Tuesday 3 January 2012

அசத்தலான 3D படங்கள்


பல வருடங்களுக்கு முன் ஆனந்த விகடனின் பின் அட்டையில் இது போன்று 3D  படங்கள் வரும். இதற்காகவே இந்த புத்தகத்தை வாங்கி அதே இடத்தில் நின்று பரபரப்பாகப் பார்த்து பரவசம் அடைந்ததுண்டு...

    இதற்கு ஸ்டீரியோகிராம் (Stereogram )படங்கள் என்று பெயர்.இவற்றை பார்ப்பதற்கு 3டி கண்ணாடிகள் தேவையில்லை வெறும் கண்களால் பார்க்க முடியும் . கண்களை ஒரு அடி தூரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். படத்திலிருந்து 10 செமீ தூரத்தில் பேனா அல்லது பென்சிலை வைத்து உங்கள் பார்வையின் .'.போகஸ் அதன் கூர்மையை நோக்கி இருக்க வேண்டும். இப்போது  படம் out of focus ல் மங்கலாக தெரியும். பிறகு  தலையை கொஞ்சம் முன்னும் பின்னும் அசைத்தால் ஸ்டீரியோகிராம் எனப்படும் 3டி புகைப்படத்தில்  மறைந்து இருக்கும் உருவம் தெரிய ஆரம்பிக்கும். பிறகு உங்கள் கண்களை நீங்களே நம்ப மாட்டீர்கள்...உங்களை  மாய உலகத்திற்கு அழைத்து  செல்வது உறுதி....... 

மற்றொரு முறை.... 

   புகைப்படத்தின் ஏதாவது ஒரு புள்ளியில் இரண்டு கண்களின் பார்வைகளையும்  குவித்து ஒரு சில நிமிடங்கள் கூர்ந்து பார்க்க வேண்டும். பின்பு மெதுவாக அந்த புகைப்படம் முழுவதையும் பார்க்க வேண்டும்.இது கொஞ்சம் கடினமான முறைதான். 
            இந்த படங்களை out of focus ல் வைத்து பார்த்தால் மட்டுமே இதில் மறைந்திருக்கும் 3டி உருவத்தை நாம் காண முடியும்....

     முதல்தடவை பார்ப்பதற்கு மட்டும் தான் கொஞ்சம் கடினமாக இருக்கும்.ஒரு தடவை பார்த்து விட்டால் உங்கள் கண்களுக்கு மாயசக்தி  வந்துவிடும். பிறகென்ன..  அசால்ட்டா அசத்துவீங்க......

இணையத்தில் நான் பார்த்து ரசித்த ஒரு சில படங்கள்...

  அட.....நம்ம கணேஷ்............(வாவ்.....கண்டிப்பாக இதற்காகவாவது முயற்சி செய்யுங்கள்)

பார்த்து ரசித்து  விட்டீர்களா?  அடுத்த பரவசத்துக்கு தயாராகுங்கள்...stereograms with 3D animation..(வீடியோ)







இப்படிக்கு .....
 (இதில் ஒளிந்திருப்பது  நான்...... )

-------------------------------(((((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))--------------------------------


4 comments:

  1. I enjoy very much dear manimaran thank u

    ReplyDelete
  2. Thanks for your comment
    Mr.Balu...

    ReplyDelete
  3. நான் மிகவும் விரும்பும் 3D படங்கள் தங்கள் தளத்தில் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் .நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு ரொம்ப நன்றி

      Delete