Saturday 14 November 2015

வேதாளம்...சும்மா தெறிக்க விட்ட தல....!டத்தில் கதையென்று பெரிதாக எதுவும் இல்லை. சொல்லப்போனால் ஏற்கனவே பார்த்துப் பார்த்து புளித்துப் போன பாட்சா சாயலில் உள்ள கதைதான். அரைத்த மாவையே திரும்பவும் அரைத்திருக்கிறார்கள். காமெடி சுத்த மோசம். பாடல்கள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. புதுமைகள் எதுவும் இல்லை. புதிதாக எதுவும் சொல்லவுமில்லை.

ஆனால்......

இரண்டு மணிநேரம் தெறிக்க விட்டிருக்கிறார்கள்...  ரசிகர்களை தெளிய வைத்து தெளிய வைத்து சூடேற்றி அடித்திருக்கிறார்கள். தியேட்டரையே திருவிழாக்கோலமாக்கியிருக்கிறார்கள்.

அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஊக்க மருந்தின் பெயர் அஜித்குமார்.

என்னா ஸ்க்ரீன் பிரஸென்ஸ் ..! இந்த வார்த்தையை கடந்த ஐந்து அஜித் படங்களின் விமர்சனங்களில் அடித்து அடித்து எனது விசைப் பலகையே தேய்ந்துவிட்டது. சூப்பர் ஸ்டாருக்குப் பிறகு ஒத்த ஆளாக மொத்தப் படத்தையும் தூக்கி சுமக்கும் சக்திமான் திறன் அஜித்துக்குத்தான் இருக்கிறது.

அந்த 'பல்க்'கான உடம்பை வைத்து அஜித் பறந்து பறந்து அடிக்கவில்லை. ஆனால் சண்டைக் காட்சியில் பொறி பறக்கிறது. கோபப்படும் பொழுது கண்களில் தெரியும் தீ எரிமலையைவிட உக்கிரமாக இருக்கிறது. அந்த இண்டர்வெல் பிளாக்குக்கு முன்பு வரும் சண்டைக் காட்சிக்காக மட்டும் ஸ்டண்ட் சில்வாவின் கையில் அஜித் தங்கக்காப்பு மாட்ட வேண்டும்.

பெரிய எதிர்பார்ப்பில் போகவில்லை. சிவா- அஜித் - ஸ்டண்ட் சில்வா கூட்டணி எப்படி இருக்கும் என்பதை ஏற்கனவே ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும் அதகளம் புரிந்து நிரூபித்து விட்டார்கள். நிச்சயம் அறிவுஜீவித் தனமான கதையாகவோ அல்லது உலக சினிமாவாகவோ இருக்கப்போவதில்லை. நூறு சதவிகித மசாலா என்டர்டெயின்மென்டாக இருக்கும் என நினைத்துதான் போயிருந்தேன். அதை முழுமையாகப் பூர்த்தி செய்திருக்கிறது வேதாளம்.

கரணம் தப்பினாலும் இன்னொரு ஜனா, ரெட் படமாக வேதாளம் வந்திருக்கும். தனிநபர் துதியை கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு திரைக்கதை என்கிற மந்திரக்கோலை கையிலெடுத்து மிகத் தந்திரமாக சுழற்றி புகுந்து விளையாடியிருக்கார் இயக்குனர் சிவா. அஜித் ரசிகர்களின் நாடித்துடிப்பை மைக்ரான் அளவு கூட தவறவிடாமல் உள்வாங்கி அவர்களின் யானைப் பசிக்கு சோளக் கொல்லையையே தீனியாக்கியிருக்கிறார்.

தமிழ் சினிமா ஹீரோயிசத்தை பாட்சாவுக்கு முன், பாட்சாவுக்கு பின் என வகைப்படுத்தலாம். பாட்சாவுக்கு முன்பு பெரும்பாலும் வில்லன்கள்தான் ரவுடி. அவர்களை அடக்கி வெல்லும் இடத்தில்தான் தமிழ் சினிமா ஹீரோக்கள் இருப்பார்கள். பாட்சாவுக்குப் பின்புதான் கல்லுக்குள் ஈரம் போல ரவுடிக்குள்ளும் ஒரு பாசமான மென்மையான ஃபிளாஷ்பேக் இருக்கும் என்கிற புது ட்ரென்ட் உருவானது.  அந்த வகைமைக்குள் வேதாளமும், ஏய் படமும் வருமே ஒழிய, எந்தவிதத்திலும் வேதாளம் பாட்சா , ஏய் படத்தின் ரீமேக் என்று சொல்லிவிட முடியாது.

தல-க்கு அடுத்து நினைவில் நிற்பது லக்ஷ்மி மேனனும் தம்பி ராமையாவும். ஆக்சன் என்கிற அசைவம் திகட்டாமல் இருக்க, கொஞ்சம் சைவ செண்டிமெண்ட்டாக தங்கச்சி மற்றும் பார்வை குறைபாடுடைய  அவளது பெற்றோர்கள் என்கிற பாத்திரங்களை உள் நுழைத்திருக்கிறார் இயக்குனர். கதையின் ஜீவனே இவர்கள்தான். ஒரு ஃபேமிலி என்டர்டெயினராகவும் வேதாளம் விஸ்வரூபமெடுத்து நிற்பதற்கு இதுவும் காரணம்.

வேதாளம் படத்தின் மிகப்பெரிய நெருடல் காமெடி. கடந்த ஒரு வருடமாக சூரி நடிக்கும் படங்களின் விமர்சனம் எழுதும்பொழுது தொடர்ந்து புலம்பித் தீர்த்திருக்கிறேன். சூரி எல்லாம் சோலோ காமெடியனாக போடும் அளவுக்கு 'வொர்த்' கிடையாது என்று. காமெடி நடிகர்களுக்கு வாய்ஸ் மாடுலேஷன் மிக முக்கியம். டைமிங் சென்ஸ் அதைவிட முக்கியம். இயக்குனர் சொல்வதை மட்டும் செய்யாமல் சொந்த சரக்கையும் அவ்வப்போது அவிழ்த்து விடவேண்டும். ஆனால் இது எதுவுமே சுட்டுபோட்டாலும் வராத சூரி, வையாபுரி அளவுக்குக் கூட வொர்த் கிடையாது. சந்தானமும் வடிவேலும் ஒதுங்கிப் போனதால் இங்கே வண்டி ஓடுகிறது. சூரிக்குப் பதில் சந்தானமோ விவேக்கோ நடித்திருந்தால் முதல் முக்கால்மணி நேரம் இவ்வளவு தொய்வு விழுந்திருக்காது.

அடுத்து ஸ்ருதி ஹாசன். தமிழ் சினிமாவில் ஹீரோயினுக்கா பஞ்சம்..? நல்லவேளை அஜித்தோட டூயட் எதுவும் இல்லை.  இருந்திருந்தா நாங்க தெறிச்சி ஓடியிருப்போம்.

அனிருத் பாடல்களில் ஒன்றும் பெரிதாகக் கவரவில்லை என்றாலும் பின்னணி இசையில் பட்டையை கிளப்பியிருக்கிறார். அதேப்போல் ஒளிப்பதிவும்.

எதை எல்லாம் எதிர்பார்த்து சென்றேனோ அவை எல்லாம் ஓரளவு எமக்குப் படைக்கப்பட்டதால் திருப்தியோடு தியேட்டரிலிருந்து எழுந்து வந்தேன்.

டிஸ்கி.

ஒலக படமாக வந்திருக்கும் தூங்காவனத்தை அடித்து துவைத்துவிட்டு பக்கா மசாலாவாக வந்திருக்கும் வேதாளத்தை எப்படி தூக்கி வைத்து எழுதலாம் என கொதிக்கும் என்னைபோன்ற உலக நாயகனில் உயிர் ரசிகர்களுக்கு, தூங்காவனம் எப்படி எனக்கு தாங்காவனமாக இருந்தது என்பதை அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்.

7 comments:

 1. தூங்காவனம் எப்படி எனக்கு தாங்காவனமாக இருந்தது என்பதை அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்.//  ungaloda vimarsanam padichitten.
  hmm etho nadanthirukku. eluthunga sir:)

  ReplyDelete
  Replies
  1. நன்றி மகேஷ்... எப்போதாவதுதான் இங்க வர முடிகிறது... எழுத நினைத்ததை எழுத முடியவில்லை..

   Delete
 2. சூரி எல்லாம் "சின்ன புலி"க்கு தான் சரிப்பட்டு வரும்...!

  ReplyDelete
  Replies
  1. நம்ம பக்கம் வர்றதே இல்லே...? என்ன ஆச்சு...?

   Delete
  2. நன்றி DD.. பணிச்சுமை.. இங்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிறது,, 2016 ல் தொடர்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன்.. என் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு

   Delete
 3. neenga ellam arivalinnu unga review ellam padichathey waste..your taste so bad...

  ReplyDelete