Sunday 20 May 2012

எந்த ஊர் போனாலும் நம்மவர்களை எளிதில் கண்டுபிடிக்க சில வழிகள்...(சிரிப்புக்கு கியாரண்டி..)!

நாம் எந்த ஊர் போனாலும் நம்மவர்களை கண்டுபிடிக்க சில எளிய வழிகள்..........

1 .  25000  ரூபாய்க்கு மொபைல் போன் வாங்கி, அதில் missed கால் கொடுப்பது.


2 .  பஸ்ல இருந்து எரோப்ளேன் வரை ஜன்னல் சீட்டுக்கு ஆசைப்படுவது.

3 .  10  லட்சம் ரூபாய்-க்கு கார் வாங்கினாலும் அதில் எலுமிச்சைப் பழம் தொங்க விடுவது.

4 .ஹோட்டல் போனால் மெனுகார்டு பார்க்காமல் அடுத்தவன் சாப்பிடுவதைப்பார்த்து ஆர்டர்  செய்வது.

5 . வயிற்றில் இடம் இல்லாவிட்டாலும் finishing touch -a ஆபாயில் சாப்பிடுவது. 

6.  பஸ்ல 1 .50  டிக்கட்டுக்கு 100 ரூபாய் கொடுத்து சீன் போடுவது.

7.  முகப்பருவுக்குக் கூட cancer  இருக்குமோனு பயப்படுவது. 

8 . கடைக்காரன்கிட்ட 2 ரூபாய்க்கு அரைமணி நேரம் பேரம் பேசுவது.

9 . வெறும் ஊறுகாய வச்சே அசால்டா 1 full அடிப்பது.

10. தாய்மொழியைத் தவிர மத்த அனைத்து மொழிகளையும் சரியாக பேசுவது.

11.பக்தியோடு கோயிலுக்குப் போனாலும்  வெளியேப் போட்ட செருப்பின் மீதே கவனம் இருப்பது.

12.பர்ஸ் நிறைய பணம் இருந்தாலும் அன்னதானதிற்காக 4 மணி நேரம்  கியூ கட்டி நிப்பது. (கேட்டால் சாமி பிரசாதம் என்று சமாளிப்பது)

13.கண்ணுக்கு முன்னால நாலு குப்பைக் கூடை இருந்தாலும் பத்தடி  தள்ளி போய் ரோட்டில் காரித்துப்புவது.

14.பீர் பாட்டிலில் பச்சைத் தண்ணியை ஊற்றிக் கொடுத்தால் கூட போதை  ஏறியதுபோல் தள்ளாடுவது . 

(ஒரு சிலது முகப்புத்தகத்தில் கிடைத்தது.)

--------------------------------------------------------------------------------------

  டாக்டர் VS  நர்ஸ் VS பேஷன்ட்....


(ஏற்கனவே இதுபோல் நிறைய படித்திருக்கலாம் ...இருந்தாலும் ஆதி,அந்தம், லாஜிக் எதுவும் பாக்காம சிரிச்சித் தள்ளுங்க..)


பேஷன்ட்:   " டாக்டர் ..மூச்சுவிட ரொம்ப சிரமமா இருக்கு..."

டாக்டர்    :   "கவலையேப்படாதீங்க..கூடிய சீக்கிரத்தில் நிறுத்திடுறேன்..."

--------------------------------------

டாக்டர்   :  "ஆச்சர்யமாயிருக்கே..நான் ஆப்பரேசன் செஞ்ச பின்பும்  பல்ஸ் நார்மலா ஆகி ,பேஷன்ட் உயிரோட இருக்கிறாரே..!."

நர்ஸ்       :  "சீ..போங்க டாக்டர்..அது என் கை.."

------------------------------------------------------------------

ஒரு பெண்: " என் மாமியாருக்கு ஆப்பரேசன் முடிஞ்சதும் ஒய்வு எடுக்க எங்க வீட்டு மாடி அறையை ஒதுக்கி வைக்கட்டுமா டாக்டர்..? "

டாக்டர்   :   "மாடிக்கெல்லாம்  எதுக்காக தூக்கி சுமக்கனும்.பேசாம உங்க வீட்டு ஹாலிலே பார்வைக்கு வச்சிடுங்க.."

------------------------------------------------------------------

பேஷன்ட்: " என்ன டாக்டர்..என்னைத் தூக்கு மேடைக்கு கொண்டுபோகச் சொல்றீங்க..."

டாக்டர்   :  " நான் தான் சொன்னேனே... நான் ஆப்பரேசன் பண்ற ஸ்டைலே தனினு..."
-----------------------------------------------------------------

நர்ஸ்       : " அந்த பேஷன்ட்கிட்ட கல்யாணத்துக்குப் பிறகு தலைமுடி நரைக்காதுன்னு சொன்னீங்களே,அது எப்படி டாக்டர்?.."

டாக்டர்   : " கல்யாணம் ஆயிட்டா தலையில முடி எங்கே இருக்கப் போகிறதுங்கிற தைரியம்தான்..."

-----------------------------------------------------------------

பேஷன்ட்: "ராத்திரியில தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்...என்ன செய்ய?.."

டாக்டர்   : " அது தெரிஞ்சா ..நான் ஏன்யா  ராத்திரியில ஆஸ்பத்திரியை திறந்து வெச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கேன்..? "

-------------------------------------------------------------------

பேஷன்ட்: " ஏன் டாக்டர் ..'யங்' நர்சுகலையே வேலைக்கு வச்சுக்க மாட்டேங்கிறீங்க..?"

டாக்டர்   :  " எங்கேயா..எனக்கு  நோயாளிகளை கவனிக்கவே நேரமில்லாமப் போயிடுது..."

--------------------------------------------------------------------

நண்பர்:   " நீங்க டாக்டரா இருக்கும்போது பையன மட்டும் ஏன் வக்கீலுக்கு படிக்க வைக்கிறீங்க..? "

டாக்டர்   : "ஆப்பரேசன் முடிஞ்சி அடிக்கடி போலிஸ் ஸ்டேசன் போக வேண்டியிருக்கு.அதான் வீட்டோட ஒரு வக்கீல் தேவைப்படுது..."

----------------------------------------------------------------
பேஷன்ட்: " டாக்டர் ..நீங்க எனக்கு செய்யப்போற ஆப்பரேசன் வெற்றி ஆனா, பீஸுக்கு மேல அன்பளிப்பா ஆயிரம் ரூபாய் தாரேன்..."

டாக்டர்   : " வெற்றியானா...நானே உங்களுக்கு அன்பளிப்பா ஆயிரம் ரூபாய் தரேன்."

-----------------------------------------------------------------

பேஷன்ட்: " டாக்டர் எனக்கு மயக்கம் வர்ற மாதிரியிருக்கு.. "

டாக்டர்   :  " நெனைச்சேன்... ட்ரீட்மென்ட் எல்லாம் முடிஞ்சு நான் பீஸைப் பத்தி ஆரம்பிக்கும்போது உங்களுக்கு இப்படி ஏதாவது வரும்னு எனக்கு நல்லாத் தெரியும். நர்ஸ்....உடனே அந்த ஏ.சி வார்டுல உள்ள ரூம் ஒன்ன புக் பண்ணு . சாருக்கு அஞ்சு நாள் வச்சு ட்ரீட்மென்ட் எடுக்கணும்.."

பேஷன்ட்: "ஐயோ ..டாக்டர் இப்ப எல்லாம் சரியாகிடுச்சு.."

---------------------------------------------------------------

டாக்டர்   : " நர்ஸ்..ஆபரேசனுக்கு எல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா..? "

நர்ஸ்      :  " மாலைகூட வாங்கியாச்சு...ஊதுவத்தியும் ஏத்திட்டேன் டாக்டர்."

டாக்டர்  :  " ஸ்டுபிட்.. என்ன சொல்ற....? மொதல்ல வக்கீல்கிட்டேயில சொல்லணும்."

பேஷன்ட்:
" ?>?$&^*#@%??!"*@??...."

-------------------------------------------------------
நர்ஸ்        : டாக்டர்..டாக்டர்..ஆபரேசனுக்கு கொண்டுபோன பேஷன்ட் தப்பிச்சு ஓடுறார்...

டாக்டர்   : ம்ஹும்...பிழைச்சு போறான் விட்டுடு...
-------------------------------------------------------

பேஷன்ட்: "ஆப்பரேசன் பண்ணாம என்னைக் காப்பாத்த வழியே இல்லையா டாக்டர்..? "

டாக்டர்   : " உங்களைக் காப்பாத்தத்தான் ஆப்பரேசன்னு யாரு சொன்னது.? "

------------------------------------------------------
டாக்டர்    : "ச்சே..இந்த ஸ்கின் ஸ்பெசலிஸ்ட் தொழிலையே விட்டுடலாம்னு தோணுது..."

நண்பர்    :  "ஏங்க இவ்வளவு வெறுப்பாயிடீங்க...? "

டாக்டர்  : " பின்ன என்னய்யா ...தோலில் புள்ளி..புள்ளியா இருக்குனு அந்த ஆளு வந்து காட்டுறான்..".

நண்பர்   :  " அதுல என்னங்க தப்பு..? "

டாக்டர்  :" யோவ்...அவன் காட்டுறது வாழைப்பழத் தோலுயா ..."
--------------------------------------------------

டாக்டர்   : நீங்க தினமும் தூங்கி எழுந்த உடனே வாக்கிங் போங்க..

வந்தவர் :  அதுக்கெல்லாம் எங்க மானேஜர் அனுமதி கொடுக்க மாட்டாரு டாக்டர்...

---------------------------------------------

பேஷன்ட்: " டாக்டர் கேட்ட பணத்தை ஆப்பரேசனுக்கு முன்னாடி கொடுத்தும் கூட தலையில் பண்ண வேண்டிய ஆப்பரேசன காலில பண்ணிட்டாரே ..."

நர்ஸ்    : " நான்தான் சொன்னேனே...அவருக்கு பணம் வந்துட்ட தலைகால் தெரியாதுன்னு..."

-------------------------------------------

பேஷன்ட்: 
" டாக்டர் எனக்காக நீங்க ஒரு காரியம் பண்ணனும்..".

டாக்டர்   : "   ஸாரி...பொதுவா நான் ஆப்பரேசன் மட்டும்தான் பண்ணுவேன். காரியம் எல்லாம் உங்க சொந்தக்கராங்கதான்   செய்யணும்..."

------------------------------------------

பேஷன்ட்:    " டாக்டர் எனக்காக நீங்க ஒரு காரியம் பண்ணனும்..".

வேற ஒரு டாக்டர்   : " ஸாரி...நீங்க கட்டியிருக்கிற பீஸு..ஆப்பரேசனுக்கு மட்டும்தான்... "

---------------------------------------

பேஷன்ட்:   " டாக்டர் எனக்காக நீங்க ஒரு காரியம் பண்ணனும்..."

இன்னொரு டாக்டர்: " பொறுய்யா...எல்லாம் வரிசைப்படிதான் செய்யணும். மொதல்ல ஆப்பரேசன் அதுக்கப்பறம்தான் காரியம்..".

 ------------------------------------

டாக்டர்    :  "  ராத்திரியில படுக்கும்போது கவலையோடு படுக்காதீங்க...!"


பேஷன்ட்:   " என்ன பன்றது டாக்டர் ..என் சம்சாரம் தனியா படுக்க பயப்படுறா.."

-------------------------------------

பேஷன்ட்:  " டாக்டர் என்னால சிறுநீர் கழிக்க முடியவில்லை..."

டாக்டர்   :   " உங்க வயசு என்ன.. ? "

பேஷன்ட்: " தொண்ணூறு ஆகிறது டாக்டர்.."

டாக்டர்   :  " அப்படீன்னா இத்தனை வருஷம் நீங்க போனதே போதும்..! "

-------------------------

இதுல இது வேறயா..?....18 comments:

 1. பாஸ்...... உங்களை கண்டுபிடிக்க இத்தனை வழிகளை சொல்லி இருக்கீங்க.......

  சிங்கையில் தேடி கண்டுபிடிச்சிருவோம்...

  மற்ற ஜோக்ஸ் ஹா.... ஹா.........
  சில ஜோக்ஸ் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

  ReplyDelete
  Replies
  1. ஹி..ஹி... என்னை மட்டுமென்ன நம்ம ஆளுகளை மொத்தமா கண்டுபிடிச்சிரலாம்..

   நன்றி பிரகாஷ்

   Delete
 2. நீங்க் சொல்கிற எல்லா குணமும் எங்கிட்டேயும்தான் இருக்கு
  சங்கடமாய் இருந்தாலும் அதுதான் நிஜம்
  நகைச் சுவைத் துணுக்குகள் அனைத்தும் அக்மார்க் ரகம்
  மனம் கவர்ந்த அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்...

  ReplyDelete
 4. என்ன பாஸ் பதிவு ரொம்ப நீளமா கீது - சரி படிப்போம்

  ReplyDelete
  Replies
  1. வாங்க பாஸ் வணக்கம்

   Delete
 5. //நாம் எந்த ஊர் போனாலும் நம்மவர்களை கண்டுபிடிக்க சில எளிய வழிகள்.//

  இதில எதிலையும் மனசாட்சி இல்லையே - எப்பூடீ கண்டுபிடிப்பது ஹே ஹே ஹே

  ReplyDelete
  Replies
  1. பாஸ் இதுல வந்தாதான் இந்தியன்...ஓங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க....ஹி..ஹி..

   Delete
 6. //டாக்டர் VS நர்ஸ் VS பேஷன்ட்....//

  செம நக்கல் செம சிரிப்பு....ரிலாக்ஸ் ஆயட்டேன்ப்பா

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றிங்கோ...

   Delete
 7. அந்த படம் லொள்ளு....அய்யோ அய்யோ

  ReplyDelete
  Replies
  1. அது என்னமோ தெரியில நம்ம நித்திய பார்த்தாலே ஏதாவது கேவலமா எழுதனும்னு தோணுது.

   Delete
 8. சிரிப்பை அடக்கமுடியல தொகுப்பு அருமை நண்பரே

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பின்னூடத்திற்கும் மிக்க நன்றி நண்பா.....இணைந்திருப்போம் ...

   Delete
 9. நர்ஸ் : " அந்த பேஷன்ட்கிட்ட கல்யாணத்துக்குப் பிறகு தலைமுடி நரைக்காதுன்னு சொன்னீங்களே,அது எப்படி டாக்டர்?.."

  டாக்டர் : " கல்யாணம் ஆயிட்டா தலையில முடி எங்கே இருக்கப் போகிறதுங்கிற தைரியம்தான்.
  >>
  நீங்க டாக்டரா?!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ...ஆமா நான் டாக்டர்..................................................................ஆக ஆசைப்பட்டவன்.நல்லவேளை ஆண்டவன் என்னை எஞ்சினியர் ஆக்கிட்டான்.

   Delete
 10. நண்பர் ராஜாவுக்கு நன்றி...

  ReplyDelete