Sunday 8 January 2012

தமிழ் திரையுலகின் அஷ்டாவதானி T.ராஜேந்தர் ஒரு சகாப்தம்

ணையத்தில்.. குறிப்பாக பேஸ்புக் மற்றும் ப்ளாக்கரில் பவர் ஸ்டாருக்கு அடுத்து செமயா டேமேஜ் ஆவது நம்ம சகலகலாவல்லவர் T.ராஜேந்தர் தான். தெரிஞ்சிதான் செய்யுறாரானு தெரியில... தான் ஒரு யூத்னு நெனச்சிகிட்டு இவர் குடுக்கிற அளப்பரைதான் இவருக்கே ஆப்பா வருதுனு நெனைக்கிறேன். பொதுவா அரசியல் மேடையில்தான் நம்ம டி.ஆர் கலக்குவார். ஆனா இப்போதெல்லாம் பாடல் வெளியீட்டு விழாவில ஆரம்பிச்சி டி.வி. நிகழ்ச்சி, பாராட்டு விழானு பட்டய கெளப்புறார் டி.ஆர்.


சரி... வந்தோமா டீயும் பிஸ்கட்டும் சாப்டோமா... அப்படியே ஹீரோயின் அம்மணிகிட்ட கொஞ்சம் கடலையை போட்டோமான்னு இல்லாம.. மியூசிக்ல தான் பெரிய தில்லாலங்கடினு சொல்லிக்கிட்டு, தோல்பட்டைய தவிலாக்கி, தொடைய ட்ரம்ஸாக்கி, இடுப்ப அடுப்பாக்கி, நம்மள கடுப்பாக்கி இவர் பண்ற இம்ச தாங்கமுடியல. ஆனா இவர் எந்த சேட்டை பண்ணினாலும் யாரும் எதுவும் சொல்றதில்ல. ரஜினியில் தொடங்கி..  கேப்டன், பாக்கியராஜ், பத்திரிக்கைக்காரங்கனு இவர் விளாசித் தள்ளாத ஆளே கிடையாது. ஆனா யாரும் எதுவும் சொல்றதில்ல. ஏன்..?  T.ராஜேந்தரைப் பற்றி இப்போதுள்ள இளைய தலைமுறைக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எண்பதுகளில் ரஜினியையும், கமலையும் மிரள வைத்தவர். இவர் படம் ரிலீஸாகிறது என்றால் மற்ற முன்னணி ஹீரோக்கள் ஒதுங்கிக் கொள்வார்கள். ரஜினி, கமலுக்கு வெறும் லட்சங்களில் சம்பளம் இருந்த காலகட்டத்தில் படம் பூஜை போட்ட உடனேயே கோடிக்கு மேல் விற்று சாதித்துத் காட்டியவர். இளையராஜா கொடிகட்டி பறந்த காலத்திலும் இவர் இசையமைத்த எல்லா பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி கேசட் விற்பனையிலும் தூள் கிளப்பினார். கதை,திரைக்கதை,வசனம்,பாடல்கள், இசை,ஒளிப்பதிவு, இயக்கம் என்று எல்லாப் பொறுப்புகளையும் கவனித்து, அதில் நடித்து சொந்தமாக தயாரிக்கவும் செய்தார். இவர் படங்கள் சர்வ சாதரணமாக நூறு நாள்களுக்கு மேல் ஓடும். திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் ஐம்பது நாட்கள் அசால்டா ஓடும். இப்ப சொல்லுங்க.. இவரை தமிழ்த் திரையுலகின் அஷ்டாவதானி என சொல்லலாம் தானே!.. 


 ஆனா பாருங்க... இவர் சொந்தமா படம் எடுத்தாலும் ஒரு கொள்கைப் பிடிப்போடதான்(!) இருந்தார்..  அது என்னான்னு நோட் பண்ணிக்குங்க...

1. இவர் எடுக்கும் படங்களின் தலைப்பு ஒன்பது எழுத்தில்தான் இருக்குமாம் .

2. எந்தப் பெண்ணையும் தொட்டு நடிக்கமாட்டாராம். அது அம்மாவாக இருந்தாலும் சரி.. குழந்தையா இருந்தாலும் சரி.. (அந்த ஏக்கத்திலதான் சிம்புவ உசுப்பேத்திவிட்டாரோ ? ). ஆனா இவர் படத்தில கவர்ச்சி கொஞ்சம்  தூக்கலாகவே இருக்கும்.

3. வசனம் பேசிக்கிட்டே சண்டை போடுற ஸீன இவருதாங்க ஆரம்பிச்சி வச்சாரு..  அதுல ஒரு கன்டிஷன் இருக்கு.. இவரு வசனம் பேசி முடிக்கிற வரையில சண்டை போடுறவுங்க அமைதியா கைகட்டி கேட்டுகிட்டு இருக்கணும்.

3.இந்த உலகத்திலே ஒரே படத்த தொடர்ந்து ஒன்பது தடவ 'ரீமேக்'  பண்ணினது இவருதாங்க.அப்படி என்னதான் கதை?....ஹிஹி... உங்க ஆர்வம் புரியுது. அது கல்வெட்டுல செதுக்கப்பட வேண்டிய காவியம்..!. பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய பொக்கிஷம்..!..நல்லா கவனமாக் கேளுங்க....   

 "இவருக்கு ஒரு தங்கச்சி இருக்கும். அது ஒருத்தன இழுத்திட்டு ஓடிடும். ஒரு காதலி இருக்கும் அதுவும் ஒருத்தன இழுத்துட்டு ஓடிடும். இவரு அப்பா ஒரு குடிகாரன். அவரும் ஒரு பொம்பள பின்னால ஓடிடுவாரு... இவருக்கு ஒரு அம்மா இருக்கும்.. ச்சே ச்சே..அங்கதான் வப்பாரு ஒரு சென்டிமென்ட்.. தன் புருஷன் கெட்டவனா இருந்தாலும் பரவாயில்ல.. க(ள்)ல்லானாலும் கணவன்.. (.'.)புல்லானாலும் புருசன்னு  சொல்லிட்டு... அதுவும் புருஷன் கிட்ட போயிடும்... கடைசில நம்ம ஹீரோ தனிமரமா நின்னு ஒரு சோகப் பாட்டு பாடுவாரு. அதுவும் தன் சொந்தக்குரலில.."(இனிமே கதை என்னான்னு கேட்பீங்க?...)

4 . இவரோட எல்லா படத்தின் முடிவில் இவர் சாகுற மாதிரி ஒரு சென்டிமென்ட் ஸீன் இருக்கும். குண்டடிப் பட்டு ரத்த வெள்ளத்தில உயிருக்கு போராடிகிட்டே அஞ்சு பக்க வசனத்த அப்படியே வார்த்தை பிசகாம பேசி முடிச்சிட்டு கடைசியில 'டொய்ங்' னு தலைய சாய்ச்சிடுவாரு.. அப்படினா தலைவரு டிக்கெட் வாங்கிட்டாருனு அர்த்தம்.

5. ஒவ்வொரு படத்திலேயும் புது முகங்களை அறிமுகப்படுத்துவார். அந்த வகையில நம்ம டி.ஆர்  செய்த ஒரே நல்ல விசயம் என்னோட ஆல்டைம் ஃபேவரைட் 'அழகு தேவதை அமலா'வை அறிமுகப்படுத்தினதுதான்.. இந்தப் பட்டியல் ஆனந்தபாபு, ராஜிவ், தியாகராஜன், நளினி,பப்லு,ரேணுகா, மும்தாஜ்னு நீண்டுகொண்டே செல்லும் ....


6.  தமிழ் சினிமாவின் 'செட் மன்னன்' இவருதாங்க. சந்திரலேகா படத்திற்குப் பிறகு இவரு படங்களில போடுற செட்டுதான் பரபரப்பா பேசப்பட்டது.

7.  இவரு இவ்ளோ செலவு பண்ணி படம் எடுத்தாலும் இதுவரையில எந்த பைனான்சியர்கிட்டேயும் கடன் வாங்கியது கிடையாதாம். இதுவரையில் எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர். இவர் திரைக்கு வந்த நேரம் மதுரைக் காரர்கள் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த காலகட்டம். மாயவரத்திலிருந்து வந்த டி.ஆர். ஆரம்பத்தில் நிறைய அவமானங்களையும் கஷ்டங்களையும் சந்தித்திருக்கிறார்.

எண்பதுகளில எப்படி பாக்யராஜ் தாய்க்குலங்களை கவர்ந்தாரோ, அதே மேஜிக் T.ராஜேந்தருக்கும் அப்போ தெரிஞ்சிருந்தது. ஒருதலை ராகத்தில் ஆரம்பித்த இவரது வெற்றிப் பயணம் 'என் தங்கை கல்யாணி' யோட முடிஞ்சிடுச்சினுதான் சொல்லணும். அரசியல், சினிமா இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்தவர் டி.ஆர். எம்ஜியார் ஆட்சியில் இருந்த நேரத்தில் அவரை எதிர்த்து திமுகவில் இருந்த ஒரே நடிகர்!. 

எம்ஜியாருக்கு எதிராக கடுமையா பிரச்சாரம் செய்ததால திமுக தொண்டர்களிடம் தனி செல்வாக்கு பெற்றவர். அதனாலயோ என்னவோ இவர் ரசிகர்கள் பெரும்பாலும் திமுகவைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.பின்பு இதுவே வருக்கு எமனாக அமைந்தது.1988ஆம் ஆண்டு  'என் தங்கை கல்யாணி' வெளியாகி வெள்ளிவிழா கண்டது. 1989ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத்தேர்தலில்  'சீட்' பேரத்தில் கலைஞரிடம் ஏற்பட்ட மனக்கசப்பால் திமுகவை விட்டு வெளியேறினார். துரதிஷ்டவசமாக அந்த வருடம் வெளியான  'சம்சார சங்கீதம்' படுதோல்வி அடைய, டி.ஆரின் தோல்விப்பயணம் அதிலிருந்துதான் ஆரம்பித்தது. அப்ப விழுந்தவர் தான், இன்னும் எழுந்திருக்க முடியவில்லை. இவருடைய வசந்த காலங்கள் என்று ஒரு தலை ராகம் வெளியான 1980 காலகட்டத்திலிருந்து 1989 வரை சொல்லலாம். அந்த கால கட்டத்தில் வந்த படங்களின் பாடல்கள் உங்கள் பார்வைக்காக....  ஒருதலை ராகம் (1980 )

தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய படம். ஒருதலைக் காதலைப்  பற்றிச் சொன்ன உன்னத படம். அதுவரை யாரும் பயணிக்காதப் பாதையில் தனது முதல் காலடியை எடுத்து வைத்தார் டி.ஆர். இந்தப்படத்தில் இவருக்கு பேசப்பட்ட சம்பளம் வெறும் ஆயிரம் ரூபாயாம். ஆனால் அதையும் வாங்க நாய் படாத பாடு பட்டாராம். எங்க ஊரில் நூறு நாள் ஓடிய முதல் படம். 'நான் ஒரு ராசியில்லா ராஜா...', " என் கதை முடியும் நேரமிது.... என்பதை சொல்லும் ராகமிது....' என்று முதல் படத்திலே அபசகுனமான பாடல்வரிகளை எழுதி, அதையும் டி.எம்.எஸ் சை பாட வைத்து அதிர வைத்தவர்.


  வசந்த அழைப்புகள் (1981 )

ஒருதலை ராகம் வெற்றிபெற்றவுடன் டி.ஆரின் திறமையை அறிந்த ஜே.பி.ஆர், தான் எழுதி வைத்திருந்த கதையைப் படமாக எடுத்துத் தருமாறு டி.ஆரிடம் கொடுத்தார்.ந்தப் படத்திற்கு ஜே.பி.ஆர் தான் தயாரிப்பாளர். இந்தப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.  இரயில் பயணங்களில்...(1981 )

இதுவும் சக்கைப்போடுப் போட்ட படம்தான். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். இதில் ராஜீவ், ஸ்ரீநாத் மற்றும் ரவீந்தர் நடித்திருப்பார்கள். இந்தப்படம் எடுத்துக் கொண்டிருந்த வேளையில் இதன் தயாரிப்பாளர் இறந்துவிட, பண நெருக்கடியால் படம் பாதியிலே நின்று போனது. இருந்தாலும் மனம் தளராமல் போராடி பல இன்னல்- களுக்குப் பிறகு படத்தை வெளியிட்டார் டி.ஆர். படம் வெள்ளிவிழா கண்டது.
 

நெஞ்சில் ஓர் ராகம்(1982 )
  
கே.ஆர்.ஜி தயாரிப்பில் வெளிவந்த படம். ந்தப் படத்தில் தியாகராஜன், ராஜிவ் இருவரையும் அறிமுகப் படுத்தினார். இதுவும் வெற்றிப் படம் தான்.


 உயிர் உள்ளவரை உஷா (1983 )

 "தஞ்சை சினி ஆர்ட்ஸ்" என்ற பெயரில் டி.ராஜேந்தர் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து எடுத்த முதல் படம். அப்போது இவரைப் போல காதலில் தோல்வி அடைந்த நடிகை உஷாவை திருமணம் செய்து கொண்டதின் ஞாபகமாக வைத்த பெயராம் 'உயிர் உள்ளவரை உஷா'. ஜேசுதாஸ் பாடிய "வைகைக் கரை காற்றே நில்லு"  இவர் இசைக்கு மகுடம் சூட்டிய மெலடி. நளினி இதில் தான் அறிமுகம்.


 தங்கைகோர் கீதம்.(1983 )  

சமூக அக்கறைக் கொண்ட படத்தை எடுத்திருப்பதாகச் சொல்லி டி.ஆர். வெளியிட்ட படம் தங்கைகோர் கீதம். இது வரதட்சனைக் கொடுமையால் ஏற்படும் பாதிப்பை விளக்கிச் சொன்ன படமாகப் அப்போது பேசப்பட்டது. சிவகுமார், டி.ஆர். தங்கையின் கணவராக நடித்திருப்பார்.. 'தட்டிப்பாத்தேன் கொட்டாங்கச்சி....' னு சொந்தக் குரல்ல பாடி நம்மள காய்ச்சி எடுத்தது இந்தப் படத்தில்தான். இதுவும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. 

           (சிரிக்கபடாது.. சீரியஸா பாக்கோணும்...)

உறவை காத்த கிளி(1984 )

அடுத்து இவர் குடிப்பழக்கதிற்கு எதிராக எடுத்தப் படம். இது பெரிய வெற்றியைக் கொடுக்காவிட்டாலும் அவரை அரசியலுக்கு இழுத்து வந்ததில் முக்கியப் பங்காற்றியது. இப்படத்தின் தயாரிப்பளார் ஒரு அதிமுக காரர். இருவருக்கிடையே பண விவகாரத்தில் பிரச்சனை வர, விஷயம் எம்.ஜி.ஆர் காதுக்கு எட்டியது. உடனே டி.ஆர் ராமாவர தோட்டத்திற்கு வரவழைக்கப் பட்டார். அங்கே, தனது வழக்கமான பாணியில் எம்.ஜி.ஆர். இவரை கும்மி எடுக்க, வலிதாங்க முடியாமல் இவர் ஓடிய இடம் கோபாலபுரம். அதன் பின்பு  திமுகவில் ஐக்கியமாகி, எம்.ஜி.ஆரை எதிர்த்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டாராம் டி.ஆர்.... 


மைதிலி என்னை காதலி(1986 )

சிம்புவுக்கு பாவாடை சட்டையை அணிவித்து கேபரே டான்ஸ் ஆடவிட்டு அமர்க்களமாக அறிமுகப்படுத்தியது இந்தப் படத்தில்தான். பாவாடையை தூக்கி காண்பித்து ஆட்டம் போட்டு 'குட்டி மன்மதனா' அவரது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தார் டி.ஆர்.  அந்த ஆட்டம் இன்னும் நின்ன பாடில்லை. இந்தப் படத்தில்தான் அமலா அறிமுகமானார்.  டி.ஆரின் படைப்புகளில் இதுதான் சூப்பர் டூப்பர் ஹிட்...!

 
 ஒரு தாயின் சபதம்(1987 )

ம்ம டி.ஆர் இந்தப் படத்தில் வக்கீலாக நடித்திருப்பார். வக்கீல்கள் எல்லாம் எதுகை மோனையோடு வாதாடினால் என்ன விளைவு ஏற்படும் என்பதை இந்தப்படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதுவும் பெரிய வெற்றிப் படம்.

   
 என் தங்கை கல்யாணி.(1988 )

அன்னாரின் கடைசி வெற்றிப்படம். 18 தியேட்டர்களில் நூறு நாட்கள் ஓடியது. இதை குறிக்கும் விதமாக நூறாவது நாளில் தினகரன் பத்திரிகையில் ஒரு முழு பக்கத்தில் ஐயப்பன் படத்தை போட்டு அதன் கீழே பதினெட்டு படிகளிலும் பதினெட்டு தியேட்டர்களின் பெயரையும் போட்டு விளம்பரப் படுத்தியிருந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது...

 
இவர் பிஸியாக இருந்த காலகட்டத்திலும் கிளிஞ்சல்கள், பூக்களைப் பறிக்காதீர்கள், கூலிக்காரன், பூப்பூவா பூத்திருக்கு போன்ற பல வெளிப்படங்களுக்கும் பாடல் எழுதி இசையமைத்துக் கொடுத்தார்.இந்தப் பாடல்களும் மெகா ஹிட்டாகி இவருக்கு சிறந்த இசையமைப்பாளர் என்கிற பெயரை எடுத்துக்கொடுத்தது. 

கிளிஞ்சல்கள்  பூக்களை பறிக்காதீர்கள்

எண்பதுகளில் தனி ராஜ்ஜியமே நடத்திய டி.ராஜேந்தரின் வெற்றிப் பயணத்தில் வேகத்தடையாக வந்தது சம்சார சங்கீதம். அப்படத்தில் தொடங்கிய தோல்வி, சாந்தி எனது சாந்தி, சொன்னால்தான் காதலா...என்று ஆரம்பித்து கடைசியில் இவரெடுத்த 'முழு நீள காமெடிப் படமான' வீராசாமி வரை தொடர்கிறது.
    
நிறைய தடைகளைத் தாண்டி உச்சத்துக்கு வந்தவர். தன்னம்பிக்கை மிக்கவர். தொழிலில் நேர்மையானவர். எவருடைய உதவியையும் எதிர்பார்க்காத கடும் உழைப்பாளி. தன் கொள்கையை எந்தக் காலத்திலும் விட்டுக் கொடுக்காமல், தான் ஒழுக்காமானவர் என்பதை நிஜ வாழ்க்கையிலும் சரி, சினிமாவில் நடிக்கும் போதும் சரி தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார். நெளிவு சுளிவு இல்லாதவர். மனதில் பட்டதை தைரியமாக சொல்பவர். சினிமாவை உயிருக்குயிராய் நேசிப்பவர். தான் தயாரித்தப் படங்களை இது வரை 'டி.வி ரைட்ஸ்' க்கு விடாதது இதற்கு மிகப் பெரிய சான்று.

'வீராசாமி'  என்கிற ஒரு படத்தை மட்டும் அளவுகோலாக வைத்து இவரது திறமையை நாம் எடைபோட்டு விட முடியாது. இவரின் பழைய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தீர்களேயானால் நிச்சயம் இவர் ஒரு சகாப்தம் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்....


-------------------------------(((((((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))-----------------------

                    

29 comments:

 1. இவர் ஒரு சகாப்தம் தான்,,,,,ஆராய்ச்சிக்கு நன்றி

  ReplyDelete
 2. unmaiyile nalla iruku unga aratchi

  avar nalla manithar thaan but aen avar a kindal panranganu theriala, 70-80 yrs irundha youngsters ku nitchayam ivara pidikum mukkiyama ladies ku. tr nalla thiramaisali thaan, enga oor karar nu solla perumaiya iruku.

  ReplyDelete
 3. அரசியல்வாதியாகி சரிஞ்சிட்டார்

  ReplyDelete
 4. சூப்பரான அலசல்

  அவரது செண்டிமெண்ட்ஸ் விளக்கம் எள்ளல் நடை

  ReplyDelete
 5. விரிவான அலசல் - பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 6. டூப்பர் பத்தி சூப்பர் அலசல். கலக்கலான நடை. பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி.

  ReplyDelete
 7. Word Verification இல்லாமல் செய்யலாமே?

  ReplyDelete
 8. //இவர் ஒரு சகாப்தம் தான்,,,,,ஆராய்ச்சிக்கு நன்றி//
  @கோவை நேரம் -பின்னூட்டத்திற்கு நன்றி

  ReplyDelete
 9. //அரசியல்வாதியாகி சரிஞ்சிட்டார்// @@கோவிந்தராஜ் -பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி

  ReplyDelete
 10. //அவரது செண்டிமெண்ட்ஸ் விளக்கம் எள்ளல் நடை//
  @சி.பி.செந்தில்குமார் -பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றி.இந்த எள்ளல் நடை எல்லாமே உங்ககிட்டேந்தும் பண்ணிகுட்டிகிட்டேந்தும் வந்தது சி.பி...

  ReplyDelete
 11. //விரிவான அலசல் - பகிர்வுக்கு நன்றி//@ மனசாட்சி -பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 12. //டூப்பர் பத்தி சூப்பர் அலசல். கலக்கலான நடை. பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி.//@ஹாலிவுட்ரசிகன்-ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 13. பதிவு முழுவதும் ரசித்துப் படித்தேன், நன்றாக இருந்தது!! பப்லு அவர்கள், தான் டி.ஆர் தேர்ந்தெடுத்த கதையை ஒரு முறை ஏதோ ஒரு தொலைக் காட்சியில் விவரித்தார், டாப்பாக இருந்தது, நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அதன் லிங்க் கிடைத்தால் கொடுக்கவும்.

  ReplyDelete
 14. பதிவு முழுவதும் ரசித்துப் படித்தேன், நன்றாக இருந்தது!! பப்லு அவர்கள், தான் டி.ஆர் தேர்ந்தெடுத்த கதையை ஒரு முறை ஏதோ ஒரு தொலைக் காட்சியில் விவரித்தார், டாப்பாக இருந்தது, நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அதன் லிங்க் கிடைத்தால் கொடுக்கவும். //

  அது ஜெயா டிவியில் வந்த அரி கிரி அசெம்ப்ளி. மிகை நடிப்பு இருந்தால்தான் ராஜேந்தரிடம்
  வாய்ப்பு வாங்க முடியும் என்று கிண்டலாக நடித்துக் காண்பித்தார். அந்த நிகழ்ச்சியின் பழைய
  பதிவுகள் இணையத்தில் இருக்க வாய்ப்பில்லை.

  ReplyDelete
 15. @Jayadev Das.உங்களின் பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றி...மென்மேலும் ஊக்கப்படுத்துங்கள்..

  ReplyDelete
 16. @Jagannath..பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 17. enga veettu velannu oru padam edutthara atah patthi onnume sollaliye athuvum sema collection vaanguna padam thaana enthangai kalyaanikku pirahu vanthathu

  ReplyDelete
 18. சூப்பர் பதிவு...ரொம்ப நல்ல அலசல்... ரொம்பவே ரசித்தேன்!!!

  ReplyDelete
 19. He sold all his movies TV right's to Bhrathi TV (any one remember!!) for 5 crores several years before. As that TV channel is closed already, he got all the rights back, I guess.

  ReplyDelete
 20. ஒரு சிறந்த கலைஞனின் சாதனைகளை பற்றி சுருக்கமாக எழுத்ப்பட்ட அருமையான பதிவு.. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய திரைப் படங்களை தந்தவர், மக்களின் ரசனை மாற்றங்களை புரிந்துகொண்டு எப்போதோ கௌரவமாக விலகியிருந்தால் இன்றைய சிறுவர்களின் எள்ளலுக்கு ஆளாகியிருக்க வேண்டியதில்லை. தமிழ் சினிமா வரலாற்றின் எந்த ஒரு பாடலாசிரியரையும் விஞ்சும் கவிநயம் மிகுந்த பாடல்கள் இவருடையது. ஒரு திரைப்பட பாடலாசிரியராக எக்காலத்திலும் போற்றப்பட வேண்டிய அருகதை இவருக்கு உண்டு.. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. yes i aggree your TR IS VERY GOOD SONG/ SETTINGS JENIUS

   Delete
  2. yes i aggree your TR IS VERY GOOD SONG/ SETTINGS JENIUS

   Delete
 21. நிச்சயம் T.R அவர்கள் சகாப்தம் தான்... அவரின் பாடல் தொகுப்பு என்றும் உண்டு... முன்பு ஆடியோ கேசட்... இன்றைக்கும் கணினியில்...! அடிக்கடி கேட்கும் போதெல்லாம் கல்லூரி நினைவுகள் மனதில் வசந்தமாக...

  ReplyDelete
 22. T.R பற்றி எனக்கு முன்பு அவ்வளவாக தெரியாது.முகப்புத்தகத்தில் நண்பர் ஒருவர் பகிர்ந்த ஒரு கட்டுரையைப் படித்த பின்பு தான் டி.ஆரின் திறமை பற்றி அறிய முடிந்தது.நிறைய விடயங்களை அலசி ஆராய்ந்து சிறப்பாக எழுதியிருக்கின்றீர்கள்

  ReplyDelete
 23. டி ஆர் ஒரு சாகாப்தம் தான் அவரின் பாடல்களின் ஒலிப்பேழை சேமித்ததும் அது நாட்டில் இனவாதத்தில் தொலைத்ததும் மறக்கமுடியாது சார்! ஆனால் இன்று அவரை கோமாளிபோல நவீனதலைமுறை நினைப்பதும் அபத்தமே..

  ReplyDelete
 24. அவருடைய பாடல்கள் அருமையாய் நினைவிற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி.. அவரின் ஆடம்பரமான செட்களில் ஆபாசமான பாடல் காட்சிகள் சகிக்காது..இப்பவும் ரொம்ப பேசி நம் பொறுமையைச் சோதிக்கிறார்..

  ReplyDelete
 25. TR is extremely talented person but he is wasting his talents in politics.I dont know why people mock at him.We should encourage people like this.He is the only multitalented person in film industry doing all kind of roles.If he stops acting and continues other works in cinema surely he will give another serious of hit films even now.Hats off Mr.TR

  ReplyDelete