Tuesday, 14 January 2014

ஜில்லாவை மிஞ்சிய வீரம்...

 

மூக வலைத்தளங்களில் ஒரு படத்தை மொக்கைனு ஈசியா சொல்லிடலாம் போல... நல்லாயிருக்குன்னு சொல்லிட்டா முதுகுல டின் கட்டிடுறாங்க...

ஏம்பா இணையத்தில விஜய் ரசிகர்கள் யாருமே இல்லையா..எல்லோரும் வெறும் விசிலடிச்சான் குஞ்சுகளா..?  தலைவா படம் தமிழகத்தில் தடை செய்யப்பட சூழலில் முதலில் ரிலீஸ் ஆனது சிங்கப்பூரில்தான். முதல்நாள் முதல்காட்சி என்பதெல்லாம் வெட்டி ஆபீசர்ஸ் வேலை என நினைத்த எனக்கு, விபத்து போல அமைஞ்சது தலைவா படத்தின் முதல்நாள்.. ஸாரி முந்திய நாள் முதல் ஷோ.

ஆர்பாட்டம் ...ஆர்ப்பரிப்பு.. அதகளம்.. விசில் சத்தம்... எல்லாம் முதல் பதினைந்து நிமிடங்கள் தான். அப்புறம் எல்லோரும் ரிலாக்சா செல்போன்ல வீடியோகேம் விளையாட ஆரம்பிச்சிட்டாங்க. படம் பார்த்துவிட்டு வந்து முதல் ரிவியூவாக படம் ' மரண மொக்கை' என எழுதினேன். ஆவலுடன் எதிர்பார்த்த ஒரு படத்தை இப்படி எழுதியிருக்கேன்னு உலக அணில் ரசிகர்கள் யாருமே என் பிளாக்கில் வந்து பொங்கல் வைக்கவில்லை. மாறாக அப்படியா.. ஊத்திகிச்சா... ஓவர் பில்டப் கொடுக்கும்போதே தெரியும்.... அப்படி இப்படினு சிலர் சந்தோசமா பின்னூட்டம் போட்டாங்க ...

பிறகு 'ஆரம்பம்' இப்படித்தான் முந்திய நாள் இரவு பார்த்துவிட்டு 'தல தி மாஸ்'னு போட்டு,படம் ஆஹாஓஹோ  அட்டகாசம்னு எழுதினேன். எல்லா பின்னூட்டங்களும் சாதகமாக வந்தது. மாறாக, ஒரு விஜய் ரசிகர் கூட எதிர் கமெண்ட் போடவில்லை. நிறைய பேர் படிக்கவில்லை என சொல்லமுடியாது. இரண்டும் பத்தாயிரத்துக்கும் அதிகமான ஹிட்டடித்த பதிவுகள்.

ஆனால் பாருங்க. ஜில்லா கண்டிப்பா ஹிட் ஆகிடும். எல்லோருக்கும் பிடிக்கும்னு எழுதினேன்.அவ்வளவுதான். காதுல ரத்தம் வர்ற அளவுக்கு அவ்வளவும் செம்மொழி கமெண்டுகள். எல்லாம் இப்ப ஸ்பாம்ல கிடக்கு. (வெயிட்..இதெல்லாம் ஒரு பொழைப்பானு கேட்க வாறீங்க ? வவ்வால் வேஷம் போட்டால் தலைகீழ தொங்கித்தானே ஆகணும் பாஸ்...)

சரி அதை விடுங்க.. இதிலிருந்து என்ன தெரியுது...?  இணையம் முழுவதும், அதாவது படித்தவர்கள் மத்தியில் விஜயைவிட அஜித்துக்குத்தான் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. தவிரவும், ரசிகர் மன்றங்கள் கலைப்பு, பெயருக்கு முன் அடைமொழி மற்றும் பட்டங்கள் தவிர்ப்பு போன்றவைகள் மற்ற ரசிகர்கள் மத்தியில் அஜித் அவர்களுக்கு மிகுந்த செல்வாக்கை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

ஒரு காலத்தில் கமலின் தீவிர ரசிகனாக இருந்தபோது, ரஜினியை சுத்தமாக பிடிக்காது. அவர் படங்கள் எதுவும் தியேட்டரில் பார்க்க மாட்டேன். ரஜினி என்றாலே வெறுக்குமளவுக்கு ஒரு மைண்ட் செட் அப்போது இருந்தது. எப்போது அவர் தனக்கு அமைந்த அற்புதமான அரசியல் பிரவேச வாய்ப்பை தவிர்த்துவிட்டு ஒதுங்கிப் போனாரோ, அப்போது பிடித்துப் போனது சூப்பர் ஸ்டாரை.

அஜித்தும் அப்படித்தான். விஜயின் சக போட்டியாளராக இருந்த போதிலும் பெரும்பாலும் ரேசில் வெல்வது விஜய்யாக இருக்கும். ஆனால் செல்வாக்கும், ரசிக பட்டாளமும் அதிகரித்தது என்னவோ அஜித்துக்குத்தான். ஆளானப்பட்ட சூப்பர் ஸ்டாரே மேக்கப் இல்லாமல் ஒரே ஒரு படத்தில், அதுவும் கேரக்டர் ரோல் செய்துவிட்டுப் போக, அஜித் அவர்கள்  இயல்பான கெட்டப்பில் நடித்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்தது உண்மையிலேயே ஆச்சர்யம்தான்.

முதலில் வீரம் படத்தின் விமர்சனம் :

சுலபமாக விமர்சனம் எழுதிவிடலாம்.ஒவ்வொரு வரிக்கும் பின்னாடி மானே..தேனே..பொன் மானே..போடுவது போல் தல வரும் ஒவ்வொரு காட்சியையும் சொல்லி கடைசியில் அட்டகாசம்..., அமர்க்களம்...., அசத்தல்..., கலக்கல்..., சான்சே இல்ல..., பின்னி பெடலெடுக்கிறாரு..., அதுதான் தல... , தல போல வருமா... இப்படி வரிசையா எழுதினாலே போதும். அப்படியொரு மரண மாஸ் தல வரும் ஒவ்வொரு சீனும். இத்தனைநாள் இப்படியொரு விருந்துக்காகத்தானே அவரது ரசிகக் குஞ்சுகள் காத்திருந்தார்கள்...!

இயல்பான அறிமுகம். பிறகுதான் ஆரம்பிக்கிறது அதகளம். 
 

" ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும் அதகளம் புரிந்திடும் வீரம்.. இவன் மதபுஜம் இரண்டும் மலையென எழுந்திட செருக்களம் சிதறிடும் வீரம்..." பின்னணியில் ஒலிக்க, அஜித் திரும்பினால் விசில், நடந்தால் விசில், பேசினால் விசில், அசைந்தாலே விசில்..! அரங்கமே அதிர்கிறது.  ஒரே அடியில் ஐந்தாறு பேரை வீழ்த்துகிறார். தப்பித்தவறி வில்லன்களின் ஒரு அடி  தல மேல பட்டாலும் தியேட்டரில் 'ஏய் ...' என சத்தம். 

ஜில்லாவில் இறுதிகாட்சியில் மோகன்லால் விஜயின் நெஞ்சில் செருப்புக்காலோடு மிதிப்பார். அவரது ரசிகர்களிடம் எவ்வித ரியாக்சனும் இல்லை. ஆனால் இங்கே பொங்கி எழுகிறார்கள். இப்படியொரு ரசிக பட்டாளம் கிடைக்க தல போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்..!

இயல்பான கதைதான். அடிதடி பிரதர்ஸ் ஐந்து பேர். அதில் தல தான் தலை. தன் தம்பிகளை பிரிந்துவிடக் கூடாது என்பதற்காக கல்யாணமே செய்து கொள்ளாமல்(தம்பிகளையும் செய்யவிடாமல்) பேச்சிலர் வாழ்க்கை வாழும் அஜித், தம்பிகளின் வற்புறுத்தலுக்காக கல்யாணம் செய்ய சம்மதிக்கிறார். யாரை திருமணம் செய்ய நினைக்கிறாரோ அப்பெண்ணுக்காக அடிதடியெல்லாம் விட்டுவிட்டு அரிவாளை கீழே போடும் அஜித், அதே பெண்ணின் குடும்பத்தைக் காப்பாற்ற மீண்டும் அரிவாளைத் தூக்குகிறார். இதுதான் கதை.

தமிழ், தெலுங்கு மார்கெட்டை டார்கெட் செய்து கதையை அமைத்திருக்கிறார் சிறுத்தை சிவா. அவர் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக வந்திருப்பதாக யூகிக்கிறேன்.ஒரு மாஸ் ஹீரோவுக்கு எப்படி காட்சிகளை வைக்க வேண்டும் என்பதில் மிகத்தெளிவாக இருக்கிறார் இயக்குனர் சிவா.. அஜித் கேரியரில் தீனா முக்கியமான படம். 'தல' பட்டமும் 'நடராஜா ' ஸ்டைலும் அதில்தான் அறிமுகமானது. அது போன்ற ஓர் முக்கியமான படம் வீரம்.

அண்ணன் - தம்பிகள் கதைகள் தமிழில் நிறைய வந்திருக்கிறது. எல்லாமே 'அண்ணன் சொன்னா சரியாத்தாங்க இருக்கும்' தலையாட்டிப் பொம்மைகள் டைப். இதிலும் தம்பிகளை விட்டுக்கொடுக்காத அண்ணன், அண்ணனுக்காக எதையும் செய்யும் தம்பிகள் என்ற அதே செண்டிமெண்ட் உப்புமா கிண்டினாலும், கிண்டியதையே திரும்பவும் கிண்டாமல் கலகல கிச்சடி செய்ய முயற்சித்திருப்பது பாராட்டப்படவேண்டிய விஷயம்.



சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் தும்பைப்பூ கலர் வேஷ்டி சட்டையில் ஹீரோ அறிமுகமாகிறார் என்றால் அவருக்கு மகனாகவோ அல்லது தம்பியாகவோ தலையில் கருப்பு டை அடித்து கலர் ட்ரஸில் இன்னொருவர் வருவதுதான் தமிழ் சினிமாவின் வழமையான சம்பிரதாயம். போங்கடா இதுதான் என் இயல்பான கெட்டப்.. இப்படித்தான் வருவேன் என்று தமிழ் சினிமாவில் ஓர் புதிய பாதையை ஏற்படுத்தியிருக் -கிறார் தல...!  மட்டுமில்லாமல் அதில் ஜெயித்தும் காட்டியிருக்கிறார். இனி விக்கோடு அலையும் சீனியர் நடிகர்கள் சிந்திப்பார்களாக... 

நீண்ட இடைவெளிக்குப் பின் சந்தானம் தனக்கான களத்தில் இறங்கி அடித்திருக்கிறார். ஏற்கனவே வக்கீலாக சில படங்களில் நடித்திருந்தாலும் இந்தளவுக்கு காமெடியில் புகுந்து விளையாடியதில்லை. தல பிரதர்ஸ் உடன் முன்பாதி முழுவதும் அடிக்கும் லூட்டிகள் சரவெடிகள் என்றால் பிற்பாதியில் தம்பி ராமய்யா சேர்ந்துகொள்ள தௌசண்ட் வாலா பட்டாசாக வெடிக்கிறது.  

படத்தில் அஜித்-க்கு அடுத்ததாக பாராட்டப்பட பட வேண்டியவர் ஸ்டன்ட் சில்வா. சண்டைக்காட்சிகளில் உண்மையிலேயே பொறி பறக்கிறது.

படத்தின் இன்னொரு பலம் பின்னணி இசை. ஆனால் பாடல்கள் ஏனோ மனதில் நிற்கவில்லை.குறிப்பாக தல டூயட் ஆடும்போது ஏதோ நெருடுகிறது.இவ்வளவு மண்வாசனையான படத்திற்கு எதற்கு ஃபாரின் லொ
கேசனில் பாடல்கள். படத்திலிருந்து தனித்து நிற்கின்றன அப்பாடல்கள்.

தம்பிகளாக வரும் நால்வரில் இருவர் மட்டுமே பரிச்சயமான முகம். இருந்தாலும் நால்வருமே பாசமுள்ள தம்பிகளாக மனதில் நிற்கிறார்கள். அதுல் குல்கர்னி அற்புதமான நடிகர். தமிழில் நடித்த முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கியவர். அவரை மூன்றாந்தர சவடால் விடும் வில்லனாகத்தான் தமிழ் சினிமா பயன்படுத்துகிறது. 



அகிம்சைவாதியாக சட்டைப் போட்ட காந்தியாக நாசர். தலைக்கு நேரெதிர் கொள்கை.  கல்யாணம் செய்து கொள்ளாமல் தம்பிக்காக வாழும் அஜித், ஒரு  கட்டத்தில் தன் தம்பிகளின் வற்புறுத்தலுக்காக அடிதடியை விட்டுவிட்டு தமன்னாவை திருமணம் செய்ய முடிவு செய்கிறார். நாசரின் வற்புறுத்தலின் பேரில் அவர்கள் வீட்டில் ஒருவாரம் தங்குகிறார். அங்கு நாசர் குடும்பத்திற்கு அதுல் குல்கர்னி ஏவிவிட்ட கூலிப்படையின் மூலம் வரும் ஆபத்தை, நாசர் குடும்பத்திற்கே தெரியாமல் தனி ஆளாக நின்று துவம்சம் செய்கிறார்.

ஒரு கட்டத்தில் அஜித்தின் உண்மை முகம் தெரியவர, அவரை வெளியேற்றி தமன்னாவை திருமணம் செய்து கொடுக்க  மறுக்கிறார் நாசர் . இதுவரை சரி....

கிளைமாக்சில் அதுல் குல்கர்னியே நேரடியாக களத்தில் இறங்கி நாசர் குடும்பத்தை வேரோடு கருவறுக்க வரும்போது , "சோறு போட்டவ எல்லாம் அம்மா... சொல்லிக்கொடுத்தவன் எல்லாம் அப்பன்...இந்த குடும்பம் ரெண்டுமே பண்ணுனிச்சிடா "  என பன்ச் அடித்துவிட்டு மொத்த கும்பலையும் ஒத்த ஆளா காலி பண்ணிட்டு தம்பிகளோட கிளம்பி போறாரு.  இதுவும் சரி..... 


கடைசில நாசர் கூப்பிட்டு , என் குடும்பத்துக்காக இவ்வளவு பண்ணியிருக்க..என் பொண்ணு உனக்குத்தான்னு சொல்றாரு. உடனே தல எதுவும் சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிறாரு.இந்த இடத்தில்தான் தலயோட வீரம் டொக்கு விழுந்திடிச்சி.

அந்த வீட்டில் தல-யை ஒருவாரம் தங்க வைத்ததே அவரின் கேரக்டரை தெரிந்து கொள்ளத்தான் என்பது முதல் அவமானம். 'என் பொண்ணை உனக்கு கல்யாணம் செய்து கொடுக்க முடியாது.இந்த வீட்டை விட்டு போய்டு' என தல-யை விரட்டினது இரண்டாவது அவமானம். 


இப்படி இருக்கிறப்போ கடைசியில என்ன சொல்லியிருக்கணும்..? " சோறு போட்டவ அம்மா... சொல்லிக் கொடுத்தவன் அப்பா... உங்க குடும்பம் என் குடும்பம் மாதிரி... உங்க குடும்பத்துக்கு ஒரு ஆபத்துனா நான் எப்படி பாத்துகிட்டு இருக்க முடியும்.. அதனாலதான் கத்தியை தூக்கினேனே தவிர, உங்க பொண்ணுக்காக இல்ல. உங்க பொங்கச்சோறும் வேணாம் புளியோதரையும் வேணாம்" னு வீரமா கிளம்பி போக வேண்டாமா.. உடனே நாசர் ஓடிவந்து ,' முள்ளை முள்ளால்தான் எடுக்கணும்.. இந்த அயோக்கியனை கொல்ல நீ கத்தியைத் தூக்கினது சரிதான்..என்னை மன்னிச்சிடுப்பா..என் பொண்ணை கட்டிக்கனு தலை கையைப் புடிச்சி கெஞ்ச வேண்டாமா...? என்ன டைரக்டர் சார்...? 

அதே காட்சியில் ' சோறு போட்டவ அம்மா' னு சொல்லி தல ஒருத்தனை 'சதக்'... சொல்லிக்கொடுத்தவன் அப்பானு சொல்றதுக்குள்ள ரெண்டு பேரை 'சதக்..சதக்...' . முன்பு, அரிவாளை தூக்கியதால் பலியான தன் சொந்த மகனின் உடலை தன் வீட்டுக்கே அனுமதிக்காத அகிம்சைவாதியான நாசரும் அவர் குடும்பமும் அங்கே சதக் சதக் என குத்துப்பட்டு விழுபவனைப் பற்றி கொஞ்சம்கூட கவலைப் படாமல் தல யின் பன்ச் டயலாக்கில் உருகி நிற்கிறார்கள். 


இதுக்கு மேல தோண்டித்துருவி எழுதினா தல ரசிகர்கள் பொங்கல் அதுவுமா எனக்கு பொங்கல் வைத்து விடுவார்கள் என்பதால்  இத்துடன் விமர்சனம் முடிகிறது.


சரி.. இரண்டு படங்களில் எது டாப்..?

ஜில்லா, வீரம் இரண்டு படங்களும் இன்னமும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் சாதனை படைத்து வருகிறது. அவரவர் ரசிகர்களின் பார்வையில் இரண்டு படங்களுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல. 



முதலில் ஜில்லா.. (அதாவது முதலில் பார்ப்போம்னு சொல்ல வந்தேன் )

ரசிகர்களை குஷிப்படுத்துவதே ஒரே குறிக்கோள் என்ற நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம். அதை தவறவிட வில்லை. பைட், சாங், காமெடி,செண்டிமெண்ட் எல்லாமும் சரி விகிதத்தில் கலந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இதுதானே விஜயின் சக்சல்ஃபுல் ஃபார்முலா... ஏதோ விஜய் தொடர்ந்து உலகத்தரத்தில் படம் நடித்து வருவது போலவும், ஜில்லா மட்டும் பக்கா மசாலா மொண்ணை படமாக அமைந்துவிட்டது போலவும் இணையத்தில் ஏன்தான் பலர் பொங்குகிறார்களோ தெரியவில்லை. நாங்க என்ன வச்சிகிட்டாங்ண்ணா வஞ்சனை பன்றோம். சட்டியில இருந்தாதாங்ண்ணா அகப்பையில வரும்..? ஏதோ இடையில துப்பாக்கி கொஞ்சம் நல்லா வந்திருச்சி... அதுக்காக எல்லா படமும் துப்பாக்கி போல எதிர்பார்க்க முடியுமா..?

இப்படித்தான் நாங்க தலைவானு ஒரு படம் நடிச்சோம். நாயகன், பாட்சா படத்திற்கே சாவால் விடுகிற ஆஸ்கார் அவார்டு நடிப்பு. தமிழில் எடுத்த ஒரே காரணத்திற்காக ஆஸ்கார் அவார்டு கொடுக்க மாட்டேன்டாங்க. ஆனா
கடைசில என்னாச்சி ..? நாங்களே பணம் கொடுத்து படத்தை ஓட்ட வேண்டிய நிலைமை ஆயிடிச்சி. இப்ப சொல்லுங்கங்ண்ணா.. எங்களுக்கு இதைவிட்டா வேற எப்படி படம் எடுத்து பொழைப்பை ஓட்டுறது..?

அடுத்தது வீரம்....

தமிழ் சினிமாவில் ரஜினி பார்முலா என ஒன்னு இருக்கு. படம் நெடுக மென்மையான  நகைச்சுவை. இடையில் கொஞ்சம் அடிதடி... கொஞ்சம் லவ்ஸ்... கொஞ்சம் செண்டிமெண்ட்... கொஞ்சம் பன்ச்... கொஞ்சம் அரசியல்... கொஞ்சம் சமகால பிரச்சனைகள்... etc .. இதை இம்மி பிசகாமல் சொல்லி அடித்திருக்கிறது தல யின் வீரம்.

கதையில் பெரிய புதுமை இல்லை என்றாலும் கிராமப் பின்னணியில் வெறும் வேட்டி சட்டையில் ஹீரோவைப் பார்ப்பது எவ்வளவு குளிர்ச்சியாக இருக்கிறது..!. தெலுங்கு வாடைதான். ஆனால் பஞ்சாயத்து, ஆலமரம், சொம்பு போன்ற தமிழ் சினிமாவின் கிராம தளவாடங்கள் எதுவும் இல்லாதது புதுமை.

அஜித்தும் அடக்கமாக பேசி நடித்திருப்பது மற்ற ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வசன உச்சரிப்பு ஷார்ப். "அத்திப்பட்டினு ஒரு ஊர்..."  என தல கோர்ட்டில் இழுத்து டயலாக் பேசும்போது
வ்வளவு விகாரமா இருக்கும்.

வசூலைப் பொருத்தவரையில் முன்பின் இருக்கலாம்.  ஆனால் கதை,  தரம்,  ரசனை,  படைப்பு உட்பட அனைத்திலும்
ஜில்லாவை ஓவர்டேக் செய்கிறது வீரம்.


ரி.. சரி.. தல தளபதி ரசிகக் குஞ்சுகள் அடிச்சிக்காதீங்க. ரெண்டு படமும் ஹிட் தான்.நீங்க இங்க அடிச்சிகிறீங்க. ஆனா தலயும் தளபதியும் நாங்க எல்லாம் ஒரே குடும்பம்தான்னு சொல்றாங்க..

எப்படி என்றால்...

ஜில்லாவில் மோகன்லாலின் பெயர் சிவன். விஜயின் பெயர் சக்தி.

வீரம் படத்தில் அஜித்தின் பெயர் விநாயகம். அவர் தம்பிகளின் பெயர் சண்முகம், முருகன், செந்தில், குமரன், மயில்வாகனன் (தம்பி மதிரி) .

இதிலிருந்து என்ன தெரியுது. நாங்க எல்லாம் ஒரே குடும்பம். எங்களுக்காக நீங்க ஏன் அடிச்சிக்கிறீங்க என சொல்லாமல் சொல்றாங்க... ( ஆனால் அம்மை அப்பனுக்கே டேக்கா கொடுத்துட்டு ஞானப்பழத்தை லவட்டிய விநாயகர் எவ்ளோப் பெரிய கில்லாடி என்பது உலகறிந்த விசயமாச்சே...)


  

Friday, 10 January 2014

ஜில்லா -விமர்சனம்


ழிவாங்கல் கதைதான்.  மதுரை ஜில்லாவையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரபல தாதா 'சிவன்' மோகன்லால். கிரானைட் குவாரியிலிருந்து சாரயக்கடை வரை அவர் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.மதுரையே அவர் விரலசைவுக்கு கட்டுப்படுகிறது. இளம்வயது மோகன்லாலின் டிரைவரின் மகன்தான் விஜய். முன்னாள் தாதாவான கவிஞர் ஜெயபாலனை மோகன்லால் கொன்றுவிட, அவரை பழிவாங்க ஜெயபாலனின் வாரிசுகள் முயல்கிறார்கள். அந்த ஆபத்திலிருந்து மோகன்லாலின் மனைவியான பூர்ணிமாவை சிறுவனாக இருக்கும் விஜய் காப்பாற்றுகிறார். அதில் விஜயின் அப்பா போலிஸ்காரரால் சுடப்பட்டு இறந்துவிடுகிறார்.

தன் மனைவியின் உயிரைக்கபாற்றிய விஜயை தத்தெடுத்து தன் மகனைப்போல வளர்க்கிறார் மோகன்லால். அவரது ஒவ்வொரு கட்டளையையும் கச்சிதமாக முடிக்கும் செயல்வீரனாக 'ஜில்லா'வாக மதுரையையே கலக்குகிறார் விஜய். தன் வளர்ப்புத் தந்தையான மோகன்லால் மீது சிறு துரும்பு பட்டால்கூட கொதித்தெழும் ஆக்ரோஷ இளைஞனாக இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் புதிதாக வந்த கமிசனரால் மோகன்லாலுக்கு தொல்லைகள் வர, தனக்கு கட்டுப்படும் ஓர் ஆளை கமிசனராக நியமித்தால் நல்லது என்று மோகன்லால் முடிவெடுக்கிறார். தன் செல்வாக்கைப் பயன்படுத்தி விஜயை மதுரைக்கு அஸிஸ்டண்ட்  கமிசனராக நியமிக்கிறார். தன் தந்தை ஒரு போலிஸ்காரரால் கொல்லப்பட்டதால் காக்கி உடையையே வெறுக்கும் விஜய், தன் அப்பாவைவிட அதிகமாக நேசிக்கும் மோகன்லாலுக்காக அதே காக்கியை உடுத்துகிறார்.

இதன் பிறகுதான் சூடுபிடிக்கிறது படம். இதுவரை மோகன்லால் சொல்லும் அனைத்து கெட்ட காரியங்களையும் தட்டாமல் செய்த விஜய், ஒருகட்டத்தில் தந்தையையே எதிர்க்கும் நிலைமைக்கு சில சம்பவங்கள் அவரை மாற்றுகிறது. இதுவரை செய்த அனைத்து கெட்ட விசயங்களையும் மறந்துவிட்டு நல்லவனாக மாற தன் தந்தையை நிர்பந்திக்கிறார் விஜய்.ஆனால் தான் அதே சிவனாகவேத்தான் இருப்பேன் என்று  மறுத்துவிடுகிறார் மோகன்லால். இதுவரை நகமும் சதையுமாக இருந்த சக்தியும் (விஜய்) , சிவனும் (மோகன்லால்) பின்னர் கீரியும் பாம்புமாக மாறிவிடுகிறார்கள்.  மோகன்லாலின் சாம்ராஜ்யத்தையே தரைமட்டமாக்கி அழிக்கிறார் விஜய்.அப்பாவைத் திருத்த போராடும் மகன்,வளர்ப்பு மகனை தீர்த்துக்கட்ட துடிக்கும் அப்பா என இருவருக்கும் நடக்கும் யுத்தத்தில் கடைசியில் என்ன நடத்தது என்பதே கிளைமாக்ஸ்.

விஜய்க்கு ஜில்லா மிகப்பெரிய ஹிட். எந்த சந்தேகமும் இல்லை. சண்டைக்காட்சிகள், நடனசைவுகள், வசன உச்சரிப்புகள் எல்லாவற்றிலும் ஒரு முதிர்ச்சி தெரிகிறது. ஈடுபாட்டுடன் செய்திருப்பது நன்றாகத் தெரிகிறது. ஒரு இடத்தில் கூட 'ஓவர் பில்டப்' காட்சிகள் வராமல் பார்த்துக்கொண்டது, ஒருவேளை தலைவா தந்த அடியாக இருக்கலாம்.

படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய இன்னொருவர் பரோட்டோ சூரி. இந்தப்படத்தில் காமெடி செமையாக ஒர்க் அவுட் ஆயிருக்கிறது.  வடிவேல் விட்டுச்சென்ற வெற்றிடத்தை ஒருவேளை இவர் நிரப்பக்கூடும். விஜய்க்கு காக்கி மேல் உள்ள வெறுப்பால் காக்கி உடை போட்ட நபரைக்கண்டால்  அங்கேயே அவர் சட்னிதான். காஜலை விஜய் முதன்முதலில் பார்த்துவுடன் காதலில் விழுந்து, பிற்பாடு அவர் போலிஸ் என்று தெரிந்து ஜகா வாங்குவதாகட்டும், பிறகு போலிசாகி அவரையே லவ்வுதாக இருக்கட்டும், தன் பள்ளி நண்பனான சூரி போலிசாகி நேராக விஜயிடம் காண்பிக்க வந்து சின்னாபின்னமாவதாக இருக்கட்டும், பிறகு விஜயிடமே கான்ஸ்டபிளாக சேர்ந்து விஜய்-காஜல்-சூரி மூவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டியாகட்டும்... எல்லாமே கலகல பட்டாசு.


மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மம்முட்டி தமிழில் நடித்த பெரும்பாலான படங்கள் செம ஹிட்டாக, மோகன்லாலுக்கு மட்டும் அந்த அதிர்ஷ்டம் கைகூடவே இல்லை. உன்னைப்போல் ஒருவனைத் தவிர்த்து அவர் எதிர்பார்த்து நடித்த அனைத்துப் படங்களும் பெரும் தோல்வியைத் தழுவின. அந்தக்குறையை இந்தப்படம் போக்கிவிடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. மதுரை சிவனாக மோகன்லால் கனகச்சிதம். கண்களில் வெடிக்கும் கோபத்துடன் கர்ஜிக்கும் அவரின் தோரணை முத்துப்பாண்டியையே மிஞ்சிவிடுகிறது. முதல் பாடலில் விஜய்யுடன் சேர்ந்து போடும் ஆட்டமும், இறுதியில் இருவரும் இணைத்து போடும் சண்டையும் அட்டகாசம். ஒருபுறம் பாசமான அப்பா, மறுபுறம் தன் மகனிடம் தோற்றுப் போய்விடக்கூடாது என்கிற வெறி... பின்னியெடுக்கிறார் மோகன்லால். என்ன... பேசும்போது கொஞ்சம் மலையாள வாடை அடிக்கிறது. அவ்வளவுதான்.

விஜய் படமென்றால் தங்கை செண்டிமெண்ட் இல்லாமலா...? கூடவே தாய் செண்டிமெண்ட் வேறு. தன் வயிற்றில் பிறக்காவிட்டாலும் பூர்ணிமா விஜய் மீது வைத்திருக்கும் பாசம் அழகிய கவிதை.மோகன்லாலில் சொந்த மகனாக மகத். ஒன்றும் பெரியளவில் வாய்ப்பு இல்லாவிட்டாலும் கடைசியில் பரிதாபமாக இறந்து போகிறார்.மோகன்லாலின் மகளாக வரும் நிவேதா தாமஸ், அண்ணன் -தங்கை செண்டிமெண்ட்க்காக உபயோகப்படுகிறார்.

பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். அதிலும், ஜிங்குனமணி.. ,எப்ப மாமா ட்ரீட்.... பாடல்கள் செம குத்து. பின்னணி இசையும் நன்றாக அமைந்திருக்கிறது. இமான் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் .
  

படத்தின் நிஜ வில்லன் அமைச்சராக வரும் சம்பத். தன்னிடம் வேலைபார்க்கும் ஒருவர், தனக்கு தெரியாமல் பிசினஸ் டீலிங் செய்ததை கண்டுபிடித்து, துரோகமாக எண்ணி அவரைக் கொல்லும் மோகன்லால், சிறுவயதிலிருந்தே சம்பத் என்ற பாம்புக்கு பால் ஊற்றி வளர்த்திருக்கிறாரே. அதை எப்படி கவனிக்காமல் விட்டார்...?   சம்பத்தான் வில்லன் என்கிற ட்விஸ்டை கிளைமாக்ஸ் வரை கொண்டுசென்றிருக்கலாம். விஜயின் தம்பியான மகத்தை கொல்லப்போவதாக போனில் விஜயிடம் பலமுறை தெரிவிக்கிறார் சம்பத். அதை ரெகார்ட் செய்து மோகன்லாலிடமோ அல்லது மகத்திடமோ போட்டுக்காட்டினால் மகத் இறப்பது தவிர்க்கப்பட்டிருக்குமே... ! ஆனால் கிளைமாக்சில் உள்ள ட்விஸ்ட் எதிர்பாராதது.

இப்படி ஒரு சில சந்தேகங்கள் எழுவது கூட சாத்தியமில்லாமல் விறுவிறுவென திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் நேசன். முருகா என்ற சுமாரான படத்தைக் கொடுத்தவர், இளைய தளபதியை வைத்து, அதுவும் தலைவா என்ற மரண மொக்கைக்கு அடுத்து வரும் படம், இரு மாநில சூப்பர் ஸ்டார்கள்.. எப்படி சமாளிக்கப்போகிறார் என்கிற பலரது ஐயத்தை தவிடு பொடியாக்கியிருக்கிறார் இயக்குனர். சிவகாசியையும் போக்கிரியையும் ஒன்றாக பார்த்தது போன்ற உணர்வு.

ஜில்லா... வந்திருக்கு நல்லா...! 




Wednesday, 8 January 2014

2013-ல் என்னை உலுக்கிய தமிழ்த் திரைப்படங்கள்...

பத்தாவது இடத்தில் எந்தப்படமும் இல்லாததால் நேரடியாக ஒன்பதாவது இடத்திற்கு செல்வோம்.

 9.சூது கவ்வும்...

சென்ற வருடம் தமிழ்த் திரையுலகை விஜய் சேதுபதி என்கிற சூது செமையாகக் கவ்வியிருந்தது.தொலைக் காட்சித் தொடரில் கூட நடிக்க லாயக்கில்லாத மூஞ்சி என்று ஆரம்பத்தில் சிலரால் புறக்கணிக்கப்பட்டு, பிற்பாடு சிறு வேடங்கள், டப்பிங் ஆர்டிஸ்ட் என்று படிப்படியாக முன்னேறி 2013 ஆம் ஆண்டின் சிறந்த நடிகராகப் பலரால் பாராட்டப்பட்டவர்தான் இந்த விஜய் சேதுபதி.

ஆரம்பத்தில் நிறைய அனுபவப்பட்டதால் என்னவோ, கதை மட்டுமே ஒரு படத்தை வெற்றியாக்கும் என்பது மட்டுமல்ல கடைக்கோடி ரசிகர்களையும் கட்டியிழுத்து திரையரங்குக்குக் கொண்டு வரும் என்கிற சூட்சமத்தைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார். பீட்சா, ந.கொ. ப.காணோம், இ.ஆ.பாலகுமாரா.. என்று ஹீரோவாக நிதானமான வெற்றியை பெற்றாலும் வில்லன் கதாபாத்திரத்திலும் சில படங்களில் அசத்தியிருக்கிறார் விஜய் சேதுபதி.

இந்த வருடத்தில் அவர் நடித்ததில் மாஸ் 'சூது கவ்வும்'. 90 களின் ஆரம்பத்தில் திரைப்படக்கல்லூரியில் பயின்று வந்த மாணவர்கள் தமிழ்த்திரையில் கோலோச்சியதைப்போல் கடந்த வருடம் குறும்பட இயக்குனர்களின் கைகளில் தமிழ் சினிமா உலகம் சிக்கி வேறொரு கட்டத்திற்கு நகர்ந்தது. தமிழ் சினிமாவின் திரைக்கதை வடிவம் வேறொரு பரிமாணம் கண்டது. கிளிசே வகைக் காட்சிகள் தமிழ் ரசிகர்களைச் சலிப்படைய வைத்ததால் இப்படியொரு புதிய முயற்சிக்கு ஆரம்பத்திலேயே அமோக வரவேற்பு கிடைத்தது. நிச்சயமாக சூது கவ்வும் தமிழ் சினிமாவில் ஒரு ட்ரென்ட் செட்டர்.

8.ஆதலால் காதல் செய்வீர்..

 
தலால் காதல் செய்யாதீர்கள் என்பதுதான் படத்தின் மையக்கருத்து. நவநாகரிகம் என்கிற பெயரில் வெளிநாட்டுக் கலாச்சாரம் எப்படி நம் கலாச்சாரத்தினுள் ஊடுருவி இளைய சமுதாயத்தை தவறான பாதையில் பயணிக்கச் செய்து படுகுழியில் தள்ளுகிறது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார் சுசீந்திரன்.

நிச்சயம் பருவம் எய்திய பெண்களைப் பெற்ற பெற்றோர்கள் இப்படத்தைப் பார்த்தால் பதறிப்போவார்கள். கருவைக்கலைக்க டாக்டரிடம் சென்று சமாளிக்கும் காட்சியும், தன் மகள் தவறான முறையில் உண்டாகியிருக்கிறாள் என்பதை அவளது தாய் உணர்த்து துடிக்கும் காட்சியும் சுசீந்திரனின் திறமைக்கு சில சாம்பிள்கள். அதற்காக காதலிப்பவர்கள் எல்லோரும் இப்படித்தான் முடிவெடுப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. தன்னால் உருவான பிஞ்சை அப்பா உதாசீனப்படுத்தலாம். அம்மாவும் அப்படி தூக்கி எறிவாரா என்ன..?
 

7.பாண்டிய நாடு..

 
துரைக்கும் விஷாலுக்கும் அப்படியொரு பொருத்தம்... ஆறடிக்கும் அதிகமான உயரம், மதுரைக்கே உரித்தான கருப்பு நிறம், சண்டைக்காட்சிகளில் ஜல்லிக்கட்டு காளையாய் சீரும் வேகம் என அப்படியே வீரம் செறிந்த மதுரை வீரனாய் விஷாலைத் தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

"நீ அடிச்சா பணம்... நான் அடிச்சா பொணம்..." போன்ற கடுப்பின் உச்சத்திற்குச் சென்று வெறியேற்றும் பன்ச் எதுவுமில்லாமல் சாதாரண இளைஞனாக விஷால் நடித்திருப்பது பெரும் ஆறுதல். எதார்த்த சாமானியன் போல நடித்திருக்கும் விஷால், இந்த வெற்றிக்குப் பிறகு தன் பாதையை மாற்றிக்கொள்வார் என நம்புவோம்.

படத்தில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய மற்ற இரு கேரக்டர்கள் பாரதிராஜாவும், விக்ராந்தும். தாவணிக்கனவுகள் படத்தில் பாக்கியராஜின் நடிப்பைப் பார்த்துக் கண்கள் விரிய இயக்குனர் இமயம் ஒரு ரியாக்சன் கொடுப்பார் பாருங்கள். செம காமெடியாக இருக்கும். இவர் எப்படி மற்றவர்களை நடிக்க வைக்கிறார் என்று ஆச்சர்யப்பட்டுப் போனேன். ஆனால் அவருக்குள் படிமங்களாகப் புதைந்திருந்த நடிப்புத்திறமையை இந்தப்படத்தில் சுரண்டி எடுத்திருக்கிறார் சுசீந்திரன். "எதாவது பண்ணனும்டா.." என்று அர்த்த ராத்திரியில் நண்பனின் வீட்டுக்கதவைத் தட்டி தன் ஆற்றாமையை வெளிப்படுத்தும்போது உண்மையிலேயே நடிப்புச்சிகரமாக மிளிர்கிறார் இயக்குனர் இமயம். விக்கிராந்தும் ஹீரோயிசம் காட்டாமல் இதுபோல சின்னச்சின்ன கேரக்டர்களில் நடித்தாலே போதும். இன்னொரு விக்ரமாக உருவெடுக்கலாம்.

முதல் படத்தில் மட்டும் தன் முழுத்திறமையைக் காட்டிவிட்டு அடுத்தடுத்த படங்களில் சொதப்பும் சமகால இயக்குனர்களில் சுசீந்திரன் வித்தியாசமானவர். அவரின் வெற்றிப்பயணம் இந்த வருடமும் தொடரட்டும்.
 

6.மதயானைக் கூட்டம்

 
துரையைக் களமாகக் கொண்ட படங்கள் எல்லாமே தமிழ்ச் சினிமாவில் தனித்துவமான முத்திரையைப் பதித்திருக்கிறது. மதயானைக் கூட்டமும் அவ்வகைப் படைப்பே. மதுரையைக் காட்டி விட்டு சாதிப் பெருமையைப் பேசாமலிருந்தால் எப்படி..?

ஆனால் கவுண்டர் சாதிப்பெருமைப் பேசிய ஆர்.வி. உதயகுமார், கே.எஸ்.ரவிக்குமார், தேவர் பெருமைப் பேசிய மனோஜ்குமார், பாரதிராஜா போன்றோர்களின் படைப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது மதயானைக் கூட்டம்.

ஆண்ட பரம்பரை என சொல்லிக்கொள்பவர்களின் சாதிப்பெருமையை உயர்த்திப் பிடிக்க, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அவர்கள்முன் கைகட்டி,வாய்ப்பொத்தி,காலனி மற்றும் மேல் சட்டை அணியாமல், கூழைக் கும்பிடுப் போடும் அடிமைகளாகக் காட்சிப்படுத்தப்பட்டு வந்தனர். தமிழ் சினிமாக் கட்டமைத்து வைத்திருந்த அந்த டெம்பிளேட் வடிவமைப்பை முதலில் உடைத்தெறிந்தது தேவர் மகன். அந்த ஆண்டச் சாதிக்குள்ளேயிருக்கிற அறியாமையையும், அர்த்தமற்ற சாதிப்பெருமிதத்தையும்,காட்டுமிராண்டித்தனமான வன்முறையையும்,அடியாள் கலாச்சாரத்தின் அடிப்படையையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது அப்படம். தவிரவும், அப்படத்தில் விளிம்புநிலை மக்களிலிருந்து பஞ்சாயத்துத் தலைவர் வரை ஒரே சமூகத்தைச்சார்ந்த மக்களாகக் காட்டியது கமலின் சாமர்த்தியம்.

கதைக்கருவைப் பொறுத்தவரையில் தேவர் மகனுக்கு மிக அருகில் பயணிக்கிறது மதயானைக் கூட்டம். இன்னமும் அச்சமூகத்தில் சாதி வெறிப்பிடித்த, மூடர்க் கூடங்களாக வாழும் ஒரு கூட்டத்தைப் பற்றிய கதைதான் மதயானைக் கூட்டம். ஆனால் கதையை முடித்த விதத்தில்தான் பெரும் ஓட்டை விழுந்துவிட்டது.

ஒரு கலவரம் நடைபெறுகிறது. பலர் சாகிறார்கள் என வைத்துக்கொள்வோம். கலவரத்தின் மூலக் காரணம், அதன் விளைவு, எதிர்காலத்தில் கலவரம் நடைபெறாமல் தடுக்க முன் யோசனைகள் என்று அலசும் போதுதான் அது முழுமையடைகிறது. மாறாக, இவர்கள் அப்படித்தான் அடித்துக்கொள்வார்கள் என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப்போவது எப்படித் தீர்வுக்கான முறையாகும்....? அந்த விதத்தில் படம் முடிந்து வெளிவரும்போது ஒரு டாக்குமெண்டரியான அனுபவத்தை உண்டுபண்ணியது படத்தின் மிகப்பெரிய சறுக்கல்..

அதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், கடந்த வருடத்தில் கடைசியில் வந்தாலும் முக்கியமான இடத்தைப் பெறுகிறது மதயானைக் கூட்டம். இப்படியொரு கதையைத் திரையில் வடித்த தயாரிப்பாளர் ஜி.வி. பிரகாஷின் துணிச்சலுக்குப் பாராட்டுகள்.
 

5.விஸ்வரூபம்...

 
லக நாயகனின் உச்சபட்ச படைப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும் ஒட்டு மொத்த உழைப்பிற்காக வெகுவாகப் பாராட்டலாம். ' வேறு தேசம் நோக்கிய நகரல்' இப்படத்திற்கு அதிக பட்ச விளம்பரத்தைத் தேடிக்கொடுத்தது. என்றாலும் அக்கசப்பான சம்பவங்கள், திரைப்படங்கள் சமகால சமூகப் பிரக்ஞை கொண்டதொரு படைப்பாக இருக்கவேண்டும் என்கிற பார்வையை மக்களிடம் விதைத்தது.

படைப்பு ரீதியாகப் பார்த்தால் ஹாலிவுட்டின் நேர்த்திக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை விஸ்வரூபம். ஆனால் தர்க்க ரீதியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குச் சப்பைக்கட்டுக் கட்டியதோடு, சிறுபான்மை மக்களின் ஒரு பகுதியினரை தீவிரவாதியாகக் காட்சிப் படுத்தியது இப்படம்.

ஒரு காட்சியின் நம்பகத்தன்மையைக் கூட்ட , அதை மென்மேலும் மெருகூட்டி தத்ரூபமாகப் படைப்பதில் கலைஞானி கமல்ஹாசன் ஒரு விற்பன்னர் என்பதை உலகம் அறியும். அதனால்தான் என்னவோ அக்காட்சிகளின் வீரியத்தன்மை சில நேரங்களில் அவருக்கு எதிராகவே திரும்பிவிடுகிறது. தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்கள் என்கிற தட்டையான சிந்தனையை ஏற்கனவே திரையிலகில் பலர் விதைத்து விட்டுப் போனாலும், கமல் சொல்லும்போது அதன் வீச்சு வேறுவித சிந்தனையைத் தூண்டுகிறது. அதுதான் கமலின் பலமும் பலவீனமும்.

மன்மத அம்பு என்கிற மகா மொக்கைக்குப் பிறகு வந்ததால் கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, வியாபார ரீதியாக கமலுக்கும் முழுத் திருப்தியளித்த படம்.
 
4.மூடர் கூடம்...

 

டந்த வருடம் தமிழ்ச் சினிமாவில் நடந்த அற்புதங்களில் இதுவும் ஒன்று. பிளாக் காமெடி என்ற வகைமைக்குள் வரும் படங்கள் தமிழ் சினிமாவில் அவ்வப்போது தலைகாட்டுவதுண்டு. சூது கவ்வும் படமும் அவ்வகையே. சமூகத்தின் புறக்கணிப்பால் நேர்ந்த வலியின் உச்சம் இளைய சமுதாயத்தை எப்படித் தடம் மாறச்செய்கிறது என்பதை அபத்த நகைச்சுவையின் மூலம் தோலுரித்துக் காட்டிய வகையில் தமிழ் சினிமாவின் கோபுரக் கதவைப் பலமாகத் தட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் நவீன்.

Attack The Gas Station என்ற கொரியப் படத்தின் தழுவல் என்றாலும் தமிழ் வெகுஜன சினிமா பார்வையாளனின் ரசனையின் உச்சமாக மறு உருவாக்கம் செய்திருக்கிறார் நவீன். சமகாலக் கலாச்சார மீறல்களையும் சமூக அவலங்களையும் தன் நேர்த்தியான வசனங்களின் மூலம் நெற்றிப்பொட்டில் அடித்தது போல் நவீன் சொல்லியது படத்தின் மிகப்பெரிய பிளஸ். ஓவியாவின் காதலனிடம் சென்ட்ராயன் பேசும் அந்தப் பன்ச் ஒன்றுபோதும் நவீனின் நவீன யுகத்தின் மீதான அறச்சீற்றத்திற்கு...

பின்புல சுவாரஸ்யத்தை அவிழ்க்கிறேன் என்று வீட்டு நாய் வரைக்கும் ஃபிளாஷ்பேக் வைத்தது கொஞ்சம் புதுமை என்றாலும் எந்த நேரத்தில் யாருக்கு ஃபிளாஷ்பேக் வரப்போகிறதோ என்ற அச்ச உணர்வைத் தூண்டிக் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான். மற்றபடி சில CLICHE வகைக் காட்சிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், தமிழ்த் திரையுலகம் கண்ட SPOOF வகைத் திரைப்படங்களின் திரைக்கதை வடிவமைப்பில் மூடர்கூடம் ஓர் உச்சம்.

3.விடியும் முன்...

 
ரண்ய காண்டம் படத்திற்குப் பிறகு அழுத்தமான, ரசிகனின் ஆழ்மனதை அசைத்துப்பார்க்ககூடிய வகையில், உலகத்தரத்தை உரசிச்செல்கிற எந்தவொரு படைப்பும் தமிழில் வரவில்லையே என்ற கலைத்தாகத்தைப் போக்கிய படம் விடியும் முன். ஆனால் ஆங்கிலப்படத்தின்(London to Brighton ) தழுவல் என்ற ஒற்றைப் புள்ளியில் ஆரண்ய காண்டத்திற்கு ஒரு படி கீழ்.

படத்தின் அசுரபலம் திரைக்கதையும் பின்னணி இசையும். ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் உலகத்தரம். அடுத்தடுத்து என்ன நிகழப்போகிறது என்பதைக் கணிக்க முடியாதது மட்டுமல்ல, இறுதிக் காட்சிவரை படத்தின் கதையை யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் திரில்லர். இந்தப் படத்திற்காக நிறைய வாய்ப்பை இழந்தாராம் பூஜா. காரணமில்லாமல் இல்லை. அவர் சினிமா கேரியரில் இது மணிமகுடம். பூஜாவின் முந்தைய படங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் எனக்கு இன்னொரு 'பசி' ஷோபாவாகத் தெரிந்தார்.

அசல் படைப்பில் வெறும் fucking என்ற இலக்கியப் பதத்தை வைத்து மொத்தவசனத்தையும் வடித்திருப்பார்கள். அந்தச் சிறுமி கூட சர்வ சாதாரணமாக அவ்வார்த்தையை உதிர்ப்பாள். நல்லவேளை தமிழில் அப்படியோர் விபரீத முயற்சி எடுக்கவில்லை. கமர்சியலுக்காக எந்த காம்ப்ரமைசும் செய்யாமல் எடுத்ததற்காகச் சிரம் தாழ்த்தி வாழ்த்தலாம் இயக்குனரை. 



"ரியும் பனிக்காடு...."  பரதேசி படத்தின் ஆதார ஸ்ருதி இது தான். 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களில் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ஒரே படம் என நினைக்கிறேன்.

ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் நாம் அடிமைப்பட்டு, அடங்கியொடுங்கி வாழ்ந்த காலகட்டமான 1930-ல், ஆனைமலை தேயிலைக் காடுகளில் நடந்த வெவ்வேறு கொடுஞ்சம்பவங்களைத் தொகுத்துப் பின்னிப் பிணைத்து  ரெட் டீ( RED  TEA ) என்ற தலைப்பில் பி.எச்.டேனியல் என்பவர் நாவலாக எழுதியிருந்தார். பல தேயிலைக்காடுகளில் எழுத்தராகப் பணிபுரிந்த அவர், அந்தக் காலகட்டத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த பலபேரை பேட்டிக் கண்டு இந்த நாவலை வடிவமைத்திருக்கிறார். பிற்பாடு, இது தமிழில் இரா.முருகவேல் என்பவரால் 'எரியும் பனிக்காடு' என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

இந்த நாவலைத்தான் பாலா, பரதேசியாக உருமாற்றம் செய்ய முனைந்திருக்கிறார். எரியும் பனிக்காடு நாவலை முழுமையாக வாசித்தவர்களுக்கு இந்தப்படம் முழுத் திருப்தி அளிக்காமல் போயிருக்கலாம். ஆனால் பாலா தேர்ந்தெடுத்த கதைத்தளமும், கதைக்களமும் தமிழ் சினிமாவை வேறொரு தளத்திற்கு நகர்த்திச்செல்லும் அற்புதமான முயற்சி. நாவலை முழுமையாக உள்வாங்காமல் எடுத்தது , அந்த நாவலின் நாயகனும் அதை எழுதியவருமான பி. எச். டேனியல் கேரக்டரை காமெடியன் போல் படைத்தது, மத ரீதியான விசயங்களை தேவையில்லாமல் திணித்தது போன்ற எதிர்மறை விமர்சனங்கள் நிறைய வந்தாலும், பாலாவின் கிரீடத்தில் பரதேசியும் ஒரு வைரக்கல் என்பதில் சந்தேகமில்லை.
 
1.ஓநாயும் ஆட்டுக்குட்டியும்..


சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதைத் தன் நேர்த்தியான இயக்கத் திறமையின் மூலம் நிரூபித்த மகேந்திரன், பாலு மகேந்திரா, 'பசி' துரை, மணிரத்னம் போன்ற ஆளுமைகளின் வரிசையில் மிஸ்கினுக்கும் ஓரிடமுண்டு என்பதைத் தெளிவாக உணர்த்திய படைப்பு ஓநாயும் ஆட்டுக்குட்டியும். மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை. ஒருவார காலத்திற்கு மேல் என்னுள் ஏதோ இனம்புரியாத தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பு.

கதை சொன்ன களமா அல்லது காட்சிப்படுத்திய விதமா அல்லது பின்னியெடுத்த பின்னணி இசையா அல்லது கதாபாத்திரப் படைப்பா அல்லது அக்கதாபாத்திரங்களின் ஆர்பாட்டமில்லாத எதார்த்த நடிப்பா.... எதுவென்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் என்னைப் பொறுத்த வரையில் 2003 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த படைப்பு  ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.