Tuesday, 24 April 2012

டிவி சீரியலும் கில்மா படக்காலண்டரும் -ஏன் இப்படி இருக்கு?(சிதறல்கள்-6) வானம் வசப்படும்.....

       சிங்கப்பூர் ஒலி 96.8 FM வானொலியில் சில  வருடங்களுக்கு முன் ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சி.ஒவ்வொரு வாரமும் ஒரு சாதனையாளரைப் பற்றி அழகாகத் தொகுத்து வழங்குவார்கள்.அவர்கள் பேசும் நடையும்,துல்லியமாகத் தரும் தகவல்களும்,பின்னணியில் வரும் இசையும் அப்படியே நம்மைக் கட்டிப் போட்டு விடும்.ஒரு முறையாவது இதைக் கேட்டுப் பாருங்கள்... 

--------------------------------------------------------------------------

 நான் ஏன் இப்படியிருக்கேன்?

        பதிவுலகில எங்கிருந்துதான் ரொம்ப கேஷுவலான தலைப்பெல்லாம் புடிக்கிறாங்களோ தெரியில.சொல்ல வந்த விசயங்கள விட அதன் தலைப்பு தான் மனசில பசைப்போட்டு ஒட்டிக்கிது. ஆனா என்ன....சில நேரங்களில பின் விளைவையும் இது ஏற்படுத்திடுது.கொஞ்ச நாட்களுக்கு முன் நண்பர் தமிழ்வாசி பிரகாஷின் பைக் ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு? படிச்சுட்டு,ரெண்டு நாளைக்கு எதப்பாத்தாலும் இந்த கிச்சன் ஏன் இப்படியிருக்கு?, இந்த பாத்ரூம் ஏன் இப்படி இருக்கு?,இந்த டிவி-ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு?-னு கேக்க ஆரம்பிச்சுட்டேன்.நல்லாத்தான இருந்தாரு இந்த மனுஷனுக்கு என்ன ஆச்சுன்னு வீட்ல வேற சந்தேகப்பட ஆரம்பிச்சுட்டாங்க. அப்பறம் கொஞ்ச நாட்கள்ல அது சரியாயிடுச்சு. இப்படித்தான் நேத்திக்கு  நைட் இன்னொரு பதிவரோட பதிவப் படிச்சி அப்படியே லயிச்சி போயிட்டேன். இன்னிக்கி காலையில ஆபிஸ் மீட்டிங்க்ல ப்ராஜெக்ட் விசயமா பேசிக்கிட்டு இருக்கும் போது எங்க பாஸ் தோ கேட்க,எப்படித்தான் அந்த வார்த்தையை சொன்னேனோ தெரியல.பாஸே குழம்பிப் போய் அவர் முகமே கேள்விக்குறி மாதிரி வளைஞ்சி போச்சி. நல்லவேளை அவருக்கு அர்த்தம் புரியாததால நான் தப்பிச்சேன். அப்படி ஒன்னும் தப்பா ஏதும் சொல்லிடலங்க..அவரு என்னைப் பார்த்து ஆச்சர்யமா, எப்படி உனக்கு இப்படி தோணிச்சினு கேட்டார்.அதுக்கு நான் சொன்ன பதில்.. ஹி.ஹி .'நானா யோசிச்சேன்'  
      

----------------------------------------------------------------------------------------------------------------
 இந்த டிவி சீரியல் எல்லாம் ஏன் இப்படி இருக்கு?


      வர வர இந்த டிவி சீரியலே பார்க்கப் பிடிக்கல.... பின்ன என்னங்க.. திடீர் திடீர்னு இவருக்குப் பதில்அவர்,அவருக்குப் பதில் இவர்னு ஆள மாத்திக்கிட்டே இருக்காங்க.ஒரு கன்டினியுட்டியே இருக்க மாட்டேங்குது.அதுவும் ரொம்ப முக்கியமான கேரக்டர்களை மாற்றும்போது கதையோட அழுத்தமே குறைந்து போயிடுது.

      சன் டிவியின்  தொடர்களிலே டாப்ல உள்ள தென்றல்-ல என்னப் பிரச்சனையோ தெரியில..இப்படித்தான் கொஞ்ச நாட்களா ஆள்மாறாட்ட வேலை நடக்குது.டிவி சீரியல் என்றாலே குறைந்தது ஒரு நாளைக்கு ரெண்டு பேராவது அழுகிற மாதிரி சீன் இருந்தே ஆகணும் என்கிற விதியை உடைச்ச ஒரு சில தொடர்களில் தென்றலுக்கும் தனி இடமுண்டு. "பெண்ணென்பவள் பூவில்லையே பூகம்பம் நேர்ந்திடும் வேளையிலே.." என்று பாடகர் கார்த்திக்கின் கணீர் குரல் இரவு ஒன்பது மணிக்கு ஒலிக்கும் போது,எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்து விட்டு, டிவியின் முன் உட்கார வைத்து விடுவது தென்றலின் தனிச்சிறப்பு. அப்படிப்பட்ட சீரியல்ல கொஞ்ச நாளைக்கு முன்னால் துளசியின் மாமியாராக நடித்த சாந்தி வில்லியம்-ஐ தூக்கிட்டு அவருக்குப் பதிலா 'துண்டு' கேரக்டர்ல நடித்த ஒரு நடிகையை போட்டிருக்காங்க.ஆனால் சாந்தி வில்லிமோட முக பாவனை, அதுவும் குத்திக்காட்டிப் பேசறப்போ நக்கலாக ஒரு சிரிப்பு சிரிப்பாங்க பாருங்க ..அந்த நடிப்பு யாருக்குமே வராது.மெட்டிஒலி நாடகத்திலேயே ஒரு டிபிகல் நடுத்தர குடும்பத்து மாமியாரா வாழ்ந்துக் காட்டியிருப்பாங்க.

       சரி இவங்கள விடுங்க...துளசியின் அம்மாவா நடிக்கிற ஐஸ்வர்யாவைத் தூக்கிட்டாங்க.இந்த நாடகத்தில இவங்களுக்கு கிட்டத்தட்ட வில்லி வேடம். துளசிக்கு இவங்கதான் அம்மான்னு தெரிய வருகிற நேரம்.துளசியோட ரியாக்சன் எப்படி இருக்கும், ஐஸ்வர்யாவை எப்படியெல்லாம் நாக்கைப் பிடிங்கிக்கிற மாதிரி கேள்வி கேட்கப்போறாங்க,அதுக்கு ஐஸ்வர்யாவோட ரியாக்சன் என்னவா இருக்கும்னு ஆவலோட எதிர்பார்த்துக்கிட்டு இருக்கிற நேரத்தில ஐஸ்வர்யாவுக்கு ஆப்பு வச்சுட்டாங்க.இதுல இன்னொரு கொடுமை என்னானா...இவங்களுக்குப் பதிலா இந்தக் கேரக்டர்ல நடிக்கிற சுதாசந்திரன். இவங்களைப் பார்த்தாலே பாவமா இருக்கு.அந்த வேடம் கொஞ்சம் கூட சூட் ஆகல.எனக்கு ஒரு டவுட்டு...பிற்பாடு,இதுதான் உன் அம்மா-னு துளசியோட  அப்பா,சுதாசந்திரனை நோக்கிக் கை காட்டும் போது,அய்யய்யோ இது எங்க அம்மா இல்ல.அவங்க இப்படி இருக்கமாட்டாங்க.ஐஸ்வர்யாதான் எங்க அம்மானு சொல்லிட்டா என்ன பன்றது? ச்சே....இதுக்குத்தான் ஓவரா சீரியல் பாக்கக் கூடாது. 

     இந்தக் கூத்து தென்றலில் மட்டுமல்ல...திருமதி செல்வத்திலும் இருக்கு. முதல்ல நந்தினிங்கிற கேரக்டர்ல ஒரு பொண்ணு நடிச்சது.பிற்பாட்டு இதைத் தூக்கிட்டு லதாராவ் வந்தாங்க.இப்ப லதாராவை தூக்கிட்டு  திரும்பவும் அதேப் பெண்.இதே மாதிரி நாதஸ்வரம்...மௌலியின் மூத்தப் பெண்ணை இதுவரை நான்கு தடவை மாற்றியாச்சு.ராசியில்லாத கேரக்டர் போல...

    இப்பெல்லாம் சீரியல்ல யாராச்சும் புதுசா வந்தாங்கன்னா,யாருக்குப் பதிலா இவங்கனு கேட்க வேண்டியிருக்கு. ச்சே....இந்த டிவி சீரியல் எல்லாம் ஏன் இப்படி இருக்கு?

---------------------------------------------------------------------------------------------------- 

இந்த பஸ் ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு?


       ஒரு வழியா விவேக் கண்ட கனவு நினைவாகிடும்னு நெனைக்கிறேன். பயப்படாதீங்க.இது சென்னையில உள்ள ஒரு பஸ் ஸ்டாண்ட்.சென்னையில நிறைய டிராபிக் ஜாம் ஆகுதாம்.அதனால மாநகராட்சியே இந்த பைபாஸ் வழிய திறந்து விட்டிருக்கு.உள்ளே டிராபிக் ஜாமே இல்லையாம்.இப்படிக்கா குதிச்சீங்கனா, எப்படிக்கா வேணும்னாலும் வெளிய வரலாமாம்.காலையில ஆபிசுக்கு போறவங்க இந்த ரூட்ட பயன்படுத்தினா கரக்ட் டைமுக்கு போயிடுலாம்னு பேசிக்கிறாங்க.என்ன ஒரு பிராப்ளம்னா ...மழைக் காலத்தில இது வழியாப் போகணும்னா நீச்சல் அடிக்கத் தெரிஞ்சிருக்கணும். ச்சே.. இந்த பஸ் ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு?

----------------------------------------------------x ----------------------------------------------------- 

சிங்கப்பூரும்  கில்மா பட காலண்டரும்.


         
  நான் சென்னையில வேலை பார்த்தப்போ நியூ இயர்  காம்ப்ளிமண்ட்ஸா  எங்க ஆபிசுக்கு நிறைய காலண்டர் வரும்.அதுல எல்லாமே சாமி படம்(நிஜ சாமிங்க..)அல்லது இயற்கைக் காட்சி சம்மந்தப்பட்ட படமாகத்தான் இருக்கும். ஆனால் சிங்கபூர்ல இது மாதிரி வர்ற காலண்டர் எல்லாம் அடல்ட்ஸ் ஒன்லி ரகமாத்தான் இருக்கும்.முக்கால் நிர்வாணத்தோடு பீச்சுல படுத்து போஸ் கொடுக்கிறது,அருவிக்குப் பக்கத்தில நின்னு மலையில சாஞ்சிகிட்டே போஸ் கொடுக்கிறது,இலை,செடி மறைவுல நின்னு பார்க்கிறதுனு நெறைய ஆங்கில்ல எடுத்த போட்டோக்கள் அதுல இருக்கும்.தாய்லாந்து,சீனா, இந்தோனேசியா,பிலிப்பைன்ஸ்-னு பாரபட்சம் பார்க்காம எல்லா நாட்டு பொண்ணுங்களோட போட்டோவும் இருக்கும்.இதுல...இந்தக் காலண்டர் எல்லோருடைய டேபிள் மேலேயும் இருக்கணும்னு கண்டிசன் வேற.சரி..இதுக்குப் பின்னாடி ஏதாவது கதை இருக்கானு கேட்டா,அப்படியேதும் இல்லைங்கிறாங்க.ஏன்னா...சைனாக்காரங்க எதற்கெடுத்தாலும் ஒரு கதை சொல்வாங்க. 

      போன வாரம் எங்க HR மேனேஜர் லீவு விசயமா பேசறுத்துக்காக என் டேபிளுக்கு வந்தாங்க.அவங்க ஒரு சைனா கேர்ள்.நான் என் டேபிள்ள இருந்த காலன்டர எடுத்து வச்சுக்கிட்டு அவங்களுக்கு தீவிரமா விளக்கிக்கிட்டு இருந்தேன்.அவங்களும் எல்லாத்தையும் பொறுமையாக் கேட்டுட்டு ஓகேனு சொல்லிட்டு போய்ட்டாங்க.அவங்க போனப்பின்னதான் பார்த்தேன் என் கைல இருந்தது 'அந்த மாதிரி' காலண்டர். அடச்சே..இந்த கன்றாவியத்தான் இவ்வளவு நேரமா விளக்கிகிட்டு இருந்தேனா..பாவம் அந்தப்புள்ள எவ்வளவு சங்கடப்பட்டிருக்கும்...  

   அதிருக்கட்டும்,இந்த மாதிரி காலண்டருக்கு பொட்டப் புள்ளைங்க மட்டும் தான் போஸ் கொடுக்கனுங்களா... ஏன் நாம கொடுக்கக்கூடாது? 

 ------------------------------------------------------------------------


3D  CORNER                                          காமாட்சி


 மனதை மட்டுமல்ல,கண்களை ஒருமுகப் படுத்தினால் கூட கடவுளைக் காணலாம்.
----------------------------------------------------((((((((((((((((((((((((())))))))))))))))))))))))------------------

18 comments:

 1. சிதறல்கள் சும்மா நச்சுனு செதுக்கி உள்ளீர்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பா.வணக்கம்.ரொம்ப நன்றி

   Delete
 2. //....இந்த டிவி சீரியல் எல்லாம் ஏன் இப்படி இருக்கு?//

  ஏன் சார் டிவி சீரியல் பார்க்குறீங்க...இப்படி பார்ப்பதால் தானே அவர்களும் அவுக இஷ்டத்துக்கு.... ஹிம்.

  ReplyDelete
  Replies
  1. ஹி..ஹி... என்ன பன்றது

   Delete
 3. //இந்த பஸ் ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு?//

  புதிய ஆட்சின்னு சொன்னாங்களே

  ReplyDelete
  Replies
  1. இன்னும் கொஞ்ச நாளில பஸ்ஸே இப்படித்தான் இருக்கும்

   Delete
 4. //அந்தப்புள்ள எவ்வளவு சங்கடப்பட்டிருக்கும்...//

  ரொம்பவே லயித்து போய் இருக்குமோ? என்னவோ?

  ReplyDelete
 5. //மனதை மட்டுமல்ல,கண்களை ஒருமுகப் படுத்தினால் கூட கடவுளைக் காணலாம்.//

  நிதர்சமான உண்மை

  ReplyDelete
 6. பின்னுட்டமா போட்டுக்கிட்டு,,..ஆமா நான் ஏன் இப்படியிருக்கேன்?

  ReplyDelete
  Replies
  1. ஆமா நீங்க ஏன் இப்படி இருக்கீங்க....நான் ஏன் இப்படி இருக்கேன்?

   Delete
 7. // பாஸே குழம்பிப் போய் அவர் முகமே கேள்விக்குறி மாதிரி வளைஞ்சி போச்சி. //

  ஹா ஹா ஹா இந்த வார்த்தைகள் அருமை பாஸ் ரொம்ப அருமை

  //இந்த பஸ் ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு?//
  நீங்களுமா ?

  //.ஏன்னா...சைனாக்காரங்க எதற்கெடுத்தாலும் ஒரு கதை சொல்வாங்க. //

  கரெக்டா பாயிண்ட புடிசிடீங்க

  ரொம்ப அருமை.

  நேரம் இருந்தால் http://seenuguru.blogspot.in/2012/04/blog-post_23.html படித்துப் பாருங்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க சீனு.

   Delete
 8. பஸ் ஸ்டாண்டு மேட்டர்ல நீங்க நகைச்சுவையாக எழுதியிருக்கிற விதமே தனி ஸ்டைல்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி

   Delete