Saturday, 29 June 2013

கல்யாணம் பண்ணிப்பார்...(வைரமுத்து எழுத மறந்த கவிதை..)கல்யாணம் பண்ணிப்பார்...

உச்சந்தலையைச் சுற்றி 'ஒளிவட்டம்' தோன்றும்...
உலகமே உன்னை வெறித்துப் பார்க்கும்...
ராத்திரியின் நீளம் குறையும்...
அதிகாலையின் கொடூரம் புரியும்..


உனக்கும் சமைக்க வரும்...
சமையலறை உனதாகும்..
ஷாட்ஸ் பனியன் அழுக்காகும்..
பழைய சாம்பார் கூட அமிர்தமாகும்..
ஃபிரிட்ஜ் ,வாசிங் மெசின், கிரைண்டர்,மிக்சி
கண்டுபிடித்தவன் தெய்வமாவான்.
கையிரண்டும் வலிகொள்ளும்...
கண்ணிரண்டும் பீதி கொள்ளும்...


கல்யாணம் பண்ணிப்பார்...

தினமும் துணி துவைப்பாய்...
மூன்று வேளை பாத்திரம் துலக்குவாய்...
காத்திருந்தால்....'வரட்டும்... இன்னிக்கி வச்சிருக்கேன்' என்பாய்...
வந்துவிட்டால்....'வந்திட்டியா செல்லம் போலாமா' என்பாய்....


வீட்டு வேலைக்காரி கூட உன்னை மதிக்காது  -ஆனால்
வீடே உன் கண்ட்ரோலில் உள்ளதாய்
வெளியே பீலா விடுவாய்...


கார் வாங்கச்சொல்லி
கட்டியவள் வயிற்றில் மிதிக்க,
கடன் கொடுத்தவன் கழுத்தைப் பிடி
க்க,
வயிற்றுக்கும் தொண்டைக்
குமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்...


இந்த மானம்,  இந்த வெக்கம் ,
இந்த சூடு,  இந்த சொரணை,
எல்லாம் கட்டிய நாளோடு
கழட்டி வைத்து விடுவது தான்
கொண்டவளை கவுரவிக்கும்
ஏற்பாடுகள் என்பாய்...


கல்யாணம் பண்ணிப்பார்...

இருதயம் அடிக்கடி
எதிர்த்துப் பேசத் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில் மட்டுமே
உனது குரல் ஒலிக்கும்...
உன் நரம்பே நாணேற்றி உனக்குள்ளே
வெறியேற்றி விடும்...  
எதிரில் எது கிடந்தாலும்
கோபத்தில் உனது கைகள் கிழிக்கும்...
கழுத்து நரம்பு புடைக்கும்...
குருதிக் கொதித்து எரிமலையாய்
வெடிக்கக் காத்திருக்கும்... -ஆனால்        
உதடுகள் மட்டும் ஃபெவிகாலைவிட
அழுத்தமாக ஒட்டியிருக்கும்...
பிறகு....
"என்ன அங்க சத்தம்..." என்கிற
ஒத்த சவுண்டில் சப்த நாடியும் அடங்கிவிடும்...


கல்யாணம் பண்ணிப்பார்...

சப்பை பிகர் கூட செட்டாக விட்டாலும் ,
சாதி சனம் கூட சட்டை செய்யா விட்டாலும்..
உறவுகள் கூட உதவாக்கரை என்றாலும்....
செட்டான ஒரு பிகரும் முதல் நாள் நைட்டு லெட்டர் எழுதிவைத்து ஓடிப்போனாலும்...
நீ நம்பிய அவனோ அவளோ உன்னை நட்டாத்துல விட்டுவிட்டு போனாலும்...
விழித்து பார்க்கையில் சரக்கடித்த போதையில் தெருவில் கிடந்தாலும்...


கல்யாணம் பண்ணிப்பார்...

மகாரௌரவம், கும்பிபாகம், காலசூத்திரம், அசிபத்ரவனம், அந்த கூபம், கிருமி போஜனம்
இதில் ஏதேனும் ஒன்று
இங்கேயே நிச்சயம்


கல்யாணம் பண்ணிப்பார்...


 ( திடங்கொண்டு போராடு சீனுவுக்கு 'காதல் கடிதம் ' எழுதலாம்னு யோசிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இதெல்லாம் வந்து போகுது...:-) அடுத்து அதை எப்படி எழுதப்போறேன்னு தெரியல..?)--------------------------------------------------------((((((((((()))))))))))))))))))))))------------------------------------------------

9 comments:

 1. ஓ இது Trial...! சூப்பர்...! அடுத்து கடிதம் எப்படி இருக்கும் என்று யோசிப்பதற்குள்..... விரைவில் எழுத வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி திண்டுக்கல் தனபாலன்

   Delete
 2. டிரையலே இப்படி இருக்கே!இன்னும் மெயின் ஃபிக்சர்?! சிரிச்சு மாளலை

  ReplyDelete
 3. Replies
  1. நன்றி வடுவூர் குமார் SIR,,

   Delete
 4. எழுத மறந்தகவிதை அருமை..!

  ReplyDelete
 5. real life comments.this is for all bachelors....

  ReplyDelete