Friday 29 November 2013

தானாகவே வெட்டிக்கொண்டு செத்துப்போனார் சங்கரராமன்..

(மு.கு: ஆனந்தவிகடனின் 3D கண்ணாடியைப் பயன்படுத்தி 20 வினாடிகள் இந்தப் படத்தை உற்றுப் பார்த்தால் இரண்டு திருடர்கள் திரிடியில் 'எழுந்தருளி' காட்சித் தருவார்கள். அப்படியே காறித்துப்பிவிட்டு அடுத்தப் படத்திற்கு செல்லவும். கடைசியாக சின்னவா-லின் கனவுக்கன்னி உங்களுக்காக கவர்ச்சி விருந்து படைக்கக் காத்திருக்கிறாள். )

மிழ் சினிமாவில் வழமையான ஒரு கிளைமாக்ஸ் காட்சியமைப்பு உண்டு. கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஹீரோ, நிரபராதி என்று தெரிந்தவுடன், தீர்ப்பின் முடிவில் "ஜட்ஜ் அய்யா" இப்படித்தான் சொல்வார்,
 "........ .... .....  ஆகவே இந்தக்கொலையை ராஜா செய்யவில்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. மேலும் இந்தக் கொலையை யார் செய்தது என்பதை விரைந்து கண்டுபிடிக்க காவல்துறைக்கு இந்த கோர்ட் உத்தரவிடுகிறது ".

இப்படிக்கூட சொல்லவில்லை.குற்றவாளிகள் எனத்தெரிந்திருந்தும்,மொத்தமாக விடுதலை செய்யப்பட்டிருக் -கிறது ஒரு மொள்ளமாரிக் கும்பல்.

கைப்புள்ள அரிவாளோட கிளம்பிடிச்சி...
ஆக,செத்தவனே நேரில் வந்து, "சத்தியமா இவன்தான் சாமி என்னை வெட்டிக்கொன்றான்" என்று சொன்னாலும் "ஏய்  நீ வாயை மூடுல... நாங்கத்தான் பெரியவங்க சொல்றோம்ல, சரியான சாட்சி இல்லன்னு... எல்லாம் சட்டப்படிதாம்ல செய்யுறோம். உன்னை யார் கொன்னதுனு நீ சொல்லக்கூடாது. பின்ன சட்டம் படிச்ச நாங்க எதுக்கு இருக்கோம் " அப்படின்னு செத்தவன்கிட்டேயே வகுப்பு எடுப்பாய்ங்க நம் நாட்டு சட்ட மேதைகள்.

துருப்பிடித்த, ஓட்டைவிழுந்த, ஒத்தப் பைசாவுக்கு பிரயோசனம் இல்லாத நம் தேசத்து சட்ட அமைப்புகளை வைத்து ஒரு ம#&%*ம் புடுங்க முடியாது. பணம், அதிகாரம், செல்வாக்கு இருந்தால் யாரை வேண்டுமானாலும் கொன்று விட்டு சட்டத்தின் பிடியிலிருந்து சுலபமாக தப்பித்து விடலாம்.

சரி....., வரதராஜ பெருமாள் கோவிலில் உட்கார்ந்திருந்த சங்கரராமனை ஜெயேந்திரன், விஜேயேந்திரன் ( ' ர் ' போடும் அளவுக்கு இவனுளுக்கு தகுதி இல்லீங்க ஆபிசர்) குரூப் கொலை செய்யவில்லை. அதைத்தான் நம் சட்டம் தெளிவுபட சொல்லிவிட்டது. அதனால்தானே எந்தக்குற்றமும் செய்யாத இந்த அப்பாவிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அப்படியானால் சங்கரராமன் எப்படி செத்திருப்பார்..?

இது ஒரு புறமிருக்க, இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக சங்கரராமனின் மகன் அறிவித்திருக்கிறாராம். அந்தத் தம்பிக்கு நம்ம நாட்டு சட்டங்களைப் பற்றிய அடிப்படையறிவும், நீதி அமைப்புகளின் நெளிவு சுளிவுகளும் சரியாகத் தெரியவில்லை போல. தற்போதாவது சங்கரராமன் கொலை செய்யப்பட்டார் என்று சொல்கிறார்கள். ஒருவேளை மேல்முறையீடு செய்தால், அவர்களின் தீர்ப்பு இப்படியாகத்தான் இருக்கும்..

# சங்கரராமனே அரிவாளை எடுத்து தன்னைத்தானே வெட்டிக்கொண்டு செத்துப் போயிருக்க வேண்டும். அதை மறைக்க,செத்துப்போனபிறகு அவர் பயன்படுத்திய அந்த அரிவாளை, யார் கண்ணுக்கும் தெரியாமல் அவரே மறைத்திருக்க வேண்டும்.

#  பூமியிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல் தூரத்திலிருக்கும் ஏழாம் உலகத்து மக்களுக்கு அவசரமாக ஒரு அர்ச்சகர் தேவைப்பட்டிருக்கலாம். அங்கு நம்மவூர் சங்கரராமனைப் போல் தோற்றம் உடைய ஒரு மக்கு மட சாம்பிராணிக்கு மந்திரம் சொல்லிக் கொடுக்கும் பொருட்டு, நமது உலகத்தில் இருக்கும் சங்கரராமனை கொன்று அந்த உலகத்திற்கு தெய்வத்தாய் அழைத்து சென்றிருக்கலாம்.

# நடிகர் முத்துக்காளையின் நெருங்கிய உறவினரான சங்கரராமன், ரோட்டில் சென்றுகொண்டிருந்த ஒரு ரவுடிக் கும்பலைக் கூப்பிட்டு அவர்களுடன் 'செத்து செத்து விளையாடும்' விளையாட்டை விளையாடும் பொழுது, ஒருவேளை செத்துப் போயிருக்கலாம்.

# (இது முகநூளில் ஒரு நண்பர் போட்டது) வரதராஜ பெருமாள் கோவிலில் உட்கார்ந்து தக்காளிச் சட்டினியுடன் இட்லி சாப்பிட்டுக்கொண்டிருந்த சங்கரராமன், கால் மேல் கால் போட ஆசைப்பட்டு வலது காலைத் தூக்கிய போது பேலன்ஸ் தவறி, பின் பக்கமாக விழுந்ததில் பின்னந்தலை அடிபட்டு ரத்தம் வெளியேறியிருப்பதாகவும், அவர் முகத்தில் இருப்பது தக்காளி சட்னியே தவிர, ரத்தம் அல்ல என்று 9 வருடங்களுக்குப் பிறகு அதை நக்கிப் பார்த்தவர் சொன்னதாகவும் கேள்விப்பட்டதை ஒட்டி, அப்பாவிகள் 25 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர்.


இதுபோலத்தான் முன்பு, தா.கிருட்டிணன் ரோட்டில் வாங்கிங் செய்துகொண்டிருந்த பொழுது, முதுகு அரிக்கிறது என்று அரிவாளை எடுத்து சொறியப்போய், அது தவறுதலாக கை, கால், கழுத்து, தலை என்று சரமாரியாக வெட்டிவிட, அந்த இடத்திலேயே அவர் செத்துப்போனார்.

மதுரை தினகரன் அலுவலகத்தில் கொசுவர்த்திச்சுருள் பத்தவைக்கப் போய்,அதிலிருந்து கிளப்பிய தீப்பிழம்பால் மூன்று பேர் உடல்கருகி 'தற்கொலை' செய்து கொண்டார்கள்.

திருச்சி ராமஜெயத்தை கொலை செய்தது பறக்கும் தட்டில் வந்த வேற்றுக்கிரகவாசிகள்தான் என்பதை தமிழக அரசு ஆணித்தரமாக நம்புவதாக அறியநேர்கிறது .

இதுபோல தானாகவே வெட்டிக்கொண்டு செத்துப்போனவர்கள் நம் தேசத்தில் ஏராளம்.முன்பு சாட்சியளித்த -வர்கள் தற்போது பிறழ் சாட்சியாக மாறிவிட்டார்களாம். ஒரு வழக்கை ஒன்பது வருடத்திற்கு இழுத்தடித்தால் ஏன் பிறழ் சாட்சியம் அளிக்க மாட்டார்கள் ?. "செத்துப்போனவன் உசுரோடவா வரப்போறான்... ஆனால் அவன் உசுரோட இருந்தா உங்களுக்கு என்ன செஞ்சியிருப்பானோ அதைவிட பல மடங்கு நாங்க செய்யுறோம்.." என்று ஆரம்பிக்கும் பேரத்தில் முக்கிய சாட்சியே பல்டி அடிக்கும் பொழுது , மற்ற சாட்சிகள் என்ன செய்யும்..?  

ஒரு ஆட்சியில் நெருக்கிப் பிடிக்கப்படும் கழுத்து, அடுத்த ஆட்சியில் தளர்த்தப் படுகிறது. குற்றத்தின் அடிப்படையில் வழக்கின் ஸ்திரத்தன்மை இங்கே பேணப்படுவதில்லை. எந்த ஆட்சியில் போடப்பட்டது என்பதைப் பொறுத்தே அவ்வழக்கின் தீர்ப்பு எழுதப்படுகிறது. ஜெயா ஆட்சியில் போடப்பட்ட இவ்வழக்கு, அடுத்து கலைஞர் ஆட்சியில் நீர்த்துப்போகும்படி செய்யப்பட்டது. எல்லா சாட்சிகளையும் விலைக்கு வாங்கப்பட்ட கொடுமையெல்லாம் அப்போதுதான் நடந்தது. வெறுமனே தீர்ப்பு மட்டும் தற்போது வாசித்திருக்கிறார்கள்.

அடுத்த சில வருடங்களில் நாம் இன்னொரு உண்மையை உணரவேண்டிவரும்..." நமது முன்னாள் பாரதப் பிரதமர், தன்னைத்தானே வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்ததால்தான் செத்துப்போனார் ".


(ஸ்சொர்ணக்கா ......" ச்வீட் எடு..கொண்டாடு..")


19 comments:

 1. நீதி செத்துப் போச்சு, பணம் எனும் பேய் நட்டநடு ரோட்டில் அகங்கறிக்கிறது வேறே எண்ணத்தை சொல்ல....!

  ReplyDelete
  Replies
  1. நன்றி மனோ... என்ன செய்வது. குற்றவாளிகள் என உலகத்துக்கே தெரியும்.. ஆனால் நம் சட்டத்தில் இருக்கும் லூப் ஹோலால் இவர்கள் தப்பித்து விடுகிறார்கள்.

   Delete
 2. Replies
  1. நம்ம பிளாக் பக்கமும் வந்து கமெண்ட் போட்டதற்கு மிக்க நன்றி பாஸ்..

   Delete
 3. 3 d கண்ணாடி மாட்டி கொண்டு படங்களை பார்த்து ரசித்தேன் ,ஏதோ நம்மாலே முடிஞ்சது ! நீதியைக் காப்பாற்ற வேண்டியவர்கள் எந்தக் கண்ணாடியை மாட்டிக் கொண்டுப் பார்கிறார்களோ ?
  த .ம 3

  ReplyDelete
  Replies

  1. மிக்க நன்றி பாஸ்... எங்கே ஏற்கனவே நம் நீதி தேவதையின் கண்கள் கட்டப்படுத்தானே இருக்கிறது.

   Delete
 4. (ஸ்சொர்ணக்கா ......" ச்வீட் எடு..கொண்டாடு..")

  ReplyDelete
  Replies
  1. ஹி..ஹி.. நன்றி பாஸ்...

   Delete
 5. Replies
  1. நன்றி பாஸ்... நம்ம துருப்புடித்த சட்டத்தை வைத்துக்கொண்டு தீர்ப்பெழுதிக் கொண்டிருந்தால் நாடே கடைசியில் நாசமாகத்தான் போகும். :-)

   Delete
 6. துருப்பிடித்த, ஓட்டைவிழுந்த, ஒத்தப் பைசாவுக்கு பிரயோசனம் இல்லாத நம் தேசத்து சட்ட அமைப்புகளை வைத்து ஒரு ம#&%*ம் புடுங்க முடியாது. பணம், அதிகாரம், செல்வாக்கு இருந்தால் யாரை வேண்டுமானாலும் கொன்று விட்டு சட்டத்தின் பிடியிலிருந்து சுலபமாக தப்பித்து விடலாம்.

  நிதர்சன உண்மை ப்ரோ

  ReplyDelete
  Replies
  1. நன்றி சக்கர கட்டி...

   Delete
 7. செம கோபம் அண்ணே ... சில இடங்களில் சிரித்தாலும் இன்றைய இந்தியாவின் நிலை கண்டு வேற என்னவோ செய்ய தூண்டுகிறது .. என்ன பண்ணுறது நமக்குன்னு குடும்பம் இருக்கே ...

  ReplyDelete
  Replies

  1. என்ன செய்யுறது பாஸ்.. இவனுக கொட்டத்தை அடக்குவதற்கு இது ஒன்றுதான் வழியாக இருந்தது. இப்போ அதிலிருந்தும் தப்பித்து விட்டார்கள். இனி பாருங்க.. பழையபடி ஆட்டத்தை ஆரம்பிப்பாங்க..

   Delete

 8. உண்மையிலேயே மனசாட்சிக்கும் மனுதர்மத்திற்கும் மதிப்பளிப்பவராக இருந்தால், வரதராஜ பெருமாளை உண்மையானப் பக்தியோடு அனுகுபவர்களாக இருந்தால் செய்த தவறை ஒத்துக்கொண்டு தண்டனையை ஏற்கவேண்டும்.

  ReplyDelete
 9. சட்டம் பணம் படைத்தோர்க்கும்,செல்வாக்கு உள்ளவர்களுக்கும் வளைந்து கொடுப்பது வேதனை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாஸ்.. கொடுமை...!

   Delete