இது அந்த 23 அமைப்பினரின் திருப்திப் படுத்தலுக்காக சொல்லப்பட்டதாக நினைக்கிறேன்.இது போல எதிர்மறையான கருத்துகளை சொல்லாவிட்டால் இவர்களைப்போல எழுத்தாளர்களால் இங்கே பொழைப்பே ஓட்ட முடியாது.நன்றி சீனு.

   Delete

 5. Agree..

  http://chochi-chennai.blogspot.in/2013/02/blog-post.html

  ReplyDelete
 6. ஓரு படத்துக்கு இவ்வளவு பிரச்சனையா..? விடுங்கப்பா..

  ReplyDelete
 7. விஸ்வரூபம் படத்தை இரண்டு முறைகள் பார்க்க நேரிட்டது,
  நெஞ்சில் சிறிதளவாவது நேர்மை நியாயம் இருப்பவர்கள் நான் சொல்வதை தயய் கூர்ந்து காய்தல் உவத்திலின்றி பரிசீலியுங்கள்
  1) படம் தீவிரவாதத்தைப் பற்றி லேசாக மயிலிறாகத்தான் சாடுகிறது, ஆணித்தரமாக இல்லை
  நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள் என்று நழுவல்தான் தெரிகிறது
  2) நம்மவூர் நெல்லை தமிழ்ப் பேசும் பாய்க்கும் வட இந்தியாவில் இந்தி-உருது பேசும் முசுலீமுக்கும் கிஞ்சித்தும் தொடர்பு கிடையாது. இது அவர்கள் வாழ்க்கைபற்றிப் பேசவில்லை
  3)ஒரு த்ரில்லர் படத்துக்கு ஆப்கன் பிரச்சனையை உறுகாய் போலத்தொட்டுக் கொள்கிறார் கமல்(வேறு வழியில்லாமல்)
  4) இந்தப் படத்தை எதிர்ப்பவக்ள் (1) கமலுக்கு ப்ரோமோவை மறைமுகமாகச் செய்கிறார்கள் அல்லது (2) இணையத்தில் கமலை எதிர்த்தால் ஹிட்ஸ் நிறைய கிடைக்கும் என்பதால் ஆகிய இரண்டில் ஒன்றாகத்தான் இருக்கும்
  5) கமலின் அரசியல் அது இது என்று பினாத்துபவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இந்தப் படத்தில் கமலின் அரசியல் (கருத்தரசியல்) ஒரு சுண்டைக்காய் அளவுகூட கிடையாது.. ஆனால் படத்தை எதிர்ப்பவர்கள் கருத்தரசியல் இமைய மலையைவிட பெரிது
  R கந்தசாமி

  ReplyDelete