Monday 20 February 2012

'லேட்'-ஆன லேடி சிவாஜி......



   "ஆத்தி....ஆத்தி.....நான் கொடுத்த பாலெல்லாம் ரத்தமா ஓடுதே........" இது.... தமிழ் சினிமாவின் இரண்டு தலைமகன்கள் நடிப்பில் போட்டிப்போட்டுக் கொண்டு  நடித்த  அழியா காவியமான 'தேவர்மகன்'-ல்  வரும் கடைசி டயலாக்...

      கமல்,நாசரை வதம் செய்துவிட்டு.. தூக்க முடியாத அந்த அரிவாளை தரையில் இழுத்துக்கொண்டே..."போங்கடா...ஏத்துக்கிட்டதெல்லாம் போதும். போயி உங்க புள்ளக்குட்டிங்கள  படிக்க வையுங்கடா...".னு புலம்பிகிட்டு வரும் போது, கடைசியாக எஸ்.என்.லட்சுமி அழுதுக்கொண்டே  பேசும் வசனம். இதைக் கேட்டவுடன் கமல் உடைந்து போய் அழுவார்.கமலின் திரை வரலாற்றில்,அவர் நடிப்பு கிரீடத்தில் சிம்மாசம் போட்டு அமர்ந்திருக்கும் காட்சிகளில் இதுவும் ஓன்று..

         மகாநதி படத்தில்....கமல் ஜெயிலில் இருப்பார்.அவரை பார்க்க அவரின் மாமியாராக நடித்திருக்கும்  எஸ்.என்.லட்சுமி,கமலின் மகளையும் மகனையும் உடன் அழைத்து வந்திருப்பார்.தன் மகனை மட்டும் பார்த்த கமல், மகளை தேடுவார்...

"காவேரி எங்க?..." 

உடனே  எஸ்.என்.லட்சுமியின் பின்னேயிருந்து எட்டிப்பார்ப்பார் குட்டி ஷோபனா,பாவாடை தாவணியுடன்..

"என்ன இது பொட்டு....தாவணி....."   

அடுத்த நொடி எஸ்.என்.லட்சுமி இவள் பெரியவளாக ஆகிவிட்டாள் என்பதை,

 "ஆமாம்...ம்ம்ம்ம்.." என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டு  முகத்தில் ஒரு நடிப்பை காட்டுவர் பாருங்கள்.கமலை விஞ்சி விடுவார்.தன் இயலாமையை நினைத்து கலங்கும் கமல்,

"எப்போ....." என்பார்.

"இங்க வந்துட்டு போனோமே......"

"ஆங் ..........."     
"போன வாரம் இங்க வந்துட்டு போனோமே.......இவ அர வருஷ பரிச்சையில முதல் மாணவியா தேரியிருக்கா மாப்பிள..." னு  நெஞ்சிலிருந்து வெடித்து சிதறும் அந்த வார்த்தைகள், கமலையும் நம்மையும் அழவைத்துவிடும்.ஒரு துளி கூட மிகைப்படுத்தப்படாத  நடிப்பு. கல் நெஞ்சையும் கரைத்துவிடும் காட்சி.இது தேவர் மகனில் சிவாஜியும் கமலும் உருகி நடித்த அந்த காட்சியைவிட அழுத்தமான உணர்வுப் பூர்வமான காட்சி.
    
     கமல் என்ற உலக மகா கலைஞன் இது போன்ற காட்சிகளை அவ்வளவு சீக்கிரம் எந்த நடிகையையும் நம்பி தரமாட்டார்.இவரை,கமல் ஒரு பெண் சிவாஜி என்றே வைத்துப் பார்த்திருப்பார் போல.... இவர்களது நடிப்பு பயணம் மை.ம.கா.ராஜன்,விருமாண்டி என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

   எம்ஜியார்,சிவாஜிக்கே அம்மாவாக நடித்தவர்.அப்படிஎன்றால் இவர் ஐந்து தலைமுறை நடிகர்களை பார்த்த நடிகை என்று கூட சொல்லலாம். 'சர்வர் சுந்தரத்தில்' நாகேஷின் அம்மாவாக கூட நடித்து அசத்தியிருப்பார். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்திருக்கிறாராம்.

          சன் டிவியின்   டாப் சீரியலான தென்றலில் கூட துளசிக்கு பாட்டியாக நடித்து கலக்கியிருப்பார்.நடிப்பு...நடிப்பு.. என்று வாழ்ந்ததாலையோ  என்னவோ இவர் திருமணமே செய்து கொள்ளவில்லையாம். தள்ளாத வயதிலும் கணீரென்று இருக்கும் குரல், மிகைப் படுத்தாத நடிப்பு, திரையுலகில் நலிந்த கலைஞர்களுக்கு உதவும் மனம்,தன் கடைசி நாட்கள் வரை நடிப்பின் மீது உள்ள தாகம்.. என்று பார்த்தால் நிச்சயம் இவர் ஒரு லேடி சிவாஜி தான்...இவர் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். தமிழ் திரையுலகில் இவரின் இழப்பு நிச்சயம் ஈடு செய்ய முடியாதது. 
  
விருமாண்டி படத்தில் இவர் இறந்தபிறகு கமல் பாடும் அந்த பாட்டு...

        "மாட விளக்கே....மகராசி மண்ணை விட்டு போனியே.....
        சொர்ன நிலாவே சொந்தம் விட்டு சொல்லாம போனியே.......
        வானம் யேறி போனவளே வந்தவழி திரும்புவியோ.....
        அடி ஆத்தாடி வாயு வயித்துல அடிக்கிறேன்.....
        இப்போ  வார்த்தை வராம துடிக்கிறேன்.....
        நீ பழகினதெல்லாம் நினைக்கிறேன்.....
        இப்போ  ரத்த கண்ணீர வடிக்கிறேன்....."




        
 வருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்......

------------------------------(((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))---------------------


7 comments:

  1. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்

    ReplyDelete
  2. அன்னாரின் ஆன்மா ஆண்டவரின் பாதத்தில் இளைப்பாறுதல் பெற பிரார்த்திப்போம்

    ReplyDelete
  3. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்

    ReplyDelete
  4. மிக அருமையான நடிகை. சின்னத்திரையிலும் கூட கலக்கியவர்.

    ReplyDelete
  5. romba thiramaiyaana nadigai. Title "Lady Sivaji" is very apt. By the way she is from Virudhunagar, my home town.

    ReplyDelete
  6. சிவாஜி, எம்.ஜி.ஆர் தலைமுறையில் மிகை நடிப்பு மற்றும் நாடக பாணி நடிப்பை மேற்கொள்ளாத சில கலைஞர்களுள் இவரும் ஒருவர். கமல்ஹாசனுக்கு இது பிடித்திருந்தாலேயே அவரைப் பல படங்களில் நடிக்க வைத்ததாகப் பல முறை குறிப்பிட்டுருக்கிறார்.

    ReplyDelete