Thursday 15 December 2011

சிதறல்கள் -2

 விறு ..விறு...வீரு

                    கிரிக்கெட்டின் அசைக்க முடியாத உலக சாதனைகள் யாவும் தற்போது   தெற்காசிய நாட்டு வீரர்களால் முறியடிக்கப்படுவது  சந்தோசமான    விசயம்தான் .உலகிற்கு 'ஹாக்கி' யை நாம் கற்றுக் கொடுத்தாலும்,நமக்கே யாராவது கற்றுக்கொடுக்க வேண்டிய  சூழ்நிலையில் நாம் உள்ளோம். ஆனால் நமக்கு   கிரிக்கெட் சொல்லிக்  கொடுத்த நாடுகளின் சாதனைகளை நாம் விஞ்சுகிறோம்  என்பது ஆனந்தம் தானே....

             சச்சினை மட்டுமே ஹீரோவாக நினைத்த நம் ரசிகர்களுக்கு வீரேந்திர   சேவாக் புது ஹீரோ.  சதத்தில் சதம் அடிப்பார் நம்ம சச்சின் என்று 'இலவு காத்த கிளி போல்'  காத்திருந்த நம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய  உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது சேவாக்கின்  ' 219 ' . ஏற்கனவே உலகக் கோப்பையில்  பங்களாதேஷ் க்கு எதிரான போட்டியில்  175 ரன் எடுக்கும் போதே,சச்சின் சாதனையை முறியடிப்பதைப் பற்றி 'லைட் ' டா  சொல்லிவைத்தார். இப்போது நிகழ்த்தி விட்டார்.
  
           சச்சின் இரட்டைச்சதம் அடித்தப்பிறகு   'என் சாதனையை ஒரு இந்தியன் தான் முறியடிக்க வேண்டும்' னு ஒரு பேச்சுவாக்கில்   சொல்லிவைக்க, அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்(காதுல புகை...?). பின்ன.....அன்வரின் சாதனையை உடைக்க சச்சினுக்கு 14  வருசங்கள்   ஆயிற்றே .


            டெஸ்ட் போட்டிகளில் முச்சதமும்,ஒருநாள்   போட்டிகளில் இரட்டைச் சதமும்  அடித்த ஒரே வீரர் இனி சேவாக்  மட்டும்தான்.  'முதல் பாலிலே டக் அவுட்  ஆனாலும் ஆவேனே தவிர ,கட்டை போடமாட்டேன்'  என்றக் கொள்கைப்பிடிப்போடு இருக்கிறார் போல. இவர் அடித்த எல்லா சதமும் குறைவான பந்துகளில்தான் .உண்மையிலே இவர் 'வீரேந்திர'சேவாக்தான் .வெறும் 149 பந்துகளில் இந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் (ஒரு வேலை 'தோனி' இல்லாதனாலவோ   ?  )  


(கபடியைப்பற்றி வீராவேசமா  பேசிட்டு கிரிக்கெட் பற்றி எழுதுறேன்னு நினைக்காதீங்க ..  நம்மவர்களின் சாதனையைப்பற்றி நாம் பேசாமல் வேறு யார் பேசுவது?    ####சமாளிப்புகேஷன்)    
 --------------------------((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))-----------------------
 
    பேச்சுத்தமிழில், தமிழ் வார்த்தைகள் சரியாக உச்சரிக்கப்படுவதில்லை என்பது தமிழ் அறிஞர்களின் கவலை. ஆனால் இது நடைமுறைச் சாத்தியமில்லை. நம்மை அறியாமலே சுத்தமான தமிழ் வார்த்தையை நாம் பயன்படுத்திக் கொண்டிருப்போம், தலைகீழாக ...
    உதாரணத்திற்கு,
                                 கிராமங்களில்  'வாய்க்கால்' என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படும். இது 'கால்வாய் ' என்ற சொல்லிலிருந்து வந்ததே.   (எங்க ஊரு பெருசுகளிடம் இதை 'கால்வாய்'  னு சொல்லனம்னு சொன்னா, 'பக்கத்துல ஓடுதே அது என்ன அர வாயா' னு சொல்லி என்னை வெறுப்பேற்றிவிட்டார்... )    இது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்.     நீங்கள் விவரமானவரா?  என்பதைச் சோதிக்க  இன்னொன்று.


              விபரம்-விவரம்         இரண்டில் எது சரி?     

   தன்விபரக் குறிப்பு,  பயனுள்ள விபரம், விபரம் வருமாறு, விபரம் தெரியாத, சுயவிபரம்-இப்படி நிறைய இடத்தில் பயன்படுத்தி இருப்போம். இதில் எது சரி என்றுப் பார்க்க அதன் வினையடியையும், தொழிற்பெயரையும்     பார்த்தால் தெரியும்.

            விபரம்- விபரி-விபரிப்பவர்   என்று வருவதற்குச் சாத்தியமில்லை.

            விவரம்-விவரி-விவரிப்பவர்  என்பதே சரியானது.


---------------------------------(((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))----------------------
           
   VIJAY TV யின் சூப்பர் சிங்கர் ஜூனியர் -2 ன்  .'.பைனலில் அல்கா  அசத்தியது உலகமே   அறியும்(கொஞ்சம் பழைய செய்திதான்). 'சிங்காரவேலனை' இவ்வளவு உணர்வுபூர்வமா கேட்டு அனுபவித்தது கிடையாது. ஊர்ல கோவில் திருவிழாவில போடுவாங்க. தேஞ்சு போன கேசட்ல போட்டு,  பாட்டு எது மியூசிக் எது-னு தெரியாம  இது எதோ ஒரு சாமி பாட்டு போல னு நெனச்சிகிட்டு இருப்போம்.   LIVE வா TV யில் பார்த்தபோது, அல்காவும் (Blog CSS ல ALKAA னு அடிச்சா 'அழகா ' னு வருது..ஹி ஹி   .)  அந்த தவில்  வித்வானும் சேர்ந்து ஒரு டிசம்பர் சீசன் கச்சேரியே செஞ்ச மாதிரி இருந்தது....

       ஆனால்,  இதைவிட Audition ல,  'பொத்திவச்ச மல்லிகமொட்டு' பாடி இருப்பாங்க..அடடா...
 
                           "குழலினிது யாழினிது என்ப தம்மக்கள்
                            அல்கா பாட்டு   கேளாதவர்"......                        
                                                                               (விடுங்க...நம்ம வள்ளுவர்தானே  மன்னித்து விடுவார்..)   ------------------------------------(((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))------------------- 


No comments:

Post a Comment