Monday 17 September 2012

தமிழ் சினிமாவின் 'முத்தச் சரித்திர நாயகன்'...


பொதுவாகவே தமிழ் சினிமாவில் முத்தக் காட்சி என்றதுமே ஒட்டு மொத்த குத்தகையும் ஏதோ திட்டம் போட்டு எடுத்ததுபோல் நம் கண் முன் தோன்றுவது பத்மஸ்ரீ கமல்ஹாசன் மட்டும்தான்.ஒருவேளை ஒவ்வொரு காட்சிக்கும் அவர் கொடுக்கும் அழுத்தம் முத்தத்திலும் இருப்பதால் என்னவோ..!

ஆனால்,நடிப்பின் ஒவ்வொரு அசைவிற்கும் தனி  இலக்கணம் வகுத்த ஒரு மாபெரும் கலைஞன், முத்தத்திற்கும் ஒரு தனி சரித்திரமே படைத்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா..?

உதட்டோடு உதடால் கவ்வி கொடுப்பது மட்டுமே முத்தம் என்று மேலைநாட்டு திரைப்படங்கள் நமக்கு கற்பித்ததாலையோ என்னவோ மற்ற ஸ்பரிச முத்தங்களை நாம் முத்தங்களாகவே கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை.

தமிழ் சினிமாவில் முத்தத்திற்கென்றே தனிவகை நடிப்பை அறிமுகப்படுத்தியவர் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள்.சத்தமில்லாமல் முத்தமிட்டு ஒரு முத்த சரித்திரத்தையே படைத்தவர்.காதல் காட்சிகளில் தன் உதட்டை தானே கடித்துக்கொண்டு காதலியின் இரு தோள்பட்டைகளையும் கைகளால் இறுக்கி மாவு பிசைவது எம்ஜியார் ஸ்டைல்.காதலியின் கன்னம்,உச்சந்தலை,கழுத்து,காது,கை, கால்,முதுகு உள்ளிட்ட உடலின் மற்ற பகுதிகளில் சத்தமில்லாமல் ஸ்பரிச முத்தங்களை பதிப்பது சிவாஜியின் ஸ்டைல்.அவரின் காதல் பாடல்களை கூர்ந்து ரசிக்கும் அவரது தீவிர ரசிகர்களுக்கு இது புரியும்.

சிவாஜியுடன் ஜோடிசேர்ந்த பானுமதி,பத்மினி,சாவித்திரி,சரோஜாதேவி, வாணிஸ்ரீ,ஸ்ரீப்ரியாவிலிருந்து அவரின் கடைசிகால ஜோடிகளான அம்பிகா,ராதா வரை அனைத்து நடிகைகளும் அவரின் ஸ்பரிச முத்தத்திலிருந்து தப்பவில்லை.


சிவாஜி நடித்த காதல்காவியமான 'வசந்த மாளிகை' படத்தில் 'மயக்கம் என்ன..'  என்ற பாடல் காட்சியின்போது நடிகை வாணிஸ்ரீ-யின்  கழுத்தில் அழுந்தப்பதிந்த அந்த 'முத்த போஸ்' 1970 -களில் மிகப் பரபரப்பாகப் பேசப்பட்டது.கன்னம்,உதடு மட்டுமல்ல கழுத்துகூட முத்தமிடுவதற்கு ஒரு 'கிக்'கான இடமென்று நடிகர் திலகத்தால் அன்று கண்டுபிடிக்கப்பட்டு(?!) தமிழர்களுக்கு உணர்த்தப்பட்டது.


திரையில் அவ்வப்போது அமையும் சந்தர்ப்பங்களை நழுவவிடாமல் கிடைத்த கேப்பில் கிடாவெட்டி முத்த நடிப்பில் புதிய பாணியை உருவாக்கிய நடிகர்திலகத்திற்கு ஒரு சவாலான போட்டியை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.ஒரு படப்பிடிப்புத் தளத்தில்,தயாரிப்பாளரும் நடிகருமான பாலாஜி,"படத்தில் நடிக்கும்போது சத்தமில்லாமல் முத்தமிட்டு அசத்துகிறாயே...நேரில் ஒரு நடிகைக்கு முத்தமிடு பார்க்கலாம்" என சவால் விட்டாராம்."சரி..அப்படிக் கொடுத்து விட்டால்...." என சிவாஜி கேட்டாராம். "ஆயிரம் ரூபாய் பந்தயம்.." என்றார் பாலாஜி.கரும்பு தின்னக் கூலியா என நினைத்துக்கொண்டு அப்போது அந்தப் படப்பிடிப்பிலிருந்த வாணிஸ்ரீயை அழைத்து,மெதுவாகப் பேச்சுக் கொடுத்து,'என்ன இது..உன் முகத்தில் ஏதோ இருக்கே..' என சொல்லிக்கொண்டே வாணிஸ்ரீ-க்கு முத்தம் கொடுத்துவிட்டார் நடிகர்திலகம்.

முத்தப் போட்டியில் ஜெயித்த சந்தோசத்தோடு ஆயிரம் ரூபாய் பரிசையும் தட்டிச்சென்றுவிட்டார்.(பாருங்க...எவ்வளவு சவாலான போட்டி...!?..நடிகர் திலகம் நடிகர் திலகம்தான்....!!! )

அதுசரி...எதிர்பாராத இந்த முத்தத்திற்கு வாணிஸ்ரீ-யின் ரியாக்சன் என்னவாக இருந்திருக்கும்?.... ஹி..ஹி...அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா....!

 
நம்ம சி.எம் தான்...

ஒரு கொசுறு தகவல்...

இந்திய சினிமாவில் முத்தக்காட்சி எந்தப்படத்தில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதைப்பற்றி தெளிவான தகவல் இல்லாவிட்டாலும்,1933 -லேயே 'கர்மா' படத்தில் 'லிப் டு லிப்' முத்தக் காட்சி வெளிவந்து சூட்டைக்கிளப்ப,பல பேருக்கு ஜன்னி,காய்ச்சல் வருமளவுக்கு சென்றுவிட்டதாம்.

 
(கர்மா படத்தில் ஹிமன்ராய்,தேவிகா ராணி...கண்டிப்பாக 18 +..)

-------------------------------------------------------(((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))-------------------------------------------


21 comments:

 1. >>>எதிர்பாராத இந்த முத்தத்திற்கு வாணிஸ்ரீ-யின் ரியாக்சன் என்னவாக இருந்திருக்கும்?.... ஹி..ஹி...அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா<<<

  ஹி ஹி ஹி!

  ReplyDelete
  Replies

  1. ஹா..ஹா..ஓட்டுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி பாஸ்..

   Delete
 2. முத்தத்தால் முத்தமே - பாஸ் செம்பருத்தி படம் நம்ம ரோசா நடிச்சது அதில 12 முத்தம் ஒரே பாடலில்....ஹி ஹி ஹி அதை ஏன் சொல்லல..

  ReplyDelete
  Replies
  1. // 12 முத்தம் ஒரே பாடலில்.. // பாஸ் இப்படி கரக்டா எண்ணி சொல்ற அளவுக்கு வெளிய தெரியிறமாதிரி கொடுக்கிறது கவர்ச்சி முத்தம்.. ஆனா வெளிய தெரியாத மாதிரி நடிப்போட சேர்த்து கொடுக்கிறது ஸ்பரிசமுத்தம்(!?).இதில்தான் நம்ம நடிகர்திலகம் கில்லி.... :-))))))

   Delete
 3. //நடிகர் திலகத்தால் அன்று கண்டுபிடிக்கப்பட்டு(?!) தமிழர்களுக்கு உணர்த்தப்பட்டது//

  இது செம கிக் பாஸ்

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா..நன்றி பாஸ்..

   Delete
 4. என்ன... தீடீரென்று மொத்தமா முத்த ஆராய்ச்சி...? ஹா... ஹா....

  ReplyDelete
  Replies
  1. சும்மா 'கிக்'கா ஒரு பதிவு போடலாமேனுதான்.....நன்றி..

   Delete
 5. முத்த விஷயத்தில் கமல்தான் முன்னோடி என நினைத்தேன் ....

  ReplyDelete
  Replies
  1. இப்ப புரியுதா பாஸ்...எல்லாத்துக்குமே சிவாஜிதான் என் குருநாதர்னு கமல் ஏன் சொல்றாருன்னு...

   Delete
 6. Replies
  1. வருகைக்கு நன்றி...பாஸ் அப்ப நாளைக்கு முடியாதா? :-)))))

   Delete
 7. முத்தத்தை பத்தி புட்டுபுட்டு வச்சுட்டீங்களே! முத்தமா சொல்லப் போனா சாரி மொத்தமா சொல்லப் போனா பதிவு சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. நண்பருக்கு நன்றி...

   Delete
 8. அட இம்புட்டு நடந்து இருக்கா? ஹி ஹி

  //(கர்மா படத்தில் ஹிமன்ராய்,தேவிகா ராணி...கண்டிப்பாக 18 +//

  மறுபடி மறுபடி கூறிக்கொள்ள விரும்புகிறேன்.. என்னை போல குழந்தை உள்ளம் படைத்தவர்கள் வந்து போகும் இடத்தில நடைபெரும் இப்படியான அசம்பாவிதங்களை வன்மையாக கண்டிக்கிறேன்.. ஹி ஹி

  இ 2
  த.ம. 6
  த.10. 6

  ReplyDelete
  Replies
  1. ஹை..ஹை... 18 + னு போட்டாத பார்த்துட்டு பதிவைக்கூட படிக்காம பரபரப்பா விடியோ பாத்தது எங்களுக்கு தெரியும் பாஸ்....


   // மறுபடி மறுபடி கூறிக்கொள்ள விரும்புகிறேன்..//

   திரும்ப திரும்ப வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி... :-))))))


   // இ 2
   த.ம. 6
   த.10. 6 //

   ம்ம்...நடக்கட்டும்... :-)))

   Delete
 9. ஆனாலும் பாஸ் குசும்பு

  கடைசி படம்

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா...நடிப்பு பாஸ்..நடிப்பு...!!!

   Delete
 10. கமல் பேரை காலி பண்ணினா சரி...எந்த பாட்டை பார்த்தாலும் முத்தம் கொடுக்குற மாதிரியே உதட்ட வைச்சிருக்காரு.சண்டை காட்சில கூட அப்படித்தான் படுத்துராறு....இதை அகில உலகமும் அறியும்படி செய்யணும் சார்.கமலை அப்படியே காலி பண்ணனும் சார்.திஸ் பதிவு டேடிகேட்டடு டூ மை வீட்டு கமல் ரசிகைக்கு .....ஹா ஹா ஹா நான் ரொம்ப மகிழ்ச்சியா பீல் பண்றேன்.நன்றி தலைவா....

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா.... உங்களுடைய ஆதங்கம் புரியுது நண்பரே....நன்றி..

   Delete
 11. பாவம் வாணிஸ்ரீ ஒரு நல்ல நடிகை. இந்த ஆதிக்கவாதிகள் திரையுலகில் செய்கிற அட்டூழியங்களை இங்கு யாருமே பேசுவதில்லை. வாணிராணி என்றொரு படம். அதிலும் வாணிஸ்ரீதான். அதில் ஒரு இருவரும் உருளும் காட்சியொன்று வரும். இந்த காமாந்தரகாரனின் வாயைப்பாருங்கள்.

  ReplyDelete