Friday 17 August 2012

ரஜினியை களங்கப்படுத்தும் வாரிசுகளும் தேசியக்கொடியை அசிங்கப்படுத்தும் அரசியல்வாதிகளும்.



   ரசியல் சாக்கடையில் கால் வைத்தாலே,தான் களங்கப்பட்டுவிடுவோமோ என்றஞ்சிதான் தன்னை வாழவைக்கும் தெய்வங்களாக நினைக்கும் கோடானுகோடி ரசிகர்களின் வேண்டுகோளையே புறந்தள்ளியவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.அவர் கட்டிக்காத்ததை இன்று அவரின் வாரிசுகள் நடு வீதிக்கு கொண்டுவந்து நாறடிக்கின்றனர்.ஏற்கனவே இவரின் இளைய மகள் சௌந்தர்யா,சொந்தக்காலில் நின்று சொந்தப்படம் எடுக்கிறேன் என்று பைனான்சியரின் காலைப்பிடித்து எடுத்தப்படம் காலைவாரிவிட,கோர்ட் படியேறி கடைசியில் ரஜினியே சொந்தக்காசைப் போட்டு பிரச்னையை முடித்தார்.

   அடுத்து மூத்தமகள் ஐஸ்வர்யா தன் பங்குக்கு அப்பாவுக்கு ஏதாவது செய்யவேண்டுமே என்று ஒரு மொக்கைப் படம் எடுத்து,தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் ஆந்திராவிலும் ரஜினியின் இமேஜையே கெடுத்து, சுருதி மூலமாக தானும் சூடுவைத்துக் கொண்டார்.இப்போது அடுத்ததாக இன்னொரு குடும்ப வாரிசு.தான் இசையமைத்த கொலைவெறி பாடலைவிட ஏகத்துக்கும் ஹிட்டாகியிருக்கிறது,நெட்டில் வெளியான இவரது ஹாட் ஸ்டில்.தம்பிக்கு 'வாய்ஸ்டெஸ்ட்'-னா என்னவென்று யாரும் சரியா சொல்லிக் கொடுக்கவில்லை போல.இதில் இன்னொரு கொடுமை,இவரின் கொலைவெறி பாடல் ஹிட்டான போது இவரின் பின்புலத்தை கண்டுகொள்ளாத ஊடகங்கள் தற்போது இவர்,ரஜினியின் மச்சான் ரவிராகவேந்திராவின் மகன் என்று அடையாளப்படுத்துகிறார்கள்.


 
  
சினிமா அகராதியில நல்ல ஆத்மா/நல்ல உறவு என்பதற்கு இப்படித்தான் அர்த்தம் கொள்ளனும் போல....

************************************************************************************************************************************************
  
தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றும் அரசியல்வாதிகள்.


  ஒவ்வொரு சுதந்திரதினத்திற்கும் மறுநாள் இப்படியொரு செய்தி கண்டிப்பாக பத்திரிகைகளில் வெளிவரும்."தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றிய அதிகாரிகள்".இந்த வருடமும் வந்திருக்கிறது.அதுவும் வேலூர் மாநகராட்சியில் மாண்புமிகு மேயர் அவர்கள் இப்படியொரு வரலாற்று சிறப்புவாய்ந்த செயலைச்செய்து நம் தேசத்திற்கும்,தேசியக்கொடிக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.

    இது தேசிய அளவில் அவ்வப்போது நிகழ்ந்தாலும் தமிழ் நாட்டில் நடப்பதற்கு முக்கியக் காரணம் கட்சிக்கொடிகள்தான்.தமிழ்நாட்டின் பிரதானக் கட்சிகளின் கொடிகள் எல்லாவற்றிலும் கீழே சிவப்பு வர்ணம் இருக்கும்.இதனால் ஏற்பட்ட குழப்பமாகக் கூட இருக்கலாம்.இதில் கேப்டன் மட்டும் விதிவிலக்கு (தலைகீழா இருக்கிறத வச்சிப் பார்த்தா..ஒருவேளை .'.புல் மப்புல இருந்தபோது கொடியை தயாரித்திருப்பாரோ..).ஆனால் இதுவரை எவரும் கட்சிக்கொடிகளை தலைகீழாக ஏற்றியதாக வரலாறு கிடையாது என்பது கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய விஷயம்.



  நம் தேசியக்கொடியில் மூன்று வர்ணங்களும் மூன்று சமயங்களை அடையாளப்படுத்துகிறது என்று சொல்வார்கள்.சரி..இதில் எந்த வர்ணம் கீழே எது மேலே என்பதை எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது?

 பள்ளிப் பருவத்தில் எங்கள் தமிழாசிரியர் ஒரு விளக்கம் சொல்வார். நாற்பதுகளில்,தென்னிந்தியாவில் ஏற்பட்ட பசுமைப்புரட்சியைக் குறிக்க கீழே பச்சை நிறமும்,வட இந்தியப்பகுதியில் 'ஜாலியன்வாலாபாக்' போன்ற படுகொலைகளால் சிந்திய ரத்தத்தை குறிக்கும் விதமாக சிவப்பு(காவி) மேலேயும்,பாரதமாதாவின் வெள்ளை உள்ளத்தை குறிக்கும் விதமாக மத்தியில் வெள்ளை நிறமும் இருப்பதாகக் கூறினார்.இதுதான் சரியான விளக்கமா என்பது தெரியவில்லை.உங்களுக்கு வேறு விளக்கம் தெரிந்தால் சொல்லுங்களேன்.

 ஏதோ ஒரு படத்தில் நம்ம ஊரு 'மீல்ஸ்'-ஐ வைத்து சத்யராஜ் ஒரு விளக்கம் சொன்னதாக ஞாபகம். அதைத்தவிர்த்து வேற ஏதாவது இருக்கிறதா?

************************************************************************************************************************************************
 ரிலாக்ஸ்....


 உலக மகா தத்துவம்ஸ்....

என்னதான் கிளி கீ.கீ..கத்தினாலும், அதால ஒரு பூட்டைக்கூட திறக்க முடியாது..

என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும், அதால அவிச்ச முட்டை போடமுடியாது.

ஆயிரம் தான் இருந்தாலும், ஆயிரத்தி ஒண்ணுதான் பெரிசு.

பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம்.ஆனா கண்ணு வலின்னா கண்ணைப்புடுங்க முடியுமா? இல்ல தலை வலினா தலையைத்தான் புடுங்க முடியுமா?

நைட்ல கொசு கடிச்சா 'குட்நைட்' வைக்கலாம்.காலையில கொசு கடிச்சா 'குட்மார்னிங்' வைக்க முடியுமா?


 ---------------------------------------- X ---------------
 

நெப்போலியன்: என்னுடைய அகராதியில 'முடியாது' என்கிற வார்த்தையே கிடையாது.

சர்தார்ஜி: இப்ப சொல்லி என்ன பிரயோசனம்.அதுக்குதான் வாங்கும் போதே பார்த்து வாங்கியிருக்கணும்.






வணக்கங்களுடன்....
மணிமாறன்.
--------------------------------------------------------------------(((((((((((((((((((((())))))))))))))))))))-------------------------------------------

20 comments:

  1. சில தகவல்கள் வருத்தப்பட வைத்தாலும், பதிவு கலக்கல் கதம்பம்... பாராட்டுக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாஸ்...

      Delete
  2. ரஜினி பேசினாலும் ஆயிரம் பொன், பேசாம இருந்தாலும் ஆயிரம் பொன். ஊடகங்கள் அவரை வச்சு ஏதாவது சொல்லி பொழப்பை ஒட்டிகிட்டே இருப்பாங்க.

    ReplyDelete
    Replies
    1. தலைவரை வம்புக்கு இழுக்கலைனா இந்த ஊடகங்களுக்கு தூக்கமே வராது போல...நன்றி ராஜ்..

      Delete
  3. அருமை...அத்தனையும்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாஸ்...

      Delete
  4. அருமையான பதிவு நண்பா... ரஜினி பாவம்... ஈமு விவகாரம் ஐயோ பவம்... தேசியக் கோடி ஏற்றிய விதம் மகா பாவாம்

    ReplyDelete
    Replies
    1. நண்பர் சீனுவின் கருத்துக்கு நன்றி..

      Delete
  5. தத்துவம் சூப்பர்..

    என்னதான் சென்னை சிக்ஸ் ஓனர் மகனாக இருந்தாலும் பிறக்கும் போது ட்ரஸ் இல்லாமதான் பிறப்பான் // இது எப்படி ?

    ReplyDelete
  6. Replies
    1. நண்பருக்கு நன்றி...

      Delete
  7. //
    நெப்போலியன்: என்னுடைய அகராதியில 'முடியாது' என்கிற வார்த்தையே கிடையாது.

    சர்தார்ஜி: இப்ப சொல்லி என்ன பிரயோசனம்.அதுக்குதான் வாங்கும் போதே பார்த்து வாங்கியிருக்கணும்.
    ///

    ஹா ஹா ஹா, பிண்ணுரீங்க போங்க!

    ReplyDelete
    Replies
    1. அது சரி.... நன்றி நண்பா...

      Delete
  8. //
    தேசியக்கொடியை அவமானப்படுத்தும் அரசியல் வாதிகள்
    //

    இப்பிடிபட்டவங்களை தூக்குல போட்டா.. எல்லாருக்கும் கொஞ்சம் பயம் இருக்கும்னு நினைக்கிறேன், நீங்க என்ன நினைக்கிறீங்க நண்பா?

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா இது மாதிரி ஏதாவது கடுமையான தண்டனை தரவேண்டும்.கட்சிக்கொடிக்கு தரும் மரியாதைகூட நம் தேசியக்கொடிக்கு தர மாட்டேன்கிறாங்க.தலைகீழா பறக்க விட்டுட்டு அதுக்கு சல்யுட் வேற அடிப்பாங்க.அத நெனைச்சாதான் இன்னும் கோபம் வருது.. உங்கள் கோபமும் நியாயமானதுதான் நண்பா...

      Delete
  9. எப்ப வந்தாலும் சிரிக்க வைக்கிறீங்க கதம்பமாய் அருமை...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி பாஸ்...

      Delete
  10. ரஜனி சம்பாதித்த பணத்தை தன் மகள்களுக்காக செலவிடுவதிலும் நமக்கேன் கேள்வி/ தேசிய கொடியை தலைகீழாக தான் நம் அரசியல் வாதிகள் செய்வார்கள்.நாட்டையை தலைகீழாக கவுத்து விட்டனர்!

    ReplyDelete
    Replies
    1. சகோ..J.P Josephine Baba அவர்களின் கருத்துக்கு மிக்க நன்றி...

      Delete