Friday, 29 May 2015

மாஸ்- டம்மி பீஸ். தமிழ்சினிமாவில் முன்பெல்லாம் ஹீரோக்களை  "ஏ..ய்.."  என்று கத்தவிட்டு நம்மை பீதியாக்குவார்கள். அதற்குப் பதில் தற்போது பேயைக் காட்டி அலறவைக்கிறார்கள்.

தமிழ்சினிமாவின் பாதை ஹாரர் வகைப் படங்களை நோக்கி நகர்வதாகத் தெரிகிறது. சமீபத்திய சிறிய பட்ஜெட் படங்கள் பெரும்பாலும் பேய்ப் படங்களாக வந்து ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிற நிலையில், சூர்யா போன்ற பெரிய ஹீரோக்களும் அதே பார்முலாவை தொடவேண்டிய சூழலுக்கு தமிழ் சினிமா தள்ளப்பட்டிருப்பது அதைத் தெளிவாக உணர்த்துகிறது.

சத்தியமா இதாங்க கதை..

திருட்டுத் தொழில் செய்யும் சூர்யாவும், பிரேம்ஜியும் ஒரு விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். அதில் பிரேம்ஜி இறந்துவிட, சூர்யா மட்டும் உயிர்தப்புகிறார். விபத்தில் சூர்யாவுக்கு பலமாக அடிபட்டதால் அவருக்கு பேய்களை மனித உருவில் காணும் அபூர்வ சக்தி கிடைக்கிறது. இறந்துபோன பிரேம்ஜி பேயாக சூர்யாவுடன் நட்பை தொடர்கிறார்.

சூர்யாவின் அபூர்வ சக்தியை அறிந்துகொண்ட சில பேய்கள், தங்களது நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றுவதற்காக சூர்யாவுடன் நண்பர்களாக இணைகின்றன. சூர்யா அவைகளின் ஆசைகளை நிறைவேற்றாமல் அவைகளை வைத்து பேய் நடமாட்டம் உள்ளதாக சொல்லி சிலரிடமிருந்து பணம் கறக்கும் வேளையில் இறங்குகிறார்.

ஒரு வீட்டிற்கு பேய் ஓட்டுவதற்காக சூர்யா செல்லும்போது, தனது பேய் நண்பர்கள் அல்லாத வேறு ஒரு பேய் அங்கு இருப்பதை அறிகிறார். அது சூர்யாவின் தோற்றத்தில் இருக்கிறது. அதற்கும் நிறைவேறாத சில ஆசைகள் இருக்கிறது. அது சூர்யாவைப் பயன்படுத்தி இருவரை கொலை செய்கிறது.

தன்னை கொலை செய்யப் பயன்படுத்தியதை உணர்ந்த சூர்யா, அவர் உருவத்தில் இருந்த அந்தப் பேயை கடுமையாக திட்டி வெளியேற்றிவிடுகிறார். பிறகுதான் அது சூர்யாவின் 'அப்பா பேய் ' என்பது அவருக்குத் தெரிகிறது.

தன் குடும்பத்தைக் கொலை செய்த ஒரு கும்பலைப் பழிதீர்க்கத்தான் தனது அப்பா, பேயாக தன்னை அணுகி உதவி கேட்டிருக்கிறார் என்பதை பிறகு தெரிந்து கொண்ட சூர்யா, மீதமிருக்கும் அந்தக் கும்பலை அழிப்பதே மாஸ் படத்தில் கதை ..

படம் எப்படி இருக்குன்னா ..

வழக்கமான ஹாரர் படங்களை போல் இல்லாமல் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக இதுபோன்ற கதையை வெங்கட் பிரபு தேர்ந்தெடுத்திருக்கலாம். ஏனோ அவரது வித்தியாசமான முயற்சி பார்வையாளனுக்கு எந்தவித புதிய அனுபவத்தையும், மனவெழுச்சியையும் கொடுக்காமல் போனதுதான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.

அஞ்சான் படத்தில் வாயில் குச்சியோடு வித்தியாசம் காட்டிய(!) சூர்யா இதில் காதில் ஹூக்கோடு வருகிறார். சூர்யா நடிப்பில் இரண்டு படங்களுக்கும் அதிகபட்ச வித்தியாசம் என்றால் அது ஒன்றுதான் .

இதுவரை பிரேம்ஜியை பிடிக்காதவர்களுக்கு இந்தப் படத்தைப் பார்த்த பிறகு அவரைப் பிடிக்கும் என பேட்டி கொடுத்திருந்தார் வெங்கட்பிரபு. ஆனால் இதுவரை வந்த இருவரது காம்பினேஷனில் இதுதான் மொக்கை. படம் முழுக்க சூர்யாவுடன் வருகிறார். அவ்வளவுதான். இறுதி சண்டைகாட்சியில் வில்லனின் அடியாள் ஒருவனை "எவ்வளவோ செஞ்சிட்டோம்.. இது கூட செய்யமாட்டோமா"  என சொல்ல வைக்கும் காட்சியில் மட்டும் சிரிக்க வைக்கிறார்.

நிறைவேறாத ஆசைகளுடன் வரும் பேய்களாக கருணாஸ், ஸ்ரீமன், சண்முகசுந்தரம் இன்னும் சிலர். இவர்களை வைத்து செமையாக காமெடி செய்திருக்கலாம். ஆனால் காமெடி என்கிற பெயரில் கடுப்பேற்றுகிறார்கள்.

போலிசாக வரும் பார்த்திபன் சில காட்சிகளில் கொஞ்சம் கலகலப்பூட்டுகிறார். ஆனால் பார்த்திபனின் இயல்பான டைமிங் காமெடி இதில் மிஸ்ஸிங்.கண்ணாடியை பிடிங்கிவிட்டு "நான் எதுவுமோ புடுங்கவில்லை என்று யாரும் சொல்லிவிடக் கூடாது பாருங்க..." போன்று சில இடங்களில் தனித்துத் தெரிகிறார். அப்பா சூர்யாவுக்கு ஜோடியாக வரும் பிரணிதா செம கியூட்.  நர்சாக வரும் நயன்தாரா ஏனோ அவ்வளவாக மனதில் நிற்கவில்லை.

எங்கேயும் எப்போதும் படத்தில் விபத்தில் இறந்துபோன ஜெய்-யை இதில் பேயாக காண்பித்து கண்தானம் செய்வதுபோல காட்டியிருப்பது அக்மார்க் வெங்கட்பிரபு பன்ச்..!

அப்பா சூர்யாவாக வருபவர் ஈழப்பின்னணியை கொண்டவராக காண்பித்திருக்கிறார்கள்.. ரசிகர்களிடம் கைதட்டல் வாக்குவதற்காக இன உணர்ச்சியை தூண்டிவிடும் சில வசனங்களையும் கட்டாயத் திணிப்பு செய்திருக்கிறார்கள். ஏற்கனவே இதை பலர் முயன்றுவிட்டதால் உணர்வுக்குப் பதில் உறுத்தல்தான் மிஞ்சுகிறது . அதிலும் அப்பா சூர்யா பேசும் இலங்கைத் தமிழ் இருக்கே..!.   ' எனது  ' என்பதற்குப் பதில் 'எண்ட' என மாற்றிவிட்டால் அது ஈழத் தமிழாகிவிடுமா..?  தெனாலி படத்தில் கமல் பேசியதையே 'ஒரிஜினல் ஈழத் தமிழ் ' இல்லை என்று கடுமையான விமர்சனம் செய்தார்கள். இது எல்லாம் ஒரு பிழையா என்று கேட்க வேண்டாம். இதிலாவது கவனம் செலுத்தியிருக்கலாமே என்கிற சிறு ஆதங்கம்தான்.

பேய் படங்கள் என்றாலே லாஜிக் பார்க்கக் கூடாது என்பார்கள். பெரிய ஓட்டைகள் இருக்கும் போது குறிப்பிட்டுதானே ஆகவேண்டும். மற்ற படங்களில் பேய்களை அதிசக்திவாய்ந்த அமானுஷ்யங்களாகக் காண்பித்திருப்பார்கள். இதில் பேய்களால் பார்க்க முடியும், பேசமுடியும், ஆனால் ஒரு பொருளை எடுக்கவோ  அசைக்கவோ அல்லது தொடவோ முடியாது என்பது போல காண்பிக்கிறார்கள். அதனால்தான் தந்தை 'சூர்யா பேய்' தன் குடும்பத்தைக் கொன்றவர்களை பழிதீர்க்க மானிடனான சூர்யாவை அணுகுகிறது. மற்ற பேய்களும் சூர்யாவை நாடி வருவதற்கு இதுதான் காரணம். ஆனால் இதே பேய்களால் வீட்டில் உள்ள பொருட்களை தூக்கியடிக்க முடிகிறது, நாற்காலி, டேபிளை எல்லாம் நகர்த்த முடிகிறது. இறுதியில் சண்டையெல்லாம் போடமுடிகிறதே.. அது எப்படி..?

ஒரு கட்டிலையே அந்தரங்கத்தில் தூக்கி நிறுத்த முடிகிறது.. இறுதிக் காட்சியில் கிரேனை இயக்க முடிகிறது.. இவ்வளவு செய்யும் தந்தை சூர்யா பேயால் அவர்களை பழிவாங்க முடியாதா என்ன..?.

அது சரி வெங்கட் பிரபு சார்.. ,  ஏ.ஆர்.முருகதாஸ், கே.வி.ஆனந்த், லிங்குசாமி நீங்களெல்லாம் திட்டம் போட்டுத்தான் இது மாதிரி மொக்கை கதையாகத் தேர்ந்தெடுத்து சூர்யாவை நடிக்க வைக்கிறீங்களா..? கொஞ்சம் கூட சஸ்பென்ஸ், திரில், டிவிஸ்ட் எதுவுமே இல்லாத ஒரு ஹாரர் படத்தை எடுப்பதற்குத்தான் இவ்வளவு நாட்கள் ஆச்சா...?

டிமாண்டி காலனி, டார்லிங் போன்ற எதிர்பார்ப்பில்லாத சிறிய பட்ஜெட் படங்கள் கூட ஹாரர்+காமெடியில் செம கலக்கு கலக்கும் போது சூர்யா போன்ற மிகப்பெரிய நடிகரை வைத்து பக்கா மாஸ்-ஸா எடுக்க வேண்டிய ஒரு படத்தை இப்படி டம்மி பீஸாக்கிடீங்களே..

படம் பார்க்களாங்களா..?

சிலர்  வேண்டுமானால் படம் 'பக்கா மாஸ்' எனலாம்.எனக்கு படம் ' மொக்க பீஸ் ' ஆகத்தான் தெரிந்தது. -------------------------------------------------------XXXXXXXXXXX -----------------------------------------------

30 comments:

 1. பாஸ் உங்களுக்கு அஜித் படம் மட்டும் தான் பிடிக்கும் தயவு செய்து அஜித் படத்துக்கு மட்டும் விமர்சனம் எழுதுங்க மத்த நடிகர்கள் நடிக்கிர படத்துக்கு விமர்சனம் எண்ட பெயரில உளறாதீங்க ப்ளீஸ்.

  ReplyDelete
  Replies
  1. விமர்சனம் என்று வந்தால் எல்லா படங்களும் ஒரே தட்டில்தான் வைத்துப் பார்க்கப்படும்.. தவிர இது எனது பார்வை.. உங்களுக்குப் பிடித்திருந்தால் அதற்கு நான் எதுவும் செய்யமுடியாது.

   Delete
 2. வணக்கம்
  விமர்சனத்தை படித்த போது பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. படத்தை கிழிச்சு தொங்க விட்டிருக்காரு, உங்களுக்கு பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதா ரூபன்?

   Delete
 3. Replies
  1. ஹா..ஹா... அதிகம் எதிர்பார்த்துவிட்டேன்..

   Delete
 4. இந்தப் படத்துக்குத்தான் இவ்வளவு பில்டப்பா?

  ReplyDelete
  Replies

  1. எதிர்பார்ப்போடு போனதால் ஏமாற்றம் போல.. நன்றி தம்பி

   Delete
 5. படம் நல்லாயிருக்கோ இல்லையோ, உங்க விமர்சனம் நல்லாவே வரலை. ஏதோ யாரையோ பழிவாங்க, முதல் காட்சி, முதல் நாள் ஷோ பார்த்துட்டு வந்து ரைம் ஆகாத படி டைட்டில்ல டம்மி பீஸுனு ஒரு டைட்டில கொடுத்து பெருசா சாதிச்சுட்டீங்க. உங்களுக்கு நீங்களே ஏதாவது சிறப்பான விமர்சகர்னு ஒரு அவாடு கொடுத்துக் கொள்ளவும்.

  எல்லாம் சரி, அதென்ன கடைசில உங்க விமர்சனத்து மேலேயே நம்பிக்கை இல்லாமல் இப்படி ஒரு ஸ்டேட்டுமெண்ட்டு???

  ***சிலர் வேண்டுமானால் படம் 'பக்கா மாஸ்' எனலாம்.எனக்கு படம் ' மொக்க பீஸ் ' ஆகத்தான் தெரிந்தது.***

  நான் பொதுவாக எனக்கு பிடிக்காத நடிகர்கள் இயக்குனர்கள் படம்லாம் பார்ப்பதில்லை. நீங்க "போயி பாருங்க" விக்ரம் கிழிகிழினு கிசிச்சு இருக்காருனு ஊருப்பயளுகளை எல்லாம் கூட்டஇ கூவிக் கூவி கமர்சியல் கொடுத்த "ஐ"கூட பார்க்கலைனா பார்த்துக்கோங்க. அனேகமாக "மாஸ்" பார்ப்பேன்னு நினைக்கிறேன். உங்க மேலே அம்பூட்டு (அவ)நம்பிக்கை!

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. ///படம் நல்லாயிருக்கோ இல்லையோ, உங்க விமர்சனம் நல்லாவே வரலை. ஏதோ யாரையோ பழிவாங்க, //

   பாஸ். நான் ஏதோ பெரிய சினிமா விமர்சகர் மாதிரி பில்டப் கொடுக்கிறீங்க.. நானே ஏதோ பொழுது போகாம இருக்கும் நேரத்தில மாசத்துக்கு ஒரு படம் பார்த்துட்டு என் பிளாக்குல கிறுக்கி வைக்கிறேன்..


   //உங்க விமர்சனம் நல்லாவே வரலை//

   படமே நல்லா வரல... இதுல விமர்சனம் மட்டும் நல்லா இருக்கணும்னு எப்படி எதிர் பாக்குறீங்க ..

   Delete
  3. //எல்லாம் சரி, அதென்ன கடைசில உங்க விமர்சனத்து மேலேயே நம்பிக்கை இல்லாமல் இப்படி ஒரு ஸ்டேட்டுமெண்ட்டு???

   ***சிலர் வேண்டுமானால் படம் 'பக்கா மாஸ்' எனலாம்.எனக்கு படம் ' மொக்க பீஸ் ' ஆகத்தான் தெரிந்தது.***//

   ஒரு படத்தை பொத்தாம் பொதுவாக நல்லா இருக்கு நல்லா இல்லை என சொல்லிவிட முடியாது. அதுவும்மிலாம இது FDFS வேற.. அதனால என் பார்வையில் இப்படி என முடித்தேன்.

   //நான் பொதுவாக எனக்கு பிடிக்காத நடிகர்கள் இயக்குனர்கள் படம்லாம் பார்ப்பதில்லை. நீங்க "போயி பாருங்க" விக்ரம் கிழிகிழினு கிசிச்சு இருக்காருனு ஊருப்பயளுகளை எல்லாம் கூட்டஇ கூவிக் கூவி கமர்சியல் கொடுத்த "ஐ"கூட பார்க்கலைனா பார்த்துக்கோங்க. அனேகமாக "மாஸ்" பார்ப்பேன்னு நினைக்கிறேன். உங்க மேலே அம்பூட்டு (அவ)நம்பிக்கை!//

   நான் ஏதோ கொஞ்சம் ஓவரா எழுதி விட்டேனோ என்கிற உறுத்தல் இருந்தது. பட் நீங்க படத்தை கண்டிப்பாக பார்பீங்க என சொன்னீங்க பாருங்க.. இப்போதான் மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. மிக்க நன்றி

   Delete
 6. உங்க விமர்சனம் நல்லா வரலைனு ஒரு -1 மதிப்பெண் கொடுத்துள்ளேன். நான் படம் நல்லாயிருக்கும்னு சொல்லவில்லை. விமர்சனம் தரமற்றதாக இருக்குனுதான் -1. பகுத்தறிவுவாதி நீங்க கோவிச்சுக்க மாட்டீங்கனு எனக்குத் தெரியும். :)

  ReplyDelete
  Replies
  1. என் பிளாக்கை தேடி வந்து, நேரம் எடுத்து என் விமர்சனத்தையும் படித்து, மைனஸோ பிளஸ்ஸோ ஏதோ ஒரு மார்க் போட தோணுது பாத்தீங்களா.. அந்த மனசு இருக்கு பாருங்க... அதாங்க கடவுள் :-)

   Delete
 7. Ipo ne elam review ezhudhalanu yaaru azhudha..summa oru padatha paathutu vandhu computer thookitu review ezhudha vandhudraanunga..
  unaku elam vela vetti ilaya..avlo mokka piece padatha ukkandhu paathutu vandhu adhuku review vera ezhudhitu iruka..apo ne avlo peria mokkaya irupa..

  ReplyDelete
  Replies
  1. //Ipo ne elam review ezhudhalanu yaaru azhudha..//

   நீங்க கமென்ட் போடலன்னு யார் பாஸ் அழுதா..?

   //summa oru padatha paathutu vandhu computer thookitu review ezhudha vandhudraanunga..
   unaku elam vela vetti ilaya..avlo mokka piece padatha ukkandhu paathutu vandhu adhuku review vera ezhudhitu iruka..apo ne avlo peria mokkaya irupa..//

   கரெக்டுதான்.. ஒரு மொக்கை படத்தை மூணு மணி நேரம் உக்கார்த்து பார்த்திருக்கேன் பாருங்க.. அதுக்கு எவ்வளவு பொறுமை வேணும்.. மன தைரியம் வேணும். அந்த கஷ்டம் எல்லாம் FDFS பார்க்கிறவனுக்குத்தான் தெரியும்

   Delete
 8. Yenda mudal show pakka vendiyathu. Negative review ezhutha vendiyathu. Ithellam oru pozhappa unnakku

  ReplyDelete
 9. LInga padathukkum ithathaane seethe?

  ReplyDelete
  Replies
  1. இன்று ஊடகங்களின் விமர்சனங்களைத் தவிர்த்து மற்ற விமர்சனங்கள் எல்லாமே அப்படித்தானே வருகிறது.

   Delete
 10. செம மாஸ் விமர்சனம் தலைவா :-) என்ன எடுக்கனும்னு நினைச்சு என்ன எடுத்து இருக்காங்கன்னு ஒன்னும் புரியல.. இதுக்கு டீமாண்டி காலனி எவ்வளவோ பரவால்ல...

  ReplyDelete
  Replies
  1. இந்தக் கொடுமையை நீங்களும் அனுபவிச்சிடீங்களா சீனு.. :-)

   Delete
 11. இப்போதெல்லாம் படம் பார்ப்பதைவிட விமர்சனத்தை படித்தாலே போதும் என்று ஆகிவிட்டது...

  சண்டமாருதத்துக்கான உங்கள் விமர்சனத்தில் நகைச்சுவை அலை புரண்டு ஓடியது..அந்த படத்தை அதன் பிறகு பார்க்கவேயில்லை... அப்படியொரு விமர்சனத்தை எதிர்பார்தேன்.. கொஞ்சம் சுவை குறைதான் என்றாலும்... மொக்கை படத்துக்கு இதுபோதும்..  நான் இதுவரைக்கும் வெங்கட்பிரபுவின் எந்த படத்தையும் திரையரங்கு சென்று பார்த்ததில்லை.. இதையும் பார்க்கப் போவதில்லை...

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாஸ்.. நல்ல முடிவு.. :-)

   Delete
 12. அப்போ வெங்கட்டும் கத்துக்கிட்ட மொத்த வித்தையும் எறக்கிட்டாப்ல போல.... அடுத்த படத்துக்கு இனி என்ன செயவாப்லன்னே :-))

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நாட்களா ஆளையே காணோமே வ.சு... அவருக்கு தெரிஞ்ச வித்தையெல்லாம் சென்னை-28 யே இறக்கி வச்சிட்டாரு... அந்த குரூப்பை வச்சி கொஞ்சம் தமாஷ் காட்டிட்டு இருந்தாரு.. இப்போ பேய் படம் எடுத்து பேய்க்கு உண்டான மரியாதையே போக வச்சிட்டாரு.. :-)

   Delete
 13. பிசாசுகுட்டி4 June 2015 at 20:29

  ஹலோ கோஸ்ட் என்ற கொரியன் படத்தின் காப்பி சாரே.. யூ டியுபிலேயே இருக்கு..பாருங்க சாரே

  ReplyDelete
  Replies
  1. இரண்டு ஆங்கிலப் படங்களின் காப்பின்னு சொன்னாங்க.. கொரியன் படத்தை வேற சுட்டு இருக்காரா..

   Delete