Tuesday 30 October 2012

பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்...!மீப நாட்களாக அன்பு சகோதரி சின்ன மாயி அவர்களை ஆபாசமாக சித்தரித்தும்,அருவருப்பான ஆபாசமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்ததற்காக இணையவெளி நண்பர்கள் சிலரை நம் மானமிகு காவல்துறை கைதுசெய்து நடவடிக்கை எடுத்துவருகிறது.இதைப்பற்றி ஒரு வரிகூட எழுதாத நீயெல்லாம் ஒரு பிளாக்கரா என வசைபாடிய என் நண்பனை சைபர் கிரைமில் சிக்கவைத்து பழிதீர்ப்பது என்பது ஒரு புறம் இருந்தாலும் அருமை சகோதரி சின்ன மாயி அவர்களுக்கு நிகழ்ந்த இந்த வன் கொடுமையை கண்டிக்கும் தலையாய கடமை எனக்கும் இருக்கிறது என்பதை என் மனம் திரும்ப திரும்ப நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது....

 பொது இடத்தில் பெண்கள் குனியும்போது அவர்களுக்குத் தெரியாமல் அதை செல்போனில் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றுவது,கல்லூரிப் பெண்களோடு லூட்டியடித்து அவர்களின் அனுமதியில்லாமல் படமெடுத்து, மிரட்டி சீரழித்து,கடைசியில் இணையத்தில் பதிவேற்றி அதன்மூலம் சிற்றின்பம் அடைவது...இதுபோன்ற 'சாதாரண' விசயங்களை கவனிக்க நேரமின்றி பரபரப்புடன் இயங்கி
க் கொண்டிருந்த நமது சைபர் கிரைம் போலீசாருக்கு,உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய,மதிப்பிற்குரிய சகோதரி சின்ன மாயி அவர்கள் மீது ஏவப்பட்ட பாலியல் ரீதியான விமர்சனத் தாக்குதலின் விளைவாக,அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அதிரடி வேகத்தில் செயல்பட்டு,சம்மந்தப் பட்டவர்களை கைது செய்து தன் கடமையுணர்வை கச்சிதமாக செய்து முடித்த சைப்ப்பர்ர்ர்ர் கிரைம் போலிசாருக்கு நன்றி.

முன்பெல்லாம் பிரபலங்களுடனும்,எழுத்தாளர்களுடனும் நம் எண்ணங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொள்வதென்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல...பத்திரிக்கைகளில் வரும் கேள்வி பதில் மூலமாகவோ அல்லது வாசகர் கடிதங்கள் மூலமாகத்தான் நடக்கும்.அதுவும் அதிஷ்டமிருந்தால் மட்டுமே.தற்போது உள்ளங்கையில் உலகம்...! யாரிடம் வேண்டுமானாலும் மாற்றுக் கருத்துகளை முன்வைத்து நேரிடையாக வாதிடலாம்.நாம் கட்டமைத்து வைத்திருக்கின்ற மன பிம்பத்தை நொடியில் தரைமட்டமாக்கிவிடும் அரசியில் ரீதியான சூடான வாதங்கள் நம் கண் முன்னே நடப்பதை உணரலாம்.இவையெல்லாமே நவீன அறிவியல் நமக்கு அளித்த வரப்பிரசாதம்.

பொதுவெளியில் அரசியல்,சமுதாய ரீதியான கருத்துகளை முன்வைக்கும்போது எதிர்மறையான விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.தான் கொண்ட அரசியல் நிலைப்பாடு,தன்னை
த் தொடரும் எல்லோருக்கும் இருக்கும் என நினைப்பது தவறு.எல்லோரும் தன் நிலைப்பாட்டையே ஒத்துப் போகவேண்டும் என நினைப்பது முட்டாள்தனம்.தன்னை தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை வைத்துக்கொண்டு தன் பின்னால் பெரிய கூட்டமே இருக்கிறது என நினைப்பது மிகப்பெரிய அறிவீனம்.தான் ஒரு பிரபலம்...எது சொன்னாலும் அது எளிதில் எல்லோரையும் சென்றடையும் என நினைப்பவர்கள், அவர்களிடமிருத்து வரும் விமர்சனங்களையும் மாற்று கருத்துகளையும் எதிர்கொள்ள மறுப்பது ஏன்...? வெளிப்படையான ஒரு பொது ஊடகத்தில் உங்களால் வைக்கப்படும் கருத்துகளுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வருவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால் என்ன ம&*&%$க்கு கருத்து சொல்லன்னுன்னேன்...?   அதற்கு பேசாமல் உங்கள் அலைபேசியில் உள்ள நண்பர்களுக்கு மட்டும் 'எஸ்எம்எஸ்' செய்துவிட்டு நிம்மதியாக இருக்கலாமே...


  ராஜன் அவர்களின் சில ட்வீட்கள் வக்கிரமானவைத்தான்.ஆனால் அவரின் மொத்த ட்வீட்களின் அடிப்படையில் வைத்து பார்த்தால் இவைகள் மிகமிக குறைவு.அவர் தங்கள் முன் வைத்த வாதங்கள் ஆபாசமாக இருந்தாலும் அதில் நியாயமான கருத்து இருக்கத்தானே செய்தது.மிகப் 'பிரபலமான செலிபிரிடியான' நீங்கள் அதற்கு பொறுமையாக பதில் சொல்லியிருக்கலாமே.அல்லது பதில் சொல்லாமல் நிராகரித்திருக்கலாமே.அதைவிட்டுவிட்டு..."மீனவர்கள் மீன்களை கொல்கிறார்கள்...."  என்று சொல்லிவிட்டு,நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என மழுப்புவது நியாயமா..? உங்கள் கருத்தின் உள்நோக்கம் என்னவென்பதை அறியமுடியாத அளவுக்கு யாரும் இங்கு முட்டாள்கள் கிடையாது.தன்னை "high..nkaar " என ஒரு இடத்தில் பெருமையடித்துவிட்டு,இன்னொரு இடத்தில் "so called  thaazhththappattavarkal .." என நக்கலடித்துவிட்டு,பிரச்சனை பெரிதானவுடன் "மறவர் சீமை தமிழச்சி.." என அறிக்கை வெளியிட்டு ஆதரவு தேடுவதைப்பார்க்கும் போது உங்களை ஒரு பக்குவமற்ற பேதை என்று அழைப்பதைவிட வேறு என்ன சொல்ல...?

இணையத்தில்,எழுத்து சுதந்திரம் என்பது வரையறைக்கு உட்பட்டதல்ல...அச்சு ஊடகத்தில் தன்னை ஆச்சார்யமாகக் காட்டிக்கொள்ளும் நிறைய எழுத்தாளர்கள் கூட இணையத்தில் வாயில் வந்ததையெல்லாம் எழுதுகிறார்கள்..இது ஒரு திறந்தவெளி மைதானம்.இதில் வரம்பு மீறி போகிறவர்களை கண்டிக்கலாம். ஆனால் தண்டிக்கும் உரிமை யாருக்கும் இல்லை...நாட்டின் உயர்பதவிகளில் இருக்கும் தலைவர்களை அருவருக்கத்தக்க வார்த்தைகளில் அர்ச்சனை செய்வது தவறுதான்.இதை ராஜன் மட்டும் செய்யவில்லை. ஈழப் போரின் தோல்வியை வைத்து கலைஞர் மீது ஏவப்படும் ஆபாசத் தாக்குதல்களை ஒப்பிட்டால் அன்பு சகோதரி சின்ன மாயி(என் வாயில் அப்படித்தான் வருகிறது) பற்றி ராஜன் அவர்கள் பேசியதாக சொல்லப்படும் வார்த்தைகள் அவ்வளவு ஒன்றும் மோசமானவையல்ல... இந்த விசயத்தில் 'ராஜன் லீக்ஸ்' ராஜன் கண்டிக்கப்பட வேண்டிவரே...தண்டிக்கப்பட வேண்டியவரல்ல....!


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& 

நமக்கு எதுக்கு பொல்லாப்பு..தோ..நம்ம கேப்டனை கலாய்கிறேன்.அவர் என்ன சைபர் கிரைம்ல கம்ப்ளைன்ட் பண்ணிட்டு,வெளிய நின்னு வீராப்பா பேட்டியா கொடுக்கப்போறாரு...எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு எங்க கேப்டன்...  :))))வணக்கங்களுடன்.....
மணிமாறன்..

------------------------------------------------------(((((((((((((((((((((((())))))))))))))))))))-------------------------------------------- 
 

9 comments:

 1. ////...எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு எங்க கேப்டன்////

  என்ன சரக்கா?

  ReplyDelete
  Replies
  1. ஹி..ஹி...அவரு சரக்கு அடிச்சாலும் சரக்கு அடிச்ச அவரு அடிச்சாலும் அசால்டா தாங்குவாரு எங்க கேப்டன்..

   Delete
 2. ஆ நீங்களும் போலீசில மாட்ட தயாராகிட்டீங்களா :)
  கேப்டன் சாமி கும்பிடும்போதும் கேப்டனாத்தான் இருக்காரே

  ReplyDelete
  Replies
  1. // ஆ நீங்களும் போலீசில மாட்ட தயாராகிட்டீங்களா :)//
   இப்போ எதுக்கெல்லாம் கேஸ் போடுவாங்கன்னு தெரியில..அதுனாலதான் முன் எச்சரிக்கையா அன்பு சகோதரின்னு போட்டு வச்சேன். :-))))

   Delete
 3. பாஸ்.....

  அது யாரு சின்ன மாயி....???

  ReplyDelete
  Replies

  1. அதுவா பிரகாஷ்....'மாயி' அண்ணன் தங்கச்சி சின்ன மாயி... :-))))
   அப்படித்தான் ஆரம்பத்தில நெனச்சேன்.அப்புறம்தான் சின்மயி அப்படின்னாங்க..

   Delete
  2. இதுக்கு கேஸ் ஏதாவது போடுவாங்களா...

   Delete
 4. யோவ் கைய வச்சுட்டு சும்மா இருக்க மாட்டீரா? அவனவன் இங்க பயந்து போயி கிடக்கான் நீறு என்னன்னா "மாயி" "ஆயி" னு பதிவு போட்டுட்டு....

  ReplyDelete
  Replies
  1. நான் என்ன பாஸ் பண்றது என் வாயில் அப்படித்தான் வருகிறது.எங்க ஊர்ல சின்னவன்...பெரியவன்...என்பதை சின்ன வினை,பெரிய வினை என்றுதான் கூப்பிடுவோம் ... :-))))

   Delete